திங்கள், 29 ஜனவரி, 2024

"திங்க" க்கிழமை  :  :  புடலை பொடிதூவி கறி  - ஸ்ரீராம் 

 இன்னிக்கி  சொந்த சாஹித்தியம்தான்.  

என்ன செய்ய.  மனோ அக்கா அவ்வப்போ பரிதாபப்பட்டு ரெண்டு ரெண்டு அனுப்பறாங்க... ஹேமா இதோ அனுப்பறேன், அதோ அனுப்பறேன்னு சிங்கப்பூர்ல 'ஜாய்ஃபுல் சிங்கப்பூர்....' னு பாடிகிட்டு இருக்காங்க..  புவனேஸ்வரி 'ஓகேண்ணா' னு சொல்றதோட சரி...

ஓகே...  எழுந்திரிங்க..  வாங்க...  பதிவுக்குள்ள போவோம்....

சிறு வயதில் அம்மா சமைத்துப் போட்ட காலங்களில் எனக்கு சாய்ஸ் இல்லாதிருந்தது.  அம்மா என்ன சமைக்கிறாள் என்பதே தட்டில் அமரும்போதுதான் தெரியும்.  அது ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தெரியுமா?  எல்லாவற்றையும் ருசித்து விடுவோம்.  ரசிக்கிறோமோ இல்லையோ...

ஆனால் இப்போது அல்லது திருமணத்துக்குப் பிறகு நமக்கு தனி விருப்பங்கள் வந்து விடுகின்றன.  பெரிய மனுஷன் ஆகி விடுகிறோம் பாருங்க...  குடும்பத்தலைவன்!  சின்னப்பையனா அரை டிராயரோட ஓடிவந்து அம்மா தந்ததை சாப்பிட்டு விட்டு ஓடியவன் இன்று மதிப்பாய் குடும்பத்தலைவன்!  அம்மாவிடம் சொல்ல பயந்ததை இப்போது தைரியமாய் சொல்லலாம்...  என்ன நிமிர்ந்து பார்க்கறீங்க...  அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு..  சொல்லலாம்தானே...  என்ன தயங்கறீங்க..  சரி விடுங்க...

என்ன சொல்ல வர்றேன்னா எனக்கு பிடித்த காய்கறிகளை விட பிடிக்காத காய்கறிகள் அதிகம்! அல்லது சம அளவு!  பீன்ஸ், புடலை எல்லாம் போட்டுக்கொள்ளவே மாட்டேன்.  சுரைக்காயை கயாவில் விட்டு விட்டேன்!  புடலங்காய் போட்டு அம்மா பெரும்பாலும் தேங்காய்க்கறிதான் செய்வார் என்று  நினைவு.  எப்போதாவது தேங்காய் அரைத்து விட்டு கூட்டு.

இங்கும் - இன்றும் அப்படிதான்.  புடலங்காய் கூட்டு தேங்காய், பச்சை மிளகாய் கொஞ்சம் கூடவே மிளகு சேர்த்து அரைத்து விட்டால், இரண்டு மூன்று கரண்டி போட்டுக் கொள்வேன்! டயட்டில் இருக்கும் பெரிய மகன் சமீபத்தில் புடலங்காயை ரசித்து சாப்பிடுகிறான் என்று கேள்விப்பட்டு வியந்து போனேன்..  அட!

பாஸ் பெரிதாக எதுவும் புதிதாக முயற்சிப்பவர் அல்ல.  ஒரு சனிக்கிழமை நான் புடலங்காயை வித்தியாசமாக முயற்சித்தேன்.  ஆ ஆ உபயம்!  இருங்க...  பதிவைப் படிச்சுட்டு  'இதுல என்னப்பா வித்தியாசம்' னு கேக்கறவங்களுக்கு..  'எங்க வீட்டைப் பொறுத்தவரை வித்தியாசமா' ன்னு சொல்லிக்க ஆசைப்படறேன்!

ஹிஹி.....  சமாளிச்சுடுவோம்ல...


சரி, இப்போ புடலங்காய் பிடிக்காதவங்க எல்லாம் கைதூக்குங்க....  ஆல்ரெடி என் கை மேல இருக்கு பாருங்க...  'இப்போ நீங்களே செய்ததால் சாப்பிட்டிருப்பீங்களே' ன்னு சொல்ல வர்றீங்க இல்லையா...  ரெண்டு துண்டு!

சரி எப்படி செய்யறதுங்கற மேட்டருக்குள்ள போவோம்...



முதலில் வலது கையை நீட்டுங்க...   குட்...   இப்போ நாலு விரல்களையும் நீட்டி அந்த விரல்களின் அடியில் கட்டை விரலை மடக்குங்க....  ஆ..ங்...   அப்படிதான்.  அந்த கடைசி கை யாருது?  சுண்டு விரல் அடி வரை கட்டை விரல் மடிஞ்சு வரணும்..  அளவு சரியா இருக்கணும் பாருங்க...  குட்... ஓகே...   சரி..   அந்த அளவு கடலை எடுத்துக்குங்க..  அதாங்க மல்லாட்டை!  அதன் கூட ரெண்டு பூண்டு பல்லு, ரெண்டு வரமிளகாய், இதற்கெல்லாம்  மட்டும் தேவையான அளவு துளி உப்பு, போட்டு மிக்ஸியில் கொரகொரன்னு  (இந்த 'ர' தான வரும்?) அரைச்சு வச்சுக்குங்க...



புடலங்காயை நறுக்கிக்கோங்க.  அதை வரமிளகாயோட சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க.  எவ்வளவு பிஞ்சு புடலங்காயா இருந்தாலும் அது சரியா வதங்க கொஞ்ச நேரம் எடுத்துக்கும்.  பிடிவாதம்!  


ரொம்ப கொழகொழன்னு வேகாம, போதுமான அளவு வெந்ததும், அரைச்சு வச்சிருக்கீங்களே ஒரு பொடி, கொரகொரன்னு, அதை எடுத்து புடலங்காய் மேல தூவி, ரெண்டு புரட்டு புரட்டி இறக்கிடுங்க... 

சாப்பிடலாம்ங்க...  

பையன் ரசிச்சு சாப்பிட்டான்.  எப்பவும் சாப்பிடறதுலேருந்து வித்தியாசம் பாருங்க...  இதையே ரெண்டு மூணு வாட்டி கண்டின்யு பண்ணினா  தெறிச்சு ஓடிடுவான்.


56 கருத்துகள்:

  1. இந்தப் புடலங்காயை பொடிசா நறுக்கினா என்னவாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுதலா செய்யறதுதானே விஷயமே...  புடலைன்னா எப்பப் பார்த்தாலும் பொடியாதானே நறுக்குவோம்!  அதனால்தான்!

      நீக்கு
    2. ஒரே செய்முறையில் இரண்டு பொடி வேண்டாமென்று - 'பொடி'யாக நறுக்கவில்லை!

      நீக்கு
    3. /ஒரே செய்முறையில் இரண்டு பொடி வேண்டாமென்று /

      ஹா ஹா. "பொடி" வைத்துச் சொன்ன நல்ல பதில். இதையும் ரசித்தேன்.

      நீக்கு
  2. அது என்னவோ இப்போ பாம்பு மாதிரி நீண்ட புடலங்காய் வரத்தே குறைஞ்சு போச்சு. போனவாரம் இங்கே அமெரிக்கா இந்தியன் ஸ்டோர் ஒன்றில் அந்த மாதிரி பாம்பு புடலங்காய் அடுக்கிக் கிடந்ததைப் பார்த்ததும் அசந்து போனேன். காஞ்சிபுரத்தில் இருந்த பொழுது எங்கள் சொந்த பெரீய்ய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் போட்டிருந்தோம். அவரை, புடலங்காய் எல்லாம் எதேஷ்ட்டமாய் காய்த்து.. புடலங்காய் வாலில் கல்லு கட்டித் தொங்க விட்ட பழைய சரித்திரம் எல்லாம் நினைவுக்கு வந்தது...

    அது சரி இப்படி தண்டி தண்டியாய் புடலையை நறுக்காமல் இதில் கால் பங்காய் நறுக்கிப் போட்டிருந்தால் வாய் ருசிக்கும் வாகாய் மெல்லுவதற்கும் சுகமாய் இருந்திருக்குமே என்று தோன்றியது. மனசில் படறதை மறைக்காமல் சொல்லிடறது என் வழக்கம். என்னடா முதல் பின்னூட்டமே இப்படின்னு தப்பாய் நினைக்காதீங்க..

    யாரும் பதிவுக்கு மேட்டர் அனுப்பலேயேன்னு திகைச்சுப் போய் நிற்காமல் செவ்வாய், சனி, திங்கள்ன்னு எந்த கிழமைக்கும் நிறைவான சாமர்த்தியத்தோடு தயாராகிறீங்க பாருங்க, அந்தத் திறமைக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பு மாதிரி புடலங்காயை நானும் பார்த்து வெகு நாளாச்சு!  நீங்கள் சொன்ன மாதிரியும் நறுக்கி ஒருதடவை முயற்சி செய்தால் போச்சு!

      நன்றி ஜீவி ஸார். திங்களுக்கு பதிவு எதுவும் இல்லைன்னு நேற்றிரவுதான் கவனித்தேன்.  எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்திருந்த படங்களை வைத்து ஒரு அவசரகால முயற்சி!

      நீக்கு
    2. நான் நீளமான புடலங்காயை எப்போதாவது பார்க்கிறேன். அதுபோல குட்டிப் புடலைக்கும் நீண்ட புடலைக்கும் இடைப்பட்டதும் சில நேரங்களில் வரும். கிலோ 40 ரூபாய்.

      நீக்கு
    3. ஜீவி அண்ணா இப்படிக் கேட்டு எங்க ஊர் நினைவு வந்துவிட்டது. எங்க ஊர்ல இந்த நீளமான புடலங்காய்தான் கிடைக்கும். சென்னை வந்ததும் குட்டி குட்டியா குண்டா....ஜப்பானிய Bonsai போன்று பார்த்ததும் இது புடலங்காயான்னு கேட்டு

      நீளமான புடலங்காயின் ருசி இந்தக் குட்டி குண்டு புடலங்காயில் வருவதில்லை

      நீளமான புடலங்காயில் பால் கூட்டு செய்தால் செமையா இருக்கும்

      இங்கு எப்போதாவது கண்ணில் தென்படும் உடனே வாங்கிவிடுவேன். முன்பு இருந்த பகுதியில் அடிக்கடி பார்க்க முடிந்தது.

      கீதா

      நீக்கு
    4. தஞ்சாவூர் சந்தையில் நீளமான புடலங்காயை கல்கட்டா புடலங்காய் என விற்பார்கள்.  என்ன என்று கேட்டால் புடலை நீளமாக சுருளாமல் வளர கல் கட்டுவார்களாம்.  அப்படி கல் கூட கட்டாமல் சுருலாமா,. வளையாமல்  நீளமாக வளர்ந்த புடலையாம்!

      நீக்கு
    5. திருவையாறு, கும்பகோணம் பக்கம் நீளப் புடலை கிடைக்கும். பார்த்தால் உடனே வாங்கிடுவோம்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களுக்கு செய்முறை படங்களுடன் நீங்கள் செய்த புடலங்காய் பொடி தூவிய கறி நன்றாக உள்ளது. முதலில் வித்தியாசமாக இப்படி ஏதாவது சமையல் செய்வதில் வல்லவரான உங்களக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    உங்களின் அன்றைய தயாரிப்பான உ. கி வடையை நான் ஒரு நாள் செய்து பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேயுள்ளேன். நேரம் சரியாக வரமாட்டேன் என்கிறது.நேற்று கூட எங்கள் வீட்டில் இரவு சமையலுக்கு உ. கி கார கறி பண்ணினேன். அப்போதும் உங்களின் உ. கி வடையும் உங்களின் அருமையான எழுத்தும் நினைவுக்கு வந்தது. (நேற்று உங்களுக்கு கண்டிப்பாக பொறை ஏறியிருக்கும் என நம்புகிறேன்.ஹா ஹா ஹா )

    சகோதரர் ஜீவி சார் அவர்கள் சொல்வது போல், காய்கறி கடைகளிலும் நீளமான புடலையை பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. முன்பெல்லாம் திரைப்படங்களில் காய்கறி வாங்கி வரும் ஒரு குடும்பத்தின் நபர்கள் தோளில் இந்த புடலையை சுமக்காமல் ஷாட் எடுப்பதே கிடையாது. இப்போது அந்த மாதிரி படங்களை பார்ப்பதே அரிது. அதறகு பதிலாக அரிவாள் இரும்பு சம்பந்தபட்ட பொருட்கள்தாம் தோளோடு வருகின்றன.

    ஆனாலும் இந்த புடலங்காய் கறி ஒரு கடுகுடன் அவசர தாளிப்பு ஒன்றையும் நீங்கள் சேர்த்திருக்கலாம். கடுகு இல்லாத கறி பொட்டில்லாத பெண்களின் முகமாக எனக்குத் தெரியும். அதனால்தான் அப்படிச் சொன்னேன். உங்களின் ரசனை மிகுந்த எழுத்துக்கள் அதை ஈடு செய்து விட்டது . நல்ல சமையல் குறிப்புக்களுக்கு என் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா..  சாதாரணமாக எல்லா கறிகளுக்கும் கடுகு தாளிப்பார்கள்தான்.  நான் பொதுவாக எந்த கறிக்குமே தாளிப்பதில்லை!  பழகி விட்டது.  உருளைக்கிழங்கு வடை செய்வது படு சுலபமாயிற்றே...   சட்டென செய்து விடலாமே!  சீக்கிரம் ஒருநாள் செய்து சுவையுங்கள்!

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு செய்முறை..

    புடலங்காயும் இப்போது உடலுக்கு
    ஒத்துக் கொள்வதில்லை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒவ்வொண்ணா ஒத்துக்காதுன்னு சொன்னா எதைத்தான் சாப்பிடுவது? ஒருவர் என்னிடம் நாகம் அடிக்கடி கனவில் வந்ததால் புடலங்காயைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்றார். புடலை பூசனி மிக நல்லதல்லவா?

      நீக்கு
    2. எனக்கு புடலங்காயே கனவில் வந்து 'என்னை விட்டுடேன்' என்கிறது!

      நீக்கு
  7. அட! இன்று ஸ்ரீராமின் கை வண்ணம். எதுக்கு நிலையவித்வான்னு எல்லாம் சொல்லிக் கொள்ள வேண்டும்? நீங்களும் திங்க போடலாமே!

    நல்லகாலம் என்னை விட்டுட்டீங்க ஹிஹிஹிஹிஹி....நானும் தரேன் தரேன்னு தரவே இல்லை. இருக்கு....வித்தியாசமான செய்முறை ஒன்று. பார்க்கிறேன்.....எழுத்துக் கூட்டி எழுதணுமே!!!

    எல்லாக் காய்களும் பிடிக்கும். அதனால நான் கை தூக்கவில்லை.

    //ஆல்ரெடி என் கை மேல இருக்கு பாருங்க... //

    ஹாஹாஹா மிக்சிக்கான ஸ்விட்ச் ஆன் செய்ய கைய தூக்கிஇருக்கீங்க!!!

    புடலங்காய் உங்க செய்முறை சூப்பர். பாக்கவே நல்லாருக்கு, ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட எழுதி வச்சிருக்கறதை அனுப்புங்க கீதா...   எழுதியவரை அப்படியே அனுப்புங்க...  'இதன் தொடர்ச்சி அடுத்த வாரம்'னு சொல்லி வெளியிட்டு விடுகிறேன்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா ஸ்ரீராம், அப்புறம் யாராச்சும் செய்முறை பார்த்து அடுப்புல வாணலில இருக்கறதை பார்த்துட்டு செய்துட்டு அடுத்த வாரம் வரை அப்படியே விட்டுட்டாங்கனா!!!! ஹிஹிஹிஹி அனுப்ப பார்க்கிறேன் ஸ்ரீராம்!!!! நிச்சயமாக

      கீதா

      நீக்கு
  8. /ஹாஹாஹா மிக்சிக்கான ஸ்விட்ச் ஆன் செய்ய கைய தூக்கிஇருக்கீங்க!/

    👌.👌ஹா ஹா ஹா சிரித்து விட்டேன் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்சி ஆன் செய்ய கையை தூக்க வேண்டாம்.  சுவிட்ச் மேடை மேலே இருக்கிறதே...!!

      நீக்கு
    2. ஹாஹா நினைச்சேன்....இப்படி ஒரு பதில் வரலாம்னு!!

      கீதா

      நீக்கு
  9. ஆந்திரா மஹாராஷ்ட்ரா, கர்நாடகா செய்முறைகள் அறிந்ததிலிருந்து இப்படிக் கடலை சேர்த்து செய்வதுண்டு.

    வறுத்த வேர்க்கட்லை பூண்டு, வர மிளகாய் / சி வெ ரெண்டு பூஜ்ஜிய எண்ணிற்குக் கீழே 30, 40 கம்மியா விலை இருந்தா அதுவும் வதக்கிச் சேர்த்து ரெடியா கொஞ்சம் பொடி செய்து வைத்துக் கொள்வதுண்டு.

    இதோடு இன்னொரு பொடி, கொத்தமல்லி விரை, எள்ளு வறுத்து இதில் ஏதோ ஒன்று சேர்த்து அல்லது இரண்டும் சேர்த்து மேலே சொன்னதோடு பொடித்துப் போடுவதுண்டு. இதோடு கப உ ப கூட வறுத்துப் பொடித்து...இப்படி permutation combination ல செய்து வித்தியாசம்னு!!! ஹிஹிஹி நான் சொல்லிவிடுவதுண்டு வீட்டில்!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி permutation combination ல செய்து வித்தியாசம்னு!!!// அவசரத்துல க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்புல்லாம் வித்தியாசம் தெரியாமல் போட்டுட்டு, இது ஒரு சமாளிப்பு. இந்தப் பருப்புகளை எடுக்கும்போது லைட் போட்டுக்கிட்டு எடுக்கக்கூடாதா?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லை....எங்களுக்கெல்லாம் இருட்டுல கூட கப உ ப, து ப எல்லாம் வித்தியாசம் தெரியுமாக்கும்!! எம்புட்டு வருஷமா சமைக்கறோம்!! ஹிஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
    3. கீதா.. நீங்கள் சொல்லும் பல வித பொடி தூவிகளை கத்தரிக்காயில் சேர்ப்பதுண்டு!

      நீக்கு
    4. ஆமா புரிந்ததூ...நானும் காலைல கத்தரிக்காய்க்கு இப்படிச் செய்வதுண்டுன்னு சொல்ல நினைத்து...கோவைக்காய்க்கும் ரொம்ப நல்லாருக்கும் ஸ்ரீராம். ஆனா உங்களுக்குத்தான் கோவைக்காய் பிடிக்காதே!

      கீதா

      நீக்கு
  10. நீளமான புடலங்காய் பல இடங்களில் தற்போது கிடைப்பதில்லை. முன்பு பந்தலில் சிறு காயாக இருக்கும் சமயம் கல்கட்டி தொங்கவிட்டது நினைவுக்கு வருகிறது. புடலங்காய் பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும் நல்லதொரு காய். எங்கள் வீட்டில் கூட பெரியம்மா நாகருக்கு பூஜை செய்த பிறகு சாப்பிடுவதை விட்டு விட்டார் என்பதால் வாங்குவது குறைவு. ஏகாதசி அன்று சாப்பிட மாட்டார் என்பதால் அன்று சமைக்கலாம். பெரும்பாலும் தேங்காய் அரைத்து விட்ட கூட்டு தான். இல்லை என்றால் தேங்காய், வரமிளகாய் போட்ட துவட்டல். வடக்கில் இதன் பெயர் CHICHINDA! வெங்காயம், தக்காளி, மசாலா சேர்த்து சப்பாத்தியுடன் தொட்டுக்கையாக செய்வதுண்டு. தவிர Barwa என்று சொல்லப்படும் Stuffing வகையிலும் இந்த புடலங்காயில் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் கூட செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, நாகசதுர்த்தி, மாளயபட்சம் சமயங்களில் புடலை சமைக்க மாட்டார்கள்.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  11. காய்கறிகளை பெரிதாக வெட்டினால் தான் சத்து என்று முன்னர் படித்த நினைவு. அதை இன்று ஸ்ரீராம் செய்து விட்டார்.
    சுடலைபொடி பூசி என்றபாடல் நினைவுக்கு வந்து விட்டது. புடலை பொடி தூவி தலைப்பை படித்ததும்.

    புடலை பொடிதூவி கறி செய்முறை சொன்னவிதம் எல்லாம் நன்றாக இருக்கிறது. செய்முறை படம் அருமை.

    உங்கள் மகனுக்கு பிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

    அடிக்கடி செய்தால் பிடிக்காது, எப்போதாவது செய்யலாம் தான்.
    பெரிய புடலை மார்கெட் போனால் கிடைக்கும், சிறு வியாபாரிகள் இந்த புடலைதான் விற்கிறார்கள். சிறு குடும்பத்திற்கு போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காய்கறிகளை பெரிதாக வெட்டினால் தான் சத்து என்று முன்னர் படித்த நினைவு. //

      ஆம்.  நான் கூட படித்திருக்கிறேன்.  பொதுவாக சேனைக்கிழங்கு உள்ளிக்க சில காய்களை பொடியாக நறுக்கிய வழக்கம்.  அவற்றை எல்லாம் வித்தியாசம் என்கிற பெயரில் நான் மீறுவதுண்டு!

      // சொன்னவிதம் எல்லாம் நன்றாக இருக்கிறது. //

      ஆஹா.. நன்றி கோமதி அக்கா.




      நீக்கு
    2. காலை ல விட்டுப் போன கருத்து இரண்டு...காய்கறிகளைப் பெரிதாக நறுக்குவது...மற்றொன்று ஸ்ரீராம் உங்க narration சூப்பர்....மேலே பார்த்துட்டே வந்தேன் என்ன கருத்தெல்லாம் போட்டிருக்கிறேன்னு...இந்த ரெண்டும் விட்டுப் போச்...

      கீதா

      நீக்கு
  12. புடவையில் இலகு சமையல். அசத்தல்.

    சற்று முற்றிய புடலங்காய் இருந்தால் வட்டம் வட்டமாகவே மெல்லியதாக வெட்டி எடுத்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு,மிளகாய் பொடி இட்டு இந்தப் பொடி அல்லது சீரகப் பூண்டுப் பொடி , பருப்புப் பொடி என மாற்றி மாற்றி ஹா...ஹா...செய்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் நறுக்கலாம் மாதேவி.  இங்கே நறுக்கி இருப்பதைப் பாருங்கள்.  செவவகம் செவ்வகமாக பார்க்க ஒரு கவர்ச்சியாக இல்லை?  (எப்படி எல்லாம் ப்ரமோட் செய்ய வேண்டி இருக்கிறது!!)

      நீக்கு
  13. இந்த வருடம் இங்கே மழை சற்று குறைவு..

    உள்ளூர் காய்கள் தஞ்சை அங்காடிகளுக்கு பச்சைப் பசேலென்று வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கவே அழகாக இருக்கும். வாங்கும் ஆசை வரும்.

      நீக்கு
  14. புடலங்காயில் உள்ளே பொடி அல்லது வெங்காயம் எல்லாம் வத்க்கி உள்ளே அடைத்துச் செய்வதுண்டு. சப்பாத்திக்கு மிக நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுமாதிரி செய்யத்தான் அடுத்த பிளான்! பார்ப்போம். சப்பாத்திக்கு புடலங்காயா? கிர்ர்ர்ர்....

      நீக்கு
  15. பெரும்பாலும் எங்கள் ஊர்ப்பக்கங்களில் பிரசவம் ஆன பெண்களுக்குப் பத்தியத்தில், இளம் புடலங்காயை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி உப்பு, மிளகு பொடி கறிவேப்பிலை சேர்த்துத் தருவதுண்டு. செமையா இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் உங்கள் பையன் விரும்பிச் சாப்பிட்டது சூப்பர். உங்க கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு புகுந்து விளையாடுங்க! புதியவர்களும் ரசனைமிக்கவங்களாகிடுவாங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. செய்துட்டா போச்சு... கற்பனைக் குதிரை எங்கேயோ புல் மேய போயிருக்கிறது. வரட்டும்.. வந்த உடன் தட்டி விட்டு ஆரம்பித்து விடுகிறேன்!! :-))

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  17. பொதுவாக முன்னெல்லாம் சமையல் பதிவுகளுக்கு வரத் தயக்கமாக இருந்ததுண்டு. இப்போது சின்னதாக ஆர்வம் எட்டிப் பார்க்கிறது,.

    புடலங்காய் (படவலங்கா மலையாளத்தில்) நிலக்கடலை, பூண்டு காம்பினேஷன் செய்து பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நான் அடுக்களைக்குள் செல்வது இல்லை என்றாலும். ஸ்ரீராம் மிக நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

    இப்போது மனைவியும் வெளியில் ஏதேனும் புதிதாகச் சாப்பிட நேர்ந்தால் செய்து பார்க்க விரும்புகிறார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. //சுரைக்காயை கயாவில் விட்டு விட்டேன்! // சுரைக்காய் சாதாரணமாகவே ஒதுக்கி வைக்கப்பட்ட காய். அதைப் போய் கயாவில் விடுவாங்களா என்ன? ச்ராத்தக் காய்களில் ஒன்றைத் தான் விடவேண்டும் என்பார்கள். உங்களுக்கு நியமிக்கப்பட்ட புரோகிதர் சரியாச் சொல்லலை போலிருக்கு. வாழைக்காய், புடலங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பலாக்காய்ப் பொடி, அவரைக்காய், வாழைத்தண்டு, கொத்தவரை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு இவற்றுள் ஏதேனும் ஒன்றை விடணும். அதில் வாழை சம்பந்தப் பொட்ட எந்தப் பொருளையும் விடக்கூடாது/விடவும் முடியாது என்பதால் அதைத் தவிர்த்து மற்றவற்றில் இருந்து விடச் சொல்லுவார்கள். கர்நாடகாவில் கோவைக்காயை ச்ராத்தத்திற்குச் சமைப்பாங்க என்பதால் எங்க புரோகிதர் அதைத் தேர்வு செய்து கொடுத்தார். நம்மவருக்கும் அது பிடிக்காது என்பதால் சந்தோஷமாக விட்டார். நான் தனியாகத் தேர்வு செய்யக் கூடாது என்பதால் எனக்கும் அதே. பழங்களில் நாவல் பழம் இலைகளில் ஆலிலை. ஆகிய்வற்றை விட்டோம். வாழை சம்பந்தம் வருவதால் வாழை இலையை எல்லாம் விடக் கூடாது என்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி பயணக் கட்டுரையிலேயே இதை எல்லாம் எழுதி இருந்தேன்.  நீங்களும் அப்பவே இதை எல்லாம் சொல்லி இருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன்!

      நீக்கு
  19. புடலங்காய்ப் பருப்பு அரைச்ச கறி பண்ணலாம். பருப்பு அரைச்சதையே புடலங்காயில் ஸ்டஃப் செய்து கொண்டு ஒரு நூலால் கட்டி அல்லது புத்தம்புதிய ஈர்க்குச்சியால் குத்தி மூடி இட்லித்தட்டில் வேக வைச்சுட்டுப் பின்னர் தாளிதம் செய்து கொண்டு எண்ணெயில் நன்கு பிரட்டி எடுக்கலாம். கிட்டத்தட்ட சேம்பு இலைக்கறி மாதிரித் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இப்படி எல்லாமும் செய்யலாம் என்று அறிந்திருக்கிறேன்.  ஆனால் செய்ததில்லை!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!