திங்கள், 13 மார்ச், 2023

"திங்க"க்கிழமை   :  கொள்ளு ரசம்  - கீதா சாம்பசிவம் 

 கொள்ளு ரசம் 

கீதா சாம்பசிவம் 

================

கொள்ளை ஊற வைத்து வேக வைத்தும் ரசம் வைக்கலாம். அல்லது கொள்ளை வறுத்து மிளகு, ஜீரகத்தோடு பொடித்துக் கொண்டும் ரசம் வைக்கலாம். எங்களுக்குக் கொள்ளு ஒத்துக்கொள்ளுவது இல்லை. முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போக் கொள்ளு, கண்டந்திப்பிலி, பிரண்டை, பூண்டு போன்றவை ஒத்துக்கொள்வதில்லை. என்றாலும் ரசம் வைத்திருக்கேன். கொள்ளை ஊற வைத்து முளைக்கட்டிச் சுண்டல் செய்திருக்கேன். நன்றாக இருக்கும். உடல் இளைக்கக் கொள்ளை விடச்சிறந்த தானியம் இல்லை. இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பார்கள். தினம் ஏதேனும் ஓர் முறையில் கொள்ளைச் சேர்த்து வந்தால் கட்டாயமாய் உடல் இளைக்கும். சாம்பாருக்கு வேகவிடும் பருப்பில் பாதிக்குப் பாதிக் கொள்ளைப் போட்டும் செய்யலாம். இதோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாம்பார் செய்தால் நன்றாக இருக்கும்.


கொள்ளு ரசம் 1 தேவையான பொருட்கள் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு, ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவுக்கு, தக்காளி தேவையானால் சின்னதாக ஒன்று, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மிளகு, ஜீரகம், கருகப்பிலை ஊற வைத்துக்கொண்டு அதோடு கொள்ளையும் சேர்த்து ஊற வைக்கவும். ஜீரக ரசத்துக்குத் துவரம்பருப்பு ஊற வைப்போம். அதற்கு மாற்றாக இங்கே கொள்ளு.  அல்லது ஊறிய கொள்ளைத் துவரம் பருப்பு வேக வைப்பது போல் வேக வைத்துக்கொண்டு மிளகு ஜீரகம் கருகப்பிலையோடு சேர்த்து அரைத்தும் விடலாம். இது அவரவர் ருசிக்கு ஏற்பச் செய்து கொள்ளவும்.

புளி ஜலத்தை உப்பு, ரசப்பொடி, தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் ஊற வைத்திருந்த பொருட்களைக் கொரகொரவென அரைத்துக் கொண்டு ரசத்தில் விட்டு விளாவவும். ரசம் கொதித்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக்கொண்டு கருகப்பிலை, கொத்துமல்லி தூவவும்.

இதே வேக வைத்த கொள்ளு என்றால் வேக வைத்த பருப்பை அப்படியே ரசத்தில் போட்டால் அடியில் தங்கிவிடும். பின்னர் அடியில் இருப்பதைத் தூரக் கொட்டி விட்டால் கொள்ளுச் சேர்த்ததின் பலன் தெரியாது. ஆகவே மிளகு, ஜீரகம், கருகப்பிலையைப் பச்சையாக எடுத்துக்கொண்டு வெக வைத்த கொள்ளையும் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து ரசத்தில் விடவும். இம்முறையில் கொள்ளு நன்கு மசிந்து விடும் என்பதால் உடம்பில் சேரும்.

வறுத்து அரைத்த கொள்ளு ரசம் 2. தேவையான பொருட்கள்.

புளி சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, தேவைக்கு, பெருங்காயம் சின்னத் துண்டு. தக்காளி தேவையானால். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் வறுக்க வேண்டாம். இல்லை எனில் மி.வத்தல் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், ஜீரகம் பச்சையாக, கொள்ளு இரண்டு டீஸ்பூன், கருகப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் சிவக்க வறுக்கவும். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் இல்லாமல் மற்றவற்றை வறுத்துக்கொள்ளவும். 

புளி ஜலத்தில் முன் சொன்னமாதிரி உப்பு, பெருங்காயம் சேர்த்துத் தக்காளி போட்டால் அதையும் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் புளி வாசனை போகக் கொதிக்கவிடவும். வறுத்த பொருட்களைக் கொஞ்சம் நீர் சேர்த்து ரொம்பக் கொரகொரவென இல்லாமல் கொஞ்சம் நிதானமான கொரகொரப்பில் அரைத்துக் கொள்ளவும். 

விளாவத் தேவையான நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் விட்டு விளாவவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும். இந்த ரசத்துக்குக் கொத்துமல்லி தேவை இல்லை. பிடித்தால் போடலாம். தப்பில்லை.

21 கருத்துகள்:

  1. இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களே.. வணக்கம்.. இங்கு வருகை தரும் ஆன்மீகச் செல்வர்களுள் தாங்களும் ஒருவர்..

      திவ்யப் பிரபந்தத்திலும் ஆழ்வார் வரலாறுகளிலும் ஆலய தரிசனங்களிலும் மிக்க ஈடுபாடுடைய தாங்கள் - இவ்வாறாக முதலில் வருகை கருத்திடும் போது ஏதாவது நல்ல வார்த்தைகளைச் சொல்லுங்கள்..

      வறட் வறட் ... என்ற கருத்துக்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்..

      இது எனது தாழ்மையான வேண்டுகோள்..

      வியாழக்கிழமை சென்று நரசிம்ம தரிசனம் செய்யுங்கள் என்று நீங்கள் சொன்னதை தேவ வாக்கு என்றே கொள்கிறேன்..

      வாழ்க நலம்..

      நீக்கு
    2. இது முதல் கருத்து என்று தோன்றவில்லை. அப்புறம் தளத்துக்கு வர நேரம் இருக்குமான்னு சந்தேகம். இனி பாசிடிவ்வா எழுதிடுவோம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

    இன்றைய திங்கப் பதிவில் கொள்ளு ரசம் செய்முறைகள் நன்றாக உள்ளது. கொள்ளை வைத்து ரசம் செய்ததில்லை. ஒருநாள் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்.

    /இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு/

    இந்த வசனம் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல சத்துள்ள தானியம். கொள்ளு வறுத்து பொடி செய்து, அத்துடன் கொஞ்சம் வெல்லப்பொடியும் சேர்த்து முன்பு எப்போதோ சாப்பிட்ட நினைவிருக்கிறது. அதன் வாசனையும் மனதில் உள்ளது. ஆனால் இந்த மாதிரி ரசம் வைத்ததில்லை. செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. கொள்ளு ரசம் செய்முறை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    கொள்ளு ரசம் சளி பிடித்து இருக்கும் போது செய்து கொடுத்தால் சளியை வெளியேற்றும் என்பார்கள் அம்மா.
    கொள்ளு வறுத்து துவையல் செய்வோம். வத்தக்குழம்பு, புளிக்குழம்பு வைத்தால் இரவு கொள்ளு துவையல் செய்வார் மாமியார்.
    அத்தை காணதுவையல் என்பார்கள். கொள்ளு என்று சொல்வதே இல்லை. காணபயிறு துவையல். காணபயிறு ரசம் வேகவைத்த காணபயிறு தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து அதில் ரசம் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் நெல்லை அவர்களே.. வணக்கம்.. இங்கு வருகை தரும் ஆன்மீகச் செல்வர்களுள் தாங்களும் ஒருவர்..

    திவ்யப் பிரபந்தத்திலும் ஆழ்வார் வரலாறுகளிலும் ஆலய தரிசனங்களிலும் மிக்க ஈடுபாடுடைய தாங்கள் - இவ்வாறாக முதலில் வருகை கருத்திடும் போது ஏதாவது நல்ல வார்த்தைகளைச் சொல்லுங்கள்..

    வறட் வறட் ... என்ற கருத்துக்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்..

    இது எனது தாழ்மையான வேண்டுகோள்..

    வியாழக்கிழமை சென்று நரசிம்ம தரிசனம் செய்யுங்கள் என்று நீங்கள் சொன்னதை தேவ வாக்கு என்றே கொள்கிறேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. கொள்ளு துவையல், சட்னி எல்லாம் குவைத்தில் இருந்த போது தான்..

    இங்கே வந்த பிறகு கொள்ளைப் பார்த்து கொள்ளை நாள் ஆயிற்று..

    பதிலளிநீக்கு
  9. கொள் - நரம்பு மண்டலத்துக்கு நல்லது தான்..

    குதிரை மாதிரி உழைப்பவர்களுக்கு சாலச் சிறந்தது..

    நம்மை மாதிரி ஆட்களுக்கு தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையும் தேவை..

    அது பாட்டுக்கு ஏடாகூடமாக முறுக்கிக் கொண்டால் என்னாவது?..

    இருக்கின்ற பிரச்னைகளே போதும்!..

    பதிலளிநீக்கு
  10. கொள்ளு ரசம் செய் முறை நன்று.

    பதிலளிநீக்கு
  11. கொள்ளு கஞ்சி எங்கள் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு,பசங்களுக்கும் மிக பிடித்த உணவு. ஆனால் கொள்ளு ரசம் செய்ததில்லை .

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்முறை கீதாக்கா...

    நம்ம வீட்டிலும் ரசம் இப்படி நீங்க சொல்லிருப்பது போல் செய்வதுண்டு. சாம்பாரிலும் பயன்படுத்துவதுண்டு. கொள்ளு துவையல், கொள்ளுப் பொடி, கஞ்சி என்று....கொள்ளு முளைகட்டி சாலட் சாப்பிடுவதோடு சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. ஆனால் இவற்றை அடிக்கடிச் சாப்பிடுவதில்லை. வாரத்தில் ஓரிருமுறை

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வர வர யாருக்குமே சாப்பாட்டில் ஆர்வத்தைக் காணோமே! :)))) நன்கு முளைக்கட்டிய கொள்ளுச் சுண்டல் அம்பேரிக்காவில் இருக்கையில் பையருக்காக அடிக்கடி பண்ணுவேன். கொஞ்சம் போல் வாயில் போட்டுக்கொண்டால் போதும். தன் வேலையைக் காட்டி விடும். :( ஆகவே இப்போதெல்லாம் வாங்குவதே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  14. கருத்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி/

    பதிலளிநீக்கு
  15. செய்முறை நன்று. முன்பு சுவைத்தது உண்டு. உடலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதில் இட்லி கூட செய்வார்கள். சுவைத்தது உண்டு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  16. செய்முறை நன்று. முன்பு சுவைத்தது உண்டு. உடலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதில் இட்லி கூட செய்வார்கள். சுவைத்தது உண்டு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!