சனி, 20 ஜனவரி, 2024

பிரதாப் அப்படி என்ன சாதித்தார் மற்றும் நான் படிச்ச கதை,

 



===============================================================================================



====================================================================================================




===============================================================================================


நான் படிச்ச / ரசித்த கதை 

ஸ்ரீராம் 
------------------------------------------------------------


ஒரு சிறுகதையை எப்படி ரசிப்பீர்கள்?  உங்கள் மனவோட்டத்தில் காட்சிகள் எழுத்தாளரின் எழுத்து வர்ணனையோடு உங்கள் கற்பனையும் கலந்து காட்சியாய் விரியும்.  பாலம்மாளின் 14 வயதில்தான் எத்தனை கஷ்டங்கள்...  'அப்போது' அதுவே திருமண வயது தாண்டிய பருவம்.

எண்ணங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை எழுத்துகளால்.  கதையைப் படித்தபோது உடனுக்குடன் தோன்றிய சில எண்ணங்களை உடனே எழுத்தில் வடிக்க முடியாததால் பொங்கியதில் வழிந்து, சிந்தி மறைந்தது போக மீந்த எண்ணங்களை மட்டுமே இங்கு எழுத்தில் கொண்டு வருகிறேன்.

குல்சாரின் ராவி நதிக்கரையிலே படித்திருக்கிறீர்களா? ஏன் என்கிறீர்களா?  காரணம் இருக்கிறது.

இந்தச் சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது பெண்ணின் இளமையைக் குறித்த வர்ணனைகள் கண்களை நிறுத்தினாலும் மனதில் ஏனோ என் அப்பா போன்ற ஒரு உருவம் தோன்றியது.  அவர் அப்படி மனதால் கற்பனை செய்து எழுதுவது என்பது சங்கடத்தை உருவாக்குவது போல இருந்தது.  ஆனால் இது சரியல்ல.  ஒருவகை மனக்கோளாறுதான் என்று நினைத்துக் கொள்கிறேன்.  படிக்கும்போது அவர் எவற்றைக் கற்பனை செய்து எப்படி வார்த்தைகளில் கொண்டு வந்திருப்பார் என்று தோன்றியது.  மறைபொருளாக மடமடவென்று சொல்லிச் சென்று விடுகிறார்.  என் அந்த அர்த்தமில்லாத, தேவையில்லாத ஆரம்பத் தயக்கம் போயே போச்!

ஆனால் இவ்வகை எண்ணங்களை படிப்படியாக மறைய வைத்து கதைக்குள் இழுத்து விடுகிறது வர்ணனைகள்.  வாளிப்பான ஒரு பெண் பற்றிய வர்ணனைகளை எப்படி அமைக்க முடியும்?  எண்பதுகளின் வர்ணனையில் மப்பும் மந்தாரமுமாக கொப்பும் குலையுமாக....!

பாலம் பதினான்கு வயசு வரையில் கவலை என்பதே அறியாமல்-துக்கம் என்பதே இன்னதென்று தெரியாமல்-காட்டில் செழிப்பும் வளப்பமும் கொண்டு தாவிப் படரும் கொடிபோல வளர்ந்தாள். அவளுடைய ஒவ்வோர் அங்கத்திலும் புதுக்கிளைகளில் நிறையும் ஜீவ சத்துப்போல் இளமை எதிர்த்து ஓடி நின்றது. மிருகப் பிராயமான அதன் கொழுப்பால் அவள் நடையிலும் பார்வையிலுமே ஒரு துள்ளலும் குதிப்பும் இருந்தன. ‘மெள்ள நடந்துபோடி! பூமி அதிர்கிறதுபோல நடக்காதே’ என்பாள் கிழவி. அவளுடைய சிரிப்பின் அலைகளில் அந்த நிறைவு கொண்டு வெளிக்கிளம்பும். ‘என்னடீது, பொம்மண்டாட்டி அப்படிச் சிரிக்கிற துண்டோ எங்கேயாவது ?” என்று கிழவி உடனே அதற்கு அணைபோட முயலுவாள். அவள் கூந்தலிலிருந்த வாளிப்பு அவளுடைய சர்வாங்க சௌந்தரியத்திற்கு ஒரு சிகரமாகவே இருந்தது.

அவளுடைய ரோஜா அழகு வறுமை முள்ளில் கிடந்தது. அது விரிந்து மலர்ந்தது;

இங்கு வர்ணனை மட்டுமல்ல  வெளிப்படையாக சொல்லக் கூடிய விஷயங்களை எவ்வளவு நாசூக்காக சரசரவென கடக்கிறார் பாருங்கள்...  முழுக்கதையிலும் இது அவருக்கு சாத்தியமாகிறது.

  "மிருகப் பிராயமான அதன் கொழுப்பால்"    "கூந்தலிலிருந்த வாளிப்பு அவளுடைய சர்வாங்க..."  வந்து விட்டதா மனதில் ஒரு உருவம்?  அது யாராலும் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது, ரோஜா அழகு வறுமை முள்ளில்!

ஒரு இளைஞன் - முதலாளியின் மகன் - வந்து தாகம் தணி(க்)கிறான்.  அடாத செயல்தான்.  ஆனால் அவளுக்கும் தேவையாயிருக்கிறது...  ஏங்கிக்கிடக்கும் மனம்.

அதன் ஆதிக்கியம் அவளை மட்டும் சும்மா விடவில்லை. அவளுடைய யௌவனத்தின் தாகம் வெளியுலகத்தின் இன்ப ஈரத்தைப் புலன்கள் மூலம் ஜிவ்வென்று இழுத்துக் கொண்டது. மேன்மேலும் அதிகமான அவளுடைய கவலையையும் துக்கத்தையுங்கூடத் தூக்கி அடித்துவிட்டு அந்த இச்சை மேலெழுந்தது. ‘உள்ளே கிட! உனக்கு என்ன வேடிக்கை வேண்டியிருக்கிறது? யாராவது பார்த்தால் சிரிப்பார்கள்’ என்று பாட்டி சொல்லுவாள். அவளுடைய அழகு அப்பொழுது பார்த்துச் சிரிக்கும் படியாக இருந்தது! அப்பொழுது அவளுக்குப் பிராணன் போவதுபோல இருக்கும். ஆனால் மறுபடியும் உலகம் அவனைப் பற்றி இழுக்கும். வாசலில் போகும் ஊர்வலங்கள், பெண்களின் பேச்சுகள் சிரிப்புகள் எல்லாம் அவள் உள்ளத்தைக் கிளறும். தானும் அவர்களிடையே ஓடிப் போய் நின்றுவிடவேண்டும் என்று தோன்றும் அவளுக்கு. கல்யாண வீட்டு வாசலில் பெண்கள் குதித்துப் பாடுவதைக் கண்டால் தானும் அங்கே போய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குதித்துப் பாட வேண்டும் என்று எண்ணுவாள்.

ஆனால் அப்பொழுது அவள் விதவைபோல இருந்தாள். கல்யாண மாகவில்லை அவ்வளவுதான். அவளுக்கு ஓர் உரிமையும் இல்லை. வயசு வந்துவிட்டது ஒரு குற்றமாகியது. அழகின் பிரதிபிம்பமாக அவள் ஏன் அவ்வளவு சீக்கிரமாகப் பருவமடைந்தான்? அது பிசகு! அவள் ஏன் இயற்கையை அதுசரித்து அவ்வளவு அதிசயமான வளர்ச்சி யைக் கொண்டாள்? அது கூடாது! கல்யாணமானால் அல்லவா அவள் வளரக்கூடும்? நிர்ப்பந்தமின்றி உயரக்கூடும்-வாழ்க்கையின் கண்முன்? அதற்காகத்தான் அது அவளை உயரக்கூடாது என்று தலையிலடித்து உட்கார்த்திற்று; மெய் நிறையக்கூடாது என்று சூரிய கிரணங்கள் போலச் சமூகம் தன் கண் பார்வையைச் செலுத்திக் குத்திற்று.


அவள் என்ன செய்வாள்? குன்றித்தான் போய்ப் பார்த்தாள். வெளி யுலகத்து இன்பத்தின் ‘மகடி’யைக் கேட்டதும் அவளுக்குன் பெட்டியில் கிடப்பதுபோலக் கிடந்த யௌவன சர்ப்பம் சீறிக்கொண்டு படம் எடுத்தது. அதை அடக்க எந்த மந்திர சக்தியால் முடியும்? அவளால் அடக்க முடியவில்லை.

ஆதிக்கியம் என்பதும் எழுத்துப் பிழையா அல்லது ஆதிக்கம் என்பதன் ஒத்த வார்த்தையா, தெரியவில்லை.

இதில் மகடி என்கிற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. மகுடி மகடியாகி விட்டதா, தெரியவில்லை.  அடுத்த பருவம் கல்லூரிக்குப் போகும்வரை அவன் இங்கு இருக்கிறான்.  இங்கு வேறு பருவம் விளையாடுகிறது; வேலையைக் காண்பிக்கிறது.  பிரச்னையும் வந்து விடுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
மகடி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டபோது வாட்ஸாப் க்ரூப்பின் அப்பாதுரை விளக்கம் அளித்திருந்தார்.

"மகடி என்பதற்கு வீடு என்று பொருள். 

மகடி என்பது மாழ்கு+அடி (or மழ்கு+அடி) எனப் பிரியும். மாழ்குதல் (மழ்குதல்) என்றால் மறைதல், ஒதுங்குதல், ஒளிதல் எனப் பொருள் பெரும். அடி என்பதற்கு இடம் எனறும் பொருள். மறையும் இடம், ஒளியும் இடம் என்ற புறப் பொருளில் நாம் ஓயும் வீடு என்றாகும். இதையே அகப்பொருளில் நாம் ஓயும் வீடு (சுவ்ர்க்கம்) என்றும் பொருள் கொள்ளலாம்.

மகடியை அக புற 400லும், குறுந்தொகையிலும் பார்க்கலாம்.

சரவணன் என்று ஒருவர் தமிழ் blog எழுதினார்.  அங்கே படிக்கலாம். 

மகடி என்பதற்கு சமஸ்க்ருதம் வேர் என்றால் திராவிட மாடலில் ஏற்பாகளா தெரியவில்லையே?  மகம் என்றால் வடமொழியில் ஒளிதல் என்று ஒரு பொருள். :-) மகாமகம் சமயத்தில் தேவர்கள் கும்பகோணக் குளத்தில் (மறைந்து) இருக்கும் கதை தெரியும் தானே?"

-------------------------------------------------------------------------------------------------------------------------------

"இங்கு வேறு பருவம் விளையாடுகிறது; வேலையைக் காண்பிக்கிறது.  பிரச்னையும் வந்து விடுகிறது." என்று சொன்னேன் அல்லவா...

அந்த ஒன்பது மாதங்களுக்குள் பாலத்தின் இயற்கையே மாறிவிட்டது. அவள் திடீரென்று ஸ்திரீ ஆகிவிட்டாள். சிறுபெண் கனவுகளும், யெளவன ஏக்கங்களும் அவளைவிட்டு அகன்றுவிட்டன. அவ்வளவு இன்பமயமாகத் தோன்றிய வாழ்க்கையில் இனிமேல் எப்படிக் காலம் தள்ளுவது என்ற திகைப்பு வந்துவிட்டது அவளுக்கு. அது ஒரு வனாந்தரம்போல இருந்தது. எங்கே போவது? என்ன செய்வது? திக்குத் திசை தெரியவில்லை.

நடந்தவற்றை எவ்வளவு லாவகமாக கடக்கிறார் பாருங்கள்.  அவர் நினைத்திருந்தால் அப்பகுதிகளை இழுத்து எழுதி இருக்க முடியும்.  வெளிப்படையாகச் சொல்லி இருக்க முடியும்.  அப்படி சொல்லி இருந்தால் இவ்வளவு வீர்யம் அதற்கு இருக்குமா, தெரியவில்லை.  சுந்தர சாஸ்திரிகள்- வாலிபனின் தகப்பனார் - விஷயம் தெரிந்ததும், அவளை ஊரை விட்டு அனுப்புகிறார் - அவளின் பாதுகாப்புக்கு அந்தக் கிழவியோடு.  கிழவி என்பது அவள் பாட்டிதான்.  இருவரும் மூடின மாட்டு வண்டியில் ஊரைவிட்டு பயணமாகிறார்கள்.

விடிய இரண்டு நாழிகைக்கு வண்டி கோணக்கரை தாண்டி விட்டது. கிழவி ‘பிழைத்தோம்’ என்ற அர்த்தத்துடன் பெருமூச்சுவிட்டாள்.

இனிமேல் ஊர்ப் பயம் இல்லை. கிட்ட வீடு ஒன்றுமே இல்லை. இனிமேல் என்ன ஆனாலும் பாதகமில்லை. சமாளித்துக்கொண்டு விடலாம். வண்டிக்காரன்-வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் – சுந்தர சாஸ்திரிகளின் பண்ணையாள். ஆகையால் அவனைப்பற்றி அவ்வளவு யோசனை செய்ய வேண்டாம். ஆனால் என்ன வெட்கக் கேடு! என்ன ஆனாலும், வேறொரு மனிதனுக்கு விஷயம் தெரிந்தால் சமாசாரம் புகைந்து புகைந்து பரவிவிடுமே! இப்பொழுது என்ன பரவாமல் வாழ்ந்தது? ஊரேதான் கொசமுசவென்று பேசிக் கொண்டார்கள். எவ்வளவோ ரகசியமான சமாசாரமும் எப்படியோ வெளியேதான் வந்துவிடுகிறது. இந்தத் துரதிருஷ்டம் பிடித்த பீடையின் தலையெழுத் திற்கு ஏற்றாற்போல் வயிற்றில் வேறா வத்து விடவேண்டும்?’


எந்த ரகசியத்தையும் மூடி மறைக்க முடிவதில்லை.  பண்ணை வீட்டு ரகசியங்கள் எப்படியோ வெளியில் கசிந்துதான் விடுகின்றன.  கிழவியின் மனப் புலம்பல் இது.

ஒரு ஆற்றங்கரை வருகிறது.  அடுத்து அவர் விவரிப்பதைப் படியுங்கள்...

பேசிக்கொண்டிருக்கும்போதே பாவத்திற்கு ஒரு விபரீதமான உணர்ச்சி ஏற்பட்டது.

‘பாட்டி’ என்று சட்டென்று கத்தினாள்.


நமக்கு புரிந்து விடுகிறது.


வண்டியில் வைக்கோல் பரப்பி ஜமக்காளமும் துணிகளும் மெத்தென்று விரிக்கப்பட்டிருந்தன.

கிழவி சட்டென்று பாலத்தின் பக்கத்திலிருந்த குழந்தையை எடுத்துக் கொண்டாள்.

‘எங்கே பாட்டி, காண்பி!’

வண்டி அப்பொழுது ஆற்றங்கரைக்கு வந்துவிட்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி அவிழ்த்துப் போட்டு விட்டு எங்கோ போனான் மறைவாக.

கிழவி குழந்தையை எடுத்துக்கொண்டு வண்டியை விட்டு இறங்க முயன்றாள்.


இப்போது கிழவியின் - பாட்டியின் மனோபாவம் புரிகிறது.  பேத்திக்கு மட்டுமல்ல, படிக்கும் நமக்கும்.  இங்கேதான் எனக்கு ராவி நதிக்கரை நினைவுக்கு வருகிறது.  ஆனால் அது வேறு மாதிரி.

‘என்னடி செய்யப்போகிறாய் குழந்தையை?’ என்று ஆத்திரத்துடன் கேட்டாள் பாலம்.

‘என்ன செய்கிறது/ மனசு வரத்தான் இல்லே. வேறே வழி?’

‘ஐயோ, இதுக்கா பிறந்தது இந்தக் குழந்தை?’

‘ஜலத்தோரமா- கரைவே வச்சூட்டு வந்துட்டாக்கே மரம் வச்சவர் இருக்கார்! ஆச்சு, விடியற சமயம். யாராவது போரவா வரவா பாத்தா பரிதாபப்பட்டு எடுத்துண்டு போயிடுவா. அதுக்கு அப்படி எழுதியிருக்கு!’

‘பாட்டி, வாண்டாம்!”

‘என்ன வாண்டாம்?’

‘குழந்தையை எப்படிடீ இருட்டுவே கரையிலே போட்டூட்டுப் போறது? அதுக்கு ஜலத்துலேயே போட்டுடலாமே! 


திடீரென பாட்டி இளைத்துப் போகிறாள்.  பாலம் பெரியவளாகி விடுகிறாள்!


நான் இதைப் படித்தது இந்த வருட தினமணி தீபாவளி இதழில் என்றாலும், சூறாவளி எனும் இதழில் 30-6-39 தேதியில் வெளிவந்த 'தாய்' என்னும் கு ப ராஜகோபாலன் கதை இது.  கதையில் பெரிதாய் ஒன்றுமில்லை.  எழுதிய கு ப ராவின் எழுத்து நடையில்தான் விசேஷம்.  எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை.  எளிமையான, சிக்கனமான வரிகளில் புரிய வைக்கிறார்.  இவரது மற்ற கதைகளும் இப்படிப்பட்ட நடையில்தான் இருக்குமா, தெரியவில்லை...  பார்க்க வேண்டும்.

கதையைப் படிக்க இங்கே செல்லலாம்.  


கு ப ரா 1902 ல் பிறந்து 1944 ல் இழைய அழுகல் (Gangrene) நோயால் அகாலமாய் காலமானவர்.  42 வயது.




35 கருத்துகள்:

  1. விமரிசனம், கதையை முழுதும் வாசிக்க ஊக்குவிப்பதாக இருந்தது. கதையைப் படித்தபின் தான் விமரிசனத்தை புரிந்து கொள்ள முடிகிறது. கதையின் கரு பற்றி ஒரு கோடி காட்டியிருக்கலாம்.

    கு ப ரா கதையின் முடிவு எப்படி வேண்டுமென்றாலும் அமைக்க முடியும் என்று போட்டுக்கொண்டே சென்று அவருக்கு பிடித்த முடிவை சொல்லாமல் சொல்ல்லிவிடுவார்.

    கு ப ரா வின் விடியுமா என்ற சிறுகதையை நான் இப்பகுதியில் விமரிசனம் செய்தது நினைவில் வந்தது.

    எடுத்துக்கொண்ட கதை அந்தக் காலத்தில் ஒரு புரட்சி கதையாக பல எதிர்ப்புகளை எதிர் கொண்டிருக்கலாம். கதையின் முடிவு எதிர்பார்த்ததே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKC ஸார்..  இன்று உங்கள் இடத்தை நான் பிடித்துக் கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்!  கதையை முன்னரே கோடி காட்டி விட்டால் சுவாரஸ்யம் இருக்காது என்று நம்பினேன்.  'அப்படி என்ன இருக்கிறது, இவன் இப்படி புலம்ப' என்று கதையைப் படிக்கத் தோன்றும் என்று நினைத்தேன்!  

      கடந்த செவ்வாயன்று இந்தக் கதையைப் படித்ததும் விரல்களில் அரிப்பெடுக்க ஆரம்பித்து விட்டது, உடனடியாக பகிர வேண்டுமென்று.  அதுதான் உங்கள் இடத்தை திருடிக் கொண்டேன்!

      நீக்கு
    2. ​என்னுடைய இடமா? உங்கள் இடத்தில தான் நான் ஓசியில் குடியிருந்தேன். ஒரு விதத்தில் இந்த வார மாறுதல் நல்லது. உங்களுக்கும் புரியும்.

      நீக்கு
  2. ஆதிக்க
    ம் வார்த்தை கேள்விப்பட்டதில்லை. ஆகாத்தியம் என்பதாக இருக்குமா? மகுடி தான் எழுத்துப் பிழையாக மகடி என வந்துள்ளது என்பது என்புரிதல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகுடி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சரியாக வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.  அபபாதுரையின் விளக்கத்தைப் பகிர்ந்துள்ளேன் பார்த்தீர்களா?

      நீக்கு
    2. மகுடி தான் சரியான வார்த்தை. அந்த வரியில் சர்ப்பம் என்று வருது பாருங்க. கதையில் நிறைய எழுத்துப் பிழைகள். அவள் என்று வர வேண்டிய இடங்களில் அவன் என்று இருக்கு. சிறு கதைகள்.காம் ல கதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும். அவங்க ஸ்கான் பண்ணி தட்டச்சு செய்து போடுவதால் இருக்கலாம்...

      பேருந்தில்...மொபைலில்இருந்து அடிக்கிறேன்...

      சூப்பரா எழுதியிருக்கீங்க ஶ்ரீராம். கதையை வாசிக்கத்தூண்டும் விதத்தில்....

      பாசிட்டிவ் செய்திகள் வாசிக்க மு. .டியலை.சின்ன எழுத்து...

      கீதா

      நீக்கு
    3. வெளி யுலகத்து இன்பத்தின் ‘மகடி’யைக் கேட்டதும் அவளுக்குன் பெட்டியில் கிடப்பதுபோலக் கிடந்த யௌவன சர்ப்பம் சீறிக்கொண்டு படம் எடுத்தது. //

      கீதா

      நீக்கு
    4. ஶ்ரீராம் உங்விமர்சனம்.படிக்கும் போதே கதை நன்றாகப் புரிந்து விடுகிறது. பாலம் குழந்தையை தன்னோடு வைத்துக் கொண்டு வளர்ப்பால் என்று. நினைக்கிறேன்... அப்படி முடிவு என்றால் அன்றைய காலகட்டத்திற்குப புரட்சி கரமான முடிவு...

      கதையை வாசித்துவிட்டு வரேன்.

      கீதா

      நீக்கு
    5. ஆம்.  நிறைய அவன் அவள் எழுத்துப் பிழைகள் அப்படியே எடுத்து அந்தப் பிழைகளோடுதான் தினமணியில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அந்த பிழை லிஸ்ட்டோடு பார்க்கும்போது மகுடி என்றும் ஆதிக்கம் என்றுமே எடுத்துக் கொள்ளலாம்.  நன்றி கீதா.

      நீக்கு
  3. குல்சாரின் ’ராவி நதிக்கரையிலே’யைத்தான் தந்திருக்கிறீர்கள் என்று நினைத்து, இறுதியில் குபரா பார்த்துக் குழம்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பத்துக்கு காரணமானதற்கு மன்னிக்கவும் ஏகாந்தன் ஸார்..

      நீங்கள் எதிர்பார்த்த ராவி நதி சுட்டி கீழே தந்திருக்கிறேன்.  அது ஒரு Must Read கதை.

      https://engalblog.blogspot.com/2016/12/blog-post_22.html

      நீக்கு
    2. நான் தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எல்லோரும் வடக்கு நோக்கி (ராம்.. ராம்) இருப்பது போல், நீங்களும் காவிரி தாண்டி ராவியை பார்க்கப் பாய்கிறோர்களோ என நினைத்துவிட்டேன்...!
      லிங்கிற்கு நன்றி. பார்க்கிறேன்

      நீக்கு
  4. பாசிட்டிவ் செய்தியில் முதல் செய்தி அப்பெண்மணி யின் படம்.பார்த்ததும்.செய்தி வாசித்த நினைவு. பெரிய மனம் வாழ்த்துவோம்.

    மற்ற இரண்டும் நாளை பார்க்கிறேன் கணினியில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு
  6. கதை, நீங்க சொள்ளிருக்காப்ல் எழுத்து நடை தான் தூக்கி நிறுத்துகிறது. மறைமுகமாக விஷயத்தைச் சொல்லிவிடுகிறார். அது மிகவும்.பிடித்தது. முடிவு ஏ கதேசம் எதிர்பார்த்த முடிவுதான்....ஆனால் அதைக் கொண்டு சென்ற விதம்தான் ஈர்க்கிறது....குழந்தை பிறந்ததை அழுகைச் சத்தம் என்று கூடக் குறிப்பிடவில்லை பாருங்க...பாட்டி...அவலவுதான்....அடுத்த காட்சிக்குத்த் தாவி யாச்சு...குறிப்பால் உணர்த்தும்.படங்கள் போல காட்சிகள்...மனதில் குறும்படமாக ஓடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  கதை எல்லோரும் சொன்னது, சொல்வது, சொல்லப்போவதாகத்தான் இருக்கும்.  வித்தியாசம் அந்த நடை .  ட்ரீட்மெண்ட்!

      நீக்கு
  7. அதே போன்று தன்னை இழப்பதையும், இள மமை...பெண்...ஸ்த்ரீ..என்று குறிப்பிடும் இடம் எல்லாம் சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ரசித்ததற்கு, ரசிப்பதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. ஶ்ரீராம், உங்க விமர்சனம் ரசனையான விமர்சனம்...அழகா எஜதிருக்கீங்க. ...

    நானும் வாசிக்கும்.போது எழும் எண்ணங்களைத் குறித்துக் கொண்டு விடஉம் வழக்கம் உண்டு.

    இப்ப குரல் வழிக்கருது...கூகுளுக்கு பஸ் சத்ததுல சரியா கேகாலை போல....சரியா பதிய மாட்டேங்குது..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி, ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  10. நல்லதோர் கதை பகிர்வு.

    அந்தக்காலத்தில் இக் கதை ஒரு புரட்சிக் கதையாகவே அமைந்திருக்கும்.
    கு ப ரா வின் கதைகள் நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. திரு. ஜீவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. ஜீவி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,
    வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சகோதரி. இப்பொழுதெல்லாம் எபி மூலமாகத் தான் நம் தொடர்பெல்லாம் என்று ஆகிப் போச்சு.
      எபிக்கு அதற்காக நன்றி.

      நீக்கு
  14. கொடிக்குளம் அரசு பள்ளிக்கு நில தானம் அளித்த தாயை வணங்குகிறேன். ஜனனியின் ஆசை போல குழந்தைகள் நன்கு படித்து ஆடிட்டர் ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  15. இரண்டு தினங்களுக்கு முன் செய்தியில் முள்ளு காட்டிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டு அதை காப்பாற்றிய செவிலியர் பற்றிய செய்தி காட்டினார்கள், குழந்தை பெண் குழந்தை.
    பார்க்க, படிக்க, கேட்க மிகவும் கஷ்டமாக இருக்கும் .

    இந்த கதை முன்பு படித்து இருக்கிறேன்.

    கதையில் பாலத்தின் தாய்மை வென்றது. விளைவுகளை சந்திக்க தயார் ஆகிவிட்டாள்.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இந்தக் கதை சமீபத்தில் பார்த்த ஒரு வெஸ்டர்ன் கல்சரை நினைவுபடுத்தியது. ஒரு பெண், அவள் 18 வயதில் ஒருவனால் கருவுற்று பெண்ணைப் பெற்று தான் சிங்கிள் தாயாக அவளை வளர்க்கிறாள். 24 வயதில் அவள் தனக்கேற்ற துணையைத் தேடுகிறாள். ஒருவன் 25 வயது, இவளைத் திருமணம் செய்துகொள்ளலாம் (அதாவது டேட்டிங் தொடர்ந்து பிறகு அந்த நிலையை அடைவார்களாயிருக்கும்) என்று நினைக்கும்போது அவள், தனக்கு 8 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லும்போது, நான் 25 வயதிலேயே ஸ்டெப் அப்பாவா ஆகணுமா என்று யோசிக்கிறான். பிறகு அவங்க குடும்பத்தை, பெண்ணைச் சந்திக்கலாம் பிறகு முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறான். இந்த கல்ச்சர் நம்ம நாட்டுக்கு வர இன்னும் ஒரு தசாப்தம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நில தானம் - பெரிய விஷயம். செய்தியை வேறு தளங்களிலும் படித்தேன். மற்ற செய்திகளும் நன்று. படித்த கதை - விளக்கம் நன்று. சமீபத்தில் சாவி அவர்களின் சிறுகதை ஒன்றை படித்தேன். வித்தியாசமான கதைக்களம்.

    பதிலளிநீக்கு
  18. செவ்வாய், சனி போன்ற கதைகள் சம்பந்தப்பட்ட நாட்களில் ஒருவரே சுமையைச் சுமக்காமல்
    பலர் பங்கு கொண்டால் வெவ்வேறு கோணங்களில் ரசனை ஆறு எபியில் பெருக்கெடுத்து ஓடும் சிறப்பு கிடைக்கும் என்பது தெரிகிறது. தவிர எழுத்து சம்பந்தப்பட்ட பதிவுலகில் பங்கு கொண்டோருக்கு இப்படியான முயற்சிகளெல்லாம் ஒரு பயிற்சிப் பட்டறை போல அமைய வாய்ப்பும் கிடைக்கிறது. ஆக,
    இந்த கோணத்தில் நம் எல்லோரின் பங்களிப்பும் தொடரும் களப்பணியில்
    புத்தாண்டு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!