பொருவிளங்கா உருண்டை
ஹேமா
இதற்கு தேவையான பொருட்கள்
மஞ்சள் சோளம் அல்லது முத்து சோளம் 1 கப்
வறுத்து மிக்சியில் அரைத்த அவல் 1 கப்
பொட்டுக்கடலை பவுடர் 1 கப்
பயத்தப்பருவவை வறுத்து பொடிபண்ணி 1 கப்.
அல்லது கோதுமை மாவு 1 கப் (நான் அதுதான் சேர்த்திருக்கிறேன்)
மொத்தம் 4 கப்.
4 கப் மாவுக்கு 2 கப் வெல்லம்.
அது முழுகும் அளவு தண்ணீர் (அல்லது அரை கப் அளவு தண்ணீர்)
சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி கொஞ்சம் நெய் (தேவைப்பட்டால்)
ஆளிவிதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, முந்திரி பொடித்தது (தேவைப்பட்டால்)
இந்த நான்கு மாவையும் நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்/ வெல்லத்தை வடிகட்டி முத்துப்பாகு அளவு காய்ச்சிக் கொள்ளவும்.ரொம்ப முத்தனும்னு இல்லை. ஓரளவு முத்துப்பாகு வந்த உடனே இந்த மாவுகளோட சுக்குப்பொடி போட்டு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். நான் இதனுடன் ஆளி விதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை எல்லாம் சேர்த்துக் கொண்டேன். உங்களுக்காக கொஞ்சம் முந்திரி பருப்பு பொடிச்சு காட்டியிருக்கிறேன்.
இதனுடன் ஏலக்காய் பொடி போட்டு மாவைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பாகு ரடியானதும் இந்த மாவை அதிலேயே கொட்டி கிளறலாம். அல்லது பாகை மாவில் கொட்டியும் கிளறி உருண்டை பிடிக்கலாம்.
பின்குறிப்பு : மாவுகளை நன்கு சிவக்க வறுத்துக் கொண்டால்தான் உருண்டை கடுமையாக இருக்காது. வேண்டுமானால் பாகு தயாரானதும் மாவை கொட்டும் சமயம் இரண்டு மூன்று ஸ்பூன் நெய் விட்டுக் கொண்டால் வாசனையாக நன்றாக இருக்கும்.
===============================================
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
பதிலளிநீக்குஉழந்தும் உழவே தலை..
தமிழ் வாழ்க..
பொங்கலோ பொங்கல்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நாரதரே.. பொருள் விளங்கா உருண்டை எனில் என்ன!..
பதிலளிநீக்குவேறெது இந்த
உலகம் தான் !..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பொருள் விளங்கா உருண்டை படங்களுடன் செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சில சாப்பாட்டு சமாச்சாரங்களை
நீக்குவீட்டில் சாப்பிடக் கொடுக்கும் பொழுது
எந்தப் புத்தகத்தையாவது மேய்ந்து கொண்டு இயந்திரகதியில் கொடுத்ததை சாப்பிட்டு விடுவது என் வழக்கம். "என்ன சாப்பிட்டீர்கள் தெரியுமா?" என்று வீட்டில் கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாது சில நேரங்களில் விழிப்பது வழக்கம். அப்படி விழித்ததில் இந்த பொருவிளங்கா உருண்டை ஒன்று.
இன்று இந்தப் பதிவை வாசித்து விட்டுத் தான் இதைச் செய்வதில் இவ்வளவு பாடும் செய்முறை சிரமங்களும் இருக்கா என்று வியந்து போனேன்.
சகோதரியின் செய்முறை நேர்த்தி அருமை. படங்களோ தெளிவு. வீட்டிலும் காட்டினேன். அவர்களும் வாசித்துப் பார்த்து நன்றாக விளக்கமாக எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
இதையும் என் பாராட்டுகளோடு சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
எபி ஆசிரியர் குழு, வாசகர்கள் அனைவர் களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநேற்றைய போகி சிற்றுண்டியான போளிக்கு முக்கியத்துவம் கொடுத்து 'போளி செய்வது எப்படி?' இன்றைய சமையலறைக் கட்டுரை அமைந்திருக்கலாம்.
புத்தாண்டில் பல புதுமையான முயற்சிகளுக்கு ஆசிரியர் குழு யோசித்து செயல்பட வாழ்த்துக்கள்.
ஜீவி சார் கோன்றவர்கள் கலந்துகொண்டு (வாசகராக) சிறப்பித்தால், எல்லாவிதமான செய்முறைகளையும் நான் எழுதுவேன். ஆனா ஜீவி சாரோ, செவிக்கு கண்ணுக்கு உணவில்லாத நேரமே அமையப் பெறாதவர், எப்போன்னாலும் சாப்பாடா என்பவர்... அதனால்தான் போளியைப் பற்றிக் கேட்டது ஆச்சர்யமாக இருக்கு.
நீக்குஅமெரிக்காவில் தற்போது இருப்பதால் நேற்று தான் போகி. இன்று பொங்கல். போகிக்கு வழக்கத்தை விட்டு விடாது போளி செய்திருந்தார்கள், நெல்லை. மெது மெதுவென்று நன்றாக இருந்தது. அந்த நினைப்பில் சொன்னேன் அவ்வளவு தான்.
நீக்குஇந்த புத்தாண்டில் எபியின் வாசிப்பு சகல பகுதிகளிலும் கூடுவதற்காக சொன்னது அது என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.
திங்களுக்கு நீங்களும் எழுதுங்கள்.
வாசித்து சாப்பிட்டுப் பார்த்த மாதிரி எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்.
நானும் செவ்வாய், சனிக்கிழமைகளுக்கு
நீக்குமாறுதலான என் பங்களிப்பைத் தர முயற்சிக்கிறேன்.
எல்லாரும் எல்லாமும் தர வேண்டும். எபியில் புதுமையான படைப்பு முயற்சிகள் கூட வேண்டும் என்பதே எண்ணம்.
ஆனால் இதெற்கெல்லாம் ஆசிரியர் குழுவின் ஒத்துழைப்பும் தேவை. அவர்களும் பதிவு பின்னூட்டங்களிலும் கலந்து கொண்டு தங்கள் பகுதி கருத்துக்களையும் பதிந்தால் தான் ஊர் கூடித் தேரை இழுத்து
நீக்குபலன்களை சுகிக்க முடியும்.
பொருவிளங்கா உருண்டை செய்முறை ஓகே.
பதிலளிநீக்குஆனால் இது டிரெடிஷனல் செய்முறை அல்ல. என் பாட்டி இறந்த சமயத்தின் பத்து நாட்களின்போதுதான் இந்த இனிப்பை முதன்முதலாகச் சாப்பிட்டேன் (அப்போ என் வயது 8-9). எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கடைகளில் கிடைக்கும் பொருவிளங்காவும் டிரெடிஷனல் மெதடில் அமைந்தது அல்ல. பயத்தமா உருண்டை மாதரி பண்ணிடறாங்க.
எங்கள் பிளாக்குக்காக நான் ஒரு நாள் இதனைப் பண்ணினேன். உருண்டை பிடிக்கச் சற்று முன்பு, என் மனைவி, கொஞ்சம் பாகை மாவில் போட்டு உருண்டை பிடியுங்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதாவது பகுதி பகுதியாக்க் கலந்து உருண்டை பிடிக்கச் சொன்னாள். நான் சொன்னதைக் கேட்டுக்கொள்ள மாட்டேனே. நான் பாத்துக்கறேன் என்று சொல்லி முழு மாவிலும் பாகை விட்டுக் கலந்து உருண்டை பிடிக்க முயன்றால் எல்லாமே செட்டாகிவிட்டது. ஒரு சில உருண்டை (உருண்டை மாதிரி அழகாக வரலை) கூட பிடிக்க இயலவில்லை. அதனால் எபிக்கு அனுப்பலை (படங்கள் என்னிடம் உண்டு. தேடினால் இருக்கும்).
பதிலளிநீக்குசமீபத்தில் கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தகோது, அவர், இப்போல்லாம் யாருக்கும் பல் வலிமை கிடையாது. சின்ன வயதில் பொருவிளங்காயை கதவிடுக்கில் வைத்து உடைத்துத்தான் சாப்பிடுவோம். இப்போ முத்தல் பாகு வைப்பதில்லை. தக்காளிப் பத்த்திலேயே உருண்டை பிடித்துவிடுகிறோம் என்றார்.
டிரெடிஷனல் பொருவிளங்கா உருண்டையில் மக்காச் சோளம், அவல் மற்றும் எந்தவித அலங்காரங்கள் (முந்திரி, ஆளி விதை, பூசறி விதை, சூரியகாந்தி விதை....) ஆகியவற்றிர்க்கு வேலையில்லை.
பதிலளிநீக்குஇதை ட்ரெடிஷனல் என்று ஹேமா சொல்லவில்லை. அவர் ஆரோக்ய சமையல் ஹேமா. வித்தியாசமாக விதம் விதமாக முயற்சி செய்பவர்.
நீக்குஆஞ்சநேயா ஸ்வீட்ஸில் சொன்னார், நான் விரும்பினால் ட்ரெடிஷனலில் செய்து கொரியர் பண்ணுகிறேன் என்று. சொல்லணும்.
நீக்குஓகே ஓகே... ட்ரெடிஷனலாக இருப்பதை மட்டும்தான் நீங்கள் சாப்பிடுவீர்கள் என்று புரிந்து கொண்டேன். சரியா?
நீக்குநான் புழுங்கலரிசி, கோதுமை, பாசிப்பருப்பு வறுத்து அரைத்துத் தான் பண்ணி இருக்கேன். முன்னெல்லாம் அடிக்கடி பண்ணுவது உண்டு. தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிச் சேர்ப்போம். ஏலமும்/சுக்கும் மிகவும் முக்கியம். பாகு முத்தலாகத் தான் வைப்பேன். உடைத்துத் தான் சாப்பிடுவோம்.
நீக்குமசக்கைக்குப் பெண்ணைப் பிறந்த வீட்டில் அழைக்க வரும்போது பொருள்விளங்காய்ப் பருப்புத் தேங்காய் தான் பிடித்துக் கொண்டு வருவார்கள். அதைப் போல் கருவும் கெட்டியாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். சீமந்தம் முடிந்து பெண் பிரசவத்துக்குக் கிளம்பும்போதும் மாமியார் வீட்டில் இதே பருப்புத் தேங்காயுடன் (புதுசாய்ச் செய்து தான்) நல்ல நெத்துத் தேங்காயும், அப்பம், கொழுக்கட்டையுடன் கர்ப்பிணிப் பெண்ணின் முந்தானையில் கட்டி வைத்து அனுப்புவார்கள். அப்பம், பெண் குழந்தையாக இருந்தால், கொழுக்கட்டை ஆண் குழந்தையாக இருந்தால். எதாக இருந்தாலும் பருப்புத் தேங்காய் போல் கெட்டியாகவும் உறுதியாகவும் குழந்தை இருக்கணும் என்பது பொருள்.
நீக்குஇன்றைய இனிப்பு சிறப்பு
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பல சமயங்களில் பல்லை பதம் பார்த்து விடும் இந்த உருண்டை! ஆளி விதை எல்லாம் சேர்த்து செய்து கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், எங்கள் பிளாக் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
ஹை! ஹேமா அவங்க சமையல் குறிப்பா!
பதிலளிநீக்குரெசிப்பி சூப்பர் சூப்பர்.....
வித்திாசமான ரெசிப்பி, ஹேமா. ரொம்ப நல்லாருக்கு. குறித்துக் கொண்டு விட்டேன்.
நானும் புதுசு புதுசா செய்ய விரும்புவது உண்டு. அதுவும் சிறு தானியங்கள் விதைகள் எல்லாம் பயன்படுத்தி.
ஆனா இந்த மாதிரி செய்ததில்லை சோ குறித்துக் கொண்டு விட்டேன் ஹேமா சூப்பரா இருக்கு.
புதிய ரெசிபி கொடுத்திருக்கீங்க நன்றி நன்றி.
கீதா
பொங்கல் நாள் பொரி விளாங்காய் இனிப்புடன் மலர்ந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் தைப்பொங்கல் , பட்டிப் பொங்கல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபொரிவிளாங்காய் சத்து மிகுந்த உருண்டையாக செய்து இருக்கிறார்ஹேமா.
செய்முறையும், படங்களும் அருமை.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபொரி உருண்டை, எள் உருண்டை கடலை உருண்டை தெரியும். சாப்பிட்டதுண்டு. கடையில் வாங்கித்தான். பொருவிளங்கா உருண்டை என்று ஒரு இனிப்பா? இதுவரை சாப்பிட்டதில்லை. குறிப்புகள் நன்றாக இருக்கிறது படங்களின் விளக்கங்களுடன்.
துளசிதரன்