புஷ்கருக்குப் பிறகு ஆக்ராவை நோக்கி வரும் வழியில் ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் பார்த்து பிறகு ஆக்ரா தங்குமிட த்தை அதிகாலை அடைந்தோம். பிறகு தாஜ்மஹலைப் பார்க்க 7 மணிக்குச் சென்றோம். நான், தாஜ்மஹலை மிகவும் நெருக்கமாகப் பார்க்கவேண்டும் என்று எண்ணி ஸ்பெஷல் டிக்கெட் வாங்கிக்கொண்டேன். சாதாரண டிக்கெட்டுக்கு தாஜ்மஹல் அமைந்திருக்கும் மேடையின் மீது ஏற அனுமதி கிடையாது.
தாஜ்மஹல், தன்னுடன் 19 வருடங்கள் வாழ்ந்த மனைவி மும்தாஜ் அவரின் 14வது பிரசவத்தின்போது இறந்த பிறகு, அவரின் நினைவாக ஷாஜஹானால் கட்டப்பட்டது. இந்தத் தாஜ் மஹலை வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு யமுனையின் இக்கரையிலே கட்டிய ஷாஜஹான், தான் இறந்ததும் இதைப் போன்று கருப்புக் கற்களால் அக்கரையில் தாஜ்மஹலைப் போன்று கட்டி, அதில் தன் உடல் புதைக்கப்படவேண்டும், இரண்டு மஹல்களுக்கும் இடையில் பாலம் எழுப்பப்படவேண்டும் என்று விரும்பினான். தன் மனைவியை அவ்வளவு நேசித்த ஷாஜஹான், பிற்காலத்தில் தன் குழந்தையாலே தான் சிறைவைக்கப் படுவோம் என்றும் தன் கனவு நனவாகாது என்பதை அறிந்திருப்பானா?
மத்தியப் பிரதேசத்தில் ஒரு போரில் சக்கரவர்த்தி ஷாஜஹான் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவனுடன் போர் நடக்கும் இடத்திற்கும் பிரியாது சென்றிருந்தார் மும்தாஜ் பேகம். (13 அல்லது 14வது பிரசவம்). அங்குதான் அவரது மறைவு நிகழ்ந்தது. யமுனை ஆற்றின் கரையில் மும்தாஜுக்கு ஒரு நினைவாலயம் எழுப்பவேண்டும் என்று நினைத்து, இந்த இடத்தை வாங்கி, தாஜ்மஹலைக் கட்டினார். 6 வருடங்களில் சமாதி அமைந்துள்ள தாஜ்மஹல் கட்டப்பட்ட போதிலும், முழு வளாகமும் நிறைவுபெற இன்னும் பத்து வருடங்கள் ஆயிற்று. (செலவழிப்பதில் கஞ்சன் என்று பெயர் வாங்கிய ஔரங்கசீப், பிற்பாடு, ஒரு சமாதிக்கு இவ்வளவு செலவா? அப்பா ஷாஜஹானுக்கு என்று தனிச் சமாதி தயார் செய்ய வேண்டாம், அம்மா அருகிலேயே புதைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அதனால் நமக்கு கருப்பு தாஜ்மஹலைக் காணக் கொடுத்து வைக்கவில்லை)
இது யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டது என்பதை நினைவில் கொண்டாலே, மணலில் புதையாமல் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள தாஜ்மஹலைக் கட்ட எப்படிப்பட்ட அறிவியல் அறிவு தேவைப்பட்டிருக்கும் என்பது புலப்படும்.
மும்தாஜ் உடல் முதலில் பர்ஹான்பூர், மத்தியப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டது. (அங்குதான் அவர்கள் இருவரும் கடைசி சில காலம் வாழ்ந்தனர்). ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் தாஜ்மஹல் வளாகத்துக்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டது. பிறகு 12 வருடங்களில் தாஜ்மஹல் தயாராக ஆனதும், அதன் கீழ்ப்பகுதியில் மீண்டும் அவரது உடல் புதைக்கப்பட்டது. (1639ல்). தாஜ்மஹல் வளாகம் முழுவதும் முடிவடைய 1650 ஆகிவிட்டது. (கிட்டத்தட்ட 18 வருடங்கள்). அதற்கு அப்புறம் 16 வருடங்கள் கழித்துத்தான் ஷாஜஹான் இறந்தார். அதாவது மும்தாஜ் மறைந்து 35 வருடங்கள் கழித்து. (அந்தக் கதை பிறகு வரும்).
ஒருவேளை
வெள்ளைப் பளிங்குக்கல் மத்தியப்பிரதேசத்திலேயே கிடைத்திருந்தால், பர்ஹான்பூரிலேயே தாஜ்மஹலை
ஷாஜஹான் எழுப்பியிருப்பார். அவரது நல்ல நேரம் ஆக்ராவில் தாஜ்மஹலைக் கட்டினார். இறக்கும் வரை தன்
மனைவியின் சமாதியை அவரால் பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தாஜ்மஹலின் கட்டிட அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் இணையப் படம்.
தூரத்திலிருந்து பார்க்கும்போது தாஜ்மஹல் மிக அழகு.
தாஜ்மஹல்
செல்லும் பாதையில் இருக்கும் நீரூற்றுக்கள். இரவில் வண்ண விளக்குகளால் ஒளிரும் (அல்லது பெரிய தலைவர்கள்
வரும்பொழுது).
அருகில் சென்றால் அழகு குறைந்துவிடுகிறதோ? கட்டிடத்தின் அழகு அதன் குவிமாடம் அல்லவா?
தெற்கு
நுழைவாயில் எவ்வளவு தூரம்.
மினாரின்
அழகிய தோற்றம்.
நான்கு
பக்கமும் சிறிது வெளிப்புறமாகச் சாய்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது தகர்ந்தால் அதனால்
சமாதி இருக்கும் கட்டிட த்திற்குச் சேதம் வராது என்பதால்.
ஸ்பெஷல் டிக்கெட் வாங்கிக்கொண்டு சமாதி நோக்கிச் சென்றேன்.
தொல்லியல் துறை அவ்வப்போது இந்த இடங்களைப் பழுதுபார்க்கிறது. பலர், தொழிற்சாலைப் புகையால் தாஜ்மஹலின் நிறம் மங்குகிறது என்று எழுதுகிறார்கள்.
வெண் பளிங்கு ஸ்லாபில் டிசைன்களைச் செதுக்கியிருக்கிறார்கள்.
சமாதி
அமைந்துள்ள இடம்.
பளிங்கில்
சிறிய துளைகளுடன் கூடிய சல்லடைக் கதவு அலங்காரம்
முதலில் மும்தாஜ் உடல் புதைக்கப்பட்ட பர்ஹான்பூர் சமாதி (மத்தியபிரதேஷ்)
அஹுஹானா என்ற இடத்தில் (பர்ஹான்பூர்) மும்தாஜ் உடன் முதலில் புதைக்கப்பட்டிருந்தாலும், தாஜ்மஹலை இங்கு கட்டாததற்குச் சில காரணங்களைக் கூறுகிறார்கள். பர்ஹான்பூர் மண்ணில் கரையான்கள் அதிகம். அதனால் வலிமையான, வெண்மைப் பளிங்குக்கற்களினால் கட்டப்படப்போகும் தாஜ்மஹலைத் தாங்குவது கடினம். இரண்டாவது, ஷாஜஹானுக்கு தாஜ்மஹல், உருவம் ஆற்றில் தெரியவேண்டும் என்ற எண்ணமாம் (பிரதிபலிக்கவேண்டும்). அதற்கு பஹ்ரான்பூரில் இருந்த தப்தி ஆற்றின் அகலம் சிறிது என்பதால் சரிவராது என்று நினைத்தாராம். மூன்றாவதாக ஜெய்ப்பூரில் இருந்து வெள்ளைப் பளிங்குக் கற்களை மத்தியப்பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூருக்கு எடுத்து வருவது கடினம் என்பதாலும் ஆக்ராவைத் தேர்ந்தெடுத்தாராம்.
ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் சமாதி அருகருகே. உண்மையான
சமாதி கீழ்த்தளத்தில் இருக்கிறது என்றும் அங்கு செல்ல அனுமதி இல்லை என்றும்
சொன்னார்கள்.
பளிங்கில் சல்லடைக் கதவுகள், சன்னல்கள் – முகலாயக் கட்டிடக் கலையின் ஒரு பகுதி.
தாஜ்மஹலின் பின்புறக் யமுனை ஆறு… அமைதியாக ஓடுகிறது. கரையோரம் தோட்டம்.
ஜூலை 2023 – யமுனை நதியில் வெள்ளம்
ஜூலை 23ல் யமுனையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது தாஜ்மஹல் வளாகத்தை நெருங்கும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எப்படிப்பட்ட திட்டமிடல் இருந்திருந்தால் யமுனைக் கரையோரம், எப்படிப்பட்ட வெள்ளம் ஏற்பட்டாலும், நினைவுச் சின்னத்திற்கு ஆபத்து ஏற்படாதபடி அந்தக் காலகட்டத்தில் கட்டியிருப்பார்கள்!
(தொடரும்)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
வாழ்க...
நீக்குகேட்டால் மாத்திரம் போதுமா என்றால் போதாது. ஆனால் கேட்பது மனதில் பதிந்து ஒரு காலத்தில் அதனைப் பின் தொடர்வோம், அந்த நல்ல பழக்கங்களைப் பழகிக்கொள்வோம்.
நீக்குநான் காதில் கேட்ட விஷயங்களை மனதார பின்பற்றுகின்றேன்..
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க...
நீக்குஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும் துரை செல்வராஜு சார்
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க...
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாழ்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. நன்றி.
நீக்குதாஜ்மஹால் அழகு. எதுவுமே தூரத்திலிருந்து பார்த்தால்தான் அழகு போல!
பதிலளிநீக்குஉண்மைதான் ஶ்ரீராம். ரொம்ப நெருக்கமா போனோமென்றால், மதிப்பும் போய்விடும், தூரத்திலிருந்து பார்க்கும்போது இருக்கும் மரியாதையும் போய்விடும்.
நீக்குகொஞ்சம் யோசித்தால் நாம் ரஜினி மீது கொண்டிருக்கும் ஒரு மரியாதை மதிப்பு அவங்க வீட்டு வேலைக்காரிக்கு இருக்குமா?
என் பாஸ் கோவிலுக்கு செல்லும் நேரத்தில் இதுபோல சமாதிகளை பார்க்க வர சம்மதிக்க மாட்டார்! ஸ்ரீபெரும்புதூரில் ஆனமட்டும் சொல்லியும் ராஜீவ் நினைவிடத்துக்குள் நுழைய மாட்டேன் என்று சொல்லி விட்டார்!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். யாத்திரையிலும், ஆக்ராவில் காலை தாஜ்மஹல் பார்க்கப் போகிறவர்கள், வந்து குளித்துவிட்டு, போட்டுக்கொண்டிருந்த உடைகளை நனைத்துக் காயப்போட்டுவிட்டுத்தான் குழுவினருடன் சேர்ந்துகொள்ள வேண்டும். நான் எப்போதுமே அதிகாலையில் குளித்துவிட்டு பிறகு இடங்களுக்க்குச் சென்றுவிட்டு, மீண்டும் குளித்துவிடுவேன். (இல்லைனா படங்களில் அழுதுவடிஞ்ச மூஞ்சியா இருக்கும்)
நீக்குகோவிலுக்குச் சென்றுவிட்டோ இல்லை போகும்போதோ ஶ்ரீபெரும்பூதூர் ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்குச் செல்வதில் பெரும் தவறில்லை. அங்கே யாரும் புதைக்கப்படவில்லையே, அதாவது அது சமாதி இல்லையே.
நீக்குஅது சரி... கொன்றவனிடமே உறவு பாராட்டுவதற்கு நாமென்ன அரசியல்வாதியா?
வித்தியாசமான கோணங்களில் படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குயாரும் தாஜ்மஹல் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் கட்டியிருப்பதை சுட்டிக்காட்டவில்லை.
Jayakumar
ஆனால் தாஜ்மஹாலைப் பற்றி ஒரு வதந்'தீ' உண்டு!
நீக்குபல கோவில்களும் அப்படித்தான், கேரள கோவில்கள் தவிர. காரணம் அவங்க மரத்தையே உபயோகப்படுத்துவதால்.
நீக்குஆனால் அரண்மனைகளில் தீப்பற்றும் திரைச் சீலைகள் இருந்ததால் அங்கு இந்தப் பிரச்சனை உண்டு.
//தாஜ்மஹாலைப் பற்றி ஒரு வதந்'தீ' // இதைப் பலரும் சொல்கிறார்கள், அங்கு சிவனுடைய கோவில் இருந்தது என்றும் அதனை இடித்துவிட்டுத்தான் தாஜ்மஹல் கட்டப்பட்டது என்றும். ஆனால் இதற்கு வரலாற்று ஆவணங்கள் கிடையாது. ஆனால் இந்த இடத்தை ரஜபுதன அல்லது மேவார் அரசகுடும்பத்திடமிருந்து வாங்கி, அங்கு தன் காதலிக்கு நினைவிடம் அமைத்தான் ஷாஜஹான் என்பது வரலாற்றுப் பக்கங்களில் உண்டு.
நீக்குதேஜோ மகால்!...
நீக்குமன்னர் காலத்தில் ஒருவருக்கொருவர் நாடு நகர ஆவண அடையாளங்களை அழித்து ஒழிப்பது புதிதல்லவே!..
இது பெரிய விஷயமில்லை என்பது என் கருத்து. இப்போ நீங்க வசிக்கும் வீடு, பத்து தலைமுறைக்கு முன்னால் யார் கையில் இருந்தது, என்னவாக இருந்தது என்பதை வைத்து நாம் எடைபோட முடியுமா? சோழ மன்னனின் அரண்மனையாக இருந்த இடத்தில் இப்போது விவசாயம் நடக்கிறது. தஞ்சையில் சோழர் கோவில்கள், கற்றளிகள் இருந்த இடங்கள் வயல்வெளிகளாக இருக்கின்றன (நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன்). என்ன செய்வது?
நீக்குமும்தாஜ் பற்றிய நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி தமிழரே....
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎபி ஆசிரியர்கள், மற்றும் எபி வாசக சகோதரர்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துகள்.
ஒரு தந்தையருக்குரிய கடமைகளை செவ்வனே செய்து வரும் எபி குடும்பத்தினருக்கும், உலக சகோதரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பதிவை படித்து விட்டு வருகிறேன். தாமதமானாலும் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தந்தைக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்துவரும்....- இதைப்பற்றி மகன்கள் மகள்களிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்குமோ!
நீக்குஹா ஹா ஹா. மாறுபட்ட என்ன பதில் கிடைத்தாலும், நம் மனசாட்சிக்கு உண்மை நிலை தெரியுமல்லவா?
நீக்குதந்தைகள்லாம் (ஏன் பெரும்பாலான கணவர்களும்கூட) மனசாட்சிப்படித்தான் நடந்துகொள்வார்கள். ஆனால் அப்போ பசங்க (மனைவியும்) இருக்கும் மனநிலைக்கு கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும். அப்பாவின் அருமை புரியும்போது, அப்பாவுக்கு ரொம்பவே வயதாகியிருக்கும் இல்லை ஹாலில் போட்டோவில் சிரித்துக்கொண்டிருப்பார்.
நீக்குஆம். தந்தையர் தினத்திற்கான ஒரு கவிதையில் அவ்வாறே வருகிறது. வயதாகி விட்டால் யாருக்குமே மதிப்பு குறைவுதான். (புலம்பல் கேஸ் என்ற பட்டப்பெயர் வேறு. ) அதுவும் நல்ல போட்டோவாக பார்த்து அது கிடைத்து என்லார்ஜ் செய்ய வேண்டும்.
நீக்குஇது பற்றி எழுதலாம் கமலா ஹரிஹரன் மேடம். பொதுவா நமக்கு நம் வயதொத்தவர்களிடம்தான் அதே அலைவரிசையில் பேச முடியும். இல்லைனா சின்னப் பையனான பேரன்/பேத்திகளிடம். மகனோ/மகளோ அவங்க வயதொத்தவர்களிடம்தான் நிறைய பேசுவார்கள். ஆனால் அவங்க மனதில் மதிப்பு என்றுமே குறையாது. நாம உள்ள நுழைந்து நாட்டாமை செய்வதோ இல்லை, எதுக்கெடுத்தாலும் நம்மகிட்ட கேட்டுச் செய்யணும் என்று நினைத்தாலோதான் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்.
நீக்குபழைய காலத்துல அரசன் தன் மகன் பட்டத்துக்கு வந்துவிட்டால் தன் பரிவாரங்களுடன் (வேற யாரு..மனைவிமார்கள், வேலையாட்கள்) தன் தனி அரண்மனைக்குப் போய்விடுவான். ஆட்சி அதிகாரத்துக்குப் பக்கத்தில் கூட வரமாட்டான். கோவில் குளம் என்று இருந்துவிடுவான். ஆனால் சாதரண ஜனங்களான நாம் என்ன பண்ணுவது? ஹா ஹா ஹா
தாஜ்மகால் பல பதிவுகளில் படித்திருக்கிறேன். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத படங்கள். வெவ்வேறு கோணங்களில் கண்டோம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் தந்தையர்கள் தின நல்வாழ்த்துகள்.
நன்றி மாதேவி அவர்கள். இன்னமும்கூட படங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
நீக்கு/// ஹாலில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருப்பார்.. ///
பதிலளிநீக்குயார் கண்டது?...
போட்டோவிலும் கடுப்பாக இருந்தால்!..
புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தவர், ஹாலில் நடைபெறும் கூத்துக்களைப் பார்த்து முகத்தை கடுப்பாக ஆக்கிக்கொண்டிருப்பாரோ?
நீக்கு@ ஸ்ரீராம்...
பதிலளிநீக்கு/// ஸ்ரீ பெரும்புதூரில் ஆன மட்டும் சொல்லியும் ராஜீவ் நினைவிடத்துக்குள் நுழைய மாட்டேன் என்று சொல்லி விட்டார்!.. ///
குவைத்தில் இருந்த போது எகிப்த் சென்று பிரமிட்களைப் பார்ப்பதற்கு ஆவல்...
எகிப்திய கூட்டாளி அழைத்துச் செல்வதாகச் சொல்லியும் இறையருள் கூடி வரவில்லை..
குல தெய்வத்திடம் விளக்கம் கிடைத்தது - அவை சமாதிகள்.. துஷ்ட ஆவிகள் இன்னமும் அலைகின்றன ... - என்று..
நான் பஹ்ரைனில் இருந்தபோது, குடும்பத்தோடு எகிப்து போய் பிரமிட் எல்லாம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன். என் பெண், கூடவே கூடாது என்று சொல்லிவிட்டாள்.
நீக்குஎனக்கு முதன் முதலில் அலர்ஜி வந்தது, நான் லூவர் மியூசியத்தில் எகிப்து மம்மி செக்ஷனுக்குச் சென்று பார்த்தபோதுதான். அன்றைக்கு என்னை இறைவன் காப்பாற்றினார். முழு அலர்ஜி வந்தும் நான் டிரெயினில் தங்குமிடம் வந்து சேர்ந்தேன். நல்லவேளை ஒரு சில மணி நேரத்தில் அலர்ஜி சரியாகிவிட்டது. இல்லையென்றால் பாரிசில் எந்த டாக்டரை நான் பார்க்கப்போக முடியும்?
பதிலளிநீக்குஉயர்நிலைப் பள்ளியில் சரித்திர பாடங்கள் படித்த போது எங்கள் ஆசிரியர் திரு S.R. கோவிந்தராஜன் அவர்களது விரிவுரைகளைக் கேட்ட பின்பு தெளிவு பிறந்தது..
குமுதத்தில் தாஜ்மகால் பற்றி வெளியான ஒரு தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது..
அப்போதைய ஆனந்த விகடனில் திரு மதன் அவர்களது வந்தார்கள் வென்றார்கள் தொடருக்கும் பலத்த எதிர்ப்பு...
உண்மை என்ன?..
உண்மை தான்!..
வரலாற்றுப் பக்கங்களை மீண்டும் படிப்பதால் மனதில் வெறுப்புதான் வளரும். மனிதர்களுக்கு சமூகத்திற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியம். ஒற்றுமை இல்லாத மான், வரிக்குதிரை போன்றவற்றை வெகு சுலபமாக புலி, சிங்கம் வேட்டையாடிவிடும். ஆனால் கூட்டமாக நிற்கும் எருதுகளை சிங்கம்கூட வேட்டையாட முடியாது. புரிந்தால் சரி.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குதாஜ்மஹால் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. நான் சினிமா, மற்றும் நியூஸ்களில் பார்த்ததுதான். இப்போது தங்கள் வர்ணனையால் நேரடியாக சென்று கண்டதைப் போன்ற உணர்வு வந்தது. ஷாஜகான் மும்தாஜ் வரலாறும், சுவையானதாக உள்ளது. காதல் வரலாறு. அதில் கற்பனை கலந்த பல பொய்யுரைகள். அதுவும் நிஐமா என்பது நமக்குத் தெரியாது. இருப்பினும் இன்று வரை நிலைப் பெற்றிருக்கும் ஒரு காதல் சின்னம். (இதில் அரசரின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது துரதிர்ஷ்டம். அவரின் ஆசை கைகூடியிருந்தால் நமக்கு பார்க்க மற்றொரு அழகான மஹல் கிடைத்திருக்கும். ) இது பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று. நீங்கள் எடுத்த படங்கள் அழகாக உள்ளன. அதன் வரைபட விபரங்களும் அருமை. இனியும் வரும் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஷாஜஹான் போர் முனைக்குச் சென்றபோதும் கர்ப்பிணியான மனைவியையும் கூட்டிச் சென்றிருந்திருக்கிறார். அதீத அன்பாக இருந்திருக்குமோ?
நீக்குஉங்கள்ட ஒரு கேள்வி. செத்தபின் அழகிய சமாதி கட்டுவது அன்பின் வெளிப்பாடா? இல்லை உயிரோடு இருக்கும்போது பத்திரமாகப் பார்த்துக்கொள்வது அன்பின் வெளிப்பாடா? 'அன்பு' என்பது என்ன? ஷாஜஹான் அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கில் அரசருக்கான மகளிர் கூட இருந்தனர். இதுபற்றி இனி வரும் பகுதிகளில் வரும்.
நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
தாஜ்மஹல் படங்கள் அதைப்பற்றிய விவரங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநிறைய தடவை பார்த்த இடம். முதல் தடவை குடும்பத்தினருடன் போன படங்கள் இல்லை. அப்புறம், அம்மா, உறவினர்கள், நட்புகளுடன் போன படங்கள் ஆல்பத்தில் இருக்கிறது.
நீங்கள் ஒவ்வொரு கோணத்திலும் எடுத்த படங்கள் அருமை.
தெற்கு நுழைவாயில் , மினார் படங்கள் அருமை.
தாஜ்மஹல் செல்லும் பாதையில் இருக்கும் நீரூற்றுக்களுடன் சினிமாக்களில் பார்த்து இருக்கிறோம்.
நாங்கள் போன காலகட்டத்தில் உள்ளே சாமதி பார்க்க அனுமதி உண்டு. கீழ் தளத்தில் உள்ளதை பார்த்து இருக்கிறோம்.
தாஜ்மஹாலை வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் பார்க்க அனுமதி இல்லை என்று படித்த நினைவு.
//தாஜ்மஹலின் கட்டிட அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் இணையப் படம்.//
அருமை.
தாஜ்மஹாலை பற்றிய விவரங்கள் அருமை.
தொடர்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம்... வெள்ளிக்கிழமை தாஜ்மஹலைக் காண முடியாது. சில யாத்திரைகளில் அப்படி நேர்ந்திருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பது உண்மை (அதைவிட எனக்கு ஆக்ராவில் இன்னும் சில நினைவுச் சின்னங்கள் பார்க்கணும் என்று ஆசை... பார்க்கலாம் நடக்கிறதா என்று).
நீக்குஅது சரி..ஆக்ரா பேதா (பூசனி இனிப்பு ) சாப்பிட்டிருக்கீங்களா? எனக்கு எப்போதுமே மிகவும் விருப்பமானது அது.
தாஜ் மஹால், அக்பரின் கோட்டை பத்தேப்பூர் சிக்ரி எல்லாம் 60 வருடங்களிக்கு முன் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅப்பொழுதெல்லாம் இந்த ஸ்பெஷல் கட்டணம் எல்லாம் கிடையாது. தாஜ்மஹால் நுழைவு பிரதேசத்தில் நின்று பின்புலக் காட்சியாய் தாஜ்மஹால் தெரிகிற மாதிரி படம் எடுத்துக் கொள்வதில் ஜனங்களுக்கு ஏகப்பட்ட ஆர்வம் இருந்தது. இதற்காக ஃபோட்டோ கிராபர்கள் அங்கங்கே நின்று கொண்டிருப்பார்கள்.
உள்ளே நுழையும் பொழுது படம் எடுத்துக் கொண்டால் திரும்புகையில் பிரிண்ட் போட்ட படம் ரெடியாக இருக்கும். மொபைல் இல்லாத காலத்து ஆர்வங்கள் இவை.
தாஜ்மஹால் என்றாலே தமிழகல் பிரபல எழுத்தாளர் அகிலனின் ஞாபகம் எனக்கு வரும். அவர் தனது பாவை விளக்கு நாவலில் தாஜ்மஹாலில் கதை நாயகன் தணிகாசலமும், நாயகி உமாவும் உலா வருவதாகக் காட்டி
நீக்குதாஜ்மஹால் உள்புற சுவர் எழுத்தாக்கங்களை மிகப் பிரமாதமாக வர்ணித்திருப்பார்.
ஷாஜகான் சிறைப்பட்டிருந்த பத்தேபூர் கோட்டை
நீக்குகொட்டடி ஒன்றில் பலகணி (ஜன்னல்)
ஒன்றின் வழியாகப் பார்த்தால் அழகுச் சித்திரம் போல தாஜ்மஹால் தென்படும். இது வழியாக ஷாஜகான் தினமும் தாஜ்மஹாலைப் பார்த்த படி மெய்மறந்து நிற்பான் என்று டூரிஸ்ட் கைடுகள் சொல்வார்கள்.
வாங்க ஜீவி சார்.... இப்போதும் படம் எடுத்துத் தரும் புகைப்படக் காரர்கள் நிறைய உண்டு. ஒரு படத்திற்கு 30 ரூபாய். நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 12:30க்குள் கிளம்பிவிடுவோம் என்று சொன்னேன். கரெக்டா எங்கள் இடத்திற்கு வந்து புகைப்படங்களைக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு சென்றார்.
நீக்குஅகிலனின் பாவை விளக்கு (சாஹித்திய அகாடமி விருது?) இன்னும் படித்ததில்லை. படிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்
நீக்குஷாஜஹான் சிறைப்பட்டிருந்த அக்பர் கோட்டையைப் பற்றியும் இங்கு படங்களுடன் வரும். பார்த்துவிட்டு எழுதுங்கள். அது பற்றி நிறையச் சொல்லலாம்.
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// தஞ்சையில் சோழர் கோவில்கள், கற்றளிகள் இருந்த இடங்கள் வயல்வெளிகளாக இருக்கின்றன (நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன்). என்ன செய்வது?.. ///
நான் மறுபடியும் சிக்கிக் கொள்கின்ற இடம் இது...
தேஜோ மஹாலைப் பற்றிய புத்தகம் அன்றைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.. கீழே இருக்கின்ற நிலவறைகளைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணியர்க்கு அனுமதி இல்லை...
நிலவறைகள் எதற்கு?..
இல்லை துரை செல்வராஜு சார்... திரும்பத் திரும்ப பழைய வரலாற்றுக்குச் சென்று இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடாது என்பதற்குத்தான்.
நீக்குபாருங்க...இப்போ தமிழ் வரலாறு என்பதே (9ம் வகுப்பு புத்தகம்) கிறித்துவ பாதிரியார்கள் தமிழகம் வந்ததிலிருந்துதான் தொடங்குவதுபோல பாடங்கள் வைத்திருக்கிறார்கள். இந்து கலாச்சாரம், பக்தி நூல்கள் கோவில்கள் என்றாலே அரசுக்குப் பிடிக்கவில்லை
பாரத நாட்டிம் கலைச் செல்வங்களுள் ஒன்றாக விளங்குகின்ற தாஜ்மஹால் படங்களும் விவரங்களும் அருமை.. சிறப்பு..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குநெல்லை நான் போயிருந்தப்ப 32 வருஷம் முன்ன இந்தக் கட்டணம் இருந்ததாக நினைவில்லை. ஃப்ரீ தான்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு நெல்லை.
தாஜ்மஹல் தூரத்திலிருந்து பாக்க அழகோ அழகு. அந்த மினாரெட்ஸ்! பொதுவா இஸ்லாமிய கட்டிடக் கலையில் வரும் இல்லையா?
நீங்க கட்டிடக் கலை அமைப்பை படங்களோடு கொடுத்திருக்கறது சூப்பர்.
கீதா
இப்போல்லாம் நடைமுறை நிறைய மாறுகிறது. வெள்ளிக்கிழமை திறப்பதில்லை என்றெல்லாம்.
நீக்குமினாரெட்ஸ் இஸ்லாமிய (பெர்ஷியன்) கட்டிடக் கலையில் வரும். கிட்டத்தட்ட தாஜ்மஹல் மெயின் கட்டட கூம்பு போலவே கல்ஃப் தேசங்களில் பள்ளிவாசல்கள் இருக்கும்.
நெல்லை, நிஜமாகவே அமைப்பைப் பார்க்கறப்ப எப்படியான திறமை, அறிவோடு கட்டியிருக்காங்கன்னு தோன்றியது நீங்க சொல்லியிருப்பது போல்.
பதிலளிநீக்குஅருகில் செல்லும் போது அது வேறு ஒரு அழகு, உண்மைதான் தூரத்தில் பார்க்கறப்ப அது தனி ஏனென்றால் அது மொத்த உருவமும் இது எனக்கு மனித உருவாக்கங்களில் படும். ஆனால் சில உருவாக்கங்கள் தூரத்திலும் அருகிலும் கூட மிக அழகாக இருக்கும். என்னதான் மனித உருவாக்கங்களை வியந்து பார்த்தாலும், ரசித்தாலும் இயற்கை யோடு போட்டி போட முடியாது. இமய மலை தூரத்திலும் அழகு அருகிலும் அழகு. நான் வியந்து பார்ப்பவை கடலும் மலைகளும், வானும்...(வான் தூரத்திலிருந்து இங்க பூமியிலிருந்துதான் பார்க்க முடியும்னு வைங்க...!! மற்ற கோள்களில் இருந்து வான், மேகங்க்ள் இப்படித் தெரியாது !!)
கீதா
ஆமாம் கீதா ரங்கன். இயற்கை அழகுக்கு இணை எதுவுமில்லை. அதிலும் நான் பொகாராவிலிருந்து இமயமலையைப் பார்த்தபோது மிகவும் வியந்திருக்கிறேன். ஆஹா... அந்த அழகுக்கு ஈடு இணை இல்லை. படங்கள் பகிர்கிறேன் (இருந்தாலும் அடுத்த வருடம் இன்னொரு முறை முக்திநாத் செல்ல நினைத்திருக்கிறேன்)
நீக்குஅதிலும் நான் பொகாராவிலிருந்து இமயமலையைப் பார்த்தபோது மிகவும் வியந்திருக்கிறேன். ஆஹா... அந்த அழகுக்கு ஈடு இணை இல்லை. படங்கள் பகிர்கிறேன்//
நீக்குஆஹா!!! பாருங்க இமயமலையை இன்னும் அதிக உயரத்தில் போய் பார்த்திருக்கீங்க! அழகு! கண்டிப்பா பகிருங்கள் நெல்லை. இமயமலையைக் கண்டு ரசிக்க.....அடுத்த வருடமும் முக்திநாத் எஞ்சாய்!!!
கீதா
வெண் பளிங்கு ஸ்லாபில் டிசைன்களைச் செதுக்கியிருக்கிறார்கள்.//
பதிலளிநீக்குசெதுக்குவது கஷ்டம் இல்லையா? உடைந்து போகுமே!! இப்படியான டிசைன்கள் அருகில் சென்று பார்த்தாலும் ரசிக்கலாம் நெல்லை. நான் உட்புறம் சில டிசைன்களை அப்படிப் பார்த்த நினைவு.
ஆனால் அப்போது தாஜ்மஹலைப் பார்த்தப்ப இருந்த மன நிலை எண்ணங்கள் எல்லாம் இப்ப பார்க்கறப்ப எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்!! அப்ப ஹிமாச்சலிலிருந்து வரப்பதான் இதைப் பார்த்ததால் எனக்கு ஹிமாச்சலில் இன்னும் கூடுதல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வெயிலும் கொளுத்தியது. இப்பவும் கூட மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது இமயமலைகள் சென்று தங்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் யதார்த்தம் எங்கும் செல்ல இயலாது,
கீதா
இமாசலத்திற்குச் சென்றதில்லை கீதா ரங்கன். ஆப்பிள் தோட்டங்கள் பார்க்கணும் என்று எனக்கு ஆவல். (வெயில் கொளுத்தியதா? குளிர் காலத்தில் செல்லவில்லையா? அதுக்கு பேசாமல் சென்னையிலேயே இருந்திருக்கலாம் நீங்க ஹா ஹா)
நீக்குஆப்பிள் தோட்டங்களை மட்டுமல்ல சில இடங்களில் மதில் வேலி ஒட்டி ரோட்டோரங்களில் நீங்க போற வழியில் பார்க்கலாம். பறிக்கவும் எளிதாகத் தொங்கும். ஆனா நாம பறிக்க மாட்டோம்னு வைங்க.
நீக்குஹிமாச்சலில் வெயில்னு சொல்லலையே ஆக்ரால. ஹிமாச்சல் ஒரு முறை ஏப்ரல், மற்றொரு முறை செப்டெம்பரில். அதனால ஆப்பிள் பறிக்கும் சீசனில் பார்க்க முடிந்தது.
ஹிமாச்சலுக்குப் போனீங்கனா இமயமலையின் அழகில் அந்த பிரம்மாண்டத்தில் எல்லாமே... மெய் மறந்துவிடும், நெல்லை!
நீங்கதான் பத்ரிநாத் எல்லாம் போயிருக்கீங்களே ஹறித்வார் ரிஷிகேஷ் எல்லாம்? அப்பவும் பார்க்கலாமே இமயமலை!
கீதா
இந்தப் பதிவில் தாஜ்மஹால் படங்கள் வித விதமான கோணங்களில் அருமையாக எடுத்தவை வந்திருக்கின்றன நெல்லைத் தமிழன். நாங்களும் தாஜ்மஹாலைப் பார்க்கும் வாய்ப்பு 4, 5 வருடங்க்ளுக்கு முன் கிடைத்தது.
பதிலளிநீக்குபடங்களும் தாஜ்மஹாலின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. புதிய தகவல்கள்,
துளசிதரன்
வாங்க துளசிதரன் சார்... வரும் சில வாரங்கள் நிறைய வரலாற்றுத் தகவல்கள் மயமாக இருக்கும், குறிப்பாக முகலாய வரலாறு.
நீக்குபல முறை பார்த்த இடம் - ஒவ்வொரு முறையும் யாரையேனும் அழைத்துச் செல்ல வேண்டியே அங்கே சென்றிருக்கிறேன். முன்பெல்லாம் தரைத்தளத்தில் இருக்கும் சமாதி பார்க்க அனுமதி இருந்தது. இப்போது இல்லை.
பதிலளிநீக்குபடங்கள் நன்று.