வியாழன், 16 மார்ச், 2023

வேணும்னு செய்யலீங்ணா....

 சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம்.   இடம் பெசன்ட் நகர் பீச் அருகே.

சில நேரங்களில் சில நிகழ்வுகள்.  

சரியா தவறா என்று காலமும் நேரமும்தான் கணிக்கும்.  எல்லோரும் கெட்டவர் இல்லை.  அதேபோல எல்லோரும் நல்லவரும் இல்லை!  எல்லோரும் நல்லவரே என்று ஒரு படம் வந்ததது.  பாஸிட்டிவாக நினைப்பவர்கள் அப்படி நினைப்பார்கள்.  ஆனால் எல்லோரும்  நல்லவர் இல்லை என்கிற வாக்கியமும் உண்மையைத்தான் சொல்கிறது!  என்ன நினைக்கிறீர்கள்?   குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகைநாடி மிக்க கொளல்!  சரி..  சம்பவத்துக்குள் போகலாம்.

பில்லை பிரௌன் ஃபைலுக்குள் பதித்து வைத்து விட்டு நகர்ந்தார் சர்வர்.

அவர் கரத்தைத் தொட்டு திரும்பிப் பார்க்க வைத்தேன்.  கார்டைக் காட்டினேன்.  "மெஷின் கொண்டு வாருங்கள்" என்று பொருள்!

அவர் புரிந்து கொண்டு ('டிப்ஸ் தேறாதோ' என்கிற கவலையுடன் ) நகர்ந்தார். 

பில்லை எடுத்து செக் செய்து கொண்டிருந்தோம்.  தெரிந்தோ தெரியாமலோ சயங்களில் நைஸாக ஐட்டங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.  அல்லது எண்ணிக்கையில் தவறு இருக்கும்.  குறைந்திருந்தாலும் சொல்வது எங்கள் வாடிக்கை.  எஸ்..  எஸ்...   உங்களுக்கும் அந்த வாடிக்கை உண்டு என்று தெரியும்.

பில் தொகை சரியாகவே இருந்தது.  பில்லுக்கு  தமிழ் என்ன?    விலைப்பட்டியல்!  பட்டியல் பொருந்தவில்லை.  அது பட்டியல் இல்லை.  அவைலபிளாக இருக்கும் எல்லா பண்டங்களுக்கு என்ன விலை என்று போட்டிருந்தால் அதுதான் விலைப்பட்டியல்!  ('அவைலபில்'..  இங்கிலிஷ்!  சட்டென முழுதும் தமிழில் வரமாட்டேன் என்கிறது பாருங்கள்..)    நாங்கள் சாப்பிட்ட பண்டங்களுக்கான விலை ரசீது..  இல்லை ரசீது என்பதும் தமிழ் இல்லை..  விலை சீட்டு என்று சொல்லலாமா...  விவரம் என்று சொல்லலாமா..  வேண்டாம் பட்டியலே இருக்கட்டுமே!   சில இடங்களில் சரியான தமிழ் வார்தையைக் கண்டுபிடிக்க முடியாது.  சினிமா டிக்கெட்டையும் டிக்கெட் என்றுதான் சொல்வோம், பஸ் டிக்கெட்டையும் டிக்கெட் என்றுதான் பொதுப்பெயரில் அழைப்போம்.  பேருந்துக்கு பயணச்சீட்டு என்று சொல்வார்கள்.  சினிமாவுக்கு?  பேங்கிலோ கடைகளிலோ காத்திருப்பதற்கும் பணம் கட்டுவதற்கும் வழங்கப்படும் டோக்கனை எப்படி தமிழில் சொல்வது?  ஆபரேஷன் தியேட்டரையும் சினிமா தியேட்டரையும் எப்படி தமிழில் சொல்வோம்?  அறுவை அரங்கம், திரைப்பட அரங்கம்?   ஆபரேஷன் என்றால் அறுவையா?

இப்படி உபயோகமில்லாமல் யோசித்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தபோது சர்வர் - பரிமாறுபவர் - மறுபடி ப்ரசன்னமானார்.  ப்ரசன்னமாவது சமஸ்கிருத வார்த்தை, இல்லையா?  இருங்கள்..  சர்வர் என்னவோ சொல்கிறார்.  கேட்போம். 

"ஸார்..  அங்கே ஒரே கூட்டம்...  மூணு மெஷின்ல ஒன்றுதான் வேலை செய்யுது..   அங்கே போய் பணம் கட்டிடுங்க.."

அவர் கையில் டிப்ஸை அழுத்தி விட்டு..  ச்சே.. தந்து விட்டு என்று வார்த்தை அமைக்கிறேனா பாருங்கள்..  ஏன் அழுத்தி விட்டு என்று வார்த்தை வரவேண்டும்?  அது தவறான பழக்கம் என்று மனதில் படிந்திருக்கிறது.  இல்லையா?

கல்லா அருகே நல்ல கூட்டம் நின்றிருந்தது.  கல்லா என்பது தமிழ் வார்த்தையா?  மக்கள் யாரும் பெரும்பாலும் கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை என்று தெரிகிறது.  எல்லோரும் கார்டை நம்பியோ, ஜி பே, ஃபோன்பேயை நம்பியோதான் வருகிறார்கள்.  மோசமான பழக்கம்.  எவ்வளவு கூட்டம் பாருங்கள்..  நாங்கள் எப்படி சீக்கிரம் பில் செட்டில் செய்து விட்டு வெளியேறுவது?  ஜோதியில் கலந்தோம்.

கொஞ்ச நேரம் அந்தக் கூட்டத்தில் நின்றுவிட்டு பணம் கட்டியது போல கிளம்பினால் கூட கவனிக்க ஆளில்லை. முக்கியமான இடம் என்பதால், வரும் கூட்டத்துக்கு அவர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.   எத்தனைபேர் அப்படிச் செய்தார்களோ..  நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். அல்லது மெஷின் ரிப்பேர் ஆகி இருப்பதால் இது ஒரு எதிர்பாரா சூழ்நிலை ஆகியிருக்கக் கூடும்.  இந்த ரிப்பேர் என்கிற வார்த்தை பேஜாரான வார்த்தைங்க.. சரியில்லை என்றாலும் ரிப்பேர் என்கிறோம்.  சரியாகி விட்டாலும் ரிப்பேர் செய்துவிட்டேன் என்கிறோம். சிலபேர் ரிப்பேர் சரி செய்து விட்டேன் என்பார்கள்.  அது கூட தவறுதானோ..    எங்கே விட்டேன்..  ஆ..  நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோமில் விட்டேன் இல்லையா?  ஏனென்றால்   நாங்கள் ஜென்டில்மென் யு ஸீ..  யெஸ்..  யெஸ்...  நீங்களும்தான்..  ஐ நோ..

ஒருவழியாக எங்கள் கையிலிருந்து...  இருங்கள் இலக்கணப்பிழை...  எங்கள் கைகளிலிருந்து..   நோ..  இப்பவும் பிழை..  ஒருத்தர் கையில்தான் அது இருக்க முடியும்?  ஸோ, என் கையிலிருந்து பில் பிடுங்கப்பட்டது.  கூடவே டெபிட் கார்டும்.

நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்?  பில்லை பார்த்து தொகையை அவர் அந்த மெஷினில் உள்ளீடு (தமிழ்!) செய்ததும் மெஷினைத் திருப்பி நம் பக்கம் வைத்தால் நாம் கடவு எண்ணை அதில் இடுவோம்.  ஓகே தட்டுவோம்.  பணம் இடம் மாறும்.  இல்லையா?

இங்கு அந்த சம்பவமே நிகழவில்லை.  எங்கள் கார்டு உள்ளே சொருகப்பட்ட சில நொடிகளில் மெஷின் துப்பிய சிறு தாளைக கிழித்து, கார்டையும் மெஷினிலிருந்து உருவி எங்கள் ஸாரி..  மறுபடி...   என் கையில் திணித்தார் பணம் வாங்கும் அந்த ஊழியர்.

PIN எண் அழுத்த ஆட்காட்டி விரலுடன் காத்திருந்தவன் ஏமாந்து போனேன்.

"pin நம்பர் போடாமல் எப்படி?"  என் மகனுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது.  மொபைலை எடுத்து நோக்கினேன்.  இணையம் சரியாக இல்லை என்றது மொபைல்.

"அது அவசியமில்லை..  இங்கே Wi Fe இணைப்பு இருக்கிறது" என்றார் ஊழியர். 

"இருந்தால் என்ன?  எங்கள் கார்டில் உள்ள நம்பர் எப்படி அதற்குத் தெரியும்?"  மகன் எப்போதுமே சந்தேகக்காரன்.  நிறைய கேள்விகள் எப்போதுமே சட்டைப்பையில் வைத்திருப்பான்.  அவன் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல ஊழியருக்கு முடியவில்லை, நேரமில்லை.  கூட்டம் அம்மியது.

மெஷினில் சட்டென ஒரு கமாண்ட் கொடுத்து நீளமாய் ஒரு தாளைக் கிழித்தார்.

"உங்களுக்கு அப்புறம் இரண்டு மூன்று பேருக்குப் போட்டிருப்பேன்.  அவ்வளவுதான்.  இதில் கடைசியாய் பணம்பெற்ற 15 எண்கள், கார்ட் எண், தொகை விவரங்கள் உள்ளன.  செக் செய்து கொள்ளுங்கள்."

உடனே பார்க்க முற்பட்டோம்.  நாங்கள் நால்வரும் அந்த பேப்பருக்குள் தலையை நீட்ட,  பின்னால் தள்ளு முள்ளு அதிகமானது.

"சார்...   இங்க நிக்காதீங்க...   பில் டாப்ல போன் நம்பர் இருக்கு பாருங்க..  உங்கள் பணம் அதிகமாய் எடுக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது..  வீட்டுக்குப் போய்க் கூட பாருங்கள்.  ஏதாவது சந்தேகம் இருந்தால் மதியானதுக்கு மேல, மூணு மணிக்கு மேல ஃபோன் பண்ணுங்க..  கூட்டம் அதிகமாவுது பாருங்க..  தள்ளுங்க ப்ளீஸ்.."

எங்களிடம் கேள்விகள் பாக்கி இருந்தன.  நகராமல் அவரை நோக்கி நிமிர்ந்து...

ஒரு சர்வர் எங்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்குடன் மரியாதையாக அருகில் வந்தார்.

நாங்களே வெளியில் வந்தோம்.  கொஞ்ச நேரம் அந்த பேப்பரைப் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை.

வீடு வந்தும் மாலைவரை மொபைலில் எந்த செய்தியும் வரவுமில்லை.  சமயங்களில் வங்கியில் ஏதாவது கோளாறு காரணமாகவோ வேறு காரணங்களுக்கோ எஸ் எம் எஸ் அனுப்பாமல் இருப்பதும் உண்டு.

அப்படியே அந்த நாள் கடந்து போனது.  மறுநாளும் வேறு வேலை, அலுவலகம், என்று கடந்து போக, விஷயம் பல்லிடை பாக்காய் உறுத்திக் கொண்டே இருக்க, ATM சென்று மினி ஸ்டேட்மென்ட் எடுத்தோம்.  
எங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தது.

நாங்கள் எங்கள் காசில் சாப்பிடவில்லை!  யாரோ பாவம் புண்ணியவான் கொடுத்திருந்திருக்கிறார்.  அவருக்காவது இப்படி எல்லாம் நடக்கிறது என்று தெரிந்திருக்குமோ என்னவோ..  எப்படி எல்லாம் அவசரத்தில் தவறு செய்கிறார்கள் பாருங்கள்...

நானும் கூட கெட்டவன் எல்லாம் இல்லை..  யு ஸீ..  எத்தனையோ முன்னர் இழந்திருக்கிறேன்..  இழந்ததில் துளி திரும்பி வந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்.  ஈரோடு சின்ரோம்! சாயம் போன பேப்பரை வைத்து அவர்களிடம் பேசலாம் என்றால் கூட சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்!

என்ன..  என்ன கேட்கிறீர்கள்?  அப்புறம் நீங்கள் எதற்கு என்று ஏதோ கேட்கிறீர்கள் போல தெரிகிறது.  காதில் விழவில்லை.  வேலை இருக்கிறது..  அடுத்த வாரம் பார்ப்போமா...  

===========================================================================================================

ஏன் தெய்வங்கள், அசுரர்களுக்கும் தர்மம் மீறிய மனிதர்களுக்கும், தர்மம் மீறிய கோரிக்கைக்கும் செவி சாய்த்து வரம் அருள்கிரார்கள் என்பது ஒரு சமயம் என் கேள்வியாக இருந்தது. பிறகே புரிந்தது.
தெய்வங்கள், கோரிக்கையின் தன்மையை கவனிப்பதில்லை. மாறாக, கோரிக்கையாளர்கள், தவம் செய்தவர்களின் தவத்தின் உண்மைத்தன்மையை, அதன் அடர்த்தியை, அதன் உக்ரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.


வரத்தைச் செயல்படுத்தியவர்கள், பெறுகிற பாவ புண்ணியங்களுக்கு, தவம் செய்தவர்களே பொறுப்பாளிகளாகிறார்கள். அந்தச் சுதந்திரத்தைத் தெய்வங்கள் அருள்கின்றன. வரம் முறையாகச் செயல்பட்டு மழையாக இருந்தால் உயிர்கள் செழிக்கும். தீயாக இருந்தால் உயிர்கள் கருகும். இதுவே தெய்வங்களின் நியதி.
நன்னூல் தந்த பவணந்தி முனிவரின் இலக்கணத்தில் ஒரு சூத்திரம் மக்கள் நரகர் தேவர் உயர்திணை என்பது அச்சூத்திரத்தின் முதல் பகுதி. உயர்திணை எது என்று சொல்ல வந்த முனிவர், ஏன் மக்களை முதலில் வைத்தார்? தேவரை அல்லவா முதலில் கொள்ள வேண்டும்?
ஏன் என்றால், மக்களுக்குத்தான் பாவம், புண்ணியம் செய்கிற சுதந்திரம் இருக்கிறது. நரகர் பாவம் செய்து நரகத்திலும், ஹேவர் புண்ணியம் செய்து தெய்வ லோகத்திலும் சேர்ந்தவர்கள் ஆயிற்றே... அவர்களுக்கு இனி எது சுதந்திரம்?
பவணந்தியைப் படித்தபின்தான் வியாசரைப் புரிந்து கொள்ள முடிந்தது. வியாசரைப் புரிந்து கொண்டபின்தான் தெய்வ நியதிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பிரபஞ்சன் - கல்கி காலம்தோறும் தர்மம்

========================================================================

வேணும்னு செய்யலீங்ணா....
===========================================================================================

ஞாயித்துக்கிழமை ரெஸ்ட்ங்ணா....


========================================================================================



என்றோ ஒருநாள் வரப்போகும்
ஒரு
வழிப்போக்கனுக்காகக்
காத்திருக்கிறது
ஒற்றை மரம்

கனிதருமா தனிமரம்
என்று
தினம் பார்த்துச் செல்கின்றன
குளிர்மேகமும் கோப சூரியனும்.

====================================================================================

உளுந்தூர்பேட்டை சண்முகம்

உளுந்தூர்பேட்டையில் பிறந்தவர் சண்முகம். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் (தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்).  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர். பிறகு சென்னையில் தமிழ்த்துறை பேராசிரியராகவும் இருந்தவர். ஈவெரா பெரியாரின் கொள்கைகளின்மீது அளவிடமுடியாத நம்பிக்கை கொண்டவர். திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு சிலைகளை உடைத்தவர். தன்னுடைய குடும்பத்தின்மீது மிகுந்த பாசமும் நேசமும் கொண்டவர் (அது சரி..பாசம் என்றால் என்ன? நேசம் என்றால் என்ன?)

மத்திம வயதில் அவருக்கு உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டது.  மரணம் தன்னைச் சூழ்ந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தின் தன் 'கடவுள் இல்லை' என்ற கொள்கையின் மீதான பிடிமானம் தளர்ந்தது. கடவுளின் மீதான அபிமானம் தோன்ற ஆரம்பித்தது. தன்னுடைய உடல் நிலைக்காக இறைவனைச் சரணடைந்தார். இறையருளா இல்லை அவரது நேரமா என்று தெரியவில்லை, அவர் உடல் நிலை முன்னேற்றம் கண்டு பழைய நிலைக்குத் திரும்பினார். சண்முகம், தன் உடல் குணமானதற்கு அந்த இறைவனின் கருணைதான் காரணம் என்று தீவிரமாக நம்பினார்.


தன்னைக் காத்தது அந்த முருகக் கடவுளே என்று சண்முகம் தீவிரமாக நம்பினார். பக்திப் பாடல்களை இயற்ற ஆரம்பித்தார். உணர்வினால் அமைந்த அந்தப் பாடல்கள், அவர் காலத்திற்குப் பிறகும் இப்போதும் நமக்கு பக்தி உணர்வை ஊட்டக்கூடியவை.  அவைகளில் 'நீ அல்லால் தெய்வம் இல்லை', 'திருப்பதி மலைவாழும் வெங்கடேசா', 'சின்னஞ்சிறு பெண் போலே',  'மதுரை அரசாளும் மீனாட்சி' போன்றவை அடங்கும். ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி, அகத்தியர் என்று பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். தமிழில் கவிதைகள் பக்திப்பாடல்கள் என்று நான்காயிரத்துக்கும் மேற்பட்டவைகளை அவர் இயற்றியுள்ளார். தமிழில் அவர் செய்த வெங்கடேச சுப்ரபாதம், பாம்பே சகோதரிகளால் பாடப்பட்டு பத்துலட்சம் கேசட்டுகளுக்கு மேல் விற்றுத்தீர்ந்தன. பஜகோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்ரம், ஹநுமான் சாலீசா என்று பல்வேறு பாடல்களை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் செய்திருக்கிறார். கலைமாமணி, தெய்வீகக் கலைஞர் என்று பல்வேறு பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

இவர் சீர்காழி கோவிந்தராஜனின் சகலை ஆவார்.  சீர்காழி அவர்கள், இவரது பாடல்களை நிறையப் பாடியுள்ளார். 2003ல் உளுந்தூர்பேட்டை சண்முகம் மறைந்தார். 2020ல் அதிமுக அரசு, இவரது நூல்களை நாட்டுடமையாக்கியது.


பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட உளுந்தூர்பேட்டை சண்முகம், அவரது பாடலான 'விநாயகனே வினை தீர்ப்பவனே' பாடல் இன்றி எந்த விநாயக சதுர்த்தியும் நிறைவு பெறுவதில்லை என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகிப் பெரும் புகழ் பெற்றார்.

காலம்தான் ஒவ்வொருவருக்கு எப்படி கற்றுக்கொடுக்கிறது?

நன்றி : நெல்லைத் தமிழன்.
===========================================================================================

பொக்கிஷம் :

"பின்னால வர்றது நம்ம சம்சாரமுங்களா....?"

"கவிஞரே..  உங்களை பார்த்ததுல சிலிர்த்துப் போச்சுங்க...   என் தலையைப் பாருங்க..."


"கோட்டு போடாத என்னை கொன்னுட்டான் கோட்ஸே.."

"நாமளே ஒரு பேங்க் ஆரம்பிச்சுடலாம் டாடி..."


"நாமெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளுங்களே இல்லப்பா..."

109 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காசு கொடுக்காமல் சாப்பிட்ட உணவும் அன்னதானமாக மாறும். பரவாயில்லை அடுத்த தடவை வேறு ஒருத்தருடைய பில்லை  உங்கள் பில்லில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

    வியாழன் கதம்பம் வித்தியாசமாக மாறிவிட்டது. சொந்த அனுபவமும் கவிதையும் பழையபடி. ஆனால் சொந்த சேமிப்பில் இருந்து வெளியிடப்பட்ட பொக்கிஷங்கள் போன்றவை இல்லை. படங்களே இல்லை. போட்டோக்கள் தான் உள்ளன.  அவை நன்றாக உள்ளன 

    பிரபஞ்சனின் வியாக்யானம் சிந்திக்க வைக்கிறது. நல்லது கெட்டது என்பது இல்லை. ஒருவருக்கு நல்லது என்று தோன்றுவது மற்றவருக்கு கெட்டது என்று தோன்றலாம். ஆக மனிதனின் நியதிகள் யாவும் சரியானவை என்று சொல்ல முடியாது. 

    இரண்டு மனைவிகள் இருப்பது குற்றம் அல்ல. அந்த உண்மையை மறைப்பது தான் குற்றம். 

    மோடி  படத்தைப் போடாமல் அது எப்படி நேரு படத்தைப் போடலாம் என்று சண்டை போட ஒரு அக்கா வருவார். 
    மொத்தத்தில் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசம் அமைப்பிலா, நடையிலா?!!
      நன்றி JKC ஸார்.

      நீக்கு
    2. இரண்டிலும். off track நிறைய சென்றுள்ளீர்கள். நினைத்துக் கொண்டு திரும்ப ஓடி வருகிறீர்கள்.

      நீக்கு
    3. வேண்டுமென்றே செய்ததுதான்!

      சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

      "அன்று நாங்கள் ஹோட்டலுக்குப்போனபோது கார்ட் கொடுத்து பணம் கொடுத்தோமா, அவர்கள் PIN நம்பர் கேக்காம கார்டை திருப்பிக் கொடுத்ததும் சந்தேகம் வந்து விசாரித்தால் உண்மையில் எங்கள் பணம்தான் போகவே இல்லை.  ஆக தவறு நடந்திருக்கிறது.  ஆனால் பாதிப்பு எங்களுக்கில்லை!

      இதைத்தான் வளர்த்தி இருக்கிறேன்!

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. தலைப்பு நடிகர் விஜய் பேசுவது போல உள்ளது.
    தவறாக வேறு ஒருவர் கணக்கில் நீங்கள் சாப்பிட்ட பில் போய் விட்டது.
    அவர் அன்று என்னடா இப்படி அதிகமாக பணம் எடுக்க பட்டு இருக்கிறது நம் கணக்கில் என்று வருத்தப்பட்டு இருப்பாரா? அல்லது கோபப்பட்டு ஓட்டலில் கேட்க போய் இருப்பாரா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. ஆனால் நாங்கள் சந்தேகப்பட்டது எங்கள் கார்டில் தவறு செய்திருப்பார் ஊழியர் என்று!

      நீக்கு
    2. சிப் கார்டுகளில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. தவறு எதோ ஒரு transaction incomplete ஆக தொக்கி நிற்கிறது. அதன் தொடராக பாக்கியுள்ள காரியங்கள் நடைபெறுகின்றன. தொக்கி நிற்கும் transaction bank சைடில் ஆக இருக்கலாம்.

      நீக்கு
    3. ஆனால் முன்னர் இப்படி PIN நம்பர் கேட்காமல் ஓரிருமுறை ஓரிரு இடங்களில் எனக்கு பணம் எடுத்திருக்கிறார்கள் - சரியான அளவு.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம். இன்றைய பதிவின் பகுதிகள் அனைத்தும் சிறப்பு. டிஜிட்டல் உலகம் - சில சமயம் இப்படியான தவறுகள் நடந்து விடுவதுண்டு. Tap and pay இருந்தால் கடவு எண் உள்ளீடு செய்ய வேண்டி இருக்காது. இத்தனை ரூபாய் வரை கடவு எண் உள்ளீடு செய்ய வேண்டியதில்லை என்பதை பயனரே மாற்றி அமைக்க முடியும். ஆனால் இந்த வசதியை நான் பொதுவாக பயன்படுத்துவதில்லை. அனுமதிக்கப்பட்ட ரூபாயை மாற்றி 0 என்று வைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எனது கார்டில் அப்படி எதுவும் வைக்கவில்லை.  டீஃபால்ட்டாக அமைந்திருக்கிறதா என்று செக் செய்து பார்க்க வேண்டும்.  நன்றி வெங்கட், வருகைக்கும், கருத்துக்கும்.

      நீக்கு
  6. //வழிப்போக்கனுக்காகக்
    காத்திருக்கிறது
    ஒற்றை மரம்//

    வழிப்போக்கனுக்காகக் காத்து இருக்கும் மரம் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் அருமை. முதல் பகுதியை எப்போதும் போல் சுவாரஸ்யமாக தந்திருக்கிறீர்கள். தமிழும் ஆங்கிலமுமாக கலந்து நாம் பேசுவதே நமக்கு ஒரு வழக்கமாகி விட்டது. நம் பேச்சு வழக்கில் ஆங்கிலம் கலப்பதை தவிர்க்க இயலவில்லை. சமயங்களில் சுத்தமான தமிழ் வார்த்தைகளை தேடத்தான் வேண்டியுள்ளது. அப்படி நாம் தேடுவதற்குள் நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த உரையாடலின் பக்கங்கள் திசை மாறிவிடும்.. :) (அப்பா... சப்ஜெக்ட் என்பதை யோசித்து எவ்வளவு நீளமாக்கி தர வேண்டியுள்ளது.)

    தங்கள் கட்டுரையில் பல இடங்களில் என்னையுமறியாமல் சிரித்து விட்டேன். நல்ல நகைச்சுவையுடன் கூடிய எழுத்துக்கள். இறுதியில் இப்படியெல்லாம் கூடநடக்குமா என்பது ஆச்சரியமாக உள்ளது. பாவம் அவர்.. விபரம் தெரிந்ததும் மனது ரணமாகி வருத்தப்படுவாரா? சாதாரணமாகி விடுவாரா? இறைவனுக்கே வெளிச்சம்... :)

    எங்கள் குழந்தைகளும் கையில் காசில்லாமல்தான் ஒவ்வொரு இடத்திற்கும் பயணிக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இந்த வகை கார்டுகளில்தான் பயன்பாடு. பணப்புழக்கம் சில்லறை தட்டுப்பாடு வருவதற்கு இதுவும் ஒரு காரணமோ.. தெரியவில்லை.

    கவிதை அருமை. படத்தையும் ஆழமான கவிதை வரிகளையும் ரசித்தேன். மேகமும், சூரியனும் விரும்பும் எதிர்பார்ப்பின்படி என்றேனும் ஒருநாள் அந்த தனிமரம் கனி தர ஆரம்பித்து விட்டால், வழிப்போக்கர்கள் கூட்டமும் அதிகமாகி விடும். மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  ஆங்கிலம் தமிழ் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் உரையாடல் செயற்கையாகி விடும்!

      //தங்கள் கட்டுரையில் பல இடங்களில் என்னையுமறியாமல் சிரித்து விட்டேன். நல்ல நகைச்சுவையுடன் கூடிய எழுத்துக்கள். //

      நன்றி அக்கா.  மனது ரணம் - சாதா ரணம்..  ஹா..  ஹா..  ஹா..  ஸ்பெஷல் ரணம்!  ஆனால் சிலர் கவனித்திருக்கக் கூட மாட்டார்கள்.

      நீக்கு
  8. வியாழனின் முதல் பகுதி, சொல்லவந்த விஷயத்தை விட்டுவிட்டு தமிழ் ஆராய்ச்சியில் இறங்கியதால் அயர்வைத் தந்தது. கார்டில் இப்படியெல்லாம் தகிடுதத்தமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்...   சொல்ல விஷயமே இல்லையே..  எதையாவது சொல்லணுமே.. :))

      நீக்கு
    2. But pun was nice. சந்துபொந்துலலாம் கட்டுரை போனதுபோலத் தோன்றியது. அஷ்டே

      நீக்கு
  9. ஞாயிறு ரெஸ்ட் - என் நண்பனின் சகோதரி லவ் மேரேஜ் இன்னொரு ஜாதில, முதலியார் செட்டியார்னு வச்சிக்கோங்க. கணவன் வீட்டுல ஜாதி மாறிடுச்சேன்னு அரிச்சு அரிச்சு இன்னொரு திருமணம் செய்து இன்னொரு கிராமத்தில் குடித்தனம் வைத்து சாதிப் பெருமையைக் காப்பாற்றிக்கொண்டனர். காதல் திருமணம் செய்த இருவரும் நல்ல அரசு வேலை.

    பதிலளிநீக்கு
  10. தவம் என்பது சேமித்த காசு. வரம் என்பது வாங்கும் பொருள். சிம்பிள். இதில் என்ன குழப்பம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் வாங்கி முழுக்க வாசிக்க வேண்டுமோ என்னவோ...

      நீக்கு
  11. உ. சண்முகம் தொடர்பாக நெல்லையின் யோசிப்பும் அதை ஒட்டிய உங்கள் வியாக்கியானம் இரண்டுமே கண்ணதாசனின் அனுபவப்படி தவறு. காலை வேளையில் விவரமாகச் சொல்ல நேரமில்லை. பின்னால் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷண்முகம் விஷயத்தில் என் வியாக்யானம் எதுவுமே இடம் பெறவில்லை....

      நீக்கு
    2. மாலையிலும் விவரமாக தட்டச்சு செய்ய அயர்ச்சியாக இருக்கிறது. இரண்டு தடவைகள் முயற்சித்து வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
      ஸாரி..

      நீக்கு
  12. நாளை நம் கணக்கிலிருந்து அதிகமாப் போனா நாம் கொடுக்கவேண்டிய பாக்கி என் மனம் சமாதானமடையுமா இல்லை போனமுறை லாபம் இவ்வளவு எனக் கணக்குப் பார்க்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கெல்லாம் பார்க்காது.  ஏற்கெனவே இழந்ததே அதிகம்!  அதையே நினைத்து நினைத்து உருகுவதில்லை!

      நீக்கு
  13. பொக்கிஷம் ரசித்தேன். நம்ம சம்சாரங்களா.. ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  14. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  15. தனி ஒருவராக இருந்து அடித்து விளையாடியிருக்கின்றீர்கள்..

    இன்றைய பதிவின் முதல் பகுதி அருமை..

    சரளமான எழுத்து நடை..

    நல்ல வேளை..

    உபதேசங்கள் ஒன்றும் இல்லை..

    பதிலளிநீக்கு
  16. ஹை ஸ்ரீராம் விஜய் ரசிகரானது எப்போங்கண்ணே!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. முதல் பகுதி ரசித்து வாசித்தேன்!!!! வார்த்தை கூடத் தமிழ்ச் சொல் இல்லையாக்கும்!!!!! நீங்கள் சம்பவத்தை non linear ஆகச் சொன்னதை ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதெப்படி ரகசிய/சங்கேத எண் கேட்காமல் பணம் கை மாறும்?!!!! அப்படி என்றால் உங்களுக்கு முன்னால் கொடுத்தவர்கள் யாருடையதேனும் அந்தக் கணக்கு முடியடையாமல் திறந்திருதால் பணம் டக்கென்று மாறுமே ஏடிஎம் மில் கூட நடப்பதாகச் சொல்வாங்களே அப்படி இருக்குமோ?

    அடப் பாவிங்களா! அந்த இழந்த நபர் யாரோ? என்னவோ போங்க.... அவர் உங்களுக்குக் கடன்பட்டிருந்தாரோ?!!1 ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நடந்ததோ அது நன்றாகவே,,,  மன்னிக்கவும்...  என்ன நடந்ததோ முருகனுக்குத்தான் வெளிச்சம்.

      நீக்கு
  19. சட்டைப் பையில் கேள்விகளை வைத்திருந்த உங்க பெரியவரிடம் இதுக்கான விடையும் இருந்திருக்குமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரிடம் கேள்விகள் மட்டுமே இருக்கும். அதுவும் முளைத்துக் கொண்டே இருக்கும்!

      நீக்கு
  20. பிரபஞ்சனுக்கும் என்னை மாதிரியே கேள்வி எழுந்திருக்கே!!!! சரி அவருக்கு என்ன விடை கிடைத்ததுன்னு பார்க்கிறேன்

    அவருக்குக் கிடைத்த புரிதல் எனக்கு விளங்கவில்லை.

    நான் என் மனதில் எழுந்த இந்தக் கேள்விக்கு நான் புரிந்து கொண்ட ஒன்று இப்படி. ஓர் உதாரணம்.

    இரண்யன் தன் மரணம் இப்படி எல்லாம் நிகழக் கூடாது என்று தவம் செய்து பெறுகிறான். அதில் இருந்த loop hole Supreme க்குத் தெரிந்ததால், அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தாலும் நஷ்டம் ஒன்றுமில்லை....அந்த loop hole இருக்கிறதே அதை வைச்சு விளையாடிடலாம். அபப்டிக்கா கொடுப்பது போல் கொடுத்து இப்படிக்கா உருவிடுதல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பிரபஞ்சனின் பக்கம் யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் இந்தத் தொடர் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  22. UN படம் செம க்ளிக்.

    ஆமாம் பொதுவாகவே இதன் மீது அதிருப்தி நிலவுகிறதுதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஞாயித்துக் கிழமை ரெஸ்ட்டுங்ணா - ஹாஹாஹா ரெண்டு வீட்டுலயும் இல்லாமா ஜாலியா கிளம்பிடுவாரோ அந்த ஆளு?!!

    இரு மனைவியர் -ஆளுமைகளை நினைக்க வைத்தது. எப்படி இது சாத்தியமாகும்னு? எப்படி சமாளிச்சிருப்பாங்கன்னு

    கீதா

    பதிலளிநீக்கு
  24. என்றோ ஒருநாள் வரப்போகும்
    ஒரு
    வழிப்போக்கனுக்காகக்//

    கவிதையை ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம். எடுத்துக் கொண்டுவிட்டேன்.

    என்றாவது ஒரு நாள் வருவான்
    தன் கணவன்
    என்று காத்திருக்கிறாள்
    அவள்
    வயிற்றில் ஒரு புழு பூச்சி இல்லை
    தூற்றுவது
    புகுந்த வீட்டுச் சுற்றம்.
    ***************
    என்றாவது ஒரு நாள் வருவான்
    தன் கணவன்
    என்று காத்திருக்கிறாள்
    கருவைச் சுமந்துகொண்டு!
    யாருடைய கருவோ என்று
    தூற்றுகிறது
    சுற்றம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கவிதை. 1940 களில் பெண்களின் நிலை!

      நீக்கு
    2. வ.வே.சு. ஐயரின் "குளத்தங்கரை அரச/வேப்ப?மரம்" நினைவில் வருது.

      நீக்கு
  25. உளுந்தூர் சண்முகம் பற்றிய குறிப்பு நெல்லையா...

    நெல்லை எங்கருந்து பிடிக்கறீங்க இதெல்லாம்?!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. பொக்கிஷங்கள் அருமை அருமை.

    அதற்கான Captions ரொம்ப ரசித்தேன்.

    //"பின்னால வர்றது நம்ம சம்சாரமுங்களா....?"//

    ஹாஅஹாஹாஹாஹா

    இதற்கடுத்த captions ம் செம...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட உளுந்தூர் பேட்டை சண்முகம், - பிள்ளையார் பாட்டு எழுதி மக்கள் மனங்களில் நிறைந்தார்..

    இதாங்க வாழ்க்கையின் நிஜம்!..

    நிஜத்துக்கு தமிழ்ல சொல் இல்லையா?..

    இருக்கே.. அதப்போட்டாத்தான் ஒரு கனம் இருக்கு!..
    கனம் ங்கறதும் தமிழ் இல்லேன்னு சொல்லப் போறீங்க.. அவ்வளவு தானே..

    இல்லேயில்லே.. கித்னா ஷோனார் பாஷாயா ஹமரா தமிள்!..

    என்னது பாச்சாவா?..

    ஆள உடுங்க ஷாமியோவ்..

    அதுவும் தமில் இல்லீங்கோ!..

    பதிலளிநீக்கு
  28. இன்றைய பொக்கிஷம் உண்மையிலேயே பொக்கிஷம்..

    பொக்கிஷமா
    வைப்புழியா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிசம் என்று சொல்லாமல் இருந்தால் போதும்!

      நீக்கு
  29. வைப்புழி
    வைப்புலி
    வைஃப் புலி
    வைப்பு இலி (!)

    வைத்த மாநிதி!..

    வைத்த மாநிதியோ..
    பயத்த மாநிதியோ

    அதுவும்
    தமில் இல்லே!..

    பதிலளிநீக்கு
  30. பின்னால வர்றது நம்ம சம்சாரமுங்களா?..

    நல்ல வேளை..
    மவுண்டு பேட்டன் சொதந்தரத்தை மட்டும் கொடுத்துட்டு ஓடிட்டார்!..

    சரி.. இதெல்லாம் பப்ஜிக்குத் தெரியுமா!..

    பதிலளிநீக்கு

  31. UN படம் நிதர்சனம்

    நிதர்சனமோ
    சுதர்சனமோ..

    உண்மை தானே!

    பதிலளிநீக்கு
  32. ATM CARD-யை நாம் வைத்திருந்தாலும், தானாக லவட்டிக் கொள்ளும் நுட்பம் வந்து பல நாட்களாகி விட்டது... கையில் கருவியுடன் ஒருவர் பக்கத்தில் நின்று உடனே செய்யலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆனால் அது வேறு. அபப்டியே நம் பணம் யாவும் போய்விடும்!

      நீக்கு
  33. சமீபத்தில் 'வாரிசு' படம் பார்த்தீர்களோ...?

    பதிலளிநீக்கு
  34. நேசம் - பாசத்துடன் அன்பையும் எதிர்ப்பார்த்து நேசிப்பது (யும்=காதலும் உண்டு)
    பாசம் - அன்பையும் எதிர்ப்பார்த்து பாசத்துடன் பழகுவது (யும்=பொருளும் உண்டு)
    அன்பு - எதையும் எதிர்ப்பார்க்காது (யும்=__ )

    முப்பாலும் வந்துவிட்டது... ஆனால் தலைகீழாக...!

    என்ன தாத்தா சொல்றீங்க...?

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    முருகா சரணம்...!

    பதிலளிநீக்கு
  35. ஒருவர் உருவாக்கின அனைத்தையும் அழிக்கும் நம்ம வெங்கோலனுக்கு பிடித்த படங்களாகவே இருக்கே...! ம்...

    பதிலளிநீக்கு
  36. கமலை விட அதிக அரிதாரம் போட்டு, கோட்டு போட்டு திரிபவனுக்கு ஒரு கோட்ஸே இல்லையா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 98 ஆம் ஆண்டில் காசி போயிட்டு வந்தோம். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டில் பத்ரி, கேதார் நாத், மத்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ் போனோம். அதன் பின்னர் வடமாநிலங்களில் பல திவ்ய க்ஷேத்திரங்களுக்குப் போனோம். அப்போப் பார்த்தவற்றுக்கும் இப்போது 2000 ஆம் ஆண்டைக் கடந்த பின்னர் பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள்! தொண்ணூறுகளில் நாங்க பார்த்த சோம்நாத், துவாரகாவை 2009/2010 ஆம் ஆண்டுகளில் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. அதே போல் நாங்க இருந்த ஊரான ஜாம்நகரும்! இதே போல் காசியும் இப்போப் போயிட்டு வரவங்க சொல்லுவதும். மத்ரா மட்டும் இன்னமும் கொஞ்சம் முன்னேற்றம் காண வேண்டி இருக்கு. பத்ரி, கேதார் போன்றவற்றில் இயற்கைச் சீற்றத்தை மீறிப் பல முன்னேற்றங்கள். கயிலைப் பாதையும் இப்போது சீனாவை நம்ப வேண்டாம். முழுக்க முழுக்க இந்திய வழியிலேயே போகலாம். அதுவும் நல்ல தரமான சாலைகள். நாங்கல்லாம் 2006 ஆம் ஆண்டு போனப்போ நேபாளின் காட்மாண்டு வழியாகச் சீன விசா பெற்றுச் சாலை என்னும் பெயரில் இருந்ததோர் பாதை வழியே போனோம். போக ஏழுநாட்கள். திரும்ப ஏழு நாட்கள். அங்கே கழிப்பது ஏழுநாட்கள். மொத்தம் 21 நாட்கள் ஆகும். இப்போ? வெகு எளிதாகப் பத்தே நாட்களில் சுகமாகப் போய்த் திரும்பலாம். ஹெலிகாப்டர் மூலம் போனால் ஒரே வாரம். இவை எல்லாம் கடந்த பத்து வருஷங்களில் ஏற்பட்டவையே! அதற்கு முன்னர் ஆண்ட எந்த அரசும் இம்மாதிரி வசதிகளெல்லாம் இந்தியாவில் பயணம் செய்யும் யாத்ரிகர்களுக்குச் செய்து கொடுத்தது இல்லை. முக்கியமாய்க் கயிலைப் பயண யாத்திரிகர்களுக்குக் கழிப்பறை வசதி இப்போத் தான். நாங்கல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கோம். . ஒதுங்கவே இடம் இருக்காது. இரவில் போனால் கன்றுக்குட்டி அளவுக்கான நாய்கள் மேலே விழுந்து பிடுங்கும். இப்போது இந்திய வழியில் முழுப்பாதுகாப்பு. நல்ல தரமான சாத்விக உணவு. ஆங்காங்கே கூடவே மருத்துவ உதவிகள். இப்போக் கடந்த இருவருஷங்களில் கயிலை யாத்திரை போயிட்டு வந்தவங்களைக் கேட்டுப் பாருங்க. முன்னர் கயிலை யாத்திரையை ஒருங்கிணைத்த பலர் இப்போது காணவே காணோம். ஏனெனில் அப்போதை விட இப்போது எளிமையான யாத்திரை.

      நீக்கு
    2. உத்திரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் மின்சாரம் என்பதே இருக்காது. நாங்க காசி யாத்திரை போனப்போக் கூட நாங்க தங்கி இருந்த சாஸ்திரிகள் ஜெனரேட்டர் மின்சாரத்தையே பயன்படுத்தினார். பிஹாரின் கயாவில் அதுவும் இல்லை. எங்கெங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கும். ஹரிக்கேன் விளக்குகள். மண்ணெண்ணை மட்டும் இல்லைனா ரொம்பப் பிரச்னை. இப்போது? முக்கியமான நகரங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல 100% எட்டப் பிரயத்தனங்கள் செய்கின்றனர். பிஹாரைப் போல செழிப்பான மாநிலத்தைப் பார்க்க முடியாது. அதே போல் அதைப் போன்ற ஏழை மக்களையும் பார்க்க முடியாது. இப்போது கொஞ்சம் முன்னேறி வருவதாகச் சொல்கின்றனர்.

      நீக்கு
    3. ஆம். இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆவல். துளசி டீச்சர் சென்று பார்த்து விட்டு ரொம்ப சிலாகித்து எழுதி இருக்கார் பாருங்க.

      நீக்கு
    4. இன்னும் எங்க எதிர் வீடுகள் இரண்டிலிருந்தும் போயிட்டு வந்து நல்லா இருக்கறதாச் சொன்னாங்க. இப்போப் போன 2022 ஆம் ஆண்டில் தான் போனாங்க.

      நீக்கு
    5. இதுவரையிலும் எந்த அரசும் கோயில்களுக்குத் தரிசனம் செய்யப் போகும் பொதுமக்களுக்குச் செய்து கொடுக்காத ஒன்றை இந்த அரசு வந்தப்புறமா நிறைவேற்றி வருகிறது. சோம்நாத் நாங்க தொண்ணூறுகளில் இருமுறை போனப்போப் பார்த்ததுக்கும் பின்னர் 2010/12 ஆம் ஆண்டுகளில் பார்த்ததற்கும் ஒப்பீடே செய்ய முடியாத அளவுக்குச் சிறப்பான மாற்றங்கள்.2018 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் மாத்ருகயா போனப்போவும் அஹமதாபாதைப் பார்த்து மலைத்துப் போனோம். ஒரு பெரிய கிராமம் மாதிரி இருந்தது தொண்ணூறுகளில். இப்போ? மின்சாரம் குஜராத்தில் கொட்டிக் கிடக்கிறது ரிலையன்ஸ் தயவில். ஒளி வெள்ளம் தான்.

      நீக்கு
  37. உங்கள் அனுபவம் விசித்திரமாக இருக்கே! நாங்கல்லாம் ஓட்டலுக்குப் போனால் பெரும்பாலும் பணமாகவே கொடுத்துடுவோம். இந்தக் கார்ட் தொல்லை எல்லாம் நல்லவேளையா வைச்சுக்கலை.! பையர், பெண் ஆகியோர் கொடுப்பாங்க என்றாலும் பிரச்னை வந்ததில்லை. இப்படி இன்னொருத்தர் கார்டின் பணத்தை நாம் எடுக்க முடியும்னா கார்டெல்லாம் வைச்சுக்கவே யோசிக்கணும் போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பளப்பணத்தை கையில் பணமாக வாங்கிய காலங்களில் நாங்கள் அவ்வண்ணமே செய்தோம்.  இப்போது டிஜிட்டல் யுகம் அக்கா.

      நீக்கு
    2. நாங்க இன்னமும் பால்காரர், வேலை செய்யும் பெண்மணி, பேப்பர்காரர், காய்கள் வாங்குதல். மளிகைப் பொருட்கள் வாங்குதல்னு எல்லாம் பணமாகவே வைத்துக் கொண்டு செலவு செய்து வருகிறோம்.இன்டர்நெட், மின் கட்டணம், வீடு மெயின்டனன்ஸ், தொலைபேசிக் கட்டணம், மாரியம்மன் கோயில் பூசாரி , பெருமாள் கோயில் பட்டாசாரியார் போன்றவை மட்டும் ஆன்லைன் பாங்கிங்.

      நீக்கு
    3. மிகச்சில சமயங்களில் நானும் பணமாகக் கொடுக்க வேண்டிதான் இருக்கிறது.

      நீக்கு
  38. காந்தியின் இந்தப் படம் நிறையத்தரம் வந்துவிட்டது. நேருவும்/ஐன்ஸ்டீனும் சேர்ந்து இருக்கும் படம் இப்போத்தான் பார்க்கிறேன். அதுக்குக் காப்ஷன் நல்லா இருக்கே! இஃகி,இஃகி,இஃகி! நிஜம்மாவே இப்படி நடந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாதுதான்!

      நீக்கு
  39. உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் சரி, பிரபஞ்சன் எப்போ ஆத்திகர்/அல்லது ஆன்மிகம் பக்கம் மாறினார்? ஆத்திகர் எனச் சொல்லுவது இங்கே சரியா இருக்காதுனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபஞ்சம் இரண்டு தொடர் கல்கியில் எழுதினார். படித்திருப்பீர்கள்.

      நீக்கு
    2. தொடர்கதை படிச்சேன். நினைவில் வருது. ராமேஸ்வரம் மீனவப் பையர் கோயில் குருக்கள் பெண்ணைக் காதலிப்பது போல. பாதி வரை தான்படிச்சேன். அப்புறமாக் கல்கியே கிடைக்கலை. அதன் பிறகு கல்கி படிப்பதையே விட்டாச்சு! :(

      நீக்கு
    3. கதை இல்லை. மகாபாரதத்தில் மாந்தர்கள் என்பது போல ஒன்று, இப்போது சொல்லி இருக்கும் தொடர்.

      நீக்கு
  40. இரு மனைவியரும் கணவன் தங்களைக் கவனிச்சால் போதும்னு இருந்துட்டாங்க. யாருக்குமே கோபம் வரலை போல! இதை எல்லாம் தற்காலங்களில் நகைச்சுவையாக எடுத்துண்டு போக வேண்டி இருப்பது தான் வேதனை. கவிதை நன்று. அதுக்கு எசாப்பாட்டு எழுதி இருக்கும் தி/கீதாவின் கவிதையும் அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்துக்கேற்ற அட்ஜஸ்ட்மென்ட்.  மனையாள் பணிசெய்தால் மணவாளன் வாழலாம்.  அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்!  இரண்டு மனைவி, இரண்டு பணி என்றால்?

      நீக்கு
  41. பொக்கிஷம் பார்த்தேன்.
    You too?
    வர வர ஏன் இப்படியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்று வேதனையாக இருந்தது. சும்மா ஜாலிக்காகத் தானே என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.
    என்னை மாதிரி முதியவர்களை அது இன்னும் காயப்படுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்கும்போது 'வாங்க வாங்க...  வீட்டில அழைச்சுட்டு வரலையா' என்று கேட்பதில்லையா?  அது போலதான் எழுதினேன்.  நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

      நீக்கு
    2. உண்மை சுடத்தான் செய்யும். உண்மை சுடத்தான் செய்யும். யுகேயின் "க்ரவுன்" தொடரில் இது குறித்து அப்பட்டமாகவே பேசுவதாக வரும். போலியான மரியாதையோ, விசுவாசமோ அவங்களிடம் இல்லைனு சொல்லலாமா? நடந்ததை நடந்தவாறே எழுதிப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

      நீக்கு
    3. உண்மையாக சொல்றேன். உண்மையை அப்படியே உண்மைன்னு உண்மையா நிறைய இடங்களில் சொல்ல முடிவதில்லை!

      நீக்கு
  42. இன்றைய பதிவு சுவாரசியம்.

    கவிதை நன்று.

    படங்கள் பொக்கிஷம் வாக்கியங்கள் இல்லாமல் பகிர்ந்திருக்கலாமோ? என எண்ணத் தோன்றியது. திரு.ஜீவி அவர்களும் அதை கூறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. பொக்கிஷப் பகிர்வுகளுக்கு பெரும்பாலும் ஏதாவது வாக்கியம் கொடுத்து பழகி விட்டது!

      நீக்கு
  43. பிரபஞ்சனைப் படித்த பிறகு தான் அவரின்
    கோணங்கித்தனத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
    ஒன்றைப் புகழ்கிற மாதிரிப் புகழ்ந்து, இகழ் --
    என்ன சொல்ல வருகிறார் இவர்?..
    தவம் செய்தவர்களை சாக்காக வைத்துக் கொண்டு தெய்வத்தைக் கிண்டலடிக்கிறாரா, இவர்?
    இது தான் நவீன நாத்திகமோ?

    'பார்ப்போர் அறவோர்
    பசு பத்தினிப் பெண்டிர்
    மூத்தோர், குழவி
    எனுமிவரைக் கைவிட்டு' என்ற
    சிலப்பதிகார கண்ணகி நியாயத்திற்கு
    என்ன காரணம் கற்பித்து இவரால் சொல்வ முடியுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
    'கற்றதினால் ஆய பயன் என் கொல்?''
    -- இவர்களைப் பொறுத்த மட்டில் இது தான் இது தான், இதுவே தானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  சாதாரணமாக நீங்கள் எழுத்தாளர்களை எந்த வகையிலும் குறை சொல்ல மாட்டீர்களே ஜீவி ஸார்...

      நீக்கு
  44. வித்தியாசமான வியாழன் படைப்பு. ஆனால் இயல்பாக இல்லாமல் வலிந்து எழுதியது போல் இருக்கிறது.
    பொக்கிஷம் படங்கள் அருமை! தாகூரும், ஐன்ஸ்டீனும் இருக்கும் படம் அவர்கள் இருவரும் நோபல் பரிசு பெற்ற பொழுது எடுத்ததோ? இருவருக்கும் ஒரே வருடம்தான் நோபல் பரிசு கிடைத்தது. 'தி பிரைஸ்' என்னும் நாவலில் இர்விங் வாலஸ் "People are all always good, but for reasons. Einstein is good without any reason". என்று எழுதியிருப்பார்.
    உளுந்தூர்பேட்டை சண்முகம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.
    கவிதையும், படமும் அழகு.
    Why no jokes?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஞாபகசக்தி எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தும்.  நன்றி பானு அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!