இறைவன் இருக்கின்றான்
ஜீவி
2
எதிர்ப்புறம் ரீங்கரித்த ஒரு ரிங்கிலேயே முரளி லயனில். "என்னடா, விஜி! எங்கேயிருந்து பேசறே?.. ஆபிஸிலிருந்து தானே?" என்றான், பயங்கர குஷியுடன்.
விஜயகுமாரான நான் எல்லோருக்கும் விஜிதான். கேட்பவர்களுக்கு தான் பேசுபவர் யாரோ பெண்ணுடன் பேசுகிற மாதிரி தோன்றும். "ஆமாம். ஆபிஸிலிருந்து தான். நீ?"
"நானும் தான். இன்னிக்கு வெள்ளிக் கிழமை இல்லையா? வேலை கொஞ்சம் அதிகம்.. எப்படி இருக்கே? நேத்திக்குக் கூட அப்பா உன்னைப்பத்தி சொல்லிண்டிருந்தார்"
அவர் அப்படிச் சொன்னதே எனக்கு 'சொரேர்' என்றிருந்தது.
"அப்படியா?.. நானே நேரே வரணும்னு நினைச்சிண்டிருக்கேன். ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது வந்து அங்கே வர்றதை ஒத்திப் போட்டிண்டே இருக்கு. அப்பா கிட்டே அந்தக் காலத்தைப் பகிர்ந்திண்டு ரொம்ப நாளாச்சு. சொல்லு. இரண்டு மூணு நாள்லே வந்து பாக்கறேன்னு".
ஆரம்ப குடும்ப நல விசாரிப்புக்குப் பிறகு, நான் சந்திரமோகனின் விஷயத்தைச் அவனிடம் சொன்னேன்.
"ஓக்கே. டன்" என்றான். "இது பத்தி விளம்பர இலாகா ஆட்களுடன் நான் கலந்து கொண்டு எப்படியும் சாத்தியப்படுத்தி விடுகிறேன். நீ ஒண்ணு செய்.ரகுன்னு பேர். அவர் தான் அந்த இலாகா தலைமை. நாளைக்கு சாயந்திரம் ஒரு மூணு மணி வாக்கில் அவருடன் சந்திரனா, இந்திரனா அந்த ஆள் பேர் என்ன, ஓ.எஸ். ஞாபகம் வந்திடுத்து, அந்த சந்திரமோகனைப் பேசச் சொல்லு, என்ன?. . ரகு நம்பரைக் குறிச்சிக்கோ.." என்று சொல்லி ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தான். முரளி பேசும் பொழுது ஒரு அலட்சியபாவத்தைத் தன் பேச்சில் காட்டுகிற மாதிரி தெரியுமே தவிர, தனக்கு ஆகவேண்டிய காரியத்தில் குறியாக இருப்பான். இன்னொன்று. யாருடன் பேசினாலும் தனக்கிருக்கிற உற்சாகத்தை தன்னுடன் பேசுபவருக்கும் தொற்ற வைத்து விடுவான். அப்படி ஒரு வரப்பிரசாதத்தை பிறக்கும் பொழுதே வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இதற்காகவே சோர்வான சமயங்களில் நானும் அவனுடன் பேசி என்னை 'சார்ஜ்' செய்து கொள்வதும் உண்டு.
முரளியுடன் பேசி முடித்தவுடன், உடனே சந்திரமோகனையும் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். "ரொம்ப தேங்க்ஸ், சார்" என்று அவன் பூரித்ததை உணர்ந்தாலும், "நன்றியெல்லாம் எதுக்குப்பா?" என்று இயல்பாய்ச் சொன்னேன்.
"என் நலனில் அக்கறையுள்ள உங்களுக்கு இது கூடச் சொல்லலேன்னா எப்படி, சார்?" என்றான். காசு பண சம்பந்தமில்லாததையெல்லாம் சகட்டுமேனிக்கு வாரி இறைப்பதில் சந்திரன் கில்லாடி. ஒரு விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று விவரமாகத் தெரிந்து கொண்டவன். வார்த்தைகளின் மேல் நிகுநிகுவென்று கலாய் பூசத் தெரிந்தவன். இந்தக் காரீய பூச்சல் எதிராளி உணரவே முடியாத அளவுக்கு சமத்காரமாக இருக்கும். வெகு சில அரிதான சமயங்களில் லேசாக உணருகிற மாதிரி இது தலைகாட்டும் பொழுதுகளில் நான் பொருட்படுத்த மாட்டேன். எல்லாம் அவன் மேல் இருக்கும் பரிவுக்காக கொஞ்சம் என்றால், நிறைய அவன் அப்பாவுக்காகத்தான்; ரொம்பவும் மானியான அந்த மனுஷனுக்காக.
அன்றைக்குப் பேசினது தான். ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை. முரளியும் சரி, சந்திரனும் சரி இந்த விளம்பர சமாச்சாரம் என்ன ஆயிற்று என்பது பற்றி எது ஒண்ணும் எனக்கு அதற்குப் பின்னால் தெரியப்படுத்தவும் இல்லை. அடுத்த வாரம் பத்திரிகையைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கு. இரண்டு பக்கமும் ஒரு வியாபாரம் முடிந்தது. அவ்வளவுதான் என்று இதை நான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இடையில் ஒரு முறை போயிருந்த பொழுது முரளி அவன் வீட்டில் இல்லை. பெரியப்பாவுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்தக்கால எழுத்தாளர்களைப் பற்றி ஆனந்தம், ஆதுரம் எல்லாம் கலவையாக பெரியப்பா நிறைய விஷயங்கள் எனக்குச் சொன்னார். மனைவியையும் கூட்டிக் கொண்டு போயிருந்தேன். அதில் அவர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
நாங்கள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு விடைபெறும் போது, "மாசத்துக்கு ஒருதடவையாவது இப்படி வந்து போப்பா" என்று பாசத்துடன் வழியனுப்பினார் பெரியப்பா. பெரியம்மா ராதிகாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று குங்குமம் கொடுக்க ராதிகா இட்டுக்கொண்டாள்.
இது நடந்து கிட்டத்தட்ட நாலு மாசத்திற்கு மேலாச்சு. திடீரென்று இப்பொழுது சந்திரமோகனிடம் ஒரு உதவி தேவைப்பட்டது. எல்லாம் சுகுமாருக்காகத்தான். சுகுமார் யார்னா, ராதிகாவோட அப்பாவின் நண்பர். அவர் சிதம்பரத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு வியாதியைப் பற்றி நிபுணர்த்துவ அறிவுரை வேண்டியிருந்தது. அதற்காகத் தான் எல்லாம்.
சந்திரமோகனோட தம்பி சென்னைலே இருக்கற கியாதி பெற்ற மருத்துவர்களில் ஒருவர். அதுவும் இப்போது எந்த வியாதி பற்றி கன்ஸல்ட்டேஷன் வேண்டியிருக்கோ அந்த வியாதி மருத்துவத்தில் நிபுணர். இது பழம் நழுவி பாலில் விழுந்த சமாச்சாரம் என்று எனக்குப் பட்டது.. உண்மைலே சொல்லணும்னா, சுகுமாரன் இந்த வியாதியைப் பற்றிச் சொன்னதுமே எனக்கு உடனே நினைவுக்கு வந்தது சந்திரமோகனோட தம்பி தான்.
"கவலையே படாதீர்கள். நமக்கு வேண்டிய டாக்டர் ஒருத்தர் இங்கே இருக்கார். நீங்கள் கிளம்பி வாருங்கள். நான் அவரிடம் கூட்டிப் போகிறேன்" என்று சிதம்பரத்திற்குப் பேசி சுகுமாரனுக்கு நம்பிக்கை அளித்து விட்டு, சந்திரமோகனை அலைபேசியில் அணுக முயற்சித்தேன். பதிலே இல்லை. ஒரு வாய்ஸ் மெயில் மட்டும் கொடுத்து விட்டு அரைமணி நேரம் அவனிடமிருந்து பதில் அழைப்பு இல்லையாதலால் மறுபடியும் கூப்பிட்டேன்.
இப்பவும் பழைய கதைதான். பதிலில்லை. உடனே அவன் விளம்பர ஏஜென்ஸிக்கு தொடர்பு கொண்டேன். "சந்திரமோகன் இருக்காரா?"
"நீங்கள்?"
நான் யாரென்று சொன்னேன். மறுமுனையில்,"கொஞ்சம் இருங்கள், கேட்டுச் சொல்கிறேன்" என்று கொஞ்சம் தாமதம். இரண்டு மூன்று நிமிஷம் ஆகியிருக்கும். "சார் இருக்கிறார். சிறிது நேரத்தில் அவரே உங்களைக் கூப்பிடுவதாகச் சொன்னார்" என்று சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதே எனக்கு 'சொரேர்' என்றிருந்தது.
(இன்னும் வரும்)
ஒவ்வொருத்தருடைய கேரக்டர் பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி ஆரம்பித்திருக்கிறது. கதைக் கரு என்ன என்பது இன்னும் சரியாக தெரியவில்லை என்றாலும் நடை படிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குJayakumar
கதைக் கரு என்று ஏதாவது இந்தக் கதையில் புலப்படும் பட்சத்தில் சொல்லுங்கள், ஜெஸி ஸார். மறக்காதீர்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
'இறைவன் துணையாயிருந்தது வழி நடத்திச் செல்வான்' -- இந்தத் தெளிவு இருந்து விட்டால் போதும். நல்லதே நடக்கும் என்ற தெளிவு ஏற்பட்டிருக்கிதது, சகோதரி.
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//யாருடன் பேசினாலும் தனக்கிருக்கிற உற்சாகத்தை தன்னுடன் பேசுபவருக்கும் தொற்ற வைத்து விடுவான். அப்படி ஒரு வரப்பிரசாதத்தை பிறக்கும் பொழுதே வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இதற்காகவே சோர்வான சமயங்களில் நானும் அவனுடன் பேசி என்னை 'சார்ஜ்' செய்து கொள்வதும் உண்டு.//
பதிலளிநீக்குஅப்படி பட்டவர்களுடன் பேசுவது நல்லதுதான்.
//"சார் இருக்கிறார். சிறிது நேரத்தில் அவரே உங்களைக் கூப்பிடுவதாகச் சொன்னார்" என்று சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதே எனக்கு 'சொரேர்' என்றிருந்தது.//
சந்திர மோகனுக்கு உதவி இருக்கிறோம், அவர் உடனே நம்மை அழைத்து இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது போல தெரிகிறது.
கதை மாந்தர்கள் குணநலன்கள் சொல்லி சென்ற விதம் அருமை.
சராசரி மனிதர்களுக்கு இந்த எதிர்பார்ப்பெல்லாம்
நீக்குசகஜம் தானே சகோதரி?
கதைக்கு பொருத்தமான ஓவியம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅதுவும், பளிச்சென்று.
நீக்குஹி..ஹி.
நடை நன்றாக இருக்கிறது. கதை இன்னும் பிடிபடலை. ஆர்வத்தைத் தூண்டுகிறது
பதிலளிநீக்குபார்க்கலாம் கதையின் போக்கை.
பதிலளிநீக்குமனிதர்கள் பலவிதம்.
மனிதர்கள் பலவிதம்..
நீக்குஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையின் சிக்கல்கள்
மிக எளிமையாகி விடும்
போலாகத் தான் தெரிகிறது, தேவகோட்டையாரே!
பிடிபடலை (பிடிபடவில்லை) என்பது தான் சரியான சொற்பிரயோகம். ரசித்தேன், நெல்லை.
பதிலளிநீக்குWith various other responsibilities, efforts போட்டு படம் போடும் கேஜிஜி க்கு மனப்பூர்வ பாராட்டுகள். பாத்திரத்துக்கு பொருந்துதான்னு பார்க்கிறேன். ஜீவி சார் மாதிரின்னா இருக்கு
பதிலளிநீக்கு:))))
நீக்குபோயிட்டு வந்தப்பறம் சொல்லாதீங்க. வாரணாசி, அலஹாபாத் ஐ என்ன எங்க சாப்பிடலாம்னு எழுதுங்க, இதுக்கு நிறைய பதில் எழுதி கதைக்கு பின்னூட்டம்போட மறந்தீங்கன்னா ஜீவி சார் என்னைக் கோச்சிப்பாரு
பதிலளிநீக்குநம்ம ஸ்ரீராம், நான் மதுரைல இருந்தபோது ஹேப்பிமேன், விளக்குத்தூண்... லாம் சொல்லலை. பெங்களூர் வந்தப்பறம் எங்க என்ன சாப்பிட்டிருக்கணும்கிறார்.. கர்ர்ர்ர்ர். கீசா மேடம் பற்றி கவலை இல்லை. அவங்க நினைவில் இருக்கும் மதுரை 1875 ஹாஹாஹா
நீக்கு//கீசா மேடம் பற்றி கவலை இல்லை. அவங்க நினைவில் இருக்கும் மதுரை 1875 ஹாஹாஹா//grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குகதை தொடர்கிறோம். ஒவ்வொருவருடைய குணாதிசயங்களையும் அறிந்து விட்டோம். மிகுதி தொடர்வோம்...
பதிலளிநீக்குகதைக்கேற்ப வர்ணப் படம் நன்று.
நன்றி.
நீக்குநன்றி சகோதரி.
நீக்குதொடர்ந்து வாசித்து வாருங்கள்.
நன்றி சகோதரி.
நீக்குதொடர்ந்து வாசித்து வாருங்கள்.
வணக்கம் ஜீவி சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டாம் பகுதியாகிய இன்று கதையின் நடை நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது.
/விஜயகுமாரான நான் எல்லோருக்கும் விஜிதான். கேட்பவர்களுக்கு தான் பேசுபவர் யாரோ பெண்ணுடன் பேசுகிற மாதிரி தோன்றும். "/
ஆம்.. மீனாட்சி சுந்தரம் என்ற பெயரும், நெருங்கிய நண்பர்களிடையே மீனாட்சி என்பதாக மாறி விடும். இது எங்கள் அண்ணா அவர்களின் அனுபவம். அதனால் சொல்கிறேன்.
அந்த பத்திரிக்கையில் விளம்பரம் வந்ததா? என்ற செய்தியைக் கூட, அது வரவேண்டுமென்பதற்காக உதவி கேட்டு நல்லவிதமாக பேசிய சந்திரமோகன், விஜய குமாரிடம் தெரிவிக்கவில்லை. இதுவும் அவரது குணங்களில் ஒன்றா? இல்லை, விளம்பரமாக வரவேண்டுமென்ற எண்ணம் ஏதோவொரு சந்தர்ப்ப வசத்தால் கை நழுவி போய் விட்டதே என்ற வருத்தத்தில் எழுந்த கோபமா? எதுவென தெரியாமல், கதை நாயகர் விஜயகுமாரே நான்கு மாதங்கள் காத்திருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? நாமும் காத்திருந்தது பார்ப்போம்.
மனித மனங்களே தனக்கென்று ஏற்பட்டு விடும் தோல்விகளின் வழியே வரும் வருத்தங்களால் மற்றவர்கள் மேல் இனம் புரியாத பகைமையையும் சேர்த்துக் கொண்டு வந்து விடும் இயல்புடையது அல்லவா...! . அப்படி உதவி செய்தவரை மறக்காமல் வேறு ஏதாவது காரணங்களால் பேசுவதை தவிர்ந்திருந்தாலும் நலம். அறிந்து கொள்ள காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
லக்ஷ்மி நரசிம்மன், கௌரி ஷங்கர், கோமதி சங்கர், இதெல்லாம் நினைவுக்கு வரலையா?
நீக்கு/லக்ஷ்மி நரசிம்மன், கௌரி ஷங்கர், கோமதி சங்கர், இதெல்லாம் நினைவுக்கு வரலையா?/
நீக்குஹா ஹா ஹா. ஓ.....ஆமாம் இவர்களுக்கும் அதே அழைப்புதான்.சரியாக சொனன்னீர்கள்.
மனித மனங்களின்
நீக்குவிசித்திர கோலங்களும், அலங்கோலங்களும் வேடிக்கையானவை
இதை வைத்துக் கொண்டு எழுதத் தெரிந்த எழுத்தாளன்
புள்ளிகள் வைத்து போடும் கற்பனைக் கோலங்களின் ஜாலவித்தை இருக்கே.. எழுதி எழுதி இன்னும் எழுதித் தீர்ப்பதற்கு
மாளாத வற்றா ஊற்றுகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
தாங்கள் ஆழ்ந்து வாசித்து தொகுப்பாய் தரும் தகவல்கள் எனக்கு இன்னும் இன்னும் எழுத உற்சாகமூட்டுபவையாய் இருக்கின்றன. மிக்க நன்றி சகோதரி
வணக்கம் கௌதமன் சகோதரரே
பதிலளிநீக்குகதைக்கேற்ற தாங்கள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் ஓவியத்தில் கதாசிரியரின் சாயல் சிறிது உள்ளதாக எனக்கும் சகோதரர் நெல்லைத் தமிழரைப் போல் சொல்லத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கௌ அண்ணா படம் ஜீவி அண்ணவைப் பிரதிபலிப்பது போல இருக்கிறதே!! ஹிஹிஹிஹி.....நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
:>)
நீக்குஇரண்டு அண்ணாக்களும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திப்பு கொண்டவர்கள் தான். அது தெரிந்து தான் இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கின்றனர்.
நீக்குகதை நாயகன் விஜி, சந்திரமோகனைத் தன்னைப் போல் நினைத்துவிட்டார் போலும்! ஆனால் விஜி முதலில் சந்திரமோகனிடம் பேசி அவர் தம்பியிடம் பேசி உறுதிப்படுத்திக் கொண்டு சுகுமாரிடம் பேசியிருக்கலாமோ?
பதிலளிநீக்குசந்திர மோகன் விஜியிடம் உதவி கேட்டுவிட்டு அதன் பின் அதைப் பற்றி எந்தவித அப்டேட்டும் கொடுக்காத போது விஜி கொஞ்சம் ச மோ வை ஊகித்திருக்கலாமே!
ம்ம்ம் உலகிலேயே மிகவும் கடினமானது இந்த மனித மனங்களும் அதனுடனான பிணைப்புகளும் தான்...
கதையின் அடுத்த பகுதிகளை வாசிக்கும் போதுதான் இன்னும் புரியும் என்று நினைக்கிறேன்..
அழகா எழுதறீங்க ஜீவி அண்ணா.
கீதா
உலகிலேயே மிக விசித்திரமானது இந்த மனிதங்கள் தாம். ஆயிரத்தி ல் ஒரு சிந்தனை.
நீக்குஅதனால் தான் கதைகளுக்கு, கற்பனை உலாக்களுக்கு இவையே தோன்றாத் துணையாக இருக்கின்றன. வற்றா ஜீவநதியாக
கற்பனை ஊற்றுகளுக்கு அடி நிலமாக இருக்கின்றன, சகோ.
சந்திரமோகன் பெரிய ஆள் ஆயிட்டாரோ...>
பதிலளிநீக்குடி.டி. நீங்களும் நானும் இவர் மாதிரியான நிறையப் பேரைப் பார்த்திருப்போம். அவர்களில் ஒரு பிரதி தான் இவர் என்று இப்போதைக்குக் கொள்வோம். ஆனால் எல்லாவற்றிலும் நல்லது காணும் மனம் இவரிலும் நல்லது காணத் துடிக்கிறது. அதற்காகத் தான் இந்த மாதிரி கதைகள். தொடர்ந்து வாசித்து வாருங்கள் நன்றி நண்பரே!
நீக்குகதையின் நாயகன் எல்லோருக்கும் உதவும் எண்ணம் உள்ளவர். சந்திரமோகன் மற்றும் முரளி தனக்கு விவரங்கள் சொல்ல வேண்டும் என்றும், சொல்லாத போது தவறாகவும் எண்ணவில்லை. நல்ல எண்ணம். உலகம் அப்படி அல்லவே....காரியவாதிகள் நிறைந்த உலகம்
பதிலளிநீக்குகீதா
இவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்களே சகோதரி?
பதிலளிநீக்குநான் இந்தக் கதையை எழுதியதின்
நோக்கம் வாசிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் எந்தந்த மாதிரியான எண்ணச் சுழலை இந்தக் கதை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தான். அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
போகப் போக இன்னும் இன்னும் இந்தக் கதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.
கதை சற்று வேகமாக நகருவது போல் தோன்றுகிறது. பாத்திரங்களும் அதிகம். யார் எப்படி கதையை நகர்த்த உதவப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குயார் எப்படி கதையை நகர்த்தவா?.. வேறு யார்? கதையின் தலைப்பில் கண்டிருக்கிறவர் தான்.
பதிலளிநீக்கு