வெள்ளி, 8 மார்ச், 2024

வெள்ளி வீடியோ : கண்மணி உயிர் காதலி என் கைகளில் தவழ்ந்திருக்க என்னென்னவோ என் ஆசைகள்..

தனிப்பாடல்  :  பி சுசீலா பாடிய பாடல்.  சோமு எழுதிய பாடல்.  இசை சோமு கஜா.

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் ஓடும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும் நெற்றியிலே குங்குமப் பொட்டும் வெற்றிப் பாதையைக் காட்டும் ஆயிரம் கண்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலுடன் சூலமும் தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா...
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடிமேல் சூடி நின்றாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும் அவளே அங்கயற்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம்


==================================================================================================

படம் திருக்கல்யாணம்.  பாடல் : இளையபாரதி.  இசை..  வேறு யார்?  இளையராஜாதான்.  குரல்கள் ஜெயச்சந்திரனும், எஸ் ஜானகியும்.

ஜெயச்சந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடகர்.  அவர் பாடிய பாடல்களில் நூற்றுக்கு 95 பழுதில்லாதது, இனிமையானது.   

1978 ல் வெளிவந்த படமாம்.  படம் பற்றிய வேறு விவரங்கள் தெரியவில்லை.  விஜயகுமார், ஸ்ரீவித்யா நடித்திருக்கிறார்கள்.

காதலி / காதலன்  நம்மிடம் இபப்டி நடந்து கொள்ளவேண்டும், நம்மை இப்படி கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும் இருவரிடமும்.  உன் ஆசை புரிகிறது, என் ஆஅய் உரிகிறதா என்பது போல ஒரு உணர்வுப்பரிமாற்றமாய் பாடல்.  மூன்றாவது சரணத்தில் புரிந்துகொண்டு இறைவனிடம் எங்கள் காதலை வாழவைப்பாய் என்று இறைஞ்சுதல்.  அருமையான பாடல்.

மூன்றாவது சரணம் தொங்கும் முன் இளையராஜா கொடுத்திருக்கும் ஒரு சிறு இசைத்துளி வேறொரு பாட்டை நினைவு படுத்துகிறது.   படுத்துகிறது - சட்டென நினைவுக்கு வராமல்!  அது என்ன பாடல் என்பதைக் கண்டு பிடிக்க இன்னமும் போராடிக்  கொண்டிருக்கிறேன்!

அலையே கடல் அலையே 
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் 
இன்ப நினைவினில் பாடுகிறாய் 
என்னென்னவோ உன் ஆசைகள்  

பொன் மணல் மேடை மீதினிலே 
வெண்பனி வாடை காற்றினிலே 
மயக்கும் மாலை பொழுதினிலே 
காதலி இந்த நாயகி பல நாள் வரை காத்திருக்க 
என்னென்னவோ உன் ஆசைகள்    

அலையே கடல் அலையே  
நீ உருகாதே மனம் கலங்காதே 
உன் அருகினில் நான் இருப்பேன் 
என்னென்னவோ உன் ஆசைகள்  

வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே 
வாடையில் வாடும் பனிமலரே 
நெஞ்சினில் என்றும் உன் நினைவே 
கண்மணி உயிர் காதலி என் கைகளில் தவழ்ந்திருக்க 
என்னென்னவோ என் ஆசைகள்  

கோவிலைத் தேடி தவமிருக்க  
தேவியின் நாயகன் துணையிருக்க  
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க  
தெய்வமே இளம் தென்றலே 
எங்கள் காதலை வாழ வைப்பாய் 
என்னென்னவோ நம் ஆசைகள்  
 

43 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    முதல் பாடல் மிகப் பிடித்த பாடல். வரிகள் தட்டச்சு செய்ததில் இடைவெளி இல்லாமல் வந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  வணக்கம்.  புரியவில்லை.  வரிகள் சரியாய்த்தானே டைப் ஆகியிருக்கு?

      நீக்கு
  2. இரண்டாவது பாடலைக் கேட்டு எத்தனை மாமாங்களாயிற்று... (ஆமாம் மாமாங்கள்னா என்ன?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​12 வருடம் ஒரு மாமாங்கம். அருமையான பாடல் இல்லை?  ஜெயச்சந்திரன் குரல் தெய்வீகம்!  இப்போ கூட அவரது தென்றல் ஒரு தாளம் சொன்னது பாடல் கேட்டுக்கிட்டேதான் பதில் டைப்பறேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  ஆமாம்ல?  மறந்துட்டோமே...   சமாளிடா  ராமா..  ஆ....   ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி ன்னு அதுக்காகதான் பாடல் போட்டேன் கோமதி அக்கா!  பெண்ணின் பெருமை சொல்லும் பாடல்!

      மகளிர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
    2. சமாளிப்பை ரசித்தேன். வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
  5. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். செவ்வாய், வெள்ளி வார வழிபாட்டில் (துர்க்கை வழிபாட்டில்) ராகுகாலத்தில் பாடும் பாடல்.
    அடுத்த பாடல் இன்று தான் கேட்கிறேன். முன்பு கேட்ட நினைவு இல்லை.இனிமையாக இருக்கிறது கேட்க.
    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  இப்படி ஓரிருவர், "அட, நல்ல பாடலாய் இருக்கிறதே..  நான் இதுவரை கேட்டதே இல்லையே" என்று சொன்னால் ஒரு சந்தோஷம்தான்!

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அம்மன் கோயில் விசேஷங்களில் பாடுவதற்கு என்றே நித்திய வரம் பெற்ற பாடல் இன்றைய முதற்பாடல்..

    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது பாடலைப் பற்றி இப்போது தான் கேள்விப் படுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... பாடல் எப்படி இருக்கிறது?

      நீக்கு
    2. இன்று சிவ சிந்தனைக்கு உரிய நாள்.. தேவார திருவாசகம் தவிர்த்த வேறெதிலும் மனம் செலுத்தாமல் இருக்கின்றேன்..

      இந்தப் பாடலைக் கேட்கவில்லை..

      நீக்கு
  9. /// அங்கையர்க்கண்ணி.. ///

    அங்கயற்கண்ணி √√

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. சிறு அகவையில் நான் பாம்பனில் விடுமுறைக்கு சென்று விடுவேன்.

    அங்கு ஆயிஷா என்ற டூரிங் டாக்கீஸ் (கீற்று கொட்டகை) இருந்தது மாலைக் காட்சி தொடங்கும்போது இப்பாடல் ஒலிக்கும்.

    உடனே எல்லோரும் பறந்து ஓடுவார்கள் அனைவரும் தரையில் அமர்ந்து ஒரே போல் கை தட்டுவார்கள்.

    மறக்க முடியாத அனுபவம்.

    இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊர் கீற்றுக்கொட்டகையில் உங்களுக்கு இந்தப்பாடல் என்றால், தஞ்சையில் ராஜேந்திரா டூரிங் டாக்கீஸில் முருகா என்றழைக்கவா பாடல்!

      நீக்கு
  12. அனைவருக்கும் சிவராத்திரி, ஓம் சிவாய நமக. அனைவரையும் இறையருள் காக்கட்டும்.
    மகளிர் தின வாழ்த்துகள்.

    ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி மிகவும் பிடித்த பாடல் உருக்கமாக இருக்கும்.

    மற்றைய பாடலும் கேட்டிருக்கிறேன் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. உங்களுக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். நல்ல அருமையான பாடல். கேட்டு கேட்டு மனப்பாடமும் கூட. முன்பு கொலுவுக்கு காலை, மாலை இந்த தொகுப்பு பாடல் கேசட்டை போட்டு விடுவோம். அந்த பாடல்கள் கூட சேர்ந்து பாடிப் பாடி மனப்பாடம். (தனியாக பாடினால் கொலுவுக்கு வருகிறவர்கள் (வந்தால்) கொலுவை ரசிக்க மாட்டார்கள். வீட்டில் அடிப்பதற்கு வசதியாக கம்பு ஏதாவது இருக்கிறதாவென்று தேட ஆரம்பித்து விடுவார்கள். :)) )

    இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பாடல் இனிமையாக உள்ளது. இதன் படம் பெயர் நினைவில் இல்லை. இப்போது அதன் விபரங்கள் படித்து தெரிந்து கொண்டேன். பாடகர் ஜெயசந்திரன் குரல் எனக்கும் மிகப் பிடித்தமானது. நல்ல பாடல்களை இன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.. ... பாடல் பாடுவீர்களா? பாடி அனுப்புங்களேன் கமலா அக்கா. ஜெயச்சந்திரனை உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  14. முதல் பாடல் எங்க ஊர்ல நவராத்திரினா எந்த வீட்டுக்குப் போனாலும் இந்தப் பாட்டுதான். அருமையான பாடல், கற்பதும் பாடுவதும் கொஞ்சம் எளிதான பாடல் என்பதால் அப்ப கற்றுக் கொண்டதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்தப் பாடல்கள் ஒரு செட். வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி சமயத்தில் ரொம்ப ஹிட் அடிக்கும்!

      நீக்கு
  15. என்னுடைய கருத்து எங்கே போச்சு? இரண்டாவது பாட்டுக்கான கருத்து?

    இரண்டாவது பாட்டு ஆஹா ஸ்ரீராம் கேட்டு ரொம்ப வருஷமாகிடுச்சு. அருமையான பாட்டு ரசித்த பாட்டு இப்பவும் கேட்டு ரசித்தேன் ஜெயசந்திரன் குரலையும்.....கேட்டு ரொம்ப வருஷமாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பாமில் ஒன்றும் இல்ல கீதா... அதில் ராகம் சொல்லி இருந்தீர்களோ?

      நீக்கு
  16. ஆமாம் ஸ்ரீராம் அந்த மூன்றாவது சரணத்தின் முன் வரும் இசைத்துளி வேறு ஒரு பாடலை நினைவுபடுத்துது ....ஆ உங்களுக்கே டக்கென்று பிடிபடலைனா எனக்கு எங்க...நானும் யோசிக்கிறேன் க்கிறேன்.....றேன்....ன்.....

    காணொளியில் வரும் படங்கள் ஆஹா....அபூர்வமான படங்கள் என்று தோன்றுகிறது! எங்கிருந்து எடுக்கிறாங்களோ யுட்யூபில் போடுறவங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் கேட்டுப்பார்க்க வேண்டும் - வெளிப்புற கவன சிதைவுகள் எதுவும் இல்லா நேரத்தில்!

      நீக்கு
  17. இர்ண்டாவது பாட்டு கேட்ட நினைவில்லை. இப்போதுதான் கேட்கிறேன். மிக நன்றாக இருக்கிறது. அந்த வருடங்களில் நான் தமிழ்நாட்டில்தானே இருந்தேன். எப்படி மிஸ் ஆனது இப்பாடல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறொன்றுமில்லை. படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டிருக்கும். எனக்கு எந்தப் படத்தில் என்ன நல்ல பாட்டு இருக்கிறது என்று பார்த்தே பழக்கம்! நன்றி துளஸிஜி.

      நீக்கு
  18. காணவில்லையே நேற்றோடு, அதைத் தேடிப் பார்க்கிறேன் இன்றோடுன்னு ஆ! துளசியுடைய கருத்து முதல் பாடலுக்கானதை காணவில்லை. - கீதா

    முதல் பாடல் மிகவும் பொருத்தமான இன்றைய தினத்திற்கு ஏற்ப போட்டிருக்கிறீர்கள் சிவராத்திரி என்றாலும் அவர் அர்த்தநாரீஸ்வரர்தானே! சக்தி இல்லையேல் எதுவும் இல்லையே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. முதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. இரண்டாம் பாடல் கேட்டதில்லை. முதல் முறையாக கேட்டேன். ஜெயச்சந்திரன் குரல் - ஆஹா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!