திங்கள், 11 மார்ச், 2024

"திங்க"க்கிழமை  :  பாம்பே சட்னி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

பாம்பே சட்னி


தேவையான பொருள்கள்:


கடலை மாவு.       - 1 கப்

வெங்காயம்.        - 2

தக்காளி.               - 2

பச்சை மிளகாய்  - 4

வேக வைத்த உருளைக் கிழங்கு - 2

 உப்பு.                     - 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்.       - 1/4 டீ ஸ்பூன்

தாளிக்க.                - எண்ணெய், கடுகு, சீரகம்.

செய்முறை:

கடலை மாவை மூன்று அல்லது நான்கு கப் நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். 

வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக, தக்காளி, ப.மிளகாயை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெந்த உருளைக் கிழங்குகளை தோல் உரித்து மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கடுகு, சீரகம் (இவற்றோடு தேவையானால் சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்). தாளித்து முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை வதக்கிக் கொள்ளவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். 

பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு கரைசலை சேர்த்து, உப்பு மற்றும்  உருளைக் கிழங்குத் துண்டுகளை சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். கடலை மாவு வெந்த பிறகு கெட்டியாகும். தேவையென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி தழையை பொடிப்பொடியாக நறுக்கி  சேர்த்து இறக்கி விடவும்.

சுவையான செய்வதற்கு எளிய இந்த பாம்பே சட்னி, சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு பொருத்தமான சைட் டிஷ். 



24 கருத்துகள்:

  1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.  

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இதையே கொஞ்சம் மாற்றிச் செய்தால் -

    பாரம்பரிய
    தஞ்சாவூர் கடப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடப்பாவில் பயத்தம் பருப்பு, இதில் கடலைமாவு. நன்றி.

      நீக்கு
  4. இந்த பாம்பே சட்னியை பல விதங்களில் செய்யலாம். ஆனாலும் உருளைக்கிழங்கை சேர்த்து செய்வதால் இது புது விதமாக இருப்பது சிறப்பு!! அருமையான குறிப்பு!!

    பதிலளிநீக்கு
  5. அரிசிப் பஞ்சம் வந்த 60-70 களில் சப்பாத்தியும் ஒரு இரவு உணவாக மாறிய காலகட்டத்தில் இது தான் நித்ய சைடு டிஷ்.
    இது இல்லை என்றால் வெறும் பெரிய வெங்காயம் நறுக்கியது தான் சைடு டிஷ்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையான பாம்பே சட்னி நன்றாக உள்ளது. படங்களும் அருமை. வழக்கமாகக் செய்யும் பாம்பே சட்னியில் உ. கியை சேர்த்திருப்பது கண்டிப்பாக சுவை கூட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பாம்பே சட்னி சூப்பரா வந்திருக்கு பானுக்கா.

    இது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகச் செய்யறாங்க. உகி போட்டும் போடாமலும் என்று

    என் பாட்டி முன்னர் ஆ ஊ னா எதுவும் வீட்டில் இல்லைனா டக்குனு இதைச் செய்வாங்க ஆனா வெங்காயம் போடாமல். சும்மா வெறும் பாம்பே சட்னிதான் செய்வார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பாட்டி வெறும் சட்னி அதாவது தாளிப்பு எல்லாம் இதேதான் பெருங்காயம் போட்டு கடலைமாவு கரைத்துவிட்டு வெந்ததும் எடுத்து அம்மியில் அலல்து தட்டில் கொட்டி துண்டுகள் போட்டும் கூட சும்மா மாலை நேரத்தில்கொடுப்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட ஆனா மோர் கூழிற்கு மோர் கலந்து செய்வோம். இதற்கு மோர் கலப்பதில்லை. கெட்டியாகக் கிளறி கொட்டி துண்டங்கள். கடலைமாவில் மோர் கலந்தும் மோர் கூழ் போலவும் செய்யலாம். அது ஒரு தனி சுவை, பானுக்கா

      கீதா

      நீக்கு
  9. பாம்பே சட்னி நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. இதன் பெயர் பாம்பே சட்னியா. பார்க்கவும் செய்முறையும் நன்றாக இருக்கிறது. சாப்பிடும் ஆவலும் எழுகிறது. பகிர்விற்கு மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. பாம்பே சட்னி செய்முறையும் , படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. பாம்பே சட்னி செய்முறை நன்று. இப்படிச் சுவைத்ததில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!