சென்ற வருட இறுதியில் எங்கள் குலதெய்வம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்களுக்குள் அல்லது பிப்ரவரி மார்ச்சுக்குள் அதாவது கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாகுமுன் சென்று வந்து விட வேண்டும் என்று நாங்கள் போட்ட திட்டம் சரிவரவில்லை. மகன்களின் வேலை நேரம், அவர்களின், என் லீவுப் பிரச்னைகள்...
அண்ணன் மகன் திருமணம் வருவதால் பத்திரிகையை எடுத்துக்கொண்டு குலதெய்வம் கோவிலுக்குப் புறப்பட்டோம். ஒரே வருத்தம், மற்ற கோவில்கள் பார்க்க முடியாமல் போகிறதே என்று இருந்தது. இந்த எண்ணம் மனதில் ஓடினால் பாலசாஸ்தா கோபிப்பாரோ என்ற பயம் வேறு மனதில். பொறுப்பை அவரிடமே மானசீகமாக விட்டோம். அவர் என்ன செய்தார், அமைச்சரை சிலர் மூலம் வற்புறுத்தி, முதல்வரிடம் சொல்லச் செய்து சர்ர்ர்ரியாக நாங்கள் புறப்படும் நேரம் கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கச்செய்து விட்டார்!
இதிலும் என்ன பயம் இருந்தது என்றால், உடனே மக்கள் வெள்ளம் புறப்பட்டு கோவில்களை முற்றுகையிட்டு பார்க்க முடியாமல் போனால் என்ன செய்வது?
எனினும் பயணம் என்கிற சந்தோஷத்துடன் காலை மூன்று மணிக்குப் புறப்பட்டு நேராக சுவாமிமலை சென்றோம். சுக தரிசனம். யாருமில்லை அங்கே.. பத்துபேர்கள் இருந்தால் பெரிது. அவர்களும் சென்றுவிட நாங்கள் ஏகாந்த தரிசனம்! உள்ளூர் நண்பர் ஒருவர் உதவியுடன் சுவாமிநாதனை இன்னும் கொஞ்சம் அருகே சென்று வணங்கினோம். பிரகாரம் சுற்ற எல்லாம் அனுமதியில்லை. வாசலில் பூக்காரர்கள் உள்ளே செல்பவர்களை வற்புறுத்தி பூ, மாலை வியாபாரம் செய்கிறார்கள். ஏமாந்து வாங்கிச் செல்லும் மாலைகள், உதிரிப்பூக்கள் உள்ளே நுழையுமிடத்தே ஒரு பெரிய மேசையில் வைக்கப்படுகின்றன. அவை, அங்குதான் இருக்குமா, மறுபடி கடையை அடையுமா என்பது தந்தைக்கு மந்திரத்தை காதில் பொருளுரைத்த முந்துகவி சக்தி மகன் முருகனுக்கே வெளிச்சம்!
மீன்களை படம் எடுத்துக் கொண்டே இருந்தோம். ஒற்றை மீனாய், ஜோடியாய், குழுக்களாய் நீந்துவது போல, வாய்பிளந்து காத்திருக்கும் மீன் என்று நேரம் போனதே தெரியவில்லை!
இந்தக் காட்சியும் அடுத்த படக்காட்சியும் மட்டும் ஒவ்வொருமுறையும் நான் எடுக்கும் காட்சி!
மக்கள் இல்லாமல் எடுக்க நான் செய்த முயற்சி நேரத்தைச் சாப்பிட்டதே தவிர பயன் அளிக்கவில்லை!
சென்ற முறையும் இதே போல புகைப்படம் எடுத்திருக்கிறேன் என்று மனதில் எண்ணம் பளிச்சிட்டாலும் மறுபடி எடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்வளவு வெளி, பின்னணி மேகம், அழகிய கோபுரம் என்று சில இடங்களில்தான் இந்தக் காட்சி அமையும், தாராசுரம் சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரம்...
அங்கிருந்து ஒப்பிலியப்பன் கோவில் செல்லும் வழியில் கூட்டமில்லா விட்டால் திருநாகேஸ்வரம் நுழைந்துவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். கூட்டமில்லை. எனவே அங்கும் சென்று ராகு வழிபாடு, சிவவழிபாடு செய்து வந்தோம். அங்கும் ராகு சன்னதியில்தான் கூட்டம். பத்து ரூபாய் தட்டில் போட்டால் இரண்டு சிட்டிகை விபூதி அதிகம் கிடைக்கும். அதற்குமேல் போட்டால் ஒரு பொட்டலம் விபூதி கையில் விழும்! கோவில் திருக்குளத்தில் கலர்கலராய் பெரிது பெரிதாய் சுற்றிவந்து சிவந்த வாயைப் பிளந்த மீன்களை பார்த்ததில் கொஞ்சம் நேரம் போனது. அந்தவகையில் இங்கேயே பதினொன்றேகால் ஆகிவிட, ஒப்பிலியப்பனை நோக்கி விரைந்தோம். பக்கம்தானே...
இதுவும் அலுக்காத கோபுரக்காட்சி...
கோபுரத்தோடு சேர்ந்து புஷ்கரணியை ஒட்டி எடுக்கப்படும் படங்கள் எப்போதுமே மனத்தைக் கவரும்.
வசூல் ராஜா... கலெக்ஷன் கைக்கு வருகிறது! என்னைப் பார்த்த உடன் மறைத்து வைக்கப்படுகிறது!!
ஜல்ஜல்ஜல் எனும் சலங்கையொலி....
பூமாவின் ஆட்டங்கள் புகைப்படத்தில் தெரியாது. காணொளி எடுத்திருக்க வேண்டும்!
அங்கிருந்த காவல்துறை அதிகாரி, கோவிலின் நுழையுமிடத்தில் நின்றிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் இரண்டு பெண்களிடம் "யம்மா.. போறவங்களை எல்லாம் இலவச சாப்பாடு சாப்பிட மண்டபத்துக்கு போகச் சொல்லுங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை போலும்.
சரி, ஒப்பிலியப்பனை தரிசிக்க, சனிக்கிழமை. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை. புரட்டாசியிலும் கடைசி சனிக்கிழமை. கூட்டம் இல்லாமல் இருக்குமா, என்ன? ஆனால் எதிர்பார்த்ததைவிட கூட்டம் கம்மியாய்த்தான் இருந்தது. ஆனால் ஒரே இடத்தில் குழுமி இருந்தது!
50 ரூபாய்ச் சீட்டு வாங்கினால் சுற்றாமல் நேராய் உள்ளே செல்லலாம் என்று சொன்னார்கள். நாங்கள் பத்துபேர். எதற்கு ஐநூறு செலவு, இது பெரிய ஆதாயமாக இல்லை என்று தோன்ற சுற்றியே போனோம். அனாவசியமாக சுற்றிச்சுற்றிச் செல்லும் கம்பித்தடுப்பு பாதையில் தடையே இல்லாமல் வேகமாக முன்னேறி, சந்நதி வாசலுக்கு வந்து விட்டோம். அதுவரைதான் அந்த ஐம்பது ரூபாய் சீட்டும் செல்லும். சன்னதிக்கு உள்ளேயும் நான்கு சுற்று வைத்திருந்தார்கள். கொரோனா பயங்கள் இல்லாமல்
நெருக்கமாய் நெரிசலாய் நின்று
கோவிந்தா கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பக்தர்கள். 'அவன் தாள் வணங்கி, அவன் மேலே பாரத்தைப் போட்டு' நாங்களும் அதில் ஐக்கியமானோம்.
ஒப்பிலியப்பனைப் பார்த்து மகிழ்ந்து வெளியே வந்தோம். இங்கும் பிரகாரங்கள் சுற்ற அனுமதி இல்லை. பத்து லட்டு வாங்கி ஏமாறினோம். கிராமத்து லாலா கடையில் செய்தது போல இருந்த அந்த லட்டை அதை விற்கும் இடத்தில் டோக்கன் வழங்கி கொண்டிருந்த பெண்மணி "இன்று என்ன லட்டு இவ்வளவு சூப்பராய் இருக்கு... நானே எதிர்பார்க்கலை" என்று ப்ரமோட் செய்து கொண்டிருந்தார்.
பூமா கொலுசு அணிந்திருந்தாள். சென்ற முறைக்கு இந்தமுறை கொஞ்சம் இளைத்திருந்த மாதிரி பட்டது. கோபம் குறைந்திருந்தாள். பத்து பத்து ரூபாய்க்கு ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டோம். ரூபாய்களை தும்பிக்கையை மடக்கி ஏற்பட்ட அகலமான போர்ஷனில் மொத்தமாய் குவித்து வைத்து பாகன் எடுத்துக் கொள்ளக் காத்திருந்தாள். ஆடிக் கொண்டே இருந்தாள். விஜயகாந்த் மாதிரி அருகிலிருந்த சிறு சுவரில் ஒரு கால் வைத்து எம்பித் திரும்பினாள். தும்பிக்கையை இரண்டாய் மூன்றாய் மடித்து விளையாடினாள். தந்தத்தில் ஒரு பழத்தை சொருகி வைத்திருந்தாள். சற்று இடைவெளி கிடைத்ததும் அதை எடுத்து சாப்பிட்டாள்.
இங்கேயே மணி பனிரெண்டைத் தாண்டிவிட, குலதெய்வம் கோவிலிலிருந்து அழைப்பு மேல் அழைப்பு. அங்கு எங்களுக்காக காத்திருந்தவர்கள் பொறுமை இழந்திருந்தார்கள். ஆனாலும் சாஸ்தாவுக்கு உச்சிகால பூஜைதான் சிறந்ததது என்பதால் நாங்கள் பனிரெண்டு மணி சுமாருக்குதான் அங்கு செல்வதாக ஏற்கெனவே தீர்மானித்திருந்தோம்.
மழை பெய்வது தெரிகிறதா? என் காமிராவில் சரியாக இல்லை என்று இளையவன் எடுத்த் புகைப்படங்களை இங்கு கடன் வாங்கி இருக்கிறேன். பெரியவனும் கேமிராவில் எடுத்திருக்கிறான்.
வீரனுக்குப் பின்னே நாங்கள் வந்த வண்டியும், உள்ளூர் நண்பரின் ஷேர் ஆட்டோவும்!
பச்சை வெயில் மனது...! வெயில், உடனே மழை, உடனே வெயில் என விளையாட்டுக் காட்டிய நேரம்...
கோவிலிலிருந்து உள்ளே செல்லும் பாதை...
அய்யரும், பூசாரியும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். இதுவரை நாங்கள் பார்த்தே இராத எங்கள் தாயாதிக்காரர்கள் சிலரும் காத்திருந்தார்கள். அவர்களும் அந்தக் கோவில் குலதெய்வம் பாத்தியதை உடையவர்கள். அவர்களும் எங்களை இப்போதுதான் பார்க்கிறார்களாம். எங்கள் அப்பா அம்மாவை பார்த்ததே இல்லையாம்! என்ன உறவோ... என்ன பிரிவோ... என்று மனதுக்குள் பாடல் ஓடிற்று!
அந்தக் கோவிலுக்குள் நாங்கள் நுழைந்த கணம் மழை பேய்க்காட்டு காட்டியது. மேலே உள்ள அஸ்பெஸ்டாஸ் கூரை சத்தம் கொடுத்து மத்தளம் வாசித்து வரவேற்பு நல்கியது. நடுவில் சற்றே நின்ற அதே மழை, மறுபடி அண்ணன் மகன் கல்யாணப் பத்திரிகையை எடுத்து அய்யரிடம் கொடுத்து அய்யனார் காலடியில் வைக்கச்சொல்லும்போது மறுபடி கெட்டிமேளம் வாசித்தது மழை.
அபிஷேக ஆராதனை முடிந்தபோது மணி நான்கு. சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், மாவிளக்கு மாவு சாப்பிட்டுக் கிளம்பியபோது மணி ஆறு. நாச்சியார்கோவில் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. திருச்சேறை சாரங்கநாதர்(தானே) கோவில் பார்க்கும் ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. நடுவில் விருத்தாசலத்தில் இரவு உணவு முடித்து வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு ஒன்று.
குடந்தையில் காலை வெங்கட்ரமணா ஹோட்டலில் காஃபி சாப்பிட்டோம். பச்சையாகச் சொல்லவேண்டுமென்றால் ஸஹிக்கவில்லை. மாலை கிளம்பி வரும்வழியில் குடந்தையில் 'அன்னபூர்ணா' ஹோட்டல் ரொம்ப ஃபேமஸ் என்று சொல்லி உள்ளேபோனால் ஸ்டார்ட்டர் வகையறாக்களே இல்லை. பஜ்ஜி, போண்டா இருக்காதோ... இன்னமும் மீல்ஸ் ஓடிக்கொண்டிருக்க, டிபனும் இல்லை. டிபன் அப்போது சாப்பிடும் வயிற்றிலும் நாங்களும் இல்லை. நாங்கள் எதிர்பார்த்த காஃபி கிடைக்கவில்லை. கொரோனா சமயத்தில் பட்ட கஷ்ட நஷ்டங்களை பற்றிச் சொல்லி கண்கலங்கினார்கள். எனவே இன்னும் அவற்றை ஆரம்பிக்கவில்லையாம். இப்போது கோவில்கள் எல்லாம் திறந்து விட்டார்கள் என்பதால் சீக்கிரம் ஆரம்பித்து விடுவார்களாம். அதுவரை எல்லாம் நம்மால் காத்திருக்க முடியாதே! எனவே இன்னும் சில இடங்கள் காஃபிக்காக அலைந்து பார்த்து வீட்டுக் கிளம்பினோம். வழியிலும் ஏமாற்றம். கும்பகோணம் டிகிரி காஃபி, அங்கே காஃபி நல்லாயிருக்கும், காஃபின்னா அது காஃபி, ஆவாக்கும் ஊவாக்கும் தஸ்ஸாக்கும் புஸ்ஸாக்கும் என்றெல்லாம் பந்தா இருக்க, அங்கு நல்ல பில்டர் காஃபி கிடைக்காதது சோகம் என்றால், விருத்தாசலத்தில் வசந்தபவனில் நாங்கள் சாப்பிட்ட (குடித்த) காஃபி A 1. மறக்கவே முடியவில்லை. இந்த இடத்தில்தான் 'வாத்தியார் பிள்ளை மக்கு' சொலவடை ஞாபகத்துக்கு வருகிறது! (தலைப்பு வந்து விட்டதா?!) அதுபோல வசந்தபவனில் வெந்நீர் கேட்டோம். எடுத்துச் சென்ற பல வெந்நீர் பாத்திரங்களும் காலி. எனவே பிளாஸ்க்கிலும் வெந்நீர் ஊற்றித் தரும்படி கேட்டோம். விளாவாமல் அப்படியே தந்தது தவறே தவிர, சீரகம் எல்லாம் போட்டுக் கொதிக்க வைத்து அமர்க்களமாக இருந்தது வெந்நீர்.
இப்படியாகத்தானே எங்கள் ஒருநாள் கோவில் சுற்று நல்லபடியாக முடிந்தது!
செவ்வாய் அன்று திருத்தணி செல்லும் வாய்ப்பு கிட்டியது. இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். மலையின் மீது முருகன் அழகான கோலத்தில் இருந்த காட்சி தரிசனம் கிடைத்த்து. அதுவும் ஒரு சிபாரிசில் அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு!
'திருச்செந்தூரில் போர்புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்' பாடலும் 'திருத்தணிகை வாழும் முருகா' பாடலும் நினைவுக்கு வந்தன.
நாங்கள் சென்றிருந்த நண்பரின் வீட்டிலிருந்து கோவில் கோபுரம்.
இந்த கோபுரம் சமீபத்தில் கட்டப்பட்டதாம். சமீபத்தில் என்றால் எவ்வளவு சமீபம் என்று தெரியவில்லை. ஆனால்...
இந்த கோபுரம் அமைந்திருக்கும் இடமும் அழகும் இதை மறுபடி மறுபடி புகைப்படம் எடுக்கத் தூண்டின.
கோவிலில் வெளியேதான் ஓரளவு புகைப்படம் எடுக்க முடியும். உள்ளே செல், கேமிரா அனுமதி இல்லை.
மிகவும் விஸ்ராந்தியாக உட்கார்ந்திருந்த நண்பருடன் பின்னணியை படம் எடுத்தேன்....
தண்ணீர் குடிக்க வந்தாரே என்று செல் கேமிராவை போகஸ் செய்தேன்...
அந்தக் குழாயை அமுக்கி தண்ணீர் குடித்தவர், நான் படம் எடுப்பதை கவனித்து, தண்ணீர் குடிப்பதை நிறுத்தி என்னை கவனித்தார்.
நானும் கவனிக்காதது போல நின்றதும் மறுபடி கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.அதை அமுக்கினால் தண்ணீர் வரும் என்ற அளவு தெரிந்திருக்கிறது...
மறுபடியும்...
ஏறி உட்கார்ந்திருக்கும் இடம் எது? உயரம் என்ன? இதில் உட்கார்ந்து கையை இதில் வைத்துக் கொண்டு ஒய்யார போஸ்?!!
நடுவில் அந்த வொயரை வேறு கடித்தார். என்னவோ ஆழ்ந்த சிந்தனை... என்ன கவலையோ...
சுற்று வட்டப்பாதையில்...
சுற்றி வரும்போது தெரியும் பாதிமலை!
இங்கு இறங்கிச் சென்றால் அந்த அழகிய கோபுர வாசலை அடையலாம்.
மொத்தத்தில் காசு காசு என்று அலையும் இடம். காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். அருகில் இருந்து தரிசிக்கலாம். திருச்செந்தூரையும் சிலர் இதேபோல சொன்னார்கள்.காசுகொடுத்தால் விபூதி பாக்கெட் பாக்கெட்டாக கிடைக்கும்! இல்லாவிட்டால் அலட்சியமாக ஒரு சுண்டு கைகளில் விழும்!
=====================================================================================================================
புதுமைப்பிததன் பெரிய நாவல்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. அவற்றின் கதைக்கரு பற்றிக்கூட நண்பர்களிடம் பேச்சோடு பேச்சாக சொன்னது உண்டு. ஒரு நாவலுக்கு 'மூக்கபிள்ளை' என்று கூட அவர் பெயர் வைத்தார். ஆயினும் அவற்றில் எதையும் அவர் எழுதியதில்லை.
வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர் கவிதையிலிருந்து சில... கவிதைகள் வாசித்திருக்கிறீர்களா? மாதிரிக்கு ஒன்றிரண்டு...
பண்ணமைந்த காதல்
பரமபதம் கிடைக்கப்
பதைக்கின்றேன்.
ஆனாலும்,
பாங்கியிலே கொஞ்சம்
பணம் ஏதும் வேண்டாமா?
காதல் பெரிது -
அதுதான் எனக்கும் தெரிகிறது
காசு பெரிதென்பதை நீ
கருத்திலேன் கொள்ளவில்லை?
காசு இல்லாமல் என்ன
கதை நடக்கும்?
ஆற்றங்கரை யருகே அணிவயல்கள் உண்டு
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது
கும்பிடுவார், குழைவார், கூத்தாடப் பல்லிளிப்பார்
வம்பிடுவார் பின்னால் வழக்கிடுவார் - அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாக பண்ணி வச்சேன்
என்னமோ காணாமல் போச்சு
பண் என்பார் பாவம் என்பார் பண்பு மர பென்றிடுவார்
கண்ணைச் சொருகி கவி என்பார் - அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?
செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பாவநிவார
உவப்புடன் நீயிருந்து
முத்தமிழை -
பாலித்து, பயிராக்கி
பசிய உயிர்தான் தோன்ற
வளர்ந்து வரும் வார்த்தை
நிசந்தானோ?
சத்தியமாய்க் கேட்கிறேன்
சரஸ்வதியே நிசந்தானோ?
ஆமாம், யார் இந்த வேளூர் கந்தசாமிக் கவிராயர்? கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் எழுதிய அதே புதுமைப்பித்தன்தான்!
============================================================================================
இப்போ இல்லீங்க... 2016 ஆம் வருஷ 'குமுத கிசுகிசு..'
இவர் எப்பவுமே சுவாரஸ்யம்தான்...
====================================================================================================
பொக்கிஷம்...
வல்லவனுக்கு....
படிக்க முடிகிறதா? பைண்டிங்கில் பக்கங்கள் சேதப்பட்டிருப்பதால் பேட்டி தெரியவில்லை. யாரோ ப்ரபலம் போலும்!
தெரிந்துகொள்ளவே வேண்டிய, அறிந்துள்ளளவேண்டிய முக்கிய செய்தியாக்கும்!
மதன், வாணி கோபுலுன்னு அவங்க ஜோக்கேதான் போடணுமா என்ன!
டிக்கெட் போட மறந்துட்டாங்க போல...!
ஒரே உண்டியலா வச்சு பிரிச்சுகிட்டா சந்தேகம் வராது இல்லை?
சரியாத்தானே சொல்றான்? மார்க் போட்டுடுங்க சார்!
இனிய காலை வணக்கம். ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.
பதிலளிநீக்கு// அவர் என்ன செய்தார், அமைச்சரை சிலர் மூலம் வற்புறுத்தி, முதல்வரிடம் சொல்லச் செய்து சர்ர்ர்ரியாக நாங்கள் புறப்படும் நேரம் கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கச்செய்து விட்டார்!//
ஹாஹாஹா உங்க அப்ளிக்கேஷன் கரெக்டான நேரத்துல ரீச் ஆகியிருக்கு போல...!!!
கீதா
அட! இன்று நான் முந்திக் கொண்டேனா...!!!!!!
நீக்குகீதா
வாங்க கீதா... வணக்கம். ரசித்ததற்கு நன்றி!
நீக்குஆம் நீங்கள்தான் முதல்!
அனைவருக்கும் அன்பு கீதாவுக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் நல்ல ஆரோக்கியம், அமைதியுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஅம்மா இனிய மாலை வணக்கம்
நீக்குகீதா
ஏமாந்து வாங்கிச் செல்லும் மாலைகள், உதிரிப்பூக்கள் உள்ளே நுழையுமிடத்தே ஒரு பெரிய மேசையில் வைக்கப்படுகின்றன. அவை, அங்குதான் இருக்குமா, மறுபடி கடையை அடையுமா என்பது தந்தைக்கு மந்திரத்தை காதில் பொருளுரைத்த முந்துகவி சக்தி மகன் முருகனுக்கே வெளிச்சம்!//
பதிலளிநீக்குஹாஹாஹா ரசித்தேன் முருகனைச் சொன்னதை.
ஆனால் இது இப்போது என்றில்லை முன்பும் கூட அதாவது மேசையில் வைக்கப்படாமல் உள்ளே கொண்டு சென்றால் கூட இப்படி நடப்பதுண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.
வாங்கிக் கொடுத்தபின் யோசிக்கக் கூடாது! ஹிஹிஹி...
கீதா
அதுவும் சரிதான். முருகன் (கடவுள்) சன்னதியிலும் இருப்பார், மேஜையிலும் இருப்பார். கடையிலும் இருப்பார்!
நீக்குஇதெல்லாம் ஒண்ணுமே இல்லை. சில கோயில்களில் கர்பகிரஹம் வரை எடுத்துச் சென்றாலும் நம் கைகளில் இருந்து வாங்கி அருகே இருக்கும் தொட்டியில் அலட்சியமாக வீசி எறிவார்கள் பாருங்க. மனசே பதறும். சுவாமிக்குச் சேரவேண்டியதே என்று பதைக்கும் மனசு.
நீக்குஆமாம். மிகவும் வருந்த வைக்கும் நிகழ்வுகள் நிறைய உண்டு. அலட்சியம், அகந்தை நிறைய காணப்பட்டன. கடவுளுக்கு மதிப்பில்லை, காசுக்குதான்.
நீக்குமீன்கள் படம் அழகு. ஆமாம் ரொம்ப ரசிக்கலாம் நேரம் போவதே தெரியாது. எங்கள் ஊர் குளத்தில் விளையாடிய நினைவுகள் வந்தது.
பதிலளிநீக்குஎங்கள் ஊரில் சிலர் சேவை நாழி, சாதம் வடித்த பாத்திரம் இடியாப்ப அச்சு எல்லாம் குளத்தில் முதல் படியில் வைத்துவிடுவார்கள். மீன்கள் நன்றாக சுத்தம் செய்திருக்கும்!!!! அப்புறம் தேய்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
குளத்தில் இறங்கினால் நம் கால்களைக் கூடக் கிச்சு கிச்சு மூட்டிச் செல்லும். புண் இருந்தால் அதைக் கொத்தும். இல்லை ஊசி போடுவது போல் இருக்கும்.
க்ளீன் செய்கிறது என்று சொல்லுவாங்க..அது தெரியவில்லை ஆனால் புண் ஆறிவிடும்.
கீதா
இங்கு கடைசி படியில் கால் வைத்தால் கடவுளைக் காணலாம் நிலைமை! ஒரே பாசி... வழுக்கி விட்டால் போச்!
நீக்குகுளத்துப் படங்கள் அட்டகாசம்.ஸ்ரீராம்
பதிலளிநீக்குஇனி பின்னர்..
கீதா
நன்றி கீதா... எடுத்த படங்களில் ஒன்றிரண்டையே வெளியிட்டேன்.
நீக்குஏ....அப்பாடி.. என்ன ஒரு பெரிய பதிவு!!!
பதிலளிநீக்கு15 நிமிடங்கள் ஆகி இருக்கு ஸ்ரீராம்:)
கோவில் உலா, நகைச்சுவை உலா, கவிதை உலா,குரங்கார் உலா,மீன்கள் உலா என்று
எல்லாமே சூப்பர்.
ஓ.. ஸாரி அம்மா.. சாதாரணமா ரெண்டு பாகமா பிரிச்சுக் கொடுப்பேன். உங்களுக்கும் சௌகர்யம். எனக்கும் இன்னொரு வியாழன்!
நீக்குஸாரி எல்லாம் வேண்டாம். ஓ...சாரி வேண்டும் .தீபாவளி வருகிறதே,
நீக்குஉங்கள் எல்லா அலுவலகல்களுக்கும் இடையே
இத்தனை மெனக்கெட்டு பதிவு செய்திருக்கிறீர்களே என்ற ஒரு ஆச்சரியம் தானே.!!
கோவில்கள் படங்கள் நானே சென்று வந்த உணர்வு.
நீக்குமுக்கால் நாளில் இவ்வளவு செல்ல முடிந்ததே அதிசயம்.
துளசி மாலைகளும் பூக்களும் உள்ளே போய் வெளியே வருவது நின்று விட்டது என்று நினைத்தேன். ஆமாம் எல்லா இடங்களிலும் அவரே இருக்கிறார்.
கும்பகோணம் காப்பி குடித்து வயிறு அப்செட் ஆனதுதான் மிச்சம். அன்று நம் கீதா
நீக்குதயிர் சாதம் கொடுத்து காப்பாற்றினார்கள்
ஸ்ரீரங்கத்தில்.
//இத்தனை மெனக்கெட்டு பதிவு செய்திருக்கிறீர்களே//
நீக்குஇருந்தாலும் பதிவு நீளம் என்பதை எப்படி கவனிக்க மறந்தேன் என்று தெரியவில்லை. படிப்பவர்கள் பாவம்! இனி இப்படி நிகழா வண்ணம் கவனமாக இருக்கிறேன்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா வாங்க..
நீக்குஅனைவருக்கும் வணக்கம்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஒரே நாளில் பயணம் செய்த கதை அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. மீன்களை முகநூலிலும் பார்த்தேனோ? நினைவில் இல்லை. வெங்கட்ரமணா ஓட்டலில் முன்னெல்லாம் காஃபி நன்றாக இருக்கும். இப்போ நல்லா இல்லை போல. நாங்கள் அங்கே போயே பல வருஷங்கள் ஆகிவிட்டன. :) காஃபி முதற்கொண்டு வீட்டில் இருந்தே எடுத்துட்டுப் போயிடறதாலே இப்போல்லாம் வெங்கட்ரமணா ஓட்டல் பக்கமே போறதில்லை.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம். குடந்தையில் பழைய ஹோட்டல்களெல்லாம் பெயரிழந்து போயின!
நீக்குஎல்லாக் கோயில்களிலும் நிறைவான தரிசனம் கிடைச்சிருக்குப் போல. கோபுரங்கள் மேகங்களின் பின்னணியில் அருமை. இங்கே நான் தினம் தினம் பார்த்து வருகிறேன். அதிலும் கருமேகங்களின் பின்னணியில் தெரியும் தெற்கு கோபுரம்! கவிதை!
பதிலளிநீக்குஆமாம். அது எப்பவுமே கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் காட்சி.
நீக்குமுதல் கிசுகிசு யாருனு தெரியுமே! :)))))
பதிலளிநீக்குகிரேசி எப்போவுமே கிரேசி தான்.
மருத்துவரின் திறமை வியக்க வைத்தது.
என்னால் படிக்க முடியலை. ஆனால் நாகேஷ் என்பதும் நீர்க்குழிழி படம் என்பதும் புரிந்தது.
அது கிசுகிசுலயே சேர்த்தி இல்லாத அளவு பிரபல விஷயம்!!!
நீக்குக்ரேஸியின் இழப்பு வாசகர்களுக்கு நஷ்டம். நாகேஷ் பேட்டியை நான் டைப் செய்திருக்க வேண்டுமோ?!
ஜோக்குகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஇவர்களும் அப்போது நிறைய ஜோக்குகள் எழுதி வந்தவர்களே...
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகும்பகோணத்துக்கு முக்கால் நாள் பிரயாணம் போக ரொம்பவே தில்லு வேணும். தொட்டுத் தொட்டு இந்தக் கோவில் அந்தக் கோவில் என்று குறைந்தது நான்கு நாட்களாவது இருக்க வேண்டாமோ?
நாங்க ஒவ்வொரு முறை ஒரு வாரம், நான்கு நாட்கள் எனத் தங்கிப் பல கோயில்களையும் பார்த்திருக்கோம். அது ஒரு காலம்! :(
நீக்குகுலதெய்வம் கோவில்தான் இலக்கு. ஏனெனில் அங்கு சென்று இரண்டு வருடங்களாகி விட்டன என்பது ஒரு காரணம், இன்னொன்று அண்ணன் மகன் கல்யாணப்பத்திரிகை அவர் காலடியில் வைக்கும் நோக்கம். எங்கள் வேண்டுதல் பலித்து மற்ற கோவில்கள் திறந்தது குலதெய்வம், மற்றும் முருகன் அருள். மற்றபடி குடந்தை கோவில்கள் பார்க்க ஓரிரு நாட்கள் போதாது என்பதை நானும் அறிவேன்.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஇரண்டு மூன்று பதிவாக போட வேண்டியதை ஒரே பதிவாக போட்டு விட்டீர்கள்.
//அண்ணன் மகன் கல்யாணப் பத்திரிகையை எடுத்து அய்யரிடம் கொடுத்து அய்யனார் காலடியில் வைக்கச்சொல்லும்போது மறுபடி கெட்டிமேளம் வாசித்தது மழை.//
அருமை.
அண்ணன் மகனுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
திருத்தணி கோபுரம் எனக்கு புதிதாக தெரிகிறது. நான் போய் பல வருடங்கள் ஆகிறது.
படங்கள் எல்லாம் முகநூலில் பார்த்தேன்.
//இரண்டு மூன்று பதிவாக போட வேண்டியதை ஒரே பதிவாக போட்டு விட்டீர்கள்.//
நீக்குஆமாம் கோமதி அக்கா... எனக்கும் நஷ்டம்; உங்களுக்கெல்லாமும் கஷ்டம்!
ஆம், அந்தத் திருத்தணி கோபுரம் சமீபத்தில் எப்போதோ கட்டியதாம்.
கும்பகோணத்திற்குச் சென்று தரிசித்த தலங்கள் மனக்கண்ணில் வந்துபோகின்றன
பதிலளிநீக்குசென்னையில் இருக்கும் உங்களுக்கு, 15-20 புராதானத் தலங்களை அருகருகே சேவிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? ஆபீஸ் வேலை, லீவு என்பதெல்லாம் கடலின் அலைகளைப் போல் அல்லவா?
அதேதான் நெல்லை. கிடைத்த விடுப்பில் மேக்சிமம் கவரேஜ். திருச்சேறை கோவில் இந்த முறையும் மிஸ் ஆனது வருத்தம். நாச்சியார் கோவில் பார்க்க முடியாததும் வருத்தம். வல்லிம்மா கூட நாச்சியார் கோவில் போய்வாருங்கள் என்று சொல்லியிருந்தார்.
நீக்குபரவாயில்லைப்பா.
நீக்குநினைத்ததை நிறைவேற்றியதே போதும்.
இன்னோரு தடவை போனால் ஆகிறது. கோவில்கள் பெரியவை.
போய் வந்தாலே காலை வலிக்கும்.
கிடைத்த வரைக்கும் லாபம்.
மணமக்களோடு போய் வரலாம்.
கோயில், குளம் ,படிக்கட்டுகள்....அனைத்தும் மிக மிக அழகு நன்றி ஸ்ரீராம்.
நீக்குநன்றி அம்மா. லீவு கிடைக்கும் கஷ்டத்தில் எப்படி சென்றுவரப்போகிறோமோ.. திருமணம் முடிந்ததும் மணமக்கள் குலதெய்வம் கோவில் சென்று வரவேண்டும்தான். அண்ணனை மட்டும் கூட அனுப்பிவிடலாமான்னு பார்க்கிறேன்! :))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க..
நீக்குகோவில் பிரசாத ஸ்டால்களில் கான்ட்டிராக்டர்கள் தயாரிப்பது எதுவுமே நன்றாக இருக்காது.
பதிலளிநீக்குசொல்வது தவறு... உப்பிலியப்ன் கோவிலில் இரவு பெருமாளை சயனிக்கச் செய்துவிட்டுத் தந்த பிரசாதமும் ருசிக் குறைவாகப் பட்டது. அதே சமயம் திருச்சேறை பிரசாதங்கள் அருமையாக இருக்கும்.
கும்பகோணத்தில் பார்க்கவேண்டிய கோவில்கள், நேரத்திற்குத் தகுந்தவாறு எப்படித் திட்டமிடலாம்னு நல்லாவே நான் சொல்லுவேன்.
ஒப்பில்லா அப்பன் கோயிலில் இரவு நேரத்தில் கொடுத்தது மடப்பள்ளியிலிருந்து நேரே சந்நிதிக்கு வந்திருக்கும். ஸ்டால்களில் அப்படி இல்லை.
நீக்குஒப்பிலியப்பன் கோவிலில் சென்ற வருடமெல்லாம் நுழையுமிடத்திலேயே பிரசாத ஸ்டால் இருக்கும். ஒரிஜினலாகவும் இருக்கும். ஆனால் இது சந்நதியிலிருந்து வெளியே வரும் வழியில் புஷ்காரனி அருகே அவசரகால அக்கடையாய் டேபிள் சேர் போட்டு அமர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நீக்குஅந்தப் பிரசாதம் மடப்பள்ளியிலிருந்து வந்ததுதான். (அது கல்கருட சேவை தினம்). நாச்சியார் கோவிலில் இலவச உணவு, திருச்சேறை பிரசாதம்லாம் சாப்பிட்ட நாக்குக்கு, பிரசாத்த்தை எப்படிக் கொண்டாடணும் எனத் தெரியாமல் போனதால் எழுந்த எண்ணம் அது.
நீக்குஉப்பில்லா புளியோதரை உண்மையைச் சொல்லும்!
நீக்குகுளங்களும் மீன் களும் அட்டகாசம்.
பதிலளிநீக்குஎல்லாக் கோவில்களிலும் குளத்தைப் பார்ப்பதோடு. படி இறங்கிப் போனதே இல்லை.
அந்த ஆழ் பச்சை நிறம்
நம்மை உள்ளே இழுப்பது போலத் தெரியும்.
கடல்லயிருந்தால் பயமே இல்லை:)
ஆமாம் அம்மா. பார்க்கப் பார்க்க அலுக்காத இடம். என்னுடன் வந்தவர்கள் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு கிளம்ப மறுத்தார்கள்! பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பினேன்.
நீக்குஒப்பிலியப்பன் கோவில் எதிரே உள்ள சந்தில் ஒரு ஹோட்டலில் (கோவிலைப் கார்த்து நின்றால் வலதுபுறம்), கும்பகோணத்தில் இனியா காபி கடை போன்றவற்றில் காபி நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குசுவாமிமலை அருகில் (ரொம்ப கிட்டக்க) நாதன் கொவில் என பல கோவில்கள் இருக்கின்றன. ஆண்டளக்கும் ஐயனைத் தரிசித்திருக்கலாம்....
நிறைய பழைய கடைகள் இப்போது இல்லை நெல்லை. கொரோனா காலத்தில் நஷ்டம் தாங்காமல் மூடி விட்டார்களாம்.
நீக்குகாலையில் கோவில்களின் கோபுர தரிசனம் இதமாக இருந்தது
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும், வாசனுக்கும் ஒரே சமயத்தில் பொருந்தக்கூடிய கிசுகிசுவை எழுத குமுத்த்தினால் மட்டும் முடியும்.
பதிலளிநீக்குஇதில் அப்பாவிகள் நடிகைகள்தாம். பலரைப் பற்றியும் இது அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என மனதில் வந்து செல்லும்
ஹா.. ஹா.. ஹா... ஆனால் வாசனுமா? ஆட்டோ சங்கர் அவர் அப்பாவைப் பற்றி மட்டும்தானே குறிப்பிட்டிருந்தார்!
நீக்குமூன்றெழுத்து நடிகை என்று போடுவார்கள். மூன்றெழுத்தில் முப்பது நடிகைகள் இருப்பார்கள்!
புதுமைப்பித்தனை விட்டுட்டேனோ? இந்தக் கவிதைகளை மணிக்கொடி பதிப்புக்களின் பைன்டிங்கில் படிச்ச மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குஅது தெரியவில்லை. மணிக்கொடி பைண்டிங் வைத்திருக்கிறீர்களா? அட... ஒரிஜினல்?
நீக்குஎன்னிடம் இருந்தால் அதிலிருந்து பகிர்வேனே அடிக்கடி! ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகம் தான். அங்கே அநேகமாகஎல்லாப்புத்தகங்களும் கிடைத்தன. நல்ல தீனி ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு! சி.சு.செல்லப்பா அவர்களின் "சுதந்திர தாகம்" சீனி.விஸ்வநாதனின் பாரதி பற்றிய தொகுப்புக்கள் என எல்லாமும் அங்கே எடுத்துப் படித்தேன். இல்லை, இல்லை, மறந்துட்டேனே! சீனி.விஸ்வநாதனை அங்கேயே உட்கார்ந்து படிக்கணும்/குறிப்புகள் எடுத்துக்கலாம் என்றார்கள். என்னால் எத்தனை நேரம் உட்கார முடியும். அப்படியும், இப்படியுமாகப்பார்த்துவிட்டு வருவேன். :(
நீக்கும்ம்ம்... பிடிஎப்பாக கிடைக்கிறதா என்று தேடலாம்!
நீக்குமுதல் கிசுகிசு ஹீஹீ. ஊரறிந்த உண்மை!!!
பதிலளிநீக்குக்ரேசி சிரிக்க வைத்துப் போனார்.
:)))
நீக்கு__/\__
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் பதிவு அருமை. காலையில் எழுந்தவுடனே பல கோவில்களின் படங்களும் கோபுர தரிசனமுமாக நன்றாக உள்ளது. வீட்டிலிருந்தபடியே இன்று தந்தைக்கு உபதேசம் செய்த முருகனை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது.
படங்கள் ஒவ்வொன்றாக பெரிதாக்கி, பதிவையும் படித்து பார்த்து வந்தேன். அதற்குள் அனைவரின் கருத்துரைகள் வரிசை கட்டி விட்டன. இங்கு ஒரே கூட்டம்தான்.(அதுவும் இன்று..) ஹா. ஹா. ஹா. இன்னமும் முதலிலிருந்து மறுபடி ஒரு முறை சரியாக பார்க்க வேண்டும்.
"வாத்தியார் பிள்ளை மக்கு" என்ற தலைப்பு வாசகத்திற்கு பொருத்தமாக "இடம் சுட்டி பொருள் விளக்கம்" எழுதியதை ரசுத்தேன். மீதியை பார்த்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களை தனித்தனியே க்ளிக்கி ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா. பதிவின் நீளம் உங்கள் பொறுமையைச் சோதித்திருக்கும்!
நீக்கு"வாத்தியார் பிள்ளை மக்கு" என்பதெல்லாம் சொல்லத் தான் நன்றாக இருக்கிறது. உண்மையில் எங்க அப்பா பள்ளிக்கூட வாத்தியார் என்பதால் நாங்கல்லாம் நன்றாகப் படிச்சாலும் உங்க அப்பா சொல்லிக் கொடுத்திருப்பார்! எந்தக் கேள்வி கேட்பாங்கனு அவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே! என்பார்கள். அதிலும் ஹிந்திப் பாடம் எனில் கட்டாயமாகச் சொல்லுவாங்க. எங்க அப்பாவோ நேர்மாறாக எங்க படிப்பு விஷயத்தில் நாங்களே தான் படிச்சுக்கணும்னு சொல்லிடுவார். ஒரு டிக்ஷனரியோ, ஜியோமிதிக்கான பெட்டியோ, க்ராஃப் நோட்டோ வாங்கியே தர மாட்டார். "படிக்கணும்னா நீ என்ன வேணா பண்ணிக்கோ! இல்லைனா ஸ்கூலை விட்டு நின்னுடு!" என்று சொல்லி விடுவார்.
நீக்குநோ நோ நோ நோ ஃபீலிங்ஸ்... நான் சும்மா அந்த வார்த்தையை இங்கு உபயோகப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான்!
நீக்குhaahaahaahaahaa just nostalgic! :D
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன
தண்ணீர் குடிக்கும் குரங்கார் படங்கள் அழகு. மின்சார கம்பத்தில் பயமின்றி ஏறி என்ன யோசனையோ? "நம் இனமான இந்த மனிதர்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லையே... நமக்கெல்லாம் இது அன்றிலிருந்து தேவைபட்டதே இல்லையே...இன்றளவும் இந்த மின்சாரமின்றி நாம் வாழவில்லையா...? என யோசித்திருக்குமோ.?" படங்களை ரசித்தேன்.
குரங்காரின் செயல்கள் பார்க்க வேடிக்கையாக இருக்கும். உள்ளூற நாம் பயந்து கொண்டேதான் பார்ப்போம். நாங்கள் கீழ் திருப்பதி ஒரு சமயம் சென்ற போது, கோவிலின் வெளிப்புறத்தில், இப்படித்தான் குழாயை திறந்து ஒரு குரங்கார் அழகாக தண்ணீர் குடித்து விட்டுச் சென்றார். அது குழாயை மூட மறந்ததை பார்த்துக் கொண்டிருந்த அதன் மற்றொரு உறவு வந்து மூடி விட்டுச் சென்றார். மறுபடி முதலில் வந்தவர் மீண்டும் சுற்று முற்றும் பார்த்தபடி குழாயை திறந்து தண்ணீர் குடித்து விட்டு மூடாமலேயே சென்றார். மாறி மாறி இதை கொஞ்ச நேரம் செய்து கொண்டே இருந்தார்கள். என்னிடம் அப்போது படம் எடுக்கும் கைப்பேசி இல்லை. ரசித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் சொல்வதுபோல அவைகளுக்கும் நிறைய விவரங்கள் இருக்கின்றன. நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். படுத்துத் தூங்கி கொண்டிருக்கும் நாயின் காலை சீண்டி விட்டு ஒரு பூனை ஒளிந்து கொள்கிறது.
நீக்குஹா. ஹா. ஹா.மனிதர்கள் செய்வது போல் இவைகளும் குறும்புகள் செய்தால் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கும்.
நீக்குஇன்றைய பதிவு ஒரு நல்ல மிக்ஸர். பயணக்கட்டுரை, படங்கள், கவிதை, ஜோக்குகள், கிசுகிசு, கிரேஸிகேள்வி பதில், டாக்டர் சேவை துணுக்கு, நாகேஷ் காமெடி விவரிப்பு என்று கலவை நன்றாக இருந்தது. புதுமைப் பித்தன் மரபு கவிதையும் எழுவார் என்பது புது செய்தி.
பதிலளிநீக்குபால சாஸ்தா கோவில் எங்குள்ளது? கும்பகோணம் கோவில்களுக்கு செல்வதானால் குறைந்தது 3 நாட்கள் அங்கேயே தங்கி ஆற அமர தரிசிக்கவேண்டும். நவகிரக கோயில்களுக்கு செல்லவே 2 நாள் தேவைப்படும்.
Jayakumar
அடடே... பதிவின் நீளம் உங்களை பாதிக்கவில்லை போல...
நீக்குபாலசாஸ்தா கோவில் குடவாசல் தாண்டி வலதுபுறம் திரும்பினால் சேங்காலிபுரம் செல்லும் முன் வரும். ஏற்கெனவே சொல்லி இருப்பதுபோல குலதெய்வம் கோவிலை மையமாக வைத்து, கிடைத்த நேரத்தில் மற்ற கோவில்களும் பார்த்து வந்தோம்.
நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.
தண்ணீரில்/குளத்தில் தெரியும் கோபுரமும் சேர்த்து (இன்னும் சில வடிவங்களும்..மரங்கள் போன்றவை) எடுக்கும் படங்கள் அழகு அட்டகாசம்தான்...
பதிலளிநீக்குஉங்கள் படங்களும் அழகாக இருக்கின்றன ஸ்ரீராம்
கீதா
எடுத்த படங்களில் சிலவற்றைத்தான் வெளியிட்டேன். மற்றவற்றையும் வெளியிட மனம் ஆசைப்பட்டது!!!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீல வாகனங்களும், மேக கூட்டங்களுக்கு நடுவே தெரியும் கோபுர படங்களும், குளத்தின் மீன் படங்களும் அழகாக உள்ளது. முதலில் உங்கள் அண்ணன் மகனுக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள். அதை முதலில் சொல்லியிருக்க வேண்டும். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி கமலா அக்கா.. சொல்லி விடுகிறேன்.
நீக்குபூமா செல்லக் குட்டி செம க்யூட்!!
பதிலளிநீக்குஎன் செல்லக் குட்டி ஜல் ஜல் ஜல் சலங்கை ஆட்டக் காரி பூமா குட்டி உன் ஒரு காலின் கொலுசை எனக்குத் தருவியா? ஒட்டியாணமா போட்டுக் கொள்கிறேன்!! நான் என்னை இஞ்சி இடுப்பழகி என்று சொல்லி உன்னை நகைக்கிறேனோ என்று கோபித்துக் கொண்டுவிடாதே.
கீதா
பூமாவை இந்தக் கொஞ்சு கொஞ்சுகிறீர்கள். நேரில் கொஞ்சினால் மகிழ்ந்து போவாளோ என்னவோ... ஆனால் அதற்கும் காசு வசூலித்து விடுவாளாக்கும்!
நீக்குபத்து ரூபாய் தட்டில் போட்டால் இரண்டு சிட்டிகை விபூதி அதிகம் கிடைக்கும். அதற்குமேல் போட்டால் ஒரு பொட்டலம் விபூதி கையில் விழும்! //
பதிலளிநீக்குபெரும்பான்மை - கோயிலுக்கு கோயில் வாசற்படி!!!
அது சரி ரூபா போடலைனா ஒரு சிட்டிகை கூடக் கிடைக்காதே...இதை இப்படிக் கிடைப்பதை பிரசாதம் என்று சொல்லலாமா?
யாரங்கே இந்தக் கேள்வியை பொன்னான தட்டில்! எழுதி பட்டாடையால் போர்த்தி எபியின் புதன் கேள்வி பதில் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கவும்!!!!
கீதா
// கோயிலுக்கு கோயில் வாசற்படி!!! //
நீக்குஹா.. ஹா.. ஹா... கோயிலுக்கு கோயில் விபூதிப்பொட்டலம்!
அனைத்து படங்களும் விவரங்களும் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குபத்து லட்டு வாங்கி ஏமாறினோம். கிராமத்து லாலா கடையில் செய்தது போல இருந்த அந்த லட்டை அதை விற்கும் இடத்தில் டோக்கன் வழங்கி கொண்டிருந்த பெண்மணி "இன்று என்ன லட்டு இவ்வளவு சூப்பராய் இருக்கு... நானே எதிர்பார்க்கலை" என்று ப்ரமோட் செய்து கொண்டிருந்தார். //
பதிலளிநீக்குஹாஹாஹா ஸ்ரீராம் கோயில் பிரசாதம்னு ரூபாய்க்குக் கிடைப்பது பெரும்பாலும் டுபாக்கூர். பிசினஸ். இதை எப்படி கோயில் அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்?
அவர்கள் விற்கட்டும் அது அவர்கள் பிழைப்பு ஜீவாதாரம். ஆனால் கோயில் பிரசாத ஸ்டால் என்று சொல்லக் கூடாது இல்லையா...
கீதா
இந்தப் பிரசாத ஸ்டால்கள் அறநிலையத்துறையினரால் டென்டர் விடப்பட்டுக் கோரிக்கை விடுப்பவர்களில் தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள்.இதில் கமிஷன் வியாபாரமும் உண்டு. அதனால் தான் கோயில் அதிகாரிகள் இதை அனுமதித்துவிட்டு நேரே மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்கு அனுமதி மறுக்கின்றனர். ஶ்ரீரங்கத்தில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது 3, 4 வருஷங்களாக நிறுத்தச் சொல்லிவிட்டார்களாம். புது அதிகாரி வந்ததில் இருந்து. :(
நீக்குஎல்லாம் ஊழல்... எதிலும் வருமானம்... கடவுளையே கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..
நீக்குகோவில் வருமானத்தைப் பெருக்க என்னவெல்லாமோ செய்கிறார்கள்.
நீக்குசொன்னால் விரோதம். திருப்பதி கோவில் தரிசனம், முக்கிய பிரசாதங்கள் பல இடைத் தரகர்கள் மூலமாக்க் கிடைக்கின்றன. உபயோகிப்பாளர்கள் இருக்கும்போது தவறுகளை அதிகாரிகள் களைவது கடினம்.
நமக்கு தலைவர்கள் (அரசியல்) தெய்வம் மாதிரி. கூடவே இருப்பவர்களுக்கு அந்த உணர்வு இருக்காது... கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு அவர் பெயரைச் சொல்லி பணம் சேர்ப்பார்கள்.
உள்ளே இருப்பவர்களுக்கு பக்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பதாகத் தெரியவில்லை! சிறு கோவில்களில் இந்தக் குறை இருக்காது. அங்கிருக்கும் பட்டர்கள் உணர்வுபூர்வமாக, பக்தியுடனே செய்வார்கள்.
நீக்குஏன் பிராகாரம் சுற்ற அனுமதியில்லை? பார்க்கப்போனால் சன்னதியை விட இங்கு சோசியல் டிஸ்டன்ஸ் அதிகம்தானே. என்ன ரூல் என்று புரியவில்லை
பதிலளிநீக்குகீதா
உண்மைதான். ஆனால் இவர்கள் செயல்களை யார் கேட்பது? என்ன அர்த்தத்தில் செய்கிறார்களோ!
நீக்குகும்பகோணம் பூமா, ஸ்ரீரங்கம் ஆண்டாள்
நீக்குஇருவரும் எப்போதுமே ஸ்பெஷல். இருவர் காலிலும்
வலி இருப்பதை நம்மால் உணர முடியும்.
யானைகள் கோவிலில் இருப்பதால் மட்டும் நல்ல சாப்பாடு
கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
உண்மைதான். ஆனால் நல்ல வசூல் கிடைக்கும்! ஆண்டாள் பாகனுடன் ரொம்பவே ப்ரெண்ட்லி!
நீக்குபூமா செல்லக் குட்டியை வர்ணித்ததை ரசித்தேன்.
பதிலளிநீக்குமெலிந்திருக்கிறாளா!!!!!!? கொரோனா காலத்துல சரியா சாப்பாடு கிடைக்கலையோ?
ஆடிக் கொண்டே இருந்தாள். விஜயகாந்த் மாதிரி அருகிலிருந்த சிறு சுவரில் ஒரு கால் வைத்து எம்பித் திரும்பினாள். //
ஹாஹாஹாஹா...நினைத்துப் பார்த்து சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்
கீதா
ஜாகிங், ஜிம் எல்லாம் போறாளோ என்னவோ!!
நீக்குகோவில்களுக்குச் சென்று வந்த அனுபவங்கள் சிறப்பு. பூமா - ஆஹா.... எப்போதும் ரசிக்க முடியும் விஷயங்களில் ஒன்று யானையும்!
பதிலளிநீக்குமற்ற துணுக்குகளும் நன்று.
உங்கள் அண்ணா மகன் திருமணம் நல்ல படியாக நடக்க வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குபூமா பற்றி போட்ட பின்னூட்டம் காணவில்லையே!
பதிலளிநீக்குபூமாவை படம் எடுக்க அனுமதி கொடுது இருக்கிறார் பாகன், சிலர் படம் எடுக்க அனுமதிக்கமாட்டார்.
பூமாவின் ஆட்டத்தை காணொளி எடுத்து இருக்கலாம்.
பயமே இல்லாத நண்பர் செய்யும் குறும்புகள் அருமை.
தண்ணீர் திறந்து குடிக்க தெரியும், இது போல பாட்டில் மூடியை கழற்றி தண்ணீர் குடிக்க தெரியும்.
அப்படியா? ஸ்பாமில் கூட இல்லையே... ஆம், காணொளி எடுத்திருக்கலாம். சென்றமுறை செல்லுடன் பூமா எதிரே நின்ற உடன் அவள் உடல்மொழியே மாறி கோபத்தை வெளிப்படுத்துவது போலிருந்தது. எனவே இந்தமுறையும் தோன்றவில்லை!
நீக்குவழக்கம் போல் வியாழன் செய்திகளும், நகைச்சுவையும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஇந்திய சுற்றுலாக்களில் தவறவிட்ட கோவில்கள் கண்டுகொண்டதில் மகிழ்கிறேன்.
பதிலளிநீக்குஜோக்ஸ் வாய்விட்டுச் சிரித்தேன் செம.
தெய்வ தரிசனம் நல்ல படியாக நிகழ்ந்தது.. மகிழ்ச்சி..
பதிலளிநீக்குஒருவழியாக நான் எழுதியது நூறாவது கருத்தாகி விட்டது..
நீக்குநிறைய செய்திகள்.. ஒவ்வொன்றையும் சொல்லி எழுதுவதற்கு இயலவில்லை..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்களை இன்னமும் பார்த்து ரசிக்கிறேன். மழை பெய்யும் படங்கள் நன்றாக உள்ளது. நல்ல மனிதாபிமானம் உள்ள டாக்டரின் செயல் பாராட்டத்தக்கது. மற்ற அத்தனை செய்திகளும், ஜோக்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளது. கடைசி ஈ ஜோக் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"அமைச்சரை சிலர் மூலம் வற்புறுத்தி, முதல்வரிடம் சொல்லச் செய்து சர்ர்ர்ரியாக நாங்கள் புறப்படும் நேரம் கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கச்செய்து விட்டார்"
பதிலளிநீக்குஅதுதான் கடவுள் :) புகைப்படங்கள் அருமை..எத்தனை முறை எடுத்தால் என்ன..சில படங்கள் எடுத்தே ஆக வேண்டும்..அவ்வளவு ஈர்ப்பு!
மழை பெய்வது தெரிகிறது! மழையின் குளிர்ச்சியும் பசுமையின் நிறைவும் உணர முடிந்தது..பூமா அழகாய்க் கொலுசு அணிந்து :) உங்கள் நகைச்சுவையோடு பதிவை இரசித்தேன் . ஆங், நீங்கள் சொன்னபிறகு தான் தலைப்பு நினைவிற்கு வந்தது ஹாஹா
குரங்கு சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் கூட பிரித்துச் சாப்ப்பிடுவார்..குழாய் என்ன கடினமா!!
கேஜ்ரிவாலின் டெல்லியில் உட்கார்ந்திருக்கிறேன். வியாழனா, வெள்ளியா ஒன்றும் தெரிவதில்லை!
பதிலளிநீக்குகுலதெய்வ வழிபாடு நிறைவாக முடிந்ததில் மகிழ்ச்சி.
சுவாரஸ்யக் கதம்பம். ’பித்தனின்’ கவிதையில் தெரியுது புதுமை!
படுத்திருக்கையிலும் சமூகநீதியைப்பற்றி நிறையச் சிந்தித்ததால்..கடற்கரை பங்களா வந்து சேர்ந்ததுபோலும்! சொகுசு பங்களாக்கள், சொக்கவைக்கும் பண்ணைவீடுகள் தமிழ்நாட்டில் ஜாஸ்தி என்று கன்னடர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் - ஏதோ இவர்கள் குடிசைவாழ் சுத்தம் என்பதுபோல..