நாங்கள் ஜெய்ப்பூரில் கலைப்பொருட்கள் விற்கும் வளாகத்தில் இருந்ததைச் சென்ற வாரத்தில் முடித்திருந்தேன். அந்த விற்பனைக் கூடத்தில் இருந்த கலைப்பொருட்களில் சிலவற்றை இந்த வாரம் காண்போம். எங்கள் பயணம் ஆக்ராவை நோக்கி என்பதை நினைவில் கொள்ளவும்.
அங்கு விற்பனைக்கு இருந்த கலைப்பொருட்களில் சில.
நாங்கள் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அந்த வளாகத்திலிருந்து கிளம்பி, சாலைக்கு எதிர்ப்புறம் இருந்த மன் சாகர் ஏரியின் கரையில் இருந்த கடைகள் போன்றவற்றைக் காணச் சென்றோம். எங்களுக்கு அரை மணி நேரம் சுற்றிவர அனுமதி கொடுத்திருந்தார்கள்.
அந்தக் கரையிலிருந்து பார்த்தால், ஏரியின் நடுவே இருக்கும் ஜல் மஹல் தெரியும். இது 17ம் நூற்றாண்டில் ஏரிக்கு நடுவே கட்டப்பட்ட து. 19ம் நூற்றாண்டில் ஜெய்சிங் II என்பவரால் சீர்படுத்தப்பட்டது. பார்க்க மிக அழகாக இருக்கும் அரண்மனை. ஜெய்ப்பூரில் இருந்த சில மணித் துளிகளிலேயே, இந்த நகரத்தையும் இங்கிருக்கும் அரண்மனைகளையும் பார்க்க ஒரு முறை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த அரண்மனை அமைந்துள்ள இட த்தில் ஏரியின் ஆழம் 15 அடிகளாம். அரண்மனையின் மேல் தளத்தில் ஒரு பூங்காவும் இருக்கிறதாம். முழுவதும் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்ட ஆச்சர்யமான அரண்மனை இது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஏரியைச் சுத்தம் செய்து இதனை பெரிய ஒரு ரிசார்டாக மாற்ற முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். (என் கவலை, முதலைகள் உள்ளே வந்தால் என்ன பண்ணுவது? வெள்ளம் அதிகமாகி நீர் மட்டம் உயர்ந்தால் என்னவாகும் என்பதுதான்)
கரையோரப்
பகுதியில் நிறைய கடைகள் இருக்கின்றன. பலவித பொருட்களுடன், ஒட்டகச் சவாரி, ராஜஸ்தானி உடைகளை
அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது, ராஜஸ்தானி கலைப்பொருட்களை விற்கும்
கடைகள்,
இந்த
மாதிரி இடங்களுக்கே உரித்தான தீனிக் கடைகள் என்று ஏராளமாக இருக்கின்றன.
ஏராளமான கடைகள். எல்லாமே விலை மலிவாக
எனக்குத் தோன்றியது.
ஒட்டகச் சவாரி, ராஜஸ்தானி உடையில்
போட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்.
நேரமின்மை காரணமாக ராஜஸ்தானி உடையில் படமெடுத்துக்கொள்ள இயலவில்லை (மனைவியை நிற்கவைத்து). அங்கு சுவையான குல்ஃபியைச் சாப்பிட்ட பிறகு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இட த்திற்குச் சென்று ஏறினோம். சுமார் 8 ½ மணிக்கு அங்கிருந்து கிளம்பி, சுமார் 240 கிமீ தூரத்தில் இருந்த ஆக்ராவை நோக்கிச் சென்றோம். எப்போதும்போல, வழியில் 9 ½ மணிக்கு ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி இரவு உணவாக அரிசி உப்புமா கொத்ஸு சாப்பிட்டோம்.
தொடர்ந்து
பயணித்து அதிகாலை சுமார் 3
மணிக்கு
ஆக்ராவில் நாங்கள் எப்போதும் தங்கும் ஹனுமான் மந்திரை அடைந்தோம். இது சத்திரம் போன்றது. ரெஸ்ட்ரூம் மற்றும்
குளியலறை வசதிகள் இருந்தாலும் பலர் புழங்குவதால் சுத்தம் குறைவு. இங்கு ஒரு பெரிய அறை
கொடுத்தார்கள்.
அதில்
எங்கள் பைகளை வைத்துவிட்டு (பேருந்திலிருந்து லக்கேஜ் நாங்கள் இறக்கவில்லை) அங்கேயே சிலர்
தூங்கினார்கள்.
நான்
நிறைய தடவை ஆக்ராவிற்கு (இவர்களில் வெவ்வேறு
யாத்திரை ஆக்ராவைத் தொடும்) வந்திருப்பதால், சட் என்று அங்கே பெரிய ஹாலில் இருந்த
மர பெஞ்சில் படுத்துக்கொண்டுவிட்டேன். 6
மணிக்கு
காபி என்றும்,
அதன்
பிறகு தாஜ்மஹலைப் பார்க்கச் செல்பவர்கள் செல்லலாம் என்றும் சொன்னார்கள். காலை 10 மணிக்கு உணவு தயாராகும்
என்றும்,
அதன்
பிறகு எதிரே உள்ள ஆக்ரா கோட்டைக்கு அல்லது வேறு இடங்களுக்குச் செல்பவர்கள் செல்ல
லாம்,
மதியம்
1 ½ மணி வாக்கில் அங்கிருந்து
கிளம்பி கோகுலம் செல்வோம் என்று யாத்திரைக் குழுத் தலைவர் சொன்னார். தாஜ்மஹலுக்குச்
செல்பவர்கள்,
திரும்ப
வந்து குளித்துவிட்டுத்தான் (பழைய உடையை நீரில் நனைத்து) சாப்பிட வரவேண்டும்
என்றும் சொன்னார்.
சில
சமயம் நான் திரும்ப வந்து குளித்து, உடைகளை அரைகுறையாக காயப்போடச்
சோம்பல் பட்டு தாஜ்மஹல் செல்வதில்லை (இரண்டு முறை பார்த்தாகிவிட்தே). அதற்குப் பதிலாக ஆக்ரா
கோட்டையோ இல்லை,
கடைவீதிகளுக்கோ
சென்றுவிடுவேன்.
கயா
யாத்திரையில் என்று நினைவு, கடைசி ஸ்டாப் ஆக்ரா. அந்தச் சமயங்களில் இரவு இரயில்
பயணத்திற்கு முன்பாகவே,
ஆக்ராவின்
புகழ்பெற்ற பேதா (பூசனியில் செய்யும்
இனிப்பு,
பல்வேறு
வகைப்பட்ட து)
வாங்கிக்கொள்வேன். அதுபற்றிப் பிறகு.
ஆக்ராவில் நாங்கள் தங்கிய ஸ்ரீராம் ஹனுமான் கோவில். அதன் எதிரே
ஆக்ரா கோட்டை.
நான்
காலையில் 5
மணிக்கே
எழுந்து குளித்துத் தயாராகிவிட்டேன். நேரமானால் கூட்டம் அதிகமாகிவிடும். துவைப்பது கடினமாகிவிடும். 6 ½ மணிக்கு காபிக்குப் பிறகு, நாங்கள் தாஜ்மஹலைப்
பார்க்கச் சென்றோம்.
(குழுத்
தலைவர் சொன்னாரே என்பதற்காக பழைய உடையை உடுத்திச் சென்றால் புகைப்படத்தில் நன்றாக
இருக்காது என்பதற்காகக் காலையிலேயே குளித்துவிட்டேன். வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் துணிகளைத் தோய்த்துக் காயவைத்துக்கொள்வேன், சரியான இடத்தில் அயர்ன்
செய்து வாங்கிக்கொள்வேன்.
அதனால்
கூடுதலாக துணிகளை நனைக்கக் கவலைப்படமாட்டேன்)
தங்கியிருந்த
இடத்தில் சன்னிதிகள் திறந்ததும் தரிசனம் செய்தேன்.
ஸ்ரீவேணுகோபாலன் மற்றும்
ஸ்ரீராம சீதா லக்ஷ்மண ஹனுமான்.
துர்காதாஸ்
ராதோர் சிலை –
இவர், ராஜபுதன தளபதியாக இருந்து
ராதோர் அரச வம்சம் அழிந்துபோகாமல் காத்தவர். மஹாராஜ ஜஸ்வந்த் சிங் இறந்த பிறகு, ஔரங்கசீப், சிறு குழந்தையாக இருந்த
அஜித் சிங்கையும் அவருடைய அம்மாவையும் (ஜஸ்வந்த் சிங்கின் மனைவி) தில்லியில் சிறை வைத்தான். துர்காதாஸ் அவர்களைச்
சிறையிலிருந்து மீட்டு,
பல்வேறு
இடங்களில் தங்க வைத்து பிற்பாடு மேவார் அரசுரிமையை அஜித் சிங்கிற்கு வரும்படிச்
செய்தார்.
அவருடைய
வீரத்தை மனதில் நிறுத்தும் விதமாக ஆக்ரா கோட்டை அருகில் வைத்துள்ள சிலை இது.
தாஜ்மஹல் செல்லும் வழி. இந்த மாதிரி சுற்றுலாத் தலங்களுக்குப் போகவேண்டும் என்றால் நிறைய நடக்கத் தயாராக இருக்கவேண்டும். தாஜ்மஹலிலும் அப்படித்தான்.
நடந்துதான்
டிக்கெட் வாங்கும் இடத்திற்குச் செல்லவேண்டும்.
டிக்கெட்
வாங்கி,
செக்யூரிட்டி
செக் முடிந்ததும் வளாகத்தின் நுழைவாயிலை நோக்கிச் செல்கிறோம். (சமாதியைப் பார்க்க இந்த பில்டப்பா
என்று நினைக்காதீர்கள்.
முகலாய
கட்டிடக் கலையைப் பார்க்கத்தான் இந்த பில்டப்).
வலது
பக்கம் இருப்பது தாஜ்மஹல் வளாகத்தின் நுழைவாயில்.
வளாகத்தின்
நுழைவாயில்.
அங்கிருக்கும்
கட்டிடங்கள் எல்லாமே சிவப்பு நிறக் கற்களைக்கொண்டு கட்டப்பட்டவை. தாஜ்மஹல் மாத்திரம்
வெள்ளைப் பளிங்குக் கற்கள். அதனால்தான் தனித்துப் பளீர் என்று தெரிகிறது.
முகலாயக்
கட்டிடக் கலைக்கே உரித்தான கூம்பு மாடம்.
முகலாயர்கள்
காலத்தில் இங்கெல்லாம் காவலர்கள் உச்சியில் நின்று காவல் காத்திருந்திருப்பார்கள்.
நுழைவாயிலிருந்து
பார்த்தால் தூரத்தில் வெள்ளைப் பளிங்காக தாஜ்மஹல். ஷாஜஹான் நினைத்திருந்திருப்பாரா… பிற்காலத்தில் தான் தூர
இருந்துதான் தாஜ்மஹலைப் பார்க்கவேண்டும், அருகில் செல்ல முடியாது என்று?
முதல்
நுழைவாயிலின் உட்புறக் கதவு. தாஜ்மஹல் வளாகத்தின் நுழைவாயிலின் இரும்புக் கதவு
இரண்டாம் படத்தில்.
சிறிது
தூரத்தில் இருந்து ஒன்றைப் பார்க்கும் அழகு, வெகு அருகில் சென்றால் தெரியாதோ?
வளாகத்தின் தெற்குப் பகுதியில் நுழைவாயில் இருக்கிறது. வடக்குப் பகுதியில் தாஜ்மஹல், சமாதிகள் அமைந்துள்ள இடம் இருக்கிறது. தாஜ்மஹலின் பின் பகுதியில் வளாகத்தைத் தொட்டுக்கொண்டு யமுனை ஆறு ஓடுகிறது.
இவ்வளவு
தூரம் வந்துவிட்டு தாஜ்மஹலைப் பார்க்காமல் போகலாமா? எங்கெல்லாம் சென்றேன், அது எனக்குள் விளைத்த
எண்ணங்கள் என்னென்ன என்பதை அடுத்த வாரம் காணலாமா?
(தொடரும்)
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்..
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
வாழ்க குறள் மற்றும் திருவள்ளுவர் புகழ்
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம்
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
காசியம்பதியை அவுரங்கசீப்பு அழித்த பின்னும் காரணம் இப்போ கிளம்பியிருக்கின்றதே...
பதிலளிநீக்குகேட்டதுண்டா?..
கலையாவது கத்தரிக்காயாவது,!!..
கேட்டதில்லை. ஆனால் வாரணாசி பயணக் கட்டுரைகள் பகிரும்போது எழுதுகிறேன்
நீக்குதேஜோ மஹால் என்பதே தாஜ் மஹால் என்று ஆனது என்று ஒரு பேச்சு இருக்கின்றது...
பதிலளிநீக்குஅதைப் பற்றிய ஆய்வு என்ன ஆயிற்று?
ஆய்வு இணையத்தில்.
நீக்குஇதைப்பற்றி நிறைய படித்துள்ளேன். வரலாற்று விஷயங்களை ரொம்பத் தோண்டக்கூடாது.
நீக்குசிறப்பான் பயணக் கட்டுரை..
பதிலளிநீக்குவாழ்க வாழ்க...
நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குஇந்த வார படங்கள் தெளிவு குறைவு. இரவு பயணம் வைத்தாலும் உணவு உபசரிப்பில் குறை வைக்க்க வில்லை. ஆக்ரா படங்கள் பலவும் இணையத்தில் கிடைத்தாலும் உங்கள் படங்கள் சற்றே வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். நீங்க அந்த ஜெய்பூர் பெண் படத்தைச் சொல்லவில்லையே
நீக்குஆக்ரா படங்கள் பல பகுதிகளில் வரும்
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குஜெய்ப்பூரில் கலைப்பொருட்கள் எல்லாம் மலிவாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குநாங்களும் வித விதமாக வீட்டுக்கும், நினைவு பரிசாக கொடுக்கவும் வாங்கி வந்தோம்.
நீங்கள் எடுத்த கலைப்பொருட்கள் படங்கள் நன்றாக இருக்கிறது.
படங்கள், செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ஜெயப்பூரை சுற்றிப்பார்க்க இரண்டு மூன்று நாளாவது வேண்டும்.
அப்படியும் எல்லாவற்றையும் பார்த்து விட முடியாது. நிறை இடங்கள் இருக்கிறது பார்க்க.
துர்காதாஸ் ராதோர் பற்றிய வரலாறு தெரிந்து கொண்டேன்
//முதல் நுழைவாயிலின் உட்புறக் கதவு. தாஜ்மஹல் வளாகத்தின் நுழைவாயிலின் இரும்புக் கதவு இரண்டாம் படத்தில்.//
இரண்டு படமும் நன்றாக இருக்கிறது.
தாஜ்மஹலின் படங்கள் அருமை.
நன்றி கோமதி அரசு மேடம். ஜெய்பூரில் கலைப் பொருட்கள் வாங்க நேரமில்லை
நீக்குஆக்ரா போனதுண்டு. நீங்க சொல்லியிருக்கும் இடங்கள் இந்தக் கோட்டைக்கு முன் இருக்கும் ஹனுமான் கோயிலும் சென்றதுண்டு. ஆனா இப்படித் தங்குமிடம் இருக்கும் என்பதெல்லாம் தெரியலை நான் போனது 32 வருடங்கள் முன்னர்!!ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
என்னாது... கீதா ரங்கன் (க்கா) என்னைவிட 32 வருடங்கள் மூத்தவரா? பார்க்கும்போது அப்படித் தெரியலை.
நீக்குநீங்க 1990லயா போனீங்க? இப்பவும் ரொம்ப மாறிடலை. வரும் வாரங்களில் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
நீக்குசிறிது தூரத்தில் இருந்து ஒன்றைப் பார்க்கும் அழகு, வெகு அருகில் சென்றால் தெரியாதோ?//
பதிலளிநீக்குதூரத்தில் பார்க்கும் போது ஒரு அழகு. வெகு அருகில் பார்க்கறப்ப அது வேறு ஒரு அழகு.
(இது ஒரு பையன் சொன்னது நினைவுக்கு நினைவுக்கு வருது. ஒரு பையன் பொண்ணு பார்த்துட்டு… தூரத்துல அழகா இருந்தா சரி போய் பார்த்துடுவோம்னு கிட்ட போய் பார்த்தா ஸோஸோ தான்…ஹாஹாஹா)
கீதா
பெண்ணுக்குள்ள அதே ரூல்தான் தாஜ்மஹலுக்குமா? ரொம்ப நெருக்கத்தில் சுமார்தான் ஹாஹாஹா
நீக்குஅந்த டவர் போன்றது காவலுக்கானதுதானே நெல்லை. Watch tower!
பதிலளிநீக்குகோட்டையின் படங்கள் தாஜ்மஹல் எல்லாமே அழகு. தாஜ்மஹலும் பார்த்ததுண்டு. கோட்டையும் பார்த்ததுண்டு.
கீதா
இதில் நிறைய படங்கள் வரும் கீதா ரங்கன் க்கா.
நீக்குமுகலாயக் கட்டிடக் கலைக்கே உரித்தான கூம்பு மாடம்.//
பதிலளிநீக்குஆமா. அதே போல நுழைவாயிலில் இருக்கும் டிசைன். அதுவும்
//ஷாஜஹான் நினைத்திருந்திருப்பாரா… பிற்காலத்தில் தான் தூர இருந்துதான் தாஜ்மஹலைப் பார்க்கவேண்டும், அருகில் செல்ல முடியாது என்று?//
ஏன், நெல்லை?
கீதா
விளக்கம் வரும் வாரங்களில்
நீக்குஎல்லாமே ரசித்தேன் நெல்லை!
பதிலளிநீக்குமதுரா போனதுண்டு ஆனால் கோகுலம் போனதா நினைவில்லை. அது எப்படி இருக்கும்னு பார்க்க ஆவல்.
கீதா
ஒரு டிபிக்கல் கிராமம் கோகுலம். மதுரா வளர்ந்த ஊர். கண்ணன் பிறந்த ஜெயில் செல்லும் வழியில் ஒன்றிரண்டு கிரௌண்டில் அழகாகக் கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த நெடிய சாலை
நீக்குஜெயப்பூர் அரண்மனை நீங்கள் கூறியது போல பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
பதிலளிநீக்குகலைப்பொருட்கள், ராஜஸ்தான் உடை நன்றாக இருக்கிறது.
ஆக்ரா கோட்டை ,தாஜ்மகால் எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பல காலமாக இருக்கிறது. முடிந்தால் பார்ப்போம்.
வாங்க மாதேவி. சரித்திரம் படித்துவிட்டு ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்தால் அந்த அனுபவமே தனி. வரும் வாரங்களில் காணலாம்
நீக்குசென்னை பயணத்திலிருந்து திரும்பிக்கொண்டிருப்பதால் சுருக்கமான விளக்கங்கள்.
பதிலளிநீக்கு15 அடி ஏரி நீருக்கு மேல் கட்டப்பட்ட அரண்மனை அருமை. அந்தக்காலத்தில் இன்னும் நீர் நிறைய இருந்திருக்கலாம் அதன் நடுவில் இப்படி எப்படி அழகான அரண்மனை கட்டியிருக்கிறார்களே ஆச்சரியம். வெள்ளைக்கல்! தாஜ்மஹலின் ஃபோட்டோக்கள் இரண்டுதான் என்றாலும் நன்றாக இருக்கிறது. ஜெய்ப்பூர் ஹவா மஹலும் மிக அழகாக இருக்கும் என்று தோன்றுகிறது பல தளங்கள் இருக்கும் போலத் தெரிகிறது. இப்படியானவை எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. நல்ல விவரணம், நெல்லைத்தமிழன்
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளசிதரன் சார்... திகட்டும் அளவு தாஜ்மஹல் படங்கள் வரவிருக்கின்றன. ஏரியில் நீர் நிரப்புவதற்கு முன்பு அரண்மனையைக் கட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குயாத்திரை பதிவு அருமை. ஜெய்பூரின் கலைப் பொருட்கள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ,
ஹனுமான் மந்திரில் உள்ள கோவிலில் நானும் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டேன்.
துர்காதாஸ், தளபதியாக இருந்தாலும் அவரின் அரச விசுவாசம் வியக்க வைக்கிறது.எத்தனை சிறந்த வீரர். அந்த கால மன்னர்கள் ஆட்சியில் நிறைய பேர்கள் மந்திரி, சேனாதிபதி, தளபதி என அனைவரும் இப்படி அரச பக்தியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, திளைத்தவர்கள் இல்லையா? அவர்களால் அரசருக்கும் அரச குடும்பத்திற்கும் எத்தனை நல்லதுகளை செய்திருக்கிறார்கள் எனப் படித்தது நினைவுக்கு வருகிறது.
தாஜ்மஹால் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பார்த்து, தெரிந்து கொண்டேன். அங்கு எடுத்த படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. அதன் ஒவ்வொன்றின் விளக்கங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தங்களது பயணத்துடன் தொடர்கிறேன்.
எனக்கு இருவாரங்களாக உடனடியாக வருவதற்கு நேரங்கள் கிடைக்கவில்லை. எனினும் தாங்கள் சுவையாக சொல்லிக் செல்லும் யாத்திரை பதிவை விடாமல் படித்து விடுவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நீங்கதான் எழுதியிருக்கீங்களே நிறைய வேலைகள் இருக்கின்றன என்று. ஆக்ராவில் எடுத்த படங்களே இன்னும் சில பல பகுதிகள் வரும். அது வரலாற்றின் பக்கம் செல்வதால், கோவில் பகுதிகள் அதற்குப் பிறகுதான் வரும்.
நீக்குஎத்தனையோ தளபதிகள் தங்கள் அரசருக்கு மிக விசுவாசமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்காகத் தங்களின் உயிரை ஈந்திருக்கின்றனர்.
நீக்குஇப்போதான், பெரிய தூரல் வருகிறது, அடுத்து மழைதான் என்று இன்றைய எபியில் உங்கள் கருத்துக்குக் கீழ் எழுதினேன். அதற்குள் தூரல் நின்று வெயில் வந்துவிட்டது.