வெள்ளி, 15 மார்ச், 2024

வெள்ளி வீடியோ : மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக... காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக

இந்த வாரமும் பி சுசீலா பாடல்.  அதே செட்டில் இன்னொரு பாடல்.  இதுவும் அனைவரும் கேட்டு ரசித்திருப்போம்.

கல்பனாதாசன் எழுதி கே வீரமணி இசையமைத்திருக்கிறார்.  (அப்பாடி...  இந்த முறை எழுதியவர் பெயரும் இசை அமைப்பாளர் பெயரும் கிடைத்து விட்டது)  எனக்கு என்னமோ பாடலாசிரியர் கைக்கு வந்ததை எல்லாம் எழுதி விட்டார் என்று தோன்றியது!

ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்சை ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா

ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
சர்வ சக்தி ஜெய துர்க்காசர்வ சக்தி ஜெய துர்க்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கண்டிகை ஸ்லோகம் 

ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா

மங்கள வாரம் சொல்லிடவேண்டும் மங்கள கண்டிகை ஸ்லோகம் 
இதை ஒன்பதுவாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் 
இதை ஒன்பதுவாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் 
உமையவள் திருவருள் சேரும் (ரட்ச ரட்ச)

ஜெயஜெய சங்கரி கௌரி மனோகரி அபாயமளித்தருள் 
அம்பிகை பைரவி 
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி 
அபயம் என்றவளை சரண்புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி 
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி 
அபயம் என்றவளை சரண்புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி 
ஜெயஜெய சங்கரி கௌரி மனோகரி அபாயமளித்தருள் 
அம்பிகை பைரவி 

ஜெயஜெய சங்கரி கௌரி மனோகரி அபாயமளித்தருள் 
அம்பிகை பைரவி 

சிவசிவ சங்கரி சக்தி மகேஸ்வரி 
திருவருள் தருவாய் தேவி 
திருவருள் தருவாய் தேவி
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்சை ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்சை ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா

கருணையின் கங்கை கண்ணனின் தங்கை 
கடைக்கண் திறந்தால் போதும் 
வருகிற யோகம் வளர்பிறையாகும் அருள்மழை பொழிவாள் நாளும் 
கருணையின் கங்கை கண்ணனின் தங்கை 
கடைக்கண் திறந்தால் போதும் 
வருகிற யோகம் வளர்பிறையாகும் அருள்மழை பொழிவாள் நாளும் 
நீலநிறத்தொடு ஞாலம் அளந்தவள் காளியெனத் திரிசூலம் எடுத்தவள் 

நீலநிறத்தொடு ஞாலம் அளந்தவள் காளியெனத் திரிசூலம் எடுத்தவள்

பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் 
நாமம் சொன்னால் நன்மை தருபவள் 
நாமம் சொன்னால் நன்மை தருபவள் 

ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்சை ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரட்ச ரட்ச ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா 
ரட்ச ரட்சை ஜெகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
சர்வ சக்தி ஜெய துர்க்காசர்வ சக்தி ஜெய துர்க்கா

====================================================================================================

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்கிற படம் 1977 ல் வெளிவந்தது.  படத்தின் டைட்டில் ஒரு வினோதம்.  நடிகர்கள் நடிகையர் பெயரில் சிவகுமார் பெயர் தவிர வேறு ஒரு பெயரையும் போடவில்லை.  மூலக்கதை மகரிஷி அவர் பெயர் போட்டு நன்றி சொல்லவில்லை.  பாடல்கள் எழுதியது யார் என்று சொல்லவில்லை.  அரைகுறை வேலை.  என்ன கோபமோ..  !யார் மேலோ!  அட, ஸ்ரீதேவி பெயர் கூட போடவில்லை!

இசை இளையராஜா.  பாடியிருப்பது எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் பி சுசீலா.

அழகான பாடல்.  முன்பு நான் இந்தப் பாடல் பற்றி ஒரு வியாழன் கட்டுரையில் சொல்லி இருந்தேன். 

எனக்கு பாடல்கள் மீது அதீத மோகம்.  எதிரில் இருப்பவர் பெயரை வைத்து என்னென்ன பாடல்கள் உண்டு என்று மனம் தானாய் ஆராய்ச்சியில் இறங்கும்.  பார்க்கும் பொருளின் பெயரில் என்னென்ன பாடல்கள் இருக்குமோ சட்டென ஒரு கணம் மனதில் நிழலாடி மறையும்!  இறைவன் எனக்கு வேறெங்கோ விதியை விதித்திருந்தான் போலும்.  அறியாமல் நான் இங்கு வந்து விட்டேனோ!!!!

பல்லவன் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மனதில் இந்தப் பாடல் நினைவுக்கு வரும்.  அதுவும் பல்லவி வரிகள்.  "ஒரு காதல் தேவதை..."

ஏனென்று தானாய் மனம் ஆராய்ச்சியில் இறங்கும்போது எதிரில் ஒரு பஸ் மாமல்லபும் என்று போர்ட் மாட்டி சென்றிருக்கும்.  என்ன கனெக்ஷன் என்கிறீர்களா?  இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் இரண்டாம் பகுதியில் தலைவர் அந்த வரியைப் பாடுவார்... 

மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக...  

சாண்டில்யன் கதை எஃபெக்டும், இளையராஜாவும் எஸ் பி  பியும் செய்யும் மாயம் இது.  காணொளி தொடங்கி முக்கால் நிமிடம் கழிந்துதான் பாடல் தொடங்கும்!  முடிந்தவரை காட்சியைப் பார்க்காமல் பாடலைக் கேட்டால் SPB யை  100 % ரசிக்கலாம்.

ஒரு சந்தேகம் :  மடல்கொண்ட வாழை கடன் தந்த தேகம்  என்று தானே தன்னுடலை ஒரு பெண் புகழ்ந்து கொள்வாளா?

விடுங்க...  பாடல் மிக இனிமையான பாடல்.  அதிலும் அந்த 'மாமல்லன் என்னைக் கொஞ்சும்' வரி என் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றது.

ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை 
இவள் ராஜவம்சமோ ரதிதேவி அம்சமோ 

ஒரு காதல் நாயகன் மலர்மாலை சூடினான் 
இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான் 
ஒரு காதல் நாயகன் மலர்மாலை சூடினான் 

தமிழ்கொண்ட வைகை போலே திருமேனி நடைபோட 
தார்வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர்போலும் இடையாட

பனிபோல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடைபோட 
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ  நாணங்கள் தடைபோட 

மேலாடையாய் நான் மாறவோ 
கூடாதென நான் கூறவோ 
வா மெல்ல வா (ஒரு காதல் தேவதை)

கடல்நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட 
மடல்கொண்ட வாழை கடன் தந்த தேகம் 
மன்னா நீ கொண்டாட 

மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக 
காலங்கள்தோறும் அழியாத காதல்  சிற்பங்கள் உருவாக 

ஊடல் என்னும் ஒரு நாடகம் 
கூடல் தன்னில் அரங்கேறிடும்  
வா நெருங்கி வா 

ஒரு காதல் நாயகன் 
மலர்மாலை சூடினான் 
இரு கண்ணில் ஆயிரம்  
தமிழ்க் கவிதை பாடினான் 


51 கருத்துகள்:

  1. நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
    பண்பறிந்து ஆற்றாக் கடை..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. நீலநிறத்தொடு ஞாலம் அளந்தவள்
    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்!..

    மிகவும் பிடித்த வரிகள்..

    ஓம் சக்தி ஓம்!..

    பதிலளிநீக்கு
  4. பொன்னெழில் பூத்தது புதுவானில்!..

    நம்ம மாமல்லன் ஆயிற்றே என்று
    தலைப்பைப் பார்த்து விட்டு வந்தால்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எவ்வளவு இனிமையான பாடலோ அதேபோல இந்துவும் இனிமையான பாடல்தான்.

      நீக்கு
  5. /// ஒரு சந்தேகம் : மடல்கொண்ட வாழை கடன் தந்த தேகம் என்று தானே தன்னுடலை ஒரு பெண் புகழ்ந்து கொள்வாளா?.. ///

    இதைவிடக் கேவலங்கள் எல்லாம் இருக்கின்றன தமிழ்த் திரையில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேவலங்கள் என்றில்லை. அறியாமை, அல்லது லாஜிக் பார்க்காமல் ஏதோ இட்டு நிரப்பிய கவிஞரின் வரிகள்.

      நீக்கு
  6. சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில்

    காதல் தேவதையாவது
    கண்கள் பூமழையாவது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுக்கோங்கண்ணா...  எனக்கு சுப்ரபாதம் இதான்...   இப்போ கூட 'ஒரு நாளில் மலர்ந்தேனே' ன்னு கேட்டுக்கிட்டுதான் எழுதிகிட்டிருக்கேன்!

      நீக்கு
  7. சுப்ரபாதம் தமிழ் வடிவம்..

    (முப்பதாண்டுகளுக்கு முந்தைய நற்றமிழ்..)

    இலை - தொ.கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெலியலேது ராமா பக்தி மார்க்கமு வும் கேட்பேன்.  இவையும் இன்னும் நிறைய கேட்பேன்.சங்கீதா எந்த வடிவிலும் இனிமைதான்! :))

      நீக்கு
  8. /// ஒரு சந்தேகம் : மடல்கொண்ட வாழை கடன் தந்த தேகம் என்று தானே தன்னுடலை ஒரு பெண் புகழ்ந்து கொள்வாளா?.. ///


    தகர டப்பா பாடல்களைக் கவனித்தால் புரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வைத்திருந்த கேசெட் கலெக்ஷனில் இதற்கு அடுத்த பாட்டு "வாழ்வில் சௌபாக்கியம் வந்தது"

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   கிணற்றுத்தவளை பக்கத்திலும் இந்தப் பாட்டு பகிரப்பட்டுள்ளது என்பதைத்தவிர சொல்வதற்கு வேறு சேதி உண்டா?   அந்தப் பக்கம் சென்றதுமே என் ஆன்டிவைரஸ் அலறுகிறது....வில்லனிடமிருந்து தப்பிக்கும் கற்பழிப்பு நாயகி போல வெளியே ஓடிவருகிறது!!

      நீக்கு
    2. உண்டு பாடல் இயற்றியவர் வாலி என்பது.
      Jayakumar

      நீக்கு
    3. நான் படத்தையே ஓட்டிப் பார்த்தேன்.  அதில் எந்தப் பெயரும் வரவில்லை.  எதை வைத்து வாலி என்று முடிவு செய்தார் கிணற்றுத்தவளை என்று தெரியவில்லை!

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். பி. சுசீலா அவர்களின் அம்மன் பாடல்கள் தொகுப்பில் இதை கேட்காமல் போவேனா? இதுவும் தினசரி வெள்ளிகளில் மனனம் ஆன பாடல்களில் ஒன்று. இன்று இப்பாடலை எழுதி இசையமைத்தவர் விபரத்தையும் அறிந்து கொண்டேன்.

    இரண்டாவது திரைப்பட பாடலும் முன்பு அடிக்கடி கேட்டதுதான். இதைப்பற்றிய விபரங்களையும் இப்போது தெரிந்து கொண்டேன். இரண்டு பாடல்களுமே அருமை. இப்போதும் கேட்டு ரசித்தேன். நன்றி.

    /எதிரில் இருப்பவர் பெயரை வைத்து என்னென்ன பாடல்கள் உண்டு என்று மனம் தானாய் ஆராய்ச்சியில் இறங்கும். பார்க்கும் பொருளின் பெயரில் என்னென்ன பாடல்கள் இருக்குமோ சட்டென ஒரு கணம் மனதில் நிழலாடி மறையும்/

    என்னவொரு ஒற்றுமை..!! . கிட்டத்தட்ட நானும் இப்படித்தான். ஏதாவது பேச்சில் ஒரு வரியில் ஒரு வார்த்தை ஒரு பாடலை நினைவுபடுத்தி போகும். ஆனால் உங்களைப் போல நான் அவ்வளவு திறமைசாலி இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. நீங்களும் பாடல்களின் ரசிகர் என்பது சந்தோஷம் தருகிறது. என் பெயர் உங்களுக்கு என்ன பாடலை நினைவு படுத்தும்?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்கள் பெயரில் இல்லாத பாடல்களா? அனேகம் பாடல்கள் உள்ளன. "ஸ்ரீ ராம நீ நாமம் எந்த ருசிரா" என்ற கர்நாடக பாடல்களுடன் (எஸ். பி. பி கூட அந்தப்பாடலை அருமையாக பாடியுள்ளார்.) எத்தனைப்பாடல்கள்.. . மற்றும் திரைப்பட பாடல்கள். "ராமன் எத்தனை ராமனடி" என்ற பாடலின் இறுதியில் மெய் மறக்க வைக்கும் ஸ்ரீ ராம்.ஸ்ரீ ராம் என்ற வரிகள்.

      இரண்டாவதாக என் அண்ணா பையனின் (முதல் பையன்) பெயர் ஸ்ரீ ராம்தான். அவன் மேல் வைத்த பாசம் உங்கள் பெயரிலும் இருக்கக் கண்டு வலைத்தளத்தில் பழகிய நாள் முதல் உங்களையும் ஒரு சகோதரரராக பாவிக்கிறேன்.

      அந்த காலத்தில் தங்கள் குழந்தைகளை அழைக்கும் போதே இறைவனின் பெயர்களையும் உச்சரித்த புண்ணியம் கிடைக்குமென்று இப்படிபட்ட நல்ல பெயர்களைதான் குழந்தைகளுக்கு வைத்தனர்.

      ஏதோ என் மனதில் பட்டவைகளை கூறுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா...  'ஸ்ரீராமன் வருகின்ற பாதை', 'ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகமே' ,  நாளளது கண்ணே பாடலில் பி சுசீலா ராமா ராமா ஸ்ரீராமா என்பதும் என் நினைவுக்கு வரும்!

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் நல்ல பாடல்கள். நான் இதுவரை கேட்டதில்லை என நினைக்கிறேன். அதனால் இப்போது இப்பாடல்களை இணையத்தில் தேடிக் கேட்டேன்.

      "அயோத்தி அரண்மனை பஞ்சனையில், அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீ ராமன். " என்ற பாடலும் நான் முன்பு அடிக்கடி கேட்டிருக்கிறேன். . பி. சுசீலா அவர்களின் இனிமையான குரலில் மிக நன்றாக இருக்கும். அது ஜூவநாடி என்ற படத்தில் என இப்போதுதான் தேடியதில் கிடைத்தது. படத்தில் இந்தப்பாடலின் காட்சி என்னவோ தெரியவில்லை. ஆனால் பாடல் அப்போதிலிருந்தே நான் மிகவும் ரசிப்பது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. ஸ்ரீராமனின் ஸ்ரீ தேவியே பாடல் உண்டே! கேட்டு இருக்கிறீர்களா கமலா?

      நீக்கு
    6. வணக்கம் சகோதரி

      /ஸ்ரீராமனின் ஸ்ரீ தேவியே பாடல் உண்டே! கேட்டு இருக்கிறீர்களா கமலா?/

      ஆஹா. இந்தப்பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ப்ரியா படத்தின் பாடல்தானே எப்பொதோ தொ. கா. இல் இந்தப்படம் பார்த்துள்ளேன். இப்போது அந்தப் படத்தின் கதையும் மறந்து விட்டது. மீண்டும் பார்த்தால்தான் புரியும். பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரசித்த பாடல். மெட்டு ராகம், குரல் என்று. ஒரு எழுச்சி பெற வைப்பது போன்றதான மெட்டு ....ஆனால் வரிகள் முழுவதும் இப்போதுதான் பார்க்கிறேன்.

    //மங்கள வாரம் சொல்லிடவேண்டும் மங்கள கண்டிகை ஸ்லோகம்
    இதை ஒன்பதுவாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்//

    இப்படி எல்லாம் பாட்டிலும் எழுதியிருக்காங்களே!!!!

    பாட்டை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே..  குளிச்சுட்டு சம்மணமிட்டு உட்காரு என்று கூட பாட்டில் வரும் போல...

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா ரொம்ப சிரித்துவிட்ட்டேன்!!!! ஸ்ரீராம்....

      கீதா

      நீக்கு
    3. சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. எனக்கு பாடல்கள் மீது அதீத மோகம். எதிரில் இருப்பவர் பெயரை வைத்து என்னென்ன பாடல்கள் உண்டு என்று மனம் தானாய் ஆராய்ச்சியில் இறங்கும். //

    ஸ்ரீராம், எனக்கும் பாடல்கள் கேட்பது என்றால் அவ்வளவு பிடிக்கும். கேட்பேன் ஆனால் மனம் வரிகளில் போவதில்லை ஹிஹிஹிஹி

    நானும் இப்படித்தான் பெயரில் ஏதேனும் பாடல் இருக்கான்னு யோசிப்பேன். இப்ப கூட நெருங்கிய வட்டத்தில் புதுவரவு ஒருவரின் பெயரில் பாட்டோ, ராகமோ இருக்கா என்று கூட ஆராய்கிறேன். பெயர் அத்தனை அழகான பெயர்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வட்டத்தில் புதுவரவு ஒருவரின் பெயரில் பாட்டோ, ராகமோ இருக்கா என்று கூட ஆராய்கிறேன். பெயர் அத்தனை அழகான பெயர் //

      சில சமயங்களில் அந்தப் பெயரில் ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கலாம்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் அது தெரியுமே!!! அந்தப் பெயரில் சில ராக ஆராய்ச்சி தளங்களும் இருக்கு.
      இது அந்தப் பெயர் அல்ல...நட்பு வீட்டில் வரும் புதுவரவு!! அந்தப் பெயர் மிக அழகான பெயர்...கேட்கவே இனிமையான பெயர்

      கீதா

      நீக்கு
  14. /அதானே.. குளிச்சுட்டு சம்மணமிட்டு உட்காரு என்று கூட பாட்டில் வரும் போல../

    ஹா ஹா ஹா. இப்படிபட்ட வார்த்தைகளுக்கேற்ற மெட்டு அமையுமா? இல்லை, மெட்டுக்கேற்றபடி இந்த வார்த்தைகளை அமைப்பார்களா ?

    பதிலளிநீக்கு
  15. சில இடங்கள், சில பெயர்கள், சில காட்சிகள், நமக்குச் சில பாடல்களை நினைவூட்டும்.

    பனியைக் கண்டாலே அல்லது பூங்கா வில் இங்கு குளிர்காலத்துக் காலையில் நடைப்பயிற்சி செய்யறப்ப டக்கென்று நினைவுக்கு வருவது பனி விழும் மலர்வனம்....

    ரோத்தாங்க்பாஸ் உறை பனி பார்த்தப்ப புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...நினைவுக்கு வந்தது.
    நம் வீட்டில் ஒரு பெரிய குழு உண்டு இப்படிப் பாடல்களை அள்ளி எடுத்துவிட...இப்பதான் சமீபகாலமாக அது எதுவும் இல்லாமல்...

    சில சமயம் படக் காட்சி நினைவுக்கு வரும் பாட்டு வரிகள் டக்கென்று வராது ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நிறைய இடங்கள் சட்டென சில பாடல்களை நினைவுறுத்தும்.

      நீக்கு
  16. இறைவன் எனக்கு வேறெங்கோ விதியை விதித்திருந்தான் போலும். அறியாமல் நான் இங்கு வந்து விட்டேனோ!!!!//

    ஹாஹாஹா....இப்படி எனக்குத் தோன்றியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இரண்டாவது பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் சூப்பர் பாட்டு. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்கிறேன். எஸ்பிபி செம வாய்ஸ். ரசித்துக் கேட்டேன்.

    சிவக்குமார் வெய்ட் லிஃப்டிங்க் பயிற்சி!! ஹிஹிஹி

    அது சரி கதாநாயகி தன்னை வர்ணித்துக் கொள்ளும் வரிகள் - அப்படியா இருக்காக அவங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க..  ஒடிவது போலே இடையிருக்கும் என்று தேவிகாவையோ சாவித்ரி அம்மாவையே காட்டி பாடுவாங்க...  நாம சரின்னு கேக்கல?

      நீக்கு
  18. முதல் பாடல் அடிக்கடி கேட்ட, பாடும் பாடல்.
    அடுத்த பாடல் பல வருடம் ஆச்சு கேட்டு.
    கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    இரண்டாவது பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  20. படத்தின் பெயர் நீங்க சொன்னாப்ல ரொம்ப வித்தியாசமா இருக்கு!!

    77ல் கூட கருப்பு வெள்ளை படமா?

    வம்சமோ.....அம்சமோ என்று முடியும் இடம் எஸ்பிபி டச்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள். அடிக்கடி கேட்ட பாடல்களும். இங்கு பகிர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு கேட்கும் வாய்ப்பைக் கொடுத்தீர்கள் ஸ்ரீராம். மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. பாடல்கள் நன்று. முதல் பாடல் பல முறை கேட்ட பாடலே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!