திங்கள், 10 ஜூன், 2024

"திங்க"க்கிழமை   :  நன்னாரி நறுமணக் குடிநீர்   - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 நன்னாரி நறுமணக் குடிநீர் (ஷர்பத்)

தேவையானவை:




உலர்ந்த நன்னாரி வேர் ஒரு கைப்பிடி

நன்னாரி வேர் பொடி எனில் 2 tsp  (தேக்கரண்டி) 28 கிராம்
நாரத்தம் பழம் 1
பனங்கற்கண்டு  2 tsp (10 கிராம்)
திருநீற்றுப் பச்சிலை விதை எனப்படும் சிவதுளசி விதை 1/2 tsp (கடைகளில் - சப்ஜா) 
எல்லாவற்றுக்கும் மேலாக 
புதிய மண் பானை  ஒன்று..




முதல் நாள் இரவில் சுத்தமான மண் பானையில் நீர் நிறைத்து அதில் நன்னாரி வேர்களை ஊறப்போட்டு வைக்கவும்.. 

ஒரு குவளை நீரில் திருநீற்றுப் பச்சிலை விதைகளையும் ஊறப்போட்டு விடவும்..

மறுநாள் வெயிலான நேரம்:

நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் முதல் நாள் நன்னாரி ஊறிய நீர்  220 மிலி சிவ துளசி விதை பனங்கற்கண்டு இவற்றை நன்கு கலந்து விட்டால் மிக மிக ஆரோக்கியமான பானம்..

இது ஒருவருக்கானது.. அதிகம் தேவை எனில் திட்டமாக அதிகரித்துக் கொள்ளவும்..

குளிர் சாதனப் பெட்டி இருந்தால் அதில் நீரை வைத்தும் ஐஸ் கட்டிகளை  உருவாக்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. 

ஆனால், 
மண் பானைத் தண்ணீர் மிக நல்லது..

நாரத்தை, எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை நாளுக்கொன்றாகப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் விருப்பம்..

வெயில் என்று வெளியில் வண்ண மயமான - ஷர்பத் வகைகளைத் தவிர்ப்பது மிக மிக நல்லது..

***

26 கருத்துகள்:

  1. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.

    குறள வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இதையும் நன்றெனக் கொண்டு -
    இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. சுலபமான விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  7. துரை அண்ணா அருமையான செய்முறைக குறிப்பு. திருநீற்றுப்பச்சை விதை நான் பயன்படுத்துவதுண்டு. இங்கு நன்னாரி வேர் பொடியாக நான் பயன்படுத்துகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நமது தேர்வு
    நமது ஆரோக்கியம்...

    மகிழ்ச்சி.. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  9. மிகச்சிறந்த குடிநீர்!!
    நார்த்தை ரசம் கலப்பது எனக்கு புதியது! இதனால் இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது!!
    முன் காலத்தில் கோடையில் வழக்கில் இருந்த " பானகம்" நினைவுக்கு வருகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. பானகம் என்பது தனி.. அதில் சப்ஜா கலப்பது கிடையாது...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி...

      நீக்கு
  10. கோடைக்கு ஏற்ற பானம். சிலருக்கு சப்ஜா, நன்னாரிவேர் குளிர்ச்சி தரும்.
    ஒத்துக் கொண்டால் குடிக்கலாம்.
    நார்த்தை பழம் சாதம் கலக்கலாம் நன்றாக இருக்கும், சர்பத் செய்தாலும் நன்றாக இருக்கும். திருவெண்காட்டில் இருக்கும் போது அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      வாழ்க நலம்..

      நீக்கு
  11. கோடைகாலத்திற்கு ஏற்ற நல்ல பானம். நன்னாரி சர்பத் குடித்ததுண்டு. ஆனால் அதில் இந்த விதை கலந்து குடித்ததில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடித்துப் பாருங்கள்...
      உடலுக்கு மிக நல்லது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்...

      நீக்கு
  12. பற்பல வேலைகளுக்கு இடையேயும் பரிவுடன் வந்து கருத்துரைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. சுவையான ஒரு பானம். தயாரிப்பதும் எளிது என்பதால் சிறப்பு. தில்லியின் கோடைக்கு இது இருந்தால் நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  14. கோடைக்கு ஏற்ற அருமையான பானம். நான் ஊரில் இருந்தால் நன்னாரி பானம் ,நீல சங்குப் பூ செய்வதுண்டு.


    அங்கு வீட்டில் நன்னாரி இருக்கிறது.
    காலையில் இடையிடை நன்னாரி காப்பியும் போடுவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!