நெல்லைத்தமிழன் :
படங்கள் மாத்திரம் அவ்வப்போது வரும். முதுகு வழியே என்ன வராது?
# இது கேள்வி இல்லை - நீங்கள் அனுப்பியுள்ள ஜோக்!
& இது கூகிள் போன்ற சில தமிழ் தட்டச்சு app களில் காணப்படும் மிகக் கொடுமையான விஷயம்.
vali என்று type செய்தால் - அதை வலி அல்லது வளி என்று எழுதாமல், வழி என்று எழுதும்.
vaal என்று டைப் செய்தால் வால் என்றோ வாள் என்றோ எழுதாமல் வாழ என்று மொழி பெயர்க்கும்.
பேசுபவர்களுக்கு வேண்டுமானால் "ழ / ழா" உச்சரிப்புகள் வராமல் 'ள / ல' ,'லா / ளா' என்றெல்லாம் பேசலாம். ஆனால் எழுதுபவர்களுக்கு என்ன பிரச்சனை? வழி, வாழ் - என்பதை ஏன் vali - vaal - என்று தட்டச்சு செய்யப்போகிறார்கள்? vazhi vaazh என்றுதானே தட்டச்சு செய்வார்கள். கூகிள் டிரான்ஸ்லேட்டர் ஆப் மற்றும் இதர தமிழ் மொழிபெயர்ப்பு ஆப் design செய்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த தவறை (தவற்றை?) அகற்றவேண்டும்.
பழிங்கு அப்படீன்னாக்க என்ன?
$ மார்டன் என்றால்.,என்ன?
& மார்டனை மாடர்ன் ஆக்கி, ஆவந்திகாவை அவந்திகா ஆக்கிப் பார்த்தால் பளிங்குபோல எல்லாம் ஒளிருமே !
பானுமதி வெங்கடேஸ்வரன் :
செய்தித் தாளில் உங்களை ஆச்சரியப்படுத்திய செய்தி எது?
# செய்தித் தாள் படித்து ரொம்ப காலம் ஆகிறது. ஆச்சரியத்தைக்காட்டிலும் கவலை, சலிப்பு தருகிற செய்திகளே அதிகம் வருகின்றன.
& இதோ இதுதான் :
இதில் ஆச்சரியம் என்ன என்றால் - விலை மாறாமல் இருப்பது அல்ல; வேலை மெனக்கெட்டு - தினமும் இதை 'Breaking News' என்ற தலைப்பில் தினமலர் telegram பக்கத்தில் போட்டு வருகிறார்களே - அதுதான் ஆச்சரியம்! Breaking News - என்றால் என்ன அர்த்தம் என்றுகூட தெரியாமல் - ஒவ்வொரு நாளும் இதையே போட்டு record breaking சாதனை செய்துவருகிறார்கள்!
= = = = = = =
KGG பக்கம் :
JTS நினைவுகள் ..
foundry வகுப்பில் மாணவர்கள் சினிமா கதை சொல்லி பொழுது போக்கியதை முன்பு எழுதியிருந்தேன்.
சொல்லுவதற்கு புது சினிமா கதைகள் இல்லை என்றால், அல்லது வகுப்பு ஆசிரியர் கலியமூர்த்தி எங்கும் அரட்டை அடிக்கச் செல்லாமல் எங்கள் பகுதியிலேயே இருந்தால், நாங்கள் ஒரு யுக்தி செய்வோம்.
ஒரு மாணவன் அவரிடம் போய், " சார் - விலைவாசி எல்லாம் பயங்கரமா ஏறிப் போயிடுச்சு இல்லே? " என்பான்.
அவ்வளவுதான் - அவர் உடனே .. " அந்தக் காலத்துல - கத்தரிக்காய் எல்லாம் வீசை ஒரு அணா என்று வாங்கி வருவோம் .. பொய்யூர் பக்கம் போனா - தோட்டத்து கத்தரிக்காய் சின்னச் சின்னதாக இன்னும் சீப்பாக வாங்கி வருவோம் .. " என்று மலரும் நினைவுகளில் ஆழ்ந்து பேச ஆரம்பிப்பார். ஆனால் அவர் வயதானவர் இல்லை - எங்களைவிட ஏழெட்டு வயதுதான் அவருக்கு வயது அதிகம் இருந்திருக்கும். ஆனாலும் அவருடைய அப்பா - தாத்தா காலங்களைப் பற்றி அவர்கள் சொல்லியவைகளை இவர் தன்னுடைய சொந்த சரக்காக பொய்யும் மெய்யுமாக கலந்து பேசுவார்.
நாங்கள் ஒவ்வொருவராக மெதுவாகப் போய் அரட்டை அரங்கில் கலந்துகொள்வோம். கொஞ்ச நேரம் கழித்து அவருடைய டெஸ்கை சுற்றி நாங்கள் வட்ட வடிவமாக நின்றுகொண்டு அவர் விடும் கதைகளை ரசித்து (அல்லது ரசிப்பதுபோல பாவலா காட்டியபடி ) கேட்டுக்கொண்டிருப்போம்.
workshop கட்டிடத்தில் வட துருவத்தில் lathe shop. அதிலிருந்து தெற்குப் பக்கமாக நடந்து வந்தால் special machines பகுதி, workshop superintendent அறை, பெரிய திறந்தவெளி பாதை - டாய்லெட் செல்லும் வழி என்று கடந்து பிறகு carpentry பகுதி, sports அந்த book ஸ்டோர் எல்லாம் கடந்து வந்தால் smithy ஷாப் - அதில் நுழைந்து, கிழக்குக் கோடி பகுதியில்தான் foundry shop.
இந்தப் பகுதிக்கு, பிரின்சிபால் / உதவி பிரின்சிபால் / workshop சூப்பரின்டெண்டன்ட் - யாரும் வருவது மிகவும் குறைவு. அதனால் நாங்கள் என்ன கூட்டம் போட்டு அரட்டை அடித்தாலும் ஏன் என்று எங்களை (புதன் கேள்வி பதில் போல ) கேள்வி கேட்க ஆள் இல்லை.
அப்படியும் யாராவது இந்தப் பக்கம் வருவதை smithy பகுதி instructor பார்த்தார் என்றால் உடனே அவர், " கலியா - ஆளு வருது " என்று ஒரு குரல் கொடுப்பார். உடனே கலியமூர்த்தி எச்சரிக்கையாகி, ஒரு moulding cleaner tool எடுத்துக்கொண்டு, நாங்கள் ஒவ்வொருவரும் தயார் செய்து வைத்துள்ள moulding பாக்ஸ் பேட்டர்ன் அச்சுகளை ஒவ்வொன்றாக குத்திக் கிளறி - "இதை repair செய்து மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவாருங்கள் " என்று சொல்லிவிடுவார்.
அவர் செய்து வைத்த இடிபாடுகளை சரி செய்ய எங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கால் மணி நேரம் ஆகும்!
ஒருநாள் நாங்கள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டு சுவாரசியமாக அரட்டை அடித்துக்கொண்டிருந்த நேரத்தில் - smithy shop எச்சரிக்கையை நாங்கள் கவனிக்கவில்லை.
WSS ( Workshop சூப்பரின்டெண்டன்ட் ) குமரேசன் smithy யில் நுழைந்து எங்கள் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
நல்லவேளை - கலியமூர்த்தி - நுழைவாயிலை நோக்கி உட்காரந்திருந்ததால், wss வருவதைப் பார்த்துவிட்டார். நாங்கள் அனைவரும் நுழைவாயிலுக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்ததால் நாங்கள் wss வந்ததைப் பார்க்கவில்லை. " அந்தக் காலத்துல நான் என்னுடைய சைக்கிளில் நாகையிலிருந்து தஞ்சாவூர் வரை ஓட்டிச் சென்று சினிமா பார்த்துவிட்டு ஒருநாள் ராத்திரி திரும்பிவந்தப்போ .. இந்த pulley பேட்டர்ன் மோல்டிங் செய்யும்போது ரன்னர் எங்கே வைக்கணும் riser னு நல்லா தெரிஞ்சிக்குங்க - ஒவ்வொரு பேட்டர்ன் மோல்டிங் செய்யும்போதும் அதன் உயரமான பகுதியில்தான் riser வைக்கவேண்டும். இல்லாவிட்டால் moulding metal அச்சில் முழுவதுமாக பாயாமல் - casting அரைகுறையாக வரும். .. " என்று டிராக் மாறிவிட்டார் .
' இவர் ஏன் இப்படி திடீரென்று பாயாசத்தில் மோர்க்குழம்பு கலக்கிறார் என்று முதலில் திகைத்த நாங்கள், பிறகு விஷயமறிந்து புன்னகை செய்தோம்.
= = = = = = = = =
வணக்கம். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத யூடியூபர்கள் பத்திரிகையாளர்கள் மிக அதிகம். இதனால் தலைப்புகளே நாராசமான தமிழில் எழுதறாங்க
பதிலளிநீக்கு:))))
நீக்குபேசறது இன்னும் கொடுமை!
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நலம் வாழ்க..
நீக்குஇன்னும் ஒருமை பன்மை அறியாத தினமலர்!..
பதிலளிநீக்கு:)))
நீக்குதினமலரை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது..
பதிலளிநீக்குஇன்றைய தமிழ் தினசரிகளில் எதைத்தான் எடுத்துக்கொள்வது!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉருளும் எழுத்து சுருளும் எழுத்து புறளும் எழுத்து என்றெல்லாம் வித்தை காட்டும் டீவீக்கள் நல்ல தமிழ் எழுதுவதில் கவனம் காட்டுவதில்லை..
பதிலளிநீக்குஆம்.
நீக்குகுண்டு வெடித்தது - என்ற செய்தியை எப்படி தமிழில் தட்டச்சு செய்திருந்தார்கள் என்பது உலகுக்கே தெரியும்..
பதிலளிநீக்குநெல்லை எழுதுவது மட்டுமில்லை குரல் பதிவில் கருத்து இட்டாலும் அப்படித்தான் வருகிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பதையும் சேர்த்து, கூடவே கூகுள் மேப் வைத்துக் கொண்டு பயணித்தால் சில முகவரிகளுக்குச் சுற்றோ சுற்று என்று சுற்ற வேண்டியிருக்கு என்பதையும் சேர்த்து, கூகுளில் வேலை செய்யும் (சேர்ந்து 6 மாதம் மேல் ஆகிறது) என் நாத்தனார் பையனிடம் சொல்லிவிட்டேன்.
முகவரி சுற்றலுக்கு - அவர் ஃப்ரென்ட் அந்த டிபார்ட்மென்ட் என்பதால் அவரே கேட்கிறாராம் இருந்தா சொல்லு உடனே அப்டேட் செய்துவிடாலம் என்று அதனால் நானும் சரியான முகவரி, கொடுத்து எங்கிருந்து என்பதெல்லாம் விவரமாகச் சொல்லி ஆட்டோ எங்கு சுற்றியது என்பதெல்லாம் விவரமாகக் கொடுத்தேன். அது போல இந்த க் குரல் ப்ளஸ் தட்டச்சுப் பிழைகள் வருவதற்கும் அவருக்குத் தமிழ் பேசுவார் ஆனால் எழுத்துகள் தெரியாது. வடக்கில் வளர்ந்தவர் என்பதால் தமிழ் தெரிந்த அவர் நட்புகளிடம்கொடுக்கச் சொல்லி இதையும் சொல்லியிருக்கிறேன்.
செய்கிறோம்னு சொல்லியிருக்கிறார்.
கீதா
நெல்லை, கமா விட்டுப் போச்சு.
நீக்குகுரல் வழி பதியும் போது கூகுள் கமா போடுவதில்லையே கமான்னு சொன்னா கமான்னு அடிக்குது! விட்டுப் போச்சு ஃபுல் ஸ்டாப் எல்லாம் நாமதான் பார்த்து போடணும்.
நெல்லை என்று சொன்னால், நெல்லி என்று அடிக்கும்!!!
கீதா
நான் இப்பொழுது குரல் பதிவின் மூலமாக நெல்லை என்று கூறுகிறேன். நெல்லை தமிழன் என்று சொன்னால் அது எப்படி தட்டச்சு செய்கிறது என்று பார்க்கிறேன். (சரியாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்)
நீக்குபழிங்கு என்றால் என்ன//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா இப்படி எல்லாம் உடை அணிந்து நம்மள பழிவாங்க்றாங்கன்னு சொல்லிக்கலாம்!
கீதா
:)))
நீக்குமார்டன் ///
பதிலளிநீக்குஹாஹாஹா படத்தைப் பார்த்தா புரியலையா!!!
கீதா
எது?
நீக்குஆச்சரியப் படுத்திய செய்தி ? செய்தித்தாள் இல்லை நம்ம வீட்டில். எல்லாம் கூகுள் வழங்கும் செய்திகள். அதில் என்னை ஆச்சரியப்படுத்திய என்பதை விட ஆச்சரியத்தோடு அதிர்ச்சி கொடுத்த செய்தி நன்றாகப் படித்து நல்ல வேலையில் அதுவும் எக்ஸ்பெர்ட் ஆக இருக்கும் ஒரு தாய் செய்த செயல். என்ன படிச்சு என்ன நிபுணுத்துவம் பெற்று இருந்து என்ன பிரயோஜனம்.
பதிலளிநீக்குகீதா
மகனை கொலை செய்ததா! ஆம். இவர்கள் எல்லாம் தாய்க்குலம் என்று சொல்லிக்கொள்வதே கேவலம்.
நீக்குப்ராண ப்ரதிஷ்டை என்பது புரியாமல் இன்னும் கும்பாபிஷேகம் என்று உருட்டுகின்றன ஊடகங்கள்..
பதிலளிநீக்குகடவுள் ராமர் என்பதும் குழந்தை ராமர் என்பதும்
மனதில் ஒட்டுவதில்லை..
உண்மைதான்.
நீக்குகௌ அண்ணா, உங்க கலியமூர்த்தி சார் ரொம்ப நல்ல சார். உங்க டெக்னிக் எதுவும் புரியாத அப்பாவி! நல்லகாலம் அவர் 'வாய்நோக்கா'மல் வாயில் நோக்கி' இருந்ததால் தப்பித்தார்! (மலையாளத்தில் வாய்நோக்கி என்றால் பராக்கு பார்க்கறது)
பதிலளிநீக்குசுவாரசியமான அனுபவங்கள்! ஹூம் எங்களுக்கு எல்லாம் இப்படி ஏமாந்து கதை அடிக்கற அப்பாவி ஆசிரியைகள் அப்பலாம் இல்லாம போச்சே!
கீதா
:))) நாங்கள் லக்கி பீப்பிள் !!
நீக்குபத்திரிகை செய்திகள் இங்கும் பல வருடங்களாக இதே நிலைதான்.
பதிலளிநீக்குபழிக்கு சிலை ஹா...ஹா.
Kgg பக்கம் பாயாசத்தில் மோர்க்குழம்பு ரசிக்க வைத்தது.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பேசும் போது உச்சரிப்பு பிழைகள் வருவது போல், தட்டச்சு பிழைகளும் பொதுவாக வருவதுதான்!! ஆனால் வலி, வழியாக மாறியதுதான் வலிக்கிறது.
கண் கவரும் உடைகளுடன் நடிகையை பார்த்த போது நடை தடுமாறி "ளி"யில் ,வழுக்கி "ழி"யில் கொண்டு விட்டது போலும்.:))
இப்போது செய்தி தாள் வாங்கும் பழக்கமும் இல்லை. தங்கள் பதிலும் நன்றாக உள்ளது.
உங்கள் பக்கம் நன்றாக உள்ளது. உங்கள் வகுப்பு சாரின் தெளிவான கண் பார்வைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்த மோர்குழம்பு, பாயாசம் உதாரணம் கிடைத்திருக்காது. அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குபத்திரிக்கை செய்திகள், பழிங்கு சிலை எல்லாம் சிரிப்பை வரவழைத்து விட்டது.
பதிலளிநீக்கு//இவர் ஏன் இப்படி திடீரென்று பாயாசத்தில் மோர்க்குழம்பு கலக்கிறார் என்று முதலில் திகைத்த நாங்கள், பிறகு விஷயமறிந்து புன்னகை செய்தோம். //
புன்னைகை செய்ய வைத்து விட்டது இந்த நிகழ்வு.
எனக்கு மொபைலில் ஆங்கிலம் தவிர தமிழோ, மலையாளமோ அடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. அதிக நேரம் எடுக்கிறது. அதனால்தான் இப்போதும் எழுதி அதை ஃபோட்டோ எடுத்து கீதாவுக்கு அனுப்பிவிடுகிறேன், கருத்துகளை எழுதி தங்கிலிஷில் அல்லது குரலில் அனுப்பிவிடுவேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கேஜிஜி ஸாரின் அனுபவங்கள் சுவாரசியமாகச் செல்கின்றன. பாயாஸத்தில் மோர்க்குழம்பு சேர்த்த ஆசிரியர் - சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்