உளுந்தூர்பேட்டை ஷண்முகம் அவர்களின் பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மிளிர்கிறது இன்றைய வெள்ளியின் தனிப் பாடல்.
ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்
எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்
எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே
எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே
எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்
எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்
என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்
என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பிலியப்பத் திருமால்
ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க
ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க
ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்
ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்
இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்
எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு
எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்
எப்பொழுதும் நாம் மறவோம் உப்பிலியப்பத்தானை
எப்பொழுதும் நாம் மறவோம் உப்பிலியப்பத்தானை
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
நம் உப்பிலியப்பத் திருமால்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1963 ல் ஹிந்தியில் வந்த உஸ்தாத் கி உஸ்தாத் படத்தை, தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் தங்களது நூறாவது படமாக எடுத்தனர். ஆர். சுந்தரம் இயக்கிய இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாகவும், அசோகன் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். பலப்பல திருப்பங்களுடன் செல்லும் கதை கொண்ட இந்தப் படத்தில் நான் ரசிக்கும் இரண்டு பாடல்கள் 'பாரடி கண்ணே கொஞ்சம்.. பைத்தியமானது நெஞ்சம்', மற்றும் ஓராயிரம் பார்வையிலே...
இதில் இந்த இரண்டாவது பாடலான ஓராயிரம் பார்வையிலே பாடலைத்தான் இன்று பகிர்கிறேன். ஒரு பாடலிலேயே குரலில் இவ்வளவு சோகத்தைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்கிறார் டி எம் எஸ் இந்தப் பாடலில். கண்ணதாசனின் அபாரமான வரிகளுடன் ஹிந்தியிலிருந்து திருடப்பட்ட டியூனில் பாடல். அருமையான பாடல். மிக மெதுவான பாடலாயிருந்தாலும் ஆழமான சோகத்தைக் கொண்ட அருமையான பாடல். சரணங்களில் டி எம் எஸ் எட்டும் உயரம்... கேட்டுதான் ரசிக்க வேண்டும்.
ஹிந்தியில் இதை ரஃபி சாதாரணமாக பாடி இருப்பார். தமிழில் நமக்கு புரியும் அழகான வரிகளுடன் டி எம் எஸ் உணர்ச்சிபூர்வமாக பாடி இருப்பார். சில பாடல் வரிகளைக் கேட்கும்போது இந்த அளவு காதலிக்க முடியுமா என்று தோன்றும். மிகைப்படுத்தப்பட்ட காதலோ என்றும் தோன்றும். மிகச்சில காதல் உண்மையிலேயே அப்படி இருக்கலாம். பெரும்பாலும் திருமணம் வரை இந்த உணர்ச்சிபூர்வம் இருக்கும். பின்னர் உப்பு புளி மிளகாய்க் கவலையிலும், குழந்தைக்கு பாரெக்ஸ்,வாங்கும் செலவு, மருத்துவச் செலவுகளில் பின்தள்ளப்பட்டு விடும்!
எப்படியோ நாம் விரும்பும் 'பொருள்' (!) கிடைக்காதவரை இருக்கும் அந்த ஆத்திரமும் ஏக்கமும் இருக்கும்தானே.. பாடலில் அது தூக்கலாக இருக்கிறது.
கண்ணதாசன் வரிகள். வேதா இசை. (அல்லது ரவி என்று வைத்துக் கொள்ளுங்கள்!). டி எம் எஸ் குரல்.
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க.. வாழ்க..
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா... பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு"உளுந்தூர்பேட்டை" சண்முகம்
பதிலளிநீக்கு"குன்னக்குடி" வைத்தியநாதன்
"சீர்காழி" கோவிந்தராஜன்
கூட்டணி ஸூப்பர்
ஓராயிரம் பார்வையிலே எனக்கு பிடித்த பாடல். சமீபத்தில் இதே ஹிந்தி பாடலை காணொளியில் நான் போட்டு இருந்தேன்.
ஸௌ பார் ஜனம் பாடலையா? ஆனால் தமிழில்தான் பாடலை அதிகம் ரசிக்க முடியும்!
நீக்குஆமாம் ஜி
நீக்குநம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால் பாட்டு மிகவும் பிடித்த பாடல் கேட்டேன் நன்றி.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் மிகவும் பிடிக்கும். சாருக்கும் பிடித்த பாடல்.
சோகம் கூட சுகம் தான். டி. எம்.எஸ் குரல் இரவில் வானொலியில் ஒலிக்கும் போது மனம் நெகிழும்.
இரண்டு பாடல் பகிர்வுக்கும் நன்றி.
நன்றி கோமதி அக்கா. மறக்க முடியாத பாடல்(கள்).
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாம் பாடல்களில் இரண்டுமே பிடித்தவை. ஓராயிரம் பார்வையிலே பாடலை ஹிந்தியிலும் கேட்டு ரசித்திருக்கேன். வரேன் அப்புறமா..
பதிலளிநீக்குஆ... முதல் பாடல் கேட்டதில்லையா? சுறுசுறுப்பான பக்திப்பாடல்.
நீக்குஎன்னாது? முதல் பாடல் கேட்டதில்லையா?
நீக்கு2. பலமுறை ரசித்த பாடல்...
பதிலளிநீக்கு1 ?
நீக்குஒப்பிலியப்பனை கண் முன்னே நிறுத்தும் பாடல்..
பதிலளிநீக்குஎத்தனையோ முறை கேட்ட இனிய பாடல்..
ஆம். எங்கள் திருமணம் நடந்த கோவில்!
நீக்குஎன் நினைவுக்கு வந்தது, உங்கள் திருமணம் நடந்த கோவில் என்று.
நீக்குஅந்த மலர்களின் வாசமெல்லாம்
பதிலளிநீக்குஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்..
த்ன்னெஞ்சறிது பொய்யற்க..
ரொம்ப ஓவர் என்கிறீர்களா?!! (தன்னெஞ்சறிவது)
நீக்குசொல்லாத காதல் சுகமானதா நெஞ்சில்
பதிலளிநீக்குகிள்ளாத காதல் சுகமானதா
நில்லாத காலம் தான் நிஜமானது
நெஞ்சில்
கனவான கவிதையே சுமையானது..
( வேற என்ன சொல்றது?..)
வெற்றி பெற்றதும் அதில் ஓர் அலட்சியம் வந்து விடுகிறது! தோல்வியில் மனம் அதை நினைத்தே வாடுகிறது.
நீக்குகவிதையே..//
பதிலளிநீக்குகாதலே..
எதுவானாலும் சரி..
இரண்டுமே ஒன்று தான்!..
சோகத்தில் சுகம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வு இரண்டுமே அருமை. முதல் தனிப்பாடல் இப்போதுதான் கேட்டேன். சீர்காழி அவர்களின் பக்திப்பாடல்கள் பல கேட்டுள்ளேன். அவரின் குரல் வளத்திற்கு நான் என்றுமே அடிமைதான். ஆனால் இந்தப்பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். அந்தப்பாடல் கேட்டு முடிந்த பின்னும் அதிலுள்ள சோக அலைகள் மனதை நீண்ட நேரம் தாக்கிய வண்ணம் இருக்கும். அதனுடனான மற்றொரு பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்.
பாடல்கள் இடம் பெற்ற திரைப்படம் என்னவென்பது மறந்து விட்டது. நீங்களும் குறிப்பிடவில்லை. இந்தப் படம் பார்த்ததில்லை. மார்டன் தியேட்டர்ஸ படங்களில் நடிகர் ஜெய்சங்கர் தவறாது இடம் பிடித்து விடுவார். அவர் புகழ் அடைந்தே இந்த கம்பெனி படங்களில்தான். இல்லையா? நடிகர் அசோகனுந்தான். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆ..படம் நினைவுக்கு வந்து விட்டது. வல்லவனுக்கு வல்லவனா?
நீக்குஆனால், இந்த மாதிரி பாடல்கள் தேர்வில் உங்களுக்கு நிகராக உண்மையிலேயே எவரும் வல்லவர்களாகி விட முடியாது. :) மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீக்குவாங்க கமலா அக்கா... வழக்கம்போல வேகமாக எழுதி வரும்போது படத்தின் பெயர் சொல்ல விட்டு விட்டேன் போல.. ஆனால் சரியா கண்டு பிடிச்சுட்டீங்க... உஸ்தாத் கி உஸ்தாத் என்கிற ஹிந்தி படப்பெயருக்கும் அதே பொருள்தானே...
நீக்குமுதல் பாடல் அடாணாவில் கம்பீரமாக வேகவேகமாக நகரும் தனி, பக்திப்பாடல். இரண்டாவது பாடல் சோகம் சுமந்து மெதுவாக நகரும் பாடல்!
பாடல் தெரிவு செய்வது பற்றி சொல்லி என்னையும் பாராட்டி இருப்பதற்கு நன்றி.
அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்..
பதிலளிநீக்குநேற்றைய பதிவில் , ரகுபதி ராகவ ராஜா ராம்.. பாடலுக்கான, எனது கருத்து ஒன்றிற்கு எதிர் கருத்தாக -
அண்ணா ஜீவி அவர்கள் - பரிதாபம்.. என்று முடித்திருக்கின்றார்கள்!..
நேற்று ஸ்ரீ ராம நவமி..
ஸ்ரீராம ஜெயம்..
ஸ்ரீராம ஜெயம்!..
ஜீவி அண்ணாவுக்கு பழைய தலைவர்கள் யாரையாவது குறை சொன்னாலே பிடிக்காது.
நீக்குயாருமே நேர்மையானவர்களோ, கை சுத்தமானவர்களோ இல்லை. காந்தி உட்பட. சுயலாபங்களுக்காகவே அரசியல் செய்தார்கள். தெற்கே காமராஜரைத் தவிர்த்து.
நீக்குசுடப்பட்டு விழுகின்றபோது காந்தி அவர்கள் -
பதிலளிநீக்குஹே ராம்.. என்றாரா,
O God.. என்றாரா?..
எதுவும் இல்லை. அவருடைய கடைசிக் காரியதரிசியான திரு கல்யாணம் இதைப் பற்றிச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.
நீக்குஹே ராம் என்று கமல் படம் எடுத்ததுதான் தெரியும்! எல்லோரும் ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னால்...!
நீக்குதிரு கல்யாணம் அந்தக் அக்கட்டுரையை தினமலரில் எஹுதியாதாக ஞாபகம். சரிதானே கீதா அக்கா?
நீக்குதினசரிகளில் வந்ததாக நினைவில் இல்லை. கல்கி/விகடனில் கட்டுரையாக வந்த நினைவு.
நீக்குபஜன் வார்த்தையை மாற்றிய போது காந்தி ஏன் மறுக்க வில்லை?..
பதிலளிநீக்குஅவர் விரும்பியதால் தானே மாற்றப் பட்டிருக்கு! ஹிந்து--முஸ்லீம் ஒற்றுமைக்கான பாடலாக இது அறிமுகப்படுத்தப் பட்டது எனச் சொல்வார்கள்.
நீக்குஇப்படி ஒரிஜினலில் மாற்றங்கள் செய்யலாமோ...
நீக்குஅல்லது நரசிமேத்தாவோ? ஏனெனில் கனு தேசாய் ஓவியங்கள் வரைவதில் பெயர் போனவர். அவருடைய படங்கள் எல்லாம் அந்தக் காலத்துக் கல்கியில் வைஷ்ணவ ஜனதோ! என்னும் நரசி மேத்தாவின் பாடலுக்கு வரையப்பட்டுத் தொடராக வந்து கொண்டிருந்தது. என்னிடம் அந்த பைன்டிங்க் இருந்தது. இப்போ இல்லை. :( ரகுபதி ராகவ பாடல் நிச்சயம் கனு தேசாயுடையது அல்ல. அல்ல, அல்ல.
நீக்குவெள்ளிப் பாடல்கள் நன்று.
பதிலளிநீக்குமுதலாவது பாடல் கேட்டதில்லை. இரண்டாவது கேட்டிருக்கிறேன் எங்களின் அண்ணா ஒருவருக்கு பிடித்தபாடல் .
பாடல் பகிர்வுக்கு நன்றி.
நன்றி மாதேவி. சீர்காழி பாடல் உங்கள் அப்பா விரும்பிக்கேட்டு, நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன்.
நீக்குமுதல் பாடல் கேட்காத நாட்களில்லை என்றிருந்த காலம் ஊரில் இருந்தவரை. கோயிலில் போட்டுவிடுவாங்களே!!
பதிலளிநீக்குஅருமையான பாடல். அதில் கூட்டணியும் சூப்பர் கூட்டணி.
எனக்குத் தோன்றியதுண்டு....குன்னக்குடி வரிகளுக்கு ஏற்ற ராகம் அடாணா தேர்வு அருமை - கம்பீரமான ராகம் அழுத்தமான ராகம். எப்பொதுமே கீழ் ஸ்வரத்திலிருந்து டக்கென்று மேல் ஸ்வரத்தில்தான் எடுக்கப்படுமோ என்றும் கூடதோன்றும். (யார் தருவார் இந்த அரியாசனம்! அம்மா நீ இரங்காய்) பொருளுக்கு ஏற்றாற் போன்று.....அழகா இசை அமைத்திருக்கிறார்.
கீதா
ஆம். சுறுசுறுப்பான பாடல். நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் போல பாடல்!
நீக்குபெரும்பாலும் திருமணம் வரை இந்த உணர்ச்சிபூர்வம் இருக்கும். பின்னர் உப்பு புளி மிளகாய்க் கவலையிலும், குழந்தைக்கு பாரெக்ஸ்,வாங்கும் செலவு, மருத்துவச் செலவுகளில் பின்தள்ளப்பட்டு விடும்!
பதிலளிநீக்குஎப்படியோ நாம் விரும்பும் 'பொருள்' (!) கிடைக்காதவரை இருக்கும் அந்த ஆத்திரமும் ஏக்கமும் இருக்கும்தானே.. பாடலில் அது தூக்கலாக இருக்கிறது.//
ஹாஹாஹா ஆமாம் இதுதான் யதார்த்தம்!
கீதா
ஹிஹிஹி....
நீக்குஇரண்டாம் பாடல் வரியைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது....சோகம் பிழியும் பாடல் Slow tempo. ஆனா அருமையான பாடல். ரசித்த பாடல். இப்பவும் ரசித்தேன்.....அப்போது கல்லூரி சமயம் இல்லையா....அதனால் கொஞ்சம் ரொம்பவே உணர்ச்சிபூர்வமாக மனதுள் ஓடிய பாடல்!!! அப்படியான வரிகள்!!!!
பதிலளிநீக்குகீதா
மலர்களின் வாசம் ஒரு மாலைக்குள் வாடிவிடுமாம். இவர் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வருமாம். இதை எழுதிய கண்ணதாசனுக்கே எத்தனை....ச்சே.. இபப்டி எல்லாம் எழுத்தாக கூடாது. பாடலை ரசித்தோமா, போனோமா என்றிருக்க வேண்டும். யாகாவாராயினும்
நீக்குஓப்பில்லாத பெருமாள் விறு விறு என்று போகும்! அனுபல்லவி - எப்பொருளும் அருள்வார்....மேலே அருமை....அதுவும் செம வேகம்......நீங்கள் சொல்லியிருப்பது போல்!!! மெட்டும் ரொம்ப ரசனை. ரொம்பப் பொருத்தமான ராகம், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஆம். ரசிக்கும் பாடல்களில் ஒன்று. முன்னரே பகிர்ந்திருக்க வேண்டும். நினைவில் வரவில்லை.
நீக்குஸ்ரீராம், உங்க கல்யாணம் ஒப்பிலியப்பன் சாட்சியுடன் நடந்ததுல்ல!!!!!!!!!!!!! அந்த ஒப்பிலியப்பன் பாடலைப் போட்டுட்டு காதல் பத்தி இப்படி சொல்லிருக்கீங்களே!!!! ஹாஹாஹாஹா.
பதிலளிநீக்குமேலே யதார்த்தம்னு சொன்னது....திருமணம் ஆகும் வரை அது வேற எந்தப் பொறுப்பும் இல்லாமல் உணர்வு பூர்வமா இருக்கும். அதுக்கு அப்புறம் பொறுப்புகள் வந்தாலும், காதல் வேறு விதத்தில் வெளிப்படத்தான் செய்யும். பொறுப்புகள் முன்னிற்பதால்.....
காதலின் அடிப்படை அன்புதானே!! திருமணம் பொறுப்புகள் வயதுன்னு ஆறப்ப அது கொஞ்சம் பின்னில் போகலாம் ஆனால் அன்பு மாறாதுதானே...அதென்னவோ காதல்னு சொல்லும் போது அது அர்த்தம் மாறிடுது!!! திருமணத்திற்குப் பிறகு அந்த அன்பே போய்ட்டாதான் காதல் இல்லைன்னு சொல்லணும்...அன்பு இருக்கும் வரை அந்தக் காதல் இருக்கத்தான் செய்யும் காதல்னு சொல்ற செயல்கள் வேணா இல்லையா இருக்கலாம்....
ஆனா இப்பல்லாம் நிறைய பேர் 50, 60 லும் கூட கணவன் மனைவி அணைத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்றாங்க. ஊட்டுவது போல், முத்தம் கொடுப்பது போல்....இதைத்தான் வயதானாலும் காதல்னு சொல்றாங்கன்னு நினைக்கிறேன்..இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட விஷயங்கள். அதைச் சொல்லவில்லை. தப்பு என்று சொல்லவும் மாட்டேன்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களா போட்டுத் தள்ளுறாங்களே....அதுக்கு.....இப்படி உலகுக்கு அதை நிரூபிக்கணுமா என்ன? இல்லை இப்படி எல்லாம் செய்தால்தான் காதல்னு அர்த்தமா தெரியல...இப்படிப் போடாதவங்களுக்குக் காதல் அன்பு இல்லைனு அர்த்தம் ஆகிடுமா...
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குநல்ல விபரமான கருத்துக்கள் சகோதரி கீதா ரெங்கன். நானும் இப்படியெல்லாம் யோசிப்பதுண்டு. வெளிக்காட்டாத, அல்லது அவ்வளவாக வெளிக்காட்ட சங்கோஜபடும் அன்பை, என்னவென்று சொல்வது? என் மனதில் தோன்றுபவை தங்கள் கருத்தாக வந்துள்ளது. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கீதா.. நீங்கள் எழுதி இருப்பவற்றை நானும் இந்தக் காதல் பற்றி எழுதும்போது யோசித்தேன். இது நம்மையே தாக்கும் என்றும் நினைத்தேன். நீங்கள் சொல்லி இருப்பது உண்மை. காட்டாற்று வெள்ளம் போல காமத்துடன் பாயும் விருப்பம், வேகம் குறைந்து விவேகம் பெற்று கனிவான அன்பாக மாறுவது காலத்தின் கைகளில், அனுபவங்களின் மடியில். கண்ணதாசனே பாடி இருக்கிறார்.. "வயதோடு வந்தாலும் காதல், அது வயதாகி வந்தாலும் காதல்..."
நீக்குஆ! எனக்குப் பிடித்த பாடலொன்று இன்று.. ஓராயிரம் பார்வையிலே..
பதிலளிநீக்குஇதனை அந்நிய மண்ணில் நான் பாட நேர்ந்திருக்கிறது.. க்யூபாவில் ஒரு முறை. காங்கோவில் ஒரு முறை என. காங்கோவில் அம்பாஸடர் அளித்த மாலை விருந்தொன்றில் பாடத் தெரிந்தவர்கள் ஆரம்பிங்கப்பா எனச் சொல்ல, சிலர் தங்களுக்குப் பிடித்தமான ஹிந்திப்பாடல்களை எடுத்துவிட்டார்கள். ஆஹா.. ஓஹோக்களிடையே.. நான் சும்மாதான் இருந்தேன்! விடுவார்களா.. நீங்க கொஞ்சம் பாடுங்க.. ஆப் தோடாஸா காவோனா!.. என்றார்கள். சிலவரிகள் பாடினாலும் ஆல்ரைட் என்பது அவர்களது விருப்பம்/கோரிக்கை. சிலவரிகளை ஹிந்தியில் பாடத் தடுமாறுவதைவிட, நம்ப மொழிலேயே எடுத்துவிட்டுருவோம் என நினைத்து, தமிழில் வருது பாட்டு என எச்சரித்து ஆரம்பித்தேன். அவர்களுக்கு வார்த்தைகள் புரியாதாகையால் (நான் ஒருவனே தமிழன் அந்த சிறு இந்தியக் கூட்டத்தில்), ஹிந்திப்பழையபடமொன்றில் வருகிறது - “ஸோ பாரு ஜனம் லேங்கே.. ஸோ பாரு ஃபனா ஹோங்கே.. (So baar(u) janam lenge.. so baar(u) fana honge...) என்று வரும் பாடலின் தழுவல்தான் இது என்று முகவுரை சொல்லிவிட்டு ஆரம்பித்து லயித்தவாறே பாடி முடித்தேன். சிலர் ரசித்தார். சிலர் அடங்கிவிட்டார்கள்..
ஏகாந்தன் ஸார்.. நீங்கள் இதை ஏற்கெனவேயும் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவு. நீங்கள் சாதாரணமாக சொல்லிக் கொண்டாலும் நீங்கள் நன்றாகக் பாடுவீர்கள் என்று தெரிகிறது. அவர்கள் நடுவே தமிழில் பாடி அசத்தியது அருமை. நண்பர்கள் நடுவே, அல்லது குழுவில் பாட என்று சட்டென காரணம் தெரியாமல் சில பாடல்கள் நம் மனதில் தோன்றும். உங்கள் மனதில் இந்தப் பாடல் தோன்றி இருக்கிறது.
நீக்குமுகமது ரஃபியின் அந்த ஹிந்தி பாடலைவிட, சௌந்திரராஜனின் தமிழ்ப்பாடல் மிக உயிர்ப்பானது. வரிகளும் தமிழிலே ஆழம், அபாரம்...
பதிலளிநீக்குஆமாம். நானும் இதைப் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். சாதாரணமாக ரஃபியை அடித்துக்கொள்ள ஆள் இருக்காது. இந்தப் பாடலில் நம் TMS முந்தி வெகு தூரம் வந்து விட்டார். உணர்ச்சி வெள்ளம்.
நீக்குஅட.. ஹிந்தியிலே ’ஸோ பாரு ஜனம் லேங்கே..’ பாடலை இருவர் அல்லவா இயற்றியிருக்கிறார்கள்! ஆஸாத் போபாலி, ரவி. தமிழில் கண்ணதாசன் சிங்கிள்-ஹாண்டடா விளையாடியிருக்காரேப்பா..! நம்ப ஆளு, நம்ப ஆளுதான்
பதிலளிநீக்குஎப்படி ஒரு பாடலை இரண்டு பேர்கள் எழுதியிருக்க முடியும்? ஆச்சர்யம்தான்.
நீக்குஓராயிரம் பார்வையிலே - எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் அடிக்கடி பாடும் பாடலும்கூட
பதிலளிநீக்குநன்றி நெல்லை. ஒப்பில்லாத பெருமாள் கேட்டிருப்பீர்கள்.
நீக்கு