வியாழன், 6 ஜூன், 2024

செல்லமே 2/2


மதுரை ரேஸ் கோர்ஸ் ரோடில் வீட்டுப் படிக்கட்டை ஒட்டியே தெரு, தெருவை ஒட்டியே சாலை.  அந்த வழி இரண்டு பஸ் போகும். இரண்டு முறை எம் ஜி ஆர் அந்த வழி, எங்கள் வாசல் வழியே சென்றிருக்கிறார்!  அது ஒரு அனுபவம்!

தெரு வழியே சொக்கிக்குளம் கார்ப்பரேஷன் ஸ்கூல் விட்டு மாணவ மாணவியர் கூட்டமாக வீட்டுக்குப் போவார்கள்.  மோதி படிக்கட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.  மூன்று படிகளில் மேலே வராண்டாவில் அமர்ந்து முதல் படியின் விளிம்பில் முன் கால்களின் முன்னம்பகுதியை மட்டும் மடக்கி உட்கார்ந்து தலை நிமிர்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதே அழகு.  ஆச்சர்யம், ஸ்கூல் விட்டு வருவோரை வேடிக்கை பார்பபதை அது வழக்கமாகி கொண்டிருந்தது!

வால் பசங்கள் தூரத்திலேயே மோதியைப் பார்த்து விட்டு கல் எடுப்பது, குச்சியை வைத்து ஆட்டிக்கொண்டே செல்வது போன்ற விஷமங்கள் செய்வார்கள்.  அவர்களை நான் எச்சரிப்பேன்.  "என் ஒரு சொல்லுக்காய் மரியாதை கொடுத்து அடங்கி உட்கார்ந்திருக்கிறது.  நான் இல்லாத ஒரு நாள் நீங்கள் வந்து மாட்டினால் அடையாளம் வைத்துக் கொண்டு பாய்ந்து விடும்" என்பேன்.

அவர்களைப் பார்த்ததுமே கால் மாற்றி அமைதி இல்லாமல் அசையும் மோதி.  ஆனால் நான் "ப்ச" என்று உதட்டால் ஆட்ச்சேபக் குரல் எழுப்பினால் போதும்.  சட்டென கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து விடும்.

கதவு மூடி இருந்தால் நம்பர் ஒன் நம்பர் டூ போக அது நம்மை அழைக்கும்.  அருகில் வந்து கையைப் பற்றி இழுக்கும்.  கதவுக்காய் சென்று மீண்டும் அருகில் வந்து கையைப் பற்றி இழுக்கும்.  எளிதில் புரிய வைத்து விடும்.  படுத்திருந்தால் முதுகில், கையில் சுரண்டி எழுப்பும்.  கதவைத் திறக்கச் சொல்லும்.  கதவைத் திறந்து விட்டு. "யார் வம்புக்கும் போகாமல் சட்டென முடித்துட்டு நேரா உள்ள வந்துடணும்"  என்று சொன்னால் அது போலவே உள்ளே வந்து விடும்.  இது வெளியே வரும் சமயம் வேறு நாயோ, வம்பிழுக்கும் பசங்களோ இருந்தால் கூட கட்டுப்பாடுடன் உள்ளே வந்து விடும்.  வார்தையைக் காப்பாற்ற உள்ளே வந்து விட்டு, திரும்பி நின்று குரல் எழுப்பி கடுப்பைக் காட்டும்.  'பாயவா' என்று அனுமதி கேட்பது போல!  மறுபடியும்   "ப்ச"தான். 

என் அப்பா மோதியை எப்படி அணுகினார் என்று யோசித்துப் பார்க்கிறேன், நினைவில்லை.  ஆட்சேபித்ததில்லை.  எப்போதாவது தடவிக் கொடுப்பாரோ, என்னவோ!  மோதியும் அதிகம் அவரை அணுகியதில்லை என்றுதான் நினைவு.  ஆனால் நாங்கள் அதை வீட்டுக்குள் வைத்து வளர்க்க அனுமதித்திருந்தார்.

என் அண்ணன் மற்றும் என்  திருமணங்களுக்கு இதையும் அழைத்துச் சென்றபோது ஏகப்பட்ட அனுபவங்கள், விமர்சனங்கள். 

ஜவர்லால் இப்போதும் சொல்வார் "நாங்கள் எல்லாம் முன்னாலேயே சத்திரத்துக்கு சென்று விட, மாப்பிள்ளை வண்டி வந்ததும் பெண் வீட்டார் ஆரத்தியுடன் வந்து காத்திருக்க வேனின் கதவு திறந்தது.  பெண் வீட்டார் ஆரத்தியுடன் ரெடியானதும் முதலில் குதித்தது ஒரு நாய் என்றதும் அதிர்ந்து விட்டார்கள்!"

சத்திரத்தில் மேலே உள்ள ஒரு அறையில் இதை கட்டி வைத்திருந்தோம்.  சுதந்திரமாக சுற்றி வந்த மோதிக்கு இந்தக் கட்டுப்பாடு - அதுவும் பழகாத புதிய இடத்தில - பிடிக்கவில்லை.  குரைத்துக்கொண்டே இருந்தது.  திருமணத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் அது கட்டை அறுத்துக் கொண்டு வேகமாக படி இறங்கி ஓடிவர,  அப்போதே அதைப் பார்த்த மக்கள் பீதியானார்கள்.  கூட்டத்தில் அது புகுந்து உற்சாக ஓட்டம் செய்து குதூகலிக்க,  உறவுகள் மிரண்டது, இங்கும் அங்கும் ஓடியது  இன்னமும் என் கண்முன்னே!  மாப்பிள்ளை வீடு என்பதால் ஒன்றும் சொல்லளவும் முடியவில்லை!  கஷ்டப்பட்டு அதைப் பிடித்து மேலே இழுத்துச் சென்று கட்டினேன்.  பொல்லாதவன் படத்தில் ரஜினியின் குழந்தை ஸ்கூலுக்கு போக அடம்பிடித்து ஆட்டம் காண்பிக்க வெறுத்து போயிருக்கும் சுருளி, ரஜினி வந்து என்ன என்று கேட்டதும் எஜமான் குழந்தையாச்சே என்று எரிச்சலை அடக்கியபடி "பாப்பா ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு சமர்த்தா அடம்பிடிக்குதுங்க" என்பார்.  அது நினைவுக்கு வருகிறது!

குட்டியிலிருந்தே எங்கள் வீட்டில் வளர்ந்தாலும், சுகுமார்தான் அதன் முதல் பிரியம்.  அடுத்து நான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.  மாமா, அப்பா சற்று தூரத்தில்!  அப்பாவுக்கு மோதி தன்னை முதலிடத்தில் வைக்கவில்லை என்று தோன்றி இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.  ஏனென்றால் இரண்டாவதாக ஒரு செல்லம் வந்தபோது அதை மிகவும் நேசித்தார்.  எனக்கு சென்னைக்கு மாற்றலான சமயம் அதை நான் கண்டெடுத்து வீட்டில் விட்டேன்.  மோதி அதை ஜாக்கிரதையாக அணுகியது.  எதிர்க்கவில்லை, குரைக்கவில்லை, கடிக்கவில்லை.  ஆனால் அந்த புது வரவுக்கு ஏனோ மோதி கடைசிவரை எதிரியாகவே இருந்தது.  இரண்டின் ஜென்மமும் எங்கள் வீட்டில் கழிய வேண்டும் என்பது இறைவன் கட்டளை போலும்.  நான் உடனடியாக சென்னை வந்துவிட, இரண்டாவது - அதற்கு சாத்தி என்று ரைமிங்காக பெயர் வைத்திருந்தார் என் அம்மா - முரடாக வளர்ந்தது.  ஓவர் செல்லம் உடம்புக்கு ஆகாமல் போனது போலும்.  யாரையும் லேசில் பக்கத்தில் அணுக விடாது!

சாத்தி வருவதற்கு முன் உள்ள கதைக்கு வருகிறேன்.  மோதி ராத்திரி என் அருகில்தான், என் படுக்கையில்தான் படுக்கும்.  போர்த்திக் கொண்டு படுத்திருந்தால் போர்வையின் மீது போர்வையை நகர்த்த விடாமல் படுத்திருக்கும் என்பதோடு, கொஞ்ச நேரம் கழித்து ஒரு கையால் போர்வையைத் தூக்கி, உள்ளே வந்து என் கையில் தலை வைத்து படுத்து தூங்கி விடும்!  நான் ஆட்சேபித்திருந்தால் தனியே போய்ப் படுத்திருக்கும். பழகி இருக்கும்.  நான் செய்ததில்லை. மாமா சொல்வார் "அந்த போர்வைக்குள் ரெண்டு நாய் படுத்திருக்கு"

அப்படி படுத்திருந்த ஒரு இரவில் என்ன கனவு கண்டதோ, என்னவோ தெரியவில்லை, என் வலது கையின் நடுவில்..  மணிக்கட்டுக்கு மேல், முழங்கைக்கு கீழே சதைப் பகுதியில் வாயை வைத்து கடித்தது.  விழித்துக் கொண்டு மோதி மோதி என்கிறேன்.. கண்கள் மூடியிருக்க,  சில நொடிகள் கடித்த வண்ணம் இருந்தது.  இன்னொரு கையால் அதன் வாயைப் பற்றி கையை விடுவித்துக் கொண்டதும் அதுவும் விழித்துக் கொண்டது.  வலி ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம்.  எழுந்தேன்.  மோதியா...  குற்ற உணர்வில் தலை குனிந்து எழுந்து ஒரு மூலையில் முடங்கியது பாருங்கள்...

இரண்டாவது சந்தர்ப்பம் அது சாப்பிடும்போது போய் அதன் தட்டில் கைவைத்து விட்டேன்.  எவ்வளவு பழகிய நாயாய் இருந்தாலும் அது சாப்பிடும்போது முன்னறிவிப்பில்லாமல் பின்னாலிருந்து தட்டில் கை வைக்கக்கூடாது.  சாப்பிட்டு முடித்து விட்டு அது அதற்கு முந்தைய வேளை போட்டு, மீந்து, காய்ந்திருந்த சோற்றுப் பருக்கைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் பரிதாபப்பட்டு "அச்சச்சோ...   காய்ந்த சோறை எல்லாம் சாப்பிடுதே பாவம்.."  என்று தட்டை நகர்த்தி வசதி செய்யப் போனேன்.  'வவ்'  என்று ஆக்ரோஷமாக ஒரு நொடியில் என் இடது கை நடுவிரலையும் ஆள்காட்டி விரலையும்  ஒரு பிடிபிடித்து விட,  ஆள்காட்டி விரலிலிருந்து அதன் பல்லை நான் இன்னொரு கைவைத்து விடுவிக்க வேண்டியதாய் இருந்தது.  ரத்தம்!  மறுபடியும் மோதி குற்ற உணர்வில் தவித்துப் போனது.  நான் அதனுடன் ஒரு வாரம் வரை பேசவில்லை.  அது முதல் நாள் சாப்பிடவில்லை.  அப்புறம் மெதுவாக சாப்பிட தொடங்கியது.  நான் அதை கண்டு கொள்ளாததால் என்னைக் கண்டதும் அது எழுவதும், வாலாட்டுவதும் (தரைப்பார்த்து, தலை குனிந்து) நான் கண்டு கொள்ளாமல் போவதும் தொடர்ந்தது.  அப்புறம் மெதுவாய் கண்டு கொள்ளத் தொடங்கினேன்.  கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை நார்மலானது.

முதல் முறை தொப்புளை சுற்றி 16 ஊசிகள் போட்டுக் கொண்டேன்.  இரண்டாவது முறை ஊசி போட்டுக் கொண்டு ஆறு மாதங்கள் ஆகாததால் 8 ஊசி மட்டும் போட்டுக் கொண்டேன்!

ஏனோ (!)அப்புறம் மோதி என்னை கடிக்கவில்லை.  நானும் எச்சரிக்கையாய் இருந்தேன்.  ஒருமுறை கடிவாங்குவேன் என்று எண்ணிய ஒரு சந்தர்ப்பத்திலும் அது மிக ஜாக்கிரதையாய் என்னை கடிக்காமல் தவிர்த்தது.  நான் வளர்த்த இன்னொரு நாயுடன் அது ஆவேசமாக குடுமிப்பிடி சண்டை போட்டபோது பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வேறு வழி இல்லாமல் நடுவில் புகுந்து விலக்கிய தருணம் அது.  எனக்கு கல்யாணம் ஆனதும் மதுரையில் வீடு மாற்றுகிறேன் என்று இரண்டையும் சென்னைக்கு என்னிடம் அனுப்பி விட்டார் அப்பா.  

புதிய வீட்டிலும், அப்புறம் சென்னையிலும் மோதிக்கு அதனுடன் ஜோடி சேர்ந்திருந்த சாத்திக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.  வீட்டுக்குள் கட்டி போடப்பட்டு அவற்றின் சுதந்திரம் முடக்கப்பட்டிருந்தது.  குறுகிய எல்லைக்குள் அவற்றின் வாழ்க்கை நடந்தது.  அது நான் அவற்றுக்கு செய்த கொடுமை என்று இன்றும் எண்ணுகிறேன்.  அதனாலேயே அவற்றின் வாழும் நாட்கள் குறுகியது என்றும் நினைக்கிறேன்.  மதுரையில் பெரிய ஹாலில் புதிய வீட்டில் ஜன்னலில் அது கட்டப்பட்டு அதன் கண்ணெதிரே நீண்ட ஹாலின் கொஞ்ச தூரத்தில் நான் படுத்திருப்பதை மோதி அதிர்ச்சியுடன் பார்த்திருக்கும்.  இரவு படுக்கும் சமயம் கம்பியை ஆட்டி ஆட்டி, பாதி எழுந்து நின்று குழைவான குரலில் என்னை அழைத்திருக்கிறது.  அது இருக்கும் இடத்தில் Fan கிடையாது.  ஏனோ அதை என்னுடன் அப்புறம் படுக்க விடவில்லை நான்.  அதற்கு சுதந்திரம் கொடுக்காத என்னை கடவுள் மன்னிக்கட்டும்.

ஓரிரு வருட இதைவெளியில் இரண்டும் எங்களை விட்டுப் பிரிந்தன.  திருமணத்துக்குப் பின் இரண்டுக்கும் போதிய கவனம் நான் கொடுக்கவில்லை என்பதே காரணம் என்பது என் கணிப்பு.  அந்த நிமிடங்களை, நாட்களை சொல்ல முடியாது.  ஏதோ நெருங்கிய உறவு போனது போல துக்கம் மனதை பிசைந்தது. ஊரிலிருந்து அப்போ தொலைபேசியில் தழுதழுத்தார்.  அம்மா என்னைத் தேற்றினார்.  இரண்டாவது செல்லத்தை புதைத்தபோது எங்கள் அலுவலக காவலாளி உடனிருந்தார்.  குவார்ட்டர்ஸில் வீடு.  என் தோளை அணைத்தபடி அதட்டி அதட்டி என்னை சமாதானப் படுத்தினார்.  அவர் பாணி அது.  கடன் கேட்டால் கூட அதட்டல் ப்ளஸ் அதிகாரத்துடன் கேட்பார்!

இந்த இரண்டு செல்லங்களும் மறைந்த பிறகு பல வருடங்கள் எதுவும் வளர்க்காமல் இருந்தேன்..அப்புறம் பிரௌனியை வளர்க்கத் தொடங்கி அதனால் ஏற்பட்ட சில அனுபவங்களால் அதை கைவிட்டதை 'நாய்மனம்' பதிவில் கதை போல சொல்லி இருந்தேன்.  அப்புறம் வந்த பூனைக்குட்டி ஒன்று என்னுடன் பழகிய பாவத்திற்காக மரணதண்டனை அனுபவித்தது.  கீழ்வீட்டில் இருந்த இதயமில்லாத ஒரு குடும்பத்தால் நிறைவேற்றப்பட்ட தண்டனை அது.  அதையும் எழுதி இருக்கிறேன்.

இப்போது மருமகள் 'அப்பா..  நாய் வளர்க்கலாமா?' என்று கேட்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.  எந்த ஒரு இடத்துக்கும், நல்லதோ, கெட்டதோ எல்லோரும் கிளம்பி சென்று விட முடியாது.  வீட்டில் இதற்கொரு ஆள் இருக்க வேண்டும்.  என் மாமனார் இறந்தபோது அந்த சோகத்தோடு கூட செல்லத்தை யாரிடம், எப்படி விட்டுவிட்டுப் போவது என்று கேள்வி வந்தது.   என் நண்பன் ஒருவனை வீட்டில் இதற்காக இருக்கச் செய்தேன்.  இதைப் பார்த்துக் கொள்ள இப்போது நிறைய ஹோம்ஸ் வந்து விட்டாலும், என் தங்கை தான் வளர்க்கும் செல்லத்தை அங்கே விட்டு விட்டு எங்கும் செல்லக் கூட மனம் இல்லாமல் இருக்கிறார்.   

எல்லாவற்றையும் விட வளர்ப்பது கூட எளிது.  பிரிவது கடினம்.

==========================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

- நியூயார்க்: உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி தங்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி விட்டதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் மேல் நிற வேற்றுமையை வலியுறுத்துவதாக வழக்கு தொடர்ந்திருக்கும் மூன்று கருப்பின பயணிகள்.

- சென்னை: நடிகர் கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள். சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்வதற்காக வந்த நடிகர் கருணாஸின் கைப்பையை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது இரண்டு டப்பாக்களில் தலா இருபது துப்பாக்கி குண்டுகள் வீதம் நாற்பது குண்டுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும், அதற்கான லைசென்ஸ் உள்ளது என்றும், அதில் பயன்படுத்த வாங்கிய குண்டுகள் அவை என்றும், அவைகளை வீட்டில் வைத்துவிட்டு வர மறந்து விட்டதாகவும் விளக்கமளித்தவர், அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார். இருந்தாலும் அந்த துப்பாக்கி குண்டுகளோடு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட, திருச்சிக்கு காரில் சென்றிருக்கிறார்.

- உத்திரபிரதேசம் லக்னோவில், மருத்துவர் ஒருவர் வீட்டில் திருட வந்த திருடன் ஏ.சி.யை போட்டுக்கொண்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்த அக்கம்,பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஸ்தலத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவனை எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். - சிரிப்புத் திருடன்!

- அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உயர்ந்தார் அதானி!

- திருவனந்தபுரம்: கணவனோடு வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மோட்டார் பைக்கில் வந்த ஒருவன் அறுத்துச் செல்ல முயன்றிருக்கிறான். அந்த முயற்சியில் சங்கிலி துண்டு,துண்டாகி விட்டது. அஸ்வதி என்னும் அந்தப் பெண் அவனுடைய கழுத்தையும், சட்டைக் காலையும் இறுக பற்றிக் கொண்டுருக்கிறார். மோட்டார் பைக் ஆசாமி அந்தப் பெண்ணையும் இழுத்துச் சென்றிருக்கிறான், ஆனால் பிடியில் தளர விடாத அஸ்வதி அவனை பைக்கிலிருந்து கீழே தள்ளியிருக்கிறார். இதை பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு வந்த பொது மக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து அவன் விழுங்க முயற்சித்த சங்கிலியை மீட்டுத் தந்திருக்கின்றனர் - வீர மங்கை


==========================================================================================

போகன் சங்கர் இப்போதும் வலையில் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.  Face Book ல் அவர் எழுதியதிலிருந்து...

1) ஒரு இளம் எழுத்தாளருக்கு நான் நேற்று சொன்ன வாழ்க்கை அறிவுரை. நான் இளம் எழுத்தாளராக இருந்தபோது ஒரு பெண் எனக்கு கொடுத்த அறிவுரை அது.

"எல்லாத்துலயும் ஒரு' ஓ ஹென்றி ட்விஸ்ட் 'வச்சி எழுதுகிற உன்னோட பழக்கத்தை நீ கொஞ்சம் கஷ்டப்பட்டுக்கட்டுப்படுத்திக்கணும். உன்னோட காதல் கடிதத்தைக் கூட நான் திக்கு திக்குன்னு அடிக்கிற ஹார்ட்டோட தான் படிக்க வேண்டி இருக்கு!"

&&&&&&&&&&&&&&&
2) "பாஸ் எக்ஸிட்போல் பத்தி எல்லாம் ஒன்னுமே நீங்கள் சொல்ல மாட்டேங்கறீங்களே?"

" நான் இவங்க போடுற மிக்ஸிபோல் எல்லாம் நம்புறது இல்ல பாஸ். நானே சொந்தமா எனக்குத் தெரிஞ்ச பத்து பேர் கிட்ட ஒரு எக்ஸிட் போல் நடத்துனேன்."

"சரி?"

"அதுல ஒன்பது பேர் ஓட்டே போடல"

============================================================================================

                                

இதுவும் முகநூலில் படித்ததுதான்.  மம்மூட்டியின் கருத்து சரியானதே என்றாலும் எம் ஜி ஆரை மக்கள் 37 வருடங்கள் சென்றும் இன்னமும் மிக பலமாக, பிரியத்துடன் நினைவு வைத்திருக்கிறார்கள்.

“மக்களிடம் எதிர்பார்க்க முடியாதது...” - நடிகர் மம்மூட்டி பதில் வைரல்
சென்னை: “உலகம் அழியும் வரை மக்கள் தங்களை நினைத்துக் கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. யாருக்கும் அப்படி நடக்கப் போவதில்லை. மக்கள் உங்களை நினைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்று நடிகர் மம்மூட்டி பேசியுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு மம்மூட்டி அளித்த பேட்டியின் சிறு பகுதி வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். காரணம் மம்மூட்டியின் கருத்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்தப் பேட்டியில், “நடிகர்கள் ஒரு கட்டத்தில் போதும் என முடிவெடுத்து திரையுலகிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். நீங்கள் அந்த ‘போதும்’ என புள்ளிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை. நான் ‘போதும்’ என அயற்சி அடைந்ததாக நினைக்கவில்லை. என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டிருப்பேன்” என்றார்.
‘இறுதி மூச்சுவரை சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன் என்கிறீர்கள். மம்மூக்காவை இந்த உலகம் எப்படி நினைவுகூர வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “எத்தனை நாட்கள் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம், பத்து வருடம், 15 வருடம் அவ்வளவு தான். உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாருக்கும் அப்படி நடக்கப்போவதில்லை.
மிகச் சிறந்த நபர்கள் கூட மிகச் சொற்பமாகவே நினைவுக்கூரப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன். அப்படியிருக்கும்போது எப்படி என்னை காலம் கடந்து நினைவுகூர்வார்கள்; அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் மறைந்துவிட்ட பிறகு மக்களுக்கு உங்களை எப்படி தெரியும்? உலகம் அழியும் வரை தங்களை நினைத்து கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் உது உண்மையில்லை” என்றார்.
- தி இந்து தமிழ் திசை

ஸ்டனிஸ்லாஸ் பெரியநாயகம்
================================================================================================

எங்கே மழை என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  எங்கே கவிதை என்று குரல் கேட்டது...

சாதி பார்த்து தொகுதியில் 
வேட்பாளரை நிறுத்தும் 
அரசியல்வாதிக்கு 
தெரிவதில்லை 
மரமும் மழையும் 
ஒரு சாதி என்று..
மரங்கள் இல்லா தொகுதிகளில் 
மழை பொழிய 
மறுத்து 
வேறிடம் நகர்கிறது மேகக்கூட்டம்.
பசுமரங்களை இழந்து 
அபார்ட்மெண்டுகளாலும் 
அகண்ட சாலைகளாலும் 
நிறைந்த நகரம் 
மழையில்லா அனலில் 
நரகமாகிறது.
அடுத்த வருடம் முதல் 
ஆக்சிஜனுக்கும் பஞ்சம் வரலாம் 
அரசியல்வாதிகள் 
அவர்கள் வாக்குறுதியில் 
அதனைக் கூட 
இலவசமாக தர முன்வரலாம்.
இதற்கெல்லாம் 
ஆதிகாரணம் அவர்கள்தான் 
என்பதை மறந்து 
முட்டாள் ஜனங்கள் 
அப்போதும் அவர்களுக்கே 
வோட்டளிக்க முந்தலாம் 

============================================================================

மேலே நான் எழுதி இருந்த கவிதையில் முதல் நான்கு அடிகளை மட்டும் எடுத்து குடும்ப க்ரூப்பிலும் எங்கள் பிளாக் வாட்சாப் க்ரூப்பிலும் போட்டு, "என்று தொடங்கி மேற்கொண்டு 20 வரிகள் எழுதி உள்ளேன்.  என்னவாக இருக்கும்...?" என்று கேட்டிருந்தேன்.   ரஞ்சனி அக்கா வழக்கமான மசாலாவாக இல்லாமலிருந்தால் சரி என்று சொல்லி இருந்தார்.  சுஜாதா யக்ஞராமன் கீழே உள்ள கவிதையை எழுதி இருந்தார்!

சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும் 
அரசியல்வாதிக்கு தெரிவதில்லை

சாதி இரண்டொழிய வேறில்லை... 

பஸ்ஸில் காசில்லாமல் போகும் பெண்சாதி 
அந்த பஸ் காசில் buzz காணும் ஆண்சாதி 

சாதி இரண்டொழிய வேறில்லை... 

AC காரில் அப்பன் காசில் பெரிய பள்ளியில் படிக்காத முட்டாளும்

அப்பனிடம் இல்லாத காசினால் AC டவுசர் போட்டு பட்டினியோடு பட்டமும் வாங்கும் puththisaaliyum... 

சாதி இரண்டொழிய வேறில்லை... 

ரேஷன் கார்டில் சர்க்கரை வாங்காமல் வேஸ்ட் பண்ணும் மிடில் கிளாஸ்

அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் கார்டு இல்லாத கீழ்த் தட்டும்... 

சாதி இரண்டொழிய வேறில்லை... 

வீடு ஒழித்து வேலை தேடி நாயாய் அலைந்து ஒட்டில்லாத ஊரில் வாழும் ஐடி

வீட்டை விற்றேனும் தலைவனுக்கு நாலு கள்ள ஓட்டு போடும் கண்மணி

சாதி இரண்டொழிய வேறில்லை... 

தேர்தலும் வாக்குறுதியும் பேச்சில் மட்டுமே உள்ள கட்சியும் தலைவனும்

வயிற்றில் பசியும் கண்ணில் நம்பிக்கையும் மட்டுமே உள்ள தொண்டனும்

சாதி இரண்டொழிய வேறில்லை... 

நாட்டைப் புரிந்து கொள்ளாத அரசியலும்

அரசியலால் சூறையாடப் பட்ட நாடும்

நமக்கு தெரிகிறது... 

சாதி இரண்டொழிய வேறில்லை
அரசியலால் கற்றதும் பெற்றதும் ஒன்றுமில்லை

========================================================================================



கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமைய வேண்டும் என சிலுக்கு ஆசைப்பட்டார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா கொடுத்தார். இப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் முதல் பலரும், சிலுக்கு இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அவருக்கும் அந்த ஆசை இருந்தது.
ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை கவர்ச்சி கன்னியாக மட்டுமே பார்த்தது. கிராமப்புற வேடங்களிலும், கவர்ச்சி நடனமாடும் பெண்ணாகவும் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அவருக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா. அவரின் படங்களில் நகரத்து பெண்ணாகவும், பணக்கார பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்திலும் கமல் மீது ஆசைப்படும் பணக்கார பெண்ணாக வருவார். பொன்மேனி உருகுதே என்கிற பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். ஒருமுறை இந்த பாடலில் நடித்தது பற்றி பேசிய சிலுக்கு ‘பெரிதாக உடை எதுமில்லமால், காலில் செருப்பு கூட இல்லாமல், ஊட்டி குளிரில் அந்த பாடலில் கமலுடன் நான் நடனமாடியபோது கதறி அழுவேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடலாம்’ என்று கூட நினைத்திருக்கிறேன்.
ஆனால், அப்பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு அற்புதமாக இருந்தது. தியேட்டரில் அந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தபோது நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோனது. அந்த படத்திற்கு பின் அதுபோல எனக்கு நிறைய நல்ல வேடங்களும் கிடைத்தது’ என சில்க் ஸ்மிதா கூறியிருக்கிறார்.

===================================================================================

பொக்கிஷம்  :





111 கருத்துகள்:

  1. முன் கால்களின் முன்னம்பகுதியை மட்டும் மடக்கி உட்கார்ந்து தலை நிமிர்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதே அழகு. //

    ஆஹா! வேடிக்கை பார்க்கறது அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!

    எனக்கு கண்ணழகி, ப்ரௌனி நினைவு வந்தது. ரெண்டும் நல்லா வேடிக்கை பார்க்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவுமே இப்படித்தானா அல்லது அவை சமீபத்தில் வளர்த்துக்கொண்ட அறிவா இவை என்று ஆச்சர்யம் வரும்.

      நீக்கு
  2. ஆச்சர்யம், ஸ்கூல் விட்டு வருவோரை வேடிக்கை பார்பபதை அது வழக்கமாகி கொண்டிருந்தது!//

    ஸ்ரீராம் பெரும்பான்மை அப்படித்தான். நாங்க செல்லமா மலையாள ஸ்டைலில் "வாய் நோக்கி" என்று கலாய்ப்போம்!

    அவங்களுக்கு ஏதாச்சும் வம்பு சிக்குதான்ற ஆராய்ச்சி ஆர்வம், அப்பத்தானே லொள் னு குரைச்சு வீரத்தைக் காட்ட முடியும்! ஹாஹாஹா பொதுவாவே curiosity, alertness கூடுதலோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று கவனிக்கும் போலும்.  உடற்பயிற்சி செய்வோரின் கூட அமர்ந்து அதே போல செய்து கலாய்ப்பதை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  3. இதுக்கு அடுத்த பாரா டிட்டோ! அதான் முந்தைய கருத்தில் சொன்ன கடைசி வரி!!!
    அடுத்த வரிகளும் டிட்டோ! உடல் மொழியால் குரலால் புரிய வைக்கும். அந்த பாராவும் டிட்டோ! நம்ம வீட்டிலும் அனுபவம் உண்டே. நம்மை ஓனர் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால் அல்லது தெருவில் உள்ள செல்லங்கள் கூட சாப்பாடு வைப்பவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படும். அதை இங்கு பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அவை என்ன சொல்ல வருகின்றன என்று நமக்கு புரிய வைத்துவிடும்.

      நீக்கு
  4. "அந்த போர்வைக்குள் ரெண்டு நாய் படுத்திருக்கு"//

    சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்.

    பல நினைவுகள் நினைவுக்கு வருது. நல்ல அனுபவங்கள் நினைவுகள் செல்லங்களோடு. மிகவும் கட்டுப்பாடோடு இருப்பாங்க. சின்னப் பிள்ளையிலேயே அப்படி வளர்த்ததால்.

    மிச்சத்துக்கு அப்பால வாரேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி. நேற்றுதான் உங்களைக் காணோமேன்னு யோசிச்சேன்.

      நீக்கு
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு DD தொடர்பில் வந்தார்.  திண்டுக்கல்லுக்கு வாருங்களேன் என்று அழைத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் நலமாக இருக்காரா? தந்தையார் மறைவுக்குப் பின் இணையம் பக்கம் வருவதில்லையோ?

      நீக்கு
    2. நலம் என்றே தெரிகிறது, நம்புகிறேன்.  இப்போதைக்கு இணையம் பக்கம் வரும் அளவு அவருக்கு நேரம் இருக்கும் என்று தோன்றவில்லை.

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் நானும் அறிந்தேன் என்னுடனும் தொடர்பில் வந்தார். அவர் நலமே நெல்லை. ஆனால் கொஞ்சம் பிஸி.

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. நீங்கள் வளர்த்த செல்லத்தின் உணர்வுகளை விவரித்திருப்பது கண்டு உண்மையிலேயே ஆச்சரியத்துடன் படித்தேன். அதன் செயல்கள் நல்ல புத்தி கூர்மை உள்ளனவாக உள்ளது. இன்றைய பதிவில் இன்னமும் மீதியையும், மற்ற எல்லா பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    வீட்டில் வெளி நாட்டிலிருக்கும் இளைய மகன் வந்திருப்பதால் கடந்த நான்கு நாட்களாக ஏதோ வேலையிலேயே சரியாகப் போய் விட்டது. பதிவுலகிற்கே வர இயலவில்லை. மதியம் வாக்கில் வர முயற்சிக்கிறேன். என்னை மறவாதிருக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. இளைய மகன் வந்திருக்கிறாரா? என்ஜாய் கமலா அக்கா... மெதுவா வாங்க...

      நீக்கு
    2. மகனுடன் பொழுதுகள் இனிமையாக இருக்கட்டும் .

      நீக்கு
    3. அங்கு கிடைக்காதவற்றை மகனுக்குச் செய்துதரணும், அவனுடன் பேசிக் களிக்கணும். அவனுக்கு என்ன செய்துதரலாம், வேறு என்ன தேவை என்று யோசிக்கணும்.... உண்மையிலேயே பிசியாகத்தான் இருக்கும். இங்கும் அப்படித்தான் நடக்கிறது இரண்டு நாட்களாக

      நீக்கு
    4. கமலாக்கா, முதலில் மகன், குடும்பம் அப்புறம் தான் இங்கே!!! பதிவுகள் இருக்கும். ஆனா நம்ம பசங்களோட நேரம் செலவழிப்பதுதான் ரொம்ப முக்கியம். அதுவும் வெளியூரிலிருந்து வரப்ப...அது precious moments!

      கீதா

      நீக்கு
    5. என் அன்பான நட்புறவுகளுக்கு வணக்கங்கள் .

      உங்கள் அனைவரது பதில் கருத்துக்களுக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன். நான்கு நாட்களாக நேரம் சரியாக இருக்கிறது. நன்றி.

      இது நூற்றி ஒன்றாக இருக்கட்டுமேயென நேரம் கிடைத்த இவ்வேளையில் வருகை தந்து விட்டேன். நாளையிலிருந்து விரைவில் வர முயற்சிக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. செல்லங்களின் நினைவுகளை நன்றாக சொன்னீர்கள்.
    அவை எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனமாக பார்க்கும்.

    மனிதர்களை நன்றாக எடை போடும். தன்னை வளர்ப்பவருக்கு கீழ்படிந்து நடக்கும் குணம் உண்டு. அன்பு, கரிசனம் நிறைந்தது.
    தன்னை கவனிக்கவேண்டும் என்று குழந்தை போல நினைக்கும்.

    அன்று ஒரு நாள் இங்கு ஒருவர் வளர்க்கும் செல்லத்திற்கும் குழந்தைக்கும் கடுமையான போட்டி யார் அம்மாவின் மடியில் அமர்வது என்று.

    வெளியில் போய் விட்டு வந்தால் அவை வளர்ப்பவர் மேல் விழுந்து கொஞ்சும், நிறைய பேசும் .

    //ஓரிரு வருட இதைவெளியில் இரண்டும் எங்களை விட்டுப் பிரிந்தன. திருமணத்துக்குப் பின் இரண்டுக்கும் போதிய கவனம் நான் கொடுக்கவில்லை என்பதே காரணம் என்பது என் கணிப்பு. அந்த நிமிடங்களை, நாட்களை சொல்ல முடியாது. ஏதோ நெருங்கிய உறவு போனது போல துக்கம் மனதை பிசைந்தது. ஊரிலிருந்து அப்போ தொலைபேசியில் தழுதழுத்தார். அம்மா என்னைத் தேற்றினார்//

    படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போனது. பிரிவது மிகவும் கஷ்டம்.
    அதன் ஆயுட் காலம் 13 வருடங்கள் தானே? ஒரு சில அதிகமாக இரண்டு வருடம் வாழும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

    எனக்கு தூரத்திலிருந்து பார்க்க பிடிக்கும்.
    Bluey என்ற தொலைக்காட்சி தொடர் பார்க்கிறேன் பேரனுடன். மிகவும் நன்றாக இருக்கிறது.
    https://www.youtube.com/watch?v=eTPD5nCuxps நீங்களும் நேரம் இருந்தால் பாருங்கள் .
    இங்கு குழந்தையை போல வளர்க்கிறார்கள், அவற்றும் சகல வசதிகளும் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சித் தொடர் லிங்க் குறித்துக் கொள்கிறேன் அக்கா.  

      இரண்டுமே தன் முடிவு நேரத்தில் என்னைத் தேடின.  இரண்டாவது முரடு.  நானே, அது அனுமதிக்காமல் அதன் அருகில் போக முடியாது, தொட முடியாது.  எனினும் அது கட்டை அறுத்துக் கொண்டு அல்லது விடுவித்துக் கொண்டு என்னைத் தேடி மாடிக்கு வந்தது.  மொட்டை மாடிக்குச் சென்றது.  பின்னாலேயே போனேன்.  அங்கு அமர்ந்ததும் நானும் அமர்ந்தேன்.  அருகில் வந்து மடியில் தலை வைத்தது.  கொஞ்சம் கொஞ்சமாக அது இல்லாமல் போனதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

      நீக்கு
  10. மோதி புராணம் முற்றும். அடுத்து பூனை புராணம் ஏதாவது ஆரம்பிக்கப் போகிறீர்களா?
    இந்த வாரக் கதம்பத்தில் கேரள வாசனை கொஞ்சம் உள்ளதே. திருவனந்தபுரத்தில் சங்கிலி பறிப்பு செய்தி, மம்மூட்டி பேட்டி.

    நியுஸ் ரூமில் தேர்தல் செய்திகளைத் தவிர்த்தர்க்கு நன்றி.

    தற்போதே மம்மூட்டி பற்றி மற்ற மாநிலத்தவர் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். NTR பற்றி யாராவது நினைவு கூறுகிறோமோ? அவர் கூறியது உண்மைதான்.
    கவிதை சுமார். மற்ற சாதி இரண்டொழிய வேறில்லை பரவாயில்லை.
    சாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும் இரண்டு சாதிகளிலும் பல உட்பிரிவுகள் முளைத்து சண்டை போடுகின்றனவே. ஆனாலும் சில கருத்துக்களைக் கூறும்போது கவிதை வடிவம் மாறிவிடுகிறது. துணுக்கு ஆகி விடுகிறது.

    ஆஹா சிலுக்கு? ஹூம் என்ன சொல்ல? மயக்கும் கண்கள்.
    பொக்கிஷ ஜோக்குகள் சோ சோ ரகம் தான். ST புதிதாய் ஒன்றில்லை. தற்போதும் நடக்கக் கூடியதே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKC ஸார்...   இந்த வாரம் உங்களை அவ்வளவு கவரவில்லை என்பது தெரிகிறது.  நன்றி.

      நீக்கு
    2. கவிதை துணுக்கு ஆகிவிடுகிறது என்று நீங்கள் சொல்லி இருப்பது சரி. நானும் நினைத்தேன்.

      நீக்கு
    3. //நியுஸ் ரூமில் தேர்தல் செய்திகளைத் தவிர்த்தர்க்கு நன்றி.// சாதாரணமாகவே மிகவும் பரபரப்பான செய்திகளை பகிர்வதில்லை. உ.ம். ஐ.பி.எல். செய்திகள்.

      நீக்கு
  11. //உத்திரபிரதேசம் லக்னோவில், மருத்துவர் ஒருவர் வீட்டில் திருட வந்த திருடன் ஏ.சி.யை போட்டுக்கொண்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்//

    கோடையின் தாக்கம் அப்படி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று என் ஆஸ்தான ஆட்டோக்காரருடன் பேங்க் சென்றிருந்தேன்.  அவரும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்.  வேலை சற்று நேரம் இழுத்தது.  கிளம்பும்போது 'இன்னும் கொஞ்ச நேரம் கூட இருக்கலாம்னு தோணுது  ஸார்...   ஏஸி சூப்பர்' என்றார்.  வெளியில் வெயில் தகித்தது.

      நீக்கு
    2. ஆண்ட்டி கிளைமேக்ஸாக நாங்கள் வீடு திரும்பி அரை மணியில் வானம் கறுத்து சூழல் குளிர் நிலைக்குப் போனது, மதியம் நல்ல மழையும் வந்தது!

      நீக்கு
  12. கவிதை நன்றாக இருக்கிறது.

    //அபார்ட்மெண்டுகளாலும்
    அகண்ட சாலைகளாலும் //

    மக்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு, போக்குவரத்து வசதிக்கும் மரங்கள் அழிக்கப்படுகிறது. அரசியல் வாதியை மட்டும் குற்றம் சொல்லி என்ன செய்வது?
    நகரமயமாக்கலின் விளைவு வெப்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  நாம் அதிகம் உபயோகிக்கும் அலைபேசி, குளிர்சாதனப்பெட்டி ஆகியவையும் இயற்கைக்கு எதிரிகள்தானே?

      நீக்கு
  13. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. //ஒருமுறை இந்த பாடலில் நடித்தது பற்றி பேசிய சிலுக்கு ‘பெரிதாக உடை எதுமில்லமால், காலில் செருப்பு கூட இல்லாமல், ஊட்டி குளிரில் அந்த பாடலில் கமலுடன் நான் நடனமாடியபோது கதறி அழுவேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடலாம்’ என்று கூட நினைத்திருக்கிறேன்.//

    சினிமாவில் பாடல் காட்சிகளில் குளிர் பிரதேசங்களில் நடிகை குறைந்த ஆடையும், ஆண்கள் கோட் சூட், குளிர் ஆடைகள் அணிந்து இருப்பார்.
    நடிகைகள் பாடு திண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வேறு சில நடிகைகளும் சொல்லி இருக்கிறார்கள்.  ஆனால் இந்தக் காட்சியில் கமலும் சில்க்குக்கு இணையாக உடையைக் குறைத்திருப்பார்!!

      நீக்கு
  16. பொக்கிஷ பகிர்வு கொஞ்சம் சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  17. சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஒரு தடவை போட்டு விட்டால் அதே வரி அடுத்து வரும்
    இடங்களில். சா.இ.வேறில்லை -- என்று போட்டிருந்தால் சுஜாதாவிடம் பாடம் கற்ற நன்றியைக் காட்டியிருக்கலாம்.

    அப்பப்போ இப்படி எழுதுவதில் ஏதாவது மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும்.

    ஒரே மாதிரி என்றில்லாமல் இருந்தால் எபி எப்பொழுதுமே வித்தியாசமாக மிளிறும்.

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. அது ஒருவகை. இது ஒவ்வொரு இடத்திலும் வருவதால் அந்த வார்த்தை வலியுறுத்தப்படுகிறது. இது ஒரு வகை.

      நீக்கு
  19. அதானி சமாச்சாரம்.

    அவர் போய் இவர் வந்தார் என்றால் ஸ்ரீமான் பொதுஜனத்துக்கு என்ன சுவாரஸ்யம்?

    யாருக்கு இதில் பெருமை என்று திரை மறைவுச் செய்தி எதையாவது சொன்னால்
    இதுவே நியூஸ் வேல்யூ
    பெறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாருக்கு இதில் பெருமை என்று திரை மறைவுச் செய்தி எதையாவது சொன்னால்
      இதுவே நியூஸ் வேல்யூ
      பெறும்.// சரியாக புரியவில்லை ஜீ.வி. சார்.

      நீக்கு
  20. ஜாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும்
    என்ற கவிதை ஆரம்ப வரிகள், மூன்றெழுத்து கட்சிக்கு நல்ல -----.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் கட்சிக்குமே பொருந்துமே....

      நீக்கு
    2. சமீபத்திய தேர்தலில்
      இதை வலிய அமுல் படுத்தியது ஒரே ஒரு மூன்றெழுத்து கட்சி மட்டுமே.

      நீக்கு
  21. ஸ்ரீராம், பொதுவாகவே செல்லங்களுக்கு குறிப்பா பைரவ செல்லங்களுக்குச் சாப்பாட்டை நாம எடுத்துருவமோன்னு ஒரு இன்செக்யூர்ட் உணர்வு இருக்குமாம். எங்க வீட்டு பெண்களில் கண்ணழகிக்கு மட்டும் ஓரிரு சமயங்களில் முதலில் இருந்தது. அப்புறம் இல்லை நாம அதுக்கு நலல்து செய்யறோம்னு அதுங்க கிட்ட பேசிக்கிட்டெ செய்யறப்ப புரிந்துவிடுகிறது. ஆனா பொதுவா சொல்லப்படுவது ஆண் செல்லங்களை விட பெண் செல்லங்கள் முரட்டுத்தனம் கம்மி என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி பாடல் அவற்றுக்குத் தெரியுமோ என்னவோ.....  நாம்தான் கொடுக்கிறோம் என்பது தெரியும்.  அபப்டியும் ஏன் அப்படி நினைக்கின்றனவோ!

      நீக்கு
  22. கடைசி வரியை டிட்டோ செய்கிறேன். வளர்ப்பது எளிது பிரிவது ரொம்ம்ம்ம்பக் கடினம்.

    கண்ணழகியும் சரி ப்ரௌனியும் சரி கடைசி நிமிடங்களில் என்னைத் தேடினாங்க. ப்ரௌனி என் அருகிலேயே....கண்ணழகி என்னைத் தேடியதை அறிந்து, வீடியோவில் பார்த்து ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. ஒரு வார இடைவெளியில் அதன் அருகில் இருக்க முடியாமல் போனது. கடைசி நிமிட வீடியோக்களை மகன் அழிக்கச் சொல்லிவிட்டான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அருகில் இல்லாததால் கணவர் எனக்கு இப்ப என்ன எப்படி இருக்கு இப்ப என்ன செய்யணும், மருந்து கொடுக்கலாமா சாப்பாடு சாப்பிடுவது மறுப்பது என்று எடுத்து மகனுக்கும் எனக்கும் அனுப்பிக் கொண்டே இருந்ததால்...வீடியோக்கள். அப்படி மகனும் கடைசியில் பிரிந்ததைப்ப் பார்த்து அதன் கண்ணை மூடச் சொல்லி அடுத்து என்ன செய்யணும் என்று கணவருக்கு அறிவுரைகள் சொல்ல..... இல்லை என்றால் கடைசி நிமிடங்களை நாம் எடுக்க மாட்டோமே.

      கீதா

      நீக்கு
    2. அச்சச்சோ..  வீடியோ வேறா?  ரொம்பவே வேதனைப் படுத்தி இருக்குமே..

      நீக்கு
    3. ரொம்பவே. அதனாலதான் மகன் அதை எல்லாம் அழிக்கச் சொன்னான். கடைசி நிமிடங்களில் கணவருக்கு வீடியோ வழியாக மகன் உதவினாலும்...அதற்கு மட்டுமே என்று..

      கீதா

      நீக்கு
  23. உங்க பூனாச்சு கதையும் தெரியுமே ஸ்ரீராம். ஆமாம் கொண்டுவிட்ட நாய் பற்றிய கதைய்ம், பூனாச்சு கதையும் வாசித்த நினைவு நன்றாகவே இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அப்படிப் பிரிவதும் கொஞ்சம் சிரமம்தான்.

      நீக்கு
  24. நியூஸ் ரூம் செய்திகளில் கருணாஸ் கவனமாக இருந்திருக்க வேண்டும் ஃப்ளைட்டில் போறப்ப செக் பண்ணாம போவதா? காரில் மட்டும் அனுமதிப்பாங்களா? செக் போஸ்ட்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எதற்கு கொண்டு போகவேண்டும்?

      நீக்கு
    2. ஆமாம் அதே தான். இது சந்தேகத்தை எழுப்பத்தான் செய்யும் என்னதான் ஆவணங்கள் காட்டினாலும்

      கீதா

      நீக்கு
  25. நாய் வளர்ப்பு அனுபவம் சுவாரஸ்யமாக தொடங்கி மனதை கனமாக்கி முடித்து விட்டீர்கள் ஜி

    //வளர்ப்பது கூட எளிது. பிரிவது கடினம்//

    நிதர்சனமான உண்மை ஜி

    பதிலளிநீக்கு
  26. சிரிப்புத் திருடன் - ஒரு வேளை அந்தத் திருடனும் மதன் ஜோக்ஸ் படித்திருப்பானோ!!!

    அம்பானி-அதானி - இங்க ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாம எத்தனையோ பேர் தவிக்க....

    திருவனந்தபுர செயின் பறித்தலில் வீர மங்கை ரைட்டுதான் ஆனா அவன் கைல கத்தி அல்லது ஆயுதம் இருந்து ஒரு போடு போட்டிருந்தா? அல்லது அந்த ஆளுக்கு பெண்ணின் முகம் நினைவிருந்து அப்புறம் குறி வைச்சா...(ஹாஹாஹாஹா திரில்லர் கதைகள் சினிமா தாக்கம்?!!!!!?)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிடும் சங்கதியும் திருவனந்தபுரத்தில் நடந்தது உண்டு. பக்கத்தில் காலையில் முக்கோல கோயிலுக்கு சென்ற பெண்ணின் செயினை பைக் திருடர்கள் அறுத்துக்கொண்டு சென்று விட்டனர். பெண் போராடவில்லை. பதிலாக கொல்லம் கோல்ட் (கவரிங்) தானே என்று சும்மா இருந்துவிட்டார். அடுத்த நாள் அதே திருடர்கள் அவள் கோயிலுக்கு போகும்போது வந்து செயினை எறிந்துவிட்டு இரண்டு அடியும் கொடுத்து விட்டு சென்றார்கள். இது எப்படி இருக்கு?
      Jayakumar

      நீக்கு
    2. சிரிப்புதான் கீதா...   JKC ஸார் சொல்லி இருக்கும் சம்பவமும் தமாஷ்.

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா, அந்தப் பெண்ணுக்கு இத்தோடு போச்சே!.

      கீதா

      நீக்கு
  27. போகன் சங்கர் எங்க ஊராச்சே!! அருமையான எழுத்து அவருடையது. இன்றைய பகிர்வையும் ரசித்தேன். முதலாவது புன்னகையை வரவழைத்தது!.

    இரண்டாவது சிரிப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவர் வலைப்பதிவுகள் நீங்களும் படித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  28. மம்முக்கா சொன்னது சரியே.

    எம்ஜிஆர் அரசியலிலும் இருந்ததால் இருக்குமோ என்னவோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, மக்கள் மனதில் அப்படி நின்றதனால்தான் MGR அரசியலில் ஜெயிக்க முடிந்தது.

      நீக்கு
  29. ஸ்ரீராம், இன்றைய கவிதையில் கருத்துகள் சூப்பர். ஆனால் கொஞ்சம் கட்டுரை வாசனை இருக்கோ?

    முன்னாடி ஒரே வீடு அதுலதான் எல்லாரும் இருப்பாங்க. இப்ப ஆளுக்கொரு வீடு இல்லை இல்லை...ஆளுக்கு ரெண்டு மூணு வீடுகள் ஃப்ளாட்கள்....அப்ப? பெருகிக் கொண்டேதானே போகும்.
    ஸ்வ்ட்சர்லாந்தில் இரண்டாவது வீடு கட்டுவது முடியாது என்றே எங்கோ வாசித்த நினைவு. இந்தோனேஷியாவில் அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் வாங்க முடியாது இந்தோனேஷிய நபரை மணந்தாலும் வாங்க முடியாது என்றும் வாசித்த நினைவு.

    //அடுத்த வருடம் முதல்
    ஆக்சிஜனுக்கும் பஞ்சம் வரலாம்
    அரசியல்வாதிகள்
    அவர்கள் வாக்குறுதியில்
    அதனைக் கூட
    இலவசமாக தர முன்வரலாம்//

    ஆக்ஸிஜன் பார்லர்கள் இங்கு சில வருடங்களுக்கு முன்னரே வந்தாச்சு. (கொரோனாக்கும் முன்னாடி) எதிர்காலத்தில் நீங்க சொல்லியிருப்பது வரலாம், ஸ்ரீராம், தண்ணி வந்தாச்சு அது போல ஆக்ஸிஜனும் ஏன் காத்துமே கூட!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. முட்டாள் ஜனங்கள்
    அப்போதும் அவர்களுக்கே
    வோட்டளிக்க முந்தலாம் //

    சந்தேகமே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. சுஜாதாவின் நையாண்டிக் கவிதை பாயின்ட்ஸ் நல்லாருக்கு. அதுவும் கொஞ்சம் கட்டுரையின் சாயலோ!

    கடைசி வரி மக்களைத்தானே சொல்றாங்க? ஆப்ப ரைட்டு.
    அரசியல்வாதிகள்னா அவங்க கற்பதா? ஹாஹாஹா பெற்றது நிறைய கோடி கோடியா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நான் எழுதி இருப்பதை விட நன்றாய் இருப்பதாகத் தோன்றியது. 

      நீக்கு
    2. அவருடைய கவிதை செம நையாண்டி. அதை மிகவும் ரசித்தேன்...சுஜாதாகிட்ட சொல்லிடுங்க!!

      கீதா

      நீக்கு
  32. அவருக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா//

    அப்படினா, அவருக்கு அந்தப் பாடல் காட்சி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. படத்துக்குமே அந்தப் பாடல் காட்சி தேவையில்லாத ஒன்று என்றே தோன்றும். வேறு எந்தப் படங்களில் சிலுக்கிற்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்பதும் தெரியலையே அதிகம் படங்கள் பார்த்திராததால் தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ராப்பிச்சை, கடைசி ஜோக் புன்சிரிக்க வைத்தன,

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ஸ்மிதாவை விதவிதமாகக் காட்டி கல்லா கட்டினார்கள்..

    அப்படியொரு பாடலுக்கு இசையும் ஜெக ஜோதியாய் இருந்தது..

    குடுகுடு கிழவரெல்லாம் சில்க்கைப் பார்த்து எச்சில் விடுவதாக காட்சிகள் வேறு...

    பாவம் அந்தப் பெண்ணால் மீளவே முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  35. வேறு எந்த எந்தப் படங்களில் சில்க்கிற்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்?..

    ஒன்றும் இல்லை..

    வல்லூறுகளுக்கு இரையான வண்ண மயில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பிற்காக அலைந்த குயில்.  பணம் பார்த்த குயில்.

      நீக்கு
  36. அன்று சில்க்கை ரசித்த பாவத்திற்கு வருந்துகின்றேன்..

    பதிலளிநீக்கு
  37. சென்ற வார்த்து உங்கள் செல்லம் மோதி பற்றிய பதிவையும் வாசித்தேன். இந்த வாரம் வாசித்து முடித்ததும் மனது நெகிழ்ச்சியடைந்துவிட்டது.

    செல்லங்கள் (மற்ற விலங்குகள் உட்பட) நம்மோடு நல்ல தொடர்பில் இருக்க நாம் பிரியப்படுகிறோம். ஆனால் சில சமயங்களில் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் நம் அன்பைக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

    உங்கள் வீட்டில் உங்கள் பெற்றோர் உட்பட விரும்பியதும் நன்றாகக் கவனித்துக் கொண்டதும் பெரிய விஷயம்.

    கீதாவின் வீட்டில் செல்லங்கள் நிறைய வருடங்கள் இருந்தன. அவர் மகன் கால்நடை மருத்துவர் என்பதால் அங்கு கவனிப்பு என்பது வேறு, தனி. நிறைய அனுபவங்கள் கதைகள் இருக்கும்.

    எங்கள் வீட்டிலும் முன்னரும் இரு செல்லங்கள் நாட்டு வகை இருந்தன. உங்கள் வீட்டுச் செல்லங்கள் போலதான். கொஞ்சம் டெரர். நல்ல பாதுகாப்பாக இருந்தன. தோட்டம் பெரிது, அதோடு ரப்பர் தோட்டம், எங்கள் வீடு நடுவில் பெரியது எனவே பாதுகாப்பும் இருந்தது. இப்போதும் இருக்கின்றன. இவை குறிப்பிட்ட வகை. ஒன்று கொஞ்சம் முடி நிறைய கலப்பு வகை. கீதாவின் மகன் தான் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார். மற்றொன்று வந்து இரு வருடங்கள்தான் ஆகின்றன. அது லாப்ரடார். இரண்டையும் அவிழ்த்து ஃப்ரீயாக விட முடியாத சூழல். எப்போதேனும் அதை அழைத்துக் கொண்டு நடப்பதுண்டு அவ்வளவே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. கேரளத்துச் செய்திகளும் வந்துள்ளன.

    மம்முட்டியின் வாக்கு சரியே, என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் எம் ஜி ஆர் இன்றும் மக்களின் நினைவில் இருக்கிறார். சிவாஜியையும் சொல்லலாமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. உங்கள் கவிதையும், சுஜாதா யஞ்ஞராமன் அவர்களின் கவிதையும் (உங்கள் குடும்ப உறுப்பினரா?) இரு கவிதைகளுமே என்னைப் பொருத்தவரை மிக அருமை. ஏனென்றால் எனக்கும் கவிதைக்கும் வெகுதூரம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. ஓ! சில்க் ஸ்மிதா "பொன்மேனி உருகுதே" பாடலை இத்தனை இம்சைப்பட்டுத்தான் ஆடி நடித்திருக்கிறார் இல்லையா? பாவம். வாசிக்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்தப் பாடல் பலரையும் கவர்ந்த ஒரு பாடல். ஆனால் செருப்பு கூடப் போடாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பதை வாசித்த போது அவரது வாழ்க்கை மிகவும் கடினமான சோகமாக இருந்தது பற்றி அவ்வப்போது தெரிந்தது உண்டு.

    அவர் நல்ல குணச்சித்திர நாயகியாக வந்திருக்கலாம்தான் ஆனால் சினிமா உலகம் அவரை விட்டுவைக்கவில்லை அவருக்கும் குடும்பச் சூழலில் வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ச்சி காட்ட பயன்படுத்தப்படும் நடிகைகள் யாவருமே படும் கஷ்டம். பாவம்தான்.

      நீக்கு
  41. போகன் சங்கர் எழுத்து சுவாரசியம். ரசித்தேன். ஃபேஸ்புக்கில் இருப்பதை அறிகிறேன் அங்கும் இனி வாசிக்கிறேன்.

    பொக்கிஷம் ஜோக்குகள் எல்லாமே ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  42. சென்ற வார ஜோக்

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1PEEDcr2Y1BIXPf1vMXbf2EjACmhqLQQ_XWy9Ah1mIrI00gjdzMSL2jhQBGlEaNp_yHUTG4h4fwzokKuGeHBcrIkRp2Uljn8IefpKgGgZKP3NKHDTlrDZ9hVKBWw3NaTMO_wWV3gQAh9yG9PW6ioigsbcuPCKFC91dLVAa0YmrG1eAdas7qEfKmmGMXg/w640-h342/20240518_090303.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  எப்படி தனியாய்ப் பிரித்து லிங்க் கொடுத்தீர்கள்?

      நீக்கு
    2. ஓ...   எவ்வளவு எளிது!  நன்றி.  இன்று ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் ஜெ கே அண்ணா சொல்லி இருப்பது போல் நான் செய்வதுண்டு...

      கீதா

      நீக்கு
  43. மம்முட்டி கூறியது சரியாகத்தான் உள்ளது.

    ஜோக்ஸ் ரசிக்கவைத்தது.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் எப்போதும் போல் நன்றாக உள்ளது

    தாங்கள் வளர்த்த செல்லங்களை நினைவு கூர்ந்து, எங்கள் மனதிலும் நினைவாக அமரச் செய்து விட்டீர்கள்.

    செய்தியறை பக்கம் படித்து விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
    சங்கிலி திருடனை விட சிரிப்பு திருடன் உத்தமம்.யாரையும் தொந்தரவுக்கு உள்ளாக்கவில்லை.

    தங்கள் கவிதையும் நன்றாக உள்ளது. சுஜாதாவின் கவிதையும் நன்றாக உள்ளது.

    சிலுக்குப்பற்றி (இந்தப்பகுதி குறித்து) முன்னரே எங்கோ படித்ததாக நினைவு.

    பொக்கிஷ பகிர்வும் அருமை. கனவிலிருந்தே தொடரும் கன்னுகுட்டி, அம்மா தாயே வீட்டு விருந்தாளியாக வீட்டிலேயே வந்து காத்திருந்து அமர்வது என அனைத்தையுமே ரசித்தேன்.

    பகிர்வுகள் அனைத்தும் அருமை. நான்தான் கடைசி கருத்துரை என நினைக்கிறேன். ஆனால், இது நூறோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி கமலா அக்கா. சிலுக்கு பற்றிய செய்தி நான் இப்போதுதான் பகிர்ந்துள்ளேன். நீங்கள் வேறெங்காவது இதைப் படித்திருக்க வேண்டும்.

      நீக்கு
  45. செல்லமே பகிர்வு நெகிழ்வு. பொதுவாக வளர்ப்புச் செல்லங்கள் கடிக்காதென்றே சொல்வார்கள். தவறுதலாகக் கடித்து வைத்துக் குற்ற உணர்வில் தவித்திருக்கிறது மோதி. ஊசி போடும் அளவுக்குச் சென்றது சற்று பயமே. பிறகும் அதைக் கடைசி வரை பேணி வந்திருப்பது உங்கள் பாசத்தைக் காட்டுகிறது. ‘நாய் மனம்’ கதையும் நினைவில் உள்ளது. திருமண வீட்டு நிகழ்வுகள் சுவாரஸ்யம் :).

    கவிதையும், கவிதைக்கு வந்த கவிதையும் அருமை.

    தொகுப்பு நன்று.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊசி ஒரு எச்சரிக்கைக்கு போட்டது.  மற்றபடி நாய் நல்ல முறையில் இருக்கிறதா, அல்லது ரேபிஸ் தாக்கி இருக்கிறதா என்று செக் செய்து பார்க்கச் சொல்வார்கள்!  ரொம்ப புரிந்து கொண்ட, அன்பான செல்லம் மோதி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!