வெள்ளி, 10 மார்ச், 2023

வெள்ளி வீடியோ : வானம் இன்று ஏன் உடைந்து போனது என் நாணம் கூட ஏன் கரைந்து போனது

 உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடல்.  டி ஆர் பாப்பா இசை.  சீர்காழி கோவிந்தராஜன் குரல்.  இன்றைய தனிப்பாடல்!


சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி அவன்
தேவிக்குகந்தது நவராத்திரி
அவனின் துணையோ ஒரு சக்தி இந்த
அகிலம் காண்பது நவசக்தி
அவனின் துணையோ ஒரு சக்தி இந்த
அகிலம் காண்பது நவசக்தி [சிவனுக்கு]

தவத்தில் நிலைக்கும் ஒருபாதி -தன் 
சந்ததி காக்கும் மறுபாதி 
தவத்தில் நிலைக்கும் ஒருபாதி -தன் 
சந்ததி காக்கும் மறுபாதி 
விதைக்கும்  உழவன் சிவனென்றால் - அதன் 
விளைவைச் சுமப்பவள் உமையன்றோ 
விதைக்கும்  உழவன் சிவனென்றால் - அதன் 
விளைவைச் சுமப்பவள் உமையன்றோ 

இரவில் ஒருநாள் மலர் மலரும் என்றோ 
ஒருநாள் அது உலரும் 
இரவில் ஒருநாள் மலர் மலரும் என்றோ 
ஒருநாள் அது உலரும் 
இடையில் மடியில் இருத்தி வைத்து எம்மை 
வளர்ப்பாள்  அன்னையன்றோ 
இடையில் மடியில் இருத்தி வைத்து எம்மை 
வளர்ப்பாள் அன்னையன்றோ 

தாயாய் வந்தாள் ஒரு சக்தி தாகம் தீர்த்தாள் ஒரு சக்தி 
ஆயகலைகள் அருள்பவளாய் ஆக்கம் தந்தாள் ஒரு சக்தி 
செல்வம் தந்தெனை சீராட்டி செழிக்கச் செய்தாள் 
ஒரு சக்தி 
அல்லும்பகலும் அருகிருந்தே ஆற்றல் கொடுத்தாள் ஒரு சக்தி 
உடன் பிறந்தவள் ஒரு சக்தி உள்ளம் நிறைந்தவள் ஒரு சக்தி 
தோள் தவழ்ந்தவள் ஒரு சக்தி வாழ்வு முழுவதும் சிவசக்தி 
ஒன்பது சக்திகள் ஓருருவாய் நின்றதும் ஆணவம் 
சென்றதுவே 
ஒன்பது இரவுகள் அவள் நினைவாய் 
ஒளிவிளக்கேற்றுவோம் வாரீரே 
ஒளிவிளக்கேற்றுவோம் வாரீரே 
ஒளிவிளக்கேற்றுவோம் வாரீரே 



===========================================================

இன்று வாணி ஜெயராமை விட்டு கொஞ்சம் வெளியே வருகிறேன்.  பின்னர் மறுபடி தொடரும்!

1985 ல் வெளிவந்த படம் ஸ்ரீதரின் 'உன்னைத்தேடி வருவேன்'.  படம் வெற்றி பெற்றிருந்தாலும் 'கல்கி' தனது விமர்சனத்தில் 'சாம்பாரும் பாயசமும் கலந்தது போல இருக்கிறது' என்றதாம்!  என்ன அர்த்தமோ..  ஜெயமன்மதனுக்கே வெளிச்சம்.

படத்துக்கு இசை இளையராஜா.  முதலில் ரமேஷ்- எஸ் ஜானகி பாடிய பாடலொன்றை இன்று பகிர்கிறேன்.  வைரமுத்து பாடல்.

காட்சியில் ஸ்ரீதர் சுரேஷுக்கு சாதனாவுக்கும் போதுமான உடைகள் வாங்கித் தர மறந்து விட்டதால், அலலது மறுத்து விட்டதால் காட்சி இல்லாமல் பாடலைப் பகிர்கிறேன்!

ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே..
உன்னைப் பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா..ஆ..

ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே.

நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
உன் நெஞ்சின் ஆழம்
இன்னும் பார்க்கவில்லையே

நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
உன் நெஞ்சின் ஆழம்
இன்னும் பார்க்கவில்லையே

மோகம் எல்லை மீறுமே
மூச்சில் உஷ்ணம் ஏறுமே
மோகம் எல்லை மீறுமே
மூச்சில் உஷ்ணம் ஏறுமே
பார்வையாலே பாலை வார்க்கிறாய்
என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய் 

வானம் இன்று ஏன் உடைந்து போனது
என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
வானம் இன்று ஏன் உடைந்து போனது
என் நாணம் கூட ஏன் கரைந்து போனது

மூடி வைத்த பூ இது
மோகம் வந்து பூத்தது
மூடி வைத்த பூ இது
மோகம் வந்து பூத்தது
வானம் வந்து நீர் தெளித்தது ஹோ
புது பூமி இன்று புல்லரித்தது ஹொய்.

ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே. தேவனே
உன்னைப் பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா..

26 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இறைவன் மிகப் பெரியவன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் தனிப்பாடல் கேட்டிருக்கிறேன். அருமையான பாடல். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் பாடல் நன்றாக இருக்கும். இப்போதும் கேட்கறேன். நல்லதோர் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருள பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  4. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான பாடல்..

    இனிமை .. இனிமை..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. சீர்காழி கோவிந்தராஜன் பாடல் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
    அடுத்த பாட்டு கேட்ட நினைவே இல்லை. இப்போதுதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. /// போதுமான உடைகள் வாங்கித் தர  மறுத்து விட்டதால் காட்சி இல்லாமல் பாடல்..///

    என்ன சிறப்பைக் கண்டு இன்று இந்தப் பாடல்?..

    பதிலளிநீக்கு
  8. தகர டப்பா பாடல்கள் பற்பல..

    அவற்றில் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  9. மாற்றங்களில்லாத ஒரே பாட்டையில் பயணிக்கிற பயணங்கள் சலிப்பூட்டுபவை தான். வழக்கமான பாணிகளிலிருந்து சற்றே விலகி இப்போதைய வெள்ளிக்கிழமை பாடல்களில் மாற்றம் கொண்டிருப்பது ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது பாடலை இன்று தான் கேட்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  11. முதல் பாடல் பலநூறு முறைகள் கேட்டு ரசித்தது.

    இரண்டாவது பாடலும் கேட்டு இருக்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  12. வெள்ளி நாளில் பக்திப் பாடல் பகிர்வு சிறப்பு. சீர்காழி பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன். சிறந்த பாடல்.

    இரண்டாவது கேட்ட நினைவு இல்லை.

    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. பக்திப் பாடல்கள் எல்லோரும் கேட்டிருக்கிறார்கள் பெரும்பாலும்!

      நீக்கு
  13. முதல் பாடல் பல முறை கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். அருமையான பாடல்.

    இரண்டாவது பாடல் கேட்டதும் போலவும் இருக்கு கேட்காதது போலவும் இருக்கு!!! வேறொரு பாடலை நினைவுபடுத்துவதால் இருக்கலாம்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!