வியாழன், 29 டிசம்பர், 2022

இறைவன் இருக்கின்றானா...அவன் இருந்தால் உலகத்திலே...

 உள்ளே நுழைந்தபோது, கண்களை மட்டுமே அசைக்க முடியும் நிலையில் இருக்கும் அவர் சத்தமாய் ஆ...  என்று குரலெடுத்து அழத்தொடங்கி விட்டார்.  சமாதானப்படுத்த பத்து நிமிடங்களாயின.

திங்கள், 26 டிசம்பர், 2022

"திங்க"க்கிழமை :  முத்துக்குழம்பு, சவரன் துவையல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

​வெள்ளி வீடியோ : கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்…..

 நவராத்திரி பாடல்கள், அம்மன் பாடல்கள், சரஸ்வதி துர்கா பாடல்கள் என்கிற வரிசைகளில் இந்தப் பாடல் வரும்.  இந்த வரிசையில் சுசீலாம்மா நிறைய பாடல்கள் வழங்கி இருக்கிறார்.

வியாழன், 22 டிசம்பர், 2022

நெய் ரோஸ்ட் பேப்பர் ரோஸ்ட்

 சென்ற வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இரவு ஹோட்டலில் சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டது. 

வியாழன், 15 டிசம்பர், 2022

உபாதி சகிதமாகிய எண்ணரிய உயிர்களுள்....

 ஒரு திருமணத்துக்காக சேலம் செல்ல வேண்டி இருந்தது.  ரயிலில் செல்ல பதிவு செய்திருந்தோம்.  ஆனால், திடீரென ரயில்வே காரணம் சொல்லாமல் இங்கிருந்து சேலம் செல்லும் ரயிலை கேன்சல் செய்தது!

வியாழன், 8 டிசம்பர், 2022

வியாழன், 1 டிசம்பர், 2022

உங்களுக்கு காபி பிடிக்குமா?

 காலை நாலரைக்கு எழுந்து விடும் எனக்கு பல் தேய்த்ததும் காஃபி வேண்டும் என்பதால் நானே போட்டு விடுவேன். 

வெள்ளி, 25 நவம்பர், 2022

வியாழன், 24 நவம்பர், 2022

ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

 தினசரி மதியம் ஒன்றரை மணி டாக் பாஸுக்கும் அவர் சித்திக்கும்.  உறவுகள் நட்புகள் விஷயத்தில் பாஸ் ஒரு திறமையான பி ஆர் ஓ.  போதிய இடைவெளியில் அனைவருடனும் பேசி, நட்பை, உறவுகளைப் பேணுபவர்.   பாஸுடன் நான் பேச வேண்டுமென்றால் மிஸ்ட் கால் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும்..!!  முன்னரே சொல்லியிருக்கிறேன்.

வியாழன், 17 நவம்பர், 2022

உணர்வுகள்...

 என் அப்பா இந்த உணர்வை அடைந்திருப்பாரா என்று தெரியாது.  ஆனால் எல்லா அப்பாக்களும் அடையும் உணர்வுதான் இது என்று நினைக்கிறேன்.

செவ்வாய், 15 நவம்பர், 2022

மொழிபெயர்ப்புச் சிறுகதை : பாண்டன்பறம்பத்து கோடன் பரணி உப்பு மாங்காய் - JC

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JC

 

பாண்டன்பறம்பத்து கோடன் பரணி உப்பு மாங்காய்

வியாழன், 10 நவம்பர், 2022

சமிக்ஞய் ​... ​சமிக்​ஞை ​... சிக்னல்

 பெருமழை பெய்து கொண்டிருந்த சென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒரு நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது

திங்கள், 7 நவம்பர், 2022

"திங்க"க்கிழமை  :  பரங்கிக்காய் அடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சாதாரண அடை தான். அதிலே இளம் கொட்டை எனப்படும் பிஞ்சுப் பறங்கிக் கொட்டையை நறுக்கிச் சேர்த்து வார்த்தால் தேங்காய்க்கீற்றுகள் போலவாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.

வெள்ளி, 4 நவம்பர், 2022

வெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

சூலமங்கலம் சகோதரிகள், T M  சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் என்று பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அதே பாடல்களே மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருக்க, ஒருநாள் திடீரென எனக்குத் தெரிந்து மூன்று பாடல்கள் புதிதாக ஒலித்தன.

வியாழன், 3 நவம்பர், 2022

பிச்சைகாரனா? மன்னனா? + ராஜராஜ சோழன் சதய விழா

 எனக்கு உடல் நலமில்லை.  நான் மாஸ்க் போடுவதை நிறுத்தி ஒரு மாதமாகிறது.  அதனால் உடல் நலம் இல்லாமல் போனதா என்றால் இருக்க முடியாது.   சமீப காலமாகத்தான் அப்படி என்றும் சொல்ல முடியாது.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக.

வியாழன், 27 அக்டோபர், 2022

இரகசியங்களுக்குள் நான் மௌனம்...

 காலை நேரங்கள் அமைதியானவை என்றுதானே நினைக்கிறீர்கள்?  சாலைக்கு வந்து பாருங்கள்.  அந்நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள் சாலையின் அமைதியைக் கெடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும். 

சனி, 22 அக்டோபர், 2022

கடைக்கு வெளியே 4 மாலைகள்...

 விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார்.

வியாழன், 20 அக்டோபர், 2022

யாரைத் திருப்திப்படுத்த....

 பள்ளிப் புகைப்படத்தில் போஸ் கொடுத்தபோது டீச்சர், பெற்றோர் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் நின்றது.

வியாழன், 6 அக்டோபர், 2022

பெரைடோலியா

 ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு உடல்மொழி இருக்கும்.  நாம் கவனித்திருக்க மாட்டோம்.  பிறர் கவனித்திருப்பார்கள்.  உதாரணமாக வீட்டில் கலந்துரையாடலில் நான் பேசப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு சட்டென என் முகத்தைப் பார்ப்பார்கள். 

சனி, 1 அக்டோபர், 2022

மூன்று பேர்கள் ... மூன்று செய்திகள் And ஆயிஷா நடராசன் (நான் படிச்ச கதை ) JC

 நாகப்பட்டினம்:நாகையில், 'சுனாமி'யின் கோரத்தாண்டவத்தால் உறவுகளை இழந்து, காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி, தற்போது, இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை, உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

வெள்ளி வீடியோ : மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?

 பி சுசீலா பாடல்களில் இந்த லிஸ்ட் ரொம்ப பிரபலம்.  மாணிக்க வீணையேந்தி, கலைவாணி உன் கருணை தேன்மழையே, ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்க்கா தேவி சரணம் பாடல்கள்.

வியாழன், 29 செப்டம்பர், 2022

திங்கள், 26 செப்டம்பர், 2022

"திங்க"க்கிழமை : பச்சை மிளகாய் அல்வா - தினத்தந்தி

அறுசுவைகளில் ஒன்றான 'காரம்' என்றாலே, நம் நினைவிற்கு வருவது பச்சை மிளகாய்தான். உணவு பதார்த்தங்களில் வாசனையையும், காரச் சுவையையும் அதிகரிக்க பச்சை மிளகாய் பயன்படுகிறது.

வியாழன், 22 செப்டம்பர், 2022

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஞாயிறு : அறிவிக்கப்பட்ட ஆசிரியருக்கு பதிலாக... 'டொயிங் டொயிங்'

ஆசிரியர்கள் அறையில் கணக்கு  வாத்தியார் தேமே என்று உட்கார்ந்திருப்பார்.  பியூன் வந்து கதவைச் சுரண்டி உள்ளே வருவான்..

சனி, 10 செப்டம்பர், 2022

அம்மாவின் கல்யாணம் AND நான் படிச்ச கதை (JC)

 போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

லால் பாக் உலா :: நெல்லைத்தமிழன்

 இன்றைய பதிவில் நெல்லைத்தமிழன் அனுப்பியுள்ள லால் பாக் சம்பந்தப்பட்ட படங்களும் விவரங்களும் இடம்பெறுகின்றன. 

வியாழன், 1 செப்டம்பர், 2022

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று..

 திங்கள் அன்று அண்ணனுக்கு பேரன் பிறந்தான்.  எங்கள் வீட்டு  குலதெய்வத்துக்கான நட்சத்திரத்திலேயே பிறந்ததது வியப்பு.  இன்னொரு ஒற்றுமை அண்ணன் மகன் தன் மனைவியை பெண் பார்க்க சென்றது பங்குனி உத்திரம்.  அவர்களுக்கு மகன் பிறந்திருப்பதும் அதே நட்சத்திரத்தில்!

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

புலிக்கு பலி

 உத்தரப்பிரதேசத்தில் பிலிபிட் என்றொரு இடம் இருக்கிறது.  இங்கு இந்த ஊரின் 23 சதவிகித அளவு வங்களால் சூழப்பட்டதுதான்.  இந்த ஊரில் உள்ள வனப்பிரதேசத்தை 2014 ல் மத்திய அரசு  புலிகள் சரணாலயமாக அறிவித்தது.  இங்கு சுமார் 25 புலிகள் இருக்கக்கூடும் என்கிறது பழைய தகவல் ஒன்று.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சிறுகதை : செல்லமே செம்பகமே - கீதா ரெங்கன்

 

(எபி ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி. அவர் வீட்டு வாசலில் கடைசி தருணங்களைக் கழித்த செம்பகம் பற்றி, அவர் காசிக்குச் சென்று வந்த பின் ஓரிரு மாதங்களில் நடந்த நிகழ்வு. அவர் பதிவும் போட்டிருந்தார். அப்போது உருவான கதையை இப்போது முடித்து அனுப்ப, அவர் எனக்கு அப்போது அனுப்பியிருந்த படங்களைத் தேடினால் அவை கேடான ஹார்ட் டிஸ்கில் மீட்கப்படாமல் இருக்க...எங்கள் ப்ளாகிலும் பதிவைத் தேடினேன் டக்கென்று கிடைக்கவில்லை. ஸ்ரீராமிடம் சொல்ல அவரே படங்களை அனுப்பிட ...ஸ்.....பாஆஆஅ ஒரு வழியா கதையை முடித்து அனுப்பினேன். மீதி விவரங்கள் கருத்தில்!)

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை பதிவு - கேரட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இந்த வருடத்தில் இதுதான் முதல் தி. பதிவு என்னிடமிருந்து. நிறைய எழுதாததற்கு மன்னிக்கவும். சோம்பேறித்தனம் மற்றும் ஆர்வமின்மைதான் காரணம். இந்த வருடமே என் priority மாறிவிட்டதால், சமையலறைப் பக்கம் ஒதுங்குவதில்லை. முன்பெல்லாம் இணையத்தைப் பார்த்து ஏதாவது செய்ய முயல்வேன். நான் எழுதிவைத்திருக்கும் செய்முறைகளையே இன்னும் செய்துபார்க்கவில்லை (தேன்மிட்டாய், கம்மர்கட்.....)

அன்புடன்

நெல்லைத்தமிழன்

சனி, 20 ஆகஸ்ட், 2022

சொந்த ஊர் என்றதுமே... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

பெரம்பலுார்:சொந்த கிராமத்துக்கு, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவிய கிராம வாலிபருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : பயத்தில் மனது தவிக்கின்றது... இருந்தும் விருந்தை நினைக்கின்றது

 இந்த ஆல்பத்திலிருந்து சில பாடல்களை ஏற்கெனவே பகிர்ந்தாயிற்று.  இன்று இன்னுமொரு பாடல்.  இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு..

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சின்னப்புறா ஒன்று..

 சந்தோஷமோ, துக்கமோ, வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லைதான்.  என் வருத்தம் சட்டென 24 மணிநேரத்தில் குறைந்தது எனக்கே ஆச்சர்யம்தான்..

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை  :  கத்திரிக்காய் சாதம் இரு முறைகளில்! - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 ஊருக்குப் போறச்சே வாங்கி வைச்ச கத்திரிக்காயை நேத்திக்குக் கறி பண்ணினாலும் நாலு மிச்சம் இருந்தது. அதில் இன்னிக்குக் கத்திரிக்காய் சாதம் பண்ணினேன். ஆரம்பிக்கையில் படம் எடுக்கும் எண்ணமோ போடும் எண்ணமோ இல்லை. கத்திரிக்காய் வதங்கும்போது தான் படம் எடுத்துப் போடும் எண்ணம் வர சரினு கறி நிலைமையில் கத்திரிக்காய் இருக்கும்போதே படம் எடுத்தேன்.

சனி, 13 ஆகஸ்ட், 2022

இகழ்ச்சி அடையா முயற்சிகள் - மற்றும் - நான் படிச்ச கதை (JC)

 மதுரை:'இஸ்ரோ'வின், 'ஆசாதி சாட்' செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : வானில் தோன்றும் மாலை சிவப்பு.. விழிகளில் பாதி விரல்களில் பாதி..

 எழுதியவர் யார்?  தெரியாது!  இசையமைத்தவர் யார்?  தெரியாது.  ஒருவேளை புகழேந்தியாய் இருக்கலாம்.  பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

என் உயிர் நான்தானே... உன் உயிர் நான்தானே

 முன்னர் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒரு நண்பர் பற்றி எழுதி இருந்தேன்.  செய்வினை, அதன் நீக்கம் பற்றிய அனுபவத்தையும் எழுதி இருந்தேன்.  அந்த சம்பவத்தில் அந்த நபருக்கும் (சட்டென) குணமாக,  இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

திங்கக்கிழமை  :  தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சில வருடங்கள் முன்னர் காலையில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு சமயத்தில்  தினம் ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபடுவேன். அப்படி ஒரு முறை. மராத்திய உணவு வகைகளில் ஒன்றான  தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக.

சனி, 6 ஆகஸ்ட், 2022

எளிமை டாக்டர் + மற்றும் நான் படிச்ச கதை (JC)

 பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், பெற்றோரை இழந்த ஏழை பிள்ளைகளை தத்தெடுத்து, படிக்க வைத்து வருகிறார்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..

 சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்ந்து சிதம்பரம் கோவிலுக்குச் சென்றபோது

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இஸ்க்கு... .

 'ஊபர் பைக்'குக்காகக் காத்துக் கொண்டு செல்லை நோண்டிக் கொண்டிருந்தபோது வலது முழங்கையில் யாரோ தொட்டார்கள்.  சட்டையைப் பிடித்து லேசாக இழுத்தது போல இருக்க, திரும்பிப் பார்த்தபோது ஒரு உருவம் தெரிந்தது.

சனி, 30 ஜூலை, 2022

15 வயது ; 33 லட்சம்; ஆனால்.. மற்றும் நான் படிச்ச கதை

 நாக்பூர் : நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அமெரிக்க நிறுவனம் ஒன்று, 33 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தியும், அவரால் பணியில் சேர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 29 ஜூலை, 2022

வியாழன், 28 ஜூலை, 2022

டக்டக்டக்டக்கென ப்ரித்வி ராஜன் குதிரையில் வந்தாண்டி..

 ஊபர் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருக்கையில் நடுவே ஒரு  சிக்னலில் வலது பக்கத்திலிருந்து  டக்டக் டக்டக் டக்கென்று சுவாரஸ்யமான சத்தத்துடன் வந்து கொஞ்ச நேரம் எங்களுக்கு முன்னால் சென்று, இடதுபுறத்தை பிடித்து விரைந்தது அந்த ரேக்ளா.