பாண்டி நாட்டு தங்கம். நடுவில் 'த்' வராது! சினிமா செண்டிமெண்ட்! அது என்ன பாண்டி நாட்டு தங்கமோ... சோழநாட்டு வெள்ளி, சேர நாட்டு பித்தளை என்றெல்லாம் அப்புறம் படம், நல்லவேளை வரவில்லை.
ஆனால் பாருங்க படம் சூப்பர் டூப்பர் ஹிட். கார்த்திக்கின் பட வரலாற்றில் சாதனை படைத்த படமாம். நேர்மையான காட்டு ஆபீஸர் சந்திக்கும் பிரச்னையில் அங்கு காதலிலும் விழும் கதை. கார்த்திக்கின் இளமை, அழகு ஒரு கவர்ச்சி என்றால் இளையராஜாவின் இசை படத்துக்கு பெரிய ப்ளஸ்.
சங்கிலி முருகன் தயாரிப்பென்றால் இளையராஜா இசைதான். 'இளசு' புகுந்து விளையாடி இருப்பார் படத்தில். எல்லா பாடல்களுமே ஹிட். அதில் மனதை வருடும் இரண்டு பாடல்களை இங்கே இன்று பகிர்கிறேன்!
கார்த்திக், நிரோஷா நடிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் பாடல்கள். மதுரையை மையமாக வைத்து படங்கள் வந்தால் ஹிட் அடித்த நேரம். படத்தில் கார்த்திக்கின் பெயர் தங்கபாண்டியனாம்!
முதல் பாடல் மனோ சித்ரா பாடிய பாடல். மனோ பாடி இருக்கிறார் என்று பெயர்தான். அவர் ஆரம்பித்து, பாடல் வரிகளுக்கும் ஸ்ருதிக்கும் தடுமாறியவுடன் புன்னகையும் நாயகி, சித்ரா குரலில் பாட்டைத் தொடர்கிறார்.
இந்தப் பாடலிலும் சரி அடுத்த பாடலிலும் சரி பாடல் வரிகள் பெரிய கவித்துவமாக இருக்காது. அப்படி எல்லாம் எழுத முடியாதவர் அல்ல கங்கை அமரன். இந்தப் பாடல்களின் சூழலுக்கு எது பொருத்தமோ அதை எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
சரணம் சுமாராய் ஆரம்பித்தாலும் (மோசமெல்லாம் இல்லை!) பல்லவிகள் (பல்வலிகள் அல்ல!)அழகாய் இருக்கும். சித்ரா குரலில் பாடல் இழையும். சரணங்களில் முதல் இரண்டு வரி கட்டியம் கூறுவதும், பின்னர் அது தணிந்து தனக்கே விளக்கம் கொடுத்துக் கொள்வதும், அதன் பின் வா வா குயிலே என்று பல்லவிக்கு வருவதும்... இந்தப் பாடல் என்ன ராகம் என்று கீதா வந்து சொல்வார்!
காட்சி அமைப்பில் நிரோஷாவும், கார்த்திக்கும்.. காட்சியுடனும் ரசிக்கலாம்.
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒருநூறு ஆசை
ஒண்ணாக் கலந்திருந்தது உலகம் அதமறந்து பாடாதோ....
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒருநூறு ஆசை
ஒண்ணாக் கலந்திருந்தது உலகம் அதமறந்து பாடாதோ....
பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச
ஒண்ணாக் கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பாடாமலே...
பாடாமலே ஒரு புது ராகமா கூடாம சேராம ஒரு தாளமா
உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும்
ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்
செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்
சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்
என் நெஞ்சோட மேடை உள்ளது நீ அங்கே வந்தா நல்லது
வா வா வா குயிலே
பாட்டாலதான் பரலோகமே உன்னோட இடம் தேடி வரலாகுமே
பாட்டாலதான் மனம் மாறுமே உன்னோட மனம் தேடி உறவாடுமே
இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்
சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா
நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்
இது தானாக வந்தது வந்தது தேனாக தந்தது தந்தது
வா வா வா குயிலே
அடுத்த பாடல், இதே படத்திலிருந்து, இதே சித்ரா பாடிய பாடல். இது சுத்ததன்யாசி ராகம் என்று அப்போதே ஊரில் பேசிக்கொண்டார்கள்!
இந்தப் பாடல்... ஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே ரசிக்க ஆரம்பிக்கலாம். அந்தக் குரல்...
முதல் பாடலில் மனோ ஆரம்பத்தில் இரண்டு வரி குரல் கொடுத்தாரா... இதில் பாடலின் முடிவில் இரண்டு வரி பாடி முடித்து வைப்பார். சரியாய் போச்சா?!!
இந்தப் பாடலின் சோக வெர்ஷன் சித்ராவும் எஸ் பி பி யும். ஆனாலும் எனக்கு மனோ-சித்ரா வெர்ஷன்தான் பிடிக்கும். காரணம் இங்கும் சரணங்கள்தான்.
பல்லவியும் நன்றாக இருக்கும் என்றாலும் சரணங்கள் ட்யூன் வேற லெவல்!
'நீ பாடும் ராகம் வந்து நிம்மதியைத் தந்ததய்யா' என்கிற வரிகளில் அந்தக் குரலில் என்ன ஒரு bhaaவம்.. "உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணிதான்" போன்ற வரிகளில் கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சியைக் காட்டினாலும் செயற்கையாகக் கூடிய சாத்தியம்! ஆனால் என்ன ஒரு பரவச ஏக்கம் அந்த வரிகளில்.. தன் காதலை பாடல் வரிகளில் சொல்லும் ஏக்கம்... மிக அருமையான பாடல்
இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காது. எனக்கு ஒரு வழக்கம்... பாடல் கேட்பதென்றால் ஒன்றிக் கேட்கவேண்டும். யாரும் குறுக்கே பேசினால் பிடிக்காது. பாட்டை நிறுத்தி விடுவேன். அதனாலேயே தனியாய் இருக்கும்போதுதான் பாடல் கேட்பேன். அதுவும் சில பாடல்களில் ஓரிரு வரிகள் கேட்டே ஆகவேண்டும் என்று காத்திருக்கும்போது மர்ஃ பி விதி மாதிரி அந்த வார்தையைக் கேட்க முடியாமல் ஒரு குறுக்கீடு வரும்.
ஒருமுறை பயணத்தில் இப்படி ஒரு வார்தையைக் கேட்க முடியாமல் பாஸும், உறவினப் பெண் ஒருவரும் பேசிவிட, என் அதிருப்தியைக் காட்டிவிட்டு பின்னர் எதற்கு இதை எல்லாம் சொல்லிக்கொண்டு என்று வருந்தினேன். இப்போது எழுதுகையில் அது என்ன பாடல் என்கிற கேள்வி மனதைக் குடைகிறது! தேவையில்லாத உபயோகமில்லாத பிரச்னைகள்! இல்லை?
அதுபோல குடந்தைப் பயணத்தில் பஸ்ஸில் இந்தப் பாடல் (உன் மனசுல) ஒலிக்க, என் அண்ணணும், ஒரு உறவினப்பெண்ணும் சட்டென தூக்கத்திலிருந்து விழித்து ரெடிமேட் புளிக்காய்ச்சல் பற்றிப் பேசி பேசி மாய்ந்தார்கள். சரியாய் பாடல் முடிந்ததும் மறுபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.
உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு
பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு
நாளு வெச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழணும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளணும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து
நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான்
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்
உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்
அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன்றும் எல்லோரும் அளவில்லா ஆரோக்கியத்துடனும்
குறையாத அமைதியுடனும் இருக்க இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்/
நீக்குமிக மிக இனிமையான பாடல்களுக்கு முதலிலேயே நன்றி
பதிலளிநீக்குசொல்லிவிட்டுப்
பாடல்களைக் கேட்கப் போகிறேன்.
அன்பு ஸ்ரீராமுக்கு இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
ஆஹா.. நன்றி அம்மா.
நீக்கு''''''''''''''யாரும் குறுக்கே பேசினால் பிடிக்காது. பாட்டை நிறுத்தி விடுவேன். அதனாலேயே தனியாய் இருக்கும்போதுதான் பாடல் கேட்பேன். அதுவும் சில பாடல்களில் ஓரிரு வரிகள் கேட்டே ஆகவேண்டும் என்று காத்திருக்கும்போது மர்ஃ பி விதி மாதிரி அந்த வார்தையைக் கேட்க முடியாமல் ஒரு குறுக்கீடு வரும்."""" :)))))
பதிலளிநீக்குஇது போலப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் என்னை
மகனோ மகளோ ஏதோ பேசுவது போல நடிப்பார்கள். நான் அவர்களை முறைத்து விட்டுப்
பாட்டுக்குப் போனால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்:)
ஹா.. ஹா.. ஹா... மிகச்சில சமயங்கள்தான் வேலைசெய்து கொண்டே அரைகுறையாய் பாட்டையும் கேட்கும் வழக்கம்!
நீக்குHead set will rule out any other noise:)
நீக்குஉண்மை. நன்றாய் இருக்கும்தான். ஆனால் ஏனோ ஹெட் செட்டை நான் பழக்கிக் கொள்ளவில்லை! பிடிக்காது.
நீக்கு"""அதுபோல குடந்தைப் பயணத்தில் பஸ்ஸில் இந்தப் பாடல் (உன் மனசுல) ஒலிக்க, என் அண்ணணும், ஒரு உறவினப்பெண்ணும் சட்டென தூக்கத்திலிருந்து விழித்து ரெடிமேட் புளிக்காய்ச்சல் பற்றிப் பேசி பேசி மாய்ந்தார்கள். சரியாய் பாடல் முடிந்ததும் மறுபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். """"'
பதிலளிநீக்குஅட ராமச்சந்திரா. எங்கே பார்த்தாலும் ஔரங்கசீப்களாக
இருக்கிறார்களே:))))
ஹா.. ஹா... ஹா.. நம்ம விதி!
நீக்குஹாஹா
நீக்குவல்லிம்மா, ஔரங்கசீப் ஹஹாஹா
அன்பு க்ரேஸ்!!! நலமாப்பா?
நீக்கு'""""""நீ பாடும் ராகம் வந்து நிம்மதியைத் தந்ததய்யா' என்கிற வரிகளில் அந்தக் குரலில் என்ன ஒரு bhaaவம்.. "உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணிதான்" போன்ற வரிகளில் கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சியைக் காட்டினாலும்"""""""""""""""""""""""""
பதிலளிநீக்குஇது நிஜம் தான் ஸ்ரீராம். இந்தப் பாடலில் இந்த வரிகள்தான் என்னை மிகவும் கவரும்.
அத்தனையும் யதார்த்தம்.
அதோடு அந்தக் குரலில் வழியும் உணர்வு.. அந்த டியூன்... பின்னணி இசை..
நீக்குOh yes . That goes with out saying. lovely song ma.
நீக்குமுதல் பாட்டில் சொக்கி சொக்கி விழ வைக்கும்
பதிலளிநீக்குசித்ராவின் குரல்.
தெய்வம் நமக்குத் தந்த வரம்.
காட்சி அழகைச் சொல்ல வார்த்தையே இல்லை.
கார்த்திக்
மோகம் கொண்ட மாணவிகள் நம் வீட்டில் மொய்ப்பார்கள். அக்னி நட்சத்திரம், மௌன ராகம், அந்த குஷ்பு பாட்டு ''பாடிப் பறந்த கிளி"
எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாகப்
பிரித்து ருசிப்பார்கள்:))
அந்த நினைவுகளோடு மீண்டும் இந்தப் பாடல்களை அனுபவிக்கிறேன்.
வாழ்த்துகளும் நன்றிகளும் ஸ்ரீராம்.
ஆம். நம்ம 'காணாமல் போன கனவுகள்' ராஜி கூட பயங்கர கார்த்திக் விசிறி! நிறைய பேர் கார்த்திக்கின் மேல் மோகம் கொண்டு அலைந்தார்கள்!
நீக்குமனோ கடைசியில் முடித்து வைக்கும் இடமும் நன்றாகத்தான் இருக்கு ஸ்ரீராம். என்ன அருமையான குரல் அவருக்கு.
பதிலளிநீக்குஆமாம். ஏழைகளின் எஸ் பி பி யாக ஆரம்பித்த அவருக்கு பின்னால் நல்ல வாய்ப்புகள் அமைந்தன. நிறைய நல்ல பாடல்கள் அவர் குரலில்..
நீக்குவரிகளை வைத்து பாடல் மனதில் எழவில்லை.
பதிலளிநீக்குகாணொளி கேட்டுப் பார்க்க வேண்டும்.
ஶ்ரீராம், வல்லிம்மா இசை ஆர்வம் வியக்க வைக்கிறது.
வாங்க நெல்லை.. இந்தப் பாடல்கள் நீங்கள் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.
நீக்கு//பாடல் கேட்பதென்றால் ஒன்றிக் கேட்கவேண்டும். யாரும் குறுக்கே பேசினால் பிடிக்காது. பாட்டை நிறுத்தி விடுவேன். அதனாலேயே தனியாய் இருக்கும்போதுதான் பாடல் கேட்பேன். அதுவும் சில பாடல்களில் ஓரிரு வரிகள் கேட்டே ஆகவேண்டும் என்று காத்திருக்கும்போது மர்ஃ பி விதி மாதிரி அந்த வார்தையைக் கேட்க முடியாமல் ஒரு குறுக்கீடு வரும். //
பதிலளிநீக்குஎனக்கும் அப்படியே :-) என் கணவர் இசையைக் கேள் என்பார்..நான் வரிகளுக்குத் தான் பாடல் கேட்பது!
பாடல்களுடன் உங்கள் நகைச்சுவை ததும்பும் வரிகளும் ..ரசிக்க வைக்கின்றன.
நன்றி கிரேஸ்... நேற்றைய பதிவிலும் உங்கள் கமெண்ட் பார்த்தேன். இனிய வருகை, இனிய ஆச்சர்யம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகள், பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குபாடலைப் பின்னர் கேட்கிறேன். காலையிலேயே ரேவதி இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு, ரசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். எனக்கும் பாடல் வரிகள் மேல் அபார மோகம். சிலவற்றில் சரியாகப் புரியாதுனு திரும்பக் கேட்க நினைச்சால் முடியாது போய்விடும். எல்லாத் திரைப்படப் பாடல்களின் தொகுப்பும் ஶ்ரீராமிடம் கைவசம் இருக்கு போல! தேடித்தேடிப் போடுகிறார். பல படங்கள் திரைக்கு வந்திருப்பதே அவர் மூலம் தான் தெரிஞ்சுக்கறேன்.
பதிலளிநீக்குபாடல்கள் இணையத்திலேயே இப்போதெல்லாம் கிடைக்கிறதே... என் நினைவில் நின்ற பாடல்களை பகிர்கிறேன். இந்தப் படம் தெரியாமல் இருந்திருக்காது. சூப்பர்ஹிட் படம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஇனிமையான பாடல்கள் .
பதிலளிநீக்குகேட்டேன். படம் பார்க்கவில்லை.
பாடல்கள் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
ரசிப்புக்கு நன்றி அக்கா.
நீக்குதேன்மதுரத் தமிழ் கிரேஸ் வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றார்...
பதிலளிநீக்குநல்வரவு...
சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் இன்று என் பதிவுக்கும் வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு நல்வரவு கூறுவதுடன் இங்கும் நான் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீக்குபாண்டி நாட்டித் தங்கம் - படம் பார்த்ததில்லை...
பதிலளிநீக்குபதிவில் உள்ள பாடல்கள் ரசனையானவை.. எனது சேமிப்பில் இருக்கின்றன..
நான் தொலைக்காட்சியில் பார்த்தேனா, நினைவில்லை. ஆனால் தியேட்டரில் பார்க்கவில்லை!
நீக்கு// என் அண்ணணும், ஒரு உறவினப்பெண்ணும் சட்டென தூக்கத்திலிருந்து விழித்து ரெடிமேட் புளிக்காய்ச்சல் பற்றிப் பேசி பேசி மாய்ந்தார்கள். சரியாய் பாடல் முடிந்ததும் மறுபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள்..//
பதிலளிநீக்குபுளிக் காய்ச்சலின் மகிமையே மகிமை...
ஹா.. ஹா.. ஹா...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய இரு பாடல்களும் இனிமை. அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் படம் பெயர் ஞாபகமில்லை. பாடல்களை இப்போது கேட்டவுடன் தொலைக்காட்சியில் இந்த பாடல்களுடன் கூடிய காட்சிகளை பார்த்த நினைவு வருகிறது.இரண்டு பாடல்களையும் இப்போதும் கேட்டு ரசித்தேன். கார்த்திக் நல்ல நடிகர். அவர் படத்தில் பாட்டுக்கள் எப்போதுமே வெற்றியடைந்து விடும்.
பாடகர்கள் யேசுதாஸ் ஜெயசந்திரன் குரல் ஒற்றுமை போல், எஸ்.பி.பி, மனோ குரல்களும் சில சமயங்களில் ஒத்துப் போகும். சில சமயம் நான் குழம்பி போய் விடுவேன்.
வெள்ளி பாடல்கள் தங்கள் எழுத்தாற்றலில் இப்போது வெகு பிரசித்தமாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான அமைப்பில் எழுதி வருகிறீர்கள் இந்த தடவை நகைச்சுவையும் சேர்ந்து பதிவு நன்றாக உள்ளது.மிகவும் ரசித்தேன். உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கும், ரசனைக்கும் நன்றி கமலா அக்கா.
நீக்குஇந்தப் பாடல்களையெல்லாம் கேட்டதில்லை.
பதிலளிநீக்குஇங்கே முதலில், வரிகளைப் படித்துப் பார்க்கிறேன்.. கேட்கத் தோன்றவில்லை.. சாமியிடமும், எதையும் இனிக் கேட்கப்போவதில்லை!
//கேட்கத் தோன்றவில்லை.. சாமியிடமும், எதையும் இனிக் கேட்கப்போவதில்லை!//
நீக்கு:((
இனிமையான பாடல்கள்... இரண்டாவது பாடல் மனதை தாலாட்டும்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஇரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்ததுண்டு. பாடல்களின் அர்த்தங்களை பார்ப்பதே இல்லை!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசித்திராவின் பாடல்கள் பிடிக்கும்.
பதிலளிநீக்குமுதலாவது பாடல் இப்பொழுது தான் கேட்கிறேன்.இரண்டாவது கேட்டிருக்கிறேன். இரண்டுமே இனிமை.
அருமையான பாடல்கள்
பதிலளிநீக்கு