புதன், 10 ஜனவரி, 2024

உங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகள் என்னென்ன ?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

'இங்கே அரசியல் பேசாதீர்கள்' என்று போர்ட் வைக்கும் அளவிற்கு அரசியல் விவாதங்கள் அவ்வளவு ரசாபாசமாக மாறக் காரணம் என்ன?

# விவாதம் என்பது அறிவார்ந்ததாக இருந்தால் பிரச்னை ஏதும் இல்லை.  அது ego சார்ந்து கடுமையாகும் போது , மொழியில் அநாகரிகம் புகுந்து , சில சமயம் பெரும் தரக்குறைவு தலைதூக்குகிறது.

& எந்த விவாதத்தையும் உணர்ச்சிபூர்வமாக அணுகாமல், அறிவுபூர்வமாக அணுகவேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள், அரசியல், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை  உணர்ச்சிபூர்வமாக மட்டுமே அணுகுகிறார்கள். அதனால்தான் பிரச்சனை தலை தூக்குகிறது.  

நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் hierarchy நிலவ காரணம் என்ன?

# ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில் திறன் படைத்தவராக இருக்கும்போது - ஒருவர் கண்காணிப்பு செய்து மற்றவர் வேலை பார்க்கும்போது, அது இயல்பானதுதானே.  எல்லாரும் சமம் என்பது சட்டரீதியாக மட்டுமே சரியாக இருக்கும். மற்றபடி உண்மை நிலவரத்தில் மேற்பார்வை செய்பவரும் கீழ்ப்படிந்து நடப்போரும் இருக்கத்தான் இருப்பார்கள்.

& எல்லோருமே தலைவர்கள் என்றால், யார் சொல்வதை யார் கேட்பது என்ற பிரச்சனை எப்போதுமே இருக்கும். சமீபத்து உதாரணம் : இண்டி கூட்டணி. 

நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் படிநிலை இருந்தால்தான் உற்பத்தி / வெளியீடு சரியாக இருக்கும். நிறுவன தலைவர் அடுத்த ஒரு ஆண்டில் அல்லது அடுத்தடுத்த வருடங்களில், என்ன உற்பத்தி செய்யவேண்டும் என்பதை முடிவு செய்து சொல்லிவிடுவார். அவருக்கு அடுத்த படியில் இருப்பவர்கள் அதை எப்படி உற்பத்தி செய்யவேண்டும், எப்போது, எங்கே, யாரால் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பவைகளை வரையறுப்பார்கள். அவர்களின் அடுத்த படியில் உள்ளவர்கள் இன்னும் நுண்ணிய விவரங்களை தொகுப்பார்கள். இப்படி ஒவ்வொரு படியாக கீழே வர வர வேலை சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கடைசி நிலைக்கு வரும்போது ஒவ்வொரு வேலையும் கனகச்சிதமாக செய்யப்பட்டு குறிப்பிட்ட தரத்தில், குறிப்பிட்ட பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். 

படிநிலை இல்லை என்றால், தலைக்குத் தலை நாட்டாமை என்று உருவாகி ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையில் இழுக்க ஆரம்பிப்பார்கள். உற்பத்தி = 0 என்று ஆகிவிடும். 

எனவே நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் படிநிலை (hierarchy) தவிர்க்க இயலாதது 

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) நண்பர் ஒருவர் தினந்தோறும் என்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வேறு எந்த தகவலோ அல்லது படமோ இல்லாமல் " Good morning .. " மட்டும் அனுப்பி வருகிறார். நான் பயனில்லாத இந்த வகை செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை; பதில் எதுவும் அனுப்புவதில்லை. இந்த வகை ஆட்களுக்கு  என்ன சொல்லி புரியவைப்பது? 

2) உங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகள் என்னென்ன ? 

3) உங்களுக்கு ஒரு சமையல் செய்முறை நன்கு தெரியும். உதாரணமாக கத்தரிக்காய் கொத்சு என்று வைத்துக்கொள்வோம். அதையே வேறு ஒரு வகையில் வித்தியாசமாக செய்யலாம் என்று நண்பர் ஒருவர் கூறுகிறார் என்றால், நீங்கள் அவர் சொல்வதைக் கேட்டு அதுபோல செய்ய முயற்சி செய்து சோதித்துப் பார்ப்பீர்களா அல்லது 'அவருக்கு என்ன தெரியும்? என்னுடைய செய்முறைதான் சரி என்று உங்கள் வழியை மட்டும்தான் பின்பற்றுவீர்களா? 

= = = = = = = = =

KGG பக்கம் :

JTS படித்த காலத்தில் உடன் படித்தவர்களில் மறக்க முடியாத இன்னொருவர், ஆர் சோலையப்பன். வலிவலத்தில் வீடு. அங்கே அருகில் இருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வந்து சேர்ந்த மாணவர். அவருக்கு எங்கள் எல்லோரையும் விட வயது அதிகம். மற்ற மாணவர்கள் அவருடன் அதிகம் நெருங்கிப் பழகியதில்லை. நான் அவரோடு மிகவும் நட்போடு பழகினேன். 

படித்த காலத்திலேயே அவருக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. (வேறு யாரிடமும் அந்தத் தகவலை சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நானும் இன்று வரை அதை யாருக்கும் சொல்லவில்லை.) அவருடைய வீட்டுப் பெரியவர்கள், 'சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கத்தான் கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால், நீ படிப்பு முடிக்கின்ற வரை, மனைவியைப் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது' என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் இவர் இந்த JTS final year பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெறும்வரை பெரியவர்கள் சொன்ன சொல்லை மீறாமல் இருந்துவந்தார். 

எனக்கு சிறிய வயதிலிருந்தே ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. எதையாவது படிக்கும்போதோ அல்லது எழுதும்போதோ - புதிய புத்தகங்கள், புதிய நோட்டுகள் இவற்றின் பக்கங்களின் மூலையிலிருந்து சிறிய முக்கோணப் பகுதியான 3 mm x 3 mm அளவிலான பகுதியைக் கிழித்து, வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பேன். என்னுடைய இந்தப் பழக்கத்தை தெரிந்துகொண்டவுடன், சோலையப்பன், என்னை 'கழுதமன்' என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்! 

(இப்போ எல்லாம் paper மெல்லுவது இல்லை - மாறாக முந்திரி, திராட்சை, பாதாம் போன்ற ஏதேனும் ஒன்றை வாயில் ஊறவைத்தபடி - படிப்பது, எழுதுவது இவைகளை செய்துகொண்டு இருப்பேன்! இதை எழுதும்போது வாயில் உலர்ந்த கருப்பு திராட்சைப் பழம் இருக்கு!) 

படித்த காலத்தில் சோலையப்பன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். தினமும் மதிய உணவுக்கு அவர் ஒரு டிஃபன் பாக்ஸில் 4 இட்லி எடுத்து வருவார். ஹாஸ்டல் அருகே உள்ள வீடு ஒன்றில் வயதான பெண்மணி ஒருவர், இட்லி வியாபாரம் செய்பவர். அவருடன் இவருக்கு ஒப்பந்தம் - தினமும் இவருடைய டிஃபன் பாக்ஸில் அந்தப் பெண்மணி நாலு சிறிய இட்லி (ஒவ்வொன்றும் ஓரணா என்று ஞாபகம்) வைத்துக் கொடுத்துவிடுவார். சோலையப்பன் ஒவ்வொரு இட்லியையும் நான்கு துண்டுகளாக - மொத்தம் பதினாறு துண்டுகள் - 16 x 8 = 128 வினாடிகள் - என்று இரண்டரை  நிமிட நேரத்துக்குள் சாப்பிட்டு முடித்துவிடுவார். அதற்குப் பிறகு பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார். பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்போது என்னிடம் கேட்பார். 

நான் பெரும்பாலான நாட்களில் மதிய உணவுக்காக வீட்டிலிருந்து டிஃபன் பாக்ஸில் எடுத்துச் சென்றது மோர் அல்லது தயிர் சாதம் & தொட்டுக்கொள்ள ஒரு துண்டு உப்பு நார்த்தங்காய் / வறுத்த மோர் மிளகாய். எனக்கு அந்தக் காலத்தில் இட்லி பிடிக்காது. தோசை / எ மி சாதம் போன்றவை சாப்பிட்டால் பசி அடங்காது என்பதால், மோ  சா / த சாதமே கதி! 

சனிக்கிழமைகளில் அரைநாள் முழுவதும் (காலை எட்டு மணி முதல் பகல் 12 மணி வரை) machineshop வகுப்பு மட்டுமே என்று சொல்லியிருந்தேன் அல்லவா - அப்படி அந்த வகுப்புக்குச் செல்லும்போது - எங்கள் தோட்டத்தில் விளைந்த வேர்க்கடலையை வேகவைத்து நிறைய எடுத்து நிஜார் பைக்குள் நிரப்பி எடுத்துச் செல்வேன். 

அவ்வப்போது யாரும் பார்க்காதபோது ஒரு முழு வேர்க்கடலையை எடுத்து, அதன் தோலை இரண்டாகப் பிளந்து உள்ளே பதுங்கியுள்ள கடலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டு ஒவ்வொரு கடலையையும் ஒரு நிமிடம் வாயில் ஊறவைத்து, இரண்டு நிமிடங்கள் நிதானமாக கடித்து சுவைத்து சாப்பிடுவேன். 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படவேண்டியதுதானே வழக்கம். 

அது நடந்தது! 

அது எப்படி? அடுத்த வாரம் பார்ப்போம்! 

= = = = = = = = =

அப்பாதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இந்த வாரமும் லீவு. 

= = = = = = = =

வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களை அல்லது தாங்கள் படித்த வித்தியாசமான விஷயங்களை எங்களுக்கு அனுப்பிவைத்தால், அதை புதன் பதிவுகளில் வாசகர் பக்கமாக வெளியிடுகிறோம். 

= = = = = = = =


58 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சிலர் குட் மார்னிங் போன்ற அவசியமில்லாத செய்திகளை அனுப்புவதன் காரணம்
    அவருடைய நலத்தை தெரிவிப்பது.
    உங்களிடம் அன்பு அக்கறை உண்டு என்று தெரிவிக்க.
    சும்மா கிடைக்கும் வசதிகளை வீணாக்க வேண்டாம் என்ற நினைப்பில்.

    சும்மா இருந்தால் பொழுது போய்விடும். யாரும் குற்றமும் சொல்ல மாட்டார்கள். இதுவே என் பொழுதுபோக்கு,.

    வெவ்வேறு முறைகளில் சமைக்கிறேன் என்று யு ட்யூப் பார்த்து தெரிந்த சமையலை கெடுப்பவர் பாஸ் தான். உதாரணமாக கத்தரிக்காய் கொஸ்து.
    கத்திரிக்காயை துண்டுகளாக நறுக்கி வேகவைத்து தோலோடு மசித்து கூட்டு மாதிரி செய்வார்கள். சுட்ட மணம் கிடைக்காது.

    அரசியல் பேசாதீர் பற்றிய கேள்விக்கு கூறிய இருவர் பதில்களும் சரியான பதில்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகள் அதற்குரிய பதில்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    உங்கள் கேள்விகளும் நன்றாக உள்ளது.

    குட்மார்னிங் என்று மட்டும் அனுப்புகிறவர்கள் அனுப்பிக் கொண்டேதான் உள்ளனர். உறவாக இருக்கும் பட்சத்தில் ஒருநாள் அவர்களிடமிருந்து அது வராவிட்டால், என்னவோ, ஏதோ என காரணம் அறிய நம் மனது பரபரக்கிறது.

    பொதுவாக நம் விருப்பங்களைப் பற்றி கவலையுறாது பொழுதானது அது பாட்டுக்கு நகர்ந்து கொண்டேதான் உள்ளது. முன்பாவது புத்தகங்கள் அதிகமாக படிக்க மிகவும் விருப்பமாக இருந்தது. இப்போது அதற்கும் நேரமில்லை.

    மற்றொருவரின் புதுமையான சமையலை செய்து பார்க்கலாம் என்றுதான் தோன்றும். அப்போது பார்த்து அந்த சமையலுக்கென அவர் உபயோகித்த பல பொருட்கள் நம் வீட்டில் இருக்காது. அதனால் வழக்கப்படி "சரி.. இன்னொரு முறை அதைப் போலவே செய்து விடலாம்" என்ற நம் மனதின் கட்டளைப்படி நம் பழைய பஞ்சாங்கமே அரங்கேறி விடும்.

    உங்கள் பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. எதையாவது கொறித்தபடி படிப்பது, எழுதுவது எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் வகுப்பறையில் அப்படி செய்ததில்லை. அதிலும், அதன் பின் உங்களின் விருப்பத்திற்கு தடையாக என்ன நடந்தது என அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மற்றொருவரின் புதுமையான சமையலை செய்து பார்க்கலாம் என்றுதான் தோன்றும். அப்போது பார்த்து அந்த சமையலுக்கென அவர் உபயோகித்த பல பொருட்கள் நம் வீட்டில் இருக்காது. அதனால் வழக்கப்படி "சரி.. இன்னொரு முறை அதைப் போலவே செய்து விடலாம்" என்ற நம் மனதின் கட்டளைப்படி நம் பழைய பஞ்சாங்கமே அரங்கேறி விடும்.// {))))

      நீக்கு
  4. பானுக்காவின் கேள்விகள் இரண்டிற்குமே பதில்கள் சூப்பர்.

    உணர்வுபூர்வமாக அணுகும் போது அது நட்பு என்றாலும் உறவு என்றாலும் பொதுவெளி என்றாலும் கண்டிப்பாக அது எதிர்வினையாகத்தான் முடியும். உணர்வுபூர்வமாக விவாதங்களில் நாம் டக்கென்று பேசும் போது எழுதும் போது வார்த்தைகள் தடிக்கும்.

    அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பேசுவதும் எழுதுவதும் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படிநிலை கண்டிப்பாக வேண்டும், & சொல்லியிருப்பது போல...அக்காரணங்கள் சூப்பர்.

    ஆனால் இந்தப் படிநிலையில் (ஒவ்வொரு படிநிலையிலும்) இருக்கும் அதிகாரிகள் நல்ல விதத்தில் வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். அது போல கீழ் பணிபுரிவோரும் இருக்க வேண்டும். பொறுப்புடையவர்களாக. இல்லை ஈகோ வுடன் இருந்தால் கண்டிப்பாக கீழ் பணிபுரிவோருக்கும் அதிகாரிக்கும் நேரடிச் சண்டை அல்லது பனிப்போர் நடக்கும். இதற்கும் முதல் கேள்விக்கான பதில் பொருந்தும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தான் முக்கியமே அல்லாமல் உணர்வுபூர்வமாகக் கையாளக் கூடாது. நமக்கு ஒரு வேளை அதிகாரி சொல்வது சரியில்லை என்று தோன்றினாலும் மனதுக்குள் கோபம் வருத்தம் வந்தாலும், கூட அதைப் புறந்தள்ளி எப்படிக் கையாளவேண்டும் என்ற ஒரு சிந்தனை கொடுத்து யோசித்தால் தீர்வு கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கச் செய்தி என்பது அவர்கள் நலம் அவர்கள் வீட்டில் நலம் என்ற ஓர் அறிவிப்பு. ஒரு வேளை அது வரவில்லை என்றாலோ, தாமதமாக வந்தாலோ அவர்களை அழைத்துக் கேட்டுவிடலாம் அல்லது செய்தி அனுப்பிக் கேட்டுவிடலாம். எனக்கு அப்படி இரண்டே இரண்டு செய்திகள் தினமும் வந்துவிடும். அது போல நல்லிரவு வணக்கம் செய்தியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்புபவர் குடும்பம் இல்லாத தனியாளாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி. குடும்பத்தோடு வாழ்பவர் / முகம் தெரியாத நண்பர் இவர்களெல்லாம் - குட் மார்னிங் அனுப்பி என்ன பயன்?

      நீக்கு
  7. பிடித்த பொழுது போக்குகள், சங்கீதம், நல்ல பாடல்கள், கை வேலைகள் செய்தல் (இப்ப குறைந்துவிட்டது) இப்போது கணினியில் இதோ தட்டிக் கொண்டிருக்கின்றேனே இதுவும்...வாசிப்பதும்

    என் தனிப்பட்டக் கருத்து கூடியவரை நாம் எதுவும் பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்றால் அதுவே பொழுது போய்விடும். வம்பிலும் சிக்காமல் இருப்போம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அரசியல் விவாதம் பற்றிய பதில் சிறப்பு ஜி.

    மலையாளிகள் பெரும்பாலும் அரசியல் பற்றி அறிவுப்பூர்வமாக விவாதிப்பார்கள் நான் அவர்களோடு அனுப்பவப்பட்டு விதித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலைப் பொறுத்த வரையில் மலையாளிகள், தமிழர்களைவிடப் பல மடங்கு முன்னேறியவர்கள், சிந்திப்பதில், அறிவுபூர்வமாகப் பேசுவதில்.

      நீக்கு
    2. எனக்கு இந்தக் கருத்துகளில் உடன்பாடு இல்லை. எனக்குத் தெரிந்து கேரள மக்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மாநிலத்தை மட்டுமே உயர்த்திப் பேசுவார்கள்.

      நீக்கு
    3. ஒரு மலையாளி இன்னொரு மலையாளிக்கு கண்டிப்பா உதவி செய்வான். ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல. கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது, காலில் விழுவது, கால் மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வது, திரையுலகில் தலைவர்களைத் தேடுவது, நடிகர்கள் பின்னால் ஓடுவது என்பது தமிழர்களுக்கேயான குணம்

      நீக்கு
  9. புதிதாக யார் சொன்னாலும், தெரிந்து கொண்டாலும் செய்து பார்க்கும் பழக்கம் உண்டு.

    //'அவருக்கு என்ன தெரியும்? என்னுடைய செய்முறைதான் சரி என்று உங்கள் வழியை மட்டும்தான் பின்பற்றுவீர்களா? //

    அப்படிச் சொல்லும் பழக்கம் இல்லை. ஆனா, புளியோதரை என்றால் எனக்குத் திருநெல்வேலி திருக்குறுங்குடி நம்பி கோயில் புளியோதரைதான் எனக்குச் சிறு வயது முதலே பழக்கம் என்பதால் அந்தச் சுவை (இப்போ எப்படின்னு தெரியாது!) அதைக் கற்றுக் கொண்டு வீட்டில் செய்வதால், பிற புளியோதரை செய்முறைகள் தெரியும் என்றாலும் செய்வது எப்போதாவதுதான்.

    ஒவ்வொருவரது வழக்கம் ஒவ்வொரு ஊரின் வழக்கம் வித்தியாசப்படும். நமக்குப் பிடித்தால் ஏற்றுக் கொண்டு பின்பற்றலாம். ஆனால் குறை சொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. குட்மார்னிங் மட்டும் சொல்லுபவர்களின் பின்புலம் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் இதன் பின்னால் ஓர் சோகசம்பவம் உள்ளது.

    கோவையில் ஒரு குரூப்பில் இருந்த பெரியவர் தினமும் குட்மார்னிங் சொல்லுவார், யாரும் பதில் சொல்வதில்லை.

    திடீரென்று நான்கு தினங்களாக சொல்லவில்லை விசாரித்தபோது தெரிந்தது அவர் இறந்து விட்டார் என்று ....

    அவர் ஓர் உறவுகள் இல்லாத தனிமை மனிதர். இப்படி நிகழ்வுகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தனி மனிதர்கள் குட் மார்னிங் செய்திகள் அனுப்புவது நல்லதுதான்.

      நீக்கு
  11. நிறுவனங்களின் படிநிலை என்பது பொறுப்பையும், அதிகார எல்லையையும் குறிப்பதற்கானது. கடைநிலை ஊழியர்களுக்கான பொறுப்பும் மேனேஜருக்கான பொறுப்பும், பொது மேலாளருக்கான பொறுப்பும், பவது மேலாளர்-கணிணிப் பிரிவு, பொது மேலாளர்-மார்கெடிங் என ஒவ்வொரு பொறுப்பும் responsibility, area of responsibilityஐப் பொறுத்தது. Information Technology மேலாளருக்கு, எல்லா இடங்களிலும் கணிணி செயல்படுவதையும், information அவரவர் படி நிலைகளின்படி உடனுக்குடன் கிடைக்கச் செய்து, அதன் மூலம், corrective actin, business decisins etcக்கு உதவுவது. ஏன் இந்த வருடம் வியாபாரம் குறைவு என்பதற்கு information Tech Manager பொறுப்பு இல்லை. அது போல, program எழுதும் டீமிற்கு, கணினி நெட்வொர்க் பற்றி பொறுப்பு இல்லை. அவரவர் பொறுப்பின் எல்லைகளைப் பொறுத்து சம்பளம். இது தவிர business divisionsல் அவரவர் கம்பெனிக்குச் செய்யும் பங்களிப்பைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். சம்பள நிலைக்கு வேறு சில காரணிகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
  12. கேள்வி பதில்கள் நன்று.kgg பக்கம் ரசனை.

    புதிய செய்முறைகள் செய்து பார்ப்பேன். பிடிக்கும் பட்சத்தில் எனது செய்முறை மாறிவிடும்.

    பொழுது போக்கு காடினிங்,
    புத்தகம் படிப்பது. பேரனின் கடமைகள்.

    தனியே இருக்கும் வயதான இரண்டு வீட்டு பெண்களுக்கு தினமும் மதிய கறிகள் எங்கள் வீட்டில் இருந்து சமைத்துக் கொடுக்கிறேன். இதில் மகிழ்ச்சியும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! மிக நல்ல கருத்து. பயனுள்ள பொழுதுபோக்கு. நன்றி.

      நீக்கு
  13. வேறு இன்டராக்‌ஷன் எதுவும் இல்லாமல் வெற்று குட்மார்னிங் மெசேஜ் அனுப்புபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களை நேற்று செவ்வாய்க் கிழமை மிகவும் எதிர் பார்த்தேன்....

      நீக்கு
    2. // வேறு இன்டராக்‌ஷன் எதுவும் இல்லாமல் வெற்று குட்மார்னிங் மெசேஜ் அனுப்புபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.// அதே, அதே!

      நீக்கு
  14. (வேறு யாரிடமும் அந்தத் தகவலை சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நானும் இன்று வரை அதை யாருக்கும் சொல்லவில்லை.)//

    ஹாஹாஹாஹா கௌ அண்ணா! அதான் இன்று சொல்லிட்டீங்களே பொதுவெளியிலேயே!!!!!

    கழுதமன்// சிரித்துவிட்டேன்!

    இட்லி திங்க நிமிடக் கணக்கா!!!!

    அனுபவங்கள் ரசனை, கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ அவரும் தாத்தா ஆகியிருப்பார்! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை ஐயா அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  17. கலகலப்பான அரட்டை அரங்கம் மாதிரி இருக்கின்றது..

    பதிவு சிறப்பு..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  18. குட் மார்னிங்க் சொல்வதை அவசியமில்லை என்றோ அதைத் தொந்தரவு என்றோ நினைக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அவர் நம்மோடு தொடர்பில் இருக்க் வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்மோடு தினமும் பேச அதிகம் விஷயங்கள் இல்லை என்றாலும் நம்மை நினைத்து நமக்கு நல்லது வரட்டும் என்று சிந்திக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவரை நாம் ஒதுக்க வேண்டும் என்றில்லை. அவர் நம்மை உபத்திருவிக்கிறார் என்றோ, வேண்டாத வேலை என்றோ நினைப்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை.

    ஆனால் யார் யாரிடம் சொல்கிறார் என்பதைப் பொருத்தும் இருக்கிறது. ஒரு இளைஞர்/இளம் பெண் பரிமாறிக் கொண்டால் அந்தப் பையனுக்கோ பெண்ணிற்கோ தொடர்பு வேண்டாம் அதில் உடன்பாடில்லை என்றால் அவர்கள் அதை மறுப்பது நல்லது.

    அல்லாது இதை ஒருவருக்கொருவர் நலம் விசாரிப்பது போன்று உட்கொண்டு கடந்துவிடுவது நல்லது என்றே எனக்குத் தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. நன்றி. எனக்கு கா வ செய்திகள் அனுப்புபவர் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரிவில் வேலை பார்த்தவர். நெருங்கிய நண்பர் கிடையாது.

      நீக்கு
  19. இருக்கும் பணிகளுக்கே நேரம் போதாமல் இருக்கும் போது தனியாகப் பொழுது போக்க என்று சொல்வதை விட எனக்கு இந்த அவசரமான உலகத்திலிருந்து தினசரி பணிகளில் இருந்து ஒரு சின்ன ரிலாக்சேஷன் என்றால் பயணம் அவ்வப்போது எதற்காகவேனும் காரணமுடன் இருந்தாலும் அது ரிலாக்ஸ்டாட இருக்கும். மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கும் மொனாடொனியிலிருந்து விலகி ஆசுவாசம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. இந்த பதில் சமையல் பற்றி அல்ல. எந்த விஷயத்தையும் வித்தியாசமாக ஒன்று அறிந்தால் வித்தியாசமாகச் செய்யப் பிடிக்கும். வித்தியாசமாக இருப்பதால் என்பதற்கும் மேலே அதைப் போலச் செய்ய முடியும் என்று தோன்றினால்ல் செய்து பார்ப்பதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. கேஜிஜி சார் நீங்கள் உங்கள் அனுபவமான பேப்பர் தின்பது பற்றி சொல்லியிருப்பது போல் எனக்கும் சிறு வயதில், வீட்டில் கடலைமிட்டாய் வாங்கும் போது நான் ரொம்ப நேறம் கடலை மிட்டாயை வாயில் வைத்துக் கொண்டு சுவைத்துக் கொண்டிருப்பேன். வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் "ஏன் அதைச் சீக்கிரமாகச் சாப்பிடக் கூடாதா" என்று கேட்பார்கள்.

    இப்போது இப்படியான பல பழக்கங்கள் இல்லை என்றாலும் எப்போதேனும் மலபார் அல்வா ஒரு சிறு துண்டு எடுத்து அதை வாயில் கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டு சுவைப்பதுண்டு. மற்றவை போலல்லாமல் இப்படிச் சில பதார்த்தங்கள் மட்டும் நீண்ட நேரம் சுவைக்கத் தோன்றும்.
    இப்படிச் சிலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! என்னைப் போல் ஒருவர்! சிறு வயதில் எனக்குப் பிடித்த எல்லா தின்பண்டங்களையும் நானும் அப்படித்தான் சாப்பிடுவேன்.

      நீக்கு
    2. என் அப்பா, நான் 8-9வது படிக்கும்போது, தான் சிறுவயதில் படிக்கும்போது போரடிக்காமல் இருப்பதற்காக பக்கத்தில் மிக்சர் பாக்கெட் வைத்துக்கொண்டு, அப்போ அப்போ அதையும் சாப்பிட்டுக்கொண்டே படிப்பேன், அதுபோல நீயும் செய்துபார் என்றார். நான் மிக்சர் பாக்கெட் வாங்கினேன். அதைக் காலி பண்ணின பிறகுதான் புத்தகம் பக்கமே கவனம் திரும்பியது.

      சமீபத்தில் பல்லின் இரு வரிசைகளிலும், புது கேப் வைப்பதற்காக பழசை எடுத்துவிட்டார். இரு நாட்கள் சாப்பிட முடியாது என்றார். கேப் செய்யவேண்டியவர்கள் விடுமுறை என்று சில பல காரணங்களால் ஒரு வாரமாகிவிட்டது. அப்படியென்றால், ஒரு வாரம் என்னால் கடித்துச் சாப்பிட முடியாது. அதனால் நுனிப் பல்லினால் (முன்வரிசை) சிறிது சிறிதாக நுணுக்கிச் சாப்பிடணும். அப்போதான் கடலை மிட்டாயை (ஒரு துண்டை) இவ்வளவு நேரம் ரசித்துச் சாப்பிட முடியுமா என்பதை அனுபவித்தேன். (ஒரு வாரத்தில் ஒரு கிலோ எடை குறைந்தது)

      நீக்கு
  22. சோலையப்பனைப் பற்றி சொல்லியிருப்பதை வாசித்த போது ஏதோ ஒரு வகையில் அப்போது ஈர்ப்பிருந்திருக்கும். அவரை அதன் பின் எப்போதேதும் சந்தித்தீர்களா? அவருடன் தொடர்பு இருக்கிறதா? இப்போது அவருடைய இயல்புகள் பற்றி தெரிந்திருந்தால் சுவையாக இருக்குமோ என்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜே டி எஸ் படித்த பிறகு அவரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

      நீக்கு
  23. கேள்வியும் பதில்களும் அருமை.

    என் மாமா பெண், என் தம்பி தினம் காலை வணக்கம் சொல்வார்கள்.
    நான் அவர்களுக்கு காலை வணக்கம் சொல்லி வாழ்க வளமுடன் போடுவேன்.
    என்னிடமிருந்து பதில் வரவில்லை என்றால் என்ன என்று பாருங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

    அவர்கள் போடவில்லை என்றால் நான் ஏன் போடவில்லை நன்றாக இருக்கிறீர்களா? என்று விசாரித்து விடுவேன்.
    ரேடியோ கேட்பது, முன்பு நிறைய கதை புத்தகம் வாசித்தேன், இப்போதும் சில நேரம் கதை படிக்கிறேன் , கதை கேட்கிறேன், நல்ல பழைய படங்கள், பழைய பாடல்கள், பக்தி பாடல்கள் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. புதுமையான சமையல்களை செய்து பார்க்கிறேன். அதற்கு நல்ல மனநிலை இருக்க வேண்டும். பொருட்களும் வீட்டில் எல்லாம் இருக்கவேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரி
    சமையல் குறிப்பை தேடி செய்த அனுபவம் உண்டு.

    வறுத்த வேர்கடலை கொறித்து கொண்டு புத்தகம் படித்த காலங்கள் உண்டு.
    பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

    ஒரு முழு வேர்க்கடலையை உடைக்கும் போது சத்தம் கேட்டு விட்டதா? வறுத்த வேர்கடலை என்றால் சத்தம் கேட்கும், வேகவைத்த வேர்கடலையும் மாட்டி விட்டு விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதற்கு நல்ல மனநிலை இருக்க வேண்டும். // - அதைவிட, செய்தால் ரசனையுடன் ரசித்துச் சாப்பிட ஆட்கள் இருப்பது முக்கியம் அல்லவா?

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. //அதற்கு நல்ல மனநிலை இருக்க வேண்டும். // - அதைவிட, செய்தால் ரசனையுடன் ரசித்துச் சாப்பிட ஆட்கள் இருப்பது முக்கியம் அல்லவா?//

      ஆமாம் நெல்லை. நீங்கள் சொன்னது சரியே! ரசித்து சாப்பிட பிடித்ததை கேட்டு வாங்கி சாப்பிட ஆள் வேண்டுமே! அப்போதுதானே உற்சாகமாய் சமைக்க தோன்றும்.

      நீக்கு
  25. அன்பின் நெல்லை அவர்களை செவ்வாய்க் கிழமை அன்று மிகவும் எதிர் பார்த்தேன்....

    பதிலளிநீக்கு
  26. அன்பின் நெல்லை அவர்களை செவ்வாய்க் கிழமை அன்று
    மிகவும் எதிர் பார்த்தேன்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!