வியாழன், 18 ஜூலை, 2024

எதிர் இருக்கை யுவதி

 

இதுவரை சாப்பிடாத புதிய உணவகம் ஏதும் கண்ணில் பட்டால் மனதில் குறித்துக் கொண்டு அடுத்த வாய்ப்பில் உள்ளே நுழையும் வழக்கம் எனக்கு.

வியாழன், 11 ஜூலை, 2024

நமக்கெதுக்கு வம்பு!

 காக்கைகளிடம்  எனக்கோர் அனுபவம் உண்டு.  அது கூடு கட்டி இருக்கும் மரத்தின் அருகே சென்றோமானால், 'இத்தனை நாள் இவன்தான் நமக்கு உணவு கொடுத்தான்' என்றும் பாராமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து நம் தலையில் வலிக்குமளவு லொட்டென்று ஒன்று போடும்.

வெள்ளி, 28 ஜூன், 2024

வியாழன், 27 ஜூன், 2024

இல்லாத பொக்கிஷம்

 டெல்லியிலிருந்து  நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்த என் ஒன்று விட்ட தங்கை எங்களைக் காண வந்திருந்தாள்.பேசி, சிரித்து, களித்திருந்தபின் 'மாமா வீட்டுக்கு போகலாம், நீங்களும் வாங்க' என்று அழைத்தாள்.  நானும் பாஸும்  தங்கையுடன் கிளம்பினோம்.

வெள்ளி, 21 ஜூன், 2024

அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது

'உன்னைப்பாடும் தொழிலன்றி வேறு இல்லை' என்னும் டி எம் சௌந்தரராஜன் பாடல் இன்றைய தனிப்பாடலாக....  இசை டி எம் சௌந்தராஜனே.  எழுதியது யாரோ...   அறியேன்!

வியாழன், 20 ஜூன், 2024

கணுக்காலில் கருப்புக் கயிறு

 சமீப காலங்களில் மத்தியபிரதேஷ் சற்றே அதிக வளர்ச்சி பெற்று விட்டதாக அறியப்பட்டதால் தவிர்க்க முடியாத காரணங்களால் நின்று போயிருந்த நடைப்பயிற்சியை மறுபடி தொடங்கினேன்.

வியாழன், 13 ஜூன், 2024

தூக்கம் உன் கண்களை...

 ​எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.  சரியாகத்தான் இருந்தது.  எப்போது  இந்த மாற்றம் வந்தது?

வெள்ளி, 7 ஜூன், 2024

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ

உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன்  பாடிய பாடல்.

வியாழன், 6 ஜூன், 2024

செல்லமே 2/2


மதுரை ரேஸ் கோர்ஸ் ரோடில் வீட்டுப் படிக்கட்டை ஒட்டியே தெரு, தெருவை ஒட்டியே சாலை.  அந்த வழி இரண்டு பஸ் போகும். இரண்டு முறை எம் ஜி ஆர் அந்த வழி, எங்கள் வாசல் வழியே சென்றிருக்கிறார்!  அது ஒரு அனுபவம்!

சனி, 25 மே, 2024

மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் நான் படிச்ச கதை

 கணவர் இறந்துவிட்டார். ஒரு பெண் குழந்தை. தொடர் தற்கொலை எண்ணம்.. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிர்கதியான நிலை.. விருதுநகர் மாவட்டத்தின் கடைசி கிராமம் தேசியாபுரத்தில் வசிக்கும் சுந்தரம்மாளின் நிலை 2015 இல் இதுவாக இருந்தது

வியாழன், 23 மே, 2024

நான்தானா அவர் நினைத்தது?

 என்னைப் பார்த்தவர், என்னையே பார்த்தபடி மக்களை விலக்கி ஓரம் நோக்கி நகரத் தொடங்கினார்.  என்னிலிருந்து விலகாத அவர் பார்வையிலிருந்து என்னை நோக்கிதான் அவர் வருகிறார் என்று புரிந்தது.

திங்கள், 29 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  கூலா கறி -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 இதற்கு ஏன் இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் சுவையாக இருக்குமென்பதற்கு மட்டும் உத்தரவாதம் தர முடியும். யாரிடம் இந்தக் கறியை செய்யக் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஆனால் 40 வருடங்களுக்கு மேல் சாம்பாருக்கும் ரசம் சாதத்துக்கும் குருமாவிற்கும் இதை பக்கத்துணையாக செய்து வருகிறேன். நெய் சாதத்துக்கும் இது பக்கத்துணையாக மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் அறவே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இது மிகவும் பயன்படும்.

சனி, 20 ஏப்ரல், 2024

பாட்டியும் பேரனும் பின்னே மசாலாவும் மற்றும் நான் படிச்ச கதை

 சூரத் :குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி, தன் 200 கோடி ரூபாய் சொத்துக்களை தானாமாக வழங்கிய நிலையில், அவரும், அவரது மனைவியும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

வெள்ளி வீடியோ : துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும் துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்

 இன்றைய தனிப்பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், பி. சுசீலா குரலில் ஒலிக்கிறது.  அந்தக் காலத்துக்குச் சென்று அதிகாலையில் ரடியோ ஆன் செய்ததுபோல நினைத்துக் கொள்ளுங்கள்!

வியாழன், 18 ஏப்ரல், 2024

மனக்குரல்

 ஒருமுறை புத்தகக் கண்காட்சி சென்றபோது ஆடியோ புக் என்று பார்த்து கவரப்பட்டேன்.  நல்லவேளை, விசாரித்தேனே தவிர எதுவும் வாங்கவில்லை.

திங்கள், 8 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  வாழைப்பூ போண்டா  -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 சில மாதங்களுக்கு முன் 105 வயதாகும் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோதுவாழைப்பூ வடை செய்து கொடுத்தேன். 

அதை சுவைத்தவாறே, ‘ நீ வாழைப்பூ போண்டா செய்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.

வியாழன், 4 ஏப்ரல், 2024

சஞ்சலத் தாயும், சலித்த மகனும் 

 மகாபாரதம் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு.  உடனே படித்து விடுவேன், அல்லது வாங்கி விடுவேன். 

வெள்ளி, 29 மார்ச், 2024

வெள்ளி வீடியோ : கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெணணைத் தரவில்லை

 கே சோமு இயற்றிய பாடலுக்கு இசை கீரவாணி.  இது இப்போது பிரபலமாய் இருக்கும் கீரவாணியா, வேறு ஒருவரா என்று தெரியவில்லை.  அமைதியான இந்தப் பாடல் நெஞ்சை அள்ளும் சுசீலாம்மா பாடல்களில் ஒன்று.

வியாழன், 28 மார்ச், 2024

மொகதிஷு ஹாஸ்பிடல் மலையாள சிஸ்டர்

என்னுடைய துரோகம் மன்னிக்கப்பட்டது, அல்லது பெரிதாக மதிக்கப்படாமல் மறக்கப்பட்டது!  வயதும் காரணம்!  அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை.  நினைக்கவில்லை என்றும் சொல்ல முடியாது........ என்று முடித்திருந்தேன் சென்ற வாரம்....

வியாழன், 21 மார்ச், 2024

நண்பர்கள்தான் செய்கிறார்கள் துரோகம்

 துரோகம் பற்றி 100 வார்த்தையில் ஒரு வியாசம் கேட்டால் செயற்கை நுண்ணறிவு வகைதொகையின்றி நிறுத்தாமல் எழுதிக் கொண்டே போனது.  அதற்கு என்ன கஷ்டமோ..  பாவம்.

வியாழன், 14 மார்ச், 2024

வயசாகாமலேயே இருந்திருக்கலாம்..

 "பிரிஞ்சிருந்துட்டு மறுபடி அப்போ சேரும்போது அவ்வளோ உணர்ச்சியோடு பாட்டெல்லாம் பாடி சேர்ந்தீங்களே... 

வியாழன், 7 மார்ச், 2024

உங்கள் உயிர் எங்கள் கையில்

 பாட்டி தாத்தாவோட சேர்ந்திருந்த காலத்தில் நாம் வெளியே கிளம்பும்போதே பாட்டி, "கண்ணா...  சில்லறை எடுத்துகிட்டியா?  பஸ்ல பார்த்து ஏறு...  அவசரப்படாதே... பத்திரம்ப்பா..  பத்திரம்..." ன்னு எல்லாம் சொல்லி சொல்லி அனுப்புவார்கள். 

வியாழன், 29 பிப்ரவரி, 2024

கண்ணுக்கு தெரியாமல் கைமாறும் காசு

 எங்கள் பெயரில் அப்பா வைத்திருந்த பினாமி கணக்கு!  இதைத்தவிர பிறந்த நாளுக்கு அப்பா தரும் காசும் அதில்தான் இருக்கும்.  அப்பா பெரும்பாலும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது எங்களிடமிருந்து 'கடன்' வாங்குவார்!  வரவு - செலவுக் கணக்கு நோட்டில் எங்கள் பெயர்கள் ஏறும்.  இன்னமும் என் பிரவுன் கலர் சொரசொர பர்ஸ் என் நினைவில் இருக்கிறது.  உள்ளே புது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகள்...நாணயங்கள்..  அதற்கான கணக்கு சொல்லும் வெள்ளை பேப்பர்...   

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

​வெள்ளி வீடியோ : மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே

 சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்று ஒரு பக்திப்பாடல்.  உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் இயற்றிய பாடலுக்கு இசை D B ராமச்சந்திரன்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

முதல் தேதியும் முன்னூறு ரூபாய் சம்பளமும்

 'அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம்' என்று பேச இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் சட்சட்டென கிடைத்து விடுகின்றன!

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

சிறுகதை : வலி 1/2 - ஜீவி

 வலி 

ஜீவி

1/2 

செருப்பைக் கழட்டி வெளி ஷூ ராக்கில் வைத்து விட்டு ரேழி தாண்டி ஹாலுக்கு வந்தேன்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

ஜோடி சேரா இலைகள்

"அதில் ஏதோ வீடுகட்ட என்பது போல ஒரு விளையாட்டா வேறு ஏதாவதா தெரியவில்லை.  அதற்கு வேறு என்னென்னமோ தருகிறார்கள் அந்த பரிசுக்கு கூப்பன்கள் மூலம்.  இதில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.  

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,"......

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

வியாழன், 1 பிப்ரவரி, 2024

சில அவதானிப்புகள்

 ஒருவருக்கொருவர் மாறுபட்ட சிந்தனை இருக்கலாம்;இருக்கும்.  உணர்வுகளின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் எப்படி வெளிப்படும்?   பெரும்பாலும் அதுவும் ஒரே மாதிரி இருக்காதுதான்.  யார் யார் எப்படி எப்படி ரீயாக்ட் செய்வார்கள் என்று நினைத்துப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்.

திங்கள், 22 ஜனவரி, 2024

"திங்க"க்கிழமை : கிடாரங்காய் இனிப்பு ஊறுகாய் - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 பொதுவாய் கடாரங்காயில் மிளகாய் மட்டும் சேர்த்து கார ஊறுகாயாக மட்டும் தான் எல்லோரும் போடுவது வழக்கம். வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ருசியான ஊறுகாய் செய்யும் விதம் பற்றி என் சினேகிதி ஒருவரின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கடாரங்காய் வெயில் காலத்திலும் சரிகுளிர் காலத்திலும் சரி காய்கறி சந்தையில் கிடைக்கும். அதுவும் தஞ்சையில் நல்ல மஞ்சள் நிறத்திலும் அழகான பச்சை நிறத்திலும் கிடைக்கும். ஊறுகாய் செய்து ஜாடியில் நிரப்பி வைத்தால் ஒரு வருடமானாலும் கெடாது. இனி ஊறுகாய் செய்யும் விதம் பற்றி....

கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்

மனோ சாமிநாதன் 

வியாழன், 18 ஜனவரி, 2024

"இதுவே இப்பதான் கண்டு பிடித்திருக்கியா"

     கற்றுக்கொள்ள விஷயங்களா இல்லை எனக்கு?  அவ்வப்போது சிறு விஷயங்களையும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்...

 இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மகரஜோதி தரிசனம்.  இன்றைய பாடல் ஐயப்பனின் பாடல், எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுவது.  கே ஜே யேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம்..'

வியாழன், 11 ஜனவரி, 2024

கடவுள் என்னும் அதிகாரி

 உங்கள் அதிகாரி நீங்கள் ஒரு நாள் தாமதமாக வந்தால் உங்களை கடுமையாக கோபித்துக் கொள்கிறார் அல்லது உங்களுக்கு தண்டனை தருகிறார். இரண்டு நாள் தாமதமாக வந்தால் உங்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது போன்ற அதிகாரிகளை நீங்கள் விரும்புவீர்களா? வெறுப்பீர்களா? 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் என்னாளும்.. ஏக்கம் உள்ளாடும்....

 ஒவ்வொரு சீசனில் ஒவ்வொரு பாடல் என்பது போல இந்தப் பாடல் திடீரென புகழ்பெற ஆரம்பித்தது.  எனக்குத் தெரிந்து முதலில் விஜய் டிவியில்தான் இந்தப் பாடல் காலை 5.50 க்கு ஒளிபரப்பாகும்.