கூடலுார்: கூடலுார் சளிவயல் பழங்குடி கிராமத்தில், மகளிர் போலீசார் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமை வகித்து பேசினார். அந்த கிராமத்தில் சந்தியா,14, என்ற மாணவி, 8ம் வகுப்பு முடித்து, படிக்க ஆர்வம் இருந்தும், பள்ளிக்கு செல்ல இயலாத சூழலில் இருப்பது தெரியவந்தது. அவரை பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர உதவுவதாக, போலீசார் உறுதி அளித்தனர்.
அதன்படி, இன்ஸ்பெக்டர் சுசிலா, பெண் போலீசார் திவ்யா ஆகியோர், மாணவியை, கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பில் சேர்ந்தனர். ஆசிரியர்கள் அவர் கல்வியை தொடர ஊக்கப்படுத்தினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாசர்பாடி : ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகையை, நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.
வியாசர்பாடி, கணேசபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா 36. கார்த்திக்கின் தந்தை ஆடியபாதம், கடந்த 10ம் தேதி இறந்தார். அவருக்கு, வியாசர்பாடி, மூர்த்திங்கன் தெருவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், 16ம் நாள் ஆறுதல் ஜெபக்கூட்டம் நடந்தது.கூட்டம் முடிந்து, சசிகலா ஆட்டோவில் இரவு வீடு திரும்பினார். அப்போது 5 சவரன் தங்க செயின், மொபைல் போன் வைத்திருந்த பையை ஆட்டோவில் தவறவிட்டார்.
இது குறித்து, வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சசிகலாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். அப்போது, புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித், 23, என்பவர் எடுத்து பேசியதோடு, அந்த நகைப்பை மற்றும் மொபைல் போனை போலீசில் ஒப்படைத்தார்.அதை, சசிகலா கணவர் கார்த்திக்கிடம் போலீசார் கொடுத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அஜித்தை போலீசார் பாராட்டினர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மானாதுரை :மயானத்தில் ஏழைகளுக்கு கட்டணம் வாங்காமல் இறுதி சடங்கு செய்ததற்கும், பலருக்கு இலவசமாக ஓவியம் கற்றுக் கொடுத்ததற்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முதுகலை பட்டதாரி சங்கர் 34,க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மானாமதுரை ரயில்வே காலனி கருத்தகாளை (எ)முருகேசன், பஞ்சவர்ணம் தம்பதியினர் 30 ஆண்டுகளுக்கு மேல் மயானத்தில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு 3 மகன், 2 மகள்கள் உள்ளனர். வறுமையால் 4 குழந்தைகள் படிக்காமல் கூலி வேலைக்கு செல்கின்றனர். கடைசி மகன் சங்கர் 34, பெற்றோருக்கு உதவியாக மயானத்தில் வேலை செய்து கொண்டே சிவகங்கை அரசு கல்லுாரியில் எம்.எஸ்சி.,(வேதியியல்) படித்துள்ளார். ஓவியத்திலும் ஆர்வம் உள்ளவர்.
தனியார் பள்ளி ஓவிய ஆசிரியராகவும் உள்ளார். சங்கருக்கு மனைவி அமுதா, மகள் துாரிகா 4, உள்ளனர்.
இவருக்கு சென்னை சர்வதேச தமிழ் பல்கலை டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இது குறித்து சங்கரின் பெற்றோர் கூறுகையில், முதல் பட்டதாரியான சங்கர் மயானத்திற்கு வரும் வறுமை நிலையில் உள்ளவர்களிடம் கட்டணம் வாங்காமல் எரியூட்டும் பணிகளை செய்வார்.
எங்களுக்கு வயதாகி விட்டதால் அவரே மயானத்தில் அனைத்து வேலைகளையும் செய்கிறார். அவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அரசு எனது மகனின் படிப்பிற்கேற்ற வேலை வழங்கினால் எங்களது குடும்பத்திற்கு உதவியாக இருப்பார் என்றனர்.
=============================================================================================================
============================================================================================================
நான் படிச்ச கதை
- பானுமதி வெங்கடேஸ்வரன் -
ரிசப்ஷன் ____ :
விஞ்ஞான கதைகளை வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் சுஜாதா. அவருடைய சிறு சிறுகதைகளில் ஒன்று ரிசப்ஷன்___ என்ற சிறுகதை. 2003ல் எழுதப் பட்டிருக்கும் இந்தக் கதையில் அவர் அதீதமாய் யோசித்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அவர் கதையில் குறிப்பிட்டிருக்கும் வருடத்தை நாம் கடந்து விட்டோம். எனினும் இந்தக் கதையில் அவர் விவரித்திருக்கும் பல விஷயங்கள் நல்ல வேளையாக இன்னும் நடக்கவில்லை.
ஆறரை மணிக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறிவித்தது. ஏழரைக்கு ஏர் போர்டில் ஒரு ஐகான் இருந்ததால் ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டு விட்டேன். ஹாலந்திலிருந்து டியூலிப்(tulip) மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத்துக்கு பிடித்த பானமான மே 22 ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்கு பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?
எல்லா புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரி அருகில் பார்க்கிங் இருப்பதாக ஜி.பி.எஸ். சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்து கொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது லிஃப்ட்டில் இறங்கி க.மண்டபத்தில் நுழையும் போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்து விட்டதால் மெள்ள நடந்தேன்.
மணமக்கள் மேடை காலியாக இருந்தது. ஆர்கெஸ்ட்ரா
ஸிந்தரானை ஸ்ருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் 'ரொமான்சிங் ராமானுஜாவும்' 'உயிரா உடலா'வும் வாசிப்பார்கள். அதுதான் இப்போது பேய் விற்பனை.
ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்க தோஷத்தில்,"நீங்க ராமலிங்கத்துக்கு உறவா..?" என்று கேட்டேன்.
"இல்லைங்க..நாங்க..கண்ட்ரோல்ல டயனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க"
போச்சுடா,ரோபோட்!
இப்போதெல்லாம் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழிகூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான் அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒரு மாதிரி லூபாயில் வாசனை வரும்.
அந்தப் பெண் களுக்கென்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கண்ணதாசன் சொன்னது போல ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்.
ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன். வந்தாகி விட்டது. ராமலிங்கத்தை சந்தித்து வாழ்த்தி விட்டுத்தான் போக வேண்டும். சரவணா போய் சின்னதாக ஒரு ரம்பா போட்டுவிட்டுத் திரும்ப வரலாம். மறுபடி பார்க்கிங் அவஸ்தைகள். மாடியிலிருந்து இறங்கினால் மெரீனாவில்தான் யூ வளைவு. அல்கஹாலாசையைத் துறந்தேன்.. அதற்குள் ராமலிங்கம் வந்து விட்டான்.
"ஹாய்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்..?" கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரியிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றிறியிருந்தான். மூக்கைத் திருத்தியிருந்தான்.
"எங்கே வாழ்க்கைப்படகில் உன்னோடு துடுப்பு போடப்போகிற அருணா?"
அருணாவுக்குத்தான் காத்துக்கிட்டுருக்கேன். கமான்... வாழ்க்கைப் படகு...,துடுப்பு,..என்னடா ரொமாண்டிக்காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்கணுமா? அம்மாகிட்ட சொல்லவா?"
"ச் சே .. ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானான்னு அம்மா ஆச்சர்யப்பட்டு போய்ட்டா.. முதல்ல எப்போ சந்திச்ச?"
"போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல. லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட். ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணினி பாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள் கூட ஒரே ஒரே.. நூறாண்டு காலம் பிராஸ்தடிக் வாழ்க்கை வாழ உத்தேசம்... எக்ஸ்க்யூஸ் மீ...
அலங்ககாரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்கு சந்தோஷம். எல்லோரும் வி.மெயில்லயே நழுவுறாங்க. ஒரு நிமிஷம்.. அழைச்சுட்டு வந்துர்றேன்.."
மெள்ள மெள்ள கூட்டம் சேர ஆரம்பிக்க,ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாக காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணி மேதை. மேடைக்குச் செல்லும் முன் ஒரு முறை தெரிந்தான்.
கடிகாரம் 'ஆறு நாற்பது முப்பது' என்றது. காலம் பொன்னானது என்று போதனை வேறு.
'ஷட் அப் .." என்றேன்.
ஏர் போர்டில் ஏழரைக்கு இருந்தாகணும். பிளேன் லேட்டாவதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது..."
"வர வர உனக்கு பிரசங்கம் அதிகமாகி விட்டது. ஒரு நாள் உன் ஆக்சிலியரி மெமோரியை நோண்டிவிடப் போகிறேன். "
"நஷ்டம் உனக்குத்தான்...நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை.." என்றது.
ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல.. வெயிட் எ மினிட்.."
"அருணா சொன்னேன் பார்த்திய, இது என் அருமை நண்பன் சத்யா .."
நெருங்கினேன்.
இங்கேதான் சுஜாதா அவருக்கே உரிய ட்விஸ்ட் வைக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றும் ரிசப்ஷனுக்கு பக்கத்தில் கோடிட்டிருக்கும் இடத்தில் சுஜாதா குறிப்பிட்ட வருடம் என்னவாக இருக்கும் என்றும் சரியாக யூகிப்பவர்களுக்கு சுஜாதாவின் ஏதாவது ஒரு புத்தகம் பரிசு. கண்டிஷன் விடையை இணையத்தில் தேடக் கூடாது.
இன்னுமொரு கேள்வி சுஜாதாவின் கதை எப்போது நிஜமாகும் என்று நினைக்கிறீர்கள்?
முடிவு அடுத்த வாரம்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும்
இருக்க இறைவன் அருள் வேண்டும்.
வணக்கம் வல்லிம்மா.. வாங்க...
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇந்தவார நல்ல செய்திகள் - பாராட்டுகிறேன். ஆனால் டாக்டர் பட்டம் டூ டூ மச். ஒரு வேலையை அவருக்கு அளித்திருக்கலாம்.
போக்கிரி திரைப்படத்தில் நடித்ததற்காக கூத்தாடி விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது முறையா ?
நீக்கு//ஒரு வேலையை அவருக்கு அளித்திருக்கலாம்//
நீக்குஆம் அரசு இனியாவது கொடுக்க வேண்டும்.
வணக்கம் நெல்லை.. வாங்க... அது முதல் ஊக்கம். அடுத்து அதுவும் நடக்கட்டும்!
நீக்குதேவகோட்டை ஜி.. நீங்கள் சொல்வது உண்மை.
நீக்குகில்லர்ஜி அவர் அந்தக் காலேஜுக்கு நன்கொடை என்ற பெயரில் எம்புட்டு கொடுத்தாரோ??!!!!!!! ஹாஹாஹா
நீக்குகண்டிப்பா அது சமூகத்திற்கு ரொம்பத் தவறான உதாரணம். மிக மிக் மிக...எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
கீதா
படிக்காமல் வாங்கும் டாக்டர் பட்டம் என்பது ஒரு வகையில் லஞ்சம் தான். இதனை யோசித்துப் பார்த்தால் தெரியும். படித்து எழுதி (தாங்களே எழுதி... மிகப் பலர், கோஸ்ட் வைத்துக்கொண்டு எழுதி, தாங்கள் எழுதியதுபோல டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்கிறார்கள். அறிவியல் டாக்டர் பட்டங்களும், பிறர் - வெளிநாட்டு ஜர்னலில், எழுதி அதனைக் காப்பியடித்து பலர் வாங்குகிறார்கள், வாங்கியிருக்கிறார்கள்), தங்கள் அரசியல் செல்வாக்கை உபயோகிக்காமல் உண்மையாகப் படித்து வாங்கும் டாக்டர் பட்டங்களைத் தவிர மற்றவை, வேஸ்ட்.
நீக்கு//போக்கிரி திரைப்படத்தில் நடித்ததற்காக// - அதற்காக கொடுத்திருக்க மாட்டார்கள் கில்லர்ஜி... அசினுடன் பிசின் போல ஒட்டிக்கொண்டு நடித்ததற்காகவும், மாம்பழமாம் மாம்பழம் என்ற பாடலில் ஆடி, நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்டியதற்காகவும் டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம்.
நீக்கு//டாக்டர் பட்டம் டூ டூ மச். // - காரணம்..இதை வைத்து அவர் நாக்கு வழிக்கக்கூட முடியாது. அதற்குப் பதில், பல்கலைக்கழகத்திலேயே ஒரு வேலையோ அல்லது அவர் பணி சிறக்க, 1 லட்சமோ வழங்கியிருந்தால் உபயோகம். அதற்காகச் சொன்னேன் கில்லர்ஜி.
நீக்கு//நாட்டுப் பற்றை ஊட்டியதற்காகவும் டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம்//
நீக்குஹா... ஹா... ஹா...
பொருளாசை, போன்றவைகளுக்கு எல்லையுமில்லை, அது நம்மை திருப்தி அடையச் செய்யாது. இன்னும் இன்னும் என்றுதான் போக வைக்கும்.
பதிலளிநீக்குசுஜாதா காலத்தை மீறிச் சிந்தித்திருக்கிறார். நேற்றுதான், கனடாவில் தமிழ்ப் பெண்களுக்கு நடந்த திருமண நிகழ்ச்சியைப் (வாட்சப்பில்) பார்த்தேன்.
சைனாவில் ரோபோக்கள் கம்பேனியன்ஷிப்பாக வந்துவிட்டன. மாஸ் ப்ரொடக்ஷன், குறைந்த விலை ஆகியவற்றில் அவர்களை மிஞ்ச முடியாது
மானிட எந்திர கலப்பு மணம் பற்றி ஐம்பதுகளிலேயே எழுதிவிட்டார்கள். நம்மாளு அங்க இங்க சுட்டு நமக்கு குடுப்பாரு. எங்க சுட்டதுனு சொல்ல மாட்டாரு. அவளோ தான். அவரோட எழுத்து ரசிக்கலாம். கண்டிப்பாக.
நீக்குகருத்தில் கருவில் அசல் இல்லாதது வருத்தம்.
நெல்லை நம்ம ஊர்க்கல்யாணங்களே அமெரிக்கக் கண்டத்தில் நடப்பது அதிசயம் என நினைக்கிறார் போலும். எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் பல கல்யாணங்கள் பருப்புத்தேங்காய் உட்பட வைத்துச் சீர் பக்ஷணங்களோடு நடத்தி இருக்காங்க. எங்க பையரே 2,3 கல்யாணம் அந்த மாதிரிப் போய் வந்திருக்கார். நாங்களும் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் ஓரிரு கல்யாணங்களும் ஶ்ரீமந்தங்கள் போன்றவை நடப்பதும் பார்த்திருக்கோம்.
நீக்குகீசா மேடம் எழுதவேண்டாம் என நினைத்தேன்.. இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கும், இன்னொரு பெண்ணும் தமிழ்ப்பெண்ணா என்று தெரியவில்லை, அவளுக்கும்-அவள் கணவன் இடத்தில், திருமணம், நம்ம ஊர் சாஸ்திரிகள் இருவரை வைத்து கெட்டி மேளம் கொட்டி தாலி கட்டி, மாங்கல்யம் தந்துநானே சொல்லிக் கல்யாணம்
நீக்குஓ, நான் புரிஞ்சுக்கலை நெல்லை. இந்தக் கதையில் கூட அந்த "அருணா" அருணாசலமாகவோ, அருண்குமாராகவோ இருக்கலாம். ஏனெனில் அருணாவைப் பற்றிய வர்ணனை! "ஒரு வாட்டசாட்ட தேவதை போல.." இது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது! அதோடு கதை எழுதிய காலம் சுமார் பத்துப்பனிரண்டு வருடங்கள் பின்னால் இருக்கலாம். இது நடப்பதாக எழுதி இருப்பது 2020/21 ஆக இருக்கலாம். ஆனால் ஏற்கெனவே இரு ஆண்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டதை முகநூலில் பலர் பகிர்ந்திருந்தனர். இரு தரப்புப் பெற்றோரும் கூட அந்தக் கல்யாணத்தில் வந்திருந்ததாக நினைவு. சுமார் நான்கைந்து வருடங்கள் இருக்கலாம்.
நீக்குஆனால் இப்படியான மனோநிலை இருப்பவர்கள் சாதாரணத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளக் கூடாது. எனக்குத் தெரிந்து நான்கைந்து வருடங்கள் முன்னர் எங்கள் உறவுப் பையர் ஒருத்தருக்குத் திருமணம் நடந்த பின்னரே தெரிய வந்தது பெண்ணைப் பற்றி. ஆறே மாதத்தில் அந்தப் பெண் விவாகரத்து பெற்றுத் திரும்பிச் சென்று விட்டாள். இன்னமும் அந்தப் பையருக்குத் திருமணம் ஆகவில்லை. :( வயது 36 ஆகிவிட்டது.
நீக்குதில்லியில், இரண்டு டாக்டர்கள் மணமுடித்து, மனைவி (டாக்டர்), கணவன் செய்வது அடாது என்று தற்கொலை செய்துகொண்டார்... என்னத்தைச் சொல்ல? (இது நடந்து இரண்டு வருடங்கள். கணவன் டாக்டர்... அவர் அப்பன், அதற்காக தற்கொலை செய்துகொள்வதா? கணவனுக்கு ஒத்துப் போகணும் என்று பேசினான்
நீக்கு//இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கும், இன்னொரு பெண்ணும் தமிழ்ப்பெண்ணா// கில்லர்ஜி எ.பி. குழும வாட்சப்பில் போட்டிருந்தார். :( என்ன சொல்வது! இந்தக் கதையின் முடிவை யூகிக்கச் சொல்லி பானுமதி சொன்னது எல்லோரையும் எங்கெங்கோ போய் எது எதையோ சிந்திக்கச் சொல்கிறது. எனக்கென்னமோ இந்தக் கதையின் முடிவு அந்த அருணாவும் ஓர் "ஆண்" என்றே இருக்கும் எனத் தோன்றுகிறது. அடுத்த சனி வரை காத்திருக்காமல் பானுமதி முடிவை இப்போவே சொல்வாராக!
நீக்குநன்றி மா பானு.
பதிலளிநீக்குசுஜாதாவின் கதை ரிசப்ஷன்_____ ,பழைய நினைவுகளைக் கொண்டு
வந்து விட்டது.
2020 ஆக இருக்குமோ.
அவரை மாதிரி எழுத இன்னோருத்தர் வரவேண்டும்.
என்ன ஸ்டைல்!!! என்ன லாவகம்.ராஜேஸ்வரி மண்டபம்.
சரவண பவன் எல்லாம் கண் முன்னே.
சாயந்திர வேளையில் சரவண பவனில் ,காப்பியும் தோசையும்
சாப்பிடுவார். மெரினாவில் நடை பயிற்சிக்குப் பிறகு:)
ஓ சரவணபவன்?
நீக்குமயிலை கற்பகாம்பாள் மெஸ் பற்றி அவர் குறிப்பிட்டதுண்டு. காபி மற்றும் வேறொரு உணவு பற்றி.
என்ன ஸ்டைல்!!! என்ன லாவகம்.// அதே அதே...கதையை எழுத்தை ரொம்ப ரசித்து வாசித்தேன் எவ்வளவு அழகா சொல்கிறார் சொல்ல வேண்டியதை..சுருக்கமாக...
கீதா
தங்க மனிதர்கள் தலைப்பு சிறப்பு.
பதிலளிநீக்குஎல்லா பாசிடிவ் செய்திகளும் அருமை.
மாணவி யைப் படிக்க வைக்கும்
போலீஸ் இலாக்காவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி அம்மா.
நீக்குஆட்டோ ஓட்டுனர் அஜீத்தின் நேர்மை மிகவும் பாராட்டப்பட வேண்டும்.
பதிலளிநீக்குதொலைத்தவர் மனம் மகிழ்ந்திருப்பார்.
புதைபூமியின் வேலைகளை இலவசமாகச் செய்யும் சங்கர்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி அம்மா.
நீக்குமனிதர்கள் மாறினாலும் மனிதம் இன்னும் சாகவில்லை என்பது இந்த வார பாசிட்டிவ் செய்திகளில் தெரிகிறது. சுஜாதா கதை படித்ததில்லை.
பதிலளிநீக்குJayakumar
நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குஎல்லா நல்ல செய்திகளுக்கும் நன்றி. எல்லாமும் புதியது. ஏற்கெனவே (!!!!!) படிக்கவில்லை. பானுமதியின் கதைப் பகிர்வும் அருமை. இந்தக் கதை படித்த நினைவும் இல்லை. அநேகமாய் வருஷம் 2020 ஆக இருக்கலாமோ?
பதிலளிநீக்கு// ஏற்கெனவே (!!!!!) படிக்கவில்லை. //
நீக்கு:>))
சங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது எனக்கு பெருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்குசெய்திகள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
..போக்கிரி திரைப்படத்தில் நடித்ததற்காக கூத்தாடி விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது முறையா ?//
பதிலளிநீக்கு’கூத்தாடிக்கு’ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதா! சே.. தமிழ்நாட்டு ஹெட்லைனையெல்லாம் தவறவிட்டிருக்கோம்போல இருக்கே..
முதலில் விடை சொல்ல முயற்சிக்கிறேன் பானுக்கா
பதிலளிநீக்குட்விஸ்ட் என்று சொல்லியிருப்பதால்....ஒன்று அருணா ஒரு ரோபோவாக இருக்கலாம்..(அங்கு ரோபோக்கள் உலாவருகிறார்கள் வித்தியாசம் தெரியாமல்).ஆனால் அது இப்போது யதார்த்தத்தில் யோசிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை ஆனால்... அதைப் பற்றி இங்கு நான் சொல்லவில்லை ஏன் என்று உங்களுக்குத் தெரியும்..னான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று...
..இல்லை என்றால் ஒரு ட்ரான்ஸ் ஆக இருக்கலாம். ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும் !!!ஹாஹாஹா நான் எழுதுவது கதை பாதியில் இருப்பதால்..) ட்ரான்ஸ் என்றால் இப்போதும் சமூகத்தில் அத்தனை எளிதாக ஏற்கப்படும் நிலை வரவில்லைதான் ஆனால் ஆங்காங்கே புள்ளிவிவரம் கம்மியாக இருந்தாலும் இப்படியான திருமணங்கள் சமீபத்தில் கேள்விப்பட்டதால் நடக்கிறது என்று தெரிகிறது.... இப்போது அவர்களும் உரிமைகளுக்குப் போராடுவதால்...லெஸ்பியன் லீகலாக்க வேண்டும் என்றும் வருகிறதே...அத்னால் மற்றும் //ஒரு வாட்டசாட்ட தேவதை போல.. வெயிட் எ மினிட்..//
இந்த வரி இப்படி யோசிக்க வைத்தது...
கீதா
//2003ல் எழுதப் பட்டிருக்கும் இந்தக் கதையில் அவர் அதீதமாய் யோசித்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அவர் கதையில் குறிப்பிட்டிருக்கும் வருடத்தை நாம் கடந்து விட்டோம். எனினும் இந்தக் கதையில் அவர் விவரித்திருக்கும் பல விஷயங்கள் நல்ல வேளையாக இன்னும் நடக்கவில்லை. //
பதிலளிநீக்குஇதை வாசித்த போது நான் சொல்லியிருக்கும் ட்விஸ்ட் இரண்டுமே - அவர் சொன்ன வருடத்தைக் கடந்து வவ்ந்துவிட்டதால் - என்ற க்ளூ படி இப்போதைய சமீபத்திய வருடங்கள் இல்லை. மேலே சொன்ன ட்ரான்ஸ் கூட இப்போதுதான் நடப்பதாகக் கேள்விப்படுவதால்...இதற்கு முன்னான வருடங்களில் நடந்ததாக அறிந்ததில்லை. ஸோ கண்டிப்பாக சமீபத்திய வருடங்களும் இல்லை...இதற்கு முன்னான வருடங்கள் என்றால்...3 ஆப்ஷன் தரலாமா? ஹிஹிஹிஹி அவர் கதை 2003 என்றால்....ஒரு பத்து வருடம் கழித்து என்று யோசித்திருக்கலாம் அவர்...(பத்துவருடத்தில் இத்தனை மாற்றங்கள்) 2013? ல் இத்தனை வந்திருந்ததா? ம்ம்ம்ம் 12 வருடங்கள் கழித்து என்றால் 2015, இதுதான் என் அனுமானம்...
வாச் பேசுவது எல்லாம் இப்போது ஏறக்குறைய வந்துவிட்டது..
கீதா
2013 அல்லது 2015?
நீக்குகீதா
இப்போது வெர்ச்சுவல் என்று எவ்வளவோ வந்துவிட்டது. இனி வெர்ச்சுவல் கல்யாணங்கள் நடக்கலாம்....இது என் ஃபிக்ஷன்!! ஹிஹிஹிஹி How artificial intelligence is transforming the world என்ப்தைப் பார்த்தால் நிறைய கிடைக்கும்...நான் என் கதை எழுதுவதற்கு கொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன்....
பதிலளிநீக்குவீட்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் சப்ஜெக்டிலும் மேட்டர் ரெக்கார்டிங்க் செய்து அனுப்புவது நடப்பதால் அதற்கான மெட்டீரியல் புதுசு என்ன என்று தேடி பவர் பாயின்ட் ஸ்லைட் செய்வதால்...தெரிந்துகொள்வது!
கீதா
ஆஆ! லெக்சர் நான் கொடுப்பதல்ல. அது என் சப்ஜெக்ட் அல்ல. ஜஸ்ட் மெட்டீரியல் சேகரிப்பது மட்டுமே.
நீக்குகீதா
//வெர்ச்சுவல் கல்யாணங்கள் நடக்கலாம்....// - இது என்ன பெரிய விஷயம். நூற்றாண்டுகளுக்கு முன்பே, ராஜதானியர்கள் திருமணம் (போரில் இருந்தால்), பெண் அவருடைய வாளுக்கு மாலையிட்டு மணமுடிப்பாள். இதுல விர்ச்சுவல் கல்யாணத்தில் என்ன..... ஆன்லைனில் இப்போல்லாம் சாஸ்திரிகள் மந்திரம் சொல்லி எல்லா ஃபங்ஷனையும் நடத்திவிடுகிறார்கள், தட்சிணை கூகுள் பே, நெட் டிரான்ச்ஃபர்.
நீக்குஅது சரி..உங்கள் ஃபிக்ஷ்ஷனைப் படித்துவிட்டு அடுத்த கேள்வி கேட்கலாம் என்றால், கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சப்தம் கேஜிஜி சாரிடமிருந்தும் வரலாம். அதனால் மௌனம் பரம ஔஷதம். ஹாஹா
//வெர்ச்சுவல் கல்யாணங்கள் நடக்கலாம்....// - இது என்ன பெரிய விஷயம்.ஆன்லைனில் இப்போல்லாம் சாஸ்திரிகள் மந்திரம் சொல்லி எல்லா ஃபங்ஷனையும் நடத்திவிடுகிறார்கள், தட்சிணை கூகுள் பே, நெட் டிரான்ச்ஃபர்.//
நீக்குநெல்லை ஆன்லைனில் நடப்பது வெர்ச்சுவல் ரிஇயாலிட்டி அல்ல. ஆன்லைன் கல்யாணம் 4,5 வருடங்களுக்கு முன்பே ஸ்கைப்பில் நடத்திட்டாங்க ஒரு ஜோடி. இப்போது ஸ்கைப் இருக்கிறதோ?!!! மேபி இப்ப வாட்சப், இன்ஸ்டாகிராம் என்று இருக்கலாம்.
வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது வேறு. அது சிமுலேஷன். ரியாலிட்டிக்கு அருகில் அல்லது முழுவதும் வேறாக இருப்பது.
உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் வீடியோ கேம்ஸ். வெர்ச்சுவல் சர்ஜரிஸ் மகன் சப்ஜெக்டில் அவன் நிறைய பார்த்ததுண்டு. அவன் வெர்ச்சுவலாகச் செய்து பார்த்ததும் உண்டு. சர்ஜரி வெர்ச்சுவலாகத்தானே எனவே உயிருக்குப் பிரச்சனை இல்லை. ஒவ்வொரு முறையும் டெமோ காட்டுவதற்கு விலங்குகள் கிடைக்குமா என்ன. அது போல போஸ்ட்மார்ட்டமிற்கும். இந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி சர்ஜரி வீடியோஸ் உதவும்.
மருத்துவத் துறையில் இதன் பயன்பாடு நிறைய உண்டு. ஒரு சாஃப்ட்வேர் எம் ஆர் ஐ ஸ்கேன் சிடி ஸ்கேன் படங்களை வைத்து முப்பரிமாண மாடலை உருவாக்க அதை டாக்டர்கள் கேம் விளையாடுவதைப் போல மானிப்புலேட் செய்து நிறைய கற்றுக் கொள்ளலாம். மகன் செய்து கற்றதைப் பார்த்ததுண்டு.
மகன் சொன்னான், தான் விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்ஸ் விளையாடியது தற்போது மிகவும் பயன்படுகிறது என்று.
எனவே நான் சொன்ன ஃபிக்ஷன் நீங்கள் சொல்லியிருப்பது போல் இல்லை. சைஃபை.
ஆனால் ஹிஹிஹி வழக்கம் போல இந்த கீதா எழுதி முடிக்க நீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்ட காலம் ஆகும் அதுக்குள்ள உலகம் வேறு டெக் லெவலில் போயிருக்கும் !!! ஹாஹாஹாஹா
அது சரி..உங்கள் ஃபிக்ஷ்ஷனைப் படித்துவிட்டு அடுத்த கேள்வி கேட்கலாம் என்றால், // நான் இன்னும் எழுதி முடிக்கவே இல்லையே!!!!
நெல்லை நீங்கள் கேட்க நினைத்த கேள்வியை கேட்கலாம்!!!!!!!!!! கௌ அண்ணா கர்ர்ர்ர்ர்.சொல்ல மாட்டார். நான் பார்த்துக்கறேன் அவரை!!!!!!
கீதா
இந்த VR சாதனங்கள் வாங்கி, அல்லது அது இருக்கும் அவுட்லெட்டில் அதனை அனுபவித்திருக்கிறேன். ரொம்ப த்ரில்னு சொல்வதை விட, பயம் அதிகமாக இருக்கும். நாமே அந்த இடத்தில் இருப்பதுபோல இருக்கும். இதனைத் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.
நீக்குWe can't go into deep see (கடலில் உள்ளே). அதுபோல நாம் போக முடியாத இடங்களில் எல்லாம் அந்த VR கண்ணாடியை மாட்டிக்கொண்டால் அங்கு இருப்பது போலவே இருக்கும். துபாயில் 7D பார்த்திருக்கிறேன் (experience பண்ணியிருக்கிறேன். லண்டன் Eyeல 4D தான். அதுவே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்). ஆனால் VR என்பது இன்னும் வேற லெவல்.
நான் இயற்கை வலியது எழுதிய போதே (கதை எபியில்) நிறைய வந்துவிட்டது இந்த ஆஇ விஷயத்தில்... எழுத தொடங்கியது சில வருடங்கள் முன்...ஆனால் முடிக்கும் போது 2017? 2018 களில் நிறைய வந்திருந்தது..
பதிலளிநீக்குகீதா
சென்ற வருடமோ அதற்கு முந்தியோ ஜெர்மனியில் ஆண் பிள்ளைகளும் சரி பெண் பிள்ளைகளும் சரி உறவுக்கு என்று ரோபோ பொம்மைகளைப் பயன்படுத்துவதாக வாசித்தேன். இப்படி இயற்கைக்கு எதிராகப் பல விஷயங்கள் ஆஇ..
பதிலளிநீக்குவரம்பிற்குள் ஆஇ பயன் விளைவிக்கும் ஆனால் வரம்பு மீறும் போது இயற்கை வலியது.
கீதா
ஏதோ ஒரு தாய்லாந்து பையன் ரைஸ் குக்கரை மணப்பெண் போல அலங்காரம் எல்லாம்செய்து நாற்காலியில் வைத்து சடங்குகள் செய்து கல்யாணம் செய்து கொண்டு அதை ஃபேஸ்புக்கில் போட்டு வைரலாகியதாமே 4 நாட்களில் அந்த ரைஸ் குக்கரை விவாகரத்தும் செய்தாராமே...ஏன் விவாகரத்து என்றால் அது சாதம் மட்டும்தான் செய்கிறதாம் வேறு எதுவும் செய்வதில்லையாம்!!!!!!!!!!!
நீக்குபின்னர் இது சும்மா அந்தப் பையன் கொஞ்சம் பிரபலமானவராம் அந்த ஊரில்!!!! அதனால் இப்படி சும்மா செய்து ஃபேஸ்புக்கில் போட்டாராம்!
கீதா
சந்தியா,14, // போலீஸார் செய்யும் இந்த உதவியை நன்றாகப் பயன்படுத்தி முன்னுக்கு வர வேண்டும். போலீஸாருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குகார்த்திக் மற்றும் உமாமகேசுர மேநிலைப்பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டுகள்.
சங்கர் மனதை நெகிழ வைத்துவிட்டார். அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது மகிழ்வான விஷயம். யார் யாருக்கோ சும்மா கிடைக்குது நன்கொடை!!!!!?? அளித்தால் கிடைத்துவிடும்..
கீதா
சங்கருக்கு அரசு விரைவில் ஒரு வேலையை வழங்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
சுஜாதாவின் எழுத்தில் (இந்தக் கதை 2003), 2023 என்ன, 2063 கூடத் தெரியும்போலிருக்கிறது. அவர் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் பைத்தியம், ’நவீனங்களின்’ கிறுக்கு மேலும் கவிதைப்பித்து அதிகம் அவரிடம், இன்னுமென்னன்னவோ.. எதையும் வளைத்துப்போட்டுப் படித்து, புரிந்துகொண்டு, அறிமுகப்படுத்தி என மேலும் மேலும் தன்னை வளர்த்துக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே இருந்த நவீனத்தமிழின் ஒரே ஆளுமை. அதனால் இளமையான எழுத்தினை, trend-setting prose-ஐத் தந்தவர். எஸ்.ரா. ஒருமுறை இப்படிக்குறிப்பிட்ட நினைவு: ஏதாவது ஒரு புதிய, கேள்விப்படாத அயல்நாட்டு ஆளுமை, அல்லது புரிபடாத விஷயம் என்று வந்தால், இதைப்பற்றி சுஜாதா ஏதும் எழுதியிருக்கிறாரா என்றுதான் முதலில் தேடிப்பார்ப்போம்... (தன்னையும் தன் சில எழுத்துச்சகாக்களையும் குறிப்பிட்டு) என்கிறார்.
பதிலளிநீக்குசுஜாதாவுக்கு ஆண்டவன் இன்னுமொரு 10-வருடம் அருளியிருக்கலாம். அதாவது தமிழுக்குத் தந்திருக்கலாம் அவர் மூலமாக. அவனுக்கென்ன நிர்பந்தமோ, பட்டனை அழுத்திவிட்டான்!
முயற்சிக்கு வாழ்த்துக்கள், பா.வெ.
பதிலளிநீக்குஇந்தக் கதையை உங்கள் மொழியில் உங்கள் வாசிப்பில் எங்களுக்குத் தந்திருந்தால் நீங்கள் ரசித்தவாறே எங்களையும் ரசிக்க வைத்திருக்கலாம்.
அடுத்த கதையை அப்படி முயற்சி செய்து பாருங்களேன். உங்களால் முடியும். முதல் முயற்சிக்கு மீண்டும்
வாழ்த்துக்கள், பா.வெ.
உங்களுக்கு யூட்யூப் பேச்சுப் பயிற்சி பிரமாதமாக அமைந்திருப்பதால் அதையே அப்படியே கதை விவரிப்பாக எழுத்தில் கொண்டு வந்து விட்டால் இந்தப் பணி சுலபமாகிவிடும் என்று நினைக்கிறேன். முயன்று பாருங்களேன்.
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகளில் இடம் பெற்றோர் எல்லோரையும் பாராட்டுவோம். காவலர்கள் பற்றி பல அபிப்ராயங்கள் இருந்தாலும் அவர்களும் நல்லது செய்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்வான விஷயம்.
பதிலளிநீக்குபெற்றோருக்கு மயானத்தில் உதவிக் கொண்டே மேல்படிப்பும் படித்து ஒவியம் வரையும் திறமையும் பெற்ற சங்கரின் சேவை மகத்தானது. அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியதோடு வேலையும் கொடுத்திருந்தால் நல்லது. இந்த டாக்டர் பட்டம் அவருக்கு வேலை கிடைப்பதற்கு முதல் படியாக அமையட்டும்.
சகோதரி பானுமதி அவர்கள் ரசித்துவாசித்த கதை சிறப்பாக இருக்கிறது. எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்து விறுவிறுப்பாக இருக்கிறது. கடைசியில் ட்விஸ்ட் அந்த மணப்பெண் ரோபோட்டாக இருப்பாளோ? இயந்திரன் படக் கதையில் ரஜனி ரோபோட் ஐஸ்வரியாவைக் காதலிப்பதாக வருமே.
துளசிதரன்
இயந்திரன் படம் பார்த்ததே இல்லை. அதில் ரோபோவாக ரஜினி நடிச்சிருக்காரா? இரட்டை வேடம்னு நினைச்சிருந்தேன். :)
நீக்குஇயந்திரன் படம் 2010 ல் வந்த நினைவு. நான் பாலக்காட்டில் இருந்ததால் அந்தப் படம் பார்த்தேன். கதை டைட்டிலில் அவர் பெயர் உண்டே. ஆனால் அவர் அப்போது இல்லை என்று நினைக்கிறேன். அது டைட்டிலில் போட்டிருந்ததா என்ற நினைவும் இல்லை. எனவே மணப்பெண் ரோபோட்டாக இருக்கும் என்று தோன்றுகிறது. வருடம் 2010 லிருந்து 2020க்குள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
ம்ம்ம்ம், மணப்பெண் ரோபோவா? !!!!!!!!!! அப்போ எனக்குப் பொற்கிழி இல்லை! :(
நீக்குபெற்றோருக்கு உதவியபடியே மேலும் படித்து ஒவியம் வரையும் திறமையும் பெற்ற சங்கரின் சேவை மகத்தானது. அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது சரியே..
பதிலளிநீக்குஅவருக்கு இன்னும் வேலை வாய்ப்பு கிடைக்காதது ஏன்?..
நல்ல செய்திகளுடன் இன்றைய பதிவு..
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஒரு கதையை எழுத சுஜாதா தேவையில்லை.
பதிலளிநீக்குஆனால் இந்தக் கதையில் வரும் சில வரிகளை எழுத சுஜாதா மட்டுமே தேவை.
எழுதுகிற போக்கில் எழுதுகிற மாதிரி காட்டிக் கொள்கிற நிறைய உவ்வே
நீக்குவார்த்தைகள். சுஜாதா என்றால் இந்த அக்மார்க் முத்திரைகள் இல்லாமல் இருந்தால் எப்படி?
சிலர் முகம் சுளிக்க ஃபேஷனாகக் கருதும் குமுதம் பத்திரிகையிலும் இந்தக் கதை பிரசுரமாகவில்லை.
பதிலளிநீக்கு//இன்ஸ்பெக்டர் சுசிலா, பெண் போலீசார் திவ்யா ஆகியோர், மாணவியை, கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பில் சேர்ந்தனர். ஆசிரியர்கள் அவர் கல்வியை தொடர ஊக்கப்படுத்தினர்.//
பதிலளிநீக்குசந்தியாவை படிக்க வைத்தவர்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.
ஆட்டோ ஓட்டுனர் அஜித் நேரமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
சங்கர் அவர்களுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைத்தால் மகிழ்ச்சி, வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.
நல்ல செய்திகளுக்கு நன்றி.
பள்ளி மாணவிகளையும் பாராட்டி மகிழ்கிறேன். குழந்தைகளின் பொறுப்புணர்வு வாழ்க!
பதிலளிநீக்குசுஜாதா கதை படித்தது இல்லை.
பதிலளிநீக்குஇப்போதுதான் படித்தேன்.
முடிவு ஓரளவு புரிகிறது, சரியா என தெரிந்து கொள்ள அடுத்தவாரம் படிக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நல்ல செய்திகளை பகிர்ந்த தங்களுக்கு நன்றி. இந்தச் செய்திகளில் வந்த நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரையும் போற்றுவோம்.
சகோதரி பானுமதி அவர்கள் பகிர்ந்த சுஜாதா அவர்கள் எழுதிய கதை அருமையாக உள்ளது. கதையை இதுவரை படித்ததில்லை. கருத்துரைகளில் அனைவரும் கூறுவது போல் வித்தியாசமான திருப்புமுனைதான் இருக்கும். முடிவை நானும் அடுத்த வாரம் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செய்திகள் அனைத்தும் சிறப்பு. சுஜாதா கதை - இப்படியும் நடக்கலாம்!
பதிலளிநீக்கு