எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சரியாகத்தான் இருந்தது. எப்போது இந்த மாற்றம் வந்தது?
எந்த மாற்றம்?
எல்லோரும் பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி கல்லூரியில் படித்து வேலைக்கு போனாலும் காலை துயிலெழும் வழக்கம் சரியாய்த்தானே இருந்தது?
சொல்லலாம், அப்போதெல்லாம் அலுவலக வேலை என்பது பெரும்பாலும் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து மணி பத்தரை மணி என்று. ஷிப்ட்டில் வேலை செய்பவர்கள் மதியான ஷிப்ட்டாயிருந்தால் அல்லது இரவுப் பணியாயிருந்தால் கொஞ்சம் அசந்து, மாற்று நேரத்தில் தூங்குவார்கள்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இந்திய வேலை வாய்ப்பில் வேலை செய்யும் பாணிகளில், நேரங்களில் ஒரு மாற்றம் வந்தது. ஐ டி கம்பெனிகள் என்று சொல்லப்படும் பன்னாட்டு துறைகளில் வேலை செய்யும் வாய்ப்பு இந்தியாவில் பெருகியது. அந்த வேலை நேரத்துக்கேற்ப நம் தூக்க பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் வந்தன. ஆறுமணி நேர வேலை, இரவுப்பணி என்றால் 7 - 7 என்பதெல்லாம் மாறி ஒன்பது மணி நேரம் வேலை வெவ்வேறு நேரங்களில் அமைந்தன.
இந்த வழக்கத்தின் காரணமாக இந்திய இளைஞர்களின் தூக்க நேரங்கள் மாறத்தொடங்கின. ஷிஃப்டுக்கு தகுந்தாற்போல மாற்றம் என்பது காலப்போக்கில் காலை பணியாய் இருந்தாலுமே தாமதமாக எழும் வழக்கம் வந்து விட்டது. நான் பார்த்து, நண்பர்கள் வீட்டிலும் நிறைய உறவுகள் வீட்டிலும் காலை ஆறு மணிக்கு முன் அல்ல, ஒன்பது மணிக்கு முன் துயிலெழும் பழக்கமே போயே போய் விட்டது. சில வீடுகளில் பத்து மணி, பதினோரு மணி! மிகக் குறைந்த இல்லங்களிலேயே வைகறைத் துயிலெழும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
வேலை, ஸ்ட்ரெஸ் என்று காரணம் காட்டிக் கொள்கிறார்கள். ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்காது. நானும் இரவுப் பணி பார்த்திருக்கிறேன். இரவு 7 முதல் காலை 7 வரை. அது மாதிரி கண்விழிக்கும் நேரங்களில் மறுநாள் பசியே இல்லாமல் ஒரு மாதிரி மந்தமாய் உணர்ந்திருக்கிறேன். அப்புறம் வேளை கெட்ட வேளையில் வயிற்றில் அமிலம் சுரக்கும். முதலில் எதுவும் சாப்பிடவே தோன்றாது. அப்புறம் பசியா என்றறியாமல் போய் கண்டதையும் எடுத்து வாயில் போடத் தோன்றும்.
காலை ஐந்தரை, ஆறெல்லாம் வேண்டாம் அட, ஒரு 7 மணிக்குள்ளாவது எழுங்கள் என்று சொன்னால் மகன்கள் முறைக்கிறார்கள். காதில் வாங்குவதில்லை. இப்போது கிரிக்கெட் காரணம், அது இல்லாத மற்ற சமயங்களிலும் ஏதோ ஒரு காரணத்தால் இரவு இரண்டு மணிக்கு மேல்தான் படுக்கிறார்கள். காலை நேரத்தின் அற்புதங்களை, சுகங்களை, பரவசத்தை, ஓசோன் தூய்மையை, அமைதியை நீங்கள் இழக்கிறீர்கள் என்று சொல்லிப் பார்த்தும் பயனில்லை. இத்தனைக்கும் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் காலங்களில் சீக்கிரம் எழுந்தவர்கள்தான். பாஸ் பெயரைச் சொல்லி அவர் அத்தை ஒருதரம் சொன்னார்.."இவங்க வீட்டுல பாரு.. பிள்ளைகளை எப்படி வளர்த்து இருக்கான்னு.. அஞ்சு, அஞ்சரைக்கு டாண்ணு எழுந்துர்றாங்க பசங்க" என்று பாராட்டு பத்திரமும் வாங்கி இருக்கிறார்கள்.
நேரத்துக்கு தூங்கச் சென்றால் காலை ஓரளவுக்காவது சீக்கிரம் எழலாம். அந்த பழக்கமும் வழக்கொழிந்து விட்டது. இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் படுப்பது வழக்கமாகி விட்டது. செல்போன், வாட்ஸாப், OTT திரைப்படங்கள் இத்யாதி... இத்யாதி...
இயற்கையை எதிர்க்கும் இந்த மாற்றம் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை! எனக்கு பிடித்தால் என்ன, பிடிக்கா விட்டால் என்ன... யார் கேட்கிறார்கள்!
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
நியூஸ் ரூம்
- ஜெய்ப்பூரில் ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவுரவ் சோனி என்பவருடன் இன்ஸ்டாகிராமம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கவுரவ் சோனி, தாம் ஜெய்ப்பூரில் தங்க நகைக்கடை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். செரிஷ் அவரிடம் தங்க நகைகள் வாங்க முயன்றுள்ளார். இதையடுத்து, சோனியிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஷ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.300 தான்.
- மனித மூளையிலேயே கணினியை உருவாக்கலாம் என்றால் நம்புவீர்களா? இதைக் கேள்விப்படுவதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் போல தோன்றலாம். ஆனால் இதை உண்மையாக்கி சாதித்துள்ளனர் ஸ்வீடன் விஞ்ஞானிகள். Final Spark என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் Brainware என்கிற முற்றிலும் புதுமையான கணினியை உருவாக்கியுள்ளனர். இது மனித மூளையின் நியூரான்கள் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. Brain மற்றும் Hardware என்ற இரண்டு பெயர்களையும் இணைத்து Brainware என்ற பெயர் வைத்துள்ளனர்.
- 18வது மக்களவையில் பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைவு. 2019ல் மக்களவையில் 78 பெண் எம்.பிக்கள் இடம் பெற்றிருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 74 ஆக குறைந்துள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முந்திரிதோட்டத்தில் வசித்து வரும் பா.ஜ.க. மத்திய அரசின் நலத்திட்ட பொதுச் செயலாளராக இருக்கும் ஜெய்சங்கர் என்பவர் மாற்றுக்கட்சிகாரர்களிடம், "நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார், அப்படி நடக்காவிட்டால் நான் மொட்டை அடித்துக் கொண்டு பரமன்குறிச்சி பஜார் ரவுண்டானாவை சுற்றி வருகிறேன்" என்று பந்தயம் கட்டியிருக்கிறார். அண்ணாமலை தோற்றதால் சொன்னபடி மொட்டை போட்டு பரமன்குறிச்சி பஜார் சுற்றி வந்திருக்கிறார்.
இவர் இப்படி என்றால் NDA கூட்டணி ஜெயிக்க வேண்டும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் அப்படி நடந்தால் தான் பழனி முருகனுக்கு முடி காணிக்கை தருவதாக நேர்ந்து கொண்டு, அதை நிறைவேற்றியிருக்கிறார் பி.ஜே.பி. பெண் உறுப்பினர் ஒருவர். - அரசியல்வாதிகள் மக்களை மொட்டை அடித்து விடுவார்கள் என்பது உண்மைதானோ?
- மேட்டுப்பாளையம் காத்திருந்த சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்.ஐ காயம்.
- தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உரிமை கோராத 26 உடல்கள் ஒரே நாளில் அடக்கம்.
- பெலகாவியில் திருமணம் செய்து கொள்ளாமல் கருத்தரிக்கும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விற்பனை செய்து வந்த டாக்டரின் கிளினிக்கிற்கு சீல் வைக்கப் பட்டது.
- திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ஜுன் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் முதலாவதாக வந்த இண்டிகோ விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அளித்து வரவேற்பு கொடுக்கப் பட்டது.
- தமிழகத்தின் 50 சதவீதம் ஸ்டார்ட் அப்களின் தலைமை அதிகாரிகளாக பெண்கள்.
- காபி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் காபித்தூள் விலை கிலோவுக்கு, 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
எடுக்கப்பட்டது இணையத்திலிருந்து இது...!
***********************************
புருவங்களின் நேர்த்தியை கண்டுக்காம விட்டுடலாம்...! அந்தக் கண்கள்... ரசித்த படமொன்று... ஏதோ ஒரு துரோகத்தை சந்தித்து விட்ட வேதனை அந்தக் கண்களில்... "எவ்வளவு நம்பினேன்... நீயா... நீயா இப்படி?' என்பது போல... கவிதை எழுதலாமா?
இதழ்கள்
புன்னகைக்க முயன்றாலும்
கண்கள்
ஒத்துழைக்க மறுக்கின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
குமுதத்தில் சுஜாதாவின் கண்ணோட்டம் என்கிற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை சில காலம் எழுதினார். அது புத்தகமாகவோ, வேறு பகிர்வாகவோ நான் பார்த்த நினைவில்லை. அதிலிருந்து ஒரு விஞ்ஞானக் கற்பனைச் சிறுகதை கீழே...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
படித்து, யோசித்து, பகிர்வது....
“இந்தியப் படங்கள் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“இந்தியப் படங்கள் என்றால் வண்ண வண்ணமாக உடையணிந்து கூட்டமாக ஆடுகிற படங்களைக் கேட்கிறீர்களா?” என்று கேட்டார்.
எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ’நல்ல இந்தியப் படங்கள்’ என்று திரும்பக் கேட்டேன்.
அதைப் பார்த்ததும் எனக்கு புதிய உத்வேகம் வந்துவிடும்’ என்று சொன்னார்.
“’பதேர் பாஞ்சாலி’ ஏன் உங்களைக் கவர்கிறது?” என்று கேட்டேன்.
“அதில் இருக்கும் உண்மையும் எளிமையும் எனக்குப் பெரிய உந்துதலாக இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் ஆன்மா அந்த சினிமாவில் இருக்கிறது” என்று சொன்னார்.
அப்போது, ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்ற காந்தியின் மேற்கோள் என் நினைவுக்கு வந்தது.
உலகின் முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான மக்மல்பஃப் ஆன்மாவைப் பதிவுசெய்த ஒரு திரைப்படமாக ‘பதேர் பாஞ்சாலி’யை ஏன் கருதினார்?
காரணம் எளிமையானது. அந்தப் படத்தில் இயல்பான ஒரு கிராமம் இருந்தது. இயல்பான கிராமம் என்பது இயல்பான மனிதர்களால் ஆனது. ஓர் இந்தியக் குடும்பத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் மிக முக்கியமான அங்கத்தினர்கள்.
பொக்கிஷம் :
ரகசிய ஷார்ட்கட்!
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..
பதிலளிநீக்குகுறள் வாழ்க..
வாழ்க...... வாழ்க......
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க..... வாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாழ்க.,,,
நீக்கு/// எவ்வளவு எழுதினாலும் இதனினும் சிறப்பாய் ஏதோ ஒன்று எழுதப்பட காத்திருக்கின்றது..///
பதிலளிநீக்குஏடும் எழுத்தும்
ஏதொன்றும்
அறியாதவர்
எண்ணலும் ஏது?..
எழுதுதலும் ஏது?..
ஆம், இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நீக்குஇந்தியக் குடும்பத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் மிக முக்கியமான அங்கத்தினர்கள்.
பதிலளிநீக்குஅப்படியா!..
அப்படிதான் சொல்லி இருக்கிறார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி. நேற்று வரவில்லையோ....
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. (இன்னமும் முழுதாக படிக்கவில்லை) "தூக்கமும் கண்களை தழுவட்டுமே" என்ற பாடலை நினைவுபடுத்தியது தங்கள் பதிவின் தலைப்பு. தூக்கம் பற்றிய தங்களின் எண்ணங்கள் சிறப்பு. நாம் எப்போதும் இந்த நியதிகளின்படிதானே வாழ்ந்து வருகிறோம்.
கடுமையான உடல் அசதிகள் சமயங்களில் நல்ல தூக்கத்தை கொண்டு வந்து தரும். ஆனால், மன உளைச்சல்கள் அதை புறக்கணித்து உடலை அசதியாக்குவதே தன் குறிக்கோளாக நினைத்து செயல்படும்.
மாறுபட்ட தூக்கங்கள் சிரமமானவைதான். அதை முன்பு நானும், என் குழந்தைகளும் அவர்களின் அலுவலக இரவு ஷிப்ட் வேலைகளில் அனுபவித் திருக்கிறோம். கொஞ்ச காலமாக அந்த வகை தொந்தரவுகள் இல்லை. இந்த நிலையில் இப்போது வீட்டில் தினமும் காலையில் ஆறிலிருந்து வரும் இந்த தண்ணீருக்காக காலையில் ஐந்து மணிக்கு முன்பாக எழ வேண்டிய கட்டாய நிர்ப்பந்தங்கள். இன்னமும் சில வாரங்களில் எப்போதும் போல் 24 மணிநேரமும் குழாய்களில் தண்ணீர் வரும் எனச் சொல்கிறார்கள். வரட்டும். இந்த ஒரு சிரமங்களிலிருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கட்டும். மற்றவைக்கு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் தண்ணீர் கஷ்டம் சீக்கிரம் விலகட்டும். பெங்களுருவில் நல்ல மழை என்று அடிக்கடி செய்திகளில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். தேவைக்காக சீக்கிரம் எழுவது அன்று, விரும்பி தினமும் சீக்கிரம் எழவேண்டும் என்பது என் கட்சி. இப்போதுள்ள இளைய சமுதாயம் இரவு நெடுநேரம் விழித்து, பின் தூங்கி, காலை தாமதமாக, வெகு தாமதமாக எழுகிறார்கள் என்கிறேன்.
நீக்குஇப்போ கூட பெரிய தூரல் வர ஆரம்பித்திருக்கிறது. மழை நிச்சயம். தண்ணீர் தினமும் பிடித்து வைக்கணும் என்றால் அது ரொம்பவே கஷ்டம். இன்னும் ஓரிரண்டு வாரங்களில் கமலா ஹரிஹரன் மேடம் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும்
நீக்குபெரிய கங்காளங்கள், பேரல்கள், காலக்கொடைகள் வைத்து மழை பெய்யும்போது மொட்டை மாடியில் வைத்து விட்டால் அதில் தண்ணீர் நிறையுமே... சன்ஷேட் போன்ற இடங்களை சுத்தம் செய்து வைத்தால் அதில் தேங்கும் தண்ணீரை உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் மின்சாரம் இல்லாத ஒரு சமயம் நாங்கள் இப்படி எல்லாம் செய்தோம். சன்ஷேட் தண்ணீர் கீழே போய்விடாமல் ப்ளக் பண்ணி வைப்போம்!!
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
நீக்குஆம் இன்று இங்கும் நல்ல மழை. பூமியில நீர் பிடிப்பு சரியாகி விட்டால் கொஞ்சம் பிரச்சனை சரியாகி விடும். அப்பார்ட்மெண்டில் மற்றுமொரு போர்வெல் போடலாமா என ஆலோசனை நடக்கிறது. ஒரு வீட்டிற்கு இவ்வளவு என அனைவரும் சேர்ந்து மொத்தமாக ஆகும் செலவுக்கு ஏற்ப ரூபாய் தந்துதான். இந்த நேரத்தில் பெய்யும் மழைகளும் ஒத்துழைத்தால் சரிதான். கூடிய விரைவில் தங்கள் வாக்குபடி 5 மாத கஸ்டங்களும் நிவர்த்தி ஆக வேண்டும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குதாங்கள் தந்த ஆலோசனைகளும் சிறப்பானவை. அப்படியும் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. ஓரிடத்தில் பெரிய மழை, ஒரிடத்தில் சுமாரான சிறிய மழை என மழையும் விகிதப்படுகிறதே..! நான் கூடச் சொல்வேன். நன்றாக மழை பெய்யும் போது டேங்க்கை (அப்பார்ட்மெண்ட் ஆகையால் பல உள்ளன) திறந்து வைத்தால் மழை நீர் அதில் விழுமேயென... ஆனால் காற்றுடன் பெய்யும் போது குப்பைகளும் அதில் வந்து விழ சாத்தியமுள்ளதோ என்னவோ? இத்தனை நாள் மழையில் .பூமியில் நீர்வளம் வந்து விட்டால் இது நாள்வரை பட்ட தொல்லைகள் விலகும். பார்க்கலாம் எல்லாம் தெய்வச் செயல்கள்தானே..?! தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த மாற்றத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நானும் வாழ்க்கையில் நாலைந்து முறை எட்டு மணிக்கு எழுந்திருக்கிறேன். அன்றைக்கு எல்லாமே தாமதமாவது மட்டுமல்ல, வேலை செய்யும் நேரமும் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரவு ஒன்பது அல்லது ஒன்பதரை என்பது நான் படுக்கச் செல்லும் நேரம். என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது இது.
இப்போதும் எட்டரையிலிருந்து மறுநாள் காலை பத்து மணி வரை வாட்சப் பக்கம் போவதில்லை. போன் எடுப்பதில்லை. இதனுடைய நன்மையைப் பலர் அறிவதில்லை.
உண்மை. படுக்கப்போகும் ஒரு மணி நேரம் முன்பே தொலைகாட்சி, அலைபேசி பார்பபதை தவிருங்கள் என்று தினமலரில் அடிக்கடி கட்டம் கட்டி போடுகிறார்கள். நல்லது நம் கண்ணில் படுவதில்லை. என் அப்பாவிடம் இருந்து தான் எனக்கும் இந்தப் பழக்கம் வந்தது. அப்போதெல்லாம் அது சாதாரண நடைமுறையும் கூட. ஏன் இப்போதெல்லாம் அப்பாவைப் பார்த்து பிள்ளைகள்\ அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை?!!
நீக்குநம்ம பசங்க நம்ம மாதிரித்தான், நாம் இப்போதிருக்கும் வயதை அவர்கள் அடைந்ததும் இருப்பாங்க (கால தேச மாற்றங்கள் தவிர). நாம, அவங்க இப்போதிருக்கும் வயதில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் அவங்களும் இப்போ இருக்காங்க
நீக்குஉண்மை. பொதுவாக அப்படி சொல்லலாம். ஆனால் நான் எந்தக் காலத்திலும் சீக்கிரம் எழுந்து விடுவேன்!
நீக்குசீக்கிரம் எழுந்துகொள்ளும் பழக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அதுபோல இரவு 9 மணிக்கு அப்புறம் விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லை. எப்போதாவது கிரிக்கெட் அல்லது எந்த வெப் சீரீஸ் பார்த்துக்கொண்டிருந்தாலும் 9-9 1/2 மணிக்கு படுத்துவிடுவேன். இது மிக நல்ல பழக்கம் என்பது என் எண்ணம்.
நீக்குஎன் எண்ணமும்!
நீக்குவேலை காரணமாக இரவு ஷிஃப்ட், மாறுபட்ட ஷிஃப்ட் (உதாரணமா இரவு 8 லிருந்து மறு நாள் காலை ஆறு) இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? அது பணி நிமித்தம். அதனால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் மற்றவர்கள் டிவி யைப் பார்த்துக்கொண்டு இரவு பதினொன்று, பன்னிரண்டு ஆக்குவது நல்லதில்லை. எந்த கிரிகெட் மேட்ச் என்றாலும் இரவு ஒன்பதரைக்கு தொலைக்காட்சியை ஆஃப் பண்ணிவிடுவேன் (என்னுடைய அறையில்)
பதிலளிநீக்குEssential duty தவிர மற்றவர்களுக்கு இரவுப் பணி கொடுப்பது அநியாயம். காசு சம்பாதிக்க இப்படியா?
இது வெளிநாட்டு கம்பெனிகளில் வேலைவாய்ப்பு என்பதால் வந்தது. அவர்கள் நேரத்துக்கு இங்கு உழைப்பது! ஆனால் இந்த மாதிரி பணிநேரம் இல்லாதவர்கள் கூட வெட்டியாக இரவு நேரம் கழித்து படுப்பது நல்லதில்லை என்று எவ்வளவோ சொல்லியும் கேட்பதில்லை.
நீக்குஅடுத்த தலைமுறை எப்போதுமே அனுபவப்பட்டு திருந்தும், வயதாகும்போதுதான் அப்பாவின் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் எண்ணம் வரும். நாமும் அப்படித்தான் இருந்தோம். இன்றைக்கு, நம் மறதியால், ரொம்ப ஒழுக்கமாக அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டு சின்ன வயதில் சமத்தாக இருந்தோம் என்று நம்புகிறோம்.
நீக்கு// ரொம்ப ஒழுக்கமாக அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டு சின்ன வயதில் சமத்தாக இருந்தோம் என்று நம்புகிறோம். //
நீக்குசீக்கிரம் எழும் பழக்கங்கள் போல சில வழக்கங்கள் நம்மிடம் அல்லது என்னிடம் இருந்தன. ஆனால் நான் அப்பா சொன்னதை கேட்டுக்கொண்டு சமர்த்தாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்ள மாட்டேன்! அடிப்படையான நல்ல வழக்கங்களில் குறை இருந்ததில்லை!
டிரைவிங் லைசன்ஸ், டாக்டர் சர்டிபிகேட்... இது பற்றி எழுதுகிறேன்.
பதிலளிநீக்குகல்ஃப் போன்று டிரைவிங் லைசன்ஸ், பயிற்சி அளிக்க முடியாத்து, இந்திய மக்களின் ஊழல் குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. நேர்மை, அறம் என்பதற்கும் அரசாங்க நடைமுறை, அதைத் தொடரும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை. மக்கள் ஊழலும் திருடும் குணங்களைக் கொண்டிருப்பதால், அவர்களிடமிருந்து அதே குணங்களுடன் அரசியல்வாதிகள் வருகிறார்கள்.
அல்லது அதனாலேயே அரசியல்வாதிகள் மேலும் மேலும் ஊழல் செய்ய தைரியம் பெறுகிறார்கள்! ஏன் ஒரு சிங்கப்பூர் போலவோ, அரபு நாடுகள் போலவோ, ஏன், மற்ற வெளிநாடுகள் போலவோ சட்டங்கள் இங்கு கடுமையாக இல்லை? மக்களும் சுயபொறுப்புடன், சுய கட்டுப்பாட்டுடன் இல்லை என்கிற வருத்தம் வருகிறது.
நீக்குஇங்கு சட்டங்கள் கடுமையாக உண்டு. ஆனால் அவற்றை நிறைவேற்றவேண்டிய காவல் துறை, நீதித் துறை சரியில்லை.
நீக்குஎனக்குத் தெரிந்து, ஐக்கிய அரபு நாடுகள் போல (துபாய், அபுதாபி..... ஆகிய எமிரேட்டுகளின் கூட்டு) சட்டங்களை மதிக்கும் நிறைவேற்றும் போக்கு எந்த நாடுகளிலும் இல்லை. அங்குள்ள கோர்ட்டுகளில், ஏழை பணக்காரன் உள்ளூர்காரன் வெளியூர்காரன் முஸ்லீம் இந்து என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. இந்தியா அந்த நிலையை எந்த யுகத்திலும் எட்டமுடியாது, காரணம் ஊழல் நேர்மையின்மை பேராசை.
// இந்தியா அந்த நிலையை எந்த யுகத்திலும் எட்டமுடியாது, காரணம் ஊழல் நேர்மையின்மை பேராசை. //
நீக்குஅதுதான் சோகம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிற பம்மாத்தை வைத்து நியாயப்படுத்தி விடுகிறோம். இங்கு குற்றங்கள் நடக்கும்போது, கொடூரமாக உயிர்கள் கொல்லபப்டும்போது மனித உரிமைக் கமிஷன் வராது. தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் குற்றவாளி பிடிபட்ட உடன் அது விழித்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு உரிமை பேசத் தொடங்கி விடும்.
அண்ணாமலை தோற்றுவிட்டார் என்பதால் மொட்டை போட்டுக்கொண்டவரிடம், அவர் கழுத்தில் இருப்பது புலி நகமா என்று ஆராய ஏராளமான போலீஸ் போவது போன்ற கூத்து இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் மாத்திரம்தான் நடக்கும்.
நீக்குநிஜமா இந்த செய்தி?
நீக்குசாதாரணமாகவே நான் காலையில் எழுந்து விடுவேன். காரணம் எனக்கு 8-4.30 டூட்டி. அந்த வழக்கம் ஒய்வு பெற்ற பின்னும் தொடர்ந்தது. ஆனால் இன்று எழுந்தது லேட்டா. காரணம் நேற்றைய இந்தியா அமெரிக்கா கிரிக்கெட் மேட்ச்.
பதிலளிநீக்குபா வெ மேடம் அக்கறையோடு யாரும் அதிகம் அறிந்திராத செய்திகளாக தேர்ந்தெடுத்து போடுகிறார். நன்று.
பாட்டுக்கு பாட்டு.
உறங்கி எழுந்தாலும்
மறக்கவில்லை.
லிப்ஸ்டிக்.
அது ஒரு காலம். சத்தியஜித் ரே, மிரினாள் சென் போன்ற வங்க இயக்குனர்கள் பரிசுகளை அள்ளிய காலம். இவர்களுடைய படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன் பதேர் பாஞ்சாலி உட்பட. ரே சறுக்கியது அவருடைய கலர் படமான சத்ரஞ் கே கில்லாடி. கலரில் அவருடைய தனித்தன்மை போய்விட்டது.
பொக்கிஷம் சோ சோ. உப்பில்லாதவை.
இந்த வியாழன் பதிவில் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது. என்ன என்று தெரியவில்லை.
Jayakumar
ஓ... கிரிக்கெட் மேட்ச் பார்ப்பீர்களா? நான் பார்ப்பதை நிறுத்தி வருடங்களாகின்றன!
நீக்குபா வெ அக்காவை பாராட்டுவோம்.
பாட்டுக்கு பாட்டு... ஊ.. ஹூம்... நியாயம் செய்யவில்லை.
சத்யஜித் ரே படங்கள் நான் பா...ர்.....த்...த.... தி.....ல்....லை!
//இந்த வியாழன் பதிவில் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது. என்ன என்று தெரியவில்லை.//
என்னவாக இருக்கும்? ரசித்த படம்? பிரபலங்கள் உரையாடல் போல? சுஜாதாவின் கதைப்பகிர்வு நிறைவாய் இல்லையோ?
கந்தசாமி
நீக்குஹா... ஹா... ஹா... என்ன சாமி! இப்படி சொல்லிப்புட்டீக....
நீக்கு//பா வெ மேடம் அக்கறையோடு யாரும் அதிகம் அறிந்திராத செய்திகளாக தேர்ந்தெடுத்து போடுகிறார். நன்று.//மிக்க நன்றி சார் __/\__ __/\__
நீக்குகண்ணில் தெரியுது
பதிலளிநீக்குஉள்ளத்தின் சோகம்
உதட்டில் தெரிகிறது
போலி புன்னகை
இதைத்தானே நானும் எழுதி இருக்கிறேன்?
நீக்குஉதடுகள்
மறைக்க முயன்றாலும்
காட்டிக் கொடுத்து விடுகின்றன
கண்கள்
ஒரு உள்ளார்ந்த சோகத்தை
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குநானும் காலை 4.30 க்கு எழுந்துவிடுவேன். இது அம்மாவிடம் கற்ற பாடம். இரவு லேட்டாக தூங்கினாலும் காலை எழுந்து விடுவேன்.
பதிலளிநீக்குஎன் அம்மா பேர குழந்தைகள் விடுமுறை நாளில் மெதுவாக எழுந்து கொண்டால் சொல்வது எழுந்து காலை கடனை முடித்து சாப்பிட்டு விட்டு அப்புறம் தூங்குங்கள். வயிறை காய போட வேண்டாம் என்று .
நேரா நேரத்திற்கு எல்லாம் நடக்க வேண்டும் என்பார்கள்.
மகன் சொல்வான் "ஆச்சி எந்திரி எந்திரி என்று சொல்ல சொல்ல இன்னும் கொஞ்சம் தூக்கம் வருகிறது" என்பான்.
வேலை நாளில், பள்ளி நாளில் விரைவில் எழுந்து விடுவார்கள். இரவு எத்தனை மணிக்கு தூங்க போனாலும். ஆனால் விடுமுறை நாளில் மெதுவாய் எழுந்து கொள்கிறார்கள். அதை மாற்ற முடியவில்லை.
கூட்டுக்குடும்ப வாழ்வில் லேட்டாக எழுவதெல்லாம் செல்லுபடியாகாது. ஆனால் இப்போதெல்லாம் எங்கே கூட்டுக்குடும்ப வாழ்க்கை? எல்லோரும் தனித் தனிகுடித்தனமாக இருக்கிறோம்!
நீக்குஆமாம், இவர்கள் எழும் நேரத்துக்கு காலை ஆகாரமே ஸ்கிப் செய்து விடுகிறார்கள்!
நீக்குநானும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தது இல்லை ஸ்ரீராம், திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் திருவெண்காட்டில்.
நீக்குஎன் அம்மா, என் மாமியார் யாரும் கூட்டு குடும்பம் கிடையாது.
பணி நிமித்தம் எல்லோரும் வேறு வேறு ஊர் தான். விடுமுறையில் பாட்டி, தாத்தா வீட்டுக்கு போவோம். அப்போது மகன் சொன்னதை சொன்னேன்.
நாள் , கிழமைகளில் . குடும்பவிழாக்களில் கூடுவது, விடுமுறைக்கு செல்வது மட்டுமே!
சுஜாதாவின் சிறு கதை தொகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்களும் இங்கு சுஜாதாவின் கதையை பகிர்ந்து இருக்கிறீகள்.
கதையின் முடிவு கடவுளே!
அவ்வப்போது எனக்கு மூளையை ரெஃப்ரெஷ் செய்து கொள்ள எப்பவுமே சுஜாதாதான் உதவி! சும்மாவே இருந்து மறுபடி என்றாலும் சரி, ஹெவி ரீடிங் படித்து போர் அடித்து போயிருந்தாலும் சரி.
நீக்கு//எவ்வளவு எழுதினாலும், இதைவிட சிறப்பாக இன்னும் ஏதோ ஒன்று எழுதப்படக் காத்திருக்கிறது என்று எண்ணவைக்கும் முகம், கண்கள், உதடுகள்...//
பதிலளிநீக்குஉங்கள் கவிதையும் படமும் நீங்கள் சொல்வது போலதான் இருக்கிறது
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅலைபேசியின் அபார வளர்ச்சிக்கு பிறகு இளைய தலைமுறையின் உறக்கம் மாறிவிட்டது.
பதிலளிநீக்குஅலைபேசி மட்டுமா, OTT, கிரிக்கெட்...தூங்காமல் இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம்!
நீக்குமுதல் பகுதி - ஸ்ரீராம், ஐடி வேலைகள் மற்றும் வெளிநாட்டு மெடிக்கல் என்க்ரிப்ஷன் வேலைகள் செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை வரும். அதுவே பழகிப் போய்விடுவதால் வேலை இல்லாத நேரங்களிலும் இரவு முழிக்கும் பழக்கம்.
பதிலளிநீக்குநல்லதில்லை என்பது என் அபிப்ராயமும். நம் உடல் மெட்டபாலிஸம் circadian rhythm பொருத்துதான் வேலை செய்கிறது. இந்த ரிதம் மிகவும் முக்கியம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு. காலை வேளையில் எழுந்திருப்பது என்பது சுக அனுபவம். நிறைய வேலைகள் நடக்கும். அந்த அமைதி, ஒரு இதமான சூழல், கொஞ்சம் தூய்மையான காற்று, பறவைகளின் சத்தம், என்று பல விஷயங்கள்.
கீதா
உண்மை. அதைதான் சொல்லி இருக்கிறேன்.
நீக்கு
பதிலளிநீக்கு///காரணம் எளிமையானது. அந்தப் படத்தில் இயல்பான ஒரு கிராமம் இருந்தது. இயல்பான கிராமம் என்பது இயல்பான மனிதர்களால் ஆனது. ஓர் இந்தியக் குடும்பத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் மிக முக்கியமான அங்கத்தினர்கள்.//
-இரா. செழியன் அவர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்.
பதேர் பஞ்சாலி படம் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன் பார்த்தேன். குழந்தைகள் பல நாட்கள் கண்ணிலேயே இருந்தார்கள்.
அத்தை பாட்டி நடிப்பு மிக அருமையாக இருக்கும்.
நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. இப்போது கூட பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதுதான்.. எப்போது பார்ப்பேன் என்றுதான் தெரியவில்லை.
நீக்குமனித மூளை வைத்துதான் கணினியே உருவாக்கப்பட்டது. இப்போது செநு வரை வ ந் தாயிற்று. இப்படியான கண்டுபிடிப்புகள் வரும் என்பதும் முன்னரே கட்டுரைகள் வ ந் திரு ந் தன.
பதிலளிநீக்குகட்சி அரசியலுக்கான வேண்டுதல்கள் எல்லாம் crazy மக்கள்
பெலகாவி - நல்லநடவடிக்கை.
காபி பொடி விலை கூடியதுதான் எனக்கு முக்கியச் செய்தியாகத் தெரிகிறது !!!!!!!!!!! ஹாஹாஹாஹா
கீதா
எனக்கும்! ஆனாலும் வாங்காமல் விடுவதில்லை!
நீக்குநம்ம ஊர்ல ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது மிக எளி து. நிறைய ஊழல் உண்டு. சில வெளிநாடுகளில் இதெல்லாம் மிகவும் கடினம்.
பதிலளிநீக்குஒரு கேள்வி எழுகிறது....பதிவு செய்த மருத்துவர்களும் கூட சும்மா சான்றிதழ் தர முடியும் தானே!? அவர்களுக்கும் ஏதாவது செக் பாயின்ட்ஸ் இருக்கும் என்று நம்புகிறேன்.
கீதா
எல்லாமே ஊழல்தான், காசுதான். இந்தியன் படத்தில் கூட ஒரு காட்சி வருமே...
நீக்குமருத்துவ சான்றிதழ் என்பதே பம்மாத்து. RTO office அருகில் நின்றுகொண்டிருந்தாலே, ஏகப்பட்டபேர் வந்து மருத்துவச் சான்றிதழ் வேணுமா, 200 ரூபாய் கொடுங்க என்று சொல்லி பத்து நிமிடங்களில் சான்றிதழைக் கொண்டுவந்து நம்மிடம் கொடுத்துடுவாங்க. இதைவிட, எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரு ஊழல் நடைபெறுகிறது. இதைப் பற்றி வியாழனுக்கு ஒரு சிறு பகுதி அனுப்புகிறேன்.
நீக்குஅனுப்புங்கள்.
நீக்குசின்ன வயதில் ஸ்கூலில் அலலது ஆபீசில் இல்லாத பாட்டியை சாகடித்து லீவு வாங்குவது போல வராத நோயை சான்றிதழ் கொடுத்து லீவு எடுப்பார்கள் ஊழியர்கள். மருத்துவச் சான்றிதழ் 98% பொய்தான்!
வானிலை ப்ற்றிய செய்தியை நானும் வாசித்தேன், ஸீராம். அதில் நாம் என்ன செய்ய வேணும் என்றும் சொல்லியிருக்காங்க. அதுக்கான படிகள் எடுப்பாஙகளா?!!!! மக்கள் நாமும் உட்பட.
பதிலளிநீக்குகீதா
ஊ... ஹூம். கண்டிப்பா மாட்டார்கள், மாட்டோம்!
நீக்குதேசிய கீதம் - துணுக்கு வாசித்து சிரித்துவிட்டேன்!
பதிலளிநீக்குஅதன் கீழான படம் உஙகள் விளக்கம் அதே, ஸீராம்.
அதற்கான கவிதையும் அருமை. ஆனா நீஙக இன்னும் யோசிக்கலாம் இன்னும் அழகான கவிதை பிறக்கும்!
கீதா
மனதில் இருக்கு... வெளியே வர மாட்டேன் என்கிறது! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல சில பிரச்னைகள்...
நீக்குசுஜாதா பக்கம் - சும்மா அம்சம்! அந்த எழுத்தின் பவர்!
பதிலளிநீக்குகீதா
மூன்றாவது உலகப் போர் வ ந் தா உலகமே இருக்காதோ!
நீக்குகீதா
வந்தால் தெரியும். ஆளாளுக்கு கையில் பவர்புல் அணுகுண்டுகள் வைத்திருக்கிறோம். கெமிக்கல் வெப்பன்ஸ் வேறு... கொரோனாவுக்கே உலகம் தாங்கவில்லை!
நீக்குபதேர் பாஞ்சாலி தேடிப் பிடித்துப் பார்க்கணும்ன்ற ஆர்வம் வந்திருச்சு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
ரொம்ப தேடவேண்டாம். யு டியூபிலேயே கிடைத்தது விடும் என்று நம்புகிறேன்!
நீக்குபொக்கிஷத் துணுக்குக்ள் - முதல், இரண்டாவது, கடைசி கொ ஞ்சம் சிறிய சிரிப்பை ஏற்படுத்ின
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொன்னது போல் ஐடி நிறுவனங்கள் இளைஞர்களின் உறக்கத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
பதிலளிநீக்குவெகு தாமதமாக உறங்கி (வெளிநாட்டவரின் மாலை நேரத்தில்) அவர்கள் நேரத்திற்கு எழுதல் என்று இப்படிப் போகிறது,. அது போல 50 ஐக் கடந்த சிலரும் 11 – 9 என்றது இப்போது 12-1 தான் உறக்கம் என்று போகிறது. காரணம் பல டிவி நிகழ்ச்சிகள் 11 12 மணி வரை நீட்டிச் செல்கிறார்கள், அதைப் பார்ப்பதால் உறக்கம் தாமதமாகிறது.
துளசிதரன்
ஐடி நிறுவனங்களில் பணிபுரியவொருடன் சேர்ந்து மற்றவர்களும் அதற்குப் பழகி விடுகிறார்கள். போதாக்குறைக்கு ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களில் இரவுப்பணி போல பார்ப்பவர்கள், ஐடி நிறுவனங்களில் கேப் டிரைவர்களாக இருப்பவர்கள்...
நீக்குசுஜாதாவின் ஸயின்ஸ் ஃபிக்ஷன் அருமையான கதை. சாதாரணக் கதையை இப்படி ஆக்க முடியும் என்பதற்கான எழுத்தாற்றல். மூன்றாவது உலகப் போர் என்று ஒன்றுஇருந்தால் நான்காவது உலகப் போர் என்பதே இல்லை மனிதனே இருக்கமாட்டான் எனும் அந்த உண்மையைச் சொல்கின்ற அருமையான கதை என்று எனக்குப் பட்டது.
பதிலளிநீக்குதுளசிதரன்
உண்மைதான். கதையின் வடிவம் கடைசியில்தான் விரிகிறது, புரிகிறது!
நீக்குசெய்திகள்/தகவல்கள் லைசன்ஸ், வானிலை இரண்டிற்குமே மக்களின் ஒத்துழைப்பும் அரசின் கட்டுப்பாடுகளும் மிகவும் தேவை.
பதிலளிநீக்குதுளசிதரன்
உண்மை. ஆனால் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே ஆபத்து இருக்கும். அனுபவிக்க வேண்டும்.
நீக்குநியூஸ் ரூம் - மூளையைப் போன்ற கணினி என்பதை வாசித்ததும் இது நினைவில் வருகிறது. 80 களில் என்று நினைக்கிறேன், ஸயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் தலையில் ஒரு ஹெல்மெட் போன்ற ஒரு கருவியை தலையில் மாட்டிக் கொண்டால் மூளையில் பதியப்பட்டிருக்கும் ஃபீலிங்க்ஸ்/உணர்வுகள் அவர்களுக்கு வரும். அதில் க்ளைமாக்ஸ் என்பது இறக்க இருக்கும் ஒரு விஞ்ஞானி அதை தலையில் வைத்துக் கொண்டு இறக்கும் போது மனிதனின் மனநிலை என்ன என்பதை மிகவும் அருமையாகக் காட்டியிருப்பார்கள். ப்ரெயின்ஸ்டார்ம் என்று நினைக்கிறேன் அந்தப்படம். அப்படிக் கதைகளில் ஃபிக்ஷன் என்று சொன்ன சம்பவங்கள் எல்லாம் உண்மையாகின்றன. இல்லையா? அப்படித்தானே டெர்மினேட்டர் போன்ற படங்களும். இப்போது ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என்றெல்லாம் வாசிக்கும் போது இப்படியான ஒரு இடத்தை நோக்கித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதானே.
பதிலளிநீக்குதுளசிதரன்
நான் அந்தப் படம் பார்த்ததில்லை. நீங்கள் மகரிஷி எழுதிய 'அதுவரையில் காஞ்சனா' பார்த்திருக்கிறீர்களோ?
நீக்குபொக்கிஷத்தை விட அந்த இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது சிரிப்பை வரவழைத்தது.
பதிலளிநீக்குதுளசிதரன்
பொக்கிஷம் அந்தக் காலம். இது இந்தக் காலம்!
நீக்குபடத்திற்கான உங்கள் கவிதை அருமை. கண்கள் காண்பதைத்தானே உதடுகள் வெளிப்படுத்துகின்றன!
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸி ஜி.
நீக்குஇளைய தலைமுறையின் நித்திரை நேரம் மாறிவிட்டது. சில இடத்தில் இரவு வேலையும் காரணம்.
பதிலளிநீக்குஇதைவிடுத்து ரிவி,போன் படம் என இரவு 2வரை செலவிடுவது தான் சகிக்க முடிவதில்லை காலத்தின் மாற்றம் என்பதா?
கவிதை நன்று. நியூஸ்ரைம் பலவித தகவல்களையும் தரூகிறது.
இலை கிளியாமல் சாப்பிடுவது சிரிப்பை வரவழைத்தது.
நன்றி மாதேவி. அங்கும் அப்படித்தானா?
நீக்குஅனைத்தும் நன்று. பொக்கிஷம் - ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் கருத்துக்கள் உண்மையானவைதான்.
/காலை நேரத்தின் அற்புதங்களை, சுகங்களை, பரவசத்தை, ஓசோன் தூய்மையை, அமைதியை நீங்கள் இழக்கிறீர்கள் என்று சொல்லிப் பார்த்தும் பயனில்லை. இத்தனைக்கும் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் காலங்களில் சீக்கிரம் எழுந்தவர்கள்தான். /
ஆம். உண்மைதான். அப்போதைய நிர்பந்தம் அப்படி எழச் சொன்னது. வேலை என வந்த பின் நாம் நம் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தினால் என்ன என நம் மனதே சில சமயம் ஆசை கொள்ளும் அல்லவா?
நான் எப்போதுமே சிறு வயதிலிருந்து ஐந்து மணிக்கு எழுபவள். இரவு எத்தனை தாமதமாக உறங்கினாலும் அந்தப் பொழுதில் முழிப்பு வந்து விடும். ஆனால், இப்போது சில சமயத்தில், உடல் அசதியில் மறுபடி கண்மூடி எழுவதற்கு சற்று தாமதமும் ஆகியுள்ளது. சீக்கிரம் எழுந்து பிரபஞ்ச சக்தியை உள்வாங்கினால் நமக்கு நல்லது என்பேன் நானும். அன்றைய நாள் உடலின் ஆரோக்கியத்தை உணர்வேன். .
தங்கள் கவிதை அருமை.
இதழ்களின் எண்ணங்களை நிராகரிக்கவே முயல்கின்றன அந்த கண்களில் தெறிக்கும் சோகங்கள்.
கவிதை வரிகளை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குநான் எப்போதுமே ராக்கோழிதான். ராத்திரி எத்தனை மணி வரை வேண்டுமானாலும் முழித்துக் கொள்ள முடியும், காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது கஷ்டம். மஸ்கட்டில் இருந்த பொழுது காலை 7 மணிக்கு அலுவலகம் துவங்கும். அதற்கு காலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு எழுந்திருக்கு வேண்டும். ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டால் நிறைய பொழுது இருக்கும். இப்போதெல்லாம் இரவு 11:30 க்கு தூங்கா விட்டால், தூக்கம் வருவதற்கு 1:30 அல்லது 2 ஏன் சில சமயங்களில் மூன்று மணி கூட ஆகி விடும். காலை 6:30க்கு முழிப்பு வந்து விடும். மதியம் தூங்கியே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குசிலருக்கு சில பழக்கங்கள். அவரவர் பழக்கம் அவரவருக்கு!
நீக்குநீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், அந்தப் பெண்ணைப் பார்த்தால் அரைத் தூக்கத்தில் முழித்துக் கொண்டவள் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஹிஹி!
பதிலளிநீக்குஹா... ஹா...ஹா... குளித்துவிட்டு வருவது போல இல்லையா?!
நீக்குஜோக்குகள் சுமார். கடைசி படத்தில் இருக்கும் பெண்மணி யார்?
பதிலளிநீக்குஅது பெண்மணி அல்லா... தேவர் என்று நினைக்கிறேன்.
நீக்குகாலையில் துயிலெழும் பழக்கம் வழக்கொழிந்து வருவது வருத்தத்துக்குரியது. இதே ஆதங்கம் எனக்கும் உண்டு.
பதிலளிநீக்குதொகுப்பு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு