பானுமதி வெங்கடேஸ்வரன் :
தமிழக முதல்வருக்கு பிறந்த நாளில் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு விருந்தாளிகளில் நீங்களும் ஒருவர் என்று உங்களுக்குஅழைப்பு வருகிறது. அவருக்கு என்ன பரிசு கொண்டு செல்வீர்கள்? அவரிடம் என்ன கூறுவீரகள்? பிறந்த நாள் வாழ்த்து என்று கூறி டபாய்க்கக் கூடாது.
# திருக்குறள் அறத்துப்பால் பற்றிய நல்ல தமிழ் நூல் பரிசாக கொடுப்பேன். அரசு வழங்கும் இலவசங்கள் , வாக்காளர்களுக்கு கட்சி வழங்கும் பரிசுகள் பற்றிய கொள்கையை மறு பரிசீலனை செய்யக் கேட்டுக் கொள்வேன்.
இன்று காலை ஒரு கனவு, நான் காஞ்சீபுரம் செல்கிறேன், அங்கிருக்கும் நெல்லை தமிழனிடம் எனக்கு இந்த ஊர் கோவில்களைப் பார்க்க வேண்டும் என்று கூற, அவர் "உங்களுக்கு முதலில் தாயாரை சேவிக்க வேண்டுமா? பெருமாளை சேவிக்க வேண்டுமா?" என்று கேட்கிறார், "நான் அப்படியெல்லாம் இல்லை, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்கிறேன்" இதோடு கனவு முடிந்து விட்டது. இந்த கனவிற்கு என்ன பொருள்? பி.கு.: நான் நெ.தெ.யை பார்த்ததே கிடையாது, என் கனவில் வந்தவர் நெ.தெ. என்று எனக்குத் தோன்றியது.
நெல்லைத்தமிழன் பதில் :
It is bit difficult to interpret. இதன் அர்த்தம், உங்களுக்கு வைணவக் கோவில்களைக் தரிசிக்கணுமா இல்லை சிவன் கோயில்களா? வைணவக் கோவில்னா முதலில் தாயாரைச் சேவித்துட்டு பெருமாள் சந்நிதிக்குச் செல்லணும். தாயார் சந்நிதி, பெருமாள் மூலவர். சிவன் கோவில்னா முதலில் சிவன், பிறகு அம்பாள் சந்நிதி. By the by my photo has come in EB multiple times and in current yathra also few photos coming
கீதா சாம்பசிவம் :
வடமாநில இளைஞர்கள் இங்கே வந்து பிழைப்பு நடத்துவதை ஆதரிக்கிறீர்களா? அதனால் தமிழர்களில் வேலை வாய்ப்புக் குறைகிறது என்பதும் சரியா?
# இதில் ஆதரிப்பது எதிர்ப்பதெல்லாம் எதுவுமில்லை. இந்திய மக்கள் இந்தியாவில் எங்கும் வேலை பார்க்க உரிமை உண்டு. போட்டி போட்டு ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறன் - அதிர்ஷ்டம்.
கிராமங்களில் நூறு நாள் வேலைக்கே ஆள் கிடைப்பதில்லை. அப்போ கிடைக்கும் வடமாநில ஆட்களை வைத்து வேலை வாங்குவது தவறானதா?
# முன்பே சொன்னபடி வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிக்கல் இருந்தால் உள்ளூர் ஆட்கள் அந்த வேலையில் நாட்டம் காட்டவில்லை என்று ஆகும். எனவே கிடைத்த நபருக்கு வேலை தரும் கட்டாயம் வேலை தருபவருக்கு ஏற்படுகிறது.
மத்திய அரசு வேலைக்கான தேர்வில் பங்கு பெற்றுத் தேர்ச்சியடையும் விதத்தில் நம் தமிழ்நாட்டுக் கல்வி முறை தரமானதாக உள்ளதா?
# அரசு பள்ளிகள் தரும் கல்வியின் தரம் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் அந்த தரம் சிறப்பாக இல்லை என்று நமக்கு தெரியும் பிற மாநிலங்களை பற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. ஆனால் நீட் தேர்வு வேண்டாம் என்று நம் அரசே இவ்வளவு பிடிவாதம் பிடிப்பதை வைத்து பார்த்தால் நம் கல்வித்தரம் உயர்வாக இல்லை என்று நாமே ஒப்புக்கொள்வது என்று ஆகிறது.
தொழில் முனைவோராகப் பயிற்சி பெறவோ அல்லது மத்திய அரசு வேலைக்கான தேர்வுகளில் பங்கெடுக்கப் பயிற்சி பெறவோ தமிழக இளைஞர்கள் ஏன் முன் வருவதில்லை?
ஈரோடு, திருப்பூர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் பின்னலாடைப் பயிற்சி, ரெடிமேட் ஆடைகளில் அலங்காரங்கள் செய்யும் பயிற்சி, உடை தயாரிப்புக்கான பயிற்சி போன்றவற்றிற்கு மத்திய அரசு இளைஞர்கள், இளம்பெண்களைத் தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு உதவித்தொகை, தங்குமிடம…
# தமிழக இளைஞர்கள் ஏதோ ஒன்றுக்கு முன் வரவில்லை என்றால் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும் ?
தமிழகத்தின் கட்சிகள் அறிந்திருக்கிறதோ இல்லையோ எனக்கே நீங்கள் சொல்லித் தான் தெரியும். வேறு விபரங்கள் எனக்குத் தெரியாது.
நாம் ஒரு பொருளை வாங்கினால் அதைப் பற்றிய விளம்பரங்கள் முகநூலிலும் ஜிமெயிலிலும் அதிகமாய் வருவது எப்படி? இணையம் நம்மைக் கண்காணிக்கிறது என்பதாலா?
# இணையத்தில் நாம் தேடும் பொருட்கள் குறித்த தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டு கூகுள் போன்ற நிறுவனங்கள் நாம் நம் தொலைபேசியை திறக்கும் போது அவை குறித்த விளம்பரங்களை நமக்கு அளிப்பது உண்மை. இது கண்காணிப்பு அல்லது ஆட்சேபிக்கத்தக்கது என்று சொல்லலாமா என்று அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் அவரவர் தாய்மொழி எனில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் தமிழர்கள் மட்டும் இதில் தனித்துவம் பெற்றவர்கள் எனச் சொல்லுவது எப்படி?
# தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இது குறித்து எந்த அளவுக்கு பெருமைப்பட்டுக் கொள்ளலாம் வேறு மொழிகளை எப்படி எல்லாம் கருதலாம் என்பது விவாதத்துக்குரிய விஷயம். தமிழில் ஆர்வமோ தமிழில் திறமையோ அதிகம் இல்லாவிட்டாலும் இந்தி எதிர்ப்பும் ஆங்கிலத்தில் அதிக ஆற்றல் பெறாத தன்மையும் தமிழகத்தில் பெரும்பாலும் இருந்து வருகிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தமிழ் இளைஞர்கள் நல்ல திறமை பெற்று இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இன்றைய ஆரம்பக் கல்வி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருப்பதற்கும் தாய்மொழி குறித்த அறிவு அவர்களுக்கு இல்லாததற்கும் என்ன காரணம்?
# பொதுவான திறமைக் குறைவு அரசுப் பள்ளி மாணவர்களிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் திறமை மிகவும் பெற்றிருந்தாலும் கூட , தமிழ் என்று வந்தால் அவர்களுடைய ஆற்றலும் நாட்டமும் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. தமிழில் அதிக திறமை பெற்று இருப்பதால் சாதிக்க கூடியது எதுவும் இல்லை என்ற எண்ணம் பொதுவாக நிலவி வருவது தான் இதற்கு காரணம் .
பெற்றோர்கள் வீட்டிலேயே பிள்ளைகளிடம் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் .
ஜெயக்குமார் சந்திரசேகரன்:
பொது அறிவு என்றால் என்ன? பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பதா? அல்லது பொது வெளியில் கற்கும் அறிவா? அல்லது தேர்வுகளில் பொதுவே கேட்கப்படும் கேள்வி பதில்களா?
# ஒருவர் தாம் படித்த படிப்பு, அல்லது அவருடைய வயது இவற்றின் அடிப்படையில் அவருக்கு இருக்க வேண்டிய சாதாரண அறிவுத் திறன் இருந்தால் அவர் போதுமான பொது அறிவு உடையவர் என்று சொல்கிறோம். பொது அறிவு உள்ளவர்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளை சரியான முறையில் தீர்த்துக் கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.
IQ என்றால் என்ன? எப்படி கணக்கிடுகிறார்கள்?
# ஒருவர் தம் வயதுக்குரிய அளவுக்கு அறிவும் திறனும் உடையவராக இருக்கிறாரா என்பதை சில வினாக்களைக் கேட்டு விடைகளை மதிப்பிட்டு IQ என்ன என்று முடிவு செய்கிறார்கள். (இது எல்லாம் தெரியாமல் நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என்று நம்புவது கடினம். )
= = =
அப்பாதுரை பக்கம் :
நாலு நாள் காசி போனதுல சரியா எழுத முடியலே.. கனெக்ஷன் ரொம்ப பேஜார் ஹை!
டாக்டர் பகாசுர்
நம்மில் பலர் சிறு வயதில் சாக்பீஸ், பல்பம், சட்டைப் பித்தான், ஊக்கு (!) என சத்துணவுக்கு ஒவ்வாத சமாசாரங்களை அவ்வப்போது விளையாட்டாகவோ விவரமறியாமலோ விழுங்கியிருக்கிறோம்.
விசித்திர விழுங்கல்கள் என்று எபியில் அடுத்த வாரம் ஒரு பகுதி வரலாம், அதில் நீங்கள் விழுங்கிய விவரம் சேருங்கள். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது (அட!) பின்னூட்டம். இப்ப நவருங்கஜி.
சமகால சிறுவர்களின் விழுங்கல்கள் பற்றி மருத்துவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளலாம்?
நிறைய விழுங்கு பொருட்கள் இந்தக் காலத்தில் சிறுவர்கள் கையில் (வாயில்) சேர சாத்தியம் இருப்பதாலும் அதனால் பெற்றோர் கவலை (ரத்த அழுத்) அதிகமாகும் என்பதாலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பரோபகார டாக்டர் பகதூர் தன் சகாக்களுடன் சேர்ந்து ஒரு பரிசோதனை செய்தார்.
ஒரு திங்கட்கிழமை காலை சகாக்களுடன் சேர்ந்து சாதாரணமாக நாலைந்து லெகோ துண்டுகளை சுவாகா செய்தார்.
அதற்கு பிறகு அந்த லெகோ துண்டுகள் வெளியே வரும் வரை (பேக் ஸைடுல ப்ரதர்) ஒவ்வொரு சுவாகாவும் அதாவது சகாவும் கண்காணிப்பில் இருந்தனர்.
இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் அத்தனை பேரும் வெளிக்கொண்டு வந்துவிட்டனர். சுத்தமாகக் கழுவி (லெகோ துண்டுகளை) ஏற்றுமதி இறக்குமதி கணக்கு சரி பார்த்து அத்தனை விவரங்களையும் the defector என்ற தொழில்நுட்ப தளத்தில் செய்தியாக அறிவித்தார் பகாசுர், அதாவது பகாதுர். அதாவது எது உள்ளே போகிறதோ அது நன்றாகவே போகிறது
எது திரும்ப வேண்டுமோ அது நன்றாகவே திரும்புகிறது என்று நன்னம்பிக்கை பரப்பும் இந்தப் பரிசோதனை மாபெரும் வெற்றி என்று சகாக்களுக்கு பரிசளித்தார்.
வேறே லெகோ துண்டுகளை கொடுத்திருப்பார் என்று நம்புவோம்.
இதனால் உலகமுழுதும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினச் செய்தி.
கொசுறு: சிறார்களால் மிக அதிகமாக விழுங்கப்படுவது லெகோ துண்டுகள்தானாம்.
சிறு வயதில் லெகோ வைத்து விழுங்க, அதாவது விளையாட எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. விழுங்கு பொருள் எனில் பல்லாங்குழியின் வழுவழு புளியங்கொட்டை தான் அதிகபட்சம். (இது செய்தி அல்ல - என் புலம்பல்.)
= = =
சென்ற வாரம் நாங்கள் கேட்டிருந்த 3 கேள்விகளில் முதல் இரண்டுக்கு சரியான விடைகள் (திலகா, சடை ) கில்லர்ஜி, துரை செல்வராஜு, கீதா ரெங்கன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மூன்றாவது கேள்வியை எல்லோரும் சாய்ஸ்ல விட்டுவிட்டார்கள்!
அந்தக் கேள்வியும், அதன் பதிலும் இங்கே :
3) சீதையின் பேத்தி சகுந்தலை என்று எப்படி நிரூபிப்பீர்கள் ?
பதில் : கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா! காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா ! (மொத்தத்தில் எல்லோருக்கும் அல்வா !!) ( பாடல் : கல் எல்லாம் மாணிக்கக் கல்லாகுமா )
= = = = =
அடுத்த வாரம் சந்திப்போம்!
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
வாழ்க,, வாழ்க..
நீக்குவாங்க, வாங்க!
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குபிரார்த்திப்போம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். நன்றி சொல்வோம்.
நீக்குநன்றி.
நீக்குமுதல்வருக்கு திருக்குறள் அறத்துப்பால் விளக்கப் புத்தகமா? பேஷ் பேஷ்
பதிலளிநீக்குமுழுப் புத்தகத்தையும் கொடுத்தால் ஆசையில் அவர் வேறொரு பாலுக்கு சென்று விட்டால்.. நான் பொருட்பாலைச் சொல்கிறேன்...!
நீக்குஅப்படி அல்ல. பொருட்பாலில் உதயாவும் கா.பாலில் இன்பாவும் ஈடுபட்டிருப்பதால் ஸ்டாலினுக்கு அறத்துப்பால்தான் சரியாக இருக்கும்
நீக்கு:))))
நீக்குஹா.. ஹா.. ஹா..
நீக்குலோகோ துண்டுகள் எடுத்த பிறகு டாக்டருக்கு பைல்ஸ் ஆபரேஷன் உடனே நடந்ததா இல்லை ஒரு வாரம் கழித்தா என அப்பாதுரை சார் குறிப்பிடலையே
பதிலளிநீக்குஅப்பாதுரை பதில் அடுத்த வாரம்.
நீக்குஅது என்ன லெகோ அல்லது லோகோ துண்டுகள்?
நீக்கு@கீதா அக்கா: lego துண்டுகள் தெரியாதா? குழந்தைகள் விளையாடும் building blocks.
நீக்குஆம். சிறிய துண்டுகள் பல இருக்கும் அவைகளை இணைத்து பல உருவங்கள் (விமானம், ஹெலிகாப்டர் போன்று) செய்யலாம்.
நீக்குஇப்போதெல்லாம் 3டி லெகோ துண்டுகள் வருகின்றன.
நீக்கும்ம்ம்ம்ம் பில்டிங் செட் என்றால் புரியும். புரிந்திருக்கும். லெகோ துண்டுகள் என்றதும் என்னமோனு நினைச்சுட்டேன்.
நீக்குகீதா சாம்பசிவம் மேடம் எங்கள் பிளாக்கிற்கு ஒன்றுவிட்ட அக்காவா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இந்த சந்தேகம்
பதிலளிநீக்கு:)))
நீக்குநேத்திக்கு வந்திருந்தேனே! இருமல் துளைத்தெடுப்பதால் இரவு சரியாகத் தூக்கம் என்பதே இல்லை. அதிலும் நேற்றிரவு ரொம்ப மோசம். அந்த மாதிரியான நாட்களில் காலை எழுந்து காஃபி,கஞ்சி முடித்துக் கொண்டு மறுபடி ஏழரை வரை படுத்துடுவேன். அதனால் பின்னர் எழுந்து வேலைகளைப் பார்க்க வேண்டி இருப்பதால் கணினியில் எதையும் பார்ப்பதில்லை. ஒரேயடியா மத்தியானம் தான்.
நீக்குஇப்போ இந்த இருமலால் என்ன பிரச்னைன்னா, அடுத்தவாரம் இன்னொரு கண்ணிற்கும் அறுவை சிகிச்சை எனச் சொல்லி இருக்காங்க. அப்போ இருமல் இல்லாமல் இருக்கணும். அறுவை சிகிச்சையின்போதோ பின்னரோ இருமல் இப்படித் துளைத்தால்! பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! போகப் போகத் தான் பார்க்கணும்.
நீக்குஇருமல் மிக கஸ்டம். இரவு தூக்கத்தை சுத்தமாக கெடுத்து விடும். காலையில்தான் கொஞ்சம் விழிகளை மூட விடும். உங்கள் சிரமம் புரிகிறது சகோதரி. உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.
நீக்குவட மாநில இளைஞர்கள் - அவங்க மாத்திரம் இல்லைனா தமிழகமே ஸ்தம்பித்துவிடும்.. அது சரி.. நடிகைகள் தமிழச்சியா இருக்கணும்னு ஏன் கவலைப்படுவதில்லை!
பதிலளிநீக்குஅதானே!
நீக்குகலர் மஞ்சளா, நல்ல ப்ரைட்டா இருக்கட்டுமே என்கிற மங்களகர எண்ணம்தான் காரணம்.. அதுக்குல்லாம் வடக்குதான்ப்பா சரி!
நீக்குசேச்சிகள் கோலோச்சும்போது இப்படி சொல்றீங்களே. வேலைபார்க்க வடநாட்டான். கட்டவுட்டுக்கு பாலூத்தறது தவிர வேற எதுக்கு டமிளர்கள்?
நீக்குநடிகைகள் தமிழச்சியா இருக்கணும்னு ஏன் கவலைப்படுவதில்லை!//
நீக்குஹாஹாஹாஹா......ஆனா நெல்லை தமிழ் நடிகைகள் இருக்காங்களே! ஆனா நாம்தான் அவங்களைப் பத்தி பேசறதில்லை!! படம் போடுறோமா?
ஆச்சி மனோரமா இவங்க இப்ப இல்லை ...உமா பத்மநாபன், சரண்யா, சுருதி ஹாஸன் (இவங்க கணக்குல கிடையாதோ வடக்கு கலவைன்றதுனால!!), சாய் பல்லவி (படுகான்னு லிஸ்ட்ல வந்துருவாங்களோ) எஸ் என் லக்ஷ்மி, காந்திமதி, பூர்ணிமா, ரம்யா கிருஷ்ணன், வடிவுக்கரசி, இன்னும் நிறைய இருக்காங்க பழைய புதியன்னு....
நாம பார்க்கறது அனுஷக்கா, தமனாக்கா, கீர்த்திசுரேஷக்கா.....ஹிஹிஹிஹி
கீதா
விஜயகுமாரி, ஸ்ரீப்ரியா இவர்களையெல்லாம் மறந்து விட்டீர்களே?
நீக்குஇந்த லிஸ்ட்ல சாய் பல்லவி தவிர மத்தவங்களை என் தாத்தாவிற்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்.
நீக்குசான்றோர்களுக்குத்தான் பொய்யா விளக்கு..
பதிலளிநீக்குசாமானியர்களுக்கு சாதாரண விளக்கு தான்!..
:)))
நீக்குகேள்வி பதில்கள் சிறப்பு. பதில்கள் சில அரசியல்வாதிகள் பதில் போல பட்டும் படாமல்! வேறு வழியில்லை! :)
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநானே சொல்ல நினைச்சது! வெங்கட் சொல்லி இருக்கார். அதோடு மற்ற ஆ"சிரி"யர்கள் இதில் தலையிடவில்லை. ஏனோ?கேஜிஜி கூடப் பதில் சொல்லலை.
நீக்குதமிழ் பழமையான மொழி என்று வாய்ச்சவடால்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குவீட்டில் குழந்தைகளுக்கு தமிழ் படிக்க வைப்பதில்லை, பேச வைப்பதில்லை.
ஆனால் தமிழ் வாழ்க!
தெற்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது :-
பதிலளிநீக்குயாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
காமம் என்றால் என்ன...?
பதிலளிநீக்குகாமம் மூன்று பால்களிலும் வருகிறதா...? அப்படியென்றால் எங்கெங்கு வருகிறது...? அதன் பொருள் என்ன...?
பதிலளிநீக்குகாமம் என்றாலே பலரின் சிற்றறிவு "அங்கே" செல்வது ஏன்...?
பதிலளிநீக்குஇதுவரை கருத்திட்ட அறிவார்ந்த நண்பர்களும், இனிமேல் கருத்திட வரும் நண்பர்களும், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்... நன்றி...
பதிலளிநீக்கு1) முப்பாலில் காமத்தினை இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா...?
2) காமம் திருக்குறள் பகுப்பில் எவ்வாறுள்ளது...?
3) காமம் என்பது அருவருக்கத்தக்கச் சொல்லா...?
4) காமம் என்றவுடன் சிலர் குழப்பம் அடைவதேன்...?
5) காமத்துப்பால் என்றவுடன் சிலர் மருட்சியும் அடைவதேன்...?
6) காமத்துப்பாலுக்கும் காமசாத்திரத்துக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு...?
7) காமத்துப்பாலின் உயிர்நாடியான குறட்பா எது...?
8) காமத்துப்பாலின் சிறப்பு என்ன...?
9) காமத்துப்பால் மற்ற இலக்கியங்களிருந்து எவ்வாறு வேறுபடுகிறது...?
10) காமத்துப்பாலை நாடக நூல் என்று கூறுவது ஏன்...?
11) காமத்துப்பாலின் நாடகம் எவ்வாறு முடிகிறது...?
12) காமத்துப்பாலைக் காட்சி வடிவமாகக் காணப் பெறுமா...?
13) காமத்துப்பால் என்று திருவள்ளுவர் இட்ட பெயரை மாற்றுவது சரியா...?
கேள்வி பதில்கள் சிறப்பு.
பதிலளிநீக்குஆங்கில கல்விக்கு முதலிடம் அளிப்பதில் இளம் சமூதாயத்திடம் தமிழ் மொழி திண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது.
கேள்வி பதில்கள் நன்று
பதிலளிநீக்குவட இந்தியாவிலிருந்து வேலைக்கு வருபவர்களை ஆதரிப்பது ஆதரிக்காதது என்பதை விட, இங்குள்ளவர்கள் அதிகக் கூலி கேட்கும் நிலைமை. வட இந்தியர்களுக்குக் கூலி/சம்பளம் குறைவு அதனால் ...மற்றொன்று இங்குள்ளவர்கள் சில வேலைகளைச் செய்வதில்லை. ஆனால் அவர்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். இது தினப்படிக் கூலி போன்ற தொழிகள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இங்குமே கூட வட இந்தியர்கள்தான் இது போன்ற தொழில்களில் அதிகம்...இதோ அருகில் இருக்கும் ரிலையன்ஸ் ஸ்மார்ட்டில் 75 சதமானம் வட இந்தியர்கள். டி மார்ட்டிலும் அப்படியே....ஹோட்டல்களிலும் அப்படியே...இதற்குக் கூடவா உள்ளூரில் ஆட்கள் இல்லை?!!!
கீதா
உண்மை.
நீக்குகிராமங்களில் கதிரை அறுவடை செய்ய உள்ளூர் ஆட்களே முன் வருவதில்லை. ஆகவே மெஷினையும், மற்ற மாநில ஆட்களையும் தான் நம்புகிறார்கள்.
நீக்குஆங்கிலவழிக் கல்வி படித்தாலும் நாம் வீட்டில் நம் தாய்மொழியில் பேச வேண்டும். பள்ளியில் இரண்டாவது மொழிப்பாடம் தாய்மொழியைக் கற்க வைக்கலாம். தமிழ் தெரிந்த பெற்றோரே பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்.
பதிலளிநீக்குகீதா
ஆம்.
நீக்கு//தமிழகத்தின் கட்சிகள் அறிந்திருக்கிறதோ இல்லையோ எனக்கே நீங்கள் சொல்லித் தான் தெரியும். வேறு விபரங்கள் எனக்குத் தெரியாது.// இது கடந்த எட்டு/ஒன்பது வருஷங்களாக நடந்து வருகிறது. ஜோதிஜி/திருப்பூர் (பதிவர்/தேவியர் இல்லம்) இதைக் குறித்து ஓர் கட்டுரையே எழுதினார். தமிழக இளைஞர்கள் இதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை எனவும், அதே சமயம் வட இந்திய இளைஞர்கள்/இளம்பெண்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று சுயத் தொழில் அல்லது நல்ல வேலையில் இருப்பதையும் சொல்லி இருந்தார்.
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குone comment missing!
நீக்குGeetha Sambasivam "முதல்வருக்கு என்ன பிறந்தநாள் பரிசு கொடுப்பீர்கள்? ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
நீக்குநானுமே இதைப் பற்றியும் முத்ரா திட்டம் பற்றியும் எழுதினேன். வேலை செய்யும் ஆண்/பெண்களுக்கு மத்திய அரசால் யூ.ஏ.என் என்னும் தொழிலாளர் அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் இதை இணைத்துவிட்டு அவங்க வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும். அவரவர் தேவையைப் பொறுத்துச் சுய தொழிலுக்கு முன் பணம்/ஏற்கெனவே தொழில் செய்வோருக்கு இரு சக்கர வாகனக் கடன் உதவி, பிள்ளைகள் படிக்கப் பண உதவி எனக் கிடைக்கும். இதன் மூலம் பயன் பெற்றவர்களை இங்கே ஆட்டோ ஓட்டுநர்களாகப் பார்த்து வருகிறேன். மருத்துவ உதவிக்குக் கூட இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்திக்கலாம். மருத்துவமனைகளில் இந்த அடையாள அட்டையைக் காட்டினால் மருத்து உதவிகளும் பெறலாம். எங்க வீட்டில் இரண்டு மாதம் முன்னர் வரை வேலை செய்த பெண்ணிற்கு இந்த அடையாள அட்டையை நானே இணையம் மூலம் அவரை இணைத்துவிட்டூ வாங்கிக் கொடுத்திருக்கேன். மருத்துவ உதவிகள் கிடைப்பதாகச் சொன்னார். மற்றவற்றிற்கு அவர் இன்னமும் தக்கபடி இணைத்துக் கொள்ளவில்லை.
நானுமே இதைப் பற்றியும் முத்ரா திட்டம் பற்றியும் எழுதினேன். வேலை செய்யும் ஆண்/பெண்களுக்கு மத்திய அரசால் யூ.ஏ.என் என்னும் தொழிலாளர் அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் இதை இணைத்துவிட்டு அவங்க வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும். அவரவர் தேவையைப் பொறுத்துச் சுய தொழிலுக்கு முன் பணம்/ஏற்கெனவே தொழில் செய்வோருக்கு இரு சக்கர வாகனக் கடன் உதவி, பிள்ளைகள் படிக்கப் பண உதவி எனக் கிடைக்கும். இதன் மூலம் பயன் பெற்றவர்களை இங்கே ஆட்டோ ஓட்டுநர்களாகப் பார்த்து வருகிறேன். மருத்துவ உதவிக்குக் கூட இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்திக்கலாம். மருத்துவமனைகளில் இந்த அடையாள அட்டையைக் காட்டினால் மருத்து உதவிகளும் பெறலாம். எங்க வீட்டில் இரண்டு மாதம் முன்னர் வரை வேலை செய்த பெண்ணிற்கு இந்த அடையாள அட்டையை நானே இணையம் மூலம் அவரை இணைத்துவிட்டூ வாங்கிக் கொடுத்திருக்கேன். மருத்துவ உதவிகள் கிடைப்பதாகச் சொன்னார். மற்றவற்றிற்கு அவர் இன்னமும் தக்கபடி இணைத்துக் கொள்ளவில்லை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா..
// ஹோட்டல் களிலும் அப்படியே.
இதற்குக் கூடவா உள்ளூரில் ஆட்கள் இல்லை?..//
எனது பள்ளிப் பருவத்தில் ஐயர் வீட்டுப் பையன்கள் பலரும் உணவகங்களில் சிறு சிறு வேலை செய்து கொண்டே படிப்பைத் தொடர்ந்தனர்..
அவர்களது வீடுகளில் தயாரிக்கப்படும் அப்பளம் வடகம் வகையறாக்களை விற்றுக் கொண்டே கல்வி பயின்றனர்..
இன்றைக்கு அப்படியான குடும்பங்கள் இல்லை..
இன்றைய மாணவர்களுக்கு மது உட்பட
எல்லாமே (!) எளிதாகக் கிடைக்கின்றது..
இவர்களுக்கு வகுப்பறையில் ஆபாச மொழி பேசவும் தெருவில் வைத்து தாலி கட்டவும் தான் இஷ்டமாக இருக்கின்றது..
பெற்றோர்கள் மாதந்தோறும் குறைந்த பட்சம் லட்ச ரூபாய் ஊதியம் பெறுகின்ற போது பிள்ளைகளுக்கு உடல் உழைப்பின் தேவை என்ன?..
இப்படியான குடும்பங்கள் இங்கே ஏராளம்!..
காலத்தின் கோலம்!
நீக்குஇப்போதெல்லாம் ஓட்டல்களில் வேலை செய்யவும், சாப்பாடைக் கொண்டு போய்க்கொடுக்கவும் ஆட்கள் கிடைப்பது இல்லை தான். ஒரு சில பாரம்பரிய ஓட்டல்கள் அவங்க குடும்பத்திலேயே வேலைகளைப் பகிர்ந்துக்கறாங்க. பெரும்பாலும் கிடைப்பதில்லை.
நீக்குஎங்கள் ப்ளாகின் மாதரணியினருக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துவோம்!
நீக்கு//சிவன் கோவில்னா முதலில் சிவன், பிறகு அம்பாள் சந்நிதி.// எல்லா சிவன் கோவில்களிலும் அப்படி கிடையாது. திருச்சி அகிலாண்டேஸ்வரி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மயிலை கற்பகாம்பாள் கோவில் போன்றவைகளில் முதலில் அம்மனைத்தான் தரிசனம் செய்ய வேண்டும். பிறகுதான் ஸ்வாமி சன்னதிக்கு போக முடியும். கோவில் அமைப்பே அப்படித்தான் இருக்கும். எனக்கு தெரிந்து இவைதான், வேறு கோவில்களும் இருக்கலாம்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநான் சிவன் கோயில்களைச் சொன்னா இவங்க அம்பாள் கோவில்களைச் சொல்றாங்களே.. அங்கெல்லாம் இவரு ஹஸ்பன்ட் என்று ஒரு சந்நிதி ஒதுக்கியிருப்பாங்க, மும்பை மஹாலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி கோயிலாட்டம்
நீக்குமெர்படி கோவில்கள் ஜம்புகேஸ்வரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கபாலீஸ்வரம் என்று வழங்கப்பட்டாலும் நடைமுறையில்(பேச்சு வழக்கில்) இருக்கும் பெயர்களை நான் குறிப்பிட்டேன்.
நீக்கு*மெர்படி - மேற்படி
நீக்கு//By the by my photo has come in EB multiple times and in current yathra also few photos coming// அப்படியா? நான் பார்ததில்லை.
பதிலளிநீக்குme too!
நீக்குநேரில் 2 தரம் பார்த்திருக்கேன். அப்போக் கூட அவரோட ஹஸ்பண்ட் கூட வந்தால் தான் புரிஞ்சுப்பேனோ என்னமோ! :))))))) சுஜாவைப் பார்த்ததும் ஸ்ரீராமை அடையாளம் புரிஞ்சாப்போல்! :))))
நீக்கு:))) நெ த படத்தை நானும் எ பி யில் பார்த்ததில்லை.
நீக்குகருத்துரைக்கு நன்றி காப்பி பேஸ்ட்ல பிசினாலயா இல்லை கவர்ச்சிப் படங்களை மாத்திரம் பார்க்கும் வழக்கமா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.
லெகோ சமாச்சாரங்கள் படித்தவுடன் பயத்தை ஏற்படுத்துகிறது.
/அதாவது எது உள்ளே போகிறதோ அது நன்றாகவே போகிறது
எது திரும்ப வேண்டுமோ அது நன்றாகவே திரும்புகிறது. /
ஏதோ கீதோபதேசம் மாதிரி இருந்தாலும், வாசகம் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துகிறது. (இப்போது குழந்தைகளிடம் அதைத்தான் விளையாட தருகிறார்கள். அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். எவ்வளவு நேர்ந்தான் அவர்களையே உற்று பார்த்துக் கொண்டிருப்பது.. .) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஉங்களுக்கு ஒரு ஐடியா. அவற்றை நல்லா வேப்பெண்ணையிலோ இல்லை வேப்பங்கொழுந்து சாற்றில் துடைத்துவிட்டுக் கொடுத்தால் நீங்க பதிவு எழுதிண்டு, ஆனால் கூடவே டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்
நீக்குஎத்தனை பேருக்கு நூறுநாள் வேலைத் திட்டம் மத்திய அரசினுடையது என்பது தெரியும்?
பதிலளிநீக்கு108 ஆம்புலன்ஸ் திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பது தெரியுமா?
அதே போல் ரேஷன் பொருட்கள் மாநிலங்களுக்கு வழங்குவது மத்திய அரசின் உணவுத்துறை மூலம் என்பதும் ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கேற்பப் பங்கிட்டு அளிக்கப்படும் எனவும் எல்லோருக்கும் தெரியுமா? கொரோனா கடுமையாக இருந்த சமயம் ரேஷனில் ஒரு கிலோ கொண்டைக்கடலை தரப்படும் என நிதி மந்திரி அறிவிச்சதாவது நினைவில் இருக்கா?
மேலே சொன்ன 3 திட்டங்களும் மோதி பிரதமரக்கும் முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதும் தெரியுமா?
புதன் கேள்விகள்!
பதில் அளிப்போம்.
நீக்குஇப்படீக்கா வாங்கி அப்படீக்கா கொடுக்கறதுல என்ன பெரீய இது இவங்களுக்கு
நீக்குபிரதமராகும் முன்னரே
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் படித்தேன், பின்னூட்டங்கள் நல்ல கலந்துரையாடல் போல இருக்கிறது.
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்கள் பகிர்ந்து கொண்டது போல சிறு குழந்தைகள் கையில் கிடைத்த சிறு பொருட்களை வாயில் போட்டுவிடுவது இயல்பு.