திங்கள், 4 மார்ச், 2024

"திங்க"க்கிழமை  :  வெஜிடபிள் ஆம்லெட்    -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 

வெஜிடபிள் ஆம்லெட் 

மனோ சாமிநாதன் 


இந்த ஆம்லெட் புதுவிதமானது. முட்டையில் தான் ஆம்லெட் செய்ய வேண்டுமென்பதில்லை. பருப்பு வகைகளிலும் சில மாவுகள் துணை கொண்டும் வெஜிடபிள் ஆம்லெட் செய்ய முடியும். சாதாரணமாக ஹோல்மீல் பிரெட் அல்லது சாதாரண சாண்ட்விச் பிரெட்டில் சாண்ட்விச் செய்யும்போது 2 ஸ்லைஸ்கள் நடுவே வெண்ணெய் தடவி இந்த ஆம்லெட் வைத்து சாப்பிடலாம். மிக மிக சுவையாக இருக்கும்.


வெஜிடபிள் ஆம்லெட்

தேவை:

பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி

துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்

பெருஞ்சீரகம்- கால் ஸ்பூன்

பூண்டு சிறியது- 3 பல்

பச்சை மிளகாய்-1

பொடியாக அரிந்த சிறிய தக்காளி-1

பொடியாக அரிந்த வெங்காயம்-1

பொடியாக அரிந்த கொத்தமல்லி-2 மேசைக்கரண்டி

நீளமாக, மெல்லியதாக அரிந்த கோஸ்- 2 மேசைக்கரண்டி

தேவையான உப்பும் எண்ணெயும்

செய்முறை:

பாசிப்பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.

அரை மணி நேரம் ஊறியதும் இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.


வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கோஸ் இவற்றில் 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்தக் கலவையில் சிறியதாக 4 ஆம்லெட்கள் செய்யலாம்.

தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் தடவி கொஞ்சம் மாவை எடுத்து மெல்லிய அடைகளாய் தட்டி பரப்பவும்.



இலேசாக வெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சில துளிகள் விட்டு இரு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.



ஆறிய பின் ரொட்டித்துண்டுகளில் வெண்ணெய் தடவி இந்த ஆம்லெட்களை இடையில் வைத்து உண்ணவும்.



22 கருத்துகள்:

  1. பார்ப்பதற்கு முட்டை ஆம்லட் மாதிரியே இருக்கிறது. சின்ன வயதில் அம்மா ஆம்லெட் கடலை மாவில் செய்து தருவார்கள், அந்த நினைப்பும் வந்தது.

    ஆம்லெட்டிற்கு வெங்காயம் பொடியாக தான் நறுக்க வேண்டும் என்பது விதி. இங்கே நீளம் நீளமாக அரிந்து வைத்திருக்கிறீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. எனது குறிப்பை இன்று வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் சகோதரர் ஜெ.சந்திரசேகரன்!!
    கடலைமாவில் வெஜிடபிள் ஆம்லெட் செய்யும்போது வெங்காயம், குடமிளகாயெல்லாம் பொடியாக நறுக்கி சேர்த்தால் நன்கு அதில் அவை பைண்ட் ஆகும். ஆனால் பாசிப்பருப்பை ஊறவைத்து அரைத்து செய்யும்போது கோஸ், வெங்காயமெல்லாம் மெல்லியதாய் நீளமாய் நறுக்கி போட்டு செய்தால் கடித்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்!
    இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  5. பாசிப் பருப்பு
    அடையைப் பொறுத்து எளிய செய்முறை.. இதில் சாதாரணமாக என்று குறிப்பிட்டுள்ள /// ஹோல்மீல் பிரெட் அல்லது சாதாரண சாண்ட்விச் பிரெட்கள் /// இவற்றில் எவ்வித நம்பகத் தன்மையும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!!
      தஞ்சையில் சில பேக்கரியில் நல்ல பிரெட் கிடைக்கிறது. துபாயில் கிடைக்கும் தரமான பிரெட் பற்றி நினைக்காமல் சாப்பிட்டு பழக வேண்டும்.

      நீக்கு
  6. இந்த நகரின் பழைய பேருந்து நிலையத்தில் தான் முகவரியற்ற உணவுப் பொருட்களை விற்கின்றார்கள் என்றால் திருச்சி ஜங்ஷனுக்கு அருகிலும் இதே நிலை தான்.. இதில் எனக்கு ஈடுபாடு இல்லை..

    பதிலளிநீக்கு
  7. மனோ அக்கா சூப்பர் ஆம்லெட். ரொம்ப நல்லா வந்திருக்கு செய்முறையும் அருமை. காலை வேளைக்கு புரதச் சத்து.

    நான் வீட்டில் கடலைமாவிலும் செய்வதுண்டு பாசிப்பருப்பிலும். இப்படித்தான் நீள நீளமாக நறுக்கிச்செய்யறப்ப சுவை.

    பெருஞ்சீரகம் தவிர மற்றது சேர்த்து செய்வதுண்டு. குறிப்பாக மிளகு பொடி தூவி.

    கடலமாவிலும் செய்து எடுக்கும் முன் மேலே மிளகு பொடி தூவுவதுண்டு.

    பெருஞ்சீரகம் வாய்வுத் தொல்லைக்கு சரியாக இருக்கும் இல்லையாக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கீதா! பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி!!
      இந்த மாதிரி ஆம்லெட் செய்யும்போது பச்சை மிளகாய் சேர்த்தால் மிளகு சீரகம் சேர்க்க மாட்டேன் சுவை மாறி விடும் என்பதால்! பெருஞ்சீரகமும் இஞ்சியும் சேர்ப்பது அதிக சுவைக்காகவும் மணத்திற்காகவும்!!

      நீக்கு
    2. ஆமாம் மனோ அக்கா....சுவை மாறிவிடும் ...நான் அதை சரியா சொல்ல விட்டு ப் போச்சு....

      //பெருஞ்சீரகமும் இஞ்சியும் சேர்ப்பது அதிக சுவைக்காகவும் மணத்திற்காகவும்!!//

      ஓ சாரி.. நோட்ட ட். நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  8. வெஜிடபிள் ஆம்லெட் செய்முறையும், படமும் நன்றாக இருக்கிறது.
    ரொட்டி துண்டுகளுக்கு இடையில் வைத்து சாப்பிட சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு குறிப்பு. இப்போது பல அசைவ சமையல்கள் பெயர்களில் சைவ உணவுகள் திருமணங்களில் வர ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ஒரு திருமணத்தில் பார்த்து, எதைச் சாப்பிடுவது - சைவம் தானா இது என்ற குழப்பம்! இரண்டே இரண்டு இட்லி மற்றும் கொஞ்சம் ஸ்வீட் உடன் முடித்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையேன் கேட்கறீங்க வெங்கட். ஹிப்பாக்ரசி. எதுக்கு சைவப் உணவை, அசைவப் பெயர்ல தரணும்?

      நீக்கு
    2. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!!

      நீக்கு
  10. நல்ல செய்முறை.

    நாங்கள் உளுந்தை ஊறவைத்தும் கரட்,கோவா, வெங்காயம், சிறிது அரிசிமா கலந்து நல்லெண்ணை விட்டு தாச்சியில் இதுபோல் செய்து சாதத்துடனும் சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கும் ஒரு புதிய சுவையான குறிப்புக்கும் அன்பு நன்றி மாதேவி!!!

      நீக்கு
  11. முட்டை மாதிரியே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தோற்றத்திலும் சுவையிலும் கூட இது முட்டை ஆம்லெட் மாதிரி இருக்கும் கில்லர்ஜி!!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவு அருமை. வெஜிடபுள் ஆம்லெட் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதன் செய்முறை விளக்கங்கள், படங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. பாசிப்பருப்பு சேர்தததினால், இந்த கலவை சுவையாக இருக்குமென நினைக்கின்றேன். இது போல் நானும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இன்று நான் தாமதம். மன்னிக்கவும். நேற்றும் வர இயலவில்லை. இப்போதுதான் பதிவுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. சுலபமாகத் இருக்கிறது. செய்து பார்க்கலாம். விளக்கமும், படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!