நெல்லைத்தமிழன் :
நிறைய கிரிகெட் மேட்சுகளை நான் பார்க்க ஆரம்பிக்கும்போது, இடது கண் துடித்தால் தோல்வி உறுதி என்று பார்ப்பதை நிறுத்திவிடுவேன். ஸ்கோர் நிலை சரியில்லாதபோதும் வலதுகண் துடித்தால் வெற்றிபெறும். இது எப்படி நிகழ்கிறது? (3ம் ஒன்டேயில் 125 for 2 என்ற நிலையில் பார்க்க ஆரம்பித்தேன். நன்றாகச் சென்றுகொண்டிருந்த போதும் இடது கண் துடித்ததால் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். பிறகு அணி தோல்வியடைந்தது எனத் தெரிந்துகொண்டேன்)
# கண் துடிக்கவில்லை என்றால் டிரா ஆனதா? இதெல்லாம் தற்செயல் இல்லை என்றால் உங்களுக்கு ஞானதிருஷ்டி/தீர்க்கதரிசனம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். இது அநியாயமாக கிரிக்கெட் ரிசல்டில் வீணாகிறதே என்ற வருத்தம் எழுகிறது.
& ஆஹா - நெ த என்று ஒரு தங்கச்சுரங்கம் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே! நெ த - நமக்குள்ளே ஒரு டீல் போட்டுக்குவோம். மாட்ச் நடக்கும்போது எந்தக் கண் துடிக்கிறது + எந்த அணி வெற்றி என்று எனக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்புங்க - அந்தத் தகவலை வைத்து நான் betting செய்து நிறைய பணம் சம்பாதித்துவிடுவேன்.
நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கும்போது பழைய நோட்டாகப் பார்த்து ஏன் கொடுக்கிறோம்?
# பழையன கழிதல் நம் பண்பாடு.
& நான் அப்படி இல்லை. தேவை இல்லாத தண்ட செலவு ( காஸ் சிலிண்டர் கொண்டு வருபவருக்கு தருகின்ற டிப்ஸ் போன்றவை ) செய்கின்ற இடங்களில் மட்டும் (கையில் இருந்தால்) பழைய + கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொடுப்பது உண்டு. மற்ற இடங்களில் கைக்கு எது கிடைக்குதோ அந்த நோட்டு.
ஏன் பெண் பேய்கள் மாத்திரமே உண்டு. ஆண் பிசாசு, கொள்ளிவாய், என்று எதுவுமே இல்லையே?
# Contrast காரணமாக இருக்கும். பெண் என்றால் அன்பு - அடக்கம் அல்லவா?பிசாசுகளில் ஆண் உண்டு. கொள்ளிவாய் Neuter.
& பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்கிறார்களே - அப்போ ஆண் பேய்களும் (ஜொள்ளு பேய் ?) உண்டு என்றுதானே பொருள்? ( பெண்ணுக்கு பெண் பேய் இரங்காது !!)
கலர் பேய்கள் ஏன் இல்லை? கலர் இருந்தாலே அங்கு கவர்ச்சி வந்துவிடும் என்பதாலா?
# பேய் க. வெ மட்டும் என்பது புதுச்செய்தி.
& ஹலோ நெ த எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு மனுஷங்களா பேய்களா தெரியலையா ?
நடிகை நடிகர்கள் கதாபாத்திரத்தில் காயமோ ஆக்சிடன்டோ ஆனாலும் அழகு குறையாமல் மேக்கப் போடுவதன் காரணம் என்ன? மூஞ்சில அடிபட்டாலும் கண் வாய் முகம் உதடுலாம் பாதிப்படைந்த இல்லையே,. காரணம் என்ன? (இதைச் சாக்கிட்டாவது பாலைவனமாக இருக்கும் புதன் எபி பக்கத்தைச் சோலைவனமாக ஆக்குங்கள்)
# திரைப்படம் செலாவணி ஆக அழகுணர்வு முக்கியம்.
& எவ்வளவோ தேடிப் பார்த்தும் கூகிள் தளத்தில் முகத்தில் பிளாஸ்திரி போட்ட நடிகைகளின் படங்கள் கிடைக்கவில்லை.
நீதி என்பதை எப்படி அறுதியிடுவது? அயோக்கியனும் கோர்ட்டில் நீதி கிடைக்கலைன்றான் (மோடி பெயருடையவர்கள் எல்லோரும் திருடர்கள் என்று ராகுல் ஃபெரோஸ் சொன்னதற்கு சூரத் நீதிமன்றம் 2 வருட தண்டனை கொடுத்ததை கமலஹாசன் நீதி சரியில்லைன்றான்)
# கருத்து என்ற பெயரில் யார் எது வேண்டுமானாலும் சொல்ல உரிமை அவர்களுக்கு உண்டு. அதை லட்சியம் செய்யாது புறந்தள்ளும் உரிமை நமக்கு உண்டு.
ஜெயக்குமார் சந்திரசேகரன் :
வைணவத்தில் மாத்திரம் வடகலை தென்கலை என்ற பிரிவுகள் ஏன் எப்படி உண்டாயின? சைவத்தில் அது போன்று இருப்பதாகத் தெரியவில்லை.
வடகலைக்கும் தென்கலைக்கும் நாமத்தைத் தவிர வேறு வித்தியாசங்கள் என்ன உள்ளன?
# நானும் இதுகுறித்து யோசித்ததுண்டு. வைணவ நண்பர் யாரேனும் விளக்கலாம். நான் கேட்டறிந்தது சரியா என்ற சந்தேகம் இருப்பதால் அதைச் சொல்லத் தயக்கமாக இருக்கிறது.
& இந்தக் கேள்வியை நெல்லைத்தமிழன் அவர்களுக்கு அனுப்பினோம். அவர் எழுதியுள்ள பதில் இங்கே :
நெ த :
ஒரு கான்செப்டை விவரிக்கும்போது இரண்டு வித school of thought உருவாகிவிட்டது. இது உருவாகியது பொது ஆண்டு 1300களில் என்று சொல்கிறார்கள். காஞ்சீபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேசிகன், ஸ்ரீரங்கத்தின் ஆச்சார்யரான பிள்ளைலோகாச்சார்யாரின் interpretationலிருந்து வேறுபட்டிருக்கிறார். பொழுது போகாதவர்கள், இதனை திமுக அதிமுக கட்சி மாதிரி ஆக்கிவிட்டார்கள். வைணவம், தென்னாச்சார்யார் சம்ப்ரதாயம், வடகலை சம்ப்ரதாயம்/தேசிக சம்ப்ரதாயம் என்று இரண்டாக ஆகிவிட்டது. மற்றபடி நூல்கள் எல்லாம் (இராமானுசர் காலத்தில் இருந்த) இருவருக்கும் பொதுவானவை (பிற்கால அந்த அந்தப் பிரிவு ஆச்சார்யர்கள் எழுதியதைத் தவிர). சுருக்கமாகப் புரிந்துகொள்ள, தென்கலை பிரிவினர், தாய் பூனை குட்டியைக் கவ்விச் செல்வதைப் போல, ஸ்ரீமந் நாராயணன், தன் அடியவர்களைத் தானே கைப்பிடித்து வழிகாட்டுவார் என்கிறார்கள். வடகலை சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள், குரங்குக் குட்டி, தன் தாயைப் பிடித்துக்கொள்வதைப் போல, நம்முடைய முயற்சியும் ஸ்ரீமந் நாராயணனை அடைய மிகவும் அவசியம் என்று சொல்கிறார்கள். (ஒரு தடவை நமஸ்கரித்தாலே பகவான், ஐயையோ நம் குழந்தை கஷ்டப்படுகிறதே போதும் போதும் என்று நினைப்பாராம், அதனால் தென்கலையினர் ஒரு தடவைதான் நமஸ்கரிப்பர். வடகலையினர் 3-4 முறை நமஸ்கரிப்பர். இதுபோன்று சில பல வேறுபாடுகள்தாம். Conceptsல் என்ன மாதிரியான வித்தியாசங்கள் என்று விவரிக்கப்போனால் அது மொத்தத்தில் பெரிய விஷயமாகத் தெரியாது, சாதாரண புரிதலுள்ளவர்களுக்கு.
திவ்யதேசக் கோவில்களில் பெரும்பாலானவை, தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இரு கலையினரும் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களும் உண்டு. தங்கள் கோவில்களில் மற்ற சம்ப்ரதாயத்தினர் ப்ரபந்தங்கள் சேவிக்கக்கூடாது, தங்கள் கோவிலைச் சேர்ந்த யானை, பல்லக்கு முதல் எல்லாவற்றிர்க்கும் தம் சம்ப்ரதாய நாமம் தான் போடவேண்டும் என்றெல்லாம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் கட்சி கட்டியிருப்பதால், அதன் எச்சங்கள் இன்றும் அதிக அளவில் உண்டு.
சைவத்தில், மாத்வா, ஐயர், வடமா என்று பல்வேறு பிரிவுகள் உண்டு. அவர்களிலும் ஆச்சார்ய வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக காஞ்சீபுரம் மடம், ச்ருங்கேரி சாரதா பீடம் என்று பல்வேறு ஆச்சார்யர்கள் உண்டு. ஒரு ஆச்சாரியரைத் தொடருபவர்கள் மற்றவரைத் தொடரமாட்டார்கள். (காஞ்சி மஹாப்பெரியவாளின் சிஷ்யர்கள், பக்தர்கள், ச்ருங்கேரி சாரதா பீடம் பக்கம் செல்லமாட்டார்கள்). திருமண உறவுகளிலும் இதனைக் கவனிப்பார்கள். தற்காலத்தில், இத்தகைய போக்கு மிகவும் குறைந்துவருகிறது.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
இப்போதெல்லாம் திருமண விருந்துகளில் சைவ முட்டை, சைவ மீன் வறுவல் என்றெல்லாம் ஐட்டம் கள். இவற்றை சைவம் சாப்பிடுபவர்களால் என்ஜாய் பண்ண முடியுமா?
# மீன்முட்டை ருசி எப்படி இருக்கும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை ரசிக்கக் கூடும்.
என் அந்தக் கால நண்பர் சொன்னது : " மட்டன் சாப்பிட்டுப் பாருங்க , ரோஜாப்பூ மாதிரி குக் பண்ணியிருக்கோம். "
மாமிசம் ரோஜாப்பூ போல இருப்பதும் கத்தரிக்காய் கருவாடு மாதிரி இருப்பதும் விரும்பப்படுகிறது என்றுதான் ஆகிறது.
சூப்பர் மார்க்கெட் செல்கிறீர்கள், நீங்கள் வழக்கமாக வாங்கும் பருப்பு, எண்ணெய் போன்ற ப்ராண்டுகளோடு டி.வி.யில் விளம்பரப்படுத்தப்படும் வேறு ஒரு ப்ராண்ட், விலையும் குறைவாக இருக்கிறது, எதை வாங்குவீர்கள்?
# புதுச் சரக்குகளை வாங்கி எப்படி இருக்கிறது என்று பார்ப்பது என் இயல்பு.
& விளம்பரம் இல்லாத வகை பொருட்கள் - விலை குறைவாக இருந்தால் வாங்கி உபயோகித்துப் பார்ப்பேன். நன்றாக இருந்தால் அதையே தொடர்ந்து வாங்குவேன். நான் வாங்கும் பொருட்கள் யாவும் நானே உபயோகப்படுத்திக்கொள்ளும் நிலையில் இருப்பதால், விலை குறைவான பொருட்களையே தேர்ந்தெடுப்பேன்.
இப்போதும் தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு வியாபாரிகளை விழுங்கி விடும் என்பது சரியில்லைதானே?
# பெரிய கடைகள் யாரோ சிறு வியாபாரியை பாதித்திருக்கும் என்பது சரியாக இருக்கக் கூடும்.
நாம் பார்த்த தள்ளு வண்டி நபர் ஒரு கடை வைத்திருக்கும் வாய்ப்பை இழந்தவராகவும் இருக்கலாம்.
மாறிவரும் வாழ்க்கைக் கிரமத்தில் இது தவிர்க்க இயலாத விஷயம்.
& அவர்கள் சொல்லும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டிக்காரர்கள் அல்ல; நடைபாதை வியாபாரிகளும் அல்ல. இடமாற்றம் செய்ய இயலாத சிறு கடைகள் வைத்திருப்பவர்கள்.
= = = =
அப்பாதுரை பக்கம் :
கவனம்!
டிவி பாக்குறோம்.. டிவி பாக்குறப்பவே செல் போன்ல ஏதோ தட்டி கருத்தா தேடிப் பாக்குறோம்.. பக்கத்துல யாரு இருக்காங்கனு கூட தெரியாது.
ஜேம்ஸுனு ஒரு ஆசாமி (பின்னே ரெண்டு பேரா) இந்தக்காலத்து இளைஞர். மதிய நேரம். கம்ப்யூடர் கையும் செல்போன் கண்ணும் ஏர்பாட் காதுமாக வீட்டுலருந்தபடி வேலை. டேபிள்ல டோர்டேஷ்லந்து வந்த சைனீஸ் பரைட் ரைஸ்.
இப்படி வாழ்வாங்கு வாழ்ந்துட்டிருந்தவர் வீட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டுவது இவருக்கு காதில் விழவில்லை. தட்டுவது ஏறக்குறைய இடிப்பது போல ஆனதும், கை கண் காது கவனம் மாறாமல் அமெசான் டெலிவரியை சபித்தபடி எழுந்து அப்படியே நடந்து கதவைத் திறந்தார்.
கதவைத் திறந்த சில நொடிகள் தாமதித்து கை கண் காது கவனம் மாறி அலறல் கவனமானார். தாமதத்தின் காரணம் நாலு வரி தள்ளி வருகிறது.
கதவைத் தட்டி இடித்தது அமெசான் டெலிவரி அல்ல.
நாலடி நீள முதலை.
தாமதித்தாலும் ஜேம்சை சும்மா சொல்லக்கூடாது. போர்க்கால சங்கு கெட அலறினார்.
முதலையே கவனமான ஜேம்ஸ் அருகிலிருந்த பேஸ்பால் மட்டையால் அதன் மண்டையில் ஒரு போடு போட்டார். அவர் அதிர்ஷ்டம் ஒரு கணம் முதலை வாய் திறக்க அடித்துப் புரண்டு எழுந்து ஓடினார்.
அடுத்த சில நிமிடங்கள் அங்கே நாம் இருந்திருந்தோமானால் மனித-முதலை ஓட்டப் பந்தயம் பார்த்திருப்போம். பார்க்க முடியாதது எனக்கும் வருத்தமே.
அலறிக்கொண்டே ஓடிய ஜேம்ஸு மாடியில் தன் அறைக்குள் புகுந்து தாளிட்டு (வெளியே ஓடக் கூடாதோ?) போலீஸை அழைத்தார். வனத்துறை அதிகாரிகளுடன் வந்த போலீஸார் முதலையை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி மேலும் சொன்னது ஜேம்ஸை நடுங்கச் செயதது. "ஜேம்சு தம்பி.. இதெல்லாம் நாலடி முதலை.. பேபிமா. ஒண்ணும் செய்யாது.. ஒம்பதடி முதலைனா அப்ப கவனமா இருக்கணும் தெரியுதா?"
வெளியே போன முதலை தன்னைத் திரும்பிப் பார்த்தது போலிருந்தது ஜேம்சுக்கு.
மார்ச் 18 CNN செய்தி.
வால்:
"கம்ப்யூடர் செல்போன் ஹெட்போன் சகிதம் உலக கவனமே இல்லாமல் கதவைத் திறந்தா முதலை என்ன கரடி சிங்கம் கூட வரும். கவனமா இரு"னு உறைக்கும்படி போலீஸ் சொல்லக்கூடாதோ? 'நாலடி முதலை பேபி.. கைல எடுத்துக் கொஞ்சு'னு சொல்லிட்டுப் போறாரே போலீஸ்காரர்? என்னங்க இது? முதலையைப் பாத்ததும் ஸ்கேல் வச்சு அளந்து பாத்துட்டா அலற முடியும்?
= = = =
என்ன இன்னிக்கு யாருமே வரலை? அப்பாதுரையின் வால் சுவாரசியமானதாக இருக்கு. முதலை எல்லாம் கிட்டத்திலே பார்த்தால் என்ன செய்வோம்?
பதிலளிநீக்குநலமா?
நீக்குவருஷத்துக்குப் பாதி நாட்களுக்கு மேல் பள்ளிக்கு மட்டம் போடுகிற வாத்தியார், பசங்களா... தினமும் ஸ்கூலுக்கு வரணும், லீவு போடக்கூடாதுன்னு சொல்ற மாதிரி இருக்கு
அப்படி சொல்லுங்க நெல்லை!
நீக்குhehehehehehehe
நீக்குஎன்னோட பிரச்னையே நான் அந்த ஜேம்ஸ் மாதிரியெல்லாம் மெய்ம்மறந்து போவதில்லை என்பதே! சுற்றுப்புற கவனம் எப்போதும் இருக்கும். சுற்றி நடப்பதையும் மனதில் ஏற்றிக் கொண்டிருப்பேன். யாரானும் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் அதிலும் இருக்கும். இப்போ இதை எழுதிக்கொண்டே யூ ட்யூபில் ரங்க்ஸ் கேட்கும் அரசியல் உரையைக் கேட்டுக் காதில் வாங்கிக் கொண்டிருக்கேன். முக்கியமானவை எனில் மனதில் பதியும். இங்கே! திரும்பத் திரும்ப ராகுல் காந்திக்குக் கிடைத்த தண்டனை பற்றித் தான்! :(
பதிலளிநீக்குமெல்லுவதற்கு கொஞ்சம் அவல் - ராகுல் தண்டனை விவகாரம்.
நீக்கு2001 லேயே Drugs விஷயத்தில் அமெரிக்காவில் கம்பி எண்ணியிருக்க வேண்டியவர்..
நீக்குவாஜ்பாய் காப்பாற்றினார்.
நீக்குரொம்பப் பழைய ரூபாய் நோட்டுக்களை நாங்க வங்கியிலேயே கொடுத்து மாற்றி விடுவோம். எரிவாயு சிலிண்டர் போடுபவர் நம்மை விட நிதி நிலைமையில் சுமாரானவராகத் தான் இருப்பார். அவரைப் போன்றவர்களுக்கோ, காய்கறி விற்பவர்களுக்கோ கொடுப்பதில்லை. எல்லோராலும் மாற்ற முடியாது. நம்மால் மாற்ற முடியும் என்பதால் நாங்க யாருக்கும் பழைய ரூபாய் நோட்டைக் கொடுப்பதில்லை.
பதிலளிநீக்குஎ வா சிலிண்டர் சப்ளை செய்பவர் சுலபமாக மாற்ற இயலும். பணம் கொடுத்து சிலிண்டர் வாங்குபவர்களுக்கு மீதி தொகை கொடுக்கும்போது பழைய நோட்டுகளை தாராளமாக தள்ளி விட்டுவிடுவார்கள்!
நீக்குமேலும் ஒருநாளைக்கு 30 சிலிண்டர் சப்ளை செய்பவர் 30 *50= 1500 ரூபாய் சம்பாதித்து விடுவார்.
எனக்கு இருக்கவே இருக்கிறது ஆஸ்தான மளிகைக்கடை. ஆனால் இப்போதெல்லாம் பழைய, கிழிந்த நோட்டுகள் என்று பெரும்பாலும் என் கைகளில் மாட்டுவதில்லை.
நீக்குபொதுவாகவே நான் மளிகை சாமான்கள் வாங்கும் கடையையும் மாற்ற மாட்டேன். நான் வாங்கும் ப்ரான்டையும் மாற்ற மாட்டேன். ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு விளம்பரங்களைப் பார்த்துவிட்டு வாங்கிப் பார்க்கும் எண்ணம் அதிகமாவே இருக்கும். சில/பல சமயங்கள் வாங்கிட்டு வந்துட்டு வாங்கிக் கட்டிப்பார். அபூர்வமாக அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அதையே பின்னர் தொடர்ந்து வாங்குவதும் உண்டு.
பதிலளிநீக்குபாவம் சா சி சார்.
நீக்கு//மாற்ற மாட்டேன். // - சமையலாவது மாற்றிக்கொண்டே இருப்பார்களா இல்லை எப்போதும் ஒரே ரசம், ஒரே சாம்பார், ஒரே காய்கறி என்று வாடவைப்பார்களா?
நீக்குசமையல் மாறிக்கொண்டே இருக்கும். சாம்பார் வைப்பதெனில் அன்னிக்கு ராத்திரி இட்லி/தோசைனு பண்ணப் போறோமானு யோசிச்சுப்பேன். தினம் தினம் சாம்பார் இல்லை, கீரை வாங்கி வெறும் மசியல் பண்ணினால் அன்னிக்கு முருங்கைக்காய்/சுண்டைக்காய்/மணத்தக்காளி ஏதேனும் போட்டு வெறும் வத்தக்குழம்பு. உங்க பாஷையிலே முருங்கைக்காய் வத்தக்குழம்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுண்டைக்காயும் மணத்தக்காளியும் போட்டால் தான் எனக்கு வத்தக்குழம்பு. இதைத் தவிர்த்து நான் சமைச்சால் பிசைஞ்ச சாதம் வாரம் ஓரிரு நாட்கள் இருக்கும். துவையல், டாங்கர் பச்சடி பண்ணுவேன். சில சமயம் வெறும் மைசூர் ரசம் மட்டும் வைப்பதும் உண்டு. மாறுதலுக்காகச் சப்பாத்தி, சப்ஜி/அல்லது தால்/ஜீரா ரைஸ் எனவும் பண்ணிப்பேன். அன்னிக்கு ராத்திரி மோர் சாதமாக வைச்சுடுவேன். இப்போ காடரர் கொடுப்பது தான் ஒரே மாதிரி ஞாயிறு சாம்பார், திங்கள் வெறும் குழம்பு, செவ்வாய் சாம்பார் புதன் வெறும் குழம்பு, வியாழன் மோர்க்குழம்பு, வெள்ளி மறுபடி சாம்பார் சனி வெறும் குழம்பு/ எல்லாநாட்களிலும் ரசம் உண்டு/ அது மட்டும் மாறும். பருப்பு ரசம், ஜீரக ரசம், மிளகு ரசம், மைசூர் ரசம், வேப்பம்பூ ரசம், எலுமிச்சை ரசம், இன்னிக்கு பீட்ரூட் ரசம். கண்டந்திப்பிலி ரசம், பூண்டு ரசம் போன்றவையும் உண்டு.
நீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால், நல்ல வேளை விதவிதமா காய்கறி மாமா வாங்கிவருவதால் உங்களால் விதவிதமா சமைக்க முடியுதுன்னு தோணுது
நீக்குஆம், அதே!
நீக்குஇந்த வெயிலுக்கு எல்லா சமையலும் சாப்பிடப் பிடிப்பதில்லை. ரசம் சாதம், மோர் சாதம்!
நீக்குமாமா வாங்கிக் கொண்டு வரும் வாழைப்பூ குறைந்தது 2 நாட்கள் வரும். அப்போ ஒரு நாள் கறி, இன்னொருநாள் உசிலி அல்லது கூட்டு எனப் பண்னலாம். அதே போல் தான் வாழைத்தண்டு, கொத்தவரை, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்களும்.
நீக்குமாத்வர்களில் பெரும்பாலும் வைணவத்தைப் பின்பற்றுபவர்களே அதிகமோ என நினைக்கிறேன். வடமா, பிரஹசரணம், அஷ்ட சாஸ்திரம் எல்லாமுமே ஸ்மார்த்தர்களில் உள்ள பிரிவுகளே! இதிலே வடமா மட்டும் பவித்ர வடமா, வடமா, சோழ தேசத்து வடமா என 3 பிரிவுகள் இருந்திருக்கின்றன. இப்போது எல்லாம் பொதுவாகி உள்ளது. பிரஹசரணத்தில் கண்டர்மாணிக்கம் பிரஹசரணத்தை விசேஷமாகச் சொல்லுவார்கள். சோ அவர்கள் இதைக்குறித்து விரிவாக எழுதி இருக்கார்/ ஆனால் எந்தக் கண்டரமாணிக்கம்னு தெரியலை. செட்டிநாட்டில் ஒண்ணும், தஞ்சை (பழைய) ஜில்லாவில் ஒண்ணும் இருக்கு.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குஇன்னும் யாரும் வரலை. எத்தனை நாழி தனியாவே பேசிண்டு இருக்கிறது? போயிட்டு அப்புறமா வரேன். மத்தப் பதிவுகளெல்லாம் மத்தியானமாய்/
பதிலளிநீக்குதனியாவே பேசின்டிருப்பது புதுசா என்ன? ஏதோ நான் சீரீயசா கவனிக்கிறேன் என்று நினைத்து எத்தனை நாள் பேசிக்கொண்டிருந்திருப்பாள். என் கவனமெல்லாம் தொலைக்காட்சியில், செய்யும் வேலையில் என்று இவளுக்கு எங்கே புரிந்திருக்கப் போகிறது........ என்று ஒருவேளை இதைப் படித்தால் ரங்ஸ் நினைக்கக்கூடுமோ?
நீக்கு:))))
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிட்டே இருந்து பார்த்தாப்போல் சொல்றீங்களே நெல்லை! நினைக்கிறதென்ன! அதான் நடப்பு. ஆனால் தொலைக்காட்சியோ/வேலைகளோ இல்லை,. ஐ பாடில் யூ ட்யூப் விதம் விதமாகப் பார்த்துக் கொண்டு! அதிலேயே ஆழ்ந்து போயிடுவார். சுத்தி நடப்பதே தெரியறதில்லை. :( அப்பாதுரை எழுதி இருப்பதைப் படிச்சதும் இதான் நினைவில் வந்தது.
நீக்குபாருங்க... கிரிக்கெட் மேட்ச் பத்தி எழுதினேன். பெண்கள் கிரிக்கெட் பைனல் அன்று இடது கண் துடித்தது என நினைத்து மேட்ச் பார்க்கவுல்லை, மும்பை தோற்கும் என நினைத்து. ஆனால் பாருங்க.. இடது கண் துடித்தது, நல்ல மேட்சைக் காணும் வாய்ப்பு போகப் போகிறது என்பதை உணர்த்த, என்று புரிந்துகொள்ளவில்லை.
பதிலளிநீக்கு:(((
நீக்குசைவ முட்டை, சைவ மீன் வறுவல்........ இனி இவங்க எந்தத் திருமண அழைப்பு கொடுத்தாலும், வாங்கிக்கொள்வதற்கு முன்னமே யோசிக்கணும் போலிருக்கே..
பதிலளிநீக்குஅதானே
நீக்குஇப்படி எல்லாம் இருக்கு என்பதை இப்போத் தான் முதல்முதலாகக் கேள்விப் படுகிறேன். இனி யாரானும் பத்திரிகை கொடுத்தால் நன்கு அலசி ஆராய்ந்துவிட்டுப் போகணும்.
நீக்குசைவ முட்டையா? கேள்விப்பட்டதேயில்லை.
நீக்குvegan eggs என்று சோயா காய் எல்லாம் கலந்து பிழிந்து விற்கிறார்கள் - ஆனால் சைவ முட்டை என்று சொல்ல முடியாது.
நீக்குமுட்டையே சைவம் தான் என்று ஒரு கூட்டம் சொல்வதை இப்போது இணையத்தில் படித்தேன். மாமிசம் என்று எதுவும் முட்டையில் இல்லாததால் முட்டை சைவம் என்கிறார்கள்.
//சைவ முட்டை, சைவ மீன் வறுவல்........ இனி இவங்க எந்தத் திருமண அழைப்பு கொடுத்தாலும், வாங்கிக்கொள்வதற்கு முன்னமே யோசிக்கணும் போலிருக்கே..// அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம். தைரியமாக வாருங்கள். "இவர் சுத்த சைவம், அதனால் பாத்து, ஜாகிரதையாக பரிமாருங்கள் என்று கூறி கண்ணை காட்டி விடுவேன். உங்களுக்கு நிஜமான முட்டை, நிஜமான மீன் வறுவல் போட்டு விடுவார்கள் :))) ஜோக்ஸ் அபார்ட், ஒரு திருமண விருந்து மெனு கார்டில் மேலே குறிப்பிட்ட ஐட்டம்கள் இருந்ததாம். தவிர எல்லாவற்றிலும் சோம்பு இருந்ததால் தன்னால் சாப்பிட முடியவில்லை என மத்யமரில் ஒரு தோழி அங்கலாய்த்திருந்தார். மறுநாள் ஜெயா டி.வி.யில் ரேவதி சண்முகம் சைவ முட்டை குழம்பு என்று கிட்டதட்ட நீர் கொழுக்கட்டை போல ஒன்று செய்து காட்டினார். இதுதான் கேள்வி பிறந்த கதை. வழக்கம் போல் நெல்லையால் தவறாக திரிக்கப்பட்டது :((
நீக்குகோழி தினமும் முட்டை இடும். அதில் எல்லாவற்றிலுமே குஞ்சுகளுக்கான கரு இருக்காது. சேவலுடன் சேர்ந்த பின்னர் போடும் முட்டைகளிலேயே குஞ்சுகளுக்கான கரு இருக்கும். ஆகவே சாதாரணமாகத் தினம்தினம் வாங்கும் முட்டைகள் எல்லாம் உயிருள்ளது எனக் கூற முடியாது என்பதால் சைவம் என்கின்றனரோ என்னமோ!
நீக்குஎல்லோருமே பழைய நோட்டுகளைத்தான் தள்ளிவிடுவர். அப்படிச் செய்யாதவர்கள் முழுச் சோம்பேறிகளாக இருப்பர்.
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரியுமா? பழைய நூறு ரூபாய் நோட்டில் பல கள்ள நோட்டுகள் உலவுகின்றன. மார்க்கெட்டில் அப்படி ஒரு நோட்டை ஒருவன் கொடுத்துவிட்டான். முஸ்லீம் காய்கறிக்கார்ர்கள் அந்த நோட்டை நான் கொடுக்கும்போது புரட்டிப் பார்த்து வேறு நோட்டு கொடுங்கள் என்றனர். அப்போதும் எனக்குப் புரியவில்லை. அப்புறம் ரெகுலரீகப் பூ வாங்கும் ஒரு தமிழ் பெண்ணிடம் கொடுத்தபோது, இது கள்ள நோட்டு, பாருங்கள் இந்த வித்தியாசத்தை... மார்க்கெட்டுல யாரிடமாவது கொடுத்துவிடுங்கள் என்றாள். புறகு அங்கிருந்த மளிகைக்கடையில் பொருளை வாங்கி நோட்டைத் தள்ளிவிட்டேன். இதெல்லாம் ஒரே நாளில் நடந்தது. அன்றிலிருந்து பழைய நூறு ரூபாய் தாளை வாங்குவதில்லை.
ஆ அப்படியா!
நீக்குநாங்க சந்தைகளில் மாற்றுவதே இல்லை. ஏழை மக்கள்! நோட்டை மாத்த முடியலைனா என்ன செய்வாங்க? :(
நீக்குஒரு முறை இந்தியன் வங்கியில் எடுத்த நூறு ரூபாய் கட்டில் ஒரு கள்ள நோட்டு இருந்தது.
நீக்குவங்கியிலேயே உடனேயே உட்கார்ந்து பார்க்க வேண்டி இருக்கு. இப்படித்தான் எங்களுக்கும் சில/பல நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் வந்து நல்லவேளையா வாங்கின வங்கியிலேயே திரும்பக் கொடுத்து மாற்றிக் கொண்டோம்.
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.
நீக்குகடந்த சில நாட்களாகவே நினைத்திருந்தேன்.. அக்கா அவர்களைப் பற்றி கேட்க வேண்டும் என்று..
பதிலளிநீக்குநானே வராதபோது யாரிடம் சென்று கேட்பது..
அக்கா அவர்களது வருகை க்கு மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...
ஆம், அதே.
நீக்குதம்பி துரைக்கும் கேஜிஜி சாருக்கும் ரொம்ப நன்றி. கேஜிஜி சாரும் ஏதாவது எழுதுங்கனு சொல்லி இருந்தார். ஸ்ரீராமும் வாட்சப்பில் மனதை மாற்றவானும் இணையத்துக்கு வாங்கனு சொல்லி இருந்த நினைவு. சரினு இன்னிக்கு வந்தேன்.
நீக்குஅதுதான் நல்லது.
நீக்குவருக.. வருக.. சென்ற வாரம் ஒவ்வொரு பதிவிலும் உங்களைக் காணோமே என்று தேடினேன்.
நீக்குவாட்சப்பில் பதில் கொடுத்தேனே! போன வாரம் எல்லாம் இரு கால்களிலும் முழங்காலுக்குக் கொஞ்சம் மேலே கட்டிகள் இருந்ததால் உட்காருவது சிரமமாக இருந்தது. :(
நீக்குOh. Get well soon. Wish you a speedy recovery.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு'//நாலடி முதலை பேபி.. கைல எடுத்துக் கொஞ்சு'னு சொல்லிட்டுப் போறாரே போலீஸ்காரர்? என்னங்க இது? முதலையைப் பாத்ததும் ஸ்கேல் வச்சு அளந்து பாத்துட்டா அலற முடியும்?//
அதானே!
அப்பாதுரை சார் பக்கம் நன்றாக இருக்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநேற்று இரவு திரு ஆலங்காட்டு மயானத்தில் பேயோடு பேயாக இருந்து காரைக்கால் அம்மையார் பாடிய திருப்பாடல்கள் சிலவற்றை படித்துக் கொண்டிருந்தேன்..
பதிலளிநீக்குஎன்னென்ன விதமன பேய்களைச் சொல்லுகின்றார்!.. அதிலே நகைச்சுவை காட்டும் பேய்களும் இருக்கின்றன..
அம்மையார் சிவ நெறியில் நின்றிருந்ததால் - கனவுக் கன்னி மாதிரியான கவர்ச்சிப் பேய்கள் கண்ணில் படவில்லை..
பொதுவாக காரைக்கால் அம்மையார் மயானத்தில் இருந்து பாடினார் என்பதால் அவரது பாடல்களை சந்நிதியில் வீடுகளில் ஓதுவதில்லை..
இங்கே வந்தால் கலர் கலராக கவர்ச்சிப் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி!..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபயமா இருக்கு படிக்கவே
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். பிரார்த்திக்கிறேன் என்றாலும், பிரச்சனை வருகிறது. இறைவன் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையும் பிரச்சனையை கொண்டு வருகிறது. :))) அதனால் அனைவருக்கும் நலமே விளைக. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குநெல்லைத்தமிழருக்கு இப்படியொரு சக்தி இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தணும்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குஅப்பாதுரை அவர்களது பக்கம் நன்றாக இருக்கிறது...
பதிலளிநீக்குகலகலப்பு!..
நன்றி.
நீக்குதஞ்சை மாவட்டத்திலும்
பதிலளிநீக்கு(அவர்களும் மனிதர்கள் தானே!..) எந்நேரமும் இறைச்சி (அடச்சீ!..) என்ற கொள்கையில் மக்களோடு மக்களாய் கலந்து விட்டார்கள்..
ஒரே கடையில் இதுவும் அதுவும்.. அதுவும் உயர் தரமாம்!.. வெட்கம் இல்லாமல் சொல்லுகின்றார்கள்..
சமைப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்..
நமக்கு?..
உறவினர் வீட்டில் விருந்து அழைப்பிதழில் போட்டாயிற்று.. சைவ உணவும் உண்டு என்று..
மக்கள் காக்காய் மாதிரி ஆகி விட்டார்கள்.. இதையும் அதையும் தின்று கொண்டு..
குவைத்தில் இருந்த போது என்னிடம் ஒருவன் கேட்டான்..
இலை தழை தின்னும் ஆடும் மாடும் சைவம் தானே !.. - என்று..
கூடிய விரைவில் சைவ ஆட்டுக்கறி பிரியாணி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம்..
ஆட்டுக்கு பொட்டு வைத்து மாலை போட்டு விட்டால் சைவம் தானே!..
காலத்தின் கோலம்!
நீக்கு//ஒரே கடையில் இதுவும் அதுவும்.. அதுவும் உயர் தரமாம்!.// வடநாட்டிலிருந்து வந்த நாய், தமிழகத்தின் காக்காய் போன்றவை கலக்கவில்லை என்றால் உயர் தரமோ?
நீக்கு:))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் நெல்லைத் தமிழரின் தென்கலை வடகலை குறித்த பதில் கவர்ந்தது. இறைவன் அனைவருக்குமே பொதுவானவன். மனிதர்கள் தம் கண்களால் காணும் உருவங்களால்தான் அவன் வேறுபடுகிறானே ஒழிய அனைவரின் உள்ளங்களிலும் நித்தியவாசமாய் உறைபவன். அந்த பரமாத்வாவை உணர்ந்து கண்டு கொள்கிறவனுக்கு நான் என்றும் காட்சி தருகிறேன் என்கிறான்.
நமக்குத்தான் அதை உணரவும் ஒரு நேரமென்பது வர வேண்டும். அதையும் அவன்தான் தர வேண்டும்.
பழைய ரூபாய் நோட்டுகள் என்றாலும் அதன் மதிப்பு ஒன்றுதானே. ஆனாலும், அதை வைத்திருப்பதற்கு யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான். (கிட்டத்தட்ட முதியோர்களின் நிலைதான் அதற்கும்.) இப்போது வரும் பத்து, இருபது, ஐம்பது நூறு ரூபாய் நோட்டுக்கள் கலரில் கொஞ்சம் குழப்புகின்றன. ஆன்லைன் வர்த்தகங்கள் அதிகமாக வந்த பின் ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பதே அவ்வளவாக அரிதாகியும் விட்டது.
சகோதரர் அப்பாத்துரையின் பக்கமும் நகைச்சுவையுடன் படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅது சரி..இந்தப் புதிய வாசகர் யார்?
நீக்குநாலு நாட்கள் உடம்பு முடியாமல் வரலைனா உடனே அவங்க புதுசாயிடுவாங்க நெல்லை கணக்கிலே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஹா ஹா ஹா. அதானே.. இன்னமும் என் காலை வணக்கத்தை சகோதரர் நெ. தமிழர் பார்க்கவில்லை போலும். (இதுதான் கேட்டு வாங்குறது.) :)))
நீக்குஇரண்டு புதிய வாசகர்கள்!
நீக்குgrrrrrrrrrrrrrrrrrrrr @KGG! :D
நீக்கு:)))))
நீக்குஅனைத்தும் கலகலப்பாக இருந்தது...
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகலர்கலராக பேய்கள் இக்காலத்தில் அப்படி வந்தால்தான் அவைக்கும் மதிப்பு இருக்கும்.
பதிலளிநீக்குசிலர் மேக்கப் ஓவராக போட்டிருந்தால் எனக்கு கலர் பேய் போல் தோன்றும். :)
முதலை .......ரசனை. ஆனால் நேரில் எப்படி இருந்திருக்கும் உதறல் தான்.
// சிலர் மேக்கப் ஓவராக போட்டிருந்தால் எனக்கு கலர் பேய் போல் தோன்றும். :)// ஹா ஹா இது நல்லா இருக்கு!
நீக்குவடகலை தென்கலை பற்றிக் கேள்வி எழுப்பியவருக்கு, முஸ்லீம்களிடையே, ஷியா, சன்னி முஸ்லீம் என்று மிகப் பெரும் கான்சப்ட் வித்தியாசம் உண்டு என்பதும் (அவர்களிடையே கொஞ்சம்கூட ஒத்துப்போகாது என்பதும்), இறைவனை பெண்ணாக நினைத்து அவன் மீது அன்பு செலுத்தும் சூஃபி முறை உண்டு என்பதும் (அவர்கள் பெர்ஷியாவிலிருந்து வந்தவர்கள் என்பர்), இதுபோல கிறித்துவத்தில் ரோமன் கேதலிக், ப்ராடஸ்டண்ட் (இயேசுவின் அம்மாவை வணங்குபவர்கள், இயேசுவை மாத்திரம் வணங்குபவர்கள்) என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதும், பௌத்தத்தில் பல பிரிவுகள், ஜைனத்தில் பல பிரிவுகள் உண்டு என்பதும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவை எல்லாமே interpretationல் வரும் வித்தியாசங்கள், பிறகு அவற்றையே தீவிரமாகப் பின்பற்றும் கூட்டம்.
பதிலளிநீக்குபெந்தேகோஸ்தேயை விட்டுட்டீங்களே! அவங்களோடு பழகினால் நாம் நம்ம உம்மாச்சியை நினைக்கக் கூடக் கூடாது என்பார்கள். அம்பத்தூரில் ஓரு ஐயங்கார் மாமி (மாமாவைத் தவிர்த்து) குடும்பத்தோடு பிள்ளை, மரும்கள், பெண்கள், மாப்பிள்ளைகள் உள்பட திடீர்னு பெந்தேகோஸ்தேவுக்கு மாறிட்டாங்க. இது நடந்தது எண்பதுகளில். அவங்க எங்க தெருவுக்குக் குடி வந்ததும் செய்த முதல் வேலை அக்கம்பக்கம் இருபக்கம், எதிர் வீடுகள் ஆகியவற்றில் இருப்போருக்கு எச்சரிக்கை கொடுத்தது தான். பண்டிகை பூஜை, வழிபாடுகளின் சப்தமெல்லாம் வரக்கூடாது எனவும் மந்திர சப்தமே வரக்கூடாது எனவும் கண்டிப்பாகக் கட்டளை போட்டுவிட்டார்கள். அப்புறம் என்ன? தினம் தினம் சண்டை, சச்சரவு தான். போலீஸெல்லாம் வந்து சமாதானம் செய்யும்படி ஆச்சு. :( நாம பூஜை செய்தால் அவங்களுக்கு உடம்பு படுத்துகிறது என்பார்கள்.
நீக்குஅந்த மாமி கடைசியில் ஒரு வாகன விபத்தில் இறந்து போக, பெண்களில் இருவர் மட்டும் பிழைத்தனர். மற்றவரெல்லாம் போயிட்டாங்க. அந்த மாமா மட்டும் தேசிகாசாரி என்னும் தன்னுடைய உண்மைப் பெயரில் கடைசிவரை பெண் வீட்டில் வாழ்ந்து விட்டு இறந்தார் என்பார்கள். நாங்க மாற்றலாகிப் போயிட்டோம் என்பதால் பின்னாடி நடந்தது அவ்வளவாத் தெரியாது. பெண்கள் எல்லோருமே பேரழகிகள்.
நீக்குஇதெல்லாம் எழுதி மாளாது.. பெண், இன்னொருவரை பேரழகி என்று சொல்லுவதே எட்டாவது அதிசயம்தான்
நீக்குவைணவம் பற்றி இனி கேள்விகள் கேட்க மாட்டேன். நானொன்றும் வைணவத்தைப் பற்றி குறை சொல்லவில்லையே. தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சி. சுஜாதா எழுதிய விவரங்களை படித்திருக்கிறேன். அவரும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.
நீக்குJayakumar
JK sir.. நான் சொல்ல வந்தது, மதத்தில் concept interpretation will lead to different schools of thoughts. அதனால் கேள்வி தவறில்லை.எல்லா சமயங்களிலும் இது உண்டு என்பதனையும் குறிப்பிட நினைத்தேன்
நீக்குகருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.
நீக்குமு.மு.வை நான் பேரழகினு பலமுறை சொல்லி இருக்கேனே! நீங்க பார்த்ததில்லை/படித்ததில்லைனு நினைக்கிறேன்.
நீக்குஇன்னிக்குப் பாருங்க நான் முதல்லே வந்து போணி பண்ணினேனா! கருத்துகள் நிறைய வருகின்றன. :))))))
பதிலளிநீக்குஇந்த ராசி சொந்த வீட்டில் வொர்க்கவுட் ஆவதில்லையே. ஏதேனும் லக்னத் தடையா?
நீக்கு:)))
நீக்கு:)))))
நீக்குஅது விருச்சிக ராசிக்கு அப்படித்தேன்!நிறையக் கருத்துப் பரிமாற்றங்கள் இருப்பதற்கு ஆக்கபூர்வமான பதிவாய் இருக்கணும் இல்லையா? அப்படி எல்லாம் நான் சமீப காலங்களில் எழுதுவது இல்லை. அதோடு கருத்துகளுக்கு நினைவாய் பதில்களும் கொடுக்கணும். ஆகவே இப்போ வருவதே போதும். பொதுவாகவே எதிர்பார்ப்பு அவ்வளவு இல்லை என்பதால் ஏமாற்றம்னு இல்லை. என்றாலும் உ.வே.சா./பாரதி போன்றவர்கள் பற்றின பதிவுகளுக்கு யாரும் வரலைனா வருத்தமாய் இருக்கும்.
நீக்குஅடுத்த பயணம் ஆரம்பம், இப்போ மேல்கோட்டை வைரமுடி யாத்திரை. 2ம் தேதி இரவுதான் யதாஸ்தானம்
பதிலளிநீக்குபயண ஆர்வலருக்கு வாழ்த்துகள்.
நீக்குஎஞ்சாய் மாடி!!!
நீக்குகீதா
வாழ்த்துகள் !
நீக்குநெல்லை கேட்ட பேய் கேள்வியும்....கௌ அண்ணா பேய் பத்தின உங்க பதில் போலத்தான் நான் ஒரு கதையில் இங்கு எபில வந்த கதைதான் எழுதிய நினைவு...எனக்கும் இந்த டவுட் உண்டு...அதென்ன பெண் பேய் தான் எப்பவும்னு...
பதிலளிநீக்குஇங்கு கருத்துகளிலும் எப்பவோ முன்ன சொன்ன நினைவும்..கேட்ட நினைவும் குறிப்பா பேயார் உலாவிய போது!!!
கீதா
பேயாருக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
நீக்குபழைய நோட்டுகளை/கிழிந்த செல்லாதுன்னு சொல்ற நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிவிடுவது வழக்கம். கூடியவரை கடைகளில் மீதி வாங்கும் போது கவனமாக வாங்குவது வழக்கம். ஆனால் பெரும்பாலும் ஏதோ ஒரு பேய் !!!! வழியாதான் பணப்பரிமாற்றம்!!!
பதிலளிநீக்குகீதா
பே + ய் !!
நீக்கு//டிகை நடிகர்கள் கதாபாத்திரத்தில் காயமோ ஆக்சிடன்டோ ஆனாலும் அழகு குறையாமல் மேக்கப் போடுவதன் காரணம் என்ன? மூஞ்சில அடிபட்டாலும் கண் வாய் முகம் உதடுலாம் பாதிப்படைந்த இல்லையே,. காரணம் என்ன?// கேள்வி கேட்ட தோழர் பதினாரு வயதினிலே, குருதிப் புனல், அன்பே சிவம் போன்ற படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆண்ட்ரியா, திரிஷா போன்றவர்கள் கூட பேயாக நடிக்கும் பொழுது கோரமான முகத்தோடுதான் வந்தார்கள்.
பதிலளிநீக்குஅட! ஆமாம்!!
நீக்குஅந்தக் கேள்வியின் பின் பாதிதான் செம தமாஷு. கோரமான முகத்தைப் பற்றி கேள்வி கேட்பதால் பாலைவனமாக இருக்கும் பகுதி எப்படி சோலைவனமாகும்?
பதிலளிநீக்குஅதானே!!
நீக்கு