மைசூர்பா – நெல்லைத்தமிழன்
வீட்டில் பல இனிப்பு வகைகளைச் செய்யும் பழக்கம் உள்ளவன் நான். எல்லா நேரங்களிலும் சரியாக வரும் என்று சொல்ல முடியாது. நினைத்த அளவு சரியாக வராமலும் போய்விடும். சில நேரங்களில், ஹஸ்பண்ட் மெனெக்கெட்டுச் சொல்லும் ஆலோசனைகளை, ‘எனக்கு எல்லாம் தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சொதப்பியிருக்கிறேன். மெதுவா, நீ சொன்ன ஐடியா சரிதான் என்று சொல்லுவேன் (உடனே அல்ல….சில பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் கழித்து). எல்லாமே கற்றுக்கொள்வதில் ஒரு பகுதிதானே…. பெரும்பாலும் போட்டோக்கள் எடுத்துவிடுவேன். பல சமயங்களில் அனுப்ப விட்டுப்போய்விடும். மாதங்கள் ஆகிவிட்டால் எழுதுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.
இந்த வருட ஆரம்பத்தில் முதல் ரெசிப்பியாக என்ன அனுப்பலாம் என்று யோசித்து மிகச் சமீபத்தில் செய்த மைசூர்பாக்கு செய்முறை அனுப்பலாம் என்று நினைத்தேன்.
பெங்களூரில் மனைவியின் வழி உறவினர்கள் நிறையபேர் இருக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு, கஸின்கள் (ஆண்கள்) சேர்ந்து சமையல் செய்து, எல்லோரையும் (சுமார் 40 பேர்கள், எங்களையும் சேர்த்து) மதிய உணவுக்கு வரவைக்கலாம் என்றொரு யோசனையைச் செயல்படுத்தினார்கள். அப்போது நானும் தேங்காய் பர்பி, அரிசிப் பாயசம் செய்தேன். இரண்டையும் சூப்பராக இருந்து என்று பலரும் (அதாவது இனிப்பு சாப்பிடாதவர்கள் தவிர மற்றவர்கள்) சொன்னார்கள்.
பிறகு இந்த வருடம், இரு வாரங்களுக்கு முன்பு அதே போன்று ஒரு நிகழ்வு நடந்தது. அதில் நான் மைசூர்பாக்கு (பாகு வா இல்லை பாக்கா?), அக்கார அடிசில், மாங்காய் தொக்கு மற்றும் தயிர்சாதம் பண்ணினேன். அக்கார அடிசிலும் மாங்காய் தொக்கும் அனைவருக்கும் பிடித்திருந்தது. என் மாமியாருக்கு அக்கார அடிசில் ரொம்பப் பிடித்திருந்தது (குடும்பத்தில் அவர் அக்கார அடிசில் செய்வதில் எக்ஸ்பர்ட் என்று சொல்வார்களாம்). எனக்கும் ரொம்பவே மனத் திருப்தி.
ஓர் உண்மை சொல்லியாக வேண்டும். எந்த ஒன்றும் நன்றாக வருவதற்கு ஏதோ ஒரு லக் தேவைப்படுகிறது. அதாவது நம்மை மீறிய ஒரு சக்தி. இதைத்தான் நான் புரிந்துவைத்துள்ளேன். நான் ‘இதில்’ எக்ஸ்பர்ட் என்று சொல்பவர்களை நம்பி, 'சரி, அதைப் பண்ணுங்கள், நான் வந்து சாப்பிடுகிறேன்' என்று சொன்னால், அன்றைக்குப் பார்த்து அது சரியாக வந்திருக்காது.
இன்றைக்கு நான் செய்த மைசூர்பாக் செய்முறையைப் பகிர்கிறேன். இந்த மைசூர்பாக்கை, பெரிய அளவில் செய்வதற்கு முன்னால், வீட்டிற்கு வந்த முக்கிய விருந்தினர்களுக்காகச் சிறிய அளவில் (சுமார் 20 துண்டுகள் வரும்படியாக) செய்தேன். பிறகு, உறவினர்கள் சந்திப்பிற்காக கொஞ்சம் அதிக அளவில் செய்தேன்.
தேவையானவை
கடலை மாவு 1 கப்
நெய் 1 ½ கப்
ஜீனி 1 ¼ கப்
நல்ல நீர் ½ கப்
பட்டர் பேப்பர் வைத்த தட்டு
செய்முறை
பட்டர் பேப்பர் வைத்த தட்டைத் தயாராக வைத்துக்கொள்ளவும். அல்லது எந்தத் தட்டில் மைசூர்பாக்கைக் கொட்டப்போகிறோமோ அந்தத் தட்டில் நெய்யைத் தடவி வைத்துக்கொள்ளவும்.
நெய் உறைந்திருந்தால் சிறிது சூடுபடுத்தி உருக வைத்துக்கொள்ளவும்.
கடலைமாவை ஒரு கடாயில் பச்சை வாசனை போக வறுத்துக்கொள்ளணும். ரொம்ப நன்றாக வறுக்கக் கூடாது. நிறம் மாறிவிடக் கூடாது.
இந்த மாவை நன்கு சலித்துக்கொள்ளவும். இதனுடன் எடுத்துக்கொண்ட நெய் அளவில் பாதியை (உருக்கியது) கலந்துகொண்டு, கட்டியில்லாமல் ஸ்மூத்தாக இருக்கும்படி நன்றாகக் கலந்துகொள்ளவும். இது கொஞ்சம் நீர்க்க இருக்கும் தோசைமாவு போன்ற பதத்தில் இருக்கும்.
கடாயில் ஜீனியும் அதில் நீரையும் சேர்த்த பிறகு, அடுப்பை Simல் (மெது தணலில்) வைக்கவும். கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஜீனி அடியில் கரையாமல் தங்கிவிடும், மேலே உள்ள பகுதி மாத்திரம் கொதித்து நமக்குத் தேவையான பதத்துக்கு வரும். அதனால் தொடர்ந்து கலக்கவும். ஒரு ஸ்டிரிங் பதத்திற்கு வரணும்.
இப்போது நெய்+கடலைமா கரைத்துவைத்திருப்பதை கடாயில் விட்டு, நன்கு கிளறவேண்டும். அடுப்பு மெது தணலில் இருக்கவேண்டும். கிளறிக்கொண்டே அவ்வப்போது ஒரு கரண்டி நெய்யை விட்டுக் கலக்கவேண்டும். கிளறுவதைத் தொடர்ந்துகொண்டே இருக்கணும். கொஞ்சம் கொஞ்சமாக கலவை கெட்டியாவதை உணரமுடியும்.
நன்கு பொரிந்து ஓரங்களில் ஒட்டாமல் வரும் பதத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். (இதுக்கு மாத்திரம்தான் அனுபவம் வேண்டும்). அந்தச் சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு, கலவையை முன்னம் தயார் செய்திருக்கும் தட்டில் கொட்டவேண்டும்.
பத்து நிமிடங்கள் சென்றபிறகு, கத்தியை வைத்து துண்டுகளுக்கான கோடுகள் போட வேண்டும். அரை மணி நேரம் கழித்து முன்பு போட்ட கோடுகளின் வழியே இன்னொரு முறை கத்தியா அழுத்திக் கோடு போட்டால் மைசூர்பாக் தனித்தனியாக வந்துவிடும்.
குறிப்பு
பதம் மிகச் சரியாக வருவதற்குச் சற்று முன்பு தட்டில் கொட்டினால், ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வந்துவிடும்.
பதம் வந்தபிறகு மிகச் சிறிய நேரத்துக்குப் பிறகு தட்டில் கொட்டினால் மைசூர்பாக் கொஞ்சம் கட்டியாக இருக்கும்.
நம் கதை
முதல் தடவை
செய்தபோது மிக அருமையாக வந்திருந்தது. சில நாட்கள் கழித்து
மீண்டும் அதிக அளவில் செய்ய ஆரம்பித்தபோது, ஹஸ்பண்ட், இரண்டு பேட்சாகச் செய்யுங்கள்
என்றாள். அதெல்லாம் நான்
பார்த்துக்கறேன் என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டேன். இந்தத் தடவை ஜீனி அளவு அதிகம்
என்பதாலும் சிறிய கவனச் சிதறலாலும் (அதாவது
போட்டோ எடுக்க செல்ஃபோனைத் தேடினேன்), ஜீனியைக்
கலக்கிக்கொண்டிருக்கவில்லை.
அதனால் ஜீனி
அடியில் கொஞ்சம் தங்கிவிட்டது.
ஆனால் மேலே
பாகு பதம் வந்துவிட்டது.
இதற்கு நான்
வேறொரு குழிவான கடாயை உபயோகித்ததும் ஒரு காரணம். ஹஸ்பண்ட், என்ன அதற்குள் பாகுபதம் வந்துவிட்ட
தா என்று கேட்டபோது,
ஆமாம் என்று
சொல்லி, உடனே கடலைமா நெய்
கலவையைக் கொட்டிவிட்டேன்.
இதனால்
மைசூர்பாக்கில் ஜீனி நெருடல் இருந்தது. இருந்தாலும்
மைசூர்பாக்கிற்கான பொருட்கள் சூப்பர் என்பதால், அந்தக் குறை பெரிதாகத் தெரியவில்லை. ரொம்பவே நெய் வாசனையுடன்
இருந்தது. என் மனதுக்குத்தான்
தெரியும் நான் சொதப்பின விஷயம்.
எங்கள் குலதெய்வம்
திருப்பதி ஸ்ரீநிவாசன் அருளால்,
அனைவருக்கும்
இது சிறப்பான ஆங்கிலப் புத்தாண்டாக இருக்கட்டும்.
= = = = = = = =
எங்கள் Blog 2023 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்.
# நாளுக்கு ஒன்று என்று நாங்கள் வெளியிட்ட மொத்த பதிவுகள் : 365
ஒரே நாளில் அதிக பட்ச பார்வையாளர்கள் எங்கள் Blog : 24.11.2023
அன்று பார்வையாளர்கள் மொத்தம் : 7191 பேர்!
'திங்க'க்கிழமை சமையல் பதிவுகள் விவரங்கள்.
முதலிடத்தைப் பிடித்த துரை செல்வராஜூ அவர்களுக்கு வாழ்த்துகள்.
நாளை : செவ்வாய் பதிவுகள் புள்ளி விவரங்கள்.
= = = = = =
அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
எல்லாருக்கும் இறைவன்
நீக்குநலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
ஓ... இப்படியா விஷயம்!...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்லவேளை ...
பதிலளிநீக்குவருடத்தின் முதல் நாள் திங்கட் கிழமையாக அமைந்து இனிப்புடன் கூடிய முதல் பதிவு..
ஆம், அதே! சென்ற ஆண்டும் முதல் திங்கள் நெ த அவர்கள்தான்.
நீக்குநெல்லை அவர்களது பதிவு சிறப்பு.
பதிலளிநீக்குதிசையெங்கும் பரவுக தித்திப்பு..
நன்றி.
நீக்குஒரே நாளில் அதிக பட்ச பார்வையாளர்கள் எங்கள் Blog : 24.11.2023..
பதிலளிநீக்குவெள்ளிக்கிழமை பதிவு..
எல்லாப் பெருமையும் எங்கள் தளத்திற்கே!..
என்று மகிழ்வோம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இந்த நாள் நல்ல நாளாக அமைய இறைவன் அருளை பிரார்த்திப்போம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..
நீக்குவாழ்க.. வாழ்க..
பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கும், எ. பி வாசகர்களுமான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிப்புடன் ஆரம்பித்திருக்கும் (அறுசுவைகளில் அன்றிலிருந்து இன்று வரை இனிப்புக்கு நாம் முதலிடம் தந்திருக்கிறோம் / தருகிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்த இனிப்புக்கள் மாறி வரும் கால சூழலில் அபாயகரமாக கருதப்படுகிறது. இருப்பினும் எந்த ஒரு நல்ல நிகழ்விலும் ஏதாவது ஒரு இனிப்புத்தான் முதலிடம் பெற்று அமர்ந்து விடுகிறது.) இன்றைய வருடத்தின் முதல் பதிவைப் போல அனைவரின் வாழ்விலும் கூடியவரை அனைத்தும் நல்லவைகளாக நடந்து இறைவன் அனைவரையும் மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டுமாய் பணிவான, பக்தியுடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிப்புகள் ஏன் அபாயகரமானதாக இருக்க வேண்டும்? கார்போவும் (அரிசி) அபாயம்னு சொல்றாங்க. கொஞ்சம் விட்டால் ஓட்ஸ், செரியல் தவிர எதையும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிடுவாங்களோ?
நீக்குவேண்டுவோம்
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குமுதலில் இந்த வருடத்தின் முதல் நாளை இனிப்பான பதிவாக ஆரம்பித்து வைத்திருப்பதற்கு தங்களுக்கும், எ. பி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மைசூர்பாகு செய்முறையும், படங்களுமாக பதிவை மிகச் சிறப்பாக தந்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.
/ஓர் உண்மை சொல்லியாக வேண்டும். எந்த ஒன்றும் நன்றாக வருவதற்கு ஏதோ ஒரு லக் தேவைப்படுகிறது. அதாவது நம்மை மீறிய ஒரு சக்தி. இதைத்தான் நான் புரிந்துவைத்துள்ளேன். நான் ‘இதில்’ எக்ஸ்பர்ட் என்று சொல்பவர்களை நம்பி, 'சரி, அதைப் பண்ணுங்கள், நான் வந்து சாப்பிடுகிறேன்' என்று சொன்னால், அன்றைக்குப் பார்த்து அது சரியாக வந்திருக்காது./
சரியாகசொல்லியிருக்கிறீர்கள்நானும் இப்படித்தான் நினைப்பேன். சமையலிலும் எதுவுமே சரியாக அமையவும் இறையருள் வேண்டும். இல்லாவிடில் தற்பெருமை நம்மை நாலு பேர் முன்பு அவமானப்படுத்தி விடும்.
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎல்லா நாளும் ஒரே மாதிரி வரணும்னா வெந்நீர் செய்வதில் மாத்திரம்தான் சாத்தியம்.
நீக்கு90களின் சரவணபவன் உணவு எங்கும் எப்போதும் ஒரே மாதிரி சூப்பராக இருந்தது
நீக்குகமலாக்கா வாங்க! நலமா.
நீக்குவாழ்த்துகள்!
கீதா
வணக்கம் கீதாரெங்கன் சகோதரி
நீக்குநலமா? தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு மீண்டும் நல்வரவு..
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்..
வணக்கம் சகோதரரே
நீக்குநலமா? என் பதிவுலக வருகைக்கு நல்வரவு கூறி வரவேற்றதற்கும், தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
தங்களுக்கும் இனிதான் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி நவில்வோம்
நீக்குஇனிப்பு என்றுமே இனிமை தான்..
பதிலளிநீக்குஅது வெறுப்பு ஆனதற்கு வேறு வேறு காரணங்கள்...
வணிகம்/ விய்யாபாரம்!..
விய்யாபாரம்! ரொம்ப கோபமாக இருக்கீங்க போலிருக்கு!
நீக்குஉண்மை தான்...
நீக்குஇனிப்பு எனும் அழகிய சுவையை, பதார்த்தத்தை மனிதன் ’புத்திசாலித்தனமாக’, வேறு வேறுவிதமாக பார்க்க ஆரம்பித்ததால்தான் வாழ்க்கையும் வேறு வேறுவிதமாகப் போக ஆரம்பித்திருக்கிறது.
பதிலளிநீக்கு’வாழ்த்து’ என்கிற சாக்கில் இனி, மாத்திரைப் பாக்கெட்டுகள் கிஃப்ட்-ஆகக் கொடுக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.
:)))
நீக்குஇள வயதில் கிடைத்த வெல்லம் மற்றும் சீனிக்கும் தற்போது கிடைப்பவைகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. சீனி தயாரிக்கும் முறையில் வெண்மைக்காக அளவுக்கு அதிகமான சல்பர் அமிலம் சேர்க்கப்படுவதும் வெல்லத்தின் வெண்மைக்காக ப்ளீச் பண்ண நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். காய் பழங்களின் கதியும் அப்படித்தான்.
நீக்குகெமிக்கலிலே பிறந்து, கெமிக்கலிலே வளர்ந்த கெமிக்கல் பெருமானே.. என்று ஒவ்வொருவரும் தன்னையை புகழ்ந்து பாடிக்கொள்ளலாம். குரலும் ’கெமிக்கல் வாய்ஸ்’-ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை !
நீக்குஜேகேசி சாரின் சனிக்கிழமையில், ஷபீர் சையத், பல்லடம் மாணிக்கம் ஆகியோரை இப்போதுதான் சந்தித்துவிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குஅங்கே இமையமும் இருக்கிறார். காதலில் சிக்கிக்கொண்ட அப்பாவிக் கிராமத்துக்காரி ஒருத்தியின் மனப்புயலை அழகாக சித்தரித்திருப்பார் ஒரு சிறுகதையில். தலைப்பை வழக்கம்போல் மறந்துவிட்டிருக்கிறேன் - பாடலை நினைவில்கொண்டு, படத்தின் பேரை மறந்துவிடும் நான்..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநெய் 1 1/2 கப். சரி. ஜீனி 1 1/4 கப்-தானா? 1 1/2 என எழுதுகையில் டாக்டரின் முகம் ஞாபகம் வந்துவிட்டதாக்கும்!
பதிலளிநீக்குஇல்லை ஏகாந்தன் சார். அளவுகள் சரியே.
நீக்குநான் வெளிநாடுகளில் சாப்பிட்ட இனிப்பு சேர்த்த செரியல்களுக்கும் சாக்லேட்களுக்கைம் (பிராண்டட்), இந்தியாவில் அவங்க வெளியிடும் பொருட்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கே இருப்பதைவிட இங்கே இனிப்பு அதிகம். (இந்தியர்களுக்கு டயபடிஸ் வரட்டும் என்ற திட்டம் போலும்)
:)))
நீக்குஇந்தியர்களில் குறிப்பிட்ட சத்த்திற்கு, அதிக இனிப்பு தேவையாயருக்கு. சமீபத்தில் நான் பண்ணின அக்காரடிசிலுக்கு ஒன்றுக்கு 3 1/4 இனிப்பு சேர்த்தேன். பலருக்கும் அந்த அதீத இனிப்பு பிடித்திருந்தது
நீக்குசரியான மனிதர்கள். சரியான தித்திப்பு !
நீக்குநெல்லை ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வருவதில்லை. ஏற்கனவே நம் மெட்டபாலிஸம் சரியாக இல்லைனா, லிவர், பான்க்ரியாஸ் கொஞ்சம் மக்கர் பண்ணினால், நாம அதைத்தெரிஞ்சுக்காம ஸ்வீட் பிடிக்கும்னு வெட்டி விடுகிறோம். அதனாலதான் சர்க்கரை வியாதி.
நீக்குஇது ஒன்றும் இப்போதுவந்தது இல்லை. என் அம்மாவின் தாத்தாவுக்கும் இருந்தது. இதில் யாருக்கு என்ன மரபணு வருகிறது என்பதைப் பொறுத்துதான்.
கடையில் விக்கிறாங்கன்னா அது அவங்க பிஸினஸ். நாம அதை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று இல்லையே! நம் வாழ்வு நம் கையில், நம் நாக்கில், நம் மனதில்!
எனவே மருந்து கம்பெனிகளையும் இனிப்புக் கடைகளையும் சுட்டுவதை விட நம்மை நாமே சுட்டிக் கொண்டு கட்டுப்பாட்டோடு இருப்பது நமக்கு நல்லது இல்லைனா வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்தான்!
கீதா
பல வியாதிகளையும் நாம் என்னவோ இப்போதுதான் வருது அந்தக்காலம்னு பேசறோம்...நிச்சயமாக இல்லை. அப்போதும் இருந்தது பல இப்போதைய வியாதிகள். இப்போதைய கொரோனா வைரஸ் உட்பட. அப்போது மீடியா இல்லை. மக்கள் குறைவு. அதனால் தெரிவது குறைவு. தட்பவெப்ப நிலைக்கேற்ப பல உயிரினங்கள் தங்களை அடாப்ட் செய்து கொள்வதில்லையா கொசு, கரையான், வயலில் வரும் பூச்சிகள் உட்பட! Survival of the fittest போல்
நீக்குகாலத்தின் செயல்பாடுகள் மாறும் போது அது பல உருவெடுத்து அதுவும் தன்னை அடாப்ட் பண்ணிக் கொள்ள தக்க வைத்துக்கொள்கிறது வைரஸ் உட்பட. அப்படித்தான் இப்போதைய கொரோனா வைரஸ் பரவல்.
கீதா
//ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வருவதில்லை// - இவங்க உண்மையைச் சொல்றாங்களா? இல்லை தன் குழுவுக்கு ஆள் சேர்க்கறாங்களா? ஹா ஹா ஹா... புது ஆண்டுத் துவக்கம் இல்லையா? அப்போ உண்மையாத்தான் இருக்கும்
நீக்குஹாஹாஹாஹா உண்மைதான் நெல்லை - கொஞ்சம் அதைப் பாருங்க. என்ன சொல்லிருக்கேன்னு.
நீக்குஎங்க வீட்டுல என் கணவர் அவர் அம்மா எல்லாரும் ஸ்வீட் பிரியர்கள். நிறைய சாப்பிடுவாங்க. ஸ்வீட் கிட்டத்தட்ட கால் கிலோ சாப்பிட்டு விட்டு Post prandial sugar சோதனை செய்தாலும் சர்க்கரை அளவு 120 ஐ தாண்டியதில்லை! நைட் நல்லா ஸ்வீட் சாப்பிட்டுவிட்டுப் படுத்து காலை Fasting sugar பரிசோதனையில் 80-90 ஐ தாண்டியதில்லை!
எப்ப பரிசோதனை செய்தாலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும். அவங்க உடம்புவாகு மெட்டபாலிஸம், மரபணு அப்படி.
அதைத்தான் சொன்னேன். இனிப்பு சாப்பிடுவதால் வருவதில்லை. ஆனா சர்க்கரை வியாதி இருக்குன்னு தெரிஞ்சுருச்சுனா கண்டிப்பாகத் தள்ளி வைப்பது நல்லது. அல்லது சாப்பிட நேர்ந்தாலும் அன்றைய தின சாப்பாடு அளவு , உடற்பயிற்சி/நடைப்பயிற்சி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கீதா
ஆமாம் கீதா ரங்கன்(க்க்க்க்க்கா). சிலருக்கு எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. எனக்கு இனிப்பு சாப்பிட்டால் ரொம்ப எடை கூடும். அதுவும் தவிர, இனிப்பு சாப்பிடும்போது நம் உடலில் அமில அளவு அதிகமாவதால், அதனைச் சரி செய்ய எலும்பிலிருந்து கால்சியம் எடுத்துக்கொள்ளும், அதனால் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகும் என்று நான் படித்திருக்கிறேன்.
நீக்கு//நிச்சயமாக இல்லை. அப்போதும் இருந்தது பல இப்போதைய வியாதிகள்.// - உண்மை. அப்போல்லாம் ரொம்ப சீக்கிரமே போய்ச்சேர்ந்துவிடுவாங்களே. அதுவும் தவிர அவங்க கை வைத்தியத்திலேயே காலத்தை ஓட்டுவாங்க, இல்லைனா போய்ச் சேர்வாங்க (சித்த மெடிசின் மாத்திரம் எடுத்துக்குவாங்க)
நீக்குஅதுவும் தவிர, இனிப்பு சாப்பிடும்போது நம் உடலில் அமில அளவு அதிகமாவதால், //
நீக்குஆமா நெல்லை அதனாலதான் சர்க்கரை வியாதி இல்லாதவங்களுக்கும் கூட மூட்டு வலி, தேய்மானம் ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி இருந்தால் அது இன்னும் கூடுதல் ஆகும்.
கீதா
ஆமாம் வியாதி என்னன்னு தெரியும் முன்னரே கூட மரணம் சம்பவித்து விடும் காலகட்டங்கள் இருந்தன. தெரிஞ்சவங்க ஆயுர்வேதம் சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டாங்க. உணவே மருந்துன்னு இருந்த காலகட்டங்களும் உண்டு. இப்போதைய காலச்சூழலில் பல செயல்பாடுகள் மாறிவிட்டன. எனவே நம் உடல்நலம் நம் கையில் மாபெரும் சக்தியின் துணையுடன்!
நீக்குகீதா
சூரிய உதயமே நாள் கணக்கீடு.. நடு நிசி என்பது நமக்கு வழக்கத்தில் இல்லை.. நிசாசரர் என்பது நள்ளிரவில் உலவுகின்றவர்க்கான பெயர்..
பதிலளிநீக்குஆயினும் இது கலிகாலம்..
ஊருடன் கூடி வாழ்.. என்றார் ஔவையார்..
நமக்கு நாள் உதயம் என்பது சூரிய உதயம் கணக்குதான். இருந்தாலும் பிறந்த நாள், புத்தாண்டு என்று நடு ராத்திரி அழைத்து வாழ்த்துச் சொல்லும் புதிய போக்கு என்னவோ புதுமையாக இருக்கிறது எனக்கு (அப்படீன்னா எனக்கு வயசு ஆகிறதுன்னு சொல்லிடுவாங்க)
நீக்குஇந்தவாழ்த்தையும் ஒரு பாஸிட்டிவ் ஸ்ட்ரோக்காக Positive stroke ஆக எடுத்துக் கொள்ளலாமே.
நீக்குகீதா
01/01/0001
பதிலளிநீக்குஇதற்கு முன் உலகம் இயங்கிக் கொண்டு தானே இருந்தது..
இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் விடை கிடைக்காது. நம் வரலாற்றில் நமக்கு மதிப்பு இருக்கவேண்டும். நம் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானது. ஆங்கில வருடங்களை நாம் தொடர்ந்தால் நம் பாரம்பர்யம் மறந்துபோயிடும்.
நீக்குவளைகுடா நாடுகளில் இன்னும் அவர்களது நாட்காட்டி தான்!..
பதிலளிநீக்குஅதனையொட்டிய அவர்களது நாள் தான் அவர்களுக்குப் புத்தாண்டு நாள்..
கிரிகோரிய நடைமுறையில் இன்று முதல் நாள்..
பதிலளிநீக்குஇதற்கு நமது கோள்களைக் கொண்டு பலன் சொல்லி -
கல்லா கட்டிக் கொண்டு இருக்கின்றனர்..
புத்தாண்டின் முதல் நாள் நள்ளிரவு தரிசனம் என்ற பெயரில் கோவில்கள் திறந்துவைக்கப்படவில்லையா? எல்லாமே.... பக்தர்கள் மற்றும் வணிகர்களின் நன்மைக்காகத்தான்.
நீக்குஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குபுத்தாண்டின் முதல் நாள் தொடக்கம் திங்கள் பதிவு சிறப்பு, அதிலும் இனிமையாக ஆரம்பித்து இருக்கிறது.
பதிலளிநீக்குமைசூர் பாகு அருமை. மைசூர் பாகு செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.
போன ஞாயிறு பதிவில் (ஒருகருத்தில்) 40 பேருக்கு அக்காராடிசில் செய்யவேண்டும் என்று சொன்னீர்கள்.
//என் மாமியாருக்கு அக்கார அடிசில் ரொம்பப் பிடித்திருந்தது (குடும்பத்தில் அவர் அக்கார அடிசில் செய்வதில் எக்ஸ்பர்ட் என்று சொல்வார்களாம்). எனக்கும் ரொம்பவே மனத் திருப்தி.//
மாமியார் மெச்சிய மருமகன்
அவர்களுக்கு பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி.
வாங்க கோமதி அரசு மேடம். அன்று நான் மாங்காய் தொக்கு மற்றும் அக்கார அடிசில் செய்திருந்தேன். இரண்டும் மிக நன்றாக வந்திருந்தன.
நீக்குஎங்கள் 2023 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குஎங்கள் Blog மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
இன்று ஸ்ரீராம் ஏன் இன்னும் காணோம்? விடுமுறை அவருக்கு இல்லையா?
பதிலளிநீக்குஅடி பொளி! நெல்லை செமையா செஞ்சிருக்கீங்க. படங்களும் பதமும், கடைசி அவுட் புட்டும் சூப்பரோ சூப்பர்!!! கடை போட்டுடலாம்!!!!!
பதிலளிநீக்குபதம் மிகச் சரியாக வருவதற்குச் சற்று முன்பு தட்டில் கொட்டினால், ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வந்துவிடும்.//
ஹாஹாஹா நம்ம வீட்டுல இதுதான் விரும்பப்படும் ஏன்னா பலருக்கும் பல்லு பிரச்சனை.....இத்தனைக்கும் நீங்க எடுத்திருக்கும் பதம் மிகவும் சரியே.....ஆனா வாயில போட்டதும் உடனே கரைஞ்சு இறங்கிடனும் பல்லுல படாம!!!
கீதா
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல, மைசூர்பா செய்யும் கோடௌனில், அங்க உள்ளவங்க, ஆயுளுக்கும் மைசூர்பா செய்வதாலும், எல்லாத்துக்கும் அளவு, டைமிங்ஸ் என்று இருப்பதாலும் அப்படியே செய்யறாங்களோ என்னவோ.
நீக்குவாயில போட்டதும் கரைஞ்சு இறங்கிடனும் - இன்னொரு முறை வேறுவிதமாகவும் செய்ய ஆசைதான். ஆனால் இன்னையிலிருந்து 21 நாட்கள் இனிப்பு கிடையாது, intermittent fasting அதாவது மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை-நான் 6 1/2 க்குள்ளாக மாத்திரம் சாப்பிடுவது, சாதம் இனிப்பு கிடையாது என்று நினைத்திருக்கிறேன். இது எவ்வளவு நாளைக்குச் செல்லும் என்று பார்க்கணும், இதோ நெல்லைப் பயணம் நெருங்குகிறது
நெல்லை நெல்லைக்குப் போய் ஹல்வா சாப்பிடாம வரீங்களான்னு பார்ப்போம்!
நீக்குஅதென்ன intermittent fasting - என்னன்னு தெரியும் சும்மா உங்கள இழுக்கத்தான்....- அப்ப 8 மணிக்கு அப்புறம் மதியம் 12 மணிக்கு முன் நல்லா சாப்பிட்டுக்கலாமோ??!!!!! கலோரி ஏறிடுமே...ஸ்வீட் அப்ப சாப்பிட்டாலும். இது வொர்க்கவுட் ஆகுதா?
கீதா
12-இரவு 8 மணி - இனிப்பு கூடாது. ஆனால் சாப்பிடும் அளவில் ரொம்ப கண்ட்ரோல் இல்லைனு சொல்றாங்க. ஆனாலும் நான் பார்த்துத்தான் சாப்பிடுவேன். கஷ்டப்பட்டு இருப்பது வீணாயிடக்கூடாது இல்லையா அதனால் சாதம் மற்றும் இனிப்புக்குத் தடை. வாங்கி வச்சிருக்கிற 150 ரூபாய் கடலை மிட்டாய், 300 ரூபாய்க்கு வாங்கியிருக்கும் மில்க் ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்..இதையெல்லாம் யோசித்தால் நான் ஆயுளுக்கும் டயட் இருக்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு தூரம் பலிக்கின்றது என்று.
நீக்குநெல்லைல அல்வா வாங்குவதை நாங்க நிறுத்தியாச்சு. அதுக்குப் பதில் 20 ரூபாய்க்கு வாழை இலையில் தருவான். அதை மாத்திரம் வாங்கி அங்கேயே சாப்பிட்டுவிடுவோம். ஊருக்கு என்று வாங்கினால்தான் நாங்க உட்கார்ந்து சாப்பிட வேண்டி வரும். நேரம் இருந்தால் கொஞ்சம் மிக்சர் வாங்குவேன்.
நீக்குவாங்கி வச்சிருக்கிற 150 ரூபாய் கடலை மிட்டாய், 300 ரூபாய்க்கு வாங்கியிருக்கும் மில்க் ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்..இதையெல்லாம் யோசித்தால் நான் ஆயுளுக்கும் டயட் இருக்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு தூரம் பலிக்கின்றது என்று.//
நீக்குநெல்லை சிரிச்சு முடிலைப்பா.......ஹையோ தாங்கலை!!
கீதா
அதுக்குப் பதில் 20 ரூபாய்க்கு வாழை இலையில் தருவான். அதை மாத்திரம் வாங்கி அங்கேயே சாப்பிட்டுவிடுவோம்.//
நீக்குசூப்பர் போங்க. எனக்கு அந்த வாழை இலையில் சாப்பிட்டது அதெல்லம் இந்த சர்க்கரை இருக்குன்னு தெரியும் முன்...இன்னமும் நினைவிருக்கு. ரொம்பப் பிடிக்கும். அதே போல வீட்டில் அதே சுவையுடன் கலர் இல்லாம காரமலைஸ்பண்ணிச் செய்து நல்லா வரும் இப்பதான்செய்வதில்லையே.
ஆஹா தின்னவேலி மிக்ஸர் நல்லா இருக்கும்
கீதா
சூப்பரோ சூப்பர் நெல்லை. நெய்யும் சர்க்கரை அளவும் சூப்பர். நானும் இதே அளவுதான் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். முதல்ல கல்யாணம் ஆவதற்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாதப்ப திருட்டுத்தனமா செய்தப்ப அப்பல்லாம் கல்யாண மைசூர்பாகு தானே தெரியும்! அவங்க போடற அளவுல எல்லாம் ஒன்றுக்கு மூணு நெய் - நான் கப் அளவு எல்லாம் செய்யலை. கடலைமா எடுத்தால் கூடத் தெரியாது ஆனா நெய், சர்க்கரை எடுத்தா தெரிஞ்சுருமே!!!! - அதனால சிறிய குழம்பு கரண்டி அதாவது எண்ணை எடுக்க முட்டைக் கரண்டின்னு போட்டு வைச்சிருப்பாங்களே அந்த அளவு கடலை மாவு. அதை கிளற சின்ன சட்டி வேணும் அதெல்லாம் வீட்டில அப்ப எங்க எல்லாம் குண்டானா இருக்கும்....அதனால தாளிக்க வைச்சிருக்கும் சின்ன சட்டிய எடுத்து அதுல 1: 2 1/2 நெய் : 3 சர்க்க்ரை போட்டுச் செஞ்சு கொட்டினப்புறம் அதுக்கு மேலயும் சர்க்கரை தூவி.....நல்லா வந்தது ஆனா தொண்டைக்கு மேல போக ஹையோ ஸ்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
பதிலளிநீக்குஅதுக்குப் பிறகு திருமணம் ஆன பிறகு சர்க்கரை குறைத்துப் போட்டு செஞ்சு....நெய்யும் குறைத்து நன்றாக வந்தாலும் இன்னும் குறைக்கலாமேன்னு தோன்றி ட்ரையல் அன்ட் எரரில் கற்று பல முறையும் இதே அளவுதான். ஆனால் கடைசியாகச் செஞ்சப்ப நெய் கூடக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு விட்டேன். நல்லா வருது.
கீதா
பரவாயில்லையே கீதா ரங்கன்... வீட்டிலும் வரும் விருந்தினர்களுக்கும் டயபடீஸ் இருந்தால் ஆயுளுக்கும் செய்துபார்க்க முடியாது.
நீக்குநீங்க கொஞ்சம் இனிப்பு அதிகமா சேர்ப்பீங்களோ?
நீங்க கொஞ்சம் இனிப்பு அதிகமா சேர்ப்பீங்களோ?//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொஞ்சம் முழு கருத்தையும் பார்த்துட்டு சொல்லுங்க நெல்லை அண்ணே!!!!!!
சரி சரி இன்னிக்கு எதுக்கு உங்க கூட.... கர் சொல்லக் கூடாது! ஹாஹாஹாஹா
கீதா
இனிமே நான் ஒற்றைச் சொல்லில் இல்லைனா ஒற்றை வரியில் தன கருத்து போடப் போறேன்!!! இம்புட்டு உக்காந்து அடிச்சி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
சூப்பரோ சூப்பர் நெல்லை. நெய்யும் சர்க்கரை அளவும் சூப்பர். நானும் இதே அளவுதான் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.//
நீக்குஇத சரியா பாக்காத நெல்லை உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!!!!!!!!!!!!!!
கீதா
உங்க அனுபவம் வித்தியாசமா இருந்தது. அப்போல்லாம் நம்மை நம்பி சாமான்கள் கொடுக்கணும், நிறைய செய்து பார்த்து சரியா வரலைனா வீணாயிடும்.... நல்ல கத்துக்கிட்டிருக்கீங்க.
நீக்குஆனால் எதையுமே திரும்பத் திரும்பச் செய்துபார்த்தால் நமக்கு பிடிபட்டுவிடும். ஆனா என்ன ஒண்ணு.... திரும்பவும் செய்யும் நேரத்தில் நமக்கு நினைவில் இருக்கணும்.
நெல்லை அப்பல்லாம் நிறைய, யாருக்கும் தெரியாம செஞ்சது....கஸின்ஸ் நாங்க தனியா இருந்தா என்னை ஏதாச்சும் செய்யச் சொல்லிக் கேப்பாங்க. அப்படி செஞ்சு பார்த்ததுதான்.
நீக்குஆமாம் திரும்பத் திரும்பச் செய்யறப்ப பிடிபட்டுவிடும். அப்படித்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.கோல்மால் செய்து புதுசா வந்த ரெசிப்பிஸ் இப்படி நிறைய.
கீதா
அன்றைய அக்கார அடிசில், மாங்காய் தொக்கு எல்லாம் சூப்பரா செஞ்சு அசத்தியிருக்கீங்க நெல்லை!!!
பதிலளிநீக்குeஎல்லாருக்கும் பிடிச்சிருந்திச்சே சூப்பர் போங்க!! அடி பொளி! கலக்குங்க!
கீதா
அதுக்கெல்லாம் காரணம் அன்னைக்கு லக் இருந்ததுதான். சாதாரணமாகச் செய்யும் தயிர்சாதம் அன்றைக்கு சொதப்பிவிட்டது.
நீக்குபடங்கள் மிகவும் அழகாக வந்து இருக்கிறது. செய்முறை விளக்கம் நன்று.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி கில்லர்ஜி... உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக இது அமையட்டும்
நீக்குசகோதரர்கள் ஸ்ரீராம், கெளதமன் மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமைசூர்பா செய்த விதம், செய்முறை விளக்கம், புகைப்படங்கள் அனைத்தும் புது வருடம் பிறந்த அன்று அசத்தலாக அமைந்து விட்டன! வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நெல்லைத்தமிழன்!!
பதிலளிநீக்குவாங்க மனோ சாமிநாதன் அவர்கள். நன்றி
நீக்குமைசூர் பாகுடன் ஆங்கில புத்தாண்டு மலர்ந்துள்ளது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
வாங்க மாதேவி.
நீக்குமைசூர்ப்பாகெல்லாம் இப்போ மறந்தே போச்சு! :( நெல்லை சொதப்பலையும் விடாமல் குறிப்பிட்டதுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு