பொன்னு
துரை செல்வராஜூ
கண்களுக்கு மேலாக புறங்கையை வைத்துக் கொண்டு வானத்தை
அண்ணாந்து பார்த்து அளந்தாலும் நல்ல சேதி ஒன்றும் பிடிபடவில்லை..
இப்போ ஐப்பசி கார்த்திகை ல மழ பெய்யணும் ன்னா எப்பிடி பெய்யும்?.. மார்கழி ல தான் கர்ப்ப ஓட்டம் சரியா இல்லையே..
கார்த்திகையில் காவேரி காய்ந்து கிடக்கின்ற கவலை.. உச்சி வெயில் தகிக்கின்ற கவலை..
பொன்னு மனதில் யோசனை....
பொன்னு.. அதுதான் பெயர்.. வசதி வாய்ப்புகள் இருந்திருந்தால் பொன்னம்மாள் என்ற பெயர் கிடைத்திருக்கும்.. அப்படி ஒன்றும் இல்லாததால் பொன்னு என்றே இருந்து விட்டாள்..
இப்போதைக்கு அறுபதுக்குள் தான் வயது என்றாலும் ஆதரவற்று இருக்கின்றாள்..
ஏன் பிள்ளை குட்டி என்று யாரும் இல்லையா?.. என்றால்,
கருத்தான் அவளது புருசன்.. ஏரிக்கரையில் மூன்று மா நிலத்தை உழுது பயிர்ச் செலவு செய்து கொண்டிருந்தான்.. இது ஊரில் இருந்த எல்லாருக்கும் தெரியும்..
வருசா வருசம் அறுவடை முடிஞ்சதும் ஏரிக்கரை முனியனுக்கு ஆறு மரக்கால் நெல் அளந்து கோழிக் குழம்பு வச்சி படையல் போடுவான்..
அதுக்கப்புறமா மகசூல் வரி.. ன்னு பட்டாமணியர் கிட்டே ரெண்டு ரூவாயக் கொடுத்துட்டு ரசீது வாங்கிட்டு வந்து மாடப் பிறையில மடிச்சி வைப்பான்..
இப்படி இதையெல்லாம் பத்திரமா வெச்சிருந்தா இத சாட்சியா வச்சி - எட்டு பத்து வருசத்துல கருத்தான் பேருக்கு அந்த நிலத்த கலெக்டர் ஐயா பட்டா போட்டு கொடுத்துவார் ன்னு ஒரு பேச்சு..
கருத்தானும் பொன்னும் வாழ்ந்த வாழ்க்கையில ரெண்டு பசங்க.. கருத்தான் மாதிரியே..
இப்படியா காலம் போய்க்கிட்டு இருந்தப்போ வவுத்துப் போக்கு ன்னு படுத்த கருத்தான் கதையாகி விட்டான்..
பத்து நாளைக்கு அப்புறம் வயக்காட்டு பக்கம் போன பொன்னுகிட்ட - இது ஏரிப் பொறம் போக்கு.. சர்க்காருக்கு சொந்தம்.. அத்து மீறி நொழைஞ்சா ஜெயில் தான்.. னு சொல்லிக்கிட்டு ஊர் பிரசரெண்டு குறுக்கால நின்னார்..
புருசன் மடிச்சி வெச்சிருந்த ரசீது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பட்டாமணியர் வீட்டுக்குப் போய் நின்னா பொன்னு..
அவர் தாலுக்கா ஆபீசுக்கு கையக் காட்டினார்.. ரெண்டு வருசம் நடையா நடந்தும் ஒன்னும் ஆகவில்லை..
அதுக்கு அப்புறம் ரசீது எல்லாத்தையும் அள்ளி அடுப்புக்குள்ள போட்டு கொளுத்திட்டு கூலி வேலைக்குப் போனாள் பொன்னு..
நாத்து நடறது, களை எடுக்கறது, கதிர் அறுக்கறது ன்னு பல வேலைகளையும் பசங்களோட பொன்னு செய்யப் போக - வீட்ல சோறு பொங்கிக்கிட்டு இருந்தது..
திடுக்குன்னு ஒருநாள் -
பெரியவனுக்கு வயசாச்சே.. கல்யாணம் பண்ணி வைப்போம் ன்னு புறப்பட்ட நேரத்துல ரெண்டு பசங்களும் முறுக்கிக்கிட்டு நின்னானுங்க..
இப்போ கல்யாணம் எதுக்கு.. நாங்க கேரளாவுக்குப் போறோம்.. நல்ல வேலை அங்கே கிடைக்குதாம்.. ன்னு சொல்லிட்டுப் போனவனுங்க ஆறு மாசம் கழிச்சு கையில் பணத்தோட வந்தானுங்க.. தாயும் புள்ளைங்களுமா நல்ல சோறு ஆக்கித் தின்னுட்டு நாலு நாள் கழிச்சிப் போனானுங்க...
மறுபடியும் ஆறு மாசம் கழிச்சு வந்தானுங்க.. திரும்பவும் போனானுங்க.. அதுக்கு அப்புறம் போனவனுங்க வரவும் இல்லை.. ஒரு சேதி தெரியப்படுத்தவும் இல்லை..
அதுவும் ரெண்டு வருசம் ஆச்சு..
என்னா ஏது.. ன்னு பூசாரியக் கூப்பிட்டு உடுக்கை அடிச்சிக் கேட்டப்போ - ஏரிக்கரை முனீஸ்வரன் குறை இருக்கு.. ன்னு சொல்லிட்டாங்க..
இதென்னடா சோதனை ன்னு கையில இருந்த பணத்துல ஒரு மாலை வாங்கிப் போட்டு சூடம் ஏத்தி வைத்தாள் பொன்னு - புள்ளைகளுக்கு காவலா இருங்க சாமீ.. - ன்னு..
ஏதோ அம்பது அறுவது வருசத்துக்கு முன்னால மகராசன் ஒருத்தர் மந்திரியா இருந்தப்போ ஏழைக் குடியானவங்களுக்கு ன்னு பட்டா போட்டு மாமனார் கையில கொடுக்க அந்த எடத்துல கட்டுனது தான் இந்த வீடு..
அத வச்சி பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தாலும் ஊரு பெருசா ஆனதால வயக்காடு எல்லாம் வீடு ன்னும் ரோடு ன்னும் ஆகி - வெள்ளாமையும் குறஞ்சு போச்சு.. வேலயும் இல்லாமப் போச்சு..
காவேரியும் காஞ்சு கிடக்கு..
ஏரு கலப்பை காணாமப் போய் எந்திர தந்திரம் எல்லாம் வந்து அதுகளும் ஓஞ்சு கிடக்கு..
காவேரி காஞ்சு கெடந்தா கஞ்சிக்கு என்ன பண்றது..
மார்கழியில கர்ப்ப ஓட்டம் இல்லாம இப்போ எப்படி மழ?.. இந்த ஊரு காஞ்சு கெடக்கு.. பட்டணத்துல ஆரவாரமா மழ.. ஊருக்கு ஒரு ஆகாசமா?...
சனங்க ஆச்சர்யமா பேசிக்கிட்டாங்க.. பேய் மழயால பட்டணத்து ரோடெல்லாம் தண்ணியாம்..
சினிமா பொட்டியில காட்றாங்களாம்.. ஊரே வெள்ளக் காடா இருக்குதாம்.. சனங்கள பரிசல் ல வச்சி இழுக்கறாங்களாம்.. பொம்பளப் புள்ளைங்க ஒதுங்கக் கூட யோக்கியதை இல்லையாம்..
என்ன கருமம் இது.. ஏன் இப்படி.. ஒரே நேரத்துல ஊருக்கெல்லாம் மழ பெய்யாதா.. ன்னு பொன்னு மனசுல குழப்பம்..
சனங்க போய்க்கிட்டு இருக்குற வேகத்துல இதப் பத்தி எல்லாம் யோசிக்கறதுக்கும் நேரம் இல்லாமப் போச்சு..
இத்தனை காலமும் வயக்காட்டு வேலைக்கு துணையா வந்தவங்களுக்கும் வயசானதால மூலையில முடங்கிட்டாங்க..
பொன்னு கையில ரெண்டு மாசமா காசும் இல்லை.. முன்ன மாதிரி பசியும் தாங்க முடியறதில்லை..
அப்போ தான் பக்கத்துத் தெரு காளியம்மா இங்க கூட்டிக்கிட்டு வந்தா.. சேப்பு சாயம் அடிச்ச பஸ் ல டிக்கிட்டு எடுக்க வேண்டியது இல்லயாம்...
பத்து மைல் தூரத்து கோயில்..
கோயில் வாசல் ல ஏகப்பட்ட கிழங்கட்டைகள்..
பொன்னுக்கு அதிர்ச்சி..
இங்கே எதுக்குடி கூட்டிட்டு வந்தே.. ன்னு கேட்டதுக்கு - கோயில்ல தரும சாப்பாடு போடறாங்க.. தெனமும் மத்தியானம் வந்து சாப்புட்டுட்டுப் போவோம்..
மத்தியானம் ஒரு வேளை வயித்துக்கு பசி இல்லாமப் போகும்.. ந்னு சொன்னா காளியம்மா..
பொன்னுக்கு இது நல்ல யோசனையா இருந்திச்சு..
ஆனா, மண்டவத்துல வச்சி சோறு போடற வரைக்கும் கோயில் வாசல் ல தான் நிக்கணும்..
கோயிலுக்கு வர்ற சனங்கள் ல ஒன்னு ரெண்டு பேர் வாசல் ல நிக்கிறவங்க கையில ஏதாவது சில்லறை கொடுத்துட்டுப் போவாங்க.. இப்படித் தான் நாலு நாளைக்கு முன்னால யாரோ புண்ணியவான் ஒருத்தர் சேலை கொடுத்தார்.. இன்னொருத்தர் போர்வை கொடுத்தார்.. இதுவும் நல்லாத் தான் இருக்கு..
இருந்தாலும் யாசகமா வாங்கறது?.. காலம் பூரா கழனியிலயும் களத்து மேட்டுலயும் பாடுபட்டுட்டு இப்போ ஒருவேளை சோத்துக்கு கோயில் வாசல் ல நிக்கிறதாவது...
பொன்னுக்கு வெக்கமாக இருந்தது..
இதுக்கெல்லாம் விடிவே இல்லையா சாமீ..
மனசு குமுறிய போது பசங்க ரெண்டு பேரும் மனசுக்குப் பிடித்த மலையாளத்து மைனாக்களைப் பற்றி தாயிடம் சொல்லி கல்யாண ஏற்பாடு செய்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்..
***
எங்கள் Blog 2023 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்.
செவ்வாய்க்கிழமை பதிவுகள்
எங்கள் நன்றி.
அடே டே ! கடந்த 2023 ஆம் ஆண்டிலும் துரை செல்வராஜூ அதிக கதைகள் எழுதி முன்னணியில் உள்ளார்!
வாழ்த்துகள் து செ !
செவ்வாய் பதிவுகளுக்கு அதிகம் படம் வரைந்து, வாசகர்களின் பாராட்டைப்(?) பெற்ற "- - - - - -" அவர்களுக்கு கருத்துரையில் உங்கள் பாராட்டு அல்லது குட்டு அளிக்கவும்.
திங்கள் பதிவா (ரவாலாடு ) அல்லது செவ்வாய் பதிவா என்று குழப்பி, தொடர் கதையா அல்லது சிறுகதையா என்றும் குழப்பிய கடைசி நபருக்கு உங்கள் சார்பில் 'குழப்பல் திலகம்' என்னும் பட்டம் கொடுக்கிறோம்.
= = = = = = =
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க தமிழ்...
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாழ்க.. வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குசெவ்வாய் கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்குவணக்கம்..
உங்க பின்னாடி பாருங்க.. நானும் நின்னு வரவேத்துக்கிட்டிருக்கேன்...
நீக்குஇன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநாங்களும் நன்றி..!
நீக்குநன்றி.
நீக்குஇருபத்து ஐந்து சிறுகதைகள்..
பதிலளிநீக்குஎல்லாம் உங்களால் - எபியின் அன்பு வாசகர்களால் ஆயிற்று..
அவ்வப்போது அழகு சேர்த்து பிரசுரம் செய்து ஊக்கம் அளித்த அன்பின் ஸ்ரீராம் கௌதம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
சிறிய அளவிலான கைத்தல பேசியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு தங்களின் ஆதரவும் அன்பும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..
இதுவே என்றும் தேவை..
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி..
+எங்கள் நன்றி.
நீக்குஎனது ஆக்கங்களுக்கு அழகாக சித்திரம் எழுதி சிறப்பித்த அன்பின் கௌதம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு// சிறிய அளவிலான கைத்தல பேசியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு //
பதிலளிநீக்குமிகவும் பாராட்டபப்ட்ட வேண்டிய அம்சம். ரொம்ப பொறுமை வேண்டும், திறமை வேண்டும். நீங்களும் கமலா அக்காவும் மொபைலிலேயே இவற்றைச் செய்வது வியப்பு, பிரமிப்பு.
/// சினிமா பொட்டியில காட்றாங்களாம்.. ஊரே வெள்ளக் காடா இருக்குதாம்.. சனங்கள பரிசல் ல வச்சி இழுக்கறாங்களாம்.. பொம்பளப் புள்ளைங்க ஒதுங்கக் கூட யோக்கியதை இல்லையாம்..
பதிலளிநீக்குஎன்ன கருமம் இது..///
இப்படியெல்லாமா எழுதியிருக்கேன்!?..
ஆச்சர்யம்..
கிராமத்து பொன்னுகளின் அவல நிலையையும் வேதனையையும் சிறுகதை நன்றாகச் சொல்லிச் சென்றது.
பதிலளிநீக்குவருட ஆரம்பத்தில் இவ்வளவு எதிர்மறை வேண்டாம் என நினைத்து, ஓஷி பஸ் (பொன்முடி), கிராம்ம், கிழவி பொன்னு என எதற்கும் படம் போட நினைக்காமல் மலையாளப் பெண்களின் படத்தை கௌதமன் சார் கொண்டுவந்தாரோ?
மாங்குயிலும் பூங்குயிலும் அருமையாக இருக்கின்றன...
நீக்குகௌதம் அவர்களுக்கு நன்றி..
நெல்லை அவர்களுக்கும் நன்றி..
// கிராம்ம், கிழவி பொன்னு என எதற்கும் படம் போட நினைக்காமல் மலையாளப் பெண்களின் படத்தை கௌதமன் சார் கொண்டுவந்தாரோ?// ஆம்! அதே, அதே!
நீக்குஇன,றைக்கு ரொம்ப பாசிடிவ் கதையாக இருக்கும் என எண்ணினேன். நாட்டுல பாசிடிவ் குறைந்துவிட்டது போலிருக்கு
பதிலளிநீக்குசென்னையில் பெய்த மழையும் தேங்கி நின்ற நீரும் இந்தக் கதைக்கு அடிப்படை...
நீக்குஅந்த சில நாட்களின் உளைச்சலில் எழுந்த கதை இது..
விழுதுகள் வேரூன்ற இருக்கின்றன.. மாங்குயிலும் பூங்குயிலும் வர இருக்கின்றன..
இனி மங்கல வைபோகம் தான்..
நெல்லை அவர்களுக்கு நன்றி..
இதை என்ன பாசிடிவ் கதை இல்லை என்றா நினைத்தீர்கள், நெல்லை?
நீக்குதம்பி துரையால் பாசிடிவ் அல்லாத கதைகளை எழுதவே முடியாது.
அப்படியான அவர் நல்லெண்ணம் தான் (நினைப்பதெல்லாம் நல்லதே நினைப்பதால்) அவரை வெவ்வேறு திருப்பங்கள் கொண்ட மாறுபட்ட கதைகளை எழுத முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.
பெற்ற தாய்க்கு நல்லபடி மருமகள்கள் அமைவதை விட வேறு என்ன தனிப்பட்ட சந்தோஷம் பொன்னுக்கு
அமைந்து விட முடியும்?
இறைவன் சன்னதியில் கிடைக்கும் எந்த உணவும் இறைவனின் பிரசாதம் தான். அந்த மாதிரியான விசேஷ ஏற்பாட்டை தன் அணுக்க பக்தர்களுக்குச் செய்து அவர்கள் பசிதீர்ப்பதும் இறைவனின் கருணை தான்.
நடப்பதெல்லாம் நாராயணனின் செயல். அவன் அருட் கடாட்சமே என்ற எண்ணம் கொள்வோம்.
அவன் அருளால் அவன் தாள் பணிந்து என்பதே மஹா வாக்கியம் தான்.
/// பெற்ற தாய்க்கு நல்லபடி மருமகள்கள் அமைவதை விட வேறு என்ன தனிப்பட்ட சந்தோஷம் பொன்னுக்கு
நீக்குஅமைந்து விட முடியும்?..///
அருமை.. அருமை...
மகிழ்ச்சி..
ஜீவி அண்ணா அவர்களுக்கு நன்றி..
நடப்பதெல்லாம் நாராயணனின் செயல். அவன் அருட் கடாட்சமே..
நீக்குஓம் ஹரி ஓம்..
அவன் அருளால் அவன் தாள் பணிந்து என்பதே மஹா வாக்கியம்..
நீக்குஉண்மை.. உண்மை..
அவன் அருளால் அவன் தாள் பணிந்து என்பதே மஹா வாக்கியம்..
நீக்குஉண்மை.. உண்மை..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் இன்று மட்டுமின்றி, எந்த நாளும் இறைவன் துணையாக இருந்து அருள் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக.. வருக..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசென்ற வருடத்திலும் நிறைய கதைகளை படைத்து எபி வாசகர்களின் மனம் மகிழுமாறு படிக்கத் தந்த சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இந்த வருடமும் இதே போல் அவரது கற்பனையில் உதிக்கும் கருத்தாழம் மிக்க பல கதைகளை நாம் படித்து இன்புற இறைவன் அவருக்கு சகல வசதிகளை (உடல்நலம், மனபலம்.) தந்து அருள் புரியட்டும். வாழ்க வளமுடன். பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இறைவன் சகல வசதிகளை (உடல்நலம், மனபலம்.) தந்து அருள் புரியட்டும். வாழ்க வளமுடன். பிரார்த்தித்துக் கொள்கிறேன்..
நீக்குஅதுவே எனது பிரார்த்தனையும்..
மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு// சிறிய அளவிலான கைத்தல பேசியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு //
மிகவும் பாராட்டபப்ட்ட வேண்டிய அம்சம். ரொம்ப பொறுமை வேண்டும், திறமை வேண்டும். நீங்களும் கமலா அக்காவும் மொபைலிலேயே இவற்றைச் செய்வது வியப்பு, பிரமிப்பு./
சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுத்துலகத்தின் மேல் கொண்டிருக்கும் ஆர்வம்/உழைப்பு கண்டு நானும் மிகவும் வியக்கிறேன். பிரமிக்கிறேன். அவரின் மாபெரும் பொறுமை கண்டு என் மனமும் மிக மகிழ்ச்சியடைகிறது .அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆயினும், இந்த விஷயத்தில் அவர் பெரிய மலை. நான் சிறு மடு. இருந்தாலும் என்னையும் அவருடன் நினைவு கூறி குறிப்பிட்டமைக்கு என பணிவான நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// எழுத்தின் மேல் கொண்டிருக்கும் ஆர்வம்/உழைப்பு.. ///
நீக்குஆர்வம்
அதனால் தான் இயன்றவரை
உழைப்பு..
இறைவன் அருள் புரிகின்றான்..
நானும் வலது கை ஆள் காட்டி ஒரு விரல் தட்டச்சாளன் தான்.
பதிலளிநீக்குமனதில் படுவதை சொல்லியே ஆக வேண்டும் என்ற உத்வேகம் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இரு கைகளாலும் வேகமாக தமிழ் தட்டச்சு செய்ய இயலும்..
நீக்குமாணவர்களுக்கு
பற்பல ஆய்வு ஏடுகள் செய்து கொடுத்திருக்கின்றேன்...
இப்போது சூழ்நிலை மாறி விட்டது..
ஜீவி சார்...ஆர்வம்தான் ஒற்றை விரலிலும் பின்னூட்டமோ படைப்புகளோ உங்களை எழுதத் தூண்டுகிறது. துரை செல்வராஜு சாரின் மொபைலில் எப்படி அவர் தட்டச்சு செய்கிறார் என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். நல்ல மனது, உத்வேகம் போன்றவைதான் காரணம்
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான கதை. இப்போதுதான் படித்தேன். நன்றாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கை தீடீரென தடம் மாறி போவது பெருந்துயரந்தான். ஆனால், எல்லாமே விதிவசம் என அதையும் சகித்தபடி வாழ்பவர்கள்தான் அதிகம். அப்போதும் இறைவன் அவர்களின் பொறுமைக்கு பரிசாக அவர்களை கைவிடாமல், கைப்பற்றி நல்லதை காண்பிக்க அழைத்துச் செல்வதும் இறைவனின் விளையாடல்களில் ஒன்றுதான்.
கதைப் படித்து வரும் போது மனம் சற்றே கனத்துப்போனது. பொன்னுவின் வாழ்வில் இனி நல்லது ஒன்றையே இறைவன் வழித் துணையாக காட்டட்டும் என மனது பரிதவித்த அந்த வேளையில் பிரார்த்தித்துக் கொண்டது. நல்லெண்ணங்கள் நம்மை என்றும் நல் வழிக்குத்தான் அழைத்துச் செல்லும்.
நல்லதொரு அருமையான நேர்மறை கதையை வருட ஆரம்பத்தில் தந்த உங்களுக்கு என் அன்பான நன்றி.
கதைக்கு வெகு பொருத்தமாக பொன்னுவின் துயர் தீர்க்க மகன்கள் புறப்பட்டு வரும் பேருந்தையும் , அவர்களுடன் வாழ்வில் இணையப் போகும் அழகான மருமகள்களின் படத்தையும் இணைத்துத் தந்த கௌதமன் சகோதரருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// நல்லெண்ணங்கள் நம்மை என்றும் நல் வழிக்குத்தான் அழைத்துச் செல்லும். ///
நீக்குஉண்மை தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம்..
நீக்குவாழ்க வளமுடன்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசென்ற வருடத்திய "ரவாலாடு" கதையையும் நினைவிலிருந்து மறக்க முடியாது. சென்ற வருடத்தில் கதைகள் எழுதி செவ்வாயை சிறக்க வைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அனைவருக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// சென்ற வருடத்தில் செவ்வாயை சிறக்க வைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அனைவருக்கும் நன்றி...///
நீக்குமகிழ்ச்சி..
நன்றி..
கதை கிராமத்து கைம்பெண்ணின் கஷ்டத்தை சொல்கிறது.
பதிலளிநீக்குஇலவசபஸ்ஸில் கோவில், அங்கு நடக்கும் அன்னதான சாப்பாடு
சாப்பிட டோக்கன் வாங்க வேண்டும். காத்து இருக்க வேண்டும்.
அதிலும் சில நன்மைகள் கிடைக்கிறது என்று தோழி சொல்கிறார்.
ஏழைகள் வாழ வழி இருந்தாலும் ஏற்பது இகழ்ச்சி என்று நன்றாக இருந்த உள்ளம் தவிக்கிறதே!
மகன்கள் வந்த பின் நிலைமாறுமா பார்ப்போம்.
புத்தாண்டில் விடிவு பிறக்கட்டும்.
/// ஏழைகள் வாழ வழி இருந்தாலும் ஏற்பது இகழ்ச்சி என்று நன்றாக இருந்த உள்ளம் தவிக்கிறதே..///
நீக்குஇப்படியான உள்ளங்களுக்கு இசைவாக நல்ல எதிர்காலம் புது வரவாக வந்து கொண்டிருக்கின்றதே..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
கதைக்கு பொருத்தமாக சார் போட்டு இருக்கும் படம் அருமை.
பதிலளிநீக்குஇரண்டு சகோதர்கள் வரும் பேரூந்து படம் அருமை. கேரளத்து பைங்கிளிகள் படமும் அழகு.
நன்றி.
நீக்கு/// இரண்டு சகோதர்களும் வருகின்ற பேருந்து படம் அருமை. கேரளத்து பைங்கிளிகள் படமும் அழகு.///
பதிலளிநீக்குஎங்கிருந்து பிடித்தாரோ கௌதம் - தெரியவில்லை..
அருமை..
:)))
நீக்குதுரை அண்ணா இன்றைய கதை ரொம்ப நல்லா இருக்கு. இந்த எழுத்து மொழியும் நடையும் என்னைக் கவர்ந்தது. பொன்னுவின் கோணத்தில் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
/// இந்த எழுத்து மொழியும் நடையும் என்னைக் கவர்ந்தது. பொன்னுவின் கோணத்தில் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. ///
நீக்குமகிழ்ச்சி..
நன்றி சகோ
வசதி வாய்ப்புகள் இருந்திருந்தால் பொன்னம்மாள் என்ற பெயர் கிடைத்திருக்கும்.. அப்படி ஒன்றும் இல்லாததால் பொன்னு என்றே இருந்து விட்டாள்.. //
பதிலளிநீக்குரசித்த வரி. பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பொன்னுவின் நிலையைச் சொன்னவிதத்தை ரசித்தேன்.
இப்படி வேலைக்குப் போக வழியில்லாமல் சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருக்கும் பெண்களை இப்படிச் சிலர் கோயில்ல சாப்பாடு கொடுக்கறாங்கன்னு சொல்லிச் சேர்த்துவிடுவது இங்கும் பார்க்கிறேன். குறிப்பாக வியாழன் ஷீரடிபாபா கோயிலில் அன்னதானம் உண்டே. அப்போது.
ஏழ்மை நிலையில் ஒரு கிமாத்துப் பெண்ணின் கதையைச் சொன்ன விதம் நல்லாருக்கு துரை அண்ணா.
கடைசில ரெண்டு பசங்களும் கேரளத்துப் பைங்கிளிகளைக் கூட்டிக்கொண்டு வராங்க போல! அப்படியாச்சும் பொன்னுவுக்கு நல்லது நடக்கட்டும்.
கீதா
// கடைசில ரெண்டு பசங்களும் கேரளத்துப் பைங்கிளிகளைக் கூட்டிக்கொண்டு வராங்க போல!.. //
நீக்குபசங்க ரெண்டு பேரும் வெவரமானவனுங்க..
இனி வசந்தம் தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
கௌ அண்ணா பேருந்து படத்தோடு, கேரளத்து மைனாக்களின் படங்கள் செம போங்க...
பதிலளிநீக்குஅது சரி துரை அண்ணா சேப்பு கலர்னு சொல்லிருக்கிறாரே. பொன்னு பஸ் தெரியாம மாறி, மஞ்ச கலர் பஸ்ல ஏறிடுச்சு போல!!!!!!!! ஹையோ மஞ்ச கலர் பஸ்னா பைசா கேட்டிடாம இருக்கணுமே பொன்னுகிட்ட பைசா இருக்காதே!
கௌ அண்ணா உங்களுக்குப் பாராட்டுகள்!!! துரை அண்ணா உங்களை சித்திரச் செல்வர்னு பட்டம் கொடுத்திருக்கிறாரே!
எனவே கணினி வழி வரைவதால் - ஹைடெக் சித்திரச் செல்வர்னு!!!!
கீதா
கம்ப்யூடெக் சித்திரச் செல்வர்
நீக்குகீதா
பேருந்தின் பெயரைக் கவனித்தீர்களா..
நீக்குஏகப் பொருத்தம்...
பசங்க கேரளா பஸ்ஸுல கிளிகளைக் கூட்டிட்டு வர்றாங்க (மலையாள போர்ட் பார்க்கலையா?) கௌதமன் சார் இதிலெல்லாம் விட்டுட மாட்டார்
நீக்கு/// கௌதமன் சார் இதிலெல்லாம் விட்டுட மாட்டார்.. //.
நீக்குநான் அதனால தான் கவுதம ஜியை கௌதம் என்று சொல்கின்றேன்..
ஓஹோ ஆமாம்ல இதுபொன்னு போற பஸ் இல்ல்....கேரளத்து மைனாக்கள் வரும் பஸ். அதான் மலையாளம்!!! க்ஷெமிக்கணும் கௌ அண்ணா! மனஸ்லாயி!!! கேட்டோ கௌ அண்ணா. அதான பாத்தேன் கௌ அண்ணாவா கொக்கா!!
நீக்குகீதா
ஆகா..
நீக்குகௌ அண்ணாவா கொக்கா!!..
கொக்கு!
நீக்கு/// குறிப்பாக வியாழன் ஷீரடி பாபா கோயிலில் அன்னதானம் உண்டே.. ///
பதிலளிநீக்குஇந்த மாதிரி அன்னதான கூடங்கள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்..
சாப்பிட்டும் இருக்கின்றேன்..
புண்ணியம்...
கம்ப்யூடெக் சித்திரச் செல்வர்
பதிலளிநீக்குஇது அருமை..
நன்றி!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு/// பொன்னு பஸ் தெரியாம மாறி, மஞ்ச கலர் பஸ்ல ஏறிடுச்சு போல!!!!!!!! ஹையோ மஞ்ச கலர் பஸ்னா பைசா கேட்டிடாம இருக்கணுமே பொன்னுகிட்ட பைசா இருக்காதே!..///
பதிலளிநீக்குஇது ப்சங்க ரெண்டு பேரும் கேரளாவுல இருந்து வர்றதாக்கும்...
மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா புத்தம் புது வருடக் கணக்கெடுப்பு நல்லா இருக்கு... துரை அண்ணன் இதை வச்சே இவ்வருடம் இன்னும் அதிகம் கதை எழுத வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபொன்னு.. கருத்தான்.... கதை ஓகே.. , கதையை விட வசனங்கள் எழுத்துக்கள் சூப்பராக இருக்கு துரை அண்ணன்...
/// கதையை விட வசனங்கள் எழுத்துக்கள் சூப்பராக இருக்கு .. //
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மு.அ.அ..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஇந்தப் புத்தாண்டிலாவது அதிகம் போஸ்ட்கள் போட வாழ்த்துகிறேன்... இது நேக்குச் சொன்னேன்...:))
அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ..
நெல்லைத்தமிழன் என ஒருவர் இருந்தாரே... அவர் வந்தால் அவரையும், சிரித்த முகத்தோடு, விசாரித்துப்போட்டுப் போறேன் என ஆராவது சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்:)..
பதிலளிநீக்கும்ம்..
நீக்குநான் சொல்லிடறேன்...
/// முற்றும் அறிந்த அதிரா...///
பதிலளிநீக்குஇப்படித்தான் தெளிவா இருக்கோணும்..
நான் டெலிவாகிட்டேன் துரை அண்ணன்:)
நீக்கு(எங்கள் பிளாகை ) முற்றும் மறந்த அதிரா என்று படித்தேன்!
நீக்குகெள அண்ணன் உங்களுக்காவது என்னைத் தெரிஞ்சுதே... நான் ஓவரா மெலிஞ்சிட்டேனாக்கும்[டயட்டில எல்லோ இருக்கிறேன்:)] அதனாலதான் ஆருக்கும் தெரியேல்லைப்போலும் என நினைச்சேன்:)..
நீக்குஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே:)).. வந்தோரை வரவேற்கும் தமிழகம் எங்கே..எங்கே..ங்கே...ங்கே..ங்கே....(இது எக்கோவாக்கும்:))