திங்கள், 27 மார்ச், 2023

'திங்க'க்கிழமை  :   செஸ்வான் மாக்கரோனி-  ஜெகேசி

 

செச்சுவான் மேக்கரோனி

J K C

கோதுமையின் உப பதார்த்தங்களான ஆட்டா, ரவை, மைதா, சேமியா, சம்பா ரவை போன்றவற்றை எல்லோருக்கும் தெரியும். இவற்றைக் கொண்டு ரொட்டி, தோசை, உப்புமா, பூரி, ரவை கஞ்சி, ரவை பொங்கல், ரவை இட்டிலி போன்றவற்றை உண்டாக்கலாம் என்பதும் தெரியும். ஆனால் மற்ற பதார்த்தங்களான நூடுல்ஸ், பாஸ்டா, மாக்கரோனி. ஸ்பாகெட்டி போன்றவற்றை பற்றி அறிந்தவர்கள் குறைவு. இவை விரைவாக சமைத்து  உண்ணக் கூடிய அவசர உணவுகள் ஆகும். காலையில் அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். மேலும் தொட்டுக்கொள்ள என்று சட்னி, சாம்பார் போன்று  எதுவும் தேவை இல்லை.

இன்றைய பதிவில் மேக்கரோனி பற்றி பார்ப்போம்.

வேண்டிய பொருட்கள்: மேக்கரோனி, செஸ்வான்  சாஸ் (SCHEZWAN SAUSE) கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் (அடி பிடிக்காமல் இருக்க, மற்றும் காரம் குறைக்க).  சீஸ் துருவியது இருந்தால் சுவை கூடும்.



வேண்டிய பொருட்கள்: மேக்கரோனி, செஸ்வான்  சாஸ்.




ஒரு பாத்திரத்தில் மேக்கரோனி அளவைப் போல் இரண்டு பங்கு தண்ணீர் எடுத்துக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கூடுதலாகவே இருக்கட்டும். தண்ணீர் கொதிக்கும் போது மேக்கரோனியை போட்டு 5 அல்லது 7 நிமிடம் வேக விடுங்கள். வெந்த பின் அடுப்பை நிறுத்தி விட்டு எடுத்து கஞ்சியை வடித்த பின்  குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டுங்கள். (blanching)


அடுப்பில் வாணலி அல்லது வோக்கை வைத்து கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய  விடுங்கள். பின்னர் வடித்து வைத்துள்ள மேக்கரோனியை அதில் போட்டு ஒரு டீஸ்பூன் செஸ்வான் சாஸையும் ஊற்றி நன்றாகக் கிண்டுங்கள். உப்பு சேர்க்க மறக்க வேண்டாம். சாஸ் மிளகாய், பூண்டு உள்ளதாகையால் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டும் அளவுக்கு சேர்த்தால் போதும். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லியை அரிந்து சேர்க்கவும்.


துருவிய சீஸ் சேர்த்தால் சுவை இன்னும் கூடும்.  கொஞ்சம் காரம் மட்டுப்படும். புளிப்புக்கு டொமாட்டோ சாஸ் இருந்தால் கொஞ்சம் சேர்க்கலாம்.

மேக்கரோணி பல வடிவங்களில்  உண்டு. A b c d என்று ஆங்கில எழுத்துக்களில் உள்ளவை குழந்தைகளை ஈர்க்கும்.

12 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. செய்முறை விளக்கம் சுலபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நான் மெக்ரோனி வகையறாக்களைச் சாப்பிட்டதே இல்லை (அதற்கான வாய்ப்புகள் ஏராளம், குறைந்தபட்சம் விமானப் பயணத்தில் கொடுப்பார்கள்)

    1993ல் என் சமையல் அறிவு மிக்க் குறைவு. சாதம், தக்காளிப் பச்சடி, சில கலந்த சாதங்கள் செய்யத் தெரியும். அப்போது, குழல் சிப்ஸ் ஃபேமஸ் இந்தியாவில் சாப்பிட்டிருக்கிறேன். 93ல் ஒரு விடுமுறை தினத்தன்று, துபாயில் இந்த மேக்ரோனியை வாங்கி (அப்போ மேக்ரோனினா என்னன்னு தெரியாது), கடாயில் எண்ணெயைச் சூடு பண்ணி இதனைப் போட்டால் கடாயின் அடியிலேயே படுத்துக்கொண்டுவிட்டது. சிப்ஸ் மாதிரிப் பொரியலை. அப்புறம்தான் தெரிந்தது இது சிப்ஸுக்கான வஸ்து அல்ல என்று. 2 1/2 திர்ஹாம்கள் வேஸ்ட்.

    பதிலளிநீக்கு
  4. பசங்களுக்கு இது பிடிக்கும். வீட்டில் எப்போதாவது செய்து சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.
    பல வருடம் முன்பே நான்தான் எங்கள் வீட்டில் முதன் முதலில் மக்ரோனி செய்தேன்.
    காரமும், இனிப்பும் செய்வேன். இப்போது வித விதமாக கிடைக்கிறது.
    சங்கு வடிவில்,மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எல்லாம்.
    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கி சேர்த்து காரம், தேங்காய்பூ, சீனி , நெய் சேர்த்து இனிப்பு என்று செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் கோமதிக்கா....இதில் பாயாசமும் செய்வதுண்டு!!!!! கிட்டத்தட்ட அடைப் பிரதமன் மாதிரிதான்...

      கீதா

      நீக்கு
  6. செய்முறை விளக்கம் அழகு. பொதுவாய் பாஸ்தா வகைகள் 44க்கும் மேல் இருக்கின்றன. இந்த எல்போ வகையாக இருந்தாலும் சரி, பென்னே, ஃபூஸிலி வகையாக இருந்தாலும் சரி, நிறைய தண்ணீரில் உப்பும் சேர்த்து வேக வைத்து, வெந்ததும் வடிகட்டி பின் tap waterல் ஒரு முறை கழுவி நன்றாக வடிகட்டி ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து டப்பாக்களில் ஸ்டோர் பண்ணி ஃப்ரீசரில் வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது எடுத்து சமைத்துக்கொள்ளலாம். பாஸ்தா செய்ய ஸ்ப்ரிங் ஆனியன், குடமிளகாய், பாஸ்தா சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் அவசியம் தேவை. மஷ்ரூம், காரட், பீன்ஸ், வயலட் முட்டைக்கோஸ், புரோக்கலி அல்லது கோழித்துண்டுகள் என்று உபயோகித்து பல வகைகளில் சமைக்கலாம். இத்தாலியரின் ஸ்பெஷல் உணவு வகையான இது இந்தியாவில் ஃபியூஷன் முறையில் பல வடிவங்களில் வந்து விட்டது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா. இங்க ஃப்யூஷன் ஆகி வந்திருக்கு. பல உணவகங்களில் நீங்க சொல்லிருப்பது போல் செய்து ஃப்ரீசரில் போட்டு வைத்து விட்டு, ஆர்டர் செய்யறப்ப டக்னு செஞ்சு கொடுக்கறாங்க...இப்ப இங்க ஒரு க்டையில் அப்படியான ஃப்ரீசரில் வைத்த பாஸ்டாவே கிடைப்பதைப் பார்த்தேன். அதோடு இத்தாலியன் ஸ்பைசஸ், சாஸ் எல்லாமே மேகி நூடுல்ஸ் வருவது போல் கூடவே ...

      கீதா

      நீக்கு
  7. பாஸ்டா வகைகள் 44 உள்ளன என்பது புதிய செய்தி. இதுவரை வேகவைத்த பாஸ்தாவை ப்ரீஸரில் வைத்து சாப்பிட்டதில்லை. சேச்சுவான் சாஸ் எல்லாம்  கலந்து அதை மட்டும் உபயோகித்தால் போதுமானதாக இருக்கும். டொமட்டோ சாஸ் அதில் இல்லை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. சுலபமான செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    எங்கள் வீட்டில் மக்கரோணி, பாஸ்ரா ஸ்பகற்ரி, நூடில்ஸ் எல்லாம் மற்றையவர்களுக்கு பிடிக்கும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  9. ஜெ கே அண்ணாவின் செச்சுவான் மாக்கரோனி / பாஸ்தா நல்லா வந்திருக்கு. எளிய முறை ஆனால் நல்லாருக்கும்.

    இதில் பல வகைகள் இருக்கு. அதாவது பாஸ்தா வகைகளே நிறைய இருக்கு. செய்ததுண்டு.

    சாஸ் வீட்டிலேயே செய்து வைப்பதுண்டு வெள்ளை சாஸ், செஷ்வான் சாஸ் இவை. அது போல Italian Spices - oregano, thyme, basil, rose mary இல்லைனா இவை எல்லாம் கலந்ததும் கிடைக்கும் அதை மேலே தூவினால் அது தனி சுவை.

    அண்ணா சொல்லியிருப்பது போல் சீஸ் போட்டா சுவை.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!