படத்துக்கேற்ற கதைப் போட்டி. ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சாவி பரிசு பெறும் பெற்ற கதை
சாவி இதழில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திரு குமாரின் இந்தக் கதை தங்கச்சாவி பரிசு பெற்றது. குமார் அவர்கள் படைப்புகள் பல்வேறு பத்திரிகையிலும் வெளியாகி உள்ளன. புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார். முகநூலில் அவருக்கு நான் நண்பன். அவர் முகநூலில் பகிர்ந்த இந்தச் செய்தியைப் பார்த்து அவரிடம் கேட்டு வாங்கிப் போட்ட கதை!
ஒரு காதலி ஏவப்படுகிறாள்
எஸ். குமார்
ரிஸப்ஷனிஸ்ட் வித்தியாசமாகச் சிரித்தாள்.
உள்ளே மண்டிக் கிடைக்கும் ஏளனம் ஸ்வர்ணாவுக்குப் புரிந்தது. ஆனால் அதை அவள் லட்சியம் செய்யவில்லை. எல்லா ப்ராஸ்ட்யூட்டுகளுக்குப் பின்னாலும் இருக்கும் உருக்கமான கதை அவள் பின்னாலும் இருக்கிறது.
"ஒன் நாட் ஃபோர்ல ஸ்வரூப் இருக்காரா?"
"ஜெஸ்ட் எ மினிட்.,"
விசாரித்தாள்.
சொன்னாள். "---------" "இருக்கார்"
ஸ்வர்ணா நடந்தாள்.
104
கதவைத் தட்டினாள்.
"யார்?" - உள்ளேயிருந்து கேள்வி வந்தது.
"ஸ்வர்ணா"
"கம் இன்!" - அழைப்பில் அவசரம்.
உள்ளே போனாள்.
டபுள்காட் காத்திருந்தது. ஸ்வரூப் படுத்திருந்தான்.
தயாராய்?
கட்டிலில் உட்கார்ந்தாள்.
"ஸ்வர்ணா, நீ எனக்கொரு உதவி பண்ணனும்."
"அதுதானே என் தொழில்?
"வழக்கமானதில்லே.. திஸ் இஸ் ஸம்திங் டிஃபரண்ட்""
"----------------------------- ----"
"நீ ஒரு ஆளை காதலிக்கணும்"
"என்ன உளர்றீங்க?" - சிரித்தாள்.
அவன் மௌனமாக இருந்தான். அவள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தாள்.
"காதலிக்கறதுக்கு நீங்க ஃபீஸ் தருவீங்க, இல்லையா?"
"ஆமாம்."
"நான் கேள்விப்பட்ட வரை, பழகின வரை நீங்க ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை. ப்ளே பாய். ஆனா இப்போ.... தொழில்ல இறங்கிட்டீங்களா?"
"யூ இடியட்!"
வயிற்றில் குத்தினான். துடித்தாள். கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர, மீண்டும் சிரித்தாள்.
"சனியனே, சிரிக்கறதை நிறுத்து. பீ ஸீரியஸ்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. உன்னால முடியுமா, முடியாதா?"
"எவ்வளவு பணம் தருவிங்க?"
"வழக்கத்தைப் போல இரண்டு மடங்கு."
"ஓகே!"
அவன் தலையணைக்கடியிலிருந்து அந்த ஃபோட்டோவை எடுத்தான்.
அவள் பார்த்தாள்.
நீச்சல் உடையில் நான்கைந்து பேர்.. ஸ்வரூப் இருந்தான். பாண்டியன் இருந்தான்.
"நடுவில இருக்கானே!"
"பேர் என்ன?"
விஸ்வ பாரதி.
உட்கார்ந்திருந்தான்.
ஸ்வர்ணா அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ!"
திரும்பினான்.
"...நீங்கதானே விஸ்வ..."
"....பாரதி!"
"...நீச்சல்ல உங்க லாகவும்.. ஐ லைக் இட் வெரி மச்!"
"நீங்க?"
"ஸ்வர்ணா. உங்க விசிறி!"
"விசிறி?"
"ஆமாம்."
"அதுதான் நீங்க பக்கத்தில வந்ததும் வெயிலோடு கொடுமை குறைஞ்ச மாதிரி, கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கு."
"ரொம்ப நல்லாப் பேசறீங்களே!"
"ஜாக் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ்!"
"மாஸ்டரில்லையா?"
"அது தமிழ்வாணன். காலமாயிட்டார் !"
அவள், அவனை மொத்தமாகப் பார்த்தாள். முக்கால் நிர்வாணத்தில் , உடம்பு 'அதலடிக்' என்றது.
முன்னாலிருந்த நீச்சல்குளம் வெறுமையாக அவன் ஆக்கிரமிப்புக்கு காத்திருந்தது.
ஸ்வர்ணா - "நான் கூட நல்லா ஸ்விம் பண்ணுவேன். ஆனா எந்த காம்பெடிஷனிலயும் கலந்து கொண்டதில்லே"
"ஓ!"
"அடுத்து, உங்களுக்கு ஏதாவது காம்பெடிஷன் இருக்கா?"
"இருக்கு, ஒரு முக்கியமான போட்டி!"
"எங்கே?"
"நான்கைந்து பேர்களுக்கு நடுவிலே"
"புரியலையே"
"சீக்கிரம் புரியும்."
"உங்க க்வாலிஃபிகேஷன் என்ன?"
"பி . காம். கோ - ஆப்பரேஷன்"
"கோ - ஆப்பரேஷனா?"
"சரியா படிப்பு வராது. ஃபிரெண்ட்ஸ் ஒத்துழைப்பில பாஸ் பண்ணேன்."
சிரித்தாள்.
குனிந்து மார்பில் எதையோ தேடினாள்.
அவன் உஷ்ணமானான்.
சமீபகாலமாக சந்திக்க மறுத்து வரும், நெருக்கம் குறைந்த லீனா மனதில் தாபமேற்றினாள்.
யாரோ ஓடிவந்து மீனாக நீரில் செருகிக் கொண்டாள்.
"ஸ்விம் பண்ணுவோமா?" - ஸ்வர்ணா.
ஸ்விம் பண்ணுவோமா? - மார்பும் கேட்டது.
துடித்தது. துடித்தான்.
எழுந்தார்கள்.
கைகோர்த்து நடந்தார்கள். நீருக்குள் பாய்ந்தார்கள்.
"ஸ்வர்ணா!"
கதவு திறந்தது.
ஸ்வர்ணா தோன்றினாள்.
"உள்ளே வாங்க "
போனான்.
"யாருமில்லையா?"
"நாம இருக்கோமே!"
"நம்மைத்தவிர வேற யாருமில்லையா?"
"இல்லை"
"உங்க பேரன்ட்ஸ்?"
"அம்மா காலட்சேபம் போயிருக்கிறா.. அப்பா ரெக்ரியேஷன் க்ளப்புக்குப் போயிருக்கார்"
"சீட்டாடுவாரா?"
"ஆமாம். முதல் தேதி நூறோ, நூத்தம்பதோ கொண்டாந்து கொடுப்பார். அப்புறம் ஒவ்வொரு வாரமும்
நூறோ, நூத்தம்பதோ எங்க கிட்டேயிருந்து வாங்கிப்பார்."
"குடுக்கலேன்னா?"
"அடிப்பார்."
ஜாக்கெட்டைக் கழற்றிக் காட்டினாள். காயங்கள் தெரியவில்லை. 'தொடு' என்றது. தொட்டுக் கொண்டான்.
"அம்மாவுக்கு கூட நிறைய காயங்கள்."
"அதெல்லாம் நான் பார்க்க மாட்டேன்."
"...சீ !"
அவள் மெதுவாக அவன் மீது பரவினாள். கைகளால் பிணித்தாள்.
அவன் பற்குறி பதித்தான்.
சட்டென்று லீனா நினைவுக்கு வர, விலகினான்.
அவள் அவனை விளக்க விடாமல் அணைக்க முயன்றாள். முரட்டுத்தனமாக விலகினான்.
"நாளைக்கு ஒரு முக்கியமான போட்டி இருக்கு. ஹண்ட்ரட் மீட்டர்ஸ் ஃப்ரீ ஸ்டைல். வெற்றிப் பரிசு என்ன தெரியுமா?"
"என்ன?"
"பெண்."
"பெண்ணா!"
"ஆமாம். பேர் லீனா. சுமாராத்தான் இருப்பா. ஆனா வசதியானவ."
"அது யார், பெண்ணைப் பரிசு வச்சி போட்டி நடத்தறது?"
"ஸ்வரூப்னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட். அவனும் நல்லா ஸ்விம் பண்ணுவான். அவனும் லீனாவை விரும்பறான். லீனா யாரையும் வெளிப்படையா தேர்வு செய்ய விரும்பலே. அதனாலதான் இந்த ஸ்விம்மிங் காம்பெடிஷன். அவளுக்கே தெரியும் - நான்தான் ஜெயிப்பேன்."
"அப்போ நீங்க என்னை விரும்பலியா?"
"ஸாரி, நீங்க என் விசிறின்னு சொன்னதாலேயும், நீங்களா நெருக்கமா பழகினதாலேயும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். தட்ஸ் ஆல்!"
வெளியேற முயன்றான்.
"உட்காருங்க.. நண்பர்களாகவே இருப்போம்."
அவளுக்கு அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது.
ஸ்வரூப்புக்காக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமா?
"நீங்க லீனாவை மனசார விரும்பறீங்களா? இல்லை, பணத்துக்காக அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"
"விரும்பறேன். ஆனா அவ பணமும் ஒரு முக்கியமான காரணம்"
இது ஒருவகை மோசடி. பணத்துக்குத் தாலிகட்ட எப்படி அலைகிறான்!
"ட்ரிங்க்ஸ் கொண்டு வரேன்."
உள்ளே சென்றாள்.
ஹார்லிக்ஸ் கலந்தாள். ஸ்வரூப் தந்த மாத்திரையையும் கலந்தாள். கொண்டு வந்தாள்.
குடித்தான்.
பேசத் துவங்கினார்கள்.
மெல்ல அவன் தலையில் சுமை எற -
கண்கள் விரிந்துப் பார்க்க -
உலகம் மங்கலாய் தோன்றி ஜாலங்கள் துவங்க -
அவன் துகிலுரித்து நடனமாட
இமைகள் கனத்தன.
அவனுக்கு, விடிந்தபோது நேரம் ஒன்பதை நெருங்கியது.
அலறினான்.
ஸ்வர்ணா ஃப்ளாஸ்க்கிலிருந்து காப்பிய ஊற்றினாள்.
"அடிப்பாவி! என்னை என்ன பண்ணே? எனக்கு நேரமாயிடுச்சே!"
"என்ன நேரமாயிடுச்சி? இன்னிக்கு ஸண்டேதானே !"
இன்னிக்குதான் லீனாவுக்கான போட்டி"
"எப்போ?"
இந்நேரம் முடிஞ்சிருக்கும். ஸ்வரூப் போட்டியில்லாம ஜெயிச்சிருப்பான். இன்னும் உங்க அம்மா வரலியா?"
"------------------"
"இது உங்க வீடா?"
"ஆ...மாம்."
அறைந்தான். ----"சொல்லு. யார் நீ? இது யார் வீடு?"
மீண்டும் அறைந்தான். --"பொய் சொல்லாதே!"
கன்னத்தைத் தடவிக் கொண்டாள். --"நான் ஒரு ப்ராஸ்ட்யூட்..."
ஒரு அடி பின்னால் போனான்.
"ஸ்வரூப்தான் என்னை அனுப்பிச்சார்."
"பாவி, பணத்துக்காகத்தானே இந்தக் காரியத்தை செஞ்சே?" உலுக்கினான்.
"ஆமாம், பணத்துக்காக நீ ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கலாம். நான் பணத்துக்காக உன்னைத் தடுக்கக் கூடாதா?"
கொஞ்சம் அதிர்ந்தான்.
சொன்னான் - "நான் பணத்துக்காகதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். பணம் எதுக்கு? நான் சந்தோஷமா வாழறதுக்கு இல்லே. என் நொண்டித் தங்கைக்கும், படிப்பறிவில்லாத முரட்டுத் தம்பிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் குடுக்கத்தான்! நான் பணத்துக்காக அவளை விரும்பினாலும், அந்தப் பணத்துக்கு விஸ்வாசமா இருப்பேன். ஸ்வரூப் இப்படி இல்லே... உலகத்துல இருக்கிற அத்தனை கெட்ட பழக்கங்களும் அவனுக்கு உண்டு. நீ ஒரு பெண்ணோட வாழ்க்கையையும் பாழாக்கிட்டே !"
---நொண்டித் தங்கை!
---படிப்பறிவிலலாத தம்பிகள்!
ஸ்வரூப் அப்படி இல்லை!
ஸ்வர்ணா அதிர்ச்சி அடைந்தாள். முதன் முதலாக பாவம் செய்ததாக உணர்ந்தாள். அழுதாள்.
கதையை படித்தபின் தான் எ பி யில் பிரசுரித்தீர்களா? அசைவம் கூடுதல்.
பதிலளிநீக்குJayakumar
கேட்டு வாங்கியபின்தான் படித்தேன். இந்த அளவில் நிறுத்துவது நாகரீகமாகாது. கதையில் பெரிய அளவில் அசைவம் இல்லை என்று சொல்லலா.......ம். ஜெ ஓவியத்தை கண்டுக்காதீங்க!
நீக்குஇதில் அசைவம் என்றால் சுஜாதாவின் சில கதைகளும் அசைவம் தான் அவரைக் கொண்டாடுவதில்லையா ஜெ கே அண்ணா?
நீக்குபொதுவாக நிறைய எழுதுபவர்கள், பரவலாகப் பேசப்படுபவர்கள் வெளிச்சதில் உள்ளவர்கள் கதைகள் என்றால் அசைவத்திலிருந்து தப்பி விடுகின்றன.
பரவலாக அறியப்படாதவர்கள் உணர்வு பூர்வமாக எழுதினாலும் நல்ல கதைகள் கொடுத்தாலும் சிலாகிக்கப்படுவதில்லை.
கீதா
சுஜாதாவையும் விட புஷ்பாதங்கதுரையின் கதைகள்.
நீக்குகீதா
என் பிறந்தத்தின் முரண் - என்னை கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிக்க 144 போட்டவங்க சுஜாதாவையும், புஷ்பாதங்கதுரையையும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க. ஏனென்றால் அவர்களின் பின்னணி!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
இரன்டு பேரும் ஒன்றை மறந்து விட்டீர்கள். நான் அசைவம் விரும்புபவன்.
நீக்குJayakumar
:-))
நீக்குஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஜெ கே அண்ணா.
நீக்குகீதா
//சுஜாதாவையும், புஷ்பாதங்கதுரையையும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க. ஏனென்றால் அவர்களின் பின்னணி// - உங்க வீட்டுல நீங்க, நம்ம ஸ்ரீவேணுகோபாலன் னு சொல்லியிருப்பீங்க. (பு.த கதை வாசித்தவர்கள், சின்னப் பசங்களை அவற்றை வாசிக்க விடுவார்கள்னா நினைக்கறீங்க?). அதுபோல, சுஜாதான்னு சொல்லியிருப்பீங்க, அவங்க 'கற்றதும் பெற்றதும்' 'அறிவியல் கண்டுபிடிப்புகள்' என்றெல்லாம் கற்பனை பண்ணியிருப்பாங்க.
நீக்குஎங்க அப்பா, பசங்க 'குமுதம்' வாசிக்கக்கூடாதும்பார். விகடன், கல்கி, துக்ளக் ஓகேம்பார். குமுதம் பொம்பளைங்க பத்திரிகைம்பார். ஹா ஹா.
படத்தில் நீச்சல் உடையில் இருப்பது பெண். ஆனால் நீச்சல் போட்டியில் பெண் இல்லை. மாறாக இரு ஆண்கள். எப்படி படத்துக்கேற்ற கதை ஆகும். எங்கேயோ இடிக்குதே.
பதிலளிநீக்குஎன்னுடைய அனுமானம் படத்தை, தன் வர்ணனையில் ஒரு வரியில் புகுத்துகிறார் கதாசிரியர். விஸ்வபாரதியும் ஸ்வர்ணாவும் பேசிக் கொண்டிருக்கும்போது வர்ணனையில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் நடந்து வந்து நீருக்குள் பாய்கிறாள்.
நீக்கு//"ஸ்விம் பண்ணுவோமா?" - ஸ்வர்ணா.
நீக்குஸ்விம் பண்ணுவோமா? - மார்பும் கேட்டது.
துடித்தது. துடித்தான்.
எழுந்தார்கள்.
கைகோர்த்து நடந்தார்கள். நீருக்குள் பாய்ந்தார்கள்.//
இந்த வரிகளில் படத்தைப் புகுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது.
யாரோ ஓடிவந்து மீனாக நீரில் செருகிக் கொண்டாள்.
நீக்குஜெ கே அண்ணா படத்திற்கு ஏற்ற கதைதான் நல்லா சிந்திச்சிருக்கிறார். படத்தில் உள்ள விஷயங்கள் just நமக்குக் சிந்திக்கக் கொடுக்கப்படுபவைதான். subject விலகவில்லை. நீங்க சுட்டிக் காட்டியிருக்கும் வரிகள் - ஆமாம் அதேதான். அந்த வரிகள்....
நீக்குகீதா
கதை 80களின் நடையில் செல்கிறது. நல்லா இருந்தது. அபிமான ஓவியருடைய ஓவியத்துக்கான, அதே சமயம் பரந்துபட்ட வாசகர்களை ஈர்க்கும்படியான கதை.
பதிலளிநீக்குஅந்த. அந்தக்கால குங்குமம் சாவி இதழ்களில் வரும் டைப் கதை. இது சாவியை வந்த கதை.
நீக்குசாவியே வந்த கதையா? .
நீக்குYes!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை சுருக், நறுக் வாசகங்களுடன் நன்றாக உள்ளது. சகோதரர் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கேட்டு வாங்கிப் போடும் கதை - இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக!
பதிலளிநீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
/// கதை 80களின் நடையில் செல்கிறது. நல்லா இருந்தது. அபிமான ஓவியருடைய ஓவியத்துக்கான, அதே சமயம் பரந்துபட்ட வாசகர்களை ஈர்க்கும்படியான கதை.. ///
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை அவர்களது கருத்து மிகச் சரி..
1980 களில் தங்கச் சாவி..
பிரமாதம்..
இக்கதையைப் படித்த நினைவு இல்லை..
எனக்கு ஓவியத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. இதே ஓவியத்தை ஜெ.... பலப் பல கதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் வரைந்திருந்திருக்கலாம்.
நீக்குவாராவாரம்
பதிலளிநீக்குதொடரட்டும் வித்தியாசமாக..
எய்ட்டியில மெய்யாலுமே த்ங்கச் சாவி கொட்தாங்களாமா?..
பதிலளிநீக்குநெனைக்கவே ஜில்லுன்னு இருக்கு!..
ஜெ... யின் ஓவியம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..
பதிலளிநீக்குஇம்மாதிரி ஓவிய்ங்களுடன் கூடிய வாராந்தரிகளுட்ன் தான் அன்றைக்கு
நாம் வளர்ந்து வந்தோமா!!..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇக்கதை எழுதியவரும் பரிவை சே குமாரும் ஒன்றா? பரிவை குமார் பெரிய எழுத்தாளர்.
பதிலளிநீக்குJayakumar
இல்லை ஜெ கே அண்ணா. 1. பரிவை என்றால் ஸ்ரீராம் சொல்லியிருப்பார். ஸ்ரீராமிற்கு நல்ல பழக்கம். அவர் இங்கு எபியிலும் கதைகள் கொடுத்திருக்கிறார்.
நீக்கு2. பரிவை சே குமாரின் எழுத்து நடையும் மையமும் வேறு. பெரும்பாலும் கிராமம் சார்ந்த மண் சார்ந்த, குடும்பம் உறவுகள் உணர்வுபூர்வமான வட்டார வழக்குக் கதைகளாக இருக்கும்.
கீதா
ஸ்ரீராம், கதை மிக வித்தியாசமாக அதாவது எபி க்கு. இருக்கிறது என்றாலும் சுஜாதா காலங்களின் கதை போன்ற நடையில். எனக்குப் பிடித்திருக்கிறது. நல்லா எழுதியிருக்கிறார். எஸ் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகடைசியில் மாரலில் முடித்துவிட்டார். அது ஒன்று சுஜாதா பாணியில் வித்தியாசம்.
கீதா
பி . காம். கோ - ஆப்பரேஷன்"
பதிலளிநீக்கு"கோ - ஆப்பரேஷனா?"
"சரியா படிப்பு வராது. ஃபிரெண்ட்ஸ் ஒத்துழைப்பில பாஸ் பண்ணேன்."//
சிரித்து ரசித்த இடம்.
கீதா
ஜெ ஓவியம் ஆஹா! பல வருடங்கள் ஆச்சு பார்த்து!
பதிலளிநீக்குகீதா
இந்த மாதிரியான ஜெ... ஓவ்வ்வியங்களால் ( ஓவியங்களால்) தான்
பதிலளிநீக்குஅன்றைக்கு சில பத்த்திரிக்கைகளின் ( பத்திரிக்கைகளின் ) விய்யாவாரம் (வியாபாரம்) எகிறிக் கொண்டிருந்தது..
நொண்டித் தங்கையும், படிப்பறிவில்லாத தம்பிகளும் கதையை முடிக்க உதவியதை விட ஸ்வரூப்பின் (போன்ற மனிதர்கள் இருக்கிறார்களே) வெற்றி மனதை வேதனைக்கு உள்ளாக்குகிறது.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்! பாராட்டுகள்.
துளசிதரன்
கதை ஒரு "மாதிரியாக" சென்றாலும் இறுதியில் சற்றே நியாயம் தெரிந்தது.
பதிலளிநீக்குசாவி இதழில் கதை பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒரு காதலி ஏவப்படுகிறாள்
லீனா ஸ்வரூப்கிட்ட சிக்கி கொள்ள போகிறார், விஸ்வபாரதி குடும்பத்திற்கு தியாகம் செய்து பொருள் ஈட்ட முடியவில்லை. வாழ்க்கை பந்தய மேடை இல்லை என்பதை கதை சொல்கிறது.
வாழ்த்துகளுக்கும் ரசிப்புக்கும் நன்றி. அந்தப் படத்துக்கு எழுதப் பட்டதால் கதை சைவமாக இல்லை. கதைகளைப் பொறுத்தவரை ஒரு பானை சோற்றின் பதத்தை ஒரு பருக்கை காட்டாது.
பதிலளிநீக்குபானைச் சோற்றையும் பதம் பார்க்க ( படித்துக் களிக்க) எஸ்.குமார்
நீக்குஎபியில் அடிக்கடி எழுத வேண்டும்.
அடிக்கடி எழுதுகிறேன்
பதிலளிநீக்குநன்றி, நண்பரே!
நீக்குவித்தியாசமான கதை இறுதியில் நன்றாக முடித்துள்ளார்.
பதிலளிநீக்குவித்தியாசமான கதை இறுதியில் நன்றாக முடித்துள்ளார்.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநண்பரே!
பதிலளிநீக்குசெவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் எபி பக்கம் வந்திடுங்க. மற்றவர்கள் கதைகளுக்கும் உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் அது ஆக்கபூர்வமான பல எழுத்து முயற்சிகளுக்கு வழிகோலும் என்பது நிச்சயம்.
ஆஹா, பேசுவோமே!
நீக்கு