நான்
தரிசனம் செய்த கோயில்கள் –
நெல்லைத்தமிழன்
ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 12
ஆதிசங்கரர் தவம் செய்த குகையைத் தரிசனம் செய்த
பிறகு நாங்கள் திரும்பும் வழியில் சோம்நாத் டிரஸ்டினால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ
ராம் மந்திர் என்ற கோவிலுக்குச் சென்றோம். இது புதிதாகக் கட்டப்பட்ட து. மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுடனும்
அமைந்திருக்கும் கோவில்.
சூரியதேவர் சிலையின் பக்கத்தில், வராஹமூர்த்தி மற்றும் இன்னொரு சிலையும் இருக்கிறது. இவையெல்லாம் இடிபாடுகளில் கிடைத்தவையாயிருக்கும். இதில் சூரியனுடைய சிலை, சூரியக் கோவிலில் (சூரஜ் மந்திர் என்று அழைக்கப்படுவது) இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீ ராம் மந்திரின் மூலவர், ஸ்ரீராமர், லக்ஷ்மணர்
சீதா மற்றும் அனுமனுடன் காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலின் மண்டபம் மிகவும் குளிர்ச்சியாக அமைந்திருக்கிறது. சிறிது நேரம் அங்கிருந்து இறைவனைத் தியானித்த பிறகு, ஆட்டோ எங்களை நாங்கள் எங்கள் பைகளை வைத்திருந்த ஸ்ரீ ராமானுஜ கூடத்தில் இறக்கிவிட்டது.
பிறகு அருகில் இருந்த சோம்நாத் கோவிலுக்குச் சென்றோம்.
சோம்நாத் கோவில் என்பது மிகப் பழமையானது. இதனை மஹாபாரதம் மற்றும் பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்களுள் ஒன்று. பழமை இலக்கியங்களில் பிரபாஸ தீர்த்தப் பகுதியில் உள்ள ஜ்யோதிர் லிங்கம் என்றே குறிப்பிடப்படுகிறது. சந்திரன் வழிபட்ட தலம் என்பதால் சோமநாதர் என்றழைக்கப்படுகிறார்.
இது, விராவல் துறைமுகத்தின் அருகில் உள்ளது, இங்கிருந்து பாகிஸ்தான் வெகு அருகில் இருக்கிறது.
இந்தக் கோவில் பொது ஆண்டிற்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தாம். கோவிலில் இருந்த அளவற்ற செல்வம், சிவலிங்கம் தரையைத் தொடாமல் அந்தரத்தில் இருந்தது (என்று சொல்கின்றனர்) போன்ற பல சிறப்புகளைப் பெற்றது. கஜினி முகம்மது பதினேழு முறை படையெடுத்து கோவிலைக் கைப்பற்றி பல செல்வங்களை வாரிக்கொண்டு சென்றது, அந்தக் கோவிலைக் காக்க பலர் பலியானது என்று ரத்தச் சரித்திரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இடம் இது. படையெடுப்புக்குப் பிறகும் கோவில் சீர் செய்யப்பட்டு, மீண்டும் அழிக்கப்பட்டு, என்ற வரலாறைப் பின்னணியில் கொண்ட கோவில் இது. அந்த வடுக்கள் மறைவதற்காக, சர்தார் வல்லபாய் படேல், காந்தியின் சம்மதத்தைப் பெற்று கோவிலை மீண்டும் நிர்மாணித்தார். கோவில் முழுவதுமாக நிர்மாணிக்கப்பட்டு வழிபாட்டுக்கு வந்தபோது, காந்தியின் சகாப்தம் முடிவடைந்திருந்தது.
மிகவும் சென்சிடிவ் ஆன இடம் என்பதாலும், பாகிஸ்தானின் அருகில் இருப்பதாலும், கடுமையான காவல் கண்காணிப்பில் இருக்கிறது கோவில் வளாகம். செல்போன் மற்றும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. வளாகத்தின் சிறிது தூரத்திலேயே இவற்றையெல்லாம் விட்டுச் செல்ல இடங்கள் இருக்கின்றன.
நாங்கள் சென்றது நல்ல மதிய நேரம். செருப்பில்லாமல் தட்டுத் தடுமாறி நெடிய பாதை வழியாகச் சென்று கோவில் நுழைவாயிலில் வரிசையில் நின்று, இறைவனைத் தரிசித்தோம். மிகப் பெரிய கருவறை, பெரிய சிவலிங்கம், முழுவதும் தங்கத்தால் அமைக்கப்பட்டு பளீர் என்று ஒளிவீசும் கருவறை. சிவனைத் தரிசித்த அந்தத் தருணங்கள் மிகவும் உணர்வுபூர்வமானது.
13ம் நூற்றாண்டில், ஹமீர்ஜி கோஹில் என்ற 16 வயது இளைஞர், அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின்போது, சோம்நாத் கோவிலைக் காக்க தன் இன்னுயிரைத் தியாகம் செய்தான். அவனது பெரும் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூறும் வண்ணம், போர் வீரன் போன்ற அவனது சிலையை சோம்நாத் கோவில் செல்லும் வழியில் வைத்திருக்கின்றனர்.
எத்தனையோ
பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து சோம்நாத் கோவிலைக் காக்க
முயன்றிருக்கின்றனர்,
தங்கள்
உயிரையும் விட்டிருக்கின்றனர். கஜினி முகம்மது (கzனி என்று அழைக்கின்றனர்), இஸ்லாமிய மதக் கோட்பாட்டை
நிலை நிறுத்த,
சிலையை
வணங்குபவர்களை அழித்து,
சிலை
வணக்கம் செய்கின்ற கோவில்களை அழித்தான் என்று இஸ்லாமிய ஆசிரியர்கள் கஜினியின்
வீரத்தைப் பற்றி எழுதியிருக்கின்றனர் (பெர்ஷியாவில்)
ஹமீர்ஜி
நினைத்திருப்பானா?
கோவிலைப்
பார்த்தவாறே இருக்கும் தன் சிலையைப் பிற்காலத்தில் நிறுவுவார்கள் என்று?
தங்கியிருந்த
இடத்திலிருந்து பார்த்தால் சோம்நாத் கோவில் தெரியும்.
கோவில்
வளாகத்திற்கு வெளியே வந்துவிட்டால், சுதந்திரமாக வெளிப்பகுதியைச்
சுற்றிப் பார்க்கலாம்.
கடற்கரையும்
நீண்ட கடலும் தெரியும்.
பாகிஸ்தானிலிருந்து
படகில் இந்த இடத்தை அடைந்துவிட முடியுமாம்.
கோவில்
மிக அழகுறக் கட்டப்பட்டு உள்ளது. புராதானமான பத்தாம் நூற்றாண்டு வரை இருந்த கோவிலின்
சிறப்புகளைப் பல நூல்களில் படிக்கலாம். சாண்டில்யன் நாவல் ஒன்றிலும் படித்த
நினைவு. அதைப்போன்றே சிறப்பாக
வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது சோம்நாத் கோவில்.
தங்க கர்ப்பக்ரஹத்தின் உள்ளே ஜோதிர்லிங்க தரிசனம் (இணையம்)
ஜோதிர்லிங்கம். அங்கு தரிசனம் செய்யும்போது நமக்கு ஏற்படும் உணர்வே தனி. கோவில் ஒரு காலத்தில் எப்படி இருந்தது, படையெடுப்பில் எப்படி அழிக்கப்பட்டது, கோவிலைக் காப்பதற்காக உயிர்த்தியாகம் புரிந்த ஆயிரக்கணக்கானவர் என்று நெடிய வரலாறே மனதில் ஓடியது. நிச்சயம் காண வேண்டிய கோவில்.
இதனைப்
பற்றி எழுதும்போது அயோத்தி கோவிலில் தரிசனம் செய்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. கிட்டத்தட்ட சிறைச்சாலை
போல ஒற்றை வரிசையில், இரு புறமும் கடும் காவலுடன், நெடிய வரிசையில் சென்று தூரத்தில்
இருக்கும் இராமர் சன்னிதியைத் தரிசிக்கவேண்டும், நம் கையில் சில மிட்டாய் பிரசாதம்
தருவார்கள்.
பிறகு
நெடிய வழியில் வெளியேற வேண்டும். கையில் ஒன்றுமே எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் கோவில் பகுதியில்
ஏராளமான குரங்குகள் இருக்கும். இதனைப் பற்றி இன்னொரு யாத்திரைத் தொடரில் குறிப்பிடுவேன்.
சோம்நாத் கோவில் வளாகத்தில் நிறைய நடக்கவேண்டும். (கொஞ்சம் வெயில்). தரிசனம். நல்ல செக்யூரிட்டி. அங்கிருந்து வெளியே வந்த பிறகு, வெளிப்பகுதியில் நடந்தால் இந்தக் கோவிலே கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
தரிசனம்
முடிந்த பிறகு சத்திரத்திற்குத் திரும்பினோம். சத்திரத்தை ஒட்டி இருந்த ஒரு
கோவிலில் (ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
கோவில்)
தீர்த்தம், சடாரி வாங்கிக்கொண்டோம்.
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் (அஹோபில மட கோவில் என்று தோன்றியது)
எல்லோரும் சோம்நாத் கோவிலைத் தரிசித்து வந்த பிறகு ராமானுஜ கூடத்தில் எங்கள் பையை எடுத்துக்கொண்டு, பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வளாகத்துக்குச் சென்றோம். அப்போது மணி சுமார் 3 1/2. அங்கிருந்து எங்கு பிரயாணித்தோம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
குறிப்பு: சோம்நாத் கோவில்
பகுதியில் மாத்திரம் பல படங்களை இணையத்திலிருந்து எடுத்து உபயோகித்துள்ளேன். நான் பார்த்த மாதிரி
இருந்த படங்களையே எடுத்திருக்கிறேன்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
பதிலளிநீக்குஎன்பும் உரியர் பிறர்க்கு..
வாழ்க தமிழ்..
இந்தக் குறளை காந்திஜியின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கலாம். அவர் மக்களிடமிருந்து, தேசத்திடமிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம் துரை செல்வராஜு சார்.
நீக்கு/// அந்த வடுக்கள் மறைவதற்காக, சர்தார் வல்லபாய் படேல், காந்தியின் சம்மதத்தைப் பெற்று கோவிலை மீண்டும் நிர்மாணித்தார்... ///
பதிலளிநீக்குகைதொழ வேண்டிய புண்ணியர் சர்தார் பல்லபபாய் படேல்!..
சர்தார் வல்லபாய் படேல் வசம் பிரதம்மந்திரி பதவி வந்திருந்தால், இந்திய தேசம் வித்தியாசமாக்க் கட்டமைக்கப்பட்டிருக்கும். மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக இருந்த காந்திஜி, நேருவை அந்தப் பதவிக்கு முன்னிறுத்தினார். மேற்கத்தைய சிந்தனைகளோடு இந்தியா வளர்ந்தது
நீக்குகோயிலை மீண்டும் நிர்மாணிக்க காந்தியின் சம்மதம் எதற்கு?..
பதிலளிநீக்குஓ..
இந்துக்களின் கோயில் அல்லவா!..
காந்தியடிகள் எதைச் செய்தாலும் எந்த மத்த்தைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது என்று நினைத்தார்.
நீக்குஅன்றைக்கு காந்தி மறுத்திருந்தால் !?
பதிலளிநீக்குஇதை பேலன்ஸ் பண்ண பாரத தேசத்தின் கலாச்சாரத்தை நேசித்த வல்லபாய் படேல் போன்ற பல தலைவர்கள் அப்போது இருந்தனர்.
நீக்குஇஸ்லாமிய மதக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காக சிலைகளையும் அவற்றை வணங்குபவர்களை அழித்தான்.. கோயில்களை இடித்து அழித்தான் என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கzனியின் வீரத்தைப் (!) பற்றி (பெர்ஷியாவில் - பாரசீகத்தில்) எழுதியிருக்க
பதிலளிநீக்குஇங்கே கzனியை நல்லவரு வல்லவரு என்று புகழ்ந்தாக வேண்டும்..
என்ன கொடுமையடா இது..
அதற்குக் காரணம், இந்தியர்களின் கல்விக் கோட்பாடை வரையறுத்த மத்திய கல்வி அமைச்சர்கள். அவர்கள் யார் யார் என்று இணையத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
நீக்குஜெர்மனியில் ஹிட்லர் செய்த கொடுமைகள் பாடத் திட்டத்தில் உள்ளன. அவர் வல்லவர் நல்லவர் என்ற பஜனை கிடையாது.
விவரங்களும் படங்களும் சிறப்பாக உள்ளன. சோமநாதர் ஆலயம் கிட்டத்தட்ட அயோத்தி ராமர் கோயில் போலவே உள்ளது. இரண்டிற்கும் ஒரே ஆர்க்கிடெக்ட்டோ?
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். கோவில் வட இந்திய ஆணி என்பதால் அப்படித் தோன்றுகிறது. தென்னிந்தியப் பாணி, ராஜகோபுரம் த்வஜஸ்தம்பம் போன்று பலவற்றை உடையது. நன்றி
நீக்குவரலாற்றுச் செய்திகள் அழகிய படங்களுடன் சோமநாதபுர தரிசனம் அருமை.. அருமை..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடி தளகர்த்தரான பால கங்காதர திலகரை ஏன் யாருமே நினைவு கொள்வதில்லை?
பதிலளிநீக்குஒரு சுவாரஸ்யமான இழைக்கு இட்டுச் செல்லும் வரலாற்று ஆவணம் இது.
பாலகங்காதரத் திலகர், இந்து சமய எழுச்சி வீரராகவும் (அவர் எண்ணம் மக்களை சுதந்திரத்திற்காகத் தட்டி எழுப்புவது) அறியப்பட்டதால் இருக்குமோ?
நீக்குஅரசியல்வாதிகளுக்கு தங்கள் அரசியல் எண்ணங்களை அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்தந்த நேரத்து அவர்களுக்கு இசைவான ஒரு தலைவர் கிடைத்து விடுகிறார். அந்த அளவுக்கு தேசம் பற்றிய ஒட்டு மொத்த சிந்தனையே குறுகிவிட்டது. அவ்வளவு தான்.
பதிலளிநீக்குஇது ஒரு வகையில் உண்மைதான். ஜனநாயகத்தில், மக்களுக்கு ஏற்பத்தான் தலைவர்கள் கிடைக்கிறார்கள் என்பது உண்மை
நீக்குஉங்கள் எழுத்து அதற்கான படங்களின் வழிகாட்டல் என்று வாசிப்பது தெளிவான வாசிப்பு அனுபவமாக இருந்து விடுவது வழக்கம். அதன்படியே வாசித்து என் மன ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். உங்கள் encouragementக்கு மிக்க நன்றி.
நீக்கு/// முன்னோடி தள கர்த்தரான பால கங்காதர திலகரை ஏன் யாருமே நினைவு கொள்வதில்லை?.. ///
பதிலளிநீக்குஅவரைத் தான் அப்போதே இருட்டடிப்பு செய்தாயிற்றே..
அப்போது தானே தேசம் ஒருப்படும்!?..
அன்றைக்கு மராட்டியத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விநாயக சதுர்த்தி யை முன் வைத்து மக்களை ஒருங்கிணைந்த மகான் அல்லவா திலகர் பெருமான்..
பதிலளிநீக்குஅவர் பிறத்தியாரைப் போல கொண்டாடப் படமல் இருக்க சதி செய்து பாடப் பகுதியில் குறைத்து விட்டார்கள்...
அவரை நினைவு கொள்ளாமல் இருந்ததற்கு வெட்கப்படுகின்றேன்..
எத்தனையோ சிறந்த விடுதலை வீரர்களை நாம் மறந்துவிட்டோம். திலகரும் அவர்களில் ஒருவர். நமக்குத் தெரிந்ததெல்லாம், நேரு, இந்திரா, ராஜீவ் போன்றவர்கள்தாம்.
நீக்குஎனக்குத் தெரிந்து என் காலத்தில் யாரும் அவரை நினைவு கொள்ளாமல் இருந்ததில்லை. பிற்காலத்தில் தான் இதெல்லாம். விவரமாக சனிக்கிழமை நான் படித்த புத்தகத்தில் திலகரை நினைவு கொள்ளலாம்.
பதிலளிநீக்குஓ.. சனிக்கிழமைகளில் நீங்கள் எபி பக்கம் வருவதில்லையோ?.
சனிக்கிழமை எனக்கு விடுமுறை நாள்..
நீக்குஒரு எழுத்தாளர் பிற எழுத்தாளர்கள் வாசிப்பிலிருந்து விலகக் கூடாது. இன்னும் இன்னுமான வாசிப்பில் கற்பதற்கு
நீக்குநிறைய இருக்கின்றன. அதனால் விருப்பமிருப்பின் உங்கள் விடுமுறயை வேறோரு நாளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு எழுத்தாளர் பிற எழுத்தாளர்கள் வாசிப்பிலிருந்து விலகக் கூடாது. இன்னும் இன்னுமான வாசிப்பில் கற்பதற்கு
நீக்குநிறைய இருக்கின்றன. அதனால் விருப்பமிருப்பின் உங்கள் விடுமுறயை வேறோரு நாளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இங்கே தஞ்சையில் பெரிய கோயிலுக்கு அருகில் பெரியதொரு திடல்.. சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுச்சி மிகும் ஆரவாரங்கள் முழங்கப்பட்ட இட்ம்.. திலகர் பெருமான் நினைவாக திலகர் திடல் என்ற பெயர்.. இத்திடலில் திலகர் பெருமான் சிலையும் இருந்தது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இத்திடலின் பெயரை மாற்றுவதற்குக் கிளம்பினார்கள்.. தஞ்சை நகர மக்களின் பலத்த எதிர்ப்பினால் பெயர் மாற்றம் கை விடப்பட்டது..
பதிலளிநீக்குஆனால்
சீரமைப்பு என்ற பெயரில் ஒரு அரங்கத்தைக் கட்டி அதனுள் திலகர் சிலையை வைத்துப் பூட்டி விட்டார்கள்.. யாரும் எளிதில் அணுக முடியாது..
இன்றைக்கு அங்கு ஏதும் மரியாதை செய்யப்பட்டதா என்பதும் தெரியாது..
வாழ்க சுதந்திரம்..
ஓட்டப்பிடாரத் தமிழன் கப்பல் ஓட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் திலகர் பெருமான்..
பதிலளிநீக்குவாழ்க அவரது புகழ்..
திலகரை நினைவுகூர, திலகர் திடல் என்ற கல்தான் சென்னை மெரீனாவில் இருக்குறது. வரலாற்றை அழிக்க நினைத்து அதனைச் சீரணி அரங்கம் என மாற்றிவிட்டார்கள்.
நீக்குபாரதியாரின் ஞான குரு அவர். பாரதியார் கண்ட திலகரை
நீக்குஒரு சனிக்கிழமைக்கு எபியில் பகிர்கிறேன்.
வ.ரா. பாரதியார் பற்றி எழுதிய புத்தகம் அது.
அது சரி.. வ.ரா. என்பது யார்? அக்கிரஹாரத்து அதிசய மனிதர் அவர்.
@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// காந்தியடிகள் எதைச் செய்தாலும் எந்த மத்த்தைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது என்று நினைத்தார்... ///
முஸ்லீம்களை எதிர்க்கக்கூடாது என்று நினைத்தார்...
நவகாளிப் படுகொலையில் அவரது நிலைப்பாட்டை உணர்ந்து கொள்ளலாம்..
ஒரு அப்பாவிற்கு இரு பிள்ளைகள் இருந்து, அதில் சவலைப் பிள்ளையை, எதற்கும் சப்போர்ட் பண்ணுவது, அவன் மனசு நோகாமல் நடந்துகொள்வது என்ற நிலையை, காந்தியின் எண்ணங்களோடு பொருத்திப் பார்க்கணும்.
நீக்குஎப்படியோ நவகாளி படுகாளி என்று கி. பா.. பிரிந்து வங்க தேசம் என்றாகி ரொஹிங்கியா இங்கு அதிகாரபூர்வமற்றுப் போனது..
பதிலளிநீக்குஅரபு நாடுகள் கூட இந்தக் கோஷ்டிக்கு தஞ்சம் அளிப்பதில்லையே..
ஆனால் தமிழகத்தில் பரவி விட்டதாகச் சொல்கின்றார் கள்..
சோம்நாத் மிகவும் அற்புதமான இடம் . நல்ல பல படங்களுடன் கண்டு வணங்கிக் கொண்டோம். பல தகவல்களும் அறிந்தோம்.
பதிலளிநீக்குஉங்களுக்கு தங்க லிங்க தரிசனம் கிடைக்கப் பெற்றது மிகுந்த கொடை .
நாங்களும் உங்கள் பயணத்தில் படங்களில் கண்டு வணங்கினோம் நன்றி.
வாங்க மாதேவி. பயணத்தில் தொடர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி
நீக்குசோம்நாத் மிகவும் அற்புதமான இடம் . நல்ல பல படங்களுடன் கண்டு வணங்கிக் கொண்டோம். பல தகவல்களும் அறிந்தோம்.
பதிலளிநீக்குஉங்களுக்கு தங்க லிங்க தரிசனம் கிடைக்கப் பெற்றது மிகுந்த கொடை .
நாங்களும் உங்கள் பயணத்தில் படங்களில் கண்டு வணங்கினோம் நன்றி.
கப்பலோட்டிய தமிழர், மகாகவி இவர்களது காலத்தில் திலகர் தான் ஆதரிசத் தலைவர்..
பதிலளிநீக்குசுதந்திரம் எனது பிறப்புரிமை -- என்ற மகா வாக்கியத்தை
நீக்குகர்ஜித்து பிரகடனப்படுத்திய மாமனிதர் அவர்.
பிற்காலத்து சரித்திரத்தில் அவரை இருட்டடிப்பு செய்து விட்டு தங்களுக்குத் தேவையான அரசியல் லாபத்திற்காக யார் யாரெல்லாமோ முன்னிலைப் படுத்தப்படுவது காலத்தின் அவலம்.
அமெரிக்க சூழ்நிலைக்கும் இந்திய தடப வெப்ப நிலைக்கும்
பதிலளிநீக்குஏறுமாறான நிலை. சென்னை வந்து சேத்ந்த இரண்டாம் நாளிலிருந்து
உடல் நிலை ஒத்துழைக்க வில்லை. சித்திரத்தை கஷாயம் கை கொடுக்கிறது. மாலைக்குப் பிறகு வருகிறேன் நெல்லை.
அமெரிக்காவையும் இந்தியாவையும் தட்ப வெப்ப நிலைல ஒப்பீடு செய்யறீங்க ஜீவி சார். எனக்கு பெங்களூருக்கும் சென்னைக்குமே வித்தியாசம் தெரிகிறது (பெங்களூர் சூடாகிக்கொண்டு வருகிறது. சென்னையில் ஓரளவு காற்று இருக்கிறது).
நீக்குவாங்க ஜீவி சார்.
தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் அழகாக இருக்கிறது
நன்றி கில்லர்ஜி
நீக்குசோம்நாத் கோயில் என்று நீங்கள் சொல்வதையே சோமநாதபுரம் கோயில் என்று என் காலத்து சரித்திர பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்படிருக்கும். 17 முறை படையெடுத்தான்
பதிலளிநீக்குஎன்பது கோயில் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே. இதில் நமக்குத் தெளிவு வேண்டும். இன்றைய நலனுக்காக மாற்றிச் சொல்லக் கூடாது.
அன்றைய படையெடுப்புகள் எல்லாமே செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான். பாபர் மாத்திரம்தான், இங்கு ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ முடியும் என்று நம்பி முகலாய சாம்ராஜ்யத்துக்கு அடிகோலினார். அவருக்கு என்ன என்ன கஷ்டங்கள் நேர்ந்தது, எவ்வளவு தோல்விகளை எதிர்கொண்டார் என்பதையெல்லாம் படித்தால் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு சமயத்தில் கழுதை மாமிசத்தைச் சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். அவருடைய பெரும் முயற்சியால், ஹுமாயூனுக்கு அக்பர் கோட்டையில் (ஆக்ரா) முடிசூட்டினார்.
நீக்குமாவீரன் ஹமீர்ஜிக்கு வீர வணக்கம். பாவம், அப்பொழுது திருமணம் முடித்த இளம் வாலிபராம் இவர்.
பதிலளிநீக்கு//தன் சிலையை பிற்காலத்து நிருவுவார்கள், என்று.//
என்ன கூற்று இது? இதற்காகவா அவன் தன் இன்னுயிரை ஈந்தான்?
சோமநாதபுரம் என்றாலே
இந்த வீர இளைஞன் பெயரை நினைவு கொள்கிற மாதிரியல்லவா நம் தேச வரலாறு இருந்திருக்க வேண்டும்?
மாறாக அல்லாவுதீன் கில்ஜியும், கஜினியும் நினைவுக்கு வருகிற மாதிரி சரித்திரம் எழுதப் பட்டிருப்பது தான் சோகம்.
ஒன்றல்ல, இரண்டல்ல 17 முறை. 17 முறையும் படையெடுத்தவனை விரட்டி அடித்திருக்கிறார்கள் என்றால் அந்த ராஜபுத்திர வீரர்களின் ஆற்றலை என்னவென்று புகழ்வது?
நீக்குஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கக் கூடாது. இன்னொரு பக்கம் ராஜபுத்திர வீரர்களின் வீர வரலாறு அல்லவா?
ராணி சம்யுக்தை பற்றி எத்தனை பேருக்குத் தெரிகிற மாதிரி நம் வரலாற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறோம் என்பது தான் கேள்வி.
இந்திய சரித்திரமே, பல்லு படாமல் எழுதப்பட்டதாகத்தான் இருக்கிறது. இந்தியர்களுக்கு தங்கள் தாய்நாட்டின் புகழ், மாவீரர்கள் போன்ற விஷயங்கள் தெரிந்துவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து கல்வியை வடிவமைத்திருக்கிறார்கள். லண்டன் ஒரு மீன்பிடித் துறைமுகமாக சிறு கிராமமாக இருந்தபோது, ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்திற்குப் பொன் வேய்ந்தான். ரஜபுத்திரர்களின் வீரத்தை சாண்டில்யன் பல நாவல்களில் கொண்டுவந்திருப்பார்.
நீக்குநம் வரலாற்று நாயகர்கள் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான், வெட்டிப் பயல்கள், பிரிட்டிஷார்தான் நம் நாட்டின் கல்வியறிவுக்குக் காரணம் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
////தன் சிலையை பிற்காலத்து நிருவுவார்கள், என்று.//// - நான் சொல்லவந்த கருத்து, பயன்கருதாது செய்த வீரச் செயல் என்று குறிப்பிடவே.
நீக்குமொபைலில் தட்டச்சு செய்வது அடிக்கடி தவறுகிறது. கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின் வருகிறேன்.
பதிலளிநீக்குஎனக்கே சில நேரங்களில் ஆச்சர்யமாக இருக்கும், எப்படி இவரால் இத்தனை தட்டச்சு செய்யமுடிகிறது என்று. விரல்களுக்கும் அது எக்சர்சைஸாக இருக்கும். நன்றி ஜீவி சார்.
நீக்குஅந்த பருந்துப் பார்வை படம் ஒரு பருந்து அட்டகாசமாக உட்கார்ந்திருப்பது போலவே பிரமாதம்.
பதிலளிநீக்குகோயிலின் நேரடித் தோற்ற படமும் அருமை. கூடவே கட்டுரை வர்ணனையும் ஒவ்வொரு விஷயத்தையும் அக்கறை எடுத்துக் கொண்டு அளவோடு விவரிப்பதும் சிறப்பாக இருந்தது. அடுத்த பகுதியில் பார்க்கலாம், நெல்லை.
நன்றி.
மிக்க நன்றி ஜீவி சார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் யாத்திரை பயணப்பகுதிகள் யாவும் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளது. ஸ்ரீ ராம மந்திர் வழிபாடு சிறப்பாக கிடைத்ததமைக்கு என் மகிழ்வான நன்றி. விளக்கமாக விபரங்கள் மூலம் தாங்கள் சென்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
சோம்நாத் கோவில் அழகாக இருக்கிறது. கஜினி முகமது பதினேழு தடவை படையெடுத்து வந்து செல்வங்களை கவர்ந்த பின்னரும், கோவிலினுள் தங்க கர்ப்பஹிரகம் நிறுவபட்டிருகிறதென்றால் அக் கோவிலின் செல்வங்களை ஊகிக்க முடிகிறது.
பறவை பார்வை புகைப்படங்கள் மிக அழகாக இருக்கிறது. உங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இன்று கொஞ்சம் வேலைகள் (மாலை வெளியில் வேறு சென்று விட்டோம்.)
அதிகமென்பதால் தாமதமாக வந்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.... அப்போ கஜினி கொள்ளையடித்தது நம் சொத்துக்களை. இப்போது பக்தர்களின் பங்களிப்பினால் மூலவர் தகதகக்கிறார் என்று நினைக்கிறேன். அங்கிருந்து எட்டிப்பார்த்தாலே பாகிஸ்தான் தெரியும் என்கிறார்கள்.
நீக்குஇத்தனை வேலைகளுக்கிடையில் பதிவுகளைப் படிப்பதே ஆச்சர்யம்தான். வருகைக்கு நன்றி
ஸ்ரீ ராம் மந்திர் அழகாய் இருக்கிறது.சோம்நாத் கோவில் மிகவும் அழகு.
பதிலளிநீக்குஇப்போது அடிக்கடி பார்த்து கொண்டு இருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி தொடரில் அடிக்கடி சோம்நாத் கோவிலை காட்டுகிறார்கள், மூலவரையும் காட்டுகிறார்கள்.
கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் சோம்நாத் கோவில் பறவைப் பார்வை படம் மிக அழகாய் இருக்கிறது.
அனைத்து படங்களும் , விவரங்களும் அருமை.
போன வார பகுதியை படிக்க வேண்டும்.
வாங்க கோமதி அரசு மேடம். நலமா? சோம்நாத் கோவில் கர்பக்ரஹம் முன்னால் நிற்கும்போது, சட் என்று பழைய கால கம்பீரம் வந்துவிட்டதுபோல் தோன்றியது. அவ்வளவு அருமையாக இருந்தது.
நீக்குவணக்கம் நெல்லை, நலமாகி வருகிறேன். இறைவனிடம் ஒவ்வொன்றையும் கடந்து வர மன பலத்தையும், உடல் பலத்தையும் தர வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநிச்சயமாக உங்களுக்கு மன பலத்தையும் உடல் நலத்தையும் இறைவன் தருவார். Our well wishes are with you கோமதி அரசு மேடம்
நீக்குசோம்நாத் கோயில் தரிசனம் நன்று. இரண்டு முறை இங்கே சென்று வர வாய்ப்பு அமைந்திருக்கிறது. எனக்கும் பிடித்த கோயில்.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட் (நீங்க பிற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் செட்டில் ஆனாலும் உங்க பெயர் தில்லி வெங்கட்தான்). உங்களுக்கும் நல்ல தரிசனம் கிட்டியிருக்கும்.
நீக்கு