புதன், 27 அக்டோபர், 2021

உங்களால் செய்ய முடியாததை உங்கள் நண்பர் செய்யும் பொழுது - -

 

கீதா சாம்பசிவம் : 

பல பிரபலங்களின் குழந்தைகள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் சந்திக்கின்றனர். இதற்கு வாழ்க்கை முறை காரணமா? வளர்ப்பு காரணமா?

# வசதிமிக்க வாழ்க்கை அமைந்தால் அதில் கட்டுப்பாடு சொற்பமாகி விடக் காண்கிறோம். அவ்வாறே புரிதல்,  அன்பான பரிமாற்றங்கள் கூட  அரிதாகி விடுகிறது.  சம்பளத்துக்கு ஆள் வைத்துப் பராமரிக்கப்படும் பிள்ளைகள் திசை தப்பிப் போவதில் வியப்புக்கு இடமில்லை.

$ பிரபலங்களின் குழந்தைகள் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு நம் சுற்றம் நட்பு பற்றி அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அது போலவே பிரபலங்களுக்கு. 

& வளர்ப்பு. 

முதிர்கன்னர்கள் இருக்கும் இந்தக் காலத்தில் இன்னமும் ஜாதகம்/ பெண்ணின் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பார்ப்பது சரியா?

# ஜாதகம் பார்த்துக் கல்யாணம் நிச்சயிப்பது காலம் காலமாக நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் பட்டு வருவது.  அதே சமயம் மனப் பொருத்தம் இருந்தால் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை என்ற பலமான நம்பிக்கையும் பேசப் படுவதுதான்.  ஜாதகம் பார்ப்பதும் பார்க்காததும் வேறு காரணங்களால் தள்ளிப் போகும் திருமணங்களை நடத்தி வைக்குமா என்பது உறுதியாகச் சொல்ல இயலாது.

$ ஜாதகம் போன்றவை பழங்காலத்தில் வெறும் பிறப்பு சான்றிதழ்கள். பிற்காலத்தில் reason for rejection.

& இப்போ யாரும் பெண்ணின் ஜாதகம் நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது இல்லை. மாறாக, பெண் வீட்டார்தான் ஆணின் வருமானம், வசதி, மாமியார் / மாமனார் (தொந்தரவு) இல்லாத குடும்பம் என்று பார்க்கிறார்கள். 

இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே அந்தப் பெண்ணும்/பையரும் தாங்கள் வசிக்கப் போகும் வீட்டை இருவருமாகச் சேர்ந்து பார்த்து முடிவு செய்து விடுகிறார்கள். சாமான்கள் எல்லாமும் கல்யாணத்துக்கு முன்பிருந்தே அங்கே போய்விடுகின்றன. இது சரியா?

# மண உறவில் மாற்றம் இல்லாதவரை இதில் குறை சொல்ல எதுவும் இல்லை.

$ திட்டமிட்டு குடும்பம் நடத்த முயற்சி வரவேற்க தக்கது.

& சரிதான். 

முன்னெல்லாம் ஐந்து நாட்கள் கல்யாணம்/பின்னர் நான்கு நாட்கள்/பின்னர் வந்த நாட்களில் மூன்று நாட்கள் என இருந்தது இப்போது ஒன்றரை நாளில் முடிந்து விடுகிறது. இது சரியா? (நீங்கள் உங்கள் கேள்விகளில் கேட்ட பாரம்பரியத்தில் மாற்றங்கள் இங்கேயும் இருக்கின்றன. இது வசதிக்கேற்ப ஏற்பட்ட மாற்றமா?)

# காலக் கிரமத்தில் இது போன்ற சுருக்கங்கள் பல தளங்களில் வந்துள்ளன.  இது நடைமுறை. சரியா தப்பா விவாதத்துக்குப் புறம்பான அவசரயுக அத்யாவசியம். 

$ ஊர் விட்டு ஊர் போய் கல்யானங்களுக்குப் போவது நிறைய நாள் எடுக்கும் காலத்தில் உறவினர்,சமையல் நிபுணர்கள், பரிசாரகர், பந்தல் அமைப்போர், அலங்கரிப்பவர். எல்லோரும் வந்து ஒன்றாகக் கூட ஆகும் நேரம்.

முன்னெல்லாம் வைதிக காரியங்கள் தொடர்ந்து இருக்கும் கல்யாணங்களில். ஐந்து நாட்களுக்கும் பெண்/பிள்ளைக்கு அக்னியின் முன் அமர்ந்து செய்ய வேண்டியவை இருக்கும். அவற்றை இப்போதெல்லாம் கல்யாணத்தன்று காலை 2,3 மணி நேரங்களிலேயே முடிக்கிறார்களே! இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

# விலாவரியாகச் செய்ய தற்கால வாத்தியார்களுக்கே கிரமம்- மந்திரம் தெரிந்திருக்காது. பொதுவாக, வசதிகள், ஜனத்தொகை, காலம் பற்றாக்குறை, உத்யோக நெருக்கடி போன்ற பல காரணங்களால் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளின் செய்முறை பலத்த மாற்றங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க இயலாது.

$ வைதிக காரியங்கள் எல்லோரையும் இருத்தி வைக்க ஏற்பட்ட ஓர் உத்தியாகக் கூட இருக்கலாம்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

உங்களால் செய்ய முடியாததை உங்கள் நண்பர் செய்யும் பொழுது ஆச்சர்யப்படுவீர்களா? சந்தோஷப்படுவீர்களா? பொறாமைப் படுவீர்களா?

$ சற்றுப் பொறாமையுடன் கூடிய சந்தோஷம்.

# இதற்கான விடை என்னால் செய்ய முடியாத, என் நண்பர் செய்கிற செயல் என்ன என்பதைப் பொறுத்து இருக்கும்.

சில தவறுகள் செய்ய எனக்கு மனம் வராதபோது அலட்சியமாக கூடாநட்பை நாடிச்செய்யும் நண்பர் மேல் சலிப்பு.

என்னைவிட பிரமாதமாய் ஷட்டில்காக் ரிங் டென்னிஸ் ஆடும் நிபுணர் மேல் வியப்பு..

என்னைவிட தாராளமாக இல்லார்க்கு கொடுப்பவரைக்கண்டு மகிழ்ச்சி...

சமஸ்கிருத சுலோகங்களை அநாயாசமாகச் சொல்பவர் மேல் லேசான பொறாமை..

மேல்வரும்படியை நாடிச் செய்பவர் மேல் எரிச்சல்..

இப்படி பலவிதமான உணர்ச்சிகள்.

அல்லாத செய்வோரை நட்பு வட்டத்தினின்று வெளித்தள்ள  இயலாமை நம்முள் ஒரு விசித்திரம்.

& ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்பட்டு, பின் பொறாமைப்படுவேன். 

 = = = = =

படம் பார்த்துக் கருத்துரையுங்க !

1) 


2) 

3) 


= = = = =

மின்நிலா 075 இந்த வார இதழ் சுட்டி >>>>>> MN 075 

= = = = =


54 கருத்துகள்:

  1. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    குறள்நெறி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! இன்னிக்கு நான் தான் போணியா? இல்லாட்டி யாரானும் எட்டிப்பார்க்கிறாங்களா?

    பதிலளிநீக்கு
  4. அதானே! ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! :) அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. கேள்விகளுக்கான பதில்கள் சுவையாக இருக்கின்றன. குட்டிப்பாப்பாவைப் பார்த்தால் எங்க பையர் நினைவில் வருகிறார். அவரும் இப்படித்தான் வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருப்பார். ஒண்ணாவது படிக்கையிலேயே கூடப் படிக்கும் குழந்தைகள் நீ ஃபெயிலாயிட்டுப் படிக்கிறே என்பார்களாம். பத்தாம் வகுப்புப் படிக்கையில் முதல் வகுப்புக் குழந்தைகள் அங்கிள் எனக்கூப்பிடுமாம். :))))))

    பதிலளிநீக்கு
  6. வாத்தின் வெள்ளை வெளேருக்குப் பக்கத்தில் சாக்லேட் நிறக் குட்டிச் செல்லம். இன்னொரு படம் பார்த்தேன். இம்மாதிரிக்குட்டிச் செல்லம் ஒன்று பெரியதொரு சேவலுக்கு அருகே சென்று அதன் விசாலமான இறக்கையால் தன்னை மூடிக் கொண்டு ஒண்டிக் கொண்டு படுத்துக்கொள்கிறது. அதன் முதுகின் மேல் ஏறி விளையாடுகிறது. இம்மாதிரிப் படங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  7. நம்ப முன்னோருக்கு என்ன உடம்பு? மருத்துவம் செய்துக்க வந்திருக்காரோ?

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    குழந்தை அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு பேசாமல் கேட்கிறது போலவே!
    அடுத்தவர் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும் என்று சொல்கிறது.

    வாத்தைப்பார்த்து உன்னை வெள்ளாவியில் வைத்தார்களா? என்று கேட்கிறதோ!
    பயந்து போய் உடம்பை சுருக்கி பார்க்கிறதோ?
    குரங்காருக்கு பல்லை சுத்தம் செய்து விட்டு எப்படி பல் தேய்க்க வேண்டும் என்று காட்ட பல் தேய்த்து விடுகிறார் போலும்.


    பதிலளிநீக்கு
  10. இங்கே 4:00 (6:30) வரைக்கும் யாரையும் காணோம்.. ஒருத்தரும் வர வில்லை..

    ஆகையால்,
    நான் தான் முதல் போணி.. :))

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
    என்றும் ஆரோக்கியம் அமைதியுடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் பதில்களும் வெகு சுவாரஸ்யம்.
    திருமணங்கள் காலை டிஃபனுடன் கூட முடிந்து விடுகின்றன.
    காலக் கோலம் தான்.

    முன்பு வீடிருந்தது. பணம் இருந்தது. எல்லாவற்றையும் விட மனம் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஒரு திருமணத்தில்தான் இருக்கிறேன். படிப்படியாக எல்லாம் முறைப்படி நடக்கிறது.

      நீக்கு
    2. ஸ்ரீராம் குறிப்பிட்டது காலை டிஃபன், பிறகு காஃபி, தாலி கட்டும் நேரம் கூல்டிரிங், பிறகு லஞ்ச் - இதனைப் பற்றியா?

      நீக்கு
  13. அதற்கு மாறாக இங்கே ஒரு தமிழ்த் திருமணத்தில் அமெரிக்க மாப்பிள்ளை விரதம், சந்தியா வந்தனம் எல்லாம் செய்து தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

    பதிலளிநீக்கு
  14. வாத்தின் கால்கள் எங்கே என்று தேடுகிறது நாய்க் குட்டி.

    அலைபேசியில் அம்மா குரல் கேட்கிறதோ பாப்பா.!!
    என்ன அழகு!!!

    குரங்கார் பல் தேய்த்துக் கொள்கிறாரோ.

    பதிலளிநீக்கு
  15. மற்றவரைப் பார்த்து சந்தோஷம் பொறாமைக் கான்
    பதில் மிக மிகச் சிறப்பு. நேர்மையானதும் கூட. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில்கள் நன்று. படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. கேள்வி பதில்கள் நன்று.
    1) கூல்பாரா? அம்மா வருவதற்குள் ஐஸ்கிறீம் டிலிவரி பண்ணுங்கள்.
    2) வாத்து அக்கா எனக்கு சாப்பிட முட்டை இட்டு தருகிறாயா?
    3) என் பல்லை பாரு எவ்வளவு வெள்ளை. என்னை பார்த்து விரைந்து காலைக்கடன் முடிக்க பழகுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. தலைப்பைப் பார்த்தவுடன் தெனாலி ராமன் நினைவு வந்தது. இப்படித்தான் "நான் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தை நீ கண்ணை திறந்து கொண்டு செய்ய முடியுமா?" என்று சவால் விட்டானாம். விடை உங்களுக்கு தெரியும். 

    படம் 1. ஐயோ இந்த டார்ச்சை எப்படி அணைப்பது தெரியவில்லையே.
    படம் 2. முட்டை போட்டாச்சுன்னா எந்திரிச்சி போ.
    படம் 3. என் பல் வரிசை ஒரிஜினல் தாங்க.

     jayakumar

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. எனக்குப் பிறந்த சில கேள்விகள்.

    1. மசாலா (பட்டை லவங்கம் ஏலம் ) இல்லாமல் உருளைக் கிழங்கு வைத்து மடித்த தோசைக்கு ஏன் மசால் தோசை என்று பெயர்?

    2. சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு எது அழகு?
     
    3. பல்லிக்கு பல் உண்டா? 

    4. சீத்தாப்பழம் தெரியும். ராமர் பழம் என்று ஏதாவது உண்டா? 

    5. இரன்டு காது இரண்டு  கண் என்று வைத்த கடவுள் ஏன் இரண்டு வாய் வைக்கவில்லை? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) நன்றி. பதில் அளிப்போம்.

      நீக்கு
    2. //சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு// - என்னமாதிரியான சந்தேகம்லாம் வருது ஜெயக்குமார் சாருக்கு. திருவனந்தபுரத்துல இருக்கறதுனால அனுபமா பரமேஸ்வரன் போன்றோரைப் பற்றிக் கேட்டிருக்கலாம். இது என்ன இத்துப்போன நடிகைகளைப் பற்றிக் கேட்டிருக்கீங்க?

      நீக்கு
    3. நாமெல்லாம் மசாலா என்றாலே கரம் மசாலாவை நினைச்சுக்கறோம். ஆனால் மசாலா என்பது பொதுவான ஒரு வார்த்தை. எல்லாவிதமான மசாலாப் பொருட்களின் சேர்க்கைக்கும் பொருந்தும். குழம்புக்கு அரைப்பதை குழம்பு மசாலா என்பார்கள். சாம்பாருக்கு அரைத்தாலும் அதுவும் மசாலாதான். வட இந்தியப் பாணியில் செய்யும் தொட்டுக்கொள்ளும் காய்களில் சேர்ப்பது மட்டுமே அநேகமாக கரம் மசாலா எனப்படும். அதன் சேர்க்கை தனி. இங்கே உருளைக்கிழங்கில் அதோடு சேர்த்து வெங்காயமும் வதக்கிச் சேர்ப்பதால் உ.கி./வெங்காயம் சேர்த்துச் செய்த தோசைக்கு மசாலா தோசை எனப் பெயர் வந்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான பெரிய ஓட்டல்களில் வெங்காயம் சேர்க்காமல் வெறும் உருளைக்கிழங்கை வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள். வெங்காயம்/உருளைக்கிழங்கு சேர்த்துப் பச்சை மிளகாய்/இஞ்சி/கருகப்பிலை சேர்த்துச் செய்யும் வகையைப் பூரி மசாலா என்கிறார்கள். இங்கெல்லாம் பூரி எனில் இந்த உருளைக்கிழங்கு/வெங்காயம் சேர்த்தது தான் தொட்டுக்க. வடக்கே அப்படி இல்லை.

      நீக்கு
    4. சீதாப்பழம் போல் ராமர் பழமும் உண்டு. ஆனால் அதிகம் பிரபலம் அடையவில்லை. ராமரைத் தேடிக் கொண்டு அழுது கொண்டே வந்த சீதையின் கண்ணீர்த்துளிகள் தான் சீதாப்பழ மரம் எனவும், அவளைத் தேற்றித் தோள்களில் தூக்கிக் கொண்டு சென்ற ஶ்ரீராமனின் வியர்வையால் விளைந்தவை ராமர் பழ மரம் எனவும் இந்தப் பெயரை முறையே சீதையும்/ராமரும் வைத்ததாகவும் ஆந்திராவில் ஒரு கூற்று. அங்கே தான் சீதாப்பழமும் அதிகம்/சாப்பிடுபவர்களும் அதிகம்.

      நீக்கு
  22. கலகலப்பான பதில்கள்..
    பொன்னான புதன்!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!