ஞாயிறு, 19 மார்ச், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 7

பார்க்கவ நரசிம்ஹர் (6)

வேதாத்ரி மலையில், கீழ் அஹோபில ஆலயத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில், நல்லமலைக்காடுகளின் அடர்ந்த மரம் செடி கொடிகளுக்கு நடுவே கரடுமுரடான பாதையில் பயணம் செய்து, சிறு குன்றின் உச்சியில் இருக்கும் பார்க்கவ நரசிம்மர் ஆலயத்துக்குச் செல்ல லாம். (சுமார் 150 படிகள் இருக்கலாம்). ஆலயத்தின் பக்கவாட்டில் பார்க்கவ தீர்த்தம் என்ற திருக்குளம் இருக்கிறது. இந்தத் தடாகம் வற்றியதே கிடையாதாம். பார்க்கவ ராமர் என்று அறியப்பட்ட பரசுராமர் இந்த க்ஷேத்திரத்துக்கு வந்து, நாராயணன் தன் தசாவதாரத் தோற்றங்களிலும் ஒருசேர இந்த த் தலத்தில் அவருக்குக் காட்சியளித்தார். நரசிம்மர், இங்கு ஹிரண்யனை மடியில் கிட த்தி வயிற்றைக் கிழிக்கும் நிலையில் காணப்படுகிறார்.  (இங்குள்ள மூலவருக்கும் ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தின் மூலவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஹிரண்யனை மடியில் கிட த்தியிருக்கும் விதம், இடம் மாறி அமைந்திருக்கிறது. அதுவும் தவிர பார்க்கவ நரசிம்மரின் சிற்பத் தோரணத்தில், தசாவதாரங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன)

யோகாநந்த நரசிம்ஹர் (7)

வேதாத்ரி மலைத்தொடரிலேயே அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம்இந்த எளிமையான ஆலயத்தில் யோக முத்திரை தரித்து நரசிம்மர் காட்சியளிக்கிறார். நரசிம்மர் தென் திசை நோக்கி சங்கு சக்கரத்தோடு காட்சியளிக்கிறார். கீழ்க்கரங்கள் இரு கால்களிலும் யோக முத்திரை பதித்திருக்கின்றன.


சத்ரவட நரசிம்ஹர் (8)

எட்டாவது நரசிம்மர், சத்ரவட நரசிம்மர். கருடாத்ரி மலையில், கீழ் அஹோபில ஆலயத்துக்கு அருகில் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது சத்ரவட நரசிம்மரின் ஆலயம். ஆறுகால் மண்டபம் அமைந்துள்ள ஆலயம் இது. அஹோபில நரசிம்மர்களிலேயே மிகவும் சுந்தர ரூபத்துடன் காணப்படுபவர் சத்ரவட நரசிம்மர். குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்றிருந்த நிலையில் காட்சிதருகிறார். (வடம்-ஆலமரம், சத்ர-குடை). மேற்கரங்கள் இரண்டிலும் சங்கு சக்ரத்துடன், வலது கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும் இடது கீழ்க்கரம் இடது தொடையில் தாளம் போடுவதுபோல அமைந்திருக்கிறது. 




பாவன நரசிம்ஹர் (9)

ஒன்பதாவது நரசிம்மர் ஆலயம், பாவன நரசிம்மர், கருடாத்ரி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பவன நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்குச் செல்லும் பாதை மிக் கடினமானது. அடர்ந்த வனப் பகுதியில் கல்லும் குழிகளும் இடையில் ஓடும் நீரோடைகளுமான பாதையில் சுமார் 15 கிமீ தூரம் பயணம் செய்யவேண்டும். டிராக்டரில் சென்றால், வண்டி குலுங்கும் குலுக்கலில், உடலில் உள்ள எலும்புகள் எல்லாம் கழன்று விழுகிறதோ என்று எண்ணவைக்கும். ஜீப்பில் சென்றாலும் கடினமாகவே இருக்கும்.



இந்த மலைத்தொடரில், செஞ்சு என்றழைக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்துவந்திருக்கின்றனர். அவர்களிலிருந்து செஞ்சு லட்சுமி என்ற பெண்ணை, நாராயணன், நரசிம்ம ரூபத்தில் வந்து திருமணம் புரிந்துகொண்தாக ஐதீகம். ஆதிசேஷன் குடைபிடிக்க, வீற்றிருக்கும் கோலத்தில் லக்ஷ்மி நரசிம்மராக க் காட்சி தருகிறார். இந்தக் கோவிலின் அருகிலேயே மலைப்பகுதியில், செஞ்சு லட்சுமி இருந்த குகை ஒன்றும் இருக்கிறது.

பாவனி நதிக்கரையில் அமைந்திருப்பதால் பாவன நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். நரசிம்மருடன் தாயார் இருக்கிறார். நரசிம்மருக்கு இடது புறத்தில் குழலூதும் கண்ணனின் விக்கிரஹமும் காணப்படுகிறது. இந்தக் கோவில் மிக உயர்ந்த க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. இந்த நரசிம்மரை வணங்கினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தொலைந்து முக்தி கிட்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஒன்பது நரசிம்மர் கோவில்களையும் தரிசனம் செய்வதுதான் அஹோபில யாத்திரையின் நோக்கம்அஹோபிலம் நவ நரசிம்ஹர் கோவில்களைப் பற்றியும் இந்த இரு வாரங்களில் அறிந்திருப்பீர்கள். இப்போது நம் யாத்திரையைத் தொடரலாம்.

 


31 கருத்துகள்:

  1. ராமன் எத்தனை ராமனடி! நரசிம்மர் எத்தனை நரசிம்ஹனடி! கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி! 

    விஷ்ணு மாத்திரம் தான் அவதாரம் எடுத்தார். ஒவ்வொரு அவதாரத்திலும் வித்யாசமாக 9 வகையில் அறியப்படுகிறார்.

    சிவனுக்கு அவதாரம் இல்லை. திருவிளையாடல் உண்டு. 

    ஏன்?  எப்படி??  

    புதன் கேள்வியாகவும் கொள்ளலாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நெல்லை இதற்கு பதில் சொல்லுவார் என்ற நம்பிக்கை இல்லையா, உங்களுக்கு?

      நீக்கு
    2. இந்தக் கேள்விக்கு பதில் ஆள்வார்கடியான் சொன்னால் மட்டும் போதாது. பரஞ்சோதியும் சொல்ல வேண்டும். 

      Jayakumar

      நீக்கு
    3. சங்கர நாராயண தத்துவம் தெரிஞ்சிருக்கணும்ங்கறீங்க.. அதானே?

      நீக்கு
    4. இப்போ வாய்ப்பு இல்லை தட்டங்சு செய்ய

      நீக்கு
    5. ஆறுமுக நாவலர் இது குறித்து விளக்கி இருப்பதாக அறிந்திருக்கிறேன். ஆனால் படிச்சதில்லை. பொதுவாக அவதாரம் எனில் பூமியில் வாழும் மனிதராகவே தோன்றுதல் ஆகும். இல்லைனா இதர உயிரினங்களாகவும் பிறக்கலாம்னு நம்பறேன். இவங்க செயற்கரிய செயல்களைச் செய்து தங்கள் அவதார நோக்கம் நிறைவேறியதும் மனிதரைப் போலவே உயிரை விடுகின்றனர். உதாரணம் ஸ்ரீராமர் சரயூ நதியில் ஜல சமாதி ஆனது. ஸ்ரீகிருஷ்ணர் வேடனின் அம்பால் உயிர் துறந்தது.
      ஆனால் சிவனோ குறிப்பிட்ட காரணத்திற்காகத் திடீரென பூமியில் தோன்றுவார். எந்த வடிவிலும் தோன்றுவார். வந்த காரியம் முடிந்ததும் மறைந்து விடுகிறார். மனிதனாகத் தோன்றி மடிவதில்லை. பிறப்பு/இறப்பு அற்றவர் என்பார்கள். அவர் தோன்றுவது அவதாரக்கணக்கில் வராது.தன் இறைத்தன்மையைச் சற்றும் மறைப்பதில்லை. ஈசனின் திரு விளையாடல்கள் என்று சொல்லிக்கலாம்.

      நீக்கு
    6. ஜேகே சொன்ன பரஞ்சோதி யாரோ? காலம்பரவே எழுதணும்னு நினைச்சு இன்னிக்கு அடுத்தடுத்து வேலைகளால் வர முடியலை. ஏசி மெகானிக் வேறே வந்து விட்டதால் கணினியில் நேரம் செலவிட முடியலை.

      நீக்கு
    7. சங்கரநாராயண தத்துவம் சங்கரன் சக்தன்/கர்த்தா, நாராயணன் சக்தி/சங்கரனுக்கு உடமை. இதுவே நாதாதீதமாய் உள்ள சிவசக்தி அம்சம். முழுவதும் விவரிக்கப் பெரிசாயிடும். ரொம்பவே தத்துவங்களை எல்லாம் எழுத வேண்டாம்னு இருக்கேன்.

      நீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம். இன்று கயாவில் ச்ராத்தம் - இது இரண்டாவது முறை. அம்மா போனபின் முதல்முறை. நேரம் கிடைக்கும் கருத்திடுவதற்கு

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ நரசிம்ம..
    ஜெய நரசிம்ம..
    ஜெய ஜெய நரசிம்மா..

    பதிலளிநீக்கு
  5. இங்கே தஞ்சை நகரத்தில் கீழவாசல் கண்டிராஜ பாளையத்தில் ஸ்ரீ யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது..

    பதிலளிநீக்கு
  6. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி..

    பதிலளிநீக்கு
  7. தகவல்களும், படங்களும் சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பகுதியில் விவரங்கள் சின்னச் சின்ன வரிகளோடு தீர்க்கமாகப் புரிகிற மாதிரி அமைந்திருகின்றன.
    இடையே இட்டிருக்கிற
    தெய்வத் திருஉருவ படங்களும் அந்தந்தப் பகுதி வாசிப்புகளுக்கு பொருத்தமாக அமைந்திருக்கின்றன. தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும்
    அதற்கான ஆர்வத்திற்கும் நன்றி நெல்லை.
    ஸ்ரீ நரசிம்ஹர் திருவடிகள் சரணம்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. நவநரசிம்மர் படம் மிக அருமை.
    சத்ரவட நரசிம்மர் ஆலயத்தின் தற்போதைய தோற்றம் அருமை.

    யோகாநந்த நரசிம்மரை பார்த்தவுடன் மாயவரத்தில் இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் நரசிங்கம் பேட்டையில் உள்ள யோக நரசிம்மரை அடிக்கடி தரிசனம் செய்த நினைவுகள் வந்தது.

    அஹோபிலம் நவ நரசிம்ஹர் கோவில்களை பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். இனி ஒவ்வொரு கோவில்களாக தரிசனம் செய்ய தொடர்கிறேன்.

    படங்களும், விவரங்களும் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். விளக்கமா பதிலெழுத முடியலை

      நீக்கு
  11. அஹோபிலம் நவ நரநரசிம்ஹர் அறிந்து கொண்டோம்.படங்களும் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  12. வழக்கம்போல் படங்களும் விவரணைகளும் அருமை/ சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கீங்க. கயா ஸ்ராத்தம் முடிஞ்சதும் "பெண்"களூர் திரும்பிடறீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ச்ராத்தம் முடிந்தது. இரு நாள் மீண்டும் வாரனாசி. பிறகு பெண்களூருக்கு டிரெயின்

      நீக்கு
  13. நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!