வியாழன், 27 ஜூன், 2024

இல்லாத பொக்கிஷம்

 டெல்லியிலிருந்து  நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்த என் ஒன்று விட்ட தங்கை எங்களைக் காண வந்திருந்தாள்.பேசி, சிரித்து, களித்திருந்தபின் 'மாமா வீட்டுக்கு போகலாம், நீங்களும் வாங்க' என்று அழைத்தாள்.  நானும் பாஸும்  தங்கையுடன் கிளம்பினோம்.

ஆஸ்தான ஆட்டோ நம்ப வைத்து கழுத்தறுக்க, உபேர் பக்கம் ஒதுங்கினேன்.  வழக்கத்துக்கு மாறாக அடுத்த நொடியே புக் ஆனது.  படியிறங்க முற்படுகையில் கேன்சலும் ஆனது.  மறுமுயற்சியிலும் உடனே புக் ஆனது.  ராமு (பெயர் மாற்றப்படவில்லை!) வருவதாக பொத்தான் அழுத்தி இருந்தார்.  அன்று எனக்கு ராசிபலன் பார்க்கவில்லை.  அவரும் பார்த்திருக்க மாட்டார்..  சந்திராஷ்டமமோ..  அஷ்டமத்து சனியோ...  விதி சிரிக்கவில்லை.  லேஸாக புன்னகைத்தது.

ஊபரில் பெரும்பாலும் நல்ல ஓட்டுநர்களையே சந்தித்திருக்கிறேன்.  நல்லவரல்லாத என்றால், என் அனுபவத்தில் அதிகபட்சம் இறங்கும்போது கூடுதல் தொகை கேட்பவர்களை சொல்லலாம்.  அதுவும் அபூர்வம்.  ஏறும்போதே, அல்லது  புக் செய்த உடனேயே கால் செய்து ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா போட்டு கொடுக்கிறீர்களா என்பார்கள், கட் செய்து விடுவேன்.  அதாவது அவர்களை கேன்சல் செய்து விடுவேன்.  பத்து ரூபாய், 15 ரூபாய் என்றால் ஓகே..  அதுவே பெரும்பாலும் ஒத்துக்கொள்ளாமல் கேன்சல் செய்து விடுவேன்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நான் சந்தித்த இந்த ராமு மிக மோசமான நடத்தையை வெளிக்காட்டினான்.

அவன் பேசிய பேச்சுகளுக்கு, உபயோகித்த வார்த்தைகளுக்கு, முக்கியமாக அவன் நடத்தைக்கு அவனுக்கு மரியாதை தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

ஊபர் போட்டதும் வந்தவன், வீட்டுக்கு அருகில் வராமல் தெரு முனையில் நின்று எங்களை அங்கு வர சைகை காட்டினான்.  ரோட் மோசமாக இருக்காம்.  உண்மையில் எங்கள் தெரு மோசமாக இல்லை.  அவன் வந்த வழி மோசமாக இருந்திருக்கலாம்.  மேலும், சென்னையில் சும்மாவே ரோடுகள் மோசம்.  மழை வேறு பெய்தால் என்ன ஆகும் என்று எந்த சென்னைவாசிக்குதான் தெரியாது?

அப்புறம் நான் அழைத்தபடி தெருவின்  உள்ளே வந்தவன் நான் சொன்னபடியே இந்தப் பக்கமாய் கிளம்பினான்.  ரோடும் ஓகேதான், தூரமும் அதைவிட இது ஷார்ட்.

கிளம்பியது முதற்கொண்டே அவன் குரல் முணுமுணுவென்று கேட்டுக்கொண்டே இருந்தது.  சிலர் போனில் பேசியபடியே வருவார்கள்.  அப்படி பேசுகிறானா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

"கிலோமீட்டருக்கு 15 ரூபாயாம்...   ல*&$#@*^@.ள்....எவன் வச்சான் இப்படி...   ரோடாவா இருக்கு..  தே%^#$*&யா...  எவன் அப்பன் வீட்டு காசு...   இவனா ஓட்டறான் வண்டிய..."  இப்படி தொடங்கி இதையே வெவ்வேறு வார்த்தைகளில் கொஞ்சம் சத்தமாக - பின்னால் இருப்பவர்கள் காதில் விழும்படி அல்லது விழவேண்டும் என்றே - திட்டிக்கொண்டே, புலம்பிக் கொண்டே வந்தான்.  இடைவெளியே விடவில்லை.

பின்னால் பாஸும் தங்கையும் பேசிக்கொண்டபோது அவன் குரல் கொஞ்சம் சத்தமாக ஒலித்தது.  அதாவது அவன் பேசுவது அல்லது திட்டி உளறுவது பின்னால் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டுமாம்.

வார்த்தைக்கு வார்த்தை 'ல' வில் தொடங்கும் வசவும், 'தே' வில் தொடங்கும் 'விளித்தல் விகாரமு'ம்!

இது போதாதென்று இன்னொன்று செய்தான்.  ஸ்டேண்டில் Map பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய ஃபோனை கையில் எடுத்தான்.  ஒரு கை விரலால் நம்பர் ஒற்றினான்.  

லைன் கிடைத்தது போலும்..  யார் நம்பரோ...   ஆனால் நம்பராகத்தான் வந்தது.  எடுத்து பேசத்தொடங்கினான்.  அவன் பேசியது அவனுக்காக இல்லை என்று தெரிந்தது.  ஊபர் நிறுவனத்து ஆளிடம் பேசுகிறானாம்!  

கேட்பவன் கேனையா இருந்தா...  வசனம் நினைவுக்கு வந்தது...  போனில் இருந்த எதிர்முனை ஆளிடம் இஷ்டத்துக்கு எகிறினான்.


"கிலோமீட்டருக்கு 15 ரூபாய்னு வச்சிருக்கியே..  யாரைக் கேட்டு வச்சே...  ..  நீ வந்து ஆட்டோ ஓட்டறியா..   ரோடெல்லாம் எவ்வளவு மோசமா இருக்கு...   எத்தனை வாட்டி உன்கிட்ட சொல்லி இருக்கேன்...    ஊராய்யா இது..  (என்னை பிக்கப் செய்த இடம்)  மெயின் ரோட்ல விட்டுடு என்று நீ மேப் போட்டிருந்தா நீ மனுஷன்....இப்ப மட்டும் எதிர்ல வந்தே...   கூறு போட்டுடுவேன்..  அவ்வளவு காண்டுல இருக்கேன்..."  இந்த ரீதியில் நடுல நடுல மானே தேனே சேர்ப்பதுபோல சரளமாக அந்த இரு வசவுகள்...   

அவன் அவ்வளவு கோபக்காரனாம்...  அவ்வளவு வாய்ஸான ஆளாம்...  அதை கஸ்டமருக்கு காட்டுகிறானாம். கஸ்டமர்களை இப்படி குழந்தையாக நினைக்க வேண்டுமென்றால் அவன் போதையில்தான் இருந்திருக்க வேண்டும்.  வாசனையெதுவும் இல்லாததால் கஞ்சா போதையில் இருந்திருக்கக் கூடும்.  அதுதான் தமிழ் நாட்டில் இப்போது சல்லிசாக கிடைக்கிறதே...மது என்றால் கடை தேடி போகவேண்டும்.  கஞ்சாவோ 'மக்களைத் தேடி மருத்துவம்' போல தேடி வரும் போதை.

அடுத்து, எந்த போக்குவரத்து நிறுவனம் இப்படி தொடர்பு கொள்ள ஏதுவாக காத்திருக்கிறது?  அதுவும் ஊபர்?!!  எதிரில் கேட்டுக்கொண்டிருந்தவன் மரக்கட்டையா?  ஊபர் நிறுவனத்து ஆளாயிருந்தால், இவன் பேசிய பேச்சுக்கு  இவன் உரிமத்தை கேன்சல் செய்த கையோடு இவன் இருக்கும் இடம் தேடி வந்து உதைத்திருப்பான்.  ஊபர் தப்புத்தப்பாய் மறுபடி மறுபடி என்னிடம் காசு வாங்கியபோது அவர்களைத் தொடர்புகொள்ள நான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது.

இதில்வேறு,  பாஸும், தங்கையும் இவன் சேஷ்டை நாடகங்களை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தது அவன் எரிச்சலைத் தூண்டி இருக்க வேண்டும்.  இவர்கள், அல்லது எங்கள் கவனத்தைக் கவர குரலை தேவையில்லாமல் உசத்திக் கொண்டே போனான்.

பாஸ் மற்றும் தங்கையுடனான பேச்சில் எனக்கு கவனம் செல்லவில்லை.  இவனை எப்படி கையாள்வது என்று யோசனை ஓடியது.  

ஒன்று அங்கேயே ஆட்டோவை நிறுத்தி வேறு ஆட்டோ பிடிக்க வேண்டும்.  இதில் ஒரு  சிரமம், டெஸ்டினேஷனை உடைத்து பாதியில் இறங்கினால் அந்த 'ஆப்' என்ன, எவ்வளவு காட்டும்?  ஊபர் போன்ற நிறுவனங்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை.  கொள்ளைக்  காரர்கள்.  ஏற்கெனவே இவர்களோடு எனக்கு ஒரு அனுபவம் இருக்கிறதே.....  முழு தொகையும் கொடுக்க வேண்டியதாகி விட்டால்?  அடுத்து, 'ஆப்' தொகையை குறைத்து காட்டினாலும் இந்த கடுகடு கஞ்சா பார்ட்டி என்ன ஸீன் கிரியேட் செய்வானோ, பிரச்னை செய்வானோ...

அடுத்து இங்கேயே இப்போதே கத்தி (இல்லீங்க...  குத்தற கத்தி இல்லை, சத்தம் போடுவது!) விட்டு விடலாமா.. அல்லது இறங்கும்போது ஒரு காட்டு காட்டி விட்டு விடலாமா...

அல்லது எப்போதும்போல இது எதையுமே காதில் வாங்காதது போல, கவனத்தில் கொள்ளாது 'ஆப்'பில் காட்டிய தொகையைக் கொடுத்து விட்டு ஸைலண்ட்டாக நகர்ந்து அவன் வயலென்ட்டை வேஸ்ட் / அலட்சியம்  செய்து கடுப்பேற்றி விடலாமா...

அவனா, போனை வைத்து விட்டும் புலம்பலை தொடர்ந்தான்.  எல்லோரும் A/C ரூமில் சுகமாக இருப்பது போலவும், அவன் மட்டும் உழைக்கும் வர்க்கமாய் கஷ்டப்படுவது போலவும், விடாது அலுத்துப் போகும் அளவு, அரற்றிக் கொண்டே வந்தான்.  எனது ரத்த அழுத்தம் 80 லிருந்து 90, 95, 98, 100 என்று ஏறிக் கொண்டிருந்தது.  சொல்லப்போனால் சமீப காலங்களில் அது மாத்திரை சாப்பிட்டும் 95 லேயே நிலைகொண்டிருக்கிறது!  பின்னால் அமர்ந்திருக்கிறவர்களுக்காகவே அவன் உளறுகிறான் என்பது உ கை நெ க யாய் தெரிந்தது.  கேட்காமல் இருக்கவும் முடியாத சூழல். 

ஒரு நிலையில் 'ஒழிந்து போகிறான் நாய்' என்று விடவும் விட்டு விட்டேன்.  

அப்போது சுகுமாரிடமிருந்து போன் வந்தது.  முதல் நாள் அவருக்கு வாட்ஸாப்பில் ஒரு பார்வேர்ட் அனுப்பி இருந்தேன்.  தாடி வைத்த ஒரு முஸ்லீம் பெரியவர் இந்து கடவுள், இந்து தத்துவம் பற்றி பேசிய வீடியோ அது.

அதைப்பற்றி அவர் விசாரிக்க போட்ட போனை அப்போது சட்டென மண்டையில் ஒரு பொறி தட்ட,  அதை உபயோகித்துக் கொண்டேன்.  ஒரு முயற்சிதானே..  நானும் அதே அளவு செய்வேன் இல்லை?  விளையாடிதான் பார்ப்போமே...

=================================================================================
நியூஸ்ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

- அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்னிங்' நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான 'பிக்டெக்' காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் 1003 கோடி ரூபாய் முதலீட்டில் மொபைல் ஃபோன், லாப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

- ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யின் ஆதரவுடன் இயங்கும் டெக்னாலஜிஸ்' என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் யோகா மேட் ஒன்றை தயாரித்துள்ளது. இதை நம் செல்ஃபோனோடு இணைத்து பயன்படுத்தும் பொழுது, இந்த யோகா மேட்டில் இருக்கும் சென்சார்கள், பயனாளிகள் செய்யும் தவறை சுட்டிக் காட்டுவதோடு, எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தரும் - நல்ல விஷயம்தான், ஆனால் அனுஷ்கா மாதிரி ஒரு யோகா டீச்சரை மிஸ் பண்ண நேரிடலாம்.

- சிந்த்வாரா, மஹாராஷ்டிரத்தில் பக.ஜ.க.வுக்கு ஓட்டளித்ததால் 'தலாக்', கூறி விவாகரத்து செய்து விட்டதாக கணவர் மீது புகாரளித்திருக்கிறார் இஸ்லாமிய பெண் ஒருவர். 

- சூடான தோசை கேட்டும் கொடுக்காமல், வாடிக்கையாளரை திட்டிய ஹோட்டலுக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் 7000 ரூபாய் அபராதம் விதித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் 2022ல் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு சூட்டைத் சூடாக வராமல் இப்போதுதான் வந்திருக்கிறது :))

- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியருக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அறிவிப்பு. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண், வாடகைத் தாய் இருவரும் அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் 180 நாட்கள் விடுமுறை உண்டு. மேலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணின் கணவர் அரசு ஊழியராக இருந்தால், குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் 15 நாட்கள் வரை அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருப்பவர்களுக்குதான் இந்த சலுகை.  

மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் கடந்த 31ம் தேதி நடந்த கலை விழாவின்போது, ஹிந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை தழுவி, 'ராஹோவன்' என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தின் வாயிலாக ராமாயணத்தை அவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணியத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நாடகக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள், நாடகத்தை நடத்திய மாணவர்கள் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து இது தொடர்பான தீவிர விசாரணைக்குப் பின்,ராமாயணத்தை கேலி செய்து நாடகம் நடத்திய மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் நான்கு பேருக்கு, தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.  இது, ஒரு செமஸ்டருக்கு மாணவர்கள் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்துக்கு சமமாகும். மேலும் நான்கு மாணவர்களுக்கு தலா 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூனியர் மாணவர்களுக்கான விடுதி வசதியும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் அபராதம் கட்ட வேண்டும்; இல்லையென்றால் கூடுதல் தண்டனைகள் வழங்கப்படும் என, ஐ.ஐ.டி., நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   

- பெஷாவர்: பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்த சுற்றுலா பயணி கைதான நிலையில், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக் கொன்றதுடன், பொதுவெளியில் அவரை துாக்கிலிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

- திருவள்ளூர்:மின்கம்பியில் சிக்கிய பசுவை காப்பாற்ற சென்ற வளர்ப்பு நாயும் பலியான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்தன், ஐந்து பசுக்களை வளர்த்து வருகிறார். நாட்டு நாய் ஒன்றும் இவரது வீட்டில் வளர்ந்து வந்தது.  மாடுகளுடன் நட்புடன் நாய் பழகி வந்தது. மாடுகள் தினசரி மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு செல்லும் போது நாயும் அவற்றுடன் சென்று திரும்பும்.  நேற்று முன்தினம் இந்த மின்தட பாதையில் இருந்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து பசு ஒன்றின்மேல் விழுந்தது.  மின் தாக்குதலுக்கு உள்ளான பசு, அலறி துடித்தது. அருகில் இருந்த வளர்ப்பு நாய் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. நட்புடன் பழகி வந்த பசு துடிப்பதை கண்டு, உதவிக்கு ஓடியது.  பசுவின் மீது விழுந்து கிடந்த மின்கம்பி தான் பசுவின் வேதனைக்கு காரணம் என உணர்ந்தது போல், அதை வாயால் கவ்வி இழுக்க முயற்சித்தது. ஆனால், மின்தாக்குதலுக்கு உள்ளான நாயும், பசுவும் சம்பவ இடத்திலேயே பலியாகின.

லக்னோ : பெண் போலீசுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த போலீஸ் டி.எஸ்.பி., ஒருவர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. மொபைல் போன் டவரை வைத்து, அவர் இருப்பிடத்தை அறிந்த போலீசார், ஹோட்டலுக்கு சென்று கிருபா மற்றும் அவருடன் இருந்த பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

2020 கொரோனா பயமுறுத்தல் வந்த சமயம் எழுதியது...




வேண்டுதல்கள் தேவையில்லை எங்கள்
தேவைகள் யாவும் அறிந்தவன் நீ

மாண்டுபோகா வரம் கேட்கவில்லை மனிதன் 
அது
மாண்புடனே நிகழ மனம் தளர்ந்து மன்றாடி நிற்கின்றான்

அன்பு காட்டுவாய் அரனே எமக்கு விதித்த விதிகளைக் கொஞ்சம் தளர்த்துவாய்.

இரக்கம் காட்டுவாய் இறையே எம்மை
இறுக்கும் கயிறை இதமாய் நீக்குவாய்

எமக்கு வேண்டுவது அனைத்தும் நீ அறிவாய் என்றால் 
நான் வேண்டுவதும் எதுவென அறிந்தே இருப்பாய் ஆண்டவனே 

தேர்வெழுதி பாடம் கற்பதா 
பாடம் கற்று தேர்வெழுதுவதா..
 
எது சரியென்று தெரியவில்லை தற்சமயம் 
சோர்வுகொண்ட எம் மனங்களுக்கு

முன்ஜென்மச் சாபங்களை முற்றாக நீக்கி 
புதிய கணக்கு தொடங்கேன்

பார்க்கலாம் 
இனியாவது மனிதன் 
பாவக்கணக்கைக் குறைக்கிறானா என்று...

***************************************************************************************************************

இணையத்தில் 'வினோத இந்தியா' என்று ஒரு பக்கம்.  அதில் கண்ட படம்.  இந்தத் தெருவில் யார் வீட்டிலாவது மின்பிரச்னை என்றால் தொலைந்தான் அந்த எலெக்ட்ரிஷியன் என்று தோன்றும்.  ஆனால் அவர்கள் என்னவோ திறமை வாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.  அவர்கள் அதாவது அந்த இணையப்பக்கம் எடுத்துக் காட்டி இருக்கும் இந்தப் படம் மும்பை ஏரியாவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது!



################################################################################################################

"வீரப்பன் - வாழ்ந்ததும், வீழ்ந்ததும் புத்தகத்தின் முதல் பாகத்திலிருந்து...

மாதேஸ்வரன் மலையில் குடியிருக்கும் இறைவனின் பெயரும் மாதேஸ்வரன்.  இவர் சிவனின் அவதாரம்.  மாதேஸ்வரனின் பெற்றோர் லிங்காயத்து என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள். மாதேஸ்வரனின் உறவினர்கள் தமிழகம் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள காடுகளில் வாழ்பவர்கள் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. இம்மக்கள் காடுகளில் வாழ்ந்தாலும் அசைவம் உண்ண மாட்டார்கள்.  எந்த காரணம் கொண்டும் பச்சை மரங்களை வெட்டவும் மாட்டார்கள்.  காடுகளும் காட்டு விலங்குகளும் குறைவில்லாமல் வாழ வேண்டும். அப்போதுதான் நாடும் நாட்டு மக்களுக்கும் நல்ல மழை கிடைக்கும்.  இது லிங்காயத்து வழிபாட்டை தோற்றுவித்த பசவன்னாவின் கோட்பாடு அதன்படி லிங்காயத்து மக்கள் எல்லோருமே காய்ந்து போன சந்தன மரங்களை மட்டுமே வெட்டி எடுத்து வருவர்...

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சென்ற வார இடது கால் கயிறு பற்றி ஒரு விளக்கம்.  KGG யதேச்சையாக கிடைத்தது என்று முகநூலிலிருந்து எடுத்து கொடுத்தார்.



கடைசி பாரா...

ஆண், பெண் இருவருமே அணியலாம்.  ஆண்கள் வலது காலிலும் (இங்கே நான் சந்தித்தவர் இடது காலில் அணிந்திருந்தார்) பெண்கள் இடது காலிலும் அணிய வேண்டும்.  முக்கியமாக இளம் பெண்கள் அணிவது மிகச்சிறப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

ஜாதகத்தையே மாற்றும் நடராஜர் கோவில்...  இணையத்திலிருந்து...

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது,
ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை, தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்,
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்
அனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல
பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில்
திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
இந்த நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் உள்ளது.
இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும்.
இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள்.
இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும்.
இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார்.
வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜபம் செய்யும்போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.
இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது.
இங்குள்ள கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக ஸ்ரிஸ் ஷ்டிக்கப்படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை.
இந்த கோவில் திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ளது.

ஓம் சிவாய நமஹ

- World Of Divine -

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இ இ இ 

ணையத்தில் படித்த ன்னொரு ன்டரஸ்டிங் நியூஸ்..... 


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

86 கருத்துகள்:

  1. உங்களுக்குதான் uber பிரச்சினை இந்த மொபைல் கூகுள் கும் பிரச்சினை போல் பெயரையே அடிக்க மாட்டேன்னு சொல்லி விட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா...   ஊபர் என்று அடித்தால் ஏதேதோ வரும்.  ஓ ஓ பி இ ஆர் என்று அடித்தால் சரியாய் வருகிறது!!

      நீக்கு
  2. எப்படி ஶ்ரீராம் அவன் அப்படி பேசியதை பொறுமை காத்துட்டு இருந்தீங்க...

    தொடருமா எப்படி விளையாடி பவுண்டரிஅடிச்சீங்கன்னு...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரும்..  கண்டிப்பா தொடரும்.  பாதியில் நிற்கிறதே...   இது இடைவேளை.  க்ளைமேக்ஸ் அடுத்த வாரம்...  

      // எப்படி ஶ்ரீராம் அவன் அப்படி பேசியதை பொறுமை காத்துட்டு இருந்தீங்க... //

      வேற வழி?  அப்போ நம்மால அதானே செய்ய முடியும்!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஊபர் காரங்களோடு பேச்சு வச்சிக்கிட்டா அவங்க பொலம்பல் அதிகமாயிடும். சிலர் நாம் பேசுவதை ஒட்டுக்கேட்டு நம் பேச்சுகளில் கலந்துகொள்வார்கள். நானும் கஞ்சா ஆசாமியைச் சந்தித்திருக்கிறேன் பெங்களூரில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் நியாயமான கட்டணம் கேட்டிருந்தால் ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு வேலையே இருந்திருக்காது.  அவர்கள் போடும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டுதான் உள்ளே வருகிறார்கள்.  அப்புறம் பயணிகளிடம் இப்படி ஒரு அலம்பல்..

      நீக்கு
  5. கன்னட நடிகர் ராஜ்குமாரைப் பற்றி நல்ல செய்திகளையே படித்திருக்கிறேன். அவரை மனைவியுடன் அவர் பிறந்த ஊரான தொட்டகஜனூரில் பார்த்திருக்கிறேன். கன்னட தேசத்தில் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தீவிர ரசிகர்கள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்...ஹூம்..  எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்கிறது!

      நீக்கு
  6. லிங்காயத்துகள் கர்நாடகாவில் வாக்குகளைத் தீர்மானிக்கும் சமூகங்களில் ஒரு சமூகம்.

    பதிலளிநீக்கு
  7. ஊபரோ, ஓலாவோ கார் பயணமே செளகரியமானது. வெயிலோ வெளிக்கற்றோ உடலைப் பதம் பார்க்கிற வேதனை கிடையாது. தலைதெறிக்கிற வேகம், கிடைக்கிற இடுக்கில் நு,ழைகிற ஆபத்து கிடையாது. இதமான ஏஸி. டிரைவர்கள் பெரும்பாலும் டீஸண்டாக இருப்பார்கள். வயதான, இல்லை பொறுப்பாக நம்மைக் கொண்டு போய் சேர்க்கிற டிரைவருக்கு பத்தோ இருபதோ நான் சேர்த்துக் கொடுப்பது உண்டு. பெரும்பாலும் 5 நட்சத்திர மார்க் தான். Any car என்று செலக்ட் பண்ணினால் நூறோ, நூற்று அம்பதோ கூட ஆகும். அவ்வளவு தான். இந்த அபிமானத்திற்கெல்லாமஎன் வயதும் முடியாமையும் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடைபட்ட வாகனத்துக்கும் குளிர்சாதன காற்று..  என் பாஸ் உட்பட நிறையபேருக்கு அது ஒத்துக் கொள்வதில்லை.  அடுத்து கட்டணம்.  நீண்ட பயணமாயிருந்தால் சரி, குறைந்த தூர பயணங்களுக்கு ஆட்டோ ஓகே.  தனியாளாய் இருந்தால் பைக் கூட ஓகே.  நான் அதிலும் வந்திருக்கிறேன்.  90 சதவிகிதம் நல்ல ஓட்டுநர்கள்தான் வாய்ப்பார்கள்.  நாம் சொல்லி வேகத்தைக் கூட மட்டுப்படுத்தலாம்.

      நீக்கு
    2. அப்படியாயின் ஏஸியை நிறுத்தி விண்டோ கதவுகளை லேசாக இறக்கிக் கொள்ளலாம். கார் பயணம் பலவிதங்களில் செளகரியமானது.

      நீக்கு
    3. ஜீவி சார் கருத்தை ஆதரிக்கிறேன் (சமீபத்தைய அனுபவங்களின் விளைவாக). ஆட்டோ அல்லது ஏசி இல்லாத காரின் மூலம் நாம் சேமிப்பது 100-200 ரூபாய். ஆனால் ஒரு ஜெர்க்கில் இடுப்பு போனால் (அதிர்வோ சுளுக்கோ) உடனடி தண்டச் செலவு ஆயிரங்களில்.

      நீக்கு
    4. கார் சௌகர்யம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எல்லா சமயமும் அதில் பயணம் செய்ய முடியாது!

      நீக்கு
  8. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. ஊபர் டிரைவர் பின் பக்கம் பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் இப்படி பேசியது தப்பு. ஆனால் இதை அந்த ஆளிடம் எப்படி சொல்வது?
    //இந்து தத்துவம் பற்றி பேசிய வீடியோ அது.//

    அதை சத்தமாக வைத்தீர்களா?

    நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை சத்தமாக வைப்பதினால்; என்ன பயன்!  அடுத்த வாரம் நிறைவு செய்து விடுகிறேன் அக்கா!

      நீக்கு
  12. //மின்கம்பியில் சிக்கிய பசுவை காப்பாற்ற சென்ற வளர்ப்பு நாயும் பலியான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது//

    பசு, நாய் நட்பு , அவைகளின் மரணம் படித்து மனம் கனத்து போனது.

    பதிலளிநீக்கு
  13. வந்து வந்து கட்டுரைக்கும் தொடரும் போடும் படியாகிவிட்டது. ஊபர் எப்போதுமே கழுத்தை அறுக்கும். இங்கு திருவனந்தபுரத்தில் அதே கதை தான். ஒரு வருடமாக ஊபர் எனக்கு 11 ரூபாய் பைன் கட்டவில்லை என்று மெயில் அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஒரு வருடமாக நான் ஊபர் புக் செய்யவில்லை. கடைசியாக புக் செய்த ஊபர் பிக்கப்புக்கு வராமலேயே ட்ரிப் கான்செல் செய்ததாக பைன்.
    எனக்கு பயணங்களில் ஒரு சவுகரியம். காது கேட் - காது. ஆக யார் என்ன பேசினாலும் கவலை இல்லை.

    கவிதை கவிதை மாதிரி இல்லை. கருத்து சரி என்றாலும் வசனத்தை பிய்த்துப் போட்ட மாதிரி இருக்கிறது.

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

    நியூஸ் ரூம் செய்திகளை விரிவாக தர தொடங்கியிருப்பது நன்று என்றாலும் சில செய்திகளை சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக மின்கம்பி அறுந்து பசு இறந்தது.

    மின் இணைப்புக போட்டோ முன்பே கண்டது தான்.
    லிங்காயத்துகள் கழுத்தில் லிங்கம் கட்டியிருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். உண்மையா?

    காலில் கருப்பு கயிறு அணிவது தான் கால்கட்டு?

    பொக்கிஷம் தீர்ந்து விட்டதா?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதி இருக்கும் முழு பகுதியையும் இங்கு வெளியிட்டால் மற்ற பகுதிகளுக்கு இடம் இல்லாமல் போகும்.  அதாவது அலுத்துப்போகும்!  எனவே இரண்டாய் பிரித்து விட்டேன்!

      அக்கவிதை மாதிரி இல்லாததற்கு கொரோனா மீதிருந்த பயம் காரணமாய் இருந்திருக்கலாம்!!

      நியூஸ்ரூம் செய்தி விரிவாய் தரத்தொடங்கவில்லை.  ஓரளவுக்காவது செய்தி புரியவேண்டும் என்று முயற்சி...

      பொக்கிஷம் தீராது.  அது இணைக்கப்படவில்லை என்பது நினைவில்லை.  இதை சென்ற வெள்ளியன்றே ஷெட்யூல் செய்து விட்டேன்.  பொக்கிஷம் பின்னர் இணைத்துக் கொள்ளலாம் என்று வைத்திருந்தேன்.  மறந்து விட்டது.   பிரித்து செக் செய்யும்போதும் கீழ் வரை வரவில்லை போல...

      நீக்கு
  14. //எமக்கு வேண்டுவது அனைத்தும் நீ அறிவாய் என்றால்
    நான் வேண்டுவதும் எதுவென அறிந்தே இருப்பாய் ஆண்டவனே//

    ஆமாம், எல்லாம் அவர் விருப்பம் தான்.

    கவிதை நன்றாக இருக்கிறது.

    உங்கள் கவிதையை படித்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்தது.

    வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
    வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
    வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
    வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் வருகிறது இந்தப் பாடல்? கூகுள் செய்து பார்க்காமலேயே உங்களிடம் கேட்கிறேன்.

      நீக்கு
  15. ஊபராவது
    காபராவது...

    சோழன் உங்கள் தோழன் என்று அந்தக் காலத்தில சொல்லப்பட்ட

    டகர வாலாக்கள் தான் எல்லாவற்றுக்கும் துணை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நேரங்களிலும் சோழன் துணை வராது.  வீட்டு வாசல் வரையும் வராது.  

      நீக்கு
  16. இணையத்தில் 'வினோத இந்தியா' என்று ஒரு பக்கம். அதில் கண்ட படம். //

    பார்க்கவே பயமாக இருக்கிறது. திறமையானவர்கள் தான் பழுது பார்ப்பவர்கள் அவர்களை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. பல்லவன் அவன் நல்லவன்..

    என்றொரு பஜனயும் இருந்தது அந்த நாட்களில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லவன் பல நேரங்களில் பாதி வழியில் நின்று விடும்.  அப்போதெல்லாம் இப்படி சொல்வார்கள்  "பல்லவா...  உனைத் தள்ளவா...."

      நீக்கு
  18. நானும் காலில் கருப்பு கயிறு அணிவதன் காரணம் படித்தேன் இணையத்தில் உங்கள் பதிவை படித்த போது.
    நடராஜர் சிலை அற்புதம், மற்றும் நடிகை லீலாவதி பற்றி முகநூலில் படித்தேன்.

    பொக்கிஷபகிர்வை காணவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பில் அதுதான் இல்லாத பொக்கிஷம் என்று போட்டு இருக்கிறீர்கள். தலைப்பின் காரணம் புரிந்து விட்டது.

      நீக்கு
    2. அதேதான்...   சரியாய்ச் சொன்னீர்கள்.  நேற்றுவரை இன்றைய பதிவுக்கு வேறு தலைப்பு வைத்திருந்தேன்.  பொக்கிஷம் பகிர மறந்து விட்டேன் என்று பார்த்ததும் இப்படி வைத்து விட்டேன்.

      நீக்கு
  19. திரு ஊற்றத்தூர்...

    இன்று
    ஊட்டத்தூர் என்று சொல்லப் படுகின்ற தலத்திற்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும்..

    பதிலளிநீக்கு
  20. அட! அனுஷ்கா கூட இப்ப யோகா கற்றுத் தராங்களா!!!!?

    புதிய தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் தொடங்குவது நல்ல விஷயம். வேலை வாய்ப்புகள் பெருகும்.

    குடும்பத்தில ஏற்கனவே உள்நாட்டு அரசியல் உண்டு இதுல வெளி அரசியலுமா!!

    தோசை ஆறிப் போச்சு இதுக்கும் வழக்கு தொடுக்கலாம் போல!!

    //இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருப்பவர்களுக்குதான் இந்த சலுகை. //

    இது இடிக்கிறதே. புரியவில்லை. அப்ப ஏற்கனவே இருக்கும் குழந்தைகளும் வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளா?

    பெஷாவர்: நம்ம ஊர் எல்லையைத் தாண்டியாச்சுனா நாம அடங்கி ஒடுங்கி இருக்கணும்...

    பசுவும் நாயும் - மிகவும் வேதனை தந்த செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அனுஷ்கா யோகா கத்து தராங்களாமே!!!

      கீதா

      நீக்கு
    2. அவங்க யோகா டீச்சர். அப்படித்தான் சினி இன்டஸ்ட்ரிக்கே வந்தாங்க.

      நீக்கு
    3. கீதா..  அனுஷ் நெல்லை சொல்லி இருப்பதுபோல யோகா டீச்சர்தான் அடிப்படையில்.  ஆனாலும் அவங்க கொஞ்சம் பருமனாதான் இருக்காங்க...

      நீக்கு
    4. ஆ! அவங்க அடிப்படையில யோகா டீச்சரா!! அட! பருமனுக்கும் யோகாக்கும் சம்பந்தமே இல்லை!!!! யோகா செஞ்சா மூச்சு ஒழுங்கா இருக்கும், உடம்பு தளராமல் நல்ல திண்ணுனு இருக்கும் ஆரோக்கியத்துக்குத்தான். சுறுசுறுப்பு.
      உடல் மெலிவது யோகாவின் குறிக்கோள் இல்லை என்பது நான் அறிந்த கருத்து. உடல் மன ஆரோக்கியத்துக்கு யோகா! நல்லதொடு ஆளுமை வளர்ச்சிக்கு.

      கீதா

      நீக்கு
  21. கொரோனா சமயக் கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம்.

    ஆனா பாருங்க மனுஷன் பாவக் கணக்கைக் குறைச்சா மாதிரி தெரியலையே! அதெல்லாம் அந்த நிமிடம் தான் என்று தோணுது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி குறைப்பாங்க கீதா...  மனுஷங்க மனுஷங்கதானே...!

      நீக்கு
  22. ஸ்ரீராம் அது மின் கம்பி இணைப்புகளா இல்லை சிலந்தி வலையா!!! யம்மாடியோவ் பயமா வேறு இருக்கு ஷாக் அடிச்சிட்டான்னு

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இங்கு லிங்காயத்து வழிபாட்டைத் தோற்றுவித்த பசவன்னாவை வணங்குபவர்கள் உண்டு. லிங்காயத்துகள் சைவம் தான் சாப்பிடுவாங்க. பாண்டியில் இருந்தப்ப நம்ம வீட்டுப் பின்பக்கம் இருந்தவங்க லிங்காயத்து சமூகம் அவங்க சொல்லிக் கேட்டிருக்கிறேன். ரொம்பவே பூஜை வழிபாடுகள் எல்லாம் செய்வாங்க. லிங்க தாயத்து அணிந்திருப்பாங்க. இங்கு இந்தச் சமூகம் வலுவான சமூகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. காலில் கறுப்புக் கயிறு மற்றும் ஜாதகத்தையே மாற்றும் நடராஜர் கோயில் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.

    நடிகை லீலாவதி பற்றிய தகவலும் சுவாரசியம்...இதை எழுதியவரின் கடைசிவரி அட அழகா முடிச்சிருக்கிறார் என்று சொல்ல வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ப முடியாது... நல்லா இருக்கும் என்னும் வரியா?

      நீக்கு
    2. ஓ அதுதான் கடைசி வரியா...நான் சொல்ல வந்தது அதுக்கும் முன்ன இருந்த வரி. அதுதான் என் நினைவில் இருந்தது. இப்பதான் கடைசில இந்த வரி நினைவுக்கு வருது!

      கீதா

      நீக்கு
    3. அது சரி, நம்ப முடியாது என்று சொன்னதை ஏற்க முடியலை.

      கீதா

      நீக்கு
  25. பா.வெ. நியூஸ் ரூம் முதல் குறிப்பில் 'காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை பக்கத்தில்' என்று புரிபடா வரியொன்று காணப்படுகிறது.

    காஞ்சிபுரம் டவுனில் பிள்ளையார் பாளையம் என்றொரு பகுதி உண்டு.
    பாளையம், பக்கம் ஆகி
    விட்டதோ என்று டவுட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் என்னும் இடம்..

      நீக்கு
    2. அப்போ மாற்றி விடுவது தானே!

      நீக்கு
    3. ஹி.ஹி.. பா.வெ வந்து பார்த்து விடப் போகிறாரே என்பதற்காகத் தான் அவசரப்பட்டேன். மாற்றியதற்கு நன்றி.

      நீக்கு
  26. ஊபர், ஓலா என இரண்டுமே இப்படியான அடாவடி பேர்வழிகள் தான். சமீபத்தில் மீட்டர் ஆட்டோ என்ற வசதி திருச்சியில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். அலைபேசியில் இருக்கும் ஒரு செயலி மூலம் எத்தனை கிலோ மீட்டர் பயணிக்கிறோமோ/காக்க வைக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல கட்டணம் வாங்கிக் கொள்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களால் வர முடியாது எனில் அருகிலுள்ள மற்ற ஆட்டோ ஓட்டுனருக்கு மாற்றி விட்டுவிடுகிறார்கள். வசதியாகவே இருக்கிறது.

    மற்ற தகவல்களும் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா மாநிலங்களையும் விட தமிழகம் மோசம்.  எல்லா ஊர்களையும் விட சென்னை மோசம்!  :))
      நன்றி வெங்கட்.

      நீக்கு
  27. ஊபர் முடிவு அறிய காத்திருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் சொல்லி முடித்து விடுகிறேன் ஜி.

      நீக்கு
  28. ஊட்டத்தூர் நடராஜர் முகநூல் பக்கம்

    https://www.facebook.com/Oottathur/posts/d41d8cd9/718028078362425/

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  29. ஊபர் காரரின் பேச்சு இப்படியும் மனிதர்கள் எப்படிப் பொறுமையாக இருந்தீர்கள் ? பதிலுக்கு பதில் நீங்கள் குடுத்தது மகிழ்ச்சி.

    நியூஸ்ரைம் பலவித செய்திகளையும் தருகிறது.

    கறுப்புக் கயிறு கவிதை என நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையாய் இல்லை. என்ன செய்தேன் என்பதை அடுத்த வாரம் படிக்கலாம்!

      றுப்புக் கயிறு கவிதை?

      நீக்கு
  30. செய்யும் தொழிலே தெய்வம். செய்யும் தொழிலில் ஒரு பக்தியும் ஈடுபாடும் வேண்டும். இப்போதெல்லாம் அது பலருக்கும் இல்லை. பணம் பணம் என்றுதான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் பயணம் செய்வதே நம் மனதிற்கு வேதனை அளிக்கும் சம்பவம். என்ன செய்வது/ பலதரப்பட்ட மக்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  31. அந்த ஆட்டோ படம் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

    லிங்காயத்து பசவன்னா பற்றி எங்கள் குறும்படம் ஒன்றில் சொல்லியிருக்கிறேன். கட்டுப்பாடுகளுடனான சைவசித்தாந்த சமூகம். இப்போது சற்று மாறியிருக்கலாம்.

    நடராஜர் கோயில் பற்றி தெரிந்து கொண்டேன்.

    காலில் கறுப்புக் கயிறு இது ஒவ்வொரு சமூகம் அல்லது தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி. ஆட்டோ படம் இணையத்திலிருந்து KGG இணைத்துள்ளார்.

      நீக்கு
  32. அந்த ஆட்டோ படம் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

    லிங்காயத்து பசவன்னா பற்றி எங்கள் குறும்படம் ஒன்றில் சொல்லியிருக்கிறேன். கட்டுப்பாடுகளுடனான சைவசித்தாந்த சமூகம். இப்போது சற்று மாறியிருக்கலாம்.

    நடராஜர் கோயில் பற்றி தெரிந்து கொண்டேன்.

    காலில் கறுப்புக் கயிறு இது ஒவ்வொரு சமூகம் அல்லது தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி. ஆட்டோ படம் இணையத்திலிருந்து KGG இணைத்துள்ளார்.

      நீக்கு
  33. கவிதை, அதன் உள் அர்த்தமும் நன்றாக இருக்கிறது. இறைவனிடம் மன்றாடும் கவிதை. உங்களின் மற்ற கவிதைகளிலிருந்து சற்று மாறுபட்டரீதியில். கொரோனா பயத்தில் வெளிவந்த கவிதையோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. நடிகை லீலாவதியின் கதை இப்படியானதா. கடைசி வரை எப்படித் தெரியாமல் போனது? ஆச்சரியம் அதுவும் சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்துகொண்டு வெளியில் தெரியாமல் போவது மேகசின்களில் கூடதெரியாமல் போனது ஆச்சரியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னட தேசத்தில் தெரிந்திருக்கலாம். நமக்கு புதுசு.

      நீக்கு
  35. @ ஸ்ரீராம்...

    /// இதில் வருகிறது இந்தப் பாடல்? கூகுள் செய்து பார்க்காமலேயே உங்களிடம் கேட்கிறேன்.. ///

    எதில் வருகிறது இந்தப் பாடல்?...

    இந்தப் பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்...

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. காலையில் வந்து வணக்கம் வைத்து விட்டு போனவள்தான். இப்போது வரை காணவில்லையே என நீங்கள் நினைக்கலாம். அதற்காக வருந்துகிறேன். முதல் பகுதியை உடனே படித்து விட்டேன். ஏதேதோ வேலைகள் இப்போது வரை சரியாகப் போய் விட்டது. கைப்பேசியை எடுக்கவே விடவில்லை.

    இரு தினங்களுக்கு முன் ஒரு ரூமில் என் கைப்பேசி மாட்டிக் கொண்டு விட அறைக் கதவு காற்றில் லாக் ஆகி விட்டது. நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் திறக்க முடியாமல் ஒருவரை அழைத்து வந்து பூட்டை (குமிழ் பூட்டு) உடைத்து கதவை திறந்தோம். உடைப்பதற்கு ரூ300 வாங்கிச் சென்று விட்டார்.நேற்று ரூ1000க்கு மேலாக தந்து வேறு பூட்டும் வாங்கியாகி விட்டது. நாளை வந்து மாட்டி விட எத்தனை ரூபாய் தட்சணையோ தெரியவில்லை.

    இன்று என் வேலைகள் கைப்பேசியை தொட விடாமல் என்னை லாக் செய்து விட்டது. மன்னிக்கவும்.

    நீங்கள் பயணித்த அந்த ஆட்டோ ஓட்டுனரின் செயல் கண்டிக்கத்தக்கதுதான். அதற்கு பதிலுக்கு பதிலாக நீங்கள் அவரை எப்படி எதிர் கொண்டீர்கள் என தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    /அடுத்து இங்கேயே இப்போதே கத்தி (இல்லீங்க... குத்தற கத்தி இல்லை, சத்தம் போடுவது!) விட்டு விடலாமா.. அல்லது இறங்கும்போது ஒரு காட்டு காட்டி விட்டு விடலாமா.../

    இது போன்ற வழக்கப்படியான தங்கள் நகைச்சுவையான வார்த்தைகளை ரசித்தேன். நன்றாக விவரித்து எழுதியுள்ளீர்கள்.பதிவுக்கு அந்த ஆட்டோகாரரின் படமும் பொருத்தமாக உள்ளது. மற்றவைகளையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   அறைக்கதவு பூட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் எங்களுக்கும் மூன்று முறை ஏற்பட்டு அவதிப் பட்டிருக்கிறோம்.  நீங்கள் சொல்லும் அதே தட்சிணைகள் இங்கும் இருந்தன.  புது குமிழும் மாட்டியோனோம்.  அதுவா, திறக்க, மூட வெகு அழுத்தமாய், சிரமமாய் இருக்கிறது!

      நன்றி கமலா அக்கா.  அடுத்த வாரம் நிறைவு செய்து விடுகிறேன்.

      நீக்கு
  37. எழும்பூர் ரயில் நிலையம். எக்ஸ்லேட்டர் வேலை செய்யவில்லை. ஒருவழியாக படிக்கள் ஏறி இறங்கி 7-வது பிளாட்பாரம் வந்து சேர்ந்தோம்.

    சமீபத்தில் 3 tier AC கோச்சில் கும்பகோணம் வரை சோழன் எக்ஸ்பிரஸில் பயணம்.. ஒரு கோச்சில் கூட western toilet இல்லை.
    உடல் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை.

    சோழன் எக்ஸ்பிரஸ் என்ற பெயருக்கு என்ன ஆயிற்று தெரியவில்லை.
    தொடர் வண்டியில் ஒரு இடத்தில் கூட இந்தப் பெருமைமிகு பெயர் குறிப்பிடப்படவில்லை.
    வழித்தட பெயர் பலகைகளில் ஹிந்தியிலும் தமிழிலும்
    சென்னை -- திருச்சி -- மதுரை என்று வழித்தட குறிப்புகளைப் பார்த்து இது பாண்டியனோ என்ற குழப்பம் வேறே. ஒருவழியாக ஸ்டால்காரர் உறுதிபடுத்தியதில் இருக்கை எண் சரிபார்த்து அமர்ந்தோம்.

    அடுத்த நாள் பின்மாலையில்.திரும்பிய பொழுதும் எழும்பூரில் எக்ஸ்லேட்டர் வேலை செய்யவில்லை. செம கூட்டம். கொட்டும் மழை. விழுந்து விடாமல் முண்டியடித்த கூட்டத்தில் படியேறி இறங்கி.......

    இந்திய ரயில்வே ஷீணித்து. வருகிறதோ என்ற எண்ணம் பயணம் பூராகவும் இருந்தது.

    ஊபர் ஆட்டோ பற்றி ஸ்ரீராம் குறைப்பட என் பங்குக்கு இது.

    பதிலளிநீக்கு
  38. ஊபர் ஆட்டோக்காரரிடம் நீங்கள் எப்படிப் புகுந்து விளையாடினீர்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் :). கொரானா கால கவிதை மனதை உலுக்குகிறது. நடிகை லீலாவதியின் வாழ்க்கையில் நடந்தது பெரும் துயரம். அறியாத தகவல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!