நான்
தரிசனம் செய்த கோயில்கள் –
நெல்லைத்தமிழன்
ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 11
ஸ்ரீ கிருஷ்ணர் தகனம் செய்யப்பட்ட இட த்தையும், பலராமர் இவ்வுலகை விட்டு நீங்கிய இடத்தையும் தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து கிளம்பி, திரும்ப வரும் வழியில் சூர்யனார் கோவிலுக்குச் சென்றோம்.
இந்தக் கோவில் மிக மிகப் பழமையானது. சோம்நாத் கோவிலின் காலத்தையது. திரிவேணி சங்கமத்தின் வடக்குப் பகுதில் அமைந்துள்ளது இது. இந்தக் கோவிலில் யானை, சிங்கம், பறவைகள் மற்றும் விலங்குகளுடன் கூடிய கட்டிடங்கள் மனதை மயக்குபவை. இந்தக் கோவிலின் வளாகத்திலேயே ஒரு சிறிய குளம் (தீர்த்தம்) பல படிகள் இறங்கிச் செல்லும்படி அமைந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்தக் கோவிலும் முஸ்லீம் படையெடுப்பால் தாக்கப்பட்டு அழிந்த நிலையில் இருந்த து. சோம்நாத் கோவிலைப் போல இதனை முழுவதுமாகச் சீரமைக்கவில்லை. அதனால் அந்தப் பழமை இன்னும் தெரிகிறது.
கோவிலின் உள்ளே உள்ள சூர்ய குண்ட் எனப்படும் தீர்த்தக் கட்டம். இந்த நீரை நாங்கள் தலையில் தெளித்துக்கொண்டோம்.
உள்ளே
மூலவர் இருக்கும் இடத்தில் இப்படித்தான் இருந்தது. அங்கு இருந்த சூரியனார் சிலை காணாமல்
போயிருக்கவேண்டும்.
அல்லது
இன்னொரு வளாகத்தில் நான் பார்த்த சூரியனார் சிலை, இங்கிருந்து சென்றிருக்க வேண்டும். அங்கு அந்தச் சிலை 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது
என்று எழுதியிருந்ததாக நினைவு.
கோவில் வெளிப்புறச் சுவற்றில் இருந்த காலத்தினால் பழுதுபட்ட
சிற்பங்கள்.
இந்தக்
கோவிலில் தரிசனம் செய்தபிறகு, அருகிலிருந்த ஹிங்லஜ் மாதா குகை எனப்படும் பஞ்சபாண்டவர்
குகைக்குச் சென்றோம்.
நாட்டை
விட்டு வெளியேறிய பஞ்சபாண்டவ சகோதர ர்கள் இந்தக் குகையில் சிவனை நோக்கித் தவம்
செய்ததாக நம்பப் படுகிறது.
அவர்கள்
வழிபட்ட ஹிங்லஜ் மாதா (காளி) சன்னிதி இங்கு இருக்கிறது
(குகை என்பதால் குனிந்து
தவழ்ந்து செல்லவேண்டும்)
பாண்டவர்கள் வணங்கிய மாதாவை மனதினால் தியானம் செய்தோம்.
இதன் அருகிலேயே காம்னாத் மஹாதேவர் கோவில் மற்றும் சாரதா பீடம் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. மயூரத்வஜ அரசன், இந்தக் குளத்தில் நீராடித் தன் குஷ்ட நோயைப் போக்கிக்கொண்டான் என்று சொல்கிறார்கள். இந்த இட த்தில், சிறிய குகை போன்று கீழே செல்கிறது. அதன் வழியாகச் சென்றால், ஆதிசங்கரர் பல ஆண்டுகள் தவம் செய்த இடம் வருகிறது. இப்போதிருக்கும் வளாகம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாம்.
அங்கேயே சரஸ்வதிக்கும் லக்ஷ்மிதேவிக்கும் சிலைகள் அமைத்துள்ளனர்.
ஆதிசங்கரர் என்பவர் கேரள மாநிலம்
காலடியில் பிறந்து சிறு வயதிலேயே துறவறம் ஏகி, வடநாடுகளில் பயணித்து, இடையில் நிறைய சீடர்கள்
அமைந்து,
பல
கோவில்களை நிர்மாணித்து,
பல
மடங்களை ஸ்தாபனம் செய்து, பல கோவில்களில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம்
செய்து,
பிறகு
பத்ரி நோக்கிச் செல்லும்போது, தன் தாயாருக்குக் கொடுத்த வாக்குப்படி, தாயார் மறையும் காலம்
வந்த தும் திரும்பவும் காலடி திரும்பி, தன் தாய்க்குச் செய்யவேண்டிய இறுதிச்
சடங்குகளைத் தான் துறவியாக இருந்தபோதும் செய்து, பிறகு பத்ரிநாராயணர் கோவிலுக்குச்
சென்று,
அதன்
பின்புறம் இருக்கும் பாதை வழியாக இமயமலை நோக்கி நடந்து மறைந்தார் என்பது அவரது
சரித்திரம்.
இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக தரிசனம் செய்த பிறகு, கடைசியாக நாங்கள் செல்லவேண்டிய ராமர் கோவிலுக்குச் சென்றோம். இங்குதான் சூரிய கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட சிலை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.
அந்தப்
பகுதியை அடுத்த வாரம் பார்க்கலாமா?
(தொடரும்)
நெல்லை, சூரியனார் கோயிலின் பழமை அந்தக் கட்டிடங்களில் சிற்பங்களில் தெரிகிறது! வாவ்!! என்ன அழகு இல்லையா...
பதிலளிநீக்குநெல்லை எனக்குத் தோன்றும் சிலப்போ, புதுப்பிக்கிறோம் என்று புதுப்பித்தால் இந்தப் பழமையின் அழகியல் போய்விடுமோ என்றும், இத்தனை பழமையானது என்ற அடையாளம் தெரியாமலே போய்விடுமோ என்றும். ஏனென்றால் இப்பலாம் புதுப்பிக்கிறோம் என்று கற்கள் வேறாக இருப்பதால்.
இங்க மிகப் பழைய சோழர் காலத்து பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் பெகூர் (அப்படித்தான் பெங்களூர் ஆனது என்ற ஒரு செய்தியும் இருக்கு) நான் போனப்ப பழைய வடிவங்கள் இருந்ததை டக்கென்று எடுத்துக் கொண்டேன். ஏன்னா புதுப்பித்தல் நடந்து கொண்டிருந்தது. அழகான வடிவம் பழைய வடிவம். இன்னும் அதைப் போடவில்லை. கேமரால எடுத்தது.
புதுப்பித்தல் ஆன பிறகு போகலை....போய் அதையும் எடுத்து வந்து போடணும்னு நினைச்சேன் ஆனா இப்ப அடிக்கற வெயில பார்த்தா வெளில போகணுமான்னு இருக்கு.
கீதா
வாங்க கீதா ரங்கன் அக்கா. பழைமை மாறாமல் புதுப்பிக்க ஏராளப் பணம் தேவைப்படும். இந்தியாவில் அளவிடமுடியாத இடங்கள் இருப்பதால் இது சாத்தியப்படுவதில்லை
நீக்குஆமாம் பெகூர் எல்லி உந்தி?
பெங்களூரு ஹோசூரு ஹெட்டாரியிண்டா ஹொரஹிடெ...வலப்புறம் உள்ளே ஒரு 6 கிமீ தூரம் பெகூர் லேக் ரோட்டில் போகணும். பஸ்ஸில் போனால் பெகூர் சர்ச் ஸ்டாப்...ஆனால் கோயில் என்று சொன்னாலே கோயில் வாசலில்தான் பேருந்து நிற்கும். அரிக்கேரே பகுதிக்குப் பின்பக்கம்னு சொல்லலாம்
நீக்குகீதா
இந்த வாரக் கோயில்கள் அவ்வளவாக ஈர்க்கவில்ல்லை, இதுவரை பார்த்த கோயில்களில் ஒரு grandness இருந்தது. புகைப்படங்களும் அழகாக இருந்தன. ஆனால் ...
பதிலளிநீக்குஆதி சங்கரர் அங்கு வரை சென்றிருக்கிறார் என்பது புதிய செய்தி.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். ஆதிசங்கரர் பத்ரி வரை சென்று அங்கிருந்து இமயமலை மார்கத்தை நோக்கிச் சென்று மறைந்தார் எனப் படித்திருக்கிறேன்.
நீக்குசோம்நாத் மிகப் புராதானமானதும் நிறைய கோவில்கள் இருந்த தலம். முழுவதுமாக கஜினி முகம்மது காலத்திலிருந்து படையெடுப்புகளுக்கு ஆட்பட்டு கோவில்கள் அனைத்தும் சிதைந்தன. இந்தப் பின்னணியில்தான் இப்போது காணக்கிடைக்கும் இடங்களைப் பார்க்கணும்
கீழே இறங்கிச் செல்லும் பகுதி ஆஹா!!! சூர்ய குன்ட்! பகுதி நீச்சல் குளம் போல! ரொம்ப அழகா இருக்குல்லியா?
பதிலளிநீக்குமழை பெய்யும் போது அங்கு போய் சேர்ந்துக்கும் போல.
கடல் காற்றில் சிதைவுறுவது இயற்கை...ஆனா மனுஷனால் தாக்கப்பட்டு சிதைவுறுவது கொடூரம்.
இப்பவும் ஒரு கூட்டம் சுத்திப் பார்க்கப் போறோம்னு பாருங்க சிலர் சிற்பங்கள்ல எதையோ தேய்க்கறாங்க, பிரசாதம் வாங்கி சாப்பிட்டுட்டு எண்ணைக் கையை, சர்க்கரைக் கையை அதுல தேய்ப்பாங்க, சுண்ணாம்பு கூட இருக்கும்!! தொட்டா ஃபைன் ன்னு போடணும்.
கீதா
அளவு 15க்கு 15 அடி இருக்கலாம்.
நீக்குபார்வையாளர்களாகிய நாம் நம் செல்வங்களை பத்திரமாக வைத்துக்கொள்வதில்லை
ஆமா அது ரொம்பச் சரி, நெல்லை
நீக்குகீதா
மூலவர் இடம் மாறியிருக்காப்ல இருக்கு நெல்லை அந்தக் கல் பாருங்க...மேலே உள்ள படங்களுக்கும் அதுக்கும் நிறைய வித்தியாசம்.
பதிலளிநீக்குஹிங்க்லஜ் குகையும் கூட tiles தெரியுதே.
பீம் ஒல்லியா இருக்காரே!!! என் கற்பனையில் ஆஜானுபாகுவா 6 pack 8 pack muscle builder போலன்னு!! ஹாஹாஹாஹா
கீதா
ஓ அந்த மூலவர் தான் ராமர் கோவிலுக்குப் போயிருக்காரோ?
நீக்குகீதா
மூலவரைப் பற்றி அப்படி நினைத்தேன். எல்லாம் முஸ்லீம் படையெடுப்பின் அலங்கோலங்கள்.
நீக்குஹிங்க்லஜ் மாதா அருளினால்!!!!! தட்டில் நிறைய தெரிகிறதே! ரொம்ப அழகா அடுக்கியும் வைச்சிருக்காங்க! அதை க்ளோசப் வேற எடுத்துப் போட்டிருக்கீங்க. எண்ணிக்கிட்டுருக்கேன்!!
பதிலளிநீக்குஅவங்கதான் அதை பராமரிக்கறாங்களா? எப்படிக் கோவிலுக்குள்ள? கோயிலைப் பராமரிப்பவர்களால் அல்லது அரசினால் நிர்ணயிக்கப்பட்டவங்களோ?
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குநேற்றைய பதிவில் தங்களின் அன்பான பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை தந்தது./ தருகிறது. நேற்று இரவே அதற்கு ஒரு மறுமொழி தந்து விட்டேன். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுபற்றி எனக்குத் தெரியலை கீதா ரங்கன். பல இடங்களில் தட்டில் பணத்தை வைத்திருந்தால் அந்த டினாமினேஷனுக்குச் சமமா காணிக்கை போடணும்னு அர்த்தம். அஞ்சு பத்து ரூபாய்லாம் வேலைக்காவாது
நீக்குஓ கமலாக்கா!!! பார்த்துவிட்டேன் மிக்க நன்றி கமலாக்கா.....நாம ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்காம வேற யாருங்க நம்மளை எல்லாம் பாராட்டப் போறாங்க சொல்லுங்க!!!! ஹாஹாஹாஹா ஸோ பாராட்டிக்குவோம்.
நீக்குநீங்களும் நிறைய என்னைப் பத்தி என்னென்னவோ சொல்லிருந்தீங்க. ஜெ கே அண்ணாவுக்கு. அதெல்லாம் நான் இங்க சும்மா விடற பீலா....அதை வைச்சு என்ன எடை போடாதீங்க!!!! கமலாக்கா ரொம்ப பாவம் நீங்க!! ஹாஹாஹா
பை த வே என் எடை கொஞ்சம் குறைஞ்சுருக்கு! ஹப்பா!
உங்க பதிவுலயும் பதில் கருத்துகள் பார்த்துட்டேன்....நன்றி கமலாக்கா!!
கீதா
/நாம ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்காம வேற யாருங்க நம்மளை எல்லாம் பாராட்டப் போறாங்க சொல்லுங்க!!!! ஹாஹாஹாஹா ஸோ பாராட்டிக்குவோம்./
நீக்குஅதுவும் சரிதான்... :)) உலகளவில் புகழ் பெறா விடினும் இதிலாவது இன்பம் காண்போம்.
/கமலாக்கா ரொம்ப பாவம் நீங்க!! ஹாஹாஹா.
ஹா ஹா ஹா. என்ன இப்படி சொல்லிட்டீங்க..? நன்றி சகோதரி.
ஆதிசங்கரர் வடநாடு சென்றது ஸ்ரீசக்கரம் நிறுவியது, மடங்கள் ஸ்தாபிதம் அவரைப் பற்றி வாசிச்சப்ப அறிந்த விஷங்களோடு இங்கும் சென்று தவம் செய்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.
பதிலளிநீக்குபுதுப்பிக்கப்பட்டவை ஏனோ மனதில் ஒட்டவில்லை. அந்த டைல்ஸ் படங்கள்.
பழைய படங்கள் ரொம்ப நல்லாருக்கு நெல்லை.
கீதா
டைல்ஸ் பற்றி நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உள்ளே வரும் நீர் போன்றவை அங்கேயே தங்கிவிட்டால்... அதுக்கு டைல்ஸ் பரவாயில்லை. சுத்தம் செய்வது சுலபம்
நீக்குஆஅமா சுத்தம் செய்யறது சரிதான் நெல்லை டைல்ஸும் வழுக்கிடாதோ? ஆனா கொஞ்சம் கிரிப் டைல்ஸ் போட்டா வழுக்காதுதான் ஆனா அதையும் சுத்தம் செய்யறது படு பாடு.
நீக்குகீதா
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம் துரை செல்வராஜு சார்
நீக்குமீண்டும் கலைப் பொக்கிஷமான பதிவு..
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை.. அழகு..
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
நன்றி நன்றி
நீக்குஹிங்க்லஜ் என்றால் புரியவில்லையே..
பதிலளிநீக்குஎனக்கும் புரியலை. தில்லி வெங்கட் தெளிவுபடுத்தினால் உண்டு
நீக்குஇங்கேயும் அராபியரின் கை வரிசை காட்டப்பட்டதா..
பதிலளிநீக்குவாங்க செல்வராஜ் சார். ஆப்கான் நாட்டைச் சேர்ந்த கஜினியின் படையெடுப்பு முதலில். பிற்காலத்தில் முகலாயர்கள் வந்து அழிக்க அங்கு ஒன்றுமில்லை. இல்லாவிட்டால் பள்ளிவாசல் முளைத்திருக்குமே
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குபழைமை மாறாமல் புதுப்பிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது..
பதிலளிநீக்குதளங்கள் எல்லாம் வழவழப்பு கற்கள் தான்..
நமது பக்தைகளும் பாரபட்சம் இன்றி கேள்விப்பட்ட எண்ணெய்களை எல்லாம் ஊற்றி விளக்கேற்றி கும்மியடிக்கின்றனர்..
தளங்களில் மற்றும் கர்பக்க்ரஹத்தில் வழவழப்புக் கற்கள் ஓகே. சுத்தம் செய்வது எளிது.
நீக்குவிளக்கு ஏற்றுதல் பெரும் வியாபாரம் ஆகிவிட்டது
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தெய்வ தரிசன யாத்திரை பகுதியும் அருமை.படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமையாக உள்ளது.
அங்கு தாங்கள் சென்ற சூரிய நயினார் கோவில் சிற்பங்கள் காலப் போக்கில் சிதிலமடைந்து இருந்தாலும், ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது. கேபிள் ஒயர்கள் கோவிலைச் சுற்றி ஆங்காங்கே சூழ்ந்து இருக்கின்றன போலும்..! . (சிறபச் சிலைகளின் மேலும்) கோவிலின் முகப்பு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
மூலவர் இருக்குமிடத்தில் சூரியநயினார் சிலை இல்லையென்றால் இப்போது திரைச்சீலை மறைப்புடன் உற்சவ மூர்த்தி போல சிறு சிலை இருக்கிறதா? என் கைப்பேசியில் பெரிதாக்கி பார்த்ததில் சரிவர தெரியவில்லை. அதனால்தான் கேட்கிறேன். தரிசித்துக் கொண்டேன்.
குகை போன்ற அமைப்புடைய பிற கோவில்களும் அழகாக இருக்கிறது.
ஹிங்லஜ் மாதா சன்னதியும், பஞ்சபாண்டவர்களின் சிலைகளையும் பார்த்து அந்தக் கோவில் உருவான வரலாறுகளையும் தெரிந்து கொண்டேன். பஞ்ச பாண்டவர்கள் சிலைகளுக்கு அருகிலுள்ள பிள்ளையார் சிலை முழுக்க நாணயங்களை அழுத்தி வைத்திருப்பதை பார்த்தால், அச்சிலை மெழுகு போலானதா? இப்படிப்பட்ட
ஒவ்வொருவர்களின் நம்பிக்கைகள் விசித்திரமானதுதான் இல்லையா?
அங்கிருக்கும் மஹாதேவர் கோவிலும் சாரதா பீடம் அமைக்கப்பட்ட வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். ஆதிசங்கரர் சன்னதியில் குரு நமஸ்காரங்கள் செய்து கொண்டேன். அக்கோவிலைப்பற்றிய தகவல்களும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
அன்னியர்கள் படையெடுப்பின் காரணமாக பழங்கால ஒவ்வொரு கோவிலின் சிலைகளுக்கும் எவ்வளவு கஸ்டங்கள் , அதை பாதுகாக்க அந்த காலத்திய மக்கள் எவ்வளவு சிரமங்கள் அனுபவித்திருப்பார்கள் என அறியும் போது மனம் வருத்தமுறுகிறது. ஆனாலும் அதில் அவர்களின் வீரதீரங்கள், சமயோசித புத்திசாலிதனங்கள் பிரமிப்பையும் உண்டாக்குகிறது.
இதோ அதன் அருகிலேயே தாங்கள் சென்ற மற்றோர் கோவிலான ராமர் கோவிலில் சூரியநயினார் சிலை இருப்பதாக கூறுகிறீர்களே..! நீங்கள் தரும் தகவல்கள் வியப்பை ஏற்படுத்துவதுடன், காண முடியாத பல இறை தரிசனங்களும் பெற்றுத் தருகிறது. இந்த கோவில்கள் யாத்திரைப் பதிவுகள் எங்களுக்கு ஒரு மறக்க முடியாத வரமாகி உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். அங்கு உற்சவ மூர்த்தி போல் சிறிய விக்ரஹம் இருந்திருக்கலாம். இந்தக் கோவில்களில் எப்போதும் பூசாரி போன்றவர்கள் இருப்பதில்லை
நீக்குஅந்நியர்கள் படையெடுப்பின்போது கோவிலைப் பாதுகாத்த ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். என்னடா இந்த இறைவன் தன்னையும் பாதுகாத்துக்கலை அவனுடைய அடியார்களான நம்மையும் பாதுகாக்கலை என அவர்கள் மனதில் தோன்றியிருக்குமோ?
நீக்குபதிவு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி
பதிவு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. இறைவனைப் பாதுகாக்க முயன்ற அடியார்கள் ஆயிரக்கணக்கில் இறந்தது சோகம்தான். சென்னை பயணம் என்பதால் நிறைய எழுதமுடியலை
நீக்குஇன்றைய பகுதி அருமை நெல்லை. படங்கள், விவரிப்பு என்று இரு விஷயங்களையும் நிறைவாகச் செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசிற்பங்களைப் படமெடுத்த விதமோ
'இருக்கிறதை இருக்கிறபடியே' காட்டிய அந்தத் துல்லிய காட்சிப் படுத்துதல் தன்மை அவற்றில் மிளிர்ந்தது.
எது ஒன்றையும் விட்டு விடாத விவரிப்பிலோ
நேரேஷன் நேர்த்தி என்று சொல்வார்களே அந்தச் சிறப்பு இயல்பாகவே அமைந்த ஜோரில் கட்டுரை செல்கிறது.
இரண்டாவது சொன்னதில் இந்தத் தொடரின் ஆரம்பப் பகுதிகளை விட தூக்கலை வாசிக்கும் போக்கிலேயே உணர்ந்தேன்.
வாங்க ஜீவி சார். உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்ச்சி.
நீக்குமுடிந்தவரை நான் பார்த்தவற்றைப் படங்களுடன் பகிரவேண்டும் என்பது ஆசை. இன்னொருவர் இந்த இடங்களுக்குச் சென்றால் இவற்றைக் காண தரிசிக்க மறந்துவிடக் கூடாது என்பது என் எண்ணம்
பாண்டவர்கள் வணங்கிய
பதிலளிநீக்குஹிங்க்லஜ் மாதா படங்கள் தத்ரூபம். அந்த குகைக்கோயிலின் நுழைவுப் பகுதி மனத்தில் பதிந்து விட்டது.
காம்னாத் மஹாதேவர் கோயில் முகப்பு, பன்னிரண்டு ஜோதிர்லிங்க தரிசனம்,
ஆதிசங்கரர் தவம் செய்த இடம், சரஸ்வதி, லஷ்மி தரிசனம் என்று எல்லாமுமே நிறைவாக இருந்தன.
இங்கெல்லாம் எங்கே சென்று பார்க்கப் போகிறேன்? இதையெல்லாம் படமெடுத்து எல்லோருக்கும் காட்சிப் படுத்திய புண்ணியம் உங்களுக்கு.நெஞ்சார்ந்த நன்றி, நெல்லை.
இவையெல்லாம் தரிசிக்கும் வாய்ப்பு வரும் ஜீவி சார். வரலாற்றுப் பக்கங்களில் நான் படித்த இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைத்துக்கொள்வேன்.மிக்க நன்றி
நீக்குநெல்லை, ஹிங்லஜ் மாதா என்று தேடினால் கூகுளில் அரிய தகவல்கள் கிடைக்கின்றன. அடடா!
பதிலளிநீக்குஎவ்வளவு புராணக் கதைகள்!! வாசிக்க வாசிக்க அதிலேயே
ஆழ்ந்து போனேன்..
இன்னொரு ஆச்சரியம்.
இந்த மாதாவிற்கு சென்னையிலேயே
ஜார்ஜ் டவுன் கண்ணப்பன் தெருவில் கோயில் இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பார்த்து வாசித்துக் களிக்கலாம்.
நன்றி ஜீவி சார். உஜ்ஜயினியில் வணங்கப்பட்ட துர்கையின் வடிவம் தென் தமிழகம் முழுவதும் மாகாளியம்மன் என்ற பெயரில் விதவிதமாக வழிபடப்படுவதைப் போல என நினைக்கிறேன்
நீக்குகூகுள் தேடலில் வாசித்துப் பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்.
பதிலளிநீக்குஎத்தனை படங்கள்.
இலங்கைப் போர் முடிந்ததும் இராமர் பட்டம் ஏற்கும் முன் ஒரு முனிவர் வழி காட்டலில் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னரே பட்டம் ஏற்கிறார்.
பலுசிஸ்த்தானில் இருக்கும்
ஹிங்லஜ் கோயில் தகவல்கள் சுவாரஸ்யம்.
இதுதான் வாசிப்பு அனுபவம். நன்றி ஜீவி சார்
நீக்குஆமா நானும் பார்த்தேன் பெயர் வித்தியாசமா இருக்கேன்னு தேடிப் பார்த்தேன் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஹிங்க்லாஜில், ஹிங்கோல் நதிக்கருகில் இருப்பதும் தகவல்கள் வந்தன. எனக்கு ஆக்சரியமான ஆச்சரியம். ஹிங்குலா தேவின்னும் சொல்றாங்களாமே....ஒரு காலத்தில் பாரதகண்டேதானே. ஆனா அங்கு இப்பவும் இருப்பது.... மனதிற்கு மகிழ்வான விஷயம். சொல்ல வந்தேன் இங்க கருத்து பார்த்ததும் சொல்லிட்டு ஓடலாம்னு!!
நீக்குகீதா
இன்று கோமதிக்கா வருவது கொஞ்சம் சிரமம்.
பதிலளிநீக்குகீதா
ஏன்? ஏதேனும் பயணங்களில் உள்ளாரா.. ?
நீக்குபாண்ட்வர்களும் ஆதிசங்கரரும் வழிபட்ட, தியானம் செய்த குகை அதன் படங்களையும் எங்களுக்கும் காட்டிப் பகிர்ந்தது அருமை. மிக்வும் சிறப்பு உங்களுடனேயே பயணிக்கிறோம்.
பதிலளிநீக்குவகுப்புகளின் வருட முடிவு, பிள்ளைகளுக்கு நோட்ஸ், காணொளிகள் போடுவது என்று கொஞ்சம் வேலைப் பளு.
துளசிதரன்
வாங்க துளசிதரன் சார். சமீபத்தில் தமிழக ஆசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். என்ன என்ன வேலைகள் என்று விரிவாகக் காண்பித்தார். பாடம் நடத்துவதைவிட தினமும் டேட்டா கலெக்ட் பண்ணுவது செல்போன் அப்ளிகேஷனில் பதிவது மிக மிக அதிகம். அதிலும் மாணவர்களின் உடல்நிலை பற்றி ஆராய்ந்து பேசி அதனைப் பதிவு பண்ணணும். ரொம்பவே கடினமான பணி (5ம் வகுப்பு)
நீக்குபடங்களும் தகவல்களும் சிறப்பு. பின்னமான சிலைகள்/சிற்பங்கள் - பார்க்கும்போதே வேதனை.
பதிலளிநீக்குஉங்கள் பயணங்கள் தொடரட்டும்.
வாங்க தில்லி வெங்கட். நன்றி
நீக்குசூர்யனார் கோவில் படங்கள் எல்லாம் பழுது அடைந்து இருப்பதை சொல்கிறது.
பதிலளிநீக்குபுதுபிக்காமல் அப்படியே வைத்து இருப்பது பழமையை சொல்லவா?
//ஹிங்க்லஜ் மாதா குகைக் கோவில்.//
நன்றாக இருக்கிறது. தட்சிணை காசுக்களை அழகாய் பார்வைக்கு வைத்து இருக்கிறார்கள்.
பாண்ட்வர்கள் கோவிலும், ஆதிசங்கரர் தியானம் செய்த குகையும் அருமை.
வாங்க கோமதி அரசு மேடம். இந்தப் பின்னூட்டத்தை நான் கவனிக்கவில்லை. இன்றுதான் கவனித்தேன்.
நீக்குபல கோவில்களை, பணம் இல்லாததால் புதுப்பிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
தட்சணைக் காசுகளை பார்வைக்கு வைத்திருப்பது, வருபவர்களை, நீங்களும் போடுங்கள் என்று சொல்கிறது. நீங்களும் கவனித்திருப்பீர்கள், தட்டில், குறைந்த சில்லரைகளை எடுத்துவைத்துக்கொண்டு, அதிக மதிப்பு உள்ள நோட்டுகளை மாத்திரம் வைத்திருப்பார்கள், நீங்களும் அதிக அளவு பணம் போடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்கு