ஞாயிறு, 28 ஜனவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 04 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் ஐந்து துவாரகைகள் யாத்திரை பகுதி 04

ஸ்வாமி நாராயணன் கோவில் வளாகத்தை அனைவரும் அடைந்ததும், எங்களுக்கு பாதுஷா, ஓமப்பொடி மற்றும் காபி/பால் கொடுத்தார்கள். அங்கிருந்த ஸ்வாமி நாராயணன் கோவிலுக்குச் சென்று, நடை சாத்தியிருந்தாலும் கம்பிகளினூடே தரிசனம் செய்தோம். அங்கேயே வளாகத்தில் இருந்த Restroomஐ உபயோகித்துக்கொண்டோம்.



மிக அழகான பெரிய கோவில் இந்த ஸ்வாமிநாராயணன் கோவில். 


இரவு மணிக்கு அங்கிருந்து கிளம்பி, துவாரகை நோக்கிச் சென்றோம். சுமார் 1 ½ மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு சிவன் கோவில் வளாகத்தை அடைந்தோம். அங்கு இரவு உணவாக சுடச் சுட பொங்கலும் கொத்ஸும் கொடுத்தார்கள். இங்கிருந்து துவாரகை சுமார் 430 கிமீ தூரம் இருக்கிறது. கிளம்புவதற்கு முன்பு இருக்கையை மாற்றிக்கொண்டோம். இரவு 9 மணிக்கு அந்த இடத்திலிருந்து கிளம்பி துவாரகை நோக்கிச் சென்றோம். இரவு முழுவதும் பிரயாணம். மறுநாள் காலை 5 ½ மணிக்கு துவாரகையை அடைந்தோம்.


அந்தக் கோவிலில் இருந்த சிவலிங்கம்

நாங்கள் துவாரகையில் எங்கள் தங்குமிடத்தை அடையும்போது காலை மணி 5.  எல்லோருக்கும் அறை ஒதுக்கிய பிறகு, எல்லோரும் தயாராகச் சொன்னார்கள். 8 மணிக்கு காலை காபியும் பால போஜனமும் அங்கேயே கொண்டுவந்து தந்துவிடுவதாகவும், பிறகு கோமதி நதித் துவாரத்திற்குச் செல்லவேண்டும் என்றும், அங்கு குளித்து உடை மாற்றிக்கொண்ட பிறகு, கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்த பிறகு திரும்பவும் தங்குமிடத்திற்கு வருவதற்கு மதியம் 12 மணி ஆகிவிடும் என்றும், பிறகு மதிய உணவு என்றார்கள். காலை காபியும், சிறிதளவு உளுந்து சாதமும் சாப்பிட்ட பிறகு, குளிப்பதற்குத் தேவையானவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து பேருந்தில் கோமதி நதித்துவாரத்தை நோக்கி 9 மணிக்குக் கிளம்பினோம்

கோமதி துவாரகாவில் நாங்கள் தங்கிய இடம்.

வெகு அருகில்தான் கோமதி நதித்துவாரம்காலையில் நதியில் நீர் மிக மிக் குறைவாக இருக்கும், பிறகு கடல் நீர் உள்வாங்கி பத்து அடிக்கும் மேல் நீர் இருக்கும் என்றார்கள். முதல் முறை சென்றபோது 4 அடிக்கு நீர் இருந்தது. இரண்டாவது தடவையில் நீர் மிகவும் குறைவாக இருந்ததுஅங்கு குளித்து உடை மாற்றிக்கொண்டோம். பிறகு ஈர உடை இருக்கும் பையைக் கையில் எடுத்துக்கொண்டோம்.


இந்த முகத்துவாரத்தின் பகுதியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கின்றது. அதில், கடலில் மிதக்கும் கல்லை (சேது பாலம் இத்தகைய கற்களைக் கொண்டுதான் கட்டப்பட்து என்று காட்ட) வைத்திருந்தார்கள். அங்கும் சென்றுவிட்டு, கோமதி நதிக்கரையோரமாக நடந்து துவாரகேஷ் கோவிலுக்குச் சென்றோம். கரையோரத்தில் நிறைய சிறிய சிறிய கோவில்களைப் பார்க்க முடிந்ததுகடலிலிருந்து எடுத்தது என்று சொல்லி நிறைய வண்ணக் கற்களை (பவளம், முத்து என்றெல்லாம் சொல்கின்றனர்) விற்கின்றார்கள். இவையெல்லாம் போலி போல எனக்குத் தோன்றியது.

கடல் நீர் உள்வாங்கியிருப்பதால், ஆழம் குறைவான கோமதி ஆற்றில் மீன்கள். 






கரையோரமாகவே நடந்து கோமதி துவாரகா கோவிலுக்குச் செல்லும் வழியை அடைந்தோம். கரையிலிருந்து சுமார் 70 படிகள் ஏறவேண்டியிருக்கும். கோவிலில் செல்போன் அனுமதி கிடையாது. யாத்திரைக் குழுத் தலைவர், கோவிலுக்குச் சில படிகள் கீழே ஓரத்தில் அமர்ந்துகொண்டு எங்கள் அலைபேசி மற்றும் கையில் இருந்த bagஐயும் வாங்கிவைத்துக்கொண்டார்.

(தொடரும்) 

 

62 கருத்துகள்:

  1. ஸ்வாமி நாராயணன் கோயில் பற்றி வாசித்ததும் இங்கு அமெரிக்காவில் இருக்கும் பிர்மாண்ட ஸ்வாமி நாராயணன் கோயில்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்று தோன்றியது.
    அட்லாண்டாவில் இருக்கும் ஸ்வாமி நாராயணன் கோயில் மிகப் பெரிது. சலவைக் கல்லால் இழைத்திருக்கிறார்கள்.
    அமெரிக்காவில் இருக்கும் ஹிந்து கோயில்கள் பற்றி நிரந்தரமாக இங்கு வசிக்கும் யாராவது எபியில் எழுத மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்குண்டு. இது தொடர்பாக புதன் எபி பகுதியில் அப்பாதுரையிடம் ஒரு கோரிக்கை கூட வைத்திருந்தேன். ஹூம்..
    ஆழ்ந்த வாசிப்பு ரசனைகள் பதிவுலகில் பழைய விஷயங்களாகி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல ஸ்வாமி நாராயணன் கோவில்களை வட நாட்டில் பார்த்திருக்கிறேன். மிகப் பிரம்மாண்டமாகவும் மிக அழகாகவும் அமைக்கப்பட்ட கோவில்கள் அவை. அத்தகைய கோவில்களில் யாத்திரை செல்பவர்கள் தங்கவும் (கட்டணம்) சமையல் செய்துகொள்ளவும் நல்ல வசதிகள் இருக்கும். இந்த யாத்திரையிலேயே அத்தகைய கோவில் இன்னொன்றும் வரும்.

      நீக்கு
    2. நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் பேராசிரியராக வேலை பார்த்த என் மாமா, எங்கள் ஊருக்கு வந்தபோது பிட்ஸ்பெர்க் வெங்கடேஸ்வரா கோவில் மற்றும் அமெரிக்க வாழ்க்கையைப் புகைப்படங்களாகெங்களுக்குக் காண்பித்தது நினைவுக்கு வருகிறது. எங்கள் அம்மாவின் குடும்பத்தில் முதல் முறை வெளிநாடு சென்றவர் அவர்.

      நீக்கு
  2. கோமதி நதி நீரில் நீராடியது பாக்யம்.
    வாழ்க்கை நெடுக நமக்கு
    அதிர்ஷ்ட வசமாய் அரிதாய் கிடைக்கும்
    வாய்ப்புகளை நினைத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு என்பது
    அனுபவ பூர்வமாய் உணரும் சொற்றொடராய் நான் உணர்கிறேன்.
    படங்கள் எழுதிச் சொன்னவற்றின் மேற்கொண்டான மனவோட்டத்திற்கு வழி நடத்திச் செல்வதாக இருந்தன. நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். யாத்திரையில் பல்வேறு புண்ணிய ந்திகளில் நீராடும் வாய்ப்பு கிடைக்கும். அது இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்த்துக்கொண்டு மட்டும் செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு.

      திருமாலிருஞ்சோலை சிலம்பாற்னில் நீராடும் பாக்கியம் கிடைப்பதில்லை (காலை 11 மணிக்கு, திருமோகூர், கூடலழகர் தரிசனங்கள் முடித்துவிட்டுச் செல்வதால்)

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இந்த வாரம் நான்கு நாட்கள் ஊரில் இல்லை.

      நீக்கு
    2. நான் சென்ற அந்தப் பயணம் வீட்டிற்காக. அது பற்றியும் ஒரு வாரம் எழுதலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      அப்படியா? நான்கு நாட்களாக தொடர்ந்து எந்தப் பதிவிலும் உங்களை பார்க்க முடியாததை வைத்து நீங்கள் எங்காவது பயணம் மேற்கொண்டிருப்பீர்கள் என ஊகித்தேன். இந்தப் பயணம் பற்றியும் எழுத நினைத்திருக்கும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்.

      எழுதுங்கள். உங்கள் அனுபவ வாயிலாக நாங்களும் அந்த ஊரைப்பற்றி தெரிந்து கொள்கிறோம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நான் சமீபத்தில் சென்றுவந்த பயணம் புடவை, வேஷ்டிகள் (பட்டு, பட்டு அல்லாத்து) சம்பந்தமானது. அதுபற்றிய பதிவும் பலருக்கு உபயோகமாக இருக்கலாம்.

      நீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஸ்வாமி நாராயணா கோவில் அழகாக இருக்கிறது. இறைவனை தரிசித்து கொண்டேன்.

    துவாரகை நோக்கி செல்லுமிடத்தில் வந்த சிவன் கோவிலலைப் பற்றிய விபரமும், கோமதி நதியின் முகத்துவாரம் பற்றிய செய்திகளும், விளக்கமாக விவரித்திருப்பது அருமை. நதியில் கடல் உள்வாங்கியதால், நீர் குறையும் போது நீந்திய மீன்களின் படம் நன்றாக உள்ளது.

    கரையோரத்தில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலை கண்டு ஆஞ்சநேயரை தரிசித்து கொண்டேன். இராமாயண காலத்தில் இருந்த மிதக்கும் கல் பற்றிய செய்திகளும் வியப்பளிக்கின்றன.

    கோமதி துவாரகை படங்கள் நன்றாக உள்ளது. இறைவனை எழுபது படிகள் ஏறும் முன்பே கோமதி துவாரகையின் கோபுர தரிசனம் கண்டதும் மானசீகமாக வணங்கினேன் . விபரமான தங்கள் யாத்திரைப் பதிவில் நாங்களும் அத்தனை கோவில்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். யாத்திரை பற்றி எழுதும்போதே எனக்கு நான் சென்ற இடங்களின் நினைவும் இறைவனின் நினைவும் வரும். எனக்குமே அது ஒரு நல்ல வாய்ப்பு.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் கூற்று உண்மை. நாம் சென்றவிடங்களைப் பற்றி எழுதும் போது, அதன் நினைவுகள் மனதினில் நீங்காதிருக்கும். அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனையும் நாம் மீண்டும் மனதினுள்ளாகவே தரிசிக்கும் பேறுகள் திரும்பவும் கிடைக்கும். எனக்கும் இப்படியான கோவில்கள் அனுபவங்கள் உள்ளது. ஆனால், உங்களைப் போல் நினைவு கூர்ந்து எழுதத்தான் இயலவில்லை. நீங்கள் செல்லும் கோவில் யாத்திரைகளின் இடங்களை, ஒவ்வொன்றையும் அனுபவித்து பார்த்து, உணர்ந்து நினைவுகளினால் வடிவமைத்து தந்து விடுகிறீர்கள். அது உங்களுக்கென்று கிடைத்திருக்கும் இறைவனின் ஆசிர்வாதம். நானும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது நம்மால் இது சாத்தியமா என திகைக்கிறேன். தங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சமீபத்தில் ஜோ என்ற படத்தை ஓடிடிலைம் பார்த்தேன் (சில வாரங்களுக்கு முன்னால்தான் திரையில் பார்த்திருந்தேன்). படம் என்னை இரவு தூங்க விடவில்லை. மனைவியிடம் இளமைக்கால அனுபவங்களைச் சொல்லி ரம்பம் போட்டு, இரவு 2 1/2க்குத்தான் தூங்கினேன் (99 சதம் 9 1/2க்குள் படுத்துவிடுவேன்).

      எந்த இடத்தைப் பற்றிச் சிந்தித்தாலோ சென்றாலோ அந்த நினைவுகள் மீண்டும் நம் மனதை ஆக்கிரமித்துவிடும்.

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. வழக்கம் போல அருமையான பதிவு..

    அழகான படங்கள்..

    இனிய தரிசனம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. ஸ்வாமி நாராயணன் கோயில் என்றால் மூலஸ்தானத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் பள்ளி கொண்ட பெருமாள் கான்சப்ட் அனேகமாக இல்லை. எல்லாமே நின்ற திருக்கோலம்தான். படங்கள் பகிர்கிறேன்.

      நீக்கு
  8. ஸ்வாமி நாராயணன் என்றால் அங்கே ஐக்கிய அரேபியத்தில் எழுப்பிக் கொண்டிருக்கின்ற மாதியான கோயில்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைணவத்தில் தென் இந்தியாவில் ஶ்ரீராமானுஜரைப் போல, வட இந்தியாவில் வைணவத்துக்கு ஸ்வாமி நாராயணர் கோவிலை (அந்த குரு பெயர் சட்னு நினைவுக்கு வரலை துரை செல்வராஜு சார்) சொல்கிறார்கள். இவரைத் தொடரும் பக்தர்கள், தமிழக வைணவர்களைப் போலவே தூய சைவ உணவு போன்றவற்றைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பல புதிய ஆலயங்களை எழுப்புகிறார்கள். அவை மிக மிக அழகாகவும் தூய்மையோடும் மிளிர்கின்றன

      நீக்கு
    2. நெல்லை அவர்களது விளக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  9. சுவாமி நாராயண் கோயில்கள் பல இடங்களில் உண்டு. தில்லியில் இருக்கும் பிரம்மாண்ட கோயில் நினைவுக்கு வருகிறது. சமீபத்திய வாரணாசி பயணத்தில் கூட பிரயாகையில் ஒரு சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வந்தேன். இழைத்து இழைத்து காட்டுகிறார்கள் - அதுவும் பிரம்மாண்டமாய்.

    கோமதி ஆற்றங்கரையில் குளியல் - ஆஹா… நதிகள்/ஆறுகளில் குளிப்பது ஒரு வித புத்துணர்வை அளிக்கக்கூயூடியவை. கங்கையில் குளித்து வெளியே வர மனமே இருந்ததில்லை.

    கோயில்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் பயணங்களும், பயணக் கட்டுரைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். யாத்திரையின்கோது அனுபவித்துக் குளிக்க நேரம் கிடைக்காது. கிடைத்துவிட்டால், ந்தி தீர் குளியலைப் போல மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை.

      ரிஷிகேசம் மற்றும் ஹரித்வார் கங்கைக் குளியல் மிக அருமை. தேவப் பிரயாகையும்தீன். இருந்தாலும் மூன்று இடங்களிலும் பய உணர்வும் இருந்தது. வாரணாசியில் பயம் இல்லை (அக்கரையில் குளியல்)

      நீக்கு
  10. அழகான சுற்றுப் புறம்...

    இங்கே கும்பகோணத்தில்
    கோயில் மதில்கள் எல்லாம் எந்த அளவுக்கு கண்றாவி சுவரொட்டிகளால் கெடுத்து வைக்கப்பட்டிருக்கிறன என்பதை நேரில் பார்த்தால் தான் விளங்கும்..

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிய்த்துக் கொண்டு போவதில் இருக்கும் ஆர்வம் கோயில் மதில்களைக் காப்பாற்றுவதில் இல்லை..

    இதிலே கோயில் நகரம் என்ற பெருமை வேறு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக தமிழகத்தில் நம் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. அதன் விளைவுதான் நீங்கள் காண்பது. வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் இந்த அலங்கோலங்களைக் காண இயலாது.

      நீக்கு
  11. படங்கள் வழக்கம் போல அழகு.

    விவரணங்கள் விளக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது தமிழரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. நலமாக இருக்கிறீர்களா? இதோ ஒருசில மாதங்களில் வெயில்காலம் வருகிறது

      நீக்கு
  12. ஸ்வாமிநாராயன் கோயில்கள் ISKCON அமைப்பைச் சார்ந்தவை. பக்திவேதாந்த பிரபுபாத சுவாமிகளால் தொடங்கப்பட்டது ISKCON.
    பதிவு படங்களுடன் அழகாக உள்ளது. தொடரட்டும் ஆன்மீக உலா. தொடரட்டும் உலா பற்றிய விவரங்கள் படங்கள்

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். ISKCON வேறு. அவங்க கோவில் பெரும்பாலும் கிருஷ்ணர் அல்லது திருப்பதி பாலாஜி. ஸ்வாமி நாராணர் குழு வேறு. அவங்க நாராயணர் வழிபாடு செய்பவர்கள்

      நீக்கு
    2. என்னுடைய குழப்பத்தை (ISKCON Swamynarain) தெளிவு செய்ததிற்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
    3. ஜெயகுமார் சார்... இஸ்கான் தனித்த இயக்கம். அவங்க கோவில்ல பிரசாதம் உண்டு. பகவத் கீதையைப் பரப்புவாங்க, அதற்கான குறைந்த விலை உள்ள புத்தகங்களை விற்பனை செய்வாங்க. இப்போ கேடரிங் கூட செய்யறாங்க (எதிலும் பூண்டு வெங்காயம் போன்றவை கிடையாது). இஸ்கான் கோவில்கள் உலகெங்கும் உண்டு. கிருஷ்ண பக்தி என்பது அவர்களின் பிரதானம். அதற்கு அடுத்தபடியாக நரசிம்ம பக்தி.

      நீக்கு
  13. நாராயணன் கோவில் பெரிதாக அழகாக இருக்கிறது.

    கோமதி ஆறும் ஆஞ்சநேயர் கோவிலும் கண்டோம்.

    அடுத்து துவாரகை வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. @ நெல்லை..

    /// வட இந்தியாவில் பள்ளி கொண்ட பெருமாள் கான்சப்ட் அனேகமாக இல்லை. எல்லாமே நின்ற திருக்கோலம் தான்... ///

    பெருமாளுக்கும் தெரிந்திருக்கின்றது..

    ஆப்பிரிக்க அரேபிய ஐரோப்பிய ஆங்கிலேயப் பயலுங்க நம்மை நிம்மதியா கிடக்க விட மாட்டானுங்க என்பது!!..

    சுழன்று வரும் சக்கரமும் சும்மா இருந்து விட்டதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடைய தென்னிந்தியாவில் உள்ளவர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோயில்களில், அரங்கநாதர் சன்னிதி உண்டு (உதாரணம் அயோத்தியா அம்மாஜி மந்திர் போன்ற கோவில்கள். விருந்தாவனம் மற்றும் புஷ்கர்லயும் உண்டு என்று நினைவு. என் குறிப்புகளைப் பார்க்கணும்)

      நீக்கு
  15. சுவாமிநாராயண் அக்ஷர்தாம் (டெல்லியில் உள்ள )கோவிலில் சுவாமி நாராயணிரின் இளமை காலம், அவர் வீட்டை துறந்து வந்து காடு, மேட் எல்லாம் குருவை தேடி அலைவது பின் குருவை அடைந்து மந்திர உபதேசம் பெற்று குருவுக்கு பின் சுவாமி நாராயணன் என்று பேர் பெற்று பல இடங்களில் கோவிலை கட்டியது எல்லாம் ஒலி ஒளி காட்சிகளாக மற்றும் பெரிய திரையில் காட்டுவார்கள். சிறு வயதில் அவர் பேர் நீலகாந்த் வர்ணி.

    வெளி நாட்டில் நிறைய இருக்கிறது சுவாமி நாராயண கோவில் அட்லாண்டாவில் உள்ள கோவில் போய் வந்ததை பதிவு செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய சீடர்கள் ஸ்டிரிக்ட் வெஜிடேரியனாக இருப்பதை துபாயில் பார்த்துள்ளேன். (93ல் துபாயில்தான் அவர்கள் சொல்லி ஸ்வாமி நாராயணன் என்ற க்ரூப் இருப்பதே தெரியும்).

      பக்தி வளர்வது நல்லதுதானே... அஹமதாபாத் ஸ்வாமி நாராயணர் கோவில் மிகப் பெரியது. அதுபற்றியும் இங்கு வரும்.

      நீக்கு
    2. ஆஹா... அட்லாண்டாவில் ஸ்வாமி நாராயணன் கோவிலைத் தரிசித்ததை நினைவில் வைத்திருக்கிறீர்களே....

      ஒரு இயக்கம் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருப்பதைக் காணும்போது மகிழ்ச்சிதான். பக்தி வளர்வது நல்லதல்லவா?

      நீக்கு
    3. //ஆஹா... அட்லாண்டாவில் ஸ்வாமி நாராயணன் கோவிலைத் தரிசித்ததை நினைவில் வைத்திருக்கிறீர்களே....//

      இரண்டு வருடம் தானே ஆச்சு பார்த்து அதனால் நினைவில் இருக்கிறது, பதிவும் போட்டு இருப்பதால் நினைவில் இருக்கிறது.
      நியூ ஜெர்சி இன்னும் போட வில்லை பல வருடம் ஆச்சு கணவருடன் பார்த்தது.

      நீக்கு
  16. பயண விவரங்கள் , கொடுக்கப்பட்ட உணவு விவரங்கள், படங்கள் எல்லாம் அருமை.

    ஸ்வாமி நாராயணன் கோவில் வெளிபக்கம் மட்டும் தானே படம் எடுக்க விடுவார்கள். உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் அல்லவா?

    கோமதி நதி படங்கள் நன்றாக இருக்கிறது. மீன்களை பார்த்ததும் குளிக்கும் போது நம் மேல் ஏறி போகுமா என்ற பயமும் வருகிறது.

    கோவையில் என் அத்தை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவில் மிதக்கும் கல் காட்சிக்கு வைத்து இருந்தார்கள். (அனுமன் சன்னதியில் ) துவராக கோவில்,சிவன் கோவில், அனுமன் கோவில் எல்லாம் தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... ஸ்வாமி நாராயணன் கோவிலில் உள்ளேயும் படங்கள் எடுப்பதைத் தடுப்பதில்லை என்றே நினைக்கிறேன். நான் சில படங்கள் எடுத்தேன்.

      கோமதி நதியில் உள்ள மீன்கள் விரல் அளவு உள்ளவை போல எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  17. அக்ஷர்தாம் தில்லி கோயிலும் சுவாமி நாராயண் கோயிலும் ஒன்றுதான் இல்லையா? படங்களும் விளக்கங்களும் அருமை. அதிலும் 2020, 2022 பட்ங்களுடன் வித்தியாசப்படுத்தி போட்டிருந்தது..

    பொருள் பாதுகாப்பு அறை இருக்கிறதா? இல்லையேல் இது போல் யாராவது ஒருவர் ஃபோனுடன் வெளியே நிற்பது சிரமமே. அதுவும் வழிகாட்டுபவர்.

    எல்லாப் படங்களும் மிக அருமை. மிக நன்றாக எடுத்திருக்கிறீர்கள், நெல்லைத்தமிழன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்... பொருள் பாதுகாப்பு அறை எல்லாக் கோவில்களிலும் இருக்கின்றன. ஆனால் அங்கு சென்று பொருட்களைக் கொடுத்துவிட்டு, பிறகு வாங்கிக்கொண்டு என்று ரொம்ப நேரம் ஆகிவிடும். அதனால் யாத்திரையை வழிநடத்துபவர், பாதிப் படிக்கட்டில் ஓரமாக உட்கார்ந்துகொண்டு எங்கள் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வார்.

      அக்ஷர்தாம் கோவிலும் சுவாமி நாராயண் கோவிலும் ஒன்றா என்று தெரியவில்லை. அனேகமாக ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. //அக்ஷர்தாம் கோவிலும் சுவாமி நாராயண் கோவிலும் ஒன்றா என்று தெரியவில்லை. அனேகமாக ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.//

      இரண்டும் ஒன்றே சுவாமி நாராயணன் வாழ்க்கை வரலாறு சொல்லும் கோவில்.
      நியூஜெர்சியில் உள்ள கோவிலும் போய் இருக்கிறேன். அங்கு எல்லாம் வெளிபக்கம் மட்டுமே படங்கள் எடுக்க வேண்டும் உள் பக்கம் அனுமதி இல்லை. உள்ளே கண் கவரும் தூண் , நடுநாயகமாக சுவாமி நாராயணர் சிலை என்று இருக்கும் .

      அக்ஷர்தாம் கொவிலில் வெளி பக்கமும் எடுக்க முடியாது கோவில் வளாகத்திற்குள் போன உடன் செல்போன், காமிராவை வாங்கி லாக்கரில் வைத்து விடுவார்கள். வெளியே போகும் போதுதான் கொடுப்பார்கள்.

      நீக்கு
    3. நாங்கள் அஹமதாபாத் அக்‌ஷர்தாம் கோவில் சென்றிருக்கின்றோம். மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள். செல்போன் போன்றவை தடை செய்யப்பட்டது. சில கோவில்களில் அலைபேசியை உபயோகித்துப் படங்கள் எடுக்க இயலும். அஹமதாபாத் அக்க்ஷர்தாம் ரொம்பவே நன்றாகவே இருந்தது.

      நீக்கு
  18. கோமதி ஆறு அழகோ அழகு அந்த முகத்துவாரம் ஆஹா! அதில் குளியல் என்றால் ஆஹா ....சின்ன சின்ன ஆசை முங்கி எழ ஆசை! எங்க ஊர் ஆறு அருவின்னு குளிச்சுட்டு இப்ப சில வருஷங்களா அப்படிக் குளிக்க்கும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. ஆற்றில் படித்துறை இருந்தாலும், எங்கள் ஊர் ஆற்றில் மணல் அப்படியே க்ளியரா தெரிந்த காலம் உண்டு அப்ப அடிக்கடி அங்குதான் குளியல். இப்ப தண்ணி கலங்கி ஓடுகிறது மணற்பாங்கையும் பார்க்க முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி முகத்துவாரத்தை, ஆறு என்று ஆவலாக நினைத்துக்கொண்டுவிட்டீர்கள் கீதா ரங்கன்(க்கா). அது உப்புத் தண்ணீராக்கும்.

      நைமிசாரண்யம் கோமதி ஆறு, திருக்குறுங்குடி நம்பியாறு போன்றவை குளிப்பதற்கு சுகமானவை. என் பையனுடன் (7ம் வகுப்பு?) திற்பரப்பு அருவியில் குளித்தது ஆஹா ஆஹா அருமையாக இருந்தது.

      நீக்கு
  19. நெல்லை, கடல் நீர் வரும் போது ஆற்று நீர் உப்பு நீராதான் இருக்கும் இல்லையா? முகத்துவாரத்தில்? பெண்கள் குளித்தால் உடை மாற்றிக் கொள்ள முடியுமா?

    ஆற்றின் நீரில் மீன்கள் படம் Superb!

    ஆஞ்சு கோயில், சிவன் சன்ந்தி மனதைக் கவர்கிறது. இப்படியான பழமையை பார்க்கத்தான் ரொம்பப் பிடிக்கிறது.

    நீங்க சொல்லிருக்கற இந்த நாராயணன் கோயில் எல்லா ஊர்களிலும் வந்து கொண்டிருக்கு என்று நினைக்கிறேன். இழைக்கிறாங்க! எங்கிருந்து பணம் வருகிறதோ! நான் கப்சிப்!

    மிதக்கும் கல் வேறு எங்கோ கூட பார்த்த நினைவு

    பொங்கல் கொத்ஸு இரவா...வயிறு திம்மென்று ஆகும் இல்லையோ...ஆனாலும் பயணக் களைப்பில் அது பிரச்ச்கனை இருக்காது என்று நினைக்கிறேன். அவங்களுக்கும் அதுதான் சௌகரியம்.

    பால போஜன்றதும் அட என்ன இது புதுசா இருக்கேன்னு நினைச்சேன். பால போஜன்னதும் குழந்தைகள் உண்ணும் அளவு தருவதுதான் அப்படிச் சொல்றாங்க போலன்னு நினைத்தேன்.

    அட! உளுந்து சாதமா? ஓ இதெல்லாம் கூடத் தருகிறார்களா!!
    திருனெல்வேலி உளுந்து சாதம் நினைவுக்கு வருகிறது.

    எல்லா விவரங்களும் அருமை, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் நீர் கலப்பதால் உப்பு நீராகவே இருக்கும்ன்றதை பார்த்துவிட்டேன் நெல்லை...

      கீதா

      நீக்கு
    2. //பெண்கள் குளித்தால் உடை மாற்றிக் கொள்ள// - இதற்கெல்லாம் தகுந்த வசதிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      /எங்கிருந்து பணம் வருகிறதோ! நான் கப்சிப்!// - எங்கிருந்து வந்தாலும் அது இந்துக்களிடமிருந்துதான் வரும். ஹா ஹா. நிச்சயம் வெளிநாட்டுப் பணம் அல்ல.

      பால போஜனம் - இதனை விளக்க விட்டுப்போய்விட்டது. வரும் வாரத்தில் இது பற்றி எழுதறேன்.

      நீக்கு
    3. பொங்கல், கோதுமை ரவை/அரிசி ரவை உப்புமா/ தயிர்சாதம்... போன்றவைகளை பெரிய பாத்திரத்தில் சூடாகவே பேக் பண்ணிடறாங்க. எங்களுக்கு எங்கேயோ பெட்ரோல் பங்கில் வைத்துக் கொடுக்கும்போது சூடாகவே இருக்கும்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      நானும் இதைப்பற்றி (பால போஜனம்) கேட்க நினைத்தேன். குழந்தைகளுக்கு பூணூல் (உபநயன விழா) போடும் போது பிரம்மோபதேசம் செய்து வைப்பதற்கு முன் "குமார போஜனம்" என்ற ஒரு சடங்கு உள்ளதே..! அதை நினைவூட்டியது.
      இல்லை கொஞ்சமாக உணவு எடுத்துக் கொள்வதை அப்படி குறிப்பிடுகிறார்களா ? தங்கள் விளக்கமான பதிலை காண ஆவலாக உள்ளேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. படங்கள் எல்லாம் சூப்பர்...அதுவும் கோமதி ஆறு படங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படங்கள் எடுத்ததிலேயே சிலவற்றை மறக்க இயலாது. அதில் ஒன்று, வாரணாசியில் சந்து பொந்துகளில் நடந்துகொண்டிருந்தபோது (எதுக்க இரு சக்கரம் வந்தாலே நாம ஒதுங்க வேண்டும்), அழகிய பசுமாட்டைப் பார்த்தேன். என் மனைவி, கொஞ்ச தூரம் நான் நடந்ததும், பார்த்தீங்களா... பால் அதுவாகவே மடுவிலிருந்து சுரந்து கீழே விழுந்திருப்பதை என்றாள். உடனே திரும்பச் சென்று படம் எடுத்தேன். திருப்பாவை பாசுரத்தை நினைவுபடுத்திய தருணம் இது. இதையெல்லாம் பார்க்காமலேயே பாசுரங்கள் பிறந்திருக்கும்?

      நீக்கு
  21. பேப்பரில் பரப்பி வைத்திருக்கறத பார்த்தா ஆற்றின் கூழாங்கல் போல இருக்கு. கிண்ணத்தில் இருப்பவை ஸ்பெஷல் கல்லா இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வண்ண வண்ணக் கற்கள். அவங்க மரகதம், கோமேதகம், பவளம் என்றெல்லாம் சொல்றாங்க... ஆனா பாருங்க, 50-100 ரூபாய்க்கு யார் இதெல்லாம் தர்றாங்க? பார்க்க மிக மிக அழகாக இருந்தன. நானும் சில பல வண்ணக் கற்கள் வாங்கிவந்தேன்.

      நீக்கு
  22. திண்டுக்கல் தனபாலன் அவர்களை இந்தப் பகுதியில் பல வாரங்களாகக் காணவில்லை. அவருடைய தந்தையார் உடல் நிலை காரணமாக என்று அறிந்தேன். பிறகு அவருடைய தந்தையார் மறைந்துவிட்ட தையும் அறிந்தேன். திண்டுக்கல் தனபாலனுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. /// திருப்பாவை பாசுரத்தை நினைவுபடுத்திய தருணம் இது. இதையெல்லாம் பார்க்காமலா பாசுரங்கள் பிறந்திருக்கும்?.. ///

    அதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது..

    எங்களுக்குப் பிடிச்சதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!