வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

வெள்ளி வீடியோ : அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தால் என் என்று சொல்வேன்?

 1976 இல் வெளியான திரைப்படம் வரப்பிரசாதம். நான் தஞ்சை ஹௌசிங் யூனிட்டில் பார்த்த படங்களுள் ஒன்று ஆயினும் கதை சுத்தமாக நினைவில்லை. ஆனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது - அது இந்தப் படத்தில்தான் எனும் நினைவோடு.. 

வியாழன், 25 பிப்ரவரி, 2021

எளிமையாக ஒரு சின்ன வீடு 

 சகோதரியின் சஷ்டியப்தபூர்த்தி.  கொரோனா காலமாயிருந்தாலும் மெல்ல மெல்ல ஆட்கள் சேர்ந்து சொல்லத் தகுந்த அளவு கூட்டம்.  சகோதரி என்பதால் எனக்கு கொஞ்சம் மேடையில் முக்கிய பங்கு!  நடுவில் ப்ரோஹிதர் கேட்கிறார்...   "மாமா...    அவிசும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டாங்கோ..." 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

திங்கள், 22 பிப்ரவரி, 2021

'திங்க'க்கிழமை :  மடர் பனீர் /ஜெயின் முறை -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 கொஞ்ச நாட்களாக வெங்காயம் அலர்ஜியாக ஆகி விட்டது. சாப்பிடுவோம். இல்லைனு சொல்லலை. இப்போ மாமியார் ஸ்ராத்தம் வந்தப்போ அதுக்காகப் பத்து நாட்கள் முன்னர் வெங்காயம், பூண்டு, மசாலாக்களை நிறுத்தியதில் இருந்து அந்தப் பழக்கத்திலேயே இருக்கோம். இன்னும் மாற்றவில்லை. கிராம்பு, ஏலக்காய் மட்டும் மசாலா சாமான்கள் போடும் இடத்தில் சேர்த்துப் பண்ணுகிறேன். அந்தச் சமயம் மடர் பனீர் வெங்காயம், பூண்டு இல்லாமல் பண்ணினேன். அதை இங்கே பகிர்கிறேன்.

வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஆமாம், யார் மேல் தப்பு?

 சென்னையின் போக்குவரத்து நெரிசலை அனுபவித்திருக்கிறீர்களா?  நான் தினம் தினம் அனுபவிக்கிறேன்.  பெங்களுருவில் இன்னும் மோசம் என்று முன்பு பெங்களூருவாசிகள் சொல்வதுண்டு.  அதுவும் கொரோனா காலத்தில் காலியான சாலைகளை பார்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே வந்த நெரிசலை பார்த்து, அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது பழையபடி முழு நெரிசல்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

இளங்காலை... இளங்குளிர்... இளம் வெயிலில்... இளம்....

 சில சமயங்களில் சில கற்பனைகளை சொல்லும்போது நாமே அதற்கு சான்று இல்லை என்று சொல்லி விட்டால் கூட காலப்போக்கில் மக்கள் அதையும் உண்மைக் கதை போலவும், வரலாற்றில் சிலர் அதை மறைக்கப் பார்க்கின்றார்கள் என்றும் நம்பத் தொடங்கி விடுவார்கள்!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

வெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

 1951 இல் வெளிவந்த ஓரிரவு திரைப்படம் நடிகர் கே ஆர் ராமசாமியின் நாடகக்குழுவுக்காக அறிஞர் அண்ணாவால் எழுதித்தரப்பட்ட கதை.  ஏ வி எம் நிறுவனம் அதைப் படமாக்க முனைந்தபோது ஏற்கெனவே அண்ணாவின் இரண்டு படைப்புகள் அவர்களால் படமாக்கப்பட்டிருந்தன.  'நல்ல தம்பி' மற்றும் 'வேலைக்காரி'!

வியாழன், 4 பிப்ரவரி, 2021

அனாதை நாய்கள்

 பாலத்தைத் தாண்டும்போது பாலத்தின் முடிவில் சுவரில் வரிசையாக நிறைய காக்கைகள் அமர்ந்து கீழே ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.  ஒன்றை ஒன்று  ,கரைந்துகொண்டும் சற்றே பரபரப்பாக இருந்தன.