வியாழன், 28 செப்டம்பர், 2023

இரிடிக் கபூரும் இடிம்பிள் கம்பாடியாவும்...

ஓட்டுநர் சாப்பிடவில்லையே என்று வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தச் சொன்னால் திண்டிவனத்தில் ஆர்ய பவனில் நிறுத்தினார் அருண் - ஓட்டுநர்.  

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

வெள்ளி வீடியோ : கடலும் வானும் பிரித்து வைத்தாலும் காதல் வேகம் காற்றிலும் இல்லை

பலமுறை நாம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று இணையத்தில் கிடைக்கும் பல பக்திப் பாடல்களை எழுதியது யார், இசை அமைத்தது யார் என.  இசை அமைத்தவரையாவது சில சமயங்களில் சொல்கிறார்கள்.  ஆனால் அவ்வளவு பாடுபட்டு யோசித்து எழுதியவர் பெயர் இருட்டடிக்கப் படுகிறது.  

வியாழன், 21 செப்டம்பர், 2023

பக்கத்து பெஞ்ச் பத்மா

 கடந்த ஜூன் மாதத்திலேயே ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்கிற என் பயணம் உறுதி செய்யப் பட்டிருந்தது. 

வியாழன், 14 செப்டம்பர், 2023

ஹல்லோ மை டியர் ராங் நம்பர்...

 உங்களுக்கு தவறான எண் அழைப்பு..  அதாங்க ராங் நம்பர் கால் வந்தால் என்ன செய்வீர்கள்?  பெரும்பாலும் 'நீங்கள் தேடும் ஆள் நான் இல்லை' என்று சொல்லி உடனே வைத்து விடுவீர்கள்.  சில சமயம் மறுபடி மறுபடி அதே நபர் உங்களை தொந்தரவு செய்யவும் கூடும்.  சில சமயம் நம்பாமல் இருக்கவும் கூடும் (என் அனுபவங்களில் ஒன்று..  முன்னர் எழுதி இருக்கிறேன்)

வியாழன், 7 செப்டம்பர், 2023

குறுக்கு வழி பரிகாரங்கள்

 மூன்று மொழிகளிலும் வழிமுறைச் சொல்லி, மந்திரங்கள் சொல்லி இவர் முடித்தபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன. 

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

சிறுகதை : நியாயங்கள் - ஸ்ரீராம்

 ஃபேமிலி பென்ஷன் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கியூ வரிசை நீளமாக இருந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பேங்க் இன்றுதான் திறந்தது காரணமாக இருக்கலாம்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

​குற்ற உணர்வு

 இந்த பால்கார தம்பதிக்கு ஒரு குழந்தை.  தவழும் நிலை. நடைப்பயிற்சிக்கு செல்லும்போது இந்தக் குழந்தை ஒரு அபார்ட்மெண்ட் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  குழந்தையை கீழே விட்டு விட்டு திருமதி பால்காரர் மாடி ஏறி பால் போடச் சென்றிருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது.

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஒரு அராபிய இரவு...

 சாதாரணமாகவே எனக்கு நாலுகால் செல்லங்களைப் பிடிக்கும்.  நான் செல்லும் இடங்களில் உள்ள செல்லங்களைப் பார்க்கும்போது அவை என்ன செய்கின்றன என்று கவனிப்பது வழக்கம்.  அவற்றைத் தாண்டும்போது அன்பாக குரல் கொடுத்து விட்டு - விசாரித்து விட்டு - வருவேன். 

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

மயிலையிலே கபாலீஸ்வரா

 சமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது.  நாங்கள் சென்றது ஆடிப்பூரம் அன்று என்பதால் செம கூட்டம். 

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

வெள்ளி வீடியோ : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி

 இன்றும் ஒரு சூலமங்கலம் சகோதரிகள் பாடல்.  நிறைய பேர் இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  ஆனால் நன்றாயிருக்கிறது, கேட்க உற்சாகமாயிருக்கிறது என்று சொல்லப் போகிறார்கள்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

வியாழன், 27 ஜூலை, 2023

வானார்ந்த பொதியின்மிசை ...

 எச்சரிக்கை :  நான் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் படித்து விட்டேன் என்று சொல்பவர்களுக்கு  :  அங்கு படித்ததன் கூட வேறு சில பகுதிகளும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன!

வெள்ளி, 21 ஜூலை, 2023

திங்கள், 10 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :   ஜீரா போளி     - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  

வெள்ளி, 7 ஜூலை, 2023

வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து

 பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம்.  கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது.  மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

திங்கள், 3 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :  இலைக்கறி, இலை போளி   - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.

வியாழன், 29 ஜூன், 2023

சொல்லவா... குறை சொல்லவா..

 ...................  இன்னொரு நண்பர் இருக்கிறார். அவரும் உரத்த குரலில் கோபப் படுபவர்தான்.  அர்த்தமே இருக்காது..  எடுத்த எடுப்பிலேயே உரத்த குரல் அதிகார த்வனியில் வந்து விடும்.  மற்றவர்களை தம்ப் கண்ட்ரோலில் வைத்திருப்பதாக அவர் எண்ணம். 

திங்கள், 26 ஜூன், 2023

"திங்கக்"கிழமை :  சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.

வெள்ளி, 23 ஜூன், 2023

வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ

நெல்லை மற்றும் கமலா அக்கா விருப்பத்துக்கிணங்க இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் தனிப்பாடலாய்.  உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு புகழேந்தி இசை.

வியாழன், 22 ஜூன், 2023

வியாழன், 15 ஜூன், 2023

கார முந்திரி

முந்திரி பருப்பு மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு!  ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அது நமக்கு ஆகாததாய் இருக்கும் என்பது இயற்கை சொல்லும் விதி!  தலைவிதி!  

வியாழன், 8 ஜூன், 2023

அவர் அப்படி தான் சார்..

 பழைய வீட்டுக்கு பால் போட்டுக் கொண்டிருந்த குமார் திடீரென அலைபேசி நலம் விசாரித்தார்.  "மறந்துட்டீங்க.." என்றார் எல்லோரையும் போல.

செவ்வாய், 30 மே, 2023

வியாழன், 25 மே, 2023

மனமொத்த..

 சமீபத்தில் நண்பனின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் வந்தது.  அவன் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்திருந்தார். நண்பனின் அப்பா அம்மா இருவரையும் சிறுவயது முதலே அறிவேன். மனமொத்த தம்பதிகள் - என் அப்பா அம்மா போல.

வியாழன், 27 ஏப்ரல், 2023

பால் பொங்கும் பருவம்

 நேற்று காலை காஃபி போட ஃபிரிஜ்ஜிலிருந்து பால் எடுக்கும்போது கீழே ஒரு கவர் இருப்பது தெரிந்தது.  இடுக்கு வழியாக விழுந்திருக்கிறது.  எடுத்தால் கொஞ்சம் பழைய பால்.  தேதி நான்கு நாட்களுக்கு முந்தைய தேதி.