தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வசித்திருந்தாலும் - நான் அதிகம் குப்பை கொட்டியது, குரோம்பேட்டையில்.
இரயில்வே ஸ்டேஷனில் "கிரோம்பேட்டை" என்று பார்த்த ஞாவகம்.
இங்கு வீட்டுக்கு அடையாளம் சொல்பவர்கள், "ஜெயராம் ஸ்வீட்ஸ்" பக்கத்தில்தான் வீடு என்று சொன்னால்
உடனே கிளம்பி வந்து விடாதீர்கள். அந்தப் பெயரில் குரோம்பேட்டையைச் சுற்றி ஒரு
டஜனுக்கு மேல் கடைகள் உள்ளன.
"விலாசம் கொடுங்க ஆட்டோ அனுப்பனும்" என்று யாரவது கேட்டால் மட்டும், ஜெயராம் ஸ்வீட்ஸ் பக்கத்தில்தான் வீடு
என்று சொல்லி விடுங்கள். யாரவது ஒரு அப'பாவி' குரோம்பேட்டை GH இல் அனுமதிக்கப் படுவார்.
குரோம்பேட்டைக்கு சிறப்பு எவைகளால்? இதோ டாப் 10.
ஒன்று : தோல் தொழில். (அசைவ அர்த்தங்கள் எதுவும் இல்லை)
இரண்டு: வெற்றி தியேட்டர்.
மூன்று: MIT
நான்கு: நாயுடு ஹால்
ஐந்து: Over bridge
ஆறு: அஸ்தினா புரம் தொடங்கி வெங்கடராமன் நகர் வரை சுற்றுப் பக்க 18 பட்டிகள்.
ஏழு: கல்யாண மண்டபங்கள்.
எட்டு: மோர் - தயிர் - ரிலையன்ஸ் போன்று நாகப் பழத்தைக் கூட கூசாமல் நாற்பது ரூபாய் என்று விற்கும் விற்பன்னர்கள்.
ஒன்பது: என்னுடைய உடன்பிறப்புகளும், உற்ற நண்பர்களும், பெற்றவரும், சந்திக்கும்போது புன்னகைப் பூக்களை சிந்துபவர்களும்
பத்து: ................................................... (நீங்கள் - இது இடம் பெறவில்லையே என்று எதையாவது நினைத்திருந்தால் - அது!)
அன்புடன்
கௌதமன்.
தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7
-
*Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் *
*3.1 ஷாஜியின் அரசாட்சி, *
*3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், *
*3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...
6 மணிநேரம் முன்பு