ஞாயிறு, 3 அக்டோபர், 2021

மலர்கள், மரங்கள், காய்கள் & கனிகள்

 

'கீரிப்பாறை பயணப்  படங்கள் கோப்பு' எங்கே சென்றது என்று தேடப்பட்டு வருவதால், இந்த வாரம், ஆசிரியர் KGY ராமன் சமீபத்தில் எடுத்த சில படங்கள் வெளியாகியுள்ளன. 


















= = = = = 

49 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  4. கண் குளிரும் வண்ணம் அழகான படங்கள்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அழகான மலர்கள், காய்கள் என படங்கள் அருமை. பசுமை, இடங்கள் சுத்தம் என்ற இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு காமிராவுக்கு முன் வந்து நின்றதோ என எண்ணும்படியான படங்கள்.

    சிகப்பு சிகப்பாய் அது என்ன காய்களா? இல்லை, மலர்ந்த பின் சுருங்கி வாடி தரையில் உதிர்ந்த மலர்களின் வடிவங்களா? அத்தனை படங்களும் கண்களுக்கு விருந்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாட்களும் ஆரோக்கியம்,அமைதியுடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அரளிப்பூக்களும், ஃப்ராங்கிபானி மரங்கள் கொடுக்கும் மலர்களுமாக
    நடை பாதை முழுவதும்
    காட்சி அளித்தால் கண் நிறைகிறது. எத்தனை அழகு.
    சுத்தம்.
    அந்த பிங்க், வயலெட் மற்றும் இளம் சிவப்பு வண்ணங்கள்

    மனதை அள்ளுகின்றன.
    பசுமை நிறைந்த புல் வெளிகள், நீரூற்றுகள்
    அனைத்தும், அங்கு வீசும் காற்றும் போதும்

    மனம் லேசாகும். திரு. ராமனுக்கு மிக நன்றி

    பதிலளிநீக்கு
  8. நீச்சல் குளம் உள்ள குடியிருப்பு வளாகம். சிகப்பு பூக்கள் பாக்கு மரங்கள் உதிர்ந்த பாக்குகள் என்று படங்கள் அழகாக உள்ளன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  9. இந்த படங்கள் whatsapp இல் வந்தவை என்று தெரிகிறது. whatsapp இல் 2000 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறாரா? போன் மெமரி அவ்வளவு இருக்கா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2000 படங்கள்? எங்கே அப்படி விவரம் உள்ளது?

      நீக்கு
    2. @கௌதமன் சார், படங்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் வாட்சப் இமேஜ் என வரும்.

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். நேற்று வீட்டிற்கு விருந்தினர் வருகை, மற்றும் வேறு சில வேலைகள் இருந்ததால் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. நேற்று நான் பகிர்ந்திருந்த சுஜாதாவின் கதையை படித்து விட்டு கருத்திட்டிருந்தவர்களுக்கு நன்றி. ஜீ.வி.சார் சில ஆலோசனைகள் கூறியிருந்தார். முயற்ச்சிக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  11. அரளிப்பூவும், பாக்கு பழங்களும் வெகு அழகு!

    பதிலளிநீக்கு
  12. பாக்கு பழங்கள் மஞ்சள் நிறத்தில்தானே இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு நிற பாக்குகளும் உண்டு. 
      https://healots.com/areca-nut/

      நீக்கு
    2. உண்டு, உண்டு. இரண்டும் உண்டு. எங்க வீட்டில் இரு ரகங்களும் இருந்தன. சிவப்பு சீக்கிரம் பட்டுப் போய் விட்டது. மஞ்சள் சுமார் பத்து வருஷங்களுக்கும் மேல் இருந்தது. நான்கு பாக்குமரங்களுக்கான நெற்றை விதைத்திருந்தோம். இரண்டு தான் வந்தது.

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
    படங்கள் ஒவ்வொன்றும் மற்றதை அழகில் மிஞ்சுகிறது! கீழே கொட்டிக்கிடப்பது என்ன வகை பழங்கள்?

    பதிலளிநீக்கு
  14. அழகான கண்களைக் கவரும் படங்கள்.சுத்தமான குடியிருப்பு வளாகம். நீச்சல் குளம் பராமரிப்பும் சுற்றிக் காணப்படும் செடி,கொடிகளும் அழகு. ரோஜாவின் நிறத்தை ஒத்திருக்கும் அரளிப்பூக்கள் அம்பேரிக்காவில் நிறையப் பார்ப்பேன். எங்களிடம் நல்ல சிவப்புத் தான் இருந்தது. பாக்குக் கொட்டிக் கிடப்பதைப் பார்த்ததும் நாங்கள் வளர்த்த பாக்கு மரங்கள் நினைவில் வந்தன. காலை எழுந்திருக்கும்போதே பாக்குப் பூக்களின் நறுமணம் கொல்லைக் கதவைத் திறக்கும்போதே மூக்கை நிறைக்கும். சிறிது நேரத்தில் பாதிரிப் பழங்களின் வாசனையும் அதோடு போட்டி போடும். வாசலில் குண்டு மல்லிகை நித்யமல்லி, சந்தனமுல்லை வாசனை தூக்கும். சந்தனமுல்லைப் புதர்க்குள்ளே நம்மாள் சுப்புக்குட்டி சாவகாசமாய்ப் படுத்திருப்பார். ஆகவே பூக்களை மேலே மொட்டை மாடியில் இருந்தே பறிப்போம்.

    பதிலளிநீக்கு
  15. அரளிப் பூக்கள் கவர்கின்றன. எங்கள் வீட்டில் ரோஸ் அடுக்கு , வெள்ளை அடுக்கு இரண்டு இனங்கள்,மரூன் ஒற்றை, மஞ்சள் ஒற்றை, என இருக்கின்றன. தினமும் கோவிலுக்கு ஆட்கள் வந்து ஆய்ந்து போவார்கள் என்பதில் மகிழ்ச்சி.

    பாக்கு பழம் அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  16. மலர்களும், கீழே கொட்டி கிடக்கும் காய்களும் பார்க்க அழகாய் இருக்கிறது.
    அடுக்கு அரளி பூக்களும் அழகு.

    படங்கள் எல்லாம் அந்த இடத்தின் அழகை சொல்கிறது. இப்போது அங்கு அதிகமாக மழை பெய்து கொண்டு இருப்பதாய் செய்தியில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. பூக்கள் படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!