இன்றைய தனிப்பாடலாக மலர்வது தமிழ்நம்பி எழுதி, T M சௌந்தரராஜன் தானே இசையமைத்து பாடி இருக்கும் ஒரு பாடல்.
திருவரங்கம் என்னும் அறிவரங்கம்
திருவரங்கம் என்னும் அறிவரங்கம் -அய்யன்
திருமால் வாழ்ந்திடும் தென் அருளரங்கம் - எங்கள்
திருவரங்கம் என்னும் அறிவரங்கம்
இருமருங்கும் பொங்கும் காவிரி ஓடும்
இருமருங்கும் பொங்கும் காவிரி ஓடும்
இரவும் பகலும் வந்து அடியவர் கூடும் - திருவரங்கம் என்னும்
ஆதியில் ஒருநாள் அனைத்தும் முடிந்தது
மாதவன் மடியில் தாமரை மலர்ந்தது
ஆதியில் ஒருநாள் அனைத்தும் முடிந்தது
மாதவன் மடியில் தாமரை மலர்ந்தது
தாமரை மலரில் நான்முகன் தோன்றி
தாமரை மலரில் நான்முகன் தோன்றி
பூமியெல்லாம் பிறக்க புரிந்தவன் வாழும் திருவரங்கம் என்னும்
நின்றுநம் நாரணன் அருள்வது வேங்கடம்
நிலத்தில் அமர்ந்தது காஞ்சி என்னும் ஸ்தலம்
நின்றுநம் நாரணன் அருள்வது வேங்கடம்
நிலத்தில் அமர்ந்தது காஞ்சி என்னும் ஸ்தலம்
தொன்றுதொட்டே கண்ணன் தோற்றத்தைக் காட்டும்
தொன்றுதொட்டே கண்ணன் தோற்றத்தைக் காட்டும்
பாம்பணை பள்ளியில் பகவான் துயில் கொள்ளும் திருவரங்கம் என்னும்
=================================================================================================
இசைக்காக ஒரு படம். மிகச் சில படங்களையே இந்த வகையில் சேர்க்கலாம். அந்த வகையில் ஒன்று 1982 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜாவின் காதல் ஓவியம். "இசை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்" என்று பாரதிராஜா அடிக்கடி சொல்வார். அது முற்றிலும் உண்மை, இந்தப் படத்தைப் பொறுத்து. நம் வார்த்தைகளில் என்ன சொல்லலாம்? அதகளம் பண்ணியிருக்கிறார்? புகுந்து விளையாடி இருக்கிறார்? என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். உண்மையில் ராஜா ராஜாதான் இந்தப் படத்தில் (படத்திலும்)
படம் ஓடவில்லை. வெற்றி பெறவில்லை. இதன் கதாநாயகன் கண்ணன் நடித்த ஒரே திரைப்படம் இதுதான். ஆனால் பாடல்கள்? தேன். நினைத்து நினைத்து கேட்கலாம். கேட்டுக் கேட்டு நினைக்கலாம்.
அந்தப் படத்திலிருந்து இன்று ஒரு பாடல்.
காதல் தெய்வீகமானதா? உணர்வோரைப் பொறுத்தது. இசை தெய்வீகமானது.
இந்தப் பாடலில் காதலையும், காமத்தையும் குழைத்து டியூன் போட்டு முழுகி எழுந்து விளையாடி இருக்கிறார் இளையராஜா. SPB மற்றும் Janaki அம்மாவை நன்றாக வேலை வாங்கி இருக்கிறார். உணர்ந்து பாடி இருக்கிறார்கள். சௌந்தர்யலஹரி வரிகளுடன் பாடல் தொடங்குகிறது- தீபன் சக்கரவர்த்தி குரலில். அப்புறம் பன்னீர் தூவும் சிறு இசைத்துளி. அப்புறம் பாட்டு. பெருமூச்சும், ஏக்கமும், காதலும் வழிந்தோடும் பாடல்.
அவித்யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி.. (3)
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி.. (3)
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூஊஊ வனம் அலைகள் வீசும் சாமரம்
குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை
தவங்கள் புரியும் பூவினை இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால்..... ஆ.....ஆ.. எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும் போது நீ துணை சோதனை................
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
ஸ ரி நி ச.... ப ம ரி க ஸ ரி நி ச.... ப ம ரி க த த ப ம......ம த நி ஸ/ நி த ப ம ம த நி ஸ ஸஸஸஸ ஸஸரிரி நிநி ஸஸ தததத தத நிநி பப தத ரிம ஸநிதப ஸநிதரி ஸநிதப மக தபம நிதப ஸநிதப ஸரிரி கக மம ப ஸஸ நிநி தத பப ம நி ரி க ம ப
சலங்கை ஓசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்து கேட்குமே
ஒரு விளக்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போடுமே போதுமே...
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க....
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
.வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குமுதல் பாடலை க் கேட்டது 1982 ல்..
பதிலளிநீக்குதனித்துவமான பாடல்..
ஏனோ பொது வெளியில் அதிகமாக ஒலித்ததில்லை..
ஆனாலும் மனதில் நிற்கும் பாடல்.
நீக்குஇரண்டாவது பாடல்!..
பதிலளிநீக்குமிகவும் ஆழ்ந்து ரசித்த / ரசிக்கின்ற பாடல்களுள் இதுவும் ஒன்று..
ஆம். இளையராஜா.
நீக்குநதியில் ஆடும் பூவனம்
பதிலளிநீக்குஇலக்கியமான வார்த்தைகள்..
இதனுள் ஆழ்வதென்பது எல்லோருக்கும் கூடி வராது..
இதனுடைய தன்மையே வேறு..
இசை, குரல்கள் வரிகளுக்கு மெருகூட்டுகின்றன.
நீக்குஅவித்யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
பதிலளிநீக்குஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி.. (3)
பாடலின் வரிகளைத் தேடியெடுத்துத் தந்திருக்கின்றேன்..
பதிவினை சற்றே திருத்திக் கொள்ளவும்..
அன்புடன்..
திருத்தி, சேர்த்து விட்டேன். நன்றி.
நீக்குகவிஞர் வைரமுத்து எழுதிய திரைப்பாடலில் இடம் பெற்றுள்ள ஸ்ரீமத் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி மூன்றாவது திருப்பாடலின்பொருள்:
பதிலளிநீக்குஅம்மா.. உன்னுடைய பாத
தூளியானது இருளை
அகற்றுகின்ற
சூரியனைப்
போல -
அறியாமை எனும்
இருளை அகற்றி
ஞானத்தை
நல்குகின்றது.. ஏழையின்
துயரத்தைத்
துடைக்கின்ற
சிந்தாமணியை போன்றது..
பிரளய காலத்தில் திருமால் வராக
அவதாரம்
எடுத்து
இவ்வுலகை எப்படிக்
கப்பாற்றினாரோ அதைப்போல
பிறவிக் கடலைக்
கடப்பதற்கு
அபயம் தரக் கூடியது..
நன்றி இணையம்
இந்த ஸ்லோகத்திற்கும்
பதிலளிநீக்குநதியில் ஆடும் பூவனத்திற்கும் என்ன சம்பந்தம்???..
அதுனால காமத்தில் மூழ்கி பாடல் வரப்போகிறது மன்னித்துவிடு என்று சொல்கிறாரோ
நீக்குதெய்வீக காதல் என்கிற மாதிரி தெய்வீக காமம் என்று ஒன்றிருக்கின்றது...
நீக்குஅதுவாக இருக்குமோ?..
இந்த ஸ்லோகத்திற்கும்
பதிலளிநீக்குநதியில் ஆடும் பூவனத்திற்கும் என்ன சம்பந்தம்???..
இப்படத்தின் நிறைவுக் காட்சிகள் தஞ்சை பெரிய கோயிலில் படமாக்கப்பட்டிருக்கும்..
பதிலளிநீக்குபார்வையற்றிருந்த கதாநாயகன் சிகிச்சைக்குப் பின் பார்வை பெற்றதும் தனது காதலியை இங்கு தான் சந்திக்கின்றான்.. (இப்போது அவள் வேறொருவனின் மனைவி..)
பாடகன் ஆன காதலன் பாடும் போது பாடலின் வார்த்தைகளுக்கு மயங்கிய காதலி - தன்னை வெளிப்படுத்திக் கொண்டு (பழைய காதலனின்) பாட்டுக்கு எழுந்து ஆடுகின்றாள்.
கடைசியில் மயங்கி விழுந்து மாண்டு போகின்றாள்.. பாட்டைப் பாடியவனும் வாயில் ரத்தம் வழிய போய்ச் சேர்கின்றான்..
இதை மக்கள் ரசிக்கவில்லை..
பெரிய இடத்துப் பெண் படத்தின் உல்ட்டாவான
சகலகலா வல்லவன் மாதிரியான படங்கள் இளையராஜா அவர்களது இசையில் வெற்றி பெற்றிருக்க இந்தப் படம் தோல்வியைத் தழுவியது..
பூவோடு சேர்ந்த நாரும் மணம் என்கிற மாதிரி இந்தப் பாடலும்...
பதிலளிநீக்குஆதிசங்கரரின் ஸ்லோகத்துடன் வைரத்தின் வரிகளும் சேர்ந்து கொண்டன..
மாலை ஆறு மணியளவில் வசந்த் தொலைக்காட்சியில் கந்தசஷ்டிக் கவசம் ஒளிபரப்பப்படும் முன்பாக ஒரு பாடல் ஒலிக்கும்..
பதிலளிநீக்குஅதில் வந்தேமாதரம் மூலப் பாடலில் பொழி மாற்றம் செய்த மகாகவியின் சில வரிகளும் ஷாரே ஜஹான் ஸே அச்சா - எனும் வரிகளும் இடம் பெற்றிருக்கும்..
ஆனால் விவரக்குறிப்பில் பாடல் வைரமுத்து என்று வரும்...
இது எப்படி நியாயம் ஆகும்?..
இவுங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் வட்மொழி இனிக்கும்..
சங்கீத ஜாதி முல்லை பாடலில் சுமங்கலிப் பெண்ணின் கால் விரல்களில் மெட்டி இல்லாததைக் காணலாம்...
பதிலளிநீக்குமூலஸ்தானத்திற்கு எதிரில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதைப் போல காட்சி..
இயக்குனர் சறுக்கிக் கொண்ட இடங்கள்...
முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாம் பாடல் நிறைய முறை கேட்ட பாடல். படம் தோல்விப் படம் இல்லையா?
பதிலளிநீக்குஅலைகள் ஓய்வதில்லை படத்தின் காதல் ஓவியம் பாடும் காவியம் என்ற பாடல் வரியில் இருந்து
பதிலளிநீக்குகாதல் ஓவியம் திரைக்கதை தோன்றியிருக்கலாம்..
அலைகள் ஓய்வதில்லை படத்திலும் ஏடாகூடமான காட்சியமைப்புகள்..
ஏகப்பட்ட விவரங்கள். சுவை, சுவாரஸ்யம்.
நீக்குகாதல் ஓவியம் சிறந்த படம், பாடல்கள் அனைத்தும் மிகச்சிறந்தது ஆனால் படம் ஓடவில்லை ஆம்.
பதிலளிநீக்குஅலைகள் ஓய்வதில்லை அடுத்து வந்த படம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.
முதல் தனிப்பாடல் எப்போதோ ஓரிரு தடவைகள் கேட்டிருக்கிறேன். இப்போதும் இன்று இங்கு கேட்டு ரசித்தேன்.
இரண்டாவது திரைப்பட பாடலும் கேட்டிருக்கிறேன். உண்மைதான்..! படம் தோல்வியை சந்தித்திருந்தாலும், இசையும், பாடல்களுகேற்ற குரல் வளங்களும் இந்தப் படத்தின் பல பாடல்களை சிறப்பாக்கும். திரைப்படம் பார்த்ததில்லை. பாடல்கள் அனைத்தும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
இப்போது, இன்றைய பதிவிலும், மறக்க முடியாத பாடகர்கள் எஸ், பி. பி, ஜானகி அவர்கள் இருவரின் இனிமையான குரலில் பாடலை கேட்டு ரசித்தேன். அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிவில் தங்கள் பதில் கருத்துக்களும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. முன்பு கேட்டு ரசித்திருக்கிறேன். இன்றைய பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்று மீண்டும் கேட்டேன் , நன்றி.