வெள்ளி, 14 ஜூன், 2024

வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்

நெல்லை அருள்மணி எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, P சுசீலா குரலில் ஒரு தேனிசைப் பாடல்...

காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !
கல்யாணியே.. கற்பகமே…… அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !
கல்யாணியே.. கற்பகமே…… அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்
மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன்
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன்
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !
கல்யாணியே.. கற்பகமே…… அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே
மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே

மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயில் உருவத் தேவியே….
மரகத மயில் உருவத் தேவியே….
தவத்திரு காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !
கல்யாணியே.. கற்பகமே…… அற்புத
காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா !



*******************************************************************************

1965ல் ஹிந்தியில் வந்து வெற்றி பெற்று, சில அவார்டுகளை வென்ற 'ஹிமாலய் கி கோத் மெய்ன்' என்ற படத்தை தமிழில் புதிய பூமி என்று எம் ஜி ஆர் ஜெயலலிதாவை வைத்து எடுத்தார்கள். வெற்றி பெற்றதா என்று தெரியாது.

ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் மூன்று பாடல்கள் இதில் எனக்குப் பிடிக்கும். ஒன்று ஏற்கெனவே பகிர்ந்து விட்டேன். விழியே விழியே உனக்கென்ன வேலை என்கிற பாடல் அது.

இன்று சின்னவளை முகம் சிவந்தவளை என்கிற பாடல். உற்சாகத் துள்ளலை பாடல் மெட்டு என்றால் அந்தக் கால ஜோதிகாவாக ஜெயலலிதா துள்நடனம் ஆடி இருக்கிறார். கண்ணதாசன் பாடல். டி எம் எஸ் குரலும் உற்சாகத் துள்ளல்தான்.

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கும்

மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்மை கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ

வந்தவளை கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு


43 கருத்துகள்:

  1. இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல்.

    காட்சி தந்து... பாடல் எப்போது கேட்டாலும் இனிமை. புகழ் ஏணியின் உச்சியில் இருந்த, ஏராளமான பாடல்களைப் பாடிய பி சுசீலா, சில மாதங்களுக்கு முன்பு, பணமில்லாதவரைப் போன்று, தான் கஷ்டப்படுவதாகப் புலம்பியதுதான் ஏன் என்று புரியாத புதிர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...   அப்படி புலம்பினாரா...   ஆச்சர்யமாய் இருக்கிறதே....

      நீக்கு
    2. இதேபோல்... எஸ்.பி.பி.யும் புலம்பி இருந்தாரே.... பத்து வருடங்களுக்கு முன்பு...

      நீக்கு
    3. இரண்டுமே தவறான தகவல். அதுவும் எஸ் பி பி... மகன் படம், எடுக்கிறேன் என்று பணம் வீண் செய்வதாய் .சொல்லி இருந்தார்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

    இரண்டாவது திரைப்பட பாடலும், கேட்டிருக்கிறேன். அருமையான வரிகளை கொண்ட நல்ல பாடல்தான். இந்தப் பாடலில், ஜெயலலிதாவை ஜோதிகா வுடன் ஒப்பீடு செய்தது மிகப் பொருத்தம். ரசித்தேன். இன்றைய இரு பாடல்களுமே நல்ல பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. கல்யாணியே.. கற்பகமே..
    அற்புதக்
    காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா...

    காலத்தை வென்றிருக்கின்ற பாடல்.. முழுதும் மனனம்...

    அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே
    ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே..

    பதிலளிநீக்கு
  7. செய்வாய் அம்மா..

    செய்தாய் அம்மா..

    எது சரி?...

    அம்மா வந்து ஆட்சி செய்கின்ற போது தான் தெரியும்..
    புரியும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் 'செய்வாய் அம்மா' என்றுதான்  எழுதி இருந்தேன்.  அப்புறம் பாடலைக் கேட்டபின் அது 'செய்தாய் அம்மா' என்று தெரிந்தது..  மாற்றினேன்.

      நீக்கு
  8. /// சின்னவளை முகம் சிவந்தவளை...///

    தமிழின் வளமைக்காகாக பதினொன்றாம் வகுப்பில் தமிழாசிரியர் மேற்கோள் காட்டி நடத்திய பாடல்களில் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  9. /// வந்தவளை கரம் தந்தவளை
    நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
    என்னவளை காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு..///

    வளையிட்ட பின்னரே இடை வளைக்கின்ற நாகரிகம் ஒன்று இங்கே இருந்திருக்கின்றது...

    இன்றைக்கு அதையெல்லாம் பேசமுடியாது..

    இங்கே பழய்ய பேருந்து நிலையத்தில் பிஞ்சிலே வெம்பியதாக -
    ஒன்றுக்கொன்று கையைப் பிடித்துக் கொண்டு காடல் (காதல்) செய்கின்றதுகள்...

    நமக்கெதுக்கு ஊர் வம்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும்.. காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல....

      நீக்கு
  10. இன்றைக்கு க் கல்வி பயில்வோரில் ஐந்து லட்சம் பேருக்கும் மேலாக தாய்மொழியாகிய தமிழை எழுதப் படிக்கத் தெரியாதாம்...

    மகிழ்ச்சியா இருக்குது ல்ல..

    பதிலளிநீக்கு
  11. இரண்டும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    //அந்தக் கால ஜோதிகாவாக ஜெயலலிதா//

    அப்படீனாக்கா... ஜோதிகா இந்தக்கால ஜெயலலிதாவா ?

    முதல்வராகும் சாத்தியம் உண்டா ?

    இதனால் நிகழும் இழுக்கு, அவமானங்களை திரு.சிவகுமார் சகித்துக் கொள்வாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி யோசிக்கிறீர்கள்.  நான் நடனத்தில் சொன்னேன்.  இளமைத் துள்ளலில் சொன்னேன்.

      நீக்கு
  12. முதல் பாடல் நிறைய கேட்டதுண்டு கல்யாணியில் அமைந்த அருமையான பாடல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவரே பாடுகிறாரே...  கல்யாணியே..  கற்பகமே அற்புத... என்று!

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் பிடித்த பாடல், அடுத்த பாடலும் அடிக்கடி கேட்ட பாடல்.
    கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. இரண்டுமே பிடித்த பாடல்களே! மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @ கில்லர் ஜி..

    //அந்தக் கால ஜோதிகாவாக ஜெயலலிதா//

    அப்படீனாக்கா... ஜோதிகா இந்தக் கால ஜெயலலிதாவா ?

    முதல்வராகும் சாத்தியம் உண்டா ?..

    இதுக்குத்தான் இப்படி ஒரு பிள்ளை வேண்டும் என்பது..

    நான் நினைத்துக் கொண்டதோடு இருந்து விட்டேன்..

    கில்லர் ஜி கேட்டு விட்டார்...

    தஞ்சாவூர் மருத்துவ மனையின் வரலாறு பற்றி ஏதும் அறியாமல் அவர் பேசியதைக் கேட்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கேட்டிருக்கிறேன்.  அவர்களிடம் எனக்குப் பிடிக்காத அம்சங்கள் இருக்கின்றன.  பிடித்த அம்சங்களும் இருக்கின்றன.  நான் பிடிக்காததை நினைப்பதில்லை. குணம் நாடி குற்றமும் நாடி...

      இந்த நடனத்தைப் பார்க்கும்போது அவர் நினைவுக்கு வருகிறார் என்றால் அது ஒரு சந்தோஷ நேரத்தின் நினைவு.  அல்லாத விஷயங்களை மனதில் போட்டு என்னை நானே வலியாக்கிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.

      நீக்கு
  17. பக்திப் பாடல் விரும்பிக் கேட்டபாடல். பாடகி சுசீலா அவர்கள் குரலில் இளையும் இனிய பக்திப் பாடல்.

    மற்றைய பாடலும் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. ஆ! என்னுடய இரண்டாவது கருத்து வரவே இல்லையா? ஒளியவும் இல்ல போலருக்கு.

    இரண்டாவது பாடலும் ரொம்பப் பிடித்த பாடல். தொடங்கும் இசையும், முதல் வரியும் மோகனமோ என்று நினைத்தால் அதன் பின் மாறுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. //உற்சாகத் துள்ளலை பாடல் மெட்டு என்றால் அந்தக் கால ஜோதிகாவாக ஜெயலலிதா துள்நடனம் ஆடி இருக்கிறார்.// ஹை ஃபைவ் ஸ்ரீராம்! எனக்கும் அப்படித்தான் தோன்றும். ஜெயலலிதாவின் நடனத்தில் எப்போதுமே ரசிக்கக்கூடிய துள்ளல் இருக்கும். அந்தக்கால ஜோ என்று ஜெ யை சொல்லியிருக்கிறீர்கள். நான் வேறு சில நடிகர்களையும் அப்படி நினைத்துக் கொள்வேன். உ.ம். ஜெய்சங்கர் அந்தக்கால அஜித் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  21. காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா பாடல் மிகவும் இனிமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  22. காட்சி தந்து நம்மை ஆட்கொள்ளும் அம்மனின் பாடல் மிக அருமை. வரிகளும் மனதை அம்மனோடு ஒன்ற வைப்பவை. ஆழ்ந்து கேட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. 65 ல் ரிலீஸான படமா இது!. எம் ஜி ஆர் படங்களில் அவ்வளவு அதிகம் பேசப்படாத படம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தேன் ..பார்த்தேன் சிரித்தேன் என்பது போலவே வளை என்று முடியுமாறு அருமையாக எழுதப்பட்ட பாடல். டி எம் எஸ் அவர்களின் குரல் கேட்டாலே நமக்குப் புரிந்துவிடும் இது அவர் எம் ஜி ஆருக்குப் பாடிய பாடலென்று. சிவாஜிக்குக் கூடக் கொஞ்சம் அழுத்தமாகப் பாடுவார். ஏனென்றால் சிவாஜி அவர்கள் பாடல் வரிகளுக்கு மிகப் பொருத்தமாக வாயசைப்பார். எம் ஜி ஆர் மென்மையாகத்தான் அசைப்பார்.

    பாடல் காட்சியைப் பாருங்கள், அந்த ஒரு செட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்ட பாடல். அதிகம் செலவு செய்யாமல் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம். என்றாலும் அருமையான பாடல். பல கல்யாண வீடுகளில் இசைத்தட்டுகளில் கேட்ட பாடல். நான் ராசிங்கபுரம் கிராமத்தில் இருந்த போது. அதை இப்போது கேட்ட போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!