வியாழன், 7 மார்ச், 2024

உங்கள் உயிர் எங்கள் கையில்

 பாட்டி தாத்தாவோட சேர்ந்திருந்த காலத்தில் நாம் வெளியே கிளம்பும்போதே பாட்டி, "கண்ணா...  சில்லறை எடுத்துகிட்டியா?  பஸ்ல பார்த்து ஏறு...  அவசரப்படாதே... பத்திரம்ப்பா..  பத்திரம்..." ன்னு எல்லாம் சொல்லி சொல்லி அனுப்புவார்கள். 

மழைக்காலம் என்றால் உள்ளிருந்து "குடை எடுத்துண்டானா?"  என்று தாத்தாவின் குரல் கேட்கும்!  

அப்படி எல்லாம் அக்கறையாக நம்மைக் கேட்க உறவுகள் இருந்தார்கள்.  கூட்டுக குடும்ப  மகாத்மியம்.   இப்போதைய காலகட்டத்தில் அவசர யுகம்.  மனைவி ஒரு பக்கம் அலுவலகம் கிளம்ப, குழந்தை ஏற்கெனவே ஸ்கூல் பஸ்ஸில் சென்றிருக்கும்.

இந்த இயந்திர யுகத்தில் உங்களைப் பற்றி அக்கறைப் படுபவர் யார்?  நண்பர்கள் முதல் உறவுகள் வரை அவரவர் வேலையை அவரவர் பார்ப்பார்களே தவிர, நீங்கள் செய்வது சரியா, நல்லதா கெட்டதா என்று யோசிக்க அவர்களுக்கு நேரம் இருக்காது.

ஆனால் இப்போது இந்த நிலை மாறி இருக்கிறது.

உங்கள்மேல், உங்கள் உயிர்மேல் அக்கறை கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள்.  வந்திருக்கிறார்கள்.  புதிதாக உருவாகி இருக்கிறார்கள்.  

ஆம், நீங்கள் பொறுப்பே இல்லாமல் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் சரி, சீட் பெல்ட் போடாமல் நான்கு சக்கர வாகனத்தில் சென்றாலும் சரி..  ஓட்டுநராகா இருந்தாலும் சரி, முன்னிருக்கை பயணியாக இருந்தாலும் சரி....


அவ்வளவு பரபரப்பான போக்குவரத்துக்கு நடுவிலும், தங்கள் உயிரை துச்சமென மதித்து குறுக்கே பாய்ந்து வந்து உங்களை பிடிப்பார்கள்.  மறுபடி நீங்கள் அந்தத் தவறைச் செய்யாதிருக்கும் பொருட்டு, வகுப்பில் வாத்யார் பனிஷ்மென்ட் கொடுப்பார்கள் இல்லையா,  ஒன்று இம்போசிஷன் தருவார்கள், அல்லது அபராதம் விதிப்பார்கள்.  ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  எங்கள் கொடுமைக்கார வாத்யார் அமல்ராஜா வித்தியாசமாய் ஐந்து செல்லாத ஒரு பைசா என்றெல்லாம் அபராதம் விதிப்பார்.  அதுபோல இல்லாவிட்டாலும் 'ஐந்தாயிரம்.... பத்தாயிரம்.....' என்று பாண்டியராஜன் படம் போல அபராதம் விதிப்பார்கள் இந்த அக்கறையாளர்கள். 

சென்னைச் சாலையெங்கும் இதே வேலையாக அயராது உழைக்கிறார்கள்.


நீங்கள் யாரும் தவறு செய்து நரகத்துக்கு போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.  அரசாங்கம் இந்த விஷயத்தில் கண்டிப்பாகவே இருக்கிறது.  

அன்று காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம்.  சிக்னல் தாண்டும் நேரம்,  நாங்கள் சாலையின் நடுவில் சென்று கொண்டிருக்கிறோம், கியர் மாற்றி வேகம் எடுக்கிறோம்.  இடதுபுறம் வந்து கொண்டிருந்த காரின் குறுக்காக அபாயகரமாக தாண்டினார் ஒரு போக்குவரத்துக்கு காவலர்.  ஆம், அவர்தான் நான் சொன்ன அந்த அக்கறையாளர், தேவதூதர்.  உங்களை எல்லாம், நம்மை எல்லாம் ரட்சிக்க வந்த மகாபுருஷர்.  எங்கள் காரின் குறுக்காகவும் பாய்ந்தார்.  சடக்கென்று பிரேக் போட்டு குலுங்கினோம்.  எங்களுக்கு வலதுபுறம் வந்து கொண்டிருந்த காரை விரைந்து நெருங்கி கதவைத் தட்டி நிறுத்தச் சொன்னார்.  கைகாட்டி ஓரம் வரச்  செய்தார்.  நாங்களும் காரை நிறுத்தி காத்திருக்க வேண்டியதாயிற்று.  நம் நேரமா முக்கியம்?  வலது புறம் செல்பவரின் உயிரைக் காக்க தன் உயிரையும் மதிக்காமல் காவலர் வீர தீரமாய் போராடும்போது நாம் ஒத்துழைக்க வேண்டாமா?  ஒத்துழைக்கா விட்டால் நமக்கும் பத்தாயிரம் பழுக்குமே...  எங்கள் படபடப்பு அடங்கியபின் காரை எடுத்தோம்.


இப்படிதான் சில நாட்களுக்கு முன்னால் நிற்காமல் செல்ல முயன்ற ஒருவரை காவலர் ஒருவர் கால் நீட்டி தடுக்க முயன்றதில் அந்த பயணி இவரால் எட்டி உதைக்கப்பட்டு பொறுப்பே இல்லாமல் விபத்தில் மாட்டி செத்துப் போனார்.  இன்னொரு இடத்தில் குறுக்கே பாய்ந்த காவலரை எதிர்பார்க்காத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அந்தக் காவல்காரர் மேல் ஆட்டோ ஏற்றிவிட்டு, அவர் எழும் முன் வேகமெடுத்து காணாமல் போனார்.  மாட்டியவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டாலும், உடன் இருந்த மற்ற தியாகிகள் அந்த ஓட்டுனரை அப்புறம் தேடிப் பிடித்தார்கள்.  


சில வருடங்களுக்கு முன் சென்னை கே கே நகரில் ஒரே வண்டியில் மூன்று மாணவர்கள் திமிராக பயணம் செய்து, காவலர்களைக் கண்டதும் வேகமெடுத்து தப்பிக்க முயல அவர்களைத் தடுத்துக் காக்க வேண்டி வண்டியின் சக்கரத்துக்கு நடுவே தன் லத்தியை எறிந்தார் ஒரு காவலர்.  என்ன ஆகி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை!



​நமக்கென்று, நம்மேல் அக்கறைப்பட யார் இருக்கிறார்கள் என்கிற உங்கள் கவலை இப்போது தீர்ந்திருக்கும்.  கொலைக் குற்றவாளிகள் கூட தப்பித்து விடுவார்கள்.  ஆனால் உங்களால் உங்கள் உயிரை அவ்வளவு துச்சமாக நினைக்க முடியாது.  அரசாங்கமும், காவலர்களும் இடம் கொடுக்க மாட்டார்கள்.


வெயில் மழை பாராமல் அவர்கள் ஆற்றும் சேவையை நீங்கள் சென்னையெங்கும் பார்க்கலாம்.  ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் முன்னூறு பேர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்பது அரசாங்கம் அவர்களுக்கு இட்டிருக்கும் கட்டளையாம்.  முன்னூறு பேர் வரை அரசாங்கத் கணக்கு....

குறிப்பிட்ட இந்த இடங்களை நெருங்கி வரும் இரு சக்கர ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகள் இவர்களைக் கண்ணில் கண்டதும், அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு வளைந்து திரும்பி பறப்பார்கள் பாருங்கள்..  கண் கொள்ளா காட்சி.  மறைவில் நின்று இவரை கவனித்த்து விட்ட வெண் சட்டைக் காவலரும் இவரைத் துரத்திப் பார்த்து தோல்வி அடைவார்.  ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாத ஆத்திரம் அப்போது அவர் முகத்தில் தெரியும்.

=============================================================================================

1977 ல் சுஜாதா குமுதத்தில் எழுதிய ஒரு கட்டுரையை பகிர்கிறேன். 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' தொடரிலும் இது போன்ற ஒன்று படித்த நினைவு இருக்கிறது.  இதன் தொடர்ச்சியோ என்னவோ!


மூன்று தினங்களாக டெஸ்ட் மேட்சில்  உட்கார்ந்திருந்தேன்.  கிரிக்கெட்டை வெள்ளைக்காரர்கள் நம் ரத்தத்தில் ஊற வைத்திருக்கிறார்கள்.   'டெஸ்ட்' கிரிக்கெட்டுக்கு பந்தாக்களும், சம்பிரதாயங்களும் சில்லி மிட் ஆன் கவர் பாயிண்ட் என்றெல்லாம் இருப்பது போல நான் சிறிய வயதில் ஆடிய வீதி கிரிக்கெட்டுக்கும் பிரத்யேகமான விதி நுட்பங்கள் இருந்தன தெருவுக்கு தெரு ஒரு டீம் இருக்கும்.

மேட்ச்க்கு கூப்பிடும் முறைக்கே எழுதப்படாத விதிகள் இருந்தன. எங்கள் டீம் பையன்கள் இரண்டு பேரை முதலில் தூது அனுப்புவோம் அவர்கள் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, அணைத்து கொண்டு எதிரி முகாமில் மேலும் கீழும் உலாத்துவார்கள் அதை திண்ணை நிழலில் இருந்து கவனிக்கும் எதிரிகள், கேப்டனிடம் போய் முறையிடுவார்கள் ஸ்ரீ கேப்டன் வந்து என்னப்பா மேட்சுக்கு வரீங்களா?"  என்று கேட்பான்.   'இஸ்திக்கிறீங்களா?' என்று ஒரு பிரயோகமும் உண்டு உடனே எந்த தெருவில் விளையாடுவது, யார் பந்து கொண்டு வருவது, யார் பேட் கொண்டு வருவது, யார் ஸ்டம்ப் போன்ற நுணுக்கமான விவரங்களை பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும்.

இவைகளை ஒருவழியாகத் தீர்மானம் செய்த பின், 'கையெழுத்து' மாட்சா இல்லையா என்கிற முக்கியமான பிரச்சனையில் சில சமயம் பேச்சுவார்த்தை முறிந்துவிடும் கையெழுத்து மேட்ச் ன்றால் தோற்ற கட்சியின் கேப்டன் வென்ற கட்சியின் ஸ்ரீராம் ஸ்கோர் புத்தகத்தில் கையெழுத்து போட வேண்டும் தமிழன் புறமுதுகு காட்டுவதற்கு அடுத்தபடியாக அவமானம் இதுதான் என்று நினைக்கிறேன்.

சாதாரணமாக கையெழுத்து மேட்சுக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் ஆனால் சீமாச்சு போன்ற ஸ்டார் பிளேயர் இருந்தால் ஒப்புக் கொள்வோம் அவர்கள் பிடிவாதமாக 'கை' மேட்ச் தான் வேண்டும் என்றால் இப்படி செய்வோம் ஆள் இல்லாமல், பதினொன்றாவதாக எண்ணிக்கையை நிரப்புவதற்காக சேர்க்கப்பட்ட அம்பியை (வயது ஆறு) அவன் தான் கேப்டன் என்று சொல்லிவிடுவோம் அம்பி எதிலும் கையெழுத்து போடுவதற்கு தயங்க மாட்டான்.

ந்து, பழசாகிப் போன டென்னிஸ் பந்து.... சில வேளைகளில்  துணிப்பந்து. ஸ்டம்ப் என்பது வேப்பங்குச்சிகள் அல்லது சுவரில் எழுதப்பட்ட கரிக்கோடுகள்

நடுநிலையாளர் கட்சிக்கு ஒருத்தன். ஸ்கோர் சொல்பவன் கட்சிக்கு ஒருத்தன். ஸ்கோர் செய்வதற்கு சாகசமும் மிகத் திறமையும் படைத்த ரங்கன் வருவான். கொஞ்சம் கட்சி டவுனில் இருந்தால், அருகில் உட்கார்ந்திருக்கும் எதிர்க்கட்சி ஸ்கோரிடம்  "அது என்ன விழுந்து  கிடக்கிறது பார்... நாலணாவா?"  என்று கேட்டு, அந்த சமயம் சடக்கென்று நான்கு ரன் ஏற்றுவான்.

மேட்ச் தெருவில் தான் நடக்கும். பால் கறக்க பசு மாடு வந்து விட்டால் நின்று விடும். வீட்டுக்குள் அடித்தால் அவர்கள் எடுத்து வைத்துக் கொண்டால் அடித்தவன் தான் போய் முறையிட்டு மீட்டுக் கொண்டு வர வேண்டும்.

நாங்கள் கிழித்த கரிக்கோடுகள் அழிந்துவிட்டன என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எங்கெங்கோ நாடெங்கிலும் சிதறி இருக்கிறார்கள். இப்போது புதிய கரிக்கோடுகள் கிழித்து புதிய பையன்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் விதிகள் என்னவோ..

- கண்ணோட்டம்- சுஜாதா - 1977 குமுதம் 

===================================================================================================


திருக்குறளில் ‘நல்குரவு’ என்றோர் அதிகாரம் இருக்கிறது. உரையாசிரியர்கள் எல்லோரும் அதை ‘வறுமை’ என்றே அர்த்தம் செய்து கொண்டு உரை எழுதியிருக்கிறார்கள்.
நல்குரவு என்றால் வறுமை அல்ல.
அந்த அதிகாரத்தில் இருக்கும் ஒரு குறளை மேற்கோள் காட்டியே இதை என்னால் விளக்க முடியும்.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
அறத்தோடு பொருந்தாத நல்குரவு, ஒருவனைப் பெற்ற தாயே அந்நியனாகப் பாவிக்கும் அளவுக்குக் கொடுமையானது என்பது பொருள். வறியவன் என்பதாலேயே பெற்ற தாய் ஒருவனை அந்நியனாய்ப் பார்ப்பாளா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் வறுமை வேறு, நல்குரவு வேறு. அறத்தோடு பொருந்தாத என்கிற Adjective ஏன் பயன்படுத்துகிறார் வள்ளுவர்?
வறுமையை ஈகையால் போக்க முடியும், கல்வியால் வெல்ல முடியும், உழைப்பால் விரட்ட முடியும். மனித சமூகத்துக்குச் சொல்லப்பட்ட அறங்களால் வறுமையை இல்லாமல் செய்ய முடியும். ஆனால் நல்குரவு என்பதை அறத்தாலும் வெல்ல முடியாது.
நல்கு + இரவு என்று பிரித்துத்தான் நான் பொருள் காண்கிறேன்.
இரத்தலை நல்குவது நல்குரவு. இரத்தல் என்றால் பொருளுக்காக இரத்தல் மட்டுமல்ல. அன்புக்காக, அங்கீகாரத்திற்காக, சந்தோஷத்துக்காக, நட்புக்காக, அமைதிக்காக, திருப்திக்காக இப்படி யாவற்றுக்கும் எங்கேயாவது இரக்கிற நிலை. மிகப் பெரிய செல்வந்தர்கள் கூட நல்குரவால் பாதிக்கப்படுவார்கள்.
நல்குரவு என்பது ஊழ்வினை அல்ல. ஒவ்வொருவரும் தத்தம் Attitude ஆல் தேடிக் கொள்வது. Attitude தான் காரணம் என்பதை உணராமல் இருப்பது. கொஞ்சமும் இரக்கம் இன்றி இச்சொல்லுக்கு மிகச் சரியான பொருளை, கதிரைவேற்பிள்ளை அகராதிதான் நேராகச் சொல்லியிருக்கிறது :
தரித்திரம்.

- கே ஜி ஜவர்லால் -  

======================================================================================

சிறுகவிதை  - மறந்து போனவை 

கடந்த கால 
கோடைகளும், வசந்தகாலமும் 
நீர்நிலைகளும் நினைவுகளும் 
எண்ணங்களின் படிமங்களில் 
எங்கோ ஒளிந்து கொண்டு 
 குறிச்சொற்கள் நினைவுறுத்தலில்  
அவ்வப்போது தலை காட்டுகின்றன!  

===========================================================================================

சில பழைய புகைப்படங்கள்....




மரியாதை...

================================================================================================

ஏகாந்தமாய் 


சோமாலியாவில் படம் பார்த்த கதை !

அது ஒரு ’விஹெச்எஸ்’ காலம். ’அப்படீன்னா?’ - என்று இப்போது சிலர் கேட்கலாம். அதாவது VHS என மார்க் செய்யப்பட்ட வீடியோ கேஸட்கள் புழங்கிய காலம். மொகதிஷுவில் இந்தியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பாத்திரம் பண்டங்கள் போன்ற அத்தியாசியப் பொருட்கள் சரிவர இருக்கோ.. இல்லையோ..  அவசியம் டிவி , வீடியோ கேஸட் ரெகார்டர் இருக்கும். மாற்றலில் சோமாலியாவிலிருந்து இறுதியாக நகர்பவர்களிடம் சொல்லிவைத்து, செகண்ட்- ஹாண்டிலாவது வாங்கிவைத்திருப்பார்கள். இவைகளை வைத்துத்தான் அங்கு பிரதானமாக பொழுது ‘போக’வேண்டும். அல்லது ஒருவழியாக ’போக்க’ வேண்டும்.

நகரில், நிம்மதியாக உட்கார்ந்து பார்க்க என ஒரு முறையான சினிமா தியேட்டர் இல்லாததால், இந்தியர்களுக்கும் ஏனைய வெளி நாட்டவர்களுக்கும் வீட்டில் உட்கார்ந்து வீடியோ பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஹஃபீஸ் வீடியோ ஷாப், கிலிமாஞ்சரோ வீடியோ என இரண்டு பிரதான வீடியோ லெண்டிங் கடைகள் அங்கு இயங்கியது நினைவில் வருகிறது. ஹஃபீஸில் பெரும்பாலும் ஹிந்திப்படங்கள், சுமாரான ப்ரிண்ட் குவாலிட்டியில் கிடைக்கும்.

கிலிமாஞ்சரோவில் நல்ல ஆங்கிலப் படக் கேஸட்டுகள் கிடைத்தன. நான் கிலிமாஞ்சரோவில் அடிக்கடி ஆங்கிலப் படங்களை வாடகைக்கு எடுத்துவந்து பார்ப்பேன். இந்தியப் படக் கேசட்டுகளுக்காக, துபாய் வழி அங்கு வருவோரிடம் (புதிதாக மொகதிஷுவிற்கு வரும் இந்தியர், ஹோம் லீவிற்கு இந்தியா போய் திரும்புவோர் போன்ற புண்யவான்கள்) முன்பே சொல்லிவைத்துவிடுவோம். துபாய் ட்ரான்ஸிட்டின்போது ‘அங்கே நல்ல க்வாலிட்டி வீடியோ கேஸட்கள் கிடைக்கும் –  மறக்காம ஏதாவது ரெண்டு வாங்கி வாப்பா’ என்று. அப்படி மொகதிஷுவை வந்தடைபவைகளில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே இருக்கும். இந்தியர்களில் நிறையப்பேர் அங்கே தமிழர்கள் என்பதே காரணம். சில ஹிந்தி, ஆங்கில, மலையாளப் படங்களும் அவ்வப்போது யாராவது கொண்டுவந்து கொடுப்பார்கள்.

இப்படி மொகதிஷு வாழ் இந்தியர்களிடம் ’நல்ல ப்ரிண்ட்’ படங்கள் கேஸட்டுகளாய் துபாய்வழி வந்து சேரும்.. சர்க்குலேஷனில் ஆனந்தமாக விரைவிலேயே நகர்வலம் வரும்! இந்தியாவிலிருந்து சினிமா, க்ளாசிக்கல் ஆடியோ கேஸட்டுகளும் இப்படி வரும்.

பெரும்பாலும், வார விடுமுறை தினத்தன்று இந்திய நண்பர்கள், யாரையாவது லஞ்சுக்கு என்று தங்கள் வீடுகளுக்கு அழைப்பார்கள். சாப்பாடுங்கிறது சும்மா .. ஒரு சாக்கு.. சேர்ந்து உட்கார்ந்து சினிமாப் படம் பார்த்தலே பிரதான நோக்கம்.  அல்லது கூப்பிட்டவர் இந்தியாவுக்கு சமீபத்தில் போய்வந்திருப்பார். அந்த  நிலையில் ’அந்தப் படம் பார்த்தேன், இந்தப் படம் ஆஹா..!’ என்றெல்லாம் எடுத்துவிடாவிட்டால் அரிக்குமே உடம்பை…! மாறாக, ’இந்தக் கோவிலுக்குப் போனோம், அந்த புண்ணிய க்ஷேத்திரத்திற்கும் போய்ட்டுவந்தோம்....’  என்றெல்லாம் யாரும் எதுவும் அங்கு பேசி கேட்ட நினைவில்லை. கொஞ்சம் இந்திய , லோக்கல் நிலவரங்கள், நிறைய இந்திய சினிமா – இப்படித்தான் பொதுவாகப் பேசிப் பொழுதுபோக்கினர் மொகதிஷு-இந்தியர்.

சோமாலியத் தலைநகரில் எலெக்ட்ரானிக்ஸ் மார்க்கெட் என்பதாக ஏதும் இல்லை.  டிவி, விசிஆர், டேப் ரெகார்டர் போன்றவையெல்லாம் புதிதாகப் பார்த்து வாங்க வழியில்லை. வேலையில் சேர்ந்த சில மாதங்களில் டென்மார்க்கிலிருந்து –டிப்ளோமாடிக் சேனல் வழியாக- ஒரு க்ரண்டிக் (Grundig) 21 இன்ச் டிவியும், ஷார்ப் வீசிஆரும் (VCR) இறக்குமதி செய்திருந்தேன். (ஆர்டர் செய்து இரண்டு மாதங்களுக்குப் பின் மொகதிஷு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது!)

அப்போதெல்லாம் அங்கே வசித்த இந்திய நண்பர்களிடம் பழைய மாடல்களான டாப்-லோடிங் ’விசிஆர்’-களைத்தான் (top-loading VCR) பார்க்கமுடியும். அதாவது பெரிய சைஸ் விசிஆர் ‘பெட்டி’யின் ’எஜெக்ட்’ பட்னை அழுத்தினால், மேல்பக்கத்தில் மெல்ல எழும்பும் ஒரு தட்டு. அதில் வீடியோ கேஸட்டை நுழைக்கவேண்டும். பின்னர் பட்டனை அழுத்தினால் அதை உள்ளே இழுத்துக்கொண்டு மூடிக்கொள்ளும்! ‘ப்ளே’ யை அழுத்தி, மெல்ல வீடியோவை ஓட்டலாம். என்னுடைய ’ஷார்ப்’ விசிஆர், புதிதாக ஐரோப்பிய, துபாய் மார்க்கெட்டுகளில் அப்போது வந்திருந்த ‘ஸ்லீக்’ மாடல். ‘ஸைட்-லோடிங்’ டைப்வேற.  வீட்டுக்கு வரும் நண்பர்களில் சிலர் நான் படம் பார்க்க கேஸட் போடுகையில், ஆர்வமாகக் கவனித்தார்கள். கேட்டார்கள்: ”என்ன இது? விசிஆரா..  புதுசா! எங்கே கெடச்சுது? இவ்வளவு சின்னதா இருக்கு.. ‘ஸைட்’லேர்ந்தே கேஸட்டைப் போட்டுறலாமா!” என்று ஆச்சர்யப்படுவார்கள். சந்தோஷமாக இருக்கும். சின்ன வயசின் எலெக்ட்ரானிக் பெருமைகள்!

மிகவும் குறைவாகவே இதுவரை(!) தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கும் நான், அவற்றிலும் பெரும்பாலானவற்றை வீடியோ கேஸட்களில் மொகதிஷுவில்தான் பார்த்தேன் என்றால் இங்கே பெரும்பாலோருக்கு நம்பக் கஷ்டமாய்த்தானிருக்கும்.

என்ன செய்ய, நம்ம கத அப்படி..! சில சுவாரஸ்யமான படங்கள் நினைவில்:

வேதாள உலகம், வேதம் புதிது, புதிய வார்ப்புகள், அக்னி நட்சத்திரம், நாயகன், உன்னால் முடியும் தம்பி, முதல் மரியாதை, தூறல் நின்னுபோச்சு, மெல்லத் திறந்தது கதவு, மௌன ராகம், பயணங்கள் முடிவதில்லை, உருவங்கள் மாறலாம், நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) இப்படி. ஹிந்தியில் கேஸட் ரூபத்தில் என் முன் வந்த படங்களில் - அஸம்பவ் (Saeed Jaffrey), அங்குஷ் (அங்குசம்) Nana Patekar), அங்கூர் (திராட்சை -Adapted from ‘The Comedy of Errors’) -Sanjeev Kumar, Deven Verma, Moushumi Chatterjee, Deepti Naval) ஆகியவை மந்தைத்தனத்திலிருந்து மாறுபட்டவை. ரசித்தவை.

கிளிமாஞ்சரோவில் எடுத்துப் பார்த்த ஆங்கிலப்படங்கள் என..  : McKenna’s Gold (Gregory Peck, Omar Sharif), The Great Escape (Charles Bronson, Steve McQueen), The Key to Rebecca, Tamarind Tree (Omar Sharif) , Dr.Zhivago (Omar Sharif), Gypsy Camp Vanishes into The Blue (Svetlana Toma)- Maxim Gorkyயின் கதையின் அடிப்படையிலான..ஆஹா.. என்ன ஒரு படமது.), Cat people (Nastassja Kinski), Emanon, Rain man (Dustin Hoffman), Scarface (Al Pacino), Kramer vs Kramer (Dustin
Hoffman, Meryl Streep), Taxi Driver (Robert De Niro, Jodie Foster) – இப்படி சில அருமையான, சுவாரஸ்யமான படங்கள் நினைவிலாடுகின்றன..

===============================================================================================


நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்த நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சமீபத்தில் பி.ஜே.பி.யிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு அங்கு மகளிரணி உதவி செயலாளர் பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது.

- மொபைலை கணவர் பறித்ததால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை. தன் தாயாரோடு அடிக்கடி ஃபோன் பேசிக் கொண்டிருந்ததால் கணவன்,மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் கணவர் கோபத்தில் மனைவியிடமிருந்து மொபைல் பறித்து உடைத்து போட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த நிலையில் தன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மனைவி - என்ன கொடுமை!

- சென்ற அக்டோபரில் நடந்த ரயில் விபத்திற்கு இன்ஜின் டிரைவர்கள் இருவரும் சிக்னலை கவனிக்காமல் செல்ஃபோனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது - என்ன ஒரு பொருப்பற்றத்தனம்!

- பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் மிருகங்களுக்காக பிரத்யேக, நவீன மருத்துவமனை தொடங்கியிருக்கிறார். அங்கு தங்கள் வளர்ப்பு மிருகங்களை இன் பேஷன்டாக அனுமதித்தும் சிகிச்சை அளிக்கலாம். தெரு நாய்களுக்கு பிரத்யேக தங்குமிடம் அமைக்கப் பட்டுள்ளது. 

- சி.பி.எஸ்.சி. அடுத்த கல்வியாண்டில்(2024-25) தேர்வு முறையில் பல புதுமைகளை புகுத்தவுள்ளது. ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு என்பதை மாற்றி செமஸ்டர் முறையில் ஆண்டிற்கு இரண்டு முறைத் தேர்வு, புத்தகத்தை பார்த்து பதில் எழுதுவது போன்றவை அமலுக்கு வருகின்றன. - All the best students!

=======================================================================================

பொக்கிஷம்  :-

இந்த வார நாடக அனுபவம்...


பிக்காஸோ...


சாமா ஜோக்ஸ்....

சிபாரிசு...

எலெக்ஷனும் செலெக்ஷனும்!

90 கருத்துகள்:

  1. அது புதுக்கவிதையாகத் தான் இருக்கட்டுமே, எதுகை, மோனை இயல்பாகவே வந்து உட்கார்ந்தால் அதன் அழகே தனி தான்.

    சிலர் வார்த்தைக் கோர்வைகளாய் வரிகள் எழுதும் பொழுதே எதுகை மோனை இயல்பாகவே வந்துப் படிவதைப் பார்த்திருக்கிறீர்களா?..

    இவை எல்லாமே எழுதும் விஷயத்திற்கு தங்கள் பங்காய் அழகு சேர்க்கும் அணிகலன்கள் தாம்.
    லேசில் திருப்தி அடையாத எழுத்து முனைப்பு கூடி வரின்
    இந்தச் சிறப்புகளெல்லாம் நாளாவட்டத்தில் தன்னாலே அமைந்து விடும். வாசிப்பவர்களுக்கும்
    'என்னமாய் எழுதியிருக்கானய்யா'
    என்ற பிரமிப்பு கூடும்.

    எனக்கு இப்படிப்பட்ட வாசிப்பு அனுபவங்கள் ஏற்படும் சமயங்களில் படித்து முடித்ததும் மறுபடியும் தலைப்புப் பகுதிக்கு வந்து எழுதியவரின் பெயரை மறுபடியும் பார்த்து மனதில் பதித்துக் கொள்வேன். இதெல்லாமே நாளாவட்டத்தில் எனக்கும் ஒரு பயிற்சியாய் போனது தான் தேடிக் கிடைத்த செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இயல்பாய் அமைந்தால் சிறப்புதான்.  மனதிலும் சமயங்களில் தங்கிவிடும்.

      நீக்கு
  2. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையின் தேவை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரித்து விடும் என்றொரு கணிப்பு எனக்குண்டு.

    என் நெருங்கிய உறவுமுறைகளில் பலர் இதை சாதித்திருப்பதையும் சொல்லியாக வேண்டும்.

    வயது மூத்தோர் தங்குமிடங்களின் அதிகரிப்பு, பிர்மாண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளின் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் மாதிரிகளாகத் தான் நான் பார்க்கிறேன்.

    இந்த மாதிரியான வாழ்க்கை முறைகளில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதிலும்
    பரஸ்பர நட்பு, அவசரகால உதவிகள், அவரவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் தனித்தனிக் குழுக்களாக
    செயல்படும் நேர்த்திகள், கூட்டு முயற்சிகள், குழந்தைகளின் கல்வி மேன்மைக்கான வடிகால்கள் என்று நிறைய சொல்லலாம்.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். கோடி என்றில்லாவிட்டாலும்
    மனித வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான நன்மைகள் இதில் பொதிந்திருப்பது காலத்தின் கட்டாயங்களுக்கு விடையாய் தான் கொள்ளவேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை இருக்கு தாசில் பண்ண என்பது போல என் மனதிலும் நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு... கனியுமா தெரியாது.

      நீக்கு
    2. ஆசை மாளிகை
      கட்டலுக்கு
      அது மனத்தில் துளிர்ப்பது தான் பேஸ்மெண்ட் என்பார்கள்.

      பூ பிஞ்சாகி, காய்த்து, கனிந்து தங்கள் கைவசப்பட
      வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

      நீக்கு
    3. ரொம்ப சிரமம் ஸார்...   லாட்டரியில் விழவேண்டும்!  ஏற்கெனவே எங்கள் வீட்டின் மூத்தகுடி ஒருவர் ஆசைப்பட்டு விட்டு விட்ட விஷயம் அது.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நல்குரவும் செல்வமும் நரகும் சுவர்கமுமாய் என்ற ப்ரபந்தப் பாசுரம் உண்டு. ஏழைமையும் செல்வமும், நரகமும் சுவர்கமும்... என இரு வேறுபட்ட நிலைமையை உடையவன் திருவிண்ணகரான்... ஒப்பிலியப்பன் என்பது பாசுரத்தின் பொருள். நல்குரவு என்பதற்கு, ஏழ்மை, தாரித்ரியம், வறுமை என்றவாறு பொருள் கொள்ளலாம். நல்கு இரவு என வராது. அது நல்கிரவு என்றாகிவிடும். நல்குரவு என்பதற்கான அர்த்தம் இடத்தைப் பொறுத்து மாறும். இவன் ஏழைப்பா என்பதற்கும், வறுமையினால் கஷ்டப்படுகிறான் என்பதற்கும், தரித்திரம் பிடிச்சவன் என்பதற்கும், பிச்சக்காரப்பய என்பதற்கும் பொருளில் வேறுபாடு உண்டல்லவா?

    இந்தக் குறிப்பிட்ட குறளுக்கான அர்த்தம் கொஞ்சம் குழப்பக்கூடியது. அறமில்லாத தரித்திரத்தனம்... என்னவாயிருக்கும்? பணம் இருக்கும்போதே, ரொம்ப கஷ்டப்படும் ஒருவனுக்கு அஞ்சு பைசா கொடுக்காமல் நழுவும் செயலா? இல்லை, கண் தெரியாத ஏழை முன் இருக்கும் பாத்திரத்தில் ஐந்து பைசா திருடுவதா? இல்லை படிப்பறிவில்ஙாத வியாபாரியிடம் ஐந்து பைசாபெறுமானமுடைய வடையை கணக்கில் காட்டாமல் ஏமாற்றிச் சாப்பிடுவதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் இதற்கான அவர் கருத்தைச் சொல்ல வேண்டும் என அழைக்கிறேன்.

      நீக்கு
    2. உங்கள் கேள்வியைப் படிக்கச் சொல்லி ஜவஹருக்கு சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. பிகாஸோ சமாச்சாரம் கற்பனை போலிருக்கு.
    அதுவும் பிகாஸோ தி கிரேட், கோட்டோவியங்களைப் பற்றிய ஒரு கிண்டலடிப்பு இது!

    தனித்தன்மையாய் ஜொலிக்கும் இப்படியானவர்களை
    வெகு சாதாரணமாக்கி
    உள்ளுக்குள் உள்ளே
    மகிழ வரலாற்றில்
    என்றைக்குமே ஒரு இடம் இருக்கும் போலிருக்கு.

    சகோதரி தி.கீதாவைக் கேட்டால் தான் தெரியும், இப்படியான சொந்த மகிழ்ச்சிகளுக்கு உளவியலில் என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித் தன்மையுடன் விளங்கும் பலரையும் இப்படிக் கிண்டலடிப்பது ஒரு வகை உண்டு தான் ஜீவி அண்ணா.

      எனக்குத் தோன்றியது இதுதான். பிக்காஸோவின் மனதுள் அவர் திட்டப்படி அந்த ஓவியத்தின் மூக்கு வரைந்தாயிற்று என்று..கை ஓவியத்தைப் போடுவதற்குள் மனம் வேகமெடுக்கிறது. இப்போது அதைத் திருத்த நினைக்கும் போது அதைக் காணவில்லையே என்று டக்கென்று தான் வரையவில்லை என்பது தோன்றாமல்....அந்த பதிலில் என் மனம் சென்றது அவர் தன் கலைக்குள் மூழ்கியிருப்பதாப் புன்னகையை வரவழைத்தது.

      நீங்கள் கேட்டதற்குப் பெயர்கள் உண்டுதான். அதை வேறொரு சமயத்தில் சொல்கிறேனே.

      கீதா

      நீக்கு
    2. // தனித்தன்மையாய் ஜொலிக்கும் இப்படியானவர்களை
      வெகு சாதாரணமாக்கி உள்ளுக்குள் உள்ளே மகிழ வரலாற்றில்
      என்றைக்குமே ஒரு இடம் இருக்கும் போலிருக்கு. //

      உண்மை. அது ஒரு மன வக்கிரம். லேசான பொறாமையுடன் கூடிய, சும்மா கிண்டல் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் சிறு மன வக்ரம்.

      நீக்கு
    3. பிக்காஸோவின் ஓவியங்கள் எத்தனை பேருக்கு புரியும்?  எனக்கு சத்தியமாய் புரியாது!

      நீக்கு
  7. எலெக்‌ஷன், செலக்‌ஷன்
    ஜோக்கில் கலெக்‌ஷனை
    விட்டு விட்டார்களே என்று
    தோன்றியது. இல்லை, கலெக்‌ஷன் பிற்காலத்தில்
    வழக்கமானதோ?..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. வள்ளலார் திருவுருவம் கண்டதில் மகிழ்ச்சி.. ஆனாலும் அவரது திருமேனி அந்தக் கால புகைப்படத்தில் பதிவாகவில்லை என்பதாக படித்து இருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  10. கூட்டுக் குடும்ப வாழ்க்கை நல்ல விஷயம்தான், ஸ்ரீராம். அதில் நன்மைகளும் உண்டு, அதற்கான மறுபக்கமும் உண்டு. அந்தக் கூட்டுக் குடும்பத்தில் நமக்குக் கிடைக்கும் உறவுகளைப் பொருத்து இருக்கிறது மகிழ்ச்சியும் வருத்தங்களும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபக்கம் இல்லாத எதுவுமே கிடையாது. எதற்கும் ஒரு விலை உண்டு. ஆனால் அந்த விலை சரியா என்பதைத்தான் பார்க்கணும்.இளைச்சவல்கள்ட வேலை அதிகம் வரும், சிலர் சுகமா இருப்பாங்க, சிலரை எப்போதும் கரிச்சுக் கொட்டுவாங்க போன்ற குறைகள் இல்லாத இடம் ஏது, அலுவலகங்கள் உட்பட

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை எல்லாத்துக்கும் ப்ளஸ் உண்டு மைனஸ் உண்டு. அதன் விலை அதுவும் சரிதான்.

      அலுவலகத்தில் கூட ஓரளவு நம்மை நாம் பட்டும் படாமலும் வைத்துக் கொண்டுவிடலாம் ஆனால் உறவுகள் என்று வரும் போது அப்படிச் செய்ய முடியாது. அதனால் வரும் பின் விளைவுகளும் உண்டு.

      கீதா

      நீக்கு
    3. ​உண்மையில் விஷயம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றி அல்ல கீதா... புரிந்து கொண்டிருப்பீர்கள்!

      நீக்கு
    4. //மறுபக்கம் இல்லாத எதுவுமே கிடையாது. எதற்கும் ஒரு விலை உண்டு.//

      நெல்லை ஏதோ அனுபவம் வச்சிருப்பார் போல...  சொன்னா- எழுதினா - நாங்களும் கேட்போம்...  படிப்போம்!

      நீக்கு
  11. காமராஜர் வேட்டி கட்டிக் கொண்டு வெளிநாட்டிற்குச் சென்றபோது இங்கிருந்த கூட்டம் ஒன்று புழுதி வாரித் தூற்றியதாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடத்திலும் சிறுநரிக்கூட்டம் இருக்கும்தானே!

      நீக்கு
  12. சென்னை போக்குவரத்து விபத்துகளைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்க வேண்டிய ஒன்று ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதை பார்க்கறப்ப, மாற்றுக் கருத்தும் வருகிறது. காவலர்கள் எடுக்கும் முறை சரியாக இல்லை. ஓடும் வண்டிக்கு எதிரே ஓடி த் தடுப்பது இது காவலர்களுக்கு விபத்தாகுமே!

    அடுத்து வண்டிகளின் நடுவில் லத்தியை வீசுவது அதுவும் அந்த வண்டி ஓட்டுபவரை விழ வைக்காதா? அப்படிச் செய்யும் போது எந்த உயிரைக் காக்கணும்னு நினைக்கறாங்களோ அந்த உயிர் பலியாகிறதே...நீங்க சொல்லியிருக்கும் இரு சம்பவங்கள் அதற்கு வலு சேர்க்கின்றன.

    அரசாங்கம் கொஞ்சம் யோசித்துச் செயல்பட வேண்டும். தேர்தல் ஓட்டு வேண்டும் என்பதற்காகச் செய்யக் கூடாது அது எந்த அரசாக இருந்தாலும் சரி எந்தத் திட்டமாக இருந்தாலும், மக்களுக்காக என்றிருக்க வேண்டும்.

    இத்தனை வருடங்கள் எடுக்கப்படாத விஷயங்கள், எடுத்தும் சில மாதங்களில் நீர்த்துப் போன சட்டங்கள்....ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், முதல் பகுதி போக்குவரத்து பற்றியது நையாண்டி??!!!

      இடையில் ரெண்டு பெட்டிகள் - பார்த்ததும் நையாண்டி என்று புரிகிறது!

      கீதா

      நீக்கு
    2. புரிந்து கொண்டீர்கள்.  சட்டங்கள் யாவும் கடுமையாக கடைப்பிடிக்க அல்ல.  ஹெல்மெட் போட்டுக் கொண்டால் உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளலாம் என்பது ஒரு சட்டம் என்பதை விட நல்ல யோசனை.  உன் உயிருக்கு ஆபத்து என்று அரசு அராஜகம் செய்யக்கூடாது.  உன் உயிரால் மற்றவர்களுக்கும் ஆபத்து என்றால் கொஞ்சம் நியாயம்.  ஆனால் சின்ஹா இரண்டாவது இதில் மட்டும்தானா?  சாலைகள் எவ்வளவு மோசம் என்று தெரியுமா?  கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் இந்த போக்குவரத்துக்கு காவலர்கள் அவரவர் இடங்களில் நின்று அக்கடமை புரிந்தால் நெரிசலும் வராது.  விபத்தும் குறையும்.  கவனியுங்கள் குறையும்.  நிறுத்த முடியாது.  இவர்கள் இருக்கும் பணங்களை இலவசங்களில் வாரி இறைத்து விட்டு...

      நீக்கு
  13. அந்த அதிகாரி எட்டி உதைத்து பலியானவருக்கான பொறுப்பை அவர் ஏற்பாரா? அவர் சொல்லியும் கேட்காமல் துடைத்தார் என்றால், ஒன்று பைசாவுக்காக இருக்கும்...சரி கொடுத்துவிட்டு போயிருக்கலாம் அல்லது கார் நகரத் தொடங்கினால் அந்த ஆள் நகர்ந்திருப்பாஅர்....இல்லைனா போலீஸை கூப்பிட்டிருக்கலாம் அந்த அதிகாரியிடம் போலீஸ் நம்பர் இல்லாமல் இருந்திருக்குமா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி ஏற்பார்?  இவர்கள் முகத்தில் தெரியும் ஒரு அதிகார ஆணவம்.. எனது அலுவலக பயணத்தின் இடையே நான் காணும் காட்சிகளில் திருமுகம் இன்னமும் நினைவில்.  உயர, அகல மார்பு மீசை பெருத்த ஒரு பைக்கர், அருகில் நிற்கும் கழுத்தில்லாத ஒரு காவலர்...

      நீக்கு
  14. சுஜாதாவின் கிரிக்கெட் அனுபவங்களை வாசித்ததும், சின்ன வயது நினைவுகள் பல தலை தூக்கின. எங்கள் வீட்டிலிருந்து இருவர் குறிப்பாக என் தம்பி கிரிக்கெட் விளையாடப் போவான் ஊரில் உள்ள தெருப்பையன்களுடன். கிட்டத்தட்ட இதே போன்றுதான் தெருவில் நடக்கும். டவுனுக்குச் சென்று கூட போட்டி எல்லாம் வைத்து ஆடியிருக்காங்க. திண்ணையில் உள்ள மாமிகளும் பாட்டிகளும் வையாத நாட்களே இல்லை எனலாம். பஞ்சாயத்தும் நடக்கும். இப்போது அப்படியான டீம் எல்லாம் இருக்கா என்றுதெரியலை. ஆணுங்க மட்டும் தான் கிரிக்கெட் விளையாடுவதா ஏன் நாங்க பொண்ணுங்க விளையாடக் கூடாதான்னு நான் - (எங்க வீட்டுல இப்படியான உரிமைக் குரல் எழுப்பிய ஒரே பெண் நான் தான் - மத்தவங்க எல்லாம் விளையாட்டுக்கே வரமாட்டாங்க. - ) நான் மட்டையை தூக்க, வீட்டுப் பெரியவங்க துடைப்பத்தை தூக்க...அப்புறம் என்ன? அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா எழுத்தின்  வெற்றியே எல்லோருக்கும் இருக்கும் சில மறக்க முடியாத அனுபவங்களை அவர் பாணியில் எழுத்தாகத் தருவதுதான் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  15. கஜானா காலி. பெண்கள் பெண்கள் என்று பஸ் ஓசி, மாதம் 1000 ரூபாய் என்றெல்லாம் செலவு. கணவன்களைப் பிடித்து இப்படிஎல்லாம் வசூலிக்க வேண்டிய நிலை. என்னவோ சட்டம் கடமையை செய்யட்டும். வெள்ளை டிராபிக் போலீசார் வாழ்க.

    ஜவர்லால் கதிரைவேற்பிள்ளையின் கட்டுரையை அப்படியே அவரது மொழியில் தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. பொதுவாக யாழ் தமிழ் போன்று உள்ளது., கடைசியில் மூன்று முறை படித்தும் நல்குரவு என்பதன் அர்த்தம் மனதில் நிற்கவில்லை.

    கவிதை கவிதையாக தோன்றவில்லை. ஆனால் கருத்து சிறப்பானது. மூளை என்ற கணினி சேமிக்கும். knowledge என்று சேர்த்துவைத்ததை intelligence என்று உருவாக்கி வேண்டியபோது அருளும். இதைத்தான் தற்போதைய AI செயல்படுத்துகிறது.

    நான் கண்ட வள்ளலார் உருவ சிலைக்கும், வள்ளலார் படங்களுக்கும் மாறாக உள்ளது வள்ளலாரின் புகைப்படம். அருள் பொங்கும் தேஜஸ் புகைப்படத்தில் இல்லை. வடலூர் சென்றிருக்கிறேன். வள்ளலார் உயர்நிலைப் பள்ளியில் வேலை செய்திருக்கிறேன்.

    நேரு பத்தவைக்கிற போட்டோவை போட்டது தேர்தல் நெருங்குவதாலா? ஒருத்தருக்கு சரி என்பது மற்றவருக்கு தவறு என்று தோன்றுவது இயற்கை. நானும் 41 வருடங்கள் சிகரெட் பிடித்தேன். எனக்கு அது அப்போது தவறாகப் படவில்லை. சிகரெட் பிடிப்பது தவறு என்போர் மாமிசம் அதுவும் பிணத்தை உண்ணும் நாகர்கள் இந்துக்கள் அல்லர் என்று கூறமுடியுமா?

    பிள்ளையாரே தேங்காயை வீணாக்காதே எண்று அட்வைஸ் செய்வது நல்ல ஜோக்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிகரெட் பிடிப்பது தவறு என்போர் // - சார்... உங்களுக்கு சிகரெட்டைப் பற்றித் தெரியலை. புகை பிடிக்கறவங்க, புகையை அப்படியே முழுங்கிவிட்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை. வெளில இழுத்து விட்டு, மறைமுகமா மற்றவர்கள் உயிருக்கு வேட்டு வைப்பதால்தான் சிகரெட் பிடிப்பதைத் தவறு என்று சொல்லவில்லை, கொலைகாரர்கள் என்றுதான் சொல்லணும். குடிப்பது தனிப்பட்ட விஷயம். அதனால் பிறருக்குப் பிரச்சனை இல்லை (ஆனா குடிகாரங்க அடுத்தவங்களையும் குடிகாரனாக்குவாங்க. அதுதான் தவறு). எனக்குப் பிடிக்காதது சிகரெட் பிடிக்கறவங்க, அடுத்த அப்பாவிங்க உயிருக்கு உலை வைப்பது.

      நீக்கு
    2. அன்றைய காலகட்டத்தில்; புகை சர்வ சாதாரணம். பஸ் ரயில், விறகு, மற்றும் கரி அடுப்புகள், போனறவற்றால் உண்டாகும் புகை மற்றவர்களை பாதிக்காதா என்று ஆலோசிக்கவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை. அவ்வளவு தான். சிகரட் புகை ஒன்றும் மேற்கூறிய புகையை விட அதிகம் இல்லை. நான் சிகரெட்டை விட்டு 12 வருடங்கள் ஆகிறது.

      Jayakumar

      நீக்கு
    3. சிகரட் பிடிக்காத பெங்களூரில் சில்க் ரோடு, மற்றும் மெஜெஸ்டிக்கில் அரை மணி நேரம் நின்று பாருங்கள். புகை சிகரெட்டினால் மட்டும் உண்டாவதில்லை என்பது புரியும்.

      நீக்கு
    4. சட்டம் கடமையை ஆணவத்துடன் அதிகப்ரசங்கித்தனமாய் செய்வதுதான் வேதனை JKC ஸார்...

      ஜவஹரிடம் சொல்லி இருக்கிறேன்!  வருவாரா, பதில் தருவாரா தெரியாது!

      கவிதையின் கருத்தை பாராட்டியதற்கு நன்றி.  தேர்தல் நெருங்குவதெல்லாம் மனதில் இல்லை JKC ஸார்...   கண்ணில் படுவதை தருகிறேன்.  சமயங்களில் அப்படி ஆகிவிடுகிறது.  ஆனால் நீங்கள் சொல்வது போல இதில் பெரிய தவறேதும் .  மேலும் இவருடைய இந்தப் படம் தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதுமில்லை.

      நீக்கு
    5. நெல்லையில் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.  சிகரெட் போயிடிபபவர்களைவிட அருகில் நின்று சுவாசிப்போருக்கு அதிக பாதிப்பு என்று நானும் எங்கோ படித்திருக்கிறேன்,  சிகரெட் ஆதரவாளர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது! 

      நீக்கு
  16. கேஜிஜ - விளக்கம் புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சே...   உங்களுக்கெல்லாம் புரியும், ரசிப்பீர்கள் என்று நினைத்தேனே...

      நீக்கு
  17. சிறு கவிதை -மறந்து போனவை - ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம் நல்லாருக்கு. நிறைய இப்படி அப்பப்ப வந்து நிக்குமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ப்ழைய புகைப்படங்களில் முதலும் மூன்றாவது சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருங்கள்.. எதெது என்று சென்று பார்த்துவிட்டு வருகிறேன்!

      நீக்கு
  19. ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் சுவாரசியம்.

    இதே போலதான் கிட்டத்தட்ட எங்க கிராமத்திலும் அப்போது.

    என் இளையா மாமா வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வந்து பாடாவதியான பிரின்ட் வீடியோக்கள் போட்டு சினிமா பார்ப்பார். சில சமயம் நல்ல பிரின்ட் வீடியோக்கள் கிடைக்கும். அதன் பின் வீடியோ டெக் வாங்கினார். ஆனால் நாங்கள் அதில் சினிமா பார்த்த நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் இந்த அனுபவங்கள் உண்டு.  அதில் எங்கள் கா வளர்ந்ததும் ஒரு கதை!

      நீக்கு
  20. ரயில் விபத்து எதனால் ஆனது - கொடுமைடா சாமி!

    ரத்தன் டாடா அவர்களின் சேவை இங்கும் இருக்கிறதாகத் தெரிகிறது. மும்பை போன்று இல்லை என்றாலும் சில சேவைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. காவலர்களின் சேவை மாக்கல்"லுக்கு தேவை.

    துணுக்குகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  22. நாட்கத்துள் நாடகம் சுவாரசியமான விஷயங்கள். இப்படி இடையில் நாடகத்தில் ஏதாவது நடக்கும் போது சமயோஜிதமாகச் சமாளிப்பதும் அந்த நடிகர்களின் டைம்சென்சும் அசாத்தியம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்க முடிந்ததா?  கமலா அக்காவால் படித்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  23. பிகாஸோ - டக்கென்று புன்னகை வந்தது.

    பொக்கிஷ ஜோக்ஸ் ஓகே...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பிள்ளையார் ஜோக்கை ரசித்தேன் சூப்பர் பிள்ளையாரே சொல்வது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. காவல் துறையின் பாசம் பொழிகிறது :)

    நியூஸ்ரைம் நன்று. கிரிக்கெட் பார்த்த ரயில் ரைவர்கள் :(

    பழைய புகைப்படங்கள் பல கதைகள் பேசுகின்றன. பகிர்ந்தது சிறப்பு.

    பொக்கிசம் ரசனை.பிள்ளையார்,பிரசவ ஆஸ்பத்திரி ....ஹா....ஹா...

    சோமாலியா அன்றைய வாடகை கசட் காலத்தை எமக்கும் நினைவுக்கு கொண்டு வந்தது.

    பதிலளிநீக்கு
  26. போக்குவரத்து காவலர்களை வஞ்சபுகழ்ச்சி செய்து விட்டீர்கள்.
    அவர்களின் சேவை கவலை பட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா...   இனி அவர்கள் மால், பெரிய அலுவலகங்கள் திருமண மண்டபங்களில் நின்று மாடிப்பபடிகளில் வேகமாக இறங்குபவர்கள் உயிருக்கு எல்லாம் ஆபத்து ன்று அபராதம் போடப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

      நீக்கு
  27. போக்குவர்த்து காவலர்களின் சேவை மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்றுதான் என்றாலும் ஒரு சிலர் செய்கின்ற தவறு பலரது உயிரையும் எடுக்கின்ற நிலைக்குப் போவதுதான் வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது. ஒரு சிலர் விபத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதும் வேதனை. நாமும் போக்குவரத்து விதிகளை மதித்து அதற்கு மரியாதை கொடுக்கும் சமூகமாக மாற வேண்டும். போலீஸைக் காணும் போது ஹெல்மெட்டை எடுத்து மாட்டுவது அல்லது தப்பித்து ஓடுவது என்பதை எல்லாம் செய்யாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் இறைவன் கொடுத்த நம் உயிரை பாதுகாப்பது நம் கையில் அது பொறுப்பும் கூட.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பக்கமும் யோசித்து சரியாக சொன்னீர்கள் துளஸிஜி.

      நீக்கு
  28. புகைப்படங்கள் வள்ளலார் மற்றும் காமாரஜ்ர் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் எலிசபெத் மகாராணி மிகவும் அருமையான புகைப்படங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. வறுமை தரித்திரம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?.. வேறுபாடு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப யோசித்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.  KGG கவனித்தால் இந்தக் கேள்வியை புதன் கேள்விக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  என் பதில் :  வறுமைக்கும் கீழே உள்ளது தரித்திரம்.  பொறுப்பின்மையால், சோம்பேறித்தனத்தால் விளைவது!

      நீக்கு
  30. திரு என்றால் லக்ஷ்மி அல்ல..

    இலக்குமி என்றொரு கூட்டம்..

    பதிலளிநீக்கு
  31. நாடகம் பற்றிய பெட்டித் தகவல்கள் ரசனையானவை.

    கிரிக்கெட் பற்றிய சுஜாதா அவர்களின் அவரது நினைவுகளை ரசனையாக எழுதியிருக்கிறார். எனக்கு கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அவ்வளவு இல்லை. டிவியில் பார்ப்பதும் இல்லை.

    ஏகாந்தன் சாரின் அனுபவங்கள் சுவாரசியமாகத் தொடர்கின்றன.

    பொக்கிஷ ஜோக்குகளும் ரசித்தேன், எலெக்ஷன் செலக்ஷன் எல்லாம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் பொறுமையாக படித்திருக்கிர்கள் துளசி ஜி.  நன்றி.

      நீக்கு
  32. சுஜாதா,கே ஜி ஜவர்லால் - பகிர்வுகள் நன்றாக இருக்கிறது.

    மறந்து போனதை நினைவூட்டும் கவிதை அருமை.

    ''//சந்தோஷமாக இருக்கும். சின்ன வயசின் எலெக்ட்ரானிக் பெருமைகள்!''//

    ஏகாந்தன் அவர்கள் சொன்னது போல நாங்களும் ஒவ்வொன்றாக வீட்டுக்கு வாங்கும் போது பெருமைகொள்வோம்.
    காசட் , டிவி எல்லாம் வாடகைக்கு வாங்கி படங்கள் பார்த்த காலம் மாறி நாமே வாங்கும் போது மனது பெருமை கொள்ளும் தான்.

    நியூஸ் ரூம் படித்தேன்

    பதிலளிநீக்கு
  33. பொக்கிஷ பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    போக்குவரத்து நடவடிக்கைகள் பயமுறுத்துகிறது. சிலரின் போக்கு இப்படியுமா.. ?

    /ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாத ஆத்திரம் அப்போது அவர் முகத்தில் தெரியும்./

    ஹா ஹா ஹா. தங்கள் பாணியில் போக்குவரத்தோடு சுவாரஸ்யமாக சொல்லிச் சென்றதை ரசித்தேன்.

    கவிதை அருமை. மறந்தவற்றை நினைபடுத்துவதில்தான் எத்தனை சந்தோஷம்...! இங்கு வந்த பின் மறந்திருந்த தண்ணீர் கஸ்டத்தை எங்களுக்கு இப்போது நினைவுபடுத்தி அது சந்தோஷம் கொள்வது போலே... :))

    செய்தியறை பகுதியைப்படித்து செய்திகளை அறிந்து கொண்டேன்.

    செல்போன் விபரீதங்கள் மனதை வதைக்கின்றன.
    சி. பி. எஸ். சியின் புதுமைகள் வியக்க வைக்கிறது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.//

      உங்கள் வழக்கமான வியாழன் வரி கமலா அக்கா..  நன்றி. 

      சிலர் அல்ல, அவர்களுக்கு அரசாங்கத்தியமிருந்து வந்திருக்கும் கட்டளைப்படி அவர்களின் முழுநேர வேலையே இதுதான்.  நல்ல வசூல் - இருவருக்கும்!

      ​அனைத்தையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    சுஜாதா அவர்களின் கிரிக்கெட் அனுபவங்கள் அருமை. அவரின் சுவாரஸ்யமான எழுத்தில் ஒரு கிரிகெட் விளையாட்டையே நேரில் பார்த்தது போல இருக்கிறது.

    பழைய புகைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

    சகோதரர் ஏகாந்தன் அவர்களின் பக்கமும் அருமை. அங்கு டிவியில் பார்த்த நினைவில் நின்ற படங்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

    நாடக அனுபவங்கள் தர்ம சங்கடத்தில் வந்து நின்றாலும், அந்த இக்கட்டான சமயங்களில் கலைஞர்களின் சமாளிப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது.

    அட்மிஷன் ஹாஸ்யங்கள். அனைத்தும் அருமை. பிள்ளையாரே தேங்காய்களை வீணடிக்க வேண்டாமென மறுப்பது நல்ல நகைச்சுவை. . கதம்பத்தில் இன்று அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  36. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட இப்படி அயராது உழைக்கும் காவலர்களை பெங்களூர் சாலைகளிலும் காணலாம். சொன்ன விதம் வழமை போல் சிறப்பு. சிறுகவிதை அருமை. நகைச்சுவைத் துணுக்குகளில் பிள்ளையாரின் அதட்டல் ஹைலைட் :)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  பெங்களுருவிலும் இதே கதைதானா?/   கடமை வீரர்கள்!  நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!