சனி, 28 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்
1) கழுத்துக்குக் கீழே செயல்பாடற்ற நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவ்வளவையும் சாதித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
 
 
2) வி.கார்ட் ஸ்டெபிலைசர் என்றால், தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்நிறுவனத் தலைவர் கொச்சவுசேப் சிற்றிலப்பள்ளி என்பவரின் மனைவி ஷீலா. இவர், 'வி-ஸ்டார்' என்ற பெயரில், ரெடிமேட் ஆடைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். 
கணவரை போலவே, தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், செலவு செய்து வருகிறார். கேரளாவில், 'கிட்னி பவுண்டேஷன்' என்ற அமைப்பு, மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது சிறுநீரக கோளாறினால் அவதிப்படுவோருக்கு, இலவசமாக சிறுநீரகங்களை கொடுத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் கொச்சவுசேப், தன்னுடைய கிட்னி ஒன்றை, ஏழை ஒருவருக்கு தானம் அளித்து இருக்கிறார்.


3) ஜெயக்குமார் ஜெயித்த கதை (நன்றி சதீஷ்குமார் பிரணதார்த்திஹரன்)
 

4) பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.  

5) ‘‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.


(எங்கள் ப்ளாக் பிறந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே ஐந்து பாசிடிவ் செய்திகளோடு நிறுத்திவிட்டோம்!)
 

வியாழன், 26 ஜூன், 2014

6174 - படித்ததன் பகிர்வு

                                                

எல்லோரும் முதலிலேயே நிறைய எழுதி விட்டார்கள். நான் இப்போதுதான் படித்தேன். ஹிஹி..எனவே இப்போது எழுதுகிறேன்.

காலமும் இடமும் மட்டும் சொல்லி சின்னச் சின்னதாய் முதல் சில அத்தியாயங்கள் வரும்போது மண்டை காய்ந்து போனாலும், காரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே படிக்க வைத்தது. நாவலில் பின்னால் இதன் தொடர்பு என்ன என்று புரிய வேண்டுமே, அதற்கு இவற்றை இவற்றை எல்லாம் சரியாக நினைவில்  வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.

அதற்குத் தேவை இல்லாமல் செய்து விடுகிறார் க. சுதாகர். இது இவரது முதல் படைப்பு என்கிறது இரா முருகனின் முன்னுரை. அவர் சொல்வது போல மிகப் பெரிய கதைக்களனை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார் சுதாகர். 

கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை!
அதேசமயம் நம்மூரில் விஜயகாந்த், அர்ஜுன், வெளியூரில் அர்னால்டும் செய்யும் காரியம்தான்கதை! தாய்நாட்டை அல்லது உலகைக் காக்கும் வேலை. மற்ற சாதாரண மக்களுக்கு இப்படி ஒன்று நடப்பது கூடத் தெரியாது.

புத்தகக் கண்காட்சி செல்லும்போது,  ஏற்கெனவே முக நூலில் படித்திருந்த விமர்சன வரவேற்பைக் கண்டு புத்தகத்தை எடுத்துப் பார்த்து நிராகரித்திருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் - என்னைப் பொறுத்தவரை! ஒன்று ஒரு அறிமுக எழுத்தாளர் புத்தகத்தை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ரிஸ்க் எடுப்பதா? இரண்டாவது அங்கேயே லேசாகப் புரட்டிப் பார்த்தபோது படிக்கத்தூண்டும் வகையில் இல்லை என்று தீர்மானித்திருந்தேன்.

இந்த இரண்டு என் கணிப்புகளுமே தவறு என்று உணர்த்தி இருக்கிறது இந்தப் புத்தகம்.  புத்தகத்தின் கடைசியில் எந்தெந்த இடங்களிலிருந்து கற்பனை ஊற்று கிடைத்தது, மற்றும் இந்தப் புத்தகத்துக்காக ரெபரன்ஸ் எடுத்திருக்கிறோம் என்ற பட்டியலையும் தந்திருக்கிறார்.

பதினைந்து மூன்றில் வாங்கிப் படித்திருந்தாலும் சொந்தமாக ஒன்று வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்! :))) அனன்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

ஒரு மிகப் பெரிய பல்சக்கரம் சுற்றி வரும்போது அதன் பற்கள் நீள் வட்டத் தொலைவில் இருக்கும்போது எப்படி ஒன்றுடன் ஒன்று பொருந்தப் போகின்றன, எங்கேயோ இடிக்கப் போகிறது என்று தோன்றும் வேளையில் அந்தந்தப் பல் அதனதன் இடத்தில் உட்காரும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமே, அதுபோல கதையில் முடிச்சுகள் அவிழும் நேரம் அதது அதனதன் இடத்தில் அமரும்போது இருக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களைக் கூட 'இதை இவர் கடைசியில் விடுவிக்கிறாரா என்று பார்க்கவேண்டும்' என்று நினைத்தால், நாம் மறந்து விட்ட விவரங்களுக்குக் கூட கடைசியில் விளக்கம் கொடுத்து விடுகிறார்.  ஆனால் கவனமாக, வரிகளைத் தாவாமல் படிக்க வேண்டும். 

ஒரே ஒரு இடம் மட்டும் சொல்லாமல் விட்டு விட்டாரா, நான்தான் கவனமாகப் படிக்கவில்லையா, அல்லது படித்துப் புரிந்து கொள்ளவில்லையா என்று புரியவில்லை. அது பெரிய விஷயம் இல்லை என்பதால் விட்டு விட்டேன். தேவராஜ் தன ஆட்களைத் தானே கொன்று டபுள் கேம் ஆடியிருப்பதாக அனந்த் நினைக்குமிடம்.

ஆதிகதை என்று லெமூரியாவில் தொடங்கும் கதை பெர்முடா, பிரமிட், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சி, உலக யுத்தம் உலக அழிவு பழந்தமிழ்ப் பாடல்களில் புதிர் என்று எங்கெங்கோ பயணிக்கிறது.

"இழிந்து வானின்று வரும் கல்லொன்று
எழும் ஊழிக் காலத்தின் சிலநாள் முன்பு
ஊழிமட்டும் ஒளியெறியும் இரண்டாய்ப் பிரிந்து
ஆழிமேல் தானும் அசையா நின்று..."

மேலே சொல்லப் பட்டுள்ள பாடல்தான் கதையின் கரு!  இது மாதிரி ஆங்காங்கே நிறைய பாடல் புதிர்களை விடுவித்தபடி முன்னேறுகிறார்கள் நன்மை கோரும் குழவினர்.  கூடவே வேறு வழியில் வில்லக் குழுவினரும்.

"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க
தன்னை இயல்தோற்றும் தசம ஆதி
சீரிய கட்டமதில் தடயம் காண்
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே"

இந்தப் புதிர்கள் புரியவேண்டுமானால் உங்களுக்கு அதின்மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். எந்த ஒன்றின்மேலும் நம்பிக்கை இருப்பவர்களுக்கே,  தான் நம்பிக்கை கொண்ட பொருளின் மேல் ஒரு பாசிடிவான எண்ண அலையால்,  அந்தப் பொருட்களைப் பற்றி மற்றவர்களுக்குத் தோன்றாத கோணங்களில் புதிய விஷயங்கள் புலப்படுகின்றன என்று சொல்கிறார்.

காலச்சக்கரம் நரசிம்மாவின் கதைகள் கூட இதேபோன்றதொரு அமைப்பில் இருப்பதனாலேயே எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டன. இந்திரா சௌந்தரராஜன் கூட இதுபோன்ற மர்மக் கதைகள் எழுதி இருக்கலாம். படித்ததில்லை. பாலகணேஷ் முன்பு ஓரிரு பதிவுகளில் சொல்லியிருந்ததிலிருந்து அவர் கதைகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.

கப்ரேகர் கான்ஸ்டன்ட் எண் 6174 பற்றி தெரியுமா?  அதை அழகாக இந்தக் கதையில் பொருத்துகிறார்.

இடையில் பெரிதாக நினைக்கத் தோன்றாத, அதிக முக்கியத்துவம் தராத, மென்மையான, ஆனால் சிறிய காதல் ஒன்றும் கதையில் இழையோடுகிறது.

300 ஆம் பக்கத்திலிருந்து மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன. முதலில் மெல்ல, விட்டு விட்டு, அப்புறம் கதை இன்னும் சூடு பிடிக்கிறது.
லெமூரியா பற்றி அரைகுறையாய் அறிந்திருக்கிறேன். பிரமிட் பற்றி படித்திருக்கிறேன். ப்ரிசம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறேன். கணக்கோடுதான் எனக்குப் பிணக்கு. இவைகளை வைத்து மிக மிக சுவாரஸ்யமாய் கதை புனைந்திருக்கிறார் க. சுதாகர்.
மறுபடியும் சொல்கிறேன், இது இவரின் முதல் படைப்பு என்பதை நம்பத்தான் முடியவில்லை!

நம்ப முடியாத வேகமும், கருவும் கதைக்கு பலம் சேர்க்கின்றன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.


6174
க. சுதாகர்
வம்சி பதிப்பகம்
408 பக்கங்கள் 300 ரூபாய்.

திங்கள், 23 ஜூன், 2014

திங்க கிழமை. 140623:: சொல்லுங்க வெல்லுங்க போட்டி

            
சென்ற திங்க கிழமை பதிவில் வெளியான சொல்லுங்க, வெல்லுங்க, மெல்லுங்க - போட்டிக்கு வந்த சமையல் குறிப்புகள். 
                      பரிசு வெல்பவர்கள்: கீதா சாம்பசிவம், மற்றும் மாடிப்படி மாது. (மாடிப்படி மாது பெயரையும் விலாசத்தையும் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்) 
(நீலக் கமெண்ட் யாவும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் கருத்து)       

Geetha Sambasivam 

ரொம்ப சிம்பிள், ப்ரெட் ஒரு பாக்கெட் வாங்கி, கால் கிலோ தக்காளி, கால் கிலோ வெங்காயம் வாங்கி சான்ட்விச் செய்துடலாம்.

முழு கோதுமை ப்ரவுன் ப்ரெட் 30 ரூபாய் (ஹி ஹி முழு கோதுமை பிரெட் ஒரு பாக்கெட் நான்கு பேர்களுக்கு போதாது!)
   
தக்காளி கால்கிலோ 5 ரூ

வெங்காயம் கால்கிலோ 5 ரூ(ஶ்ரீரங்கம் விலை) மிச்சம் பத்து ரூபாய் இருக்கும். பச்சைமிளகாய் கால்கிலோ 5 ரூ, கொத்துமல்லி 5ரூ வாங்கிக்கலாம். உப்பு வீட்டிலே இருக்கும். எண்ணெய், கடுகு வீட்டிலே இருக்கும். (நைசா எண்ணைக்கு விலைப்பட்டியலில் இருந்து விடுதலை அளித்துவிட்டீர்கள்!) இல்லாட்டியும் அப்படியே வதக்கலாம். ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் சுட்டால் சான்ட்விச் ரெடி.  
===============================================

Geetha Sambasivam

அதை விட எளிமையானது அரை கிலோ இட்லி அரிசி, 200 கிராம் உளுந்து ஊற வைத்து அரைத்து இட்லியோ தோசையோ செய்யலாம். தொட்டுக்க 100 கிராம் தக்காளி, 10 கிராம் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த துவையல். அல்லது பச்சைக்கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த பச்சைச் சட்னி. 
=======================================

Geetha Sambasivam 

கால் கிலோ ரவை, கால்கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி வாங்கிக் கொண்டு, கருகப்பிலை, கொ.மல்லி, ப.மி. 5 ரூபாய்க்குள் வாங்கிக்கலாம். (இங்கே கிடைக்குது) வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருகப்பிலை போட்டு எண்ணெய் சேர்த்து உப்புமாப் பண்ணலாம். 

அவல் அரைகிலோ, காரட் 50கி, வெங்காயம் 50கி, உப்பு, எலுமிச்சை, ப.மி. கருகப்பிலை கொ.மல்லி.

அவலை நன்கு களைந்து உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். காரட், வெங்காயம் துருவிச் சேர்த்துப் பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடவும். சுத்தமான இயற்கை உணவு. வயிற்றை எதுவும் பண்ணாது. 
===========================================
Geetha Sambasivam

அவல்+தேங்காய்+சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்

அவல் 20 ரூபாய் சர்க்கரை அல்லது வெல்லம் 10 ரூபாய்க்குக் கொஞ்சமாக இருந்தால் போதும். (கடையிலே அடிக்க வந்தால் நான் பொறுப்பில்லை) தேங்காய் பத்து ரூபாய். 
(ஹி ஹி பெங்களூரில் சிறிய தேங்காய் இருபது ரூபாய்; பெரியது முப்பது ரூபாய்!) 

அவல் 20 ரூபாய் வாழைப்பழம் 10 ரூபாய்(இங்கே நல்ல பழமாகக் கற்பூர ரஸ்தாளி 20 ரூபாய்க்குக் கிடைக்கும்)+ தேங்காய் சேர்த்துச் சாப்பிடலாம். 
====================================
Geetha Sambasivam

கால் கிலோ ஜவ்வரிசி, 100 கிராம் வறுத்த கடலை, ஒன்றிரண்டு உ.கி. ப.மி. கருகப்பிலை, எலுமிச்சை சேர்த்து ஜவ்வரிசியை ஊற வைச்சு சாபுதனா கிச்சடி பண்ணலாம்.

அரைகிலோ அரிசி 25 ரூ 200 கி பாசிப் பருப்பு 15 ரூ, இஞ்சி, மிளகு , ஜீரகம், உப்பு போன்றவை மீதம் பத்து ரூபாயில் வாங்கிப் பொங்கல் செய்து சாப்பிடலாம். என்ன நெய்யோ, எண்ணெயோ சேர்க்க முடியாது. ஏன்னா 50 ரூபாய் முடிஞ்சு போச்சே! :)))) 
=============================================


Madhavan Srinivasagopalan: 

Oh! I got it now. But still Rs.50 is too much. Buy the raw materials like Wheat (200 gm) (Rs.10) sugar 100 gm (Rs.5), oil 50 ml (Rs.5), salt Rs.5( Though this is not essential). + rs. 10 or 20 for gas(LPG) expense. + misc (remaining amount if for added flavour). Prepare couple of Chapati and keep it on the floor. More than 4 ants can have a complete Breatfast. 
==============================================

A Simple Man: 

uppumaa....

(not amma uppu :-) 

===================================
வல்லிசிம்ஹன்: 

சொல்லுங்க. செய்துடலாம். பொரி வாங்கி நாலுபேரு சாப்பிடலாம். நிறைய தயிர் விட்டுச் சப்பிட்டால் வயிறு நிரம்பும்.  

======================================
G.M Balasubramaniam: 

அரிசி வாங்கிக் கஞ்சி வைத்துக் குடித்தால் நாலு பேருக்கென்ன இன்னும் சிலருக்கும் வயிறாரக் காலை உணவாகலாம். 
=============================

பால கணேஷ்:  

அரை கிலோ ரவை வாங்கி உப்புமா கிண்டிட்டால் போச்சு. 
=============================

அருணா செல்வம்: 

உப்புமா கிண்டிட வேண்டியது தான். 
===================================

மாடிப்படி மாது: 

போட்டிக்கு என்னோட சாய்ஸ் பழைய சாதம் அல்லது நொய்க்கஞ்சி

என்னை பொறுத்தவரை காலை உணவாக பழைய சாதத்தை அடிச்சிக்க வேறு எந்த பலகாரமும் இல்லை. உங்கள் போட்டிக்கு அது ஏற்றுகொள்ள முடியாத பட்சத்தில் எனது அடுத்த சாய்ஸ் நொய்க்கஞ்சி. 

இதற்கு அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1 ஒரு கிலோ அரிசி / நொய் அரிசி - ரூ.40/-
2. தேவையான உப்பு - ரூ.2/-
4. பழைய சாதம்னா பச்சை மிளகாய், நொய்க்கஞ்சின்னா பாண்டியன் மட்டை ஊறுகாய் - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 

ஆனா நீங்க சாப்பாடு ஐட்டம் போட்டியில் சேராதுன்னு சொன்னா கேரள பாரம்பரிய உணவான புட்டு இந்த பந்தயத்துக்கு ஒத்துவரும் என தோன்றுகிறது. இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட)

1. ஒரு கிலோ பச்சரிசி - ரூ.35/- (எந்த ஊர்ல சார்? புழுங்கல் அரிசியே அந்த விலைக்குக் கிடைக்காது!) 
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு சொல்லுங்க, அரைக்கற செலவு குறையும். ஹி... ஹி... எங்கம்மா அப்படித்தான் சொல்லி அனுப்புவாங்க) (எங்க ஊர் மாவுமெஷினில் இந்த உதார் வேலை எல்லாம் நடக்காது! வேயிங் மெஷின் வைத்திருக்கின்றார்கள்!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-
4. வாழைப்பழம் அல்லது சர்க்கரை - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 
புட்டுப் பழமோ அல்லது புட்டு சர்க்கரையோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.
              
ஆங்ங்......எது .... புட்டு எப்படி செய்யணுமா....? ஆளை விடுங்க. நான் இந்த போட்டிக்கே வரலைன்னு நெனச்சுக்குங்க 

அடுத்ததா தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு கூழ்.இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1. ஒரு கிலோ கேழ்வரகு அல்லது கம்பு - ரூ.35/-
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு மறக்காம சொல்லுங்க) (அட ஆண்டவா! திருந்தவே மாட்டீங்களா!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-  
4. பச்சை மிளகாய் அல்லது வெங்காயம் (கடிச்சிக்க) - ரூ.8/-
     
போதும் போதும்னு நீங்க கத்துவது கேட்பதால் இத்தோட முடிச்சிகி.......றேன் 
===========================================
                         

சனி, 21 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.


1) இயற்கையைக் காக்கும் 2000 மாணவர்கள். மதுரை 
 
 
 


4) சீனிவாச தாதம் - 65 வயதில் 146 முறை ரத்ததானம். சீனிவாச சதம் என்று சொல்லலாமோ!
 

5) சபாஷ் ராஜலக்ஷ்மி. சபாஷ் காவல்துறை.
 
 
 
 

10) பக்தர்களின் பசி தீர்க்கும் நவதாண்டவ தீட்சிதர்..
 

 


12)
இந்திய தாவரவியல் விஞ்ஞானி சஞ்சய ராஜாராமுக்கு 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 


13) முன்னோடிகளாக திகழும் பழங்குடிகள்
 
 
14) பாராட்டத்தக்க ஆக்கபூர்வமான செயல்.செவ்வாய், 17 ஜூன், 2014

தற்கொலை (2)..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்....!! )


  முதல் பகுதி.


.......
(தொடர்ச்சி)


அவனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு, மேலே போய் சட்டை மாற்றிக் கொண்டு வந்தேன். வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி ஒன்றும் மூச்சு விடவில்லை. நான் இவனுடன் பேசுவது தெரிந்தாலே என்னை உரித்து விடுவார்கள்.

இருவரும் பேசிக் கொண்டே இன்னொரு நண்பனிடம் சென்றோம். அவன் எங்கள் இன்னொரு நண்பனுடன் இருந்தான்!  ஏனோ அவர்களுக்குமே இவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. இது அறிவீனமா, பயமா... ஏதோ ஒன்று!

தனியாகச் சாகப் பயமாக இருந்ததாகச் சொன்ன நண்பனுக்கு மிச்ச இருவரும் அவன் சாகும் வரை துணையாய் இருப்பதாய் முடிவு செய்யப்பட்டது!   அவர்களில் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் படுப்பதாய் முடிவு செய்தார்கள்.  நான் முடிந்தவரை அவர்களுடன் இருந்து விட்டுத் திரும்பினேன். அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத் தந்திருந்தது! 
                                                    


"பார்த்துக்கடா... பாவம்! ரொம்பக் கஷ்டப்படாமப் பார்த்துக்க" என்றேன். 

"நீ போடா... நான் பார்த்துக்கறேன். கடைசி வரை நான் அவன் கூட இருப்பேன்" என்றான் அவன்.

இப்போது எழுதும்போது இந்த இடங்கள் எல்லாம் அபத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய!

"நாளை இவன் Body உன் பக்கத்தில் இருந்தால் உனக்குப் பிரச்னை வராதா? என்ன சொல்வே?" என்று கேட்டேன்!

"ஏய்! நான் உன்னை மாதிரி பயந்தவன் இல்லை! என்ன ஆனாலும் சரி" என்றான் அவன். (நண்பேன்டா!)

"நான் உன்கிட்ட ஏதும் சொல்லாமலேயே உன் கூட வந்து படுத்தேன்னு சொல்லிடுவோம்" என்றான் 'சாக'ப்போகிறவன்.
"ஆமாம்... நீ வந்துதான் சொல்லணும்... சொல்ல நீ எங்கடா இருப்பே?" என்றான் இவன். எல்லோரும் 'நகைச்சுவை'யை உணர்ந்து சிரித்தோம்!  (இப்போது அபத்தமாக இருக்கிறது இல்லை? அப்போது ஏதோ அசட்டு த்ரில்தான்!)

வீடு வந்து லேசில் தூக்கம் வரவில்லை. வீட்டில் யாரிடமும் சொல்லமுடியாத குறுகுறுப்பும் படுத்தியது. நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்!

மறுநாள் காலை எழுந்தது முதலே  பரபரப்பை அடக்க முடியவில்லை. அசாதாரணக் காட்சியைக் காண இருக்கும் த்ரில் வேறு படுத்த, வேக வேகமாகக் கிளம்பினேன்.  'நிறைய வேலை இருக்கிறது'
கிளம்பிக் கொண்டே இருக்கும்போதே நண்பன் அழைப்பதாய் என் அண்ணன் சொல்ல, படபடப்புடன் வந்து எட்டிப் பார்த்தேன்.

சாகப் போனவன் கூடப் படுத்த 'அந்த' நண்பன்.
"என்ன ஆச்சுடா? " விளக்கமாகக் கேட்க வாய் வரவில்லை.

"உடனே கிளம்புடா... கைல எவ்வளவு காசு திரட்ட முடியுமோ, எடுத்துகிட்டு உடனே வா..."
"என்னடா ஆச்சு? காசு எதுக்கு?"
"அட, வாடா வேகமான்னா கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு...வாடா..."  கிட்டத்தட்ட அதட்டலாய்க் கூப்பிட்டான்.

கையில் கிடைத்த காசை எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தேன். பின்னால் அமர்ந்தவனிடம் "எங்கேடா?" என்றேன் சைக்கிளை அவன் வீட்டுப் பக்கம் திருப்ப முயன்றபடி.
                                                          

"திருப்பாதே... நேரா விடு"  என்றான். "மேனகா காபி பார் போ"

ரயிலடிக்கு அருகில் இருந்தது 'மேனகா காபி பார்'.  நாங்கள் அடிக்கடி கூடும் இடம். அங்கு போன போது கடை வாசலிலிருந்த பெஞ்ச்சில் படுத்திருந்தான் சாகப்போன நண்பன். மிக, மிகச் சோர்வாய்த் தெரிந்தான்.

சைக்கிளை ஸ்டான்ட் போட்டு விட்டுத் திரும்புவதற்குள் வேகமாக எழுந்து கடை ஓரம் சுவரை ஒட்டி நின்று ஒக்காளத்துடன் வாந்தி எடுத்தான்! இல்லை, இல்லை எடுக்க முயற்சி செய்தான்.  திரும்பி பலவீனமாகவும், பரிதாபமாகவும் என்னைப் பார்த்தான்.
                                                      
"என்னடா...." என்று ஏதோ தொடங்கப் போன என்னை, என் கையை அழுத்தி சைகை செய்தான் இங்கு அழைத்து வந்த நண்பன்.
"ஃபுட் பாய்சன்'னு சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது பேசிக் கெடுத்துடாதே"  என்றான்.
நாங்கள் வழக்கமாகக் கூடும் கடை.

கடைக்காரர் என்னவென்று தெரியாமல் இஞ்சி, சுக்கு கஷாயம் என்று ஏதோ வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சோர்ந்திருந்த நண்பனைக் கிளப்பிக் கொண்டு ரயிலடிக்கு வந்தோம். கொஞ்சம் காத்திருந்தபிறகு இன்னும் இரண்டு நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.
இடைப்பட்ட நேரத்தில் கூடப் படுத்திருந்த நண்பன் இரவு நடந்த கதையைச் சொன்னான். 
                                                          


"பனிரண்டு ஒரு மணி வரை ஒண்ணுமே நடக்கலைடா... கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் கண்ணசந்துட்டோம்.  திடீர்னு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா இவன் துடிச்சிகிட்டு இருக்கான். அழுவறான். வயிறு வலிக்குதுங்கறான். வாந்தி எடுக்கறான். கக்கூஸ் போகணும் மாதிரி இருக்குங்கறான்...வெளியில அழைச்சுட்டுப் போய் ரோட்டோரமா போக விட்டுத் தண்ணீர் கொடுத்தேன். ஒரே அழுகை. காலைல நாலு மணிக்கெல்லாம் இங்கே வந்துட்டோம். இவர்தான் ஏதேதோ கொடுத்து அவன் வாந்தியை நிறுத்தி, குடிக்கவும் கொடுத்தார். எல்லாம் கடன்தான்..."

அப்புறம் எல்லோரும் கைக்காசைத் திரட்டிப்போட்டு கடைக்காரர் கடனை அடைத்து, அப்புறம் அவனுக்கு, அருகிலிருந்த ஊரில் வசித்துவந்த அவன் பாட்டி ஊருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அவன் கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். யாராவது கூடப் போக வேண்டாமா என்ற கேள்வி வந்தபோது அவனே வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

"தனியாப் போய்க்கறேண்டா... அப்பத்தான் நான் மனசில் நினைச்சுருக்கற கதையை பாட்டி கிட்ட சொல்ல முடியும்" என்றான்.

'இனி தற்கொலை என்ற முடிவை இந்த ஜென்மத்தில் நினைக்க மாட்டேன்' என்றான் வேதனையுடன். 

                                     
டிரெய்ன் கிளம்பும்வரை கூட இருந்துவிட்டு வந்தோம்.


வன் மறுபடி எங்களூர் திரும்ப பத்துப் பதினைந்து நாளாகியது. எதுவுமே நடக்காதது போல மறுபடியும் சிவாஜி படம் பார்க்கக் கிளம்பி விட்டோம்!

திங்கள், 16 ஜூன், 2014

திங்க கிழமை 140616 :: சொல்லுங்கள் வெல்லுங்கள்.


ஐம்பது ரூபாய்க்குள் (கடையில் தின்பண்டமாக வாங்காமல்.) செலவு செய்து நான்கு பேர் காலை உணவு வயிறார சாப்பிடவேண்டும். 

எங்களுக்கு எழுதியனுப்புங்கள். அல்லது கமெண்ட் செய்யுங்கள்.   போட்டிக்கு வரும் கமெண்ட்கள் உடனே வெளியிடப்படாது. மற்ற கமெண்ட்ஸ் சற்று நேரம் கழித்து வெளியிடப்படலாம்! 

வருகின்ற ஞாயிறு வரையிலும் கால அவகாசம். 

வாழ்த்துக்கள்! 
      


சனி, 14 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


 
 
 
2) இது ஒரு சாதனை. அதுவும் இலவசச் சாதனை! மருத்துவர் பலராமன்.
 
 


3) பரத், ஆட்டிஸ குழந்தையாமே..?’னு அப்போ கேட்டவங்களுக்கும், வெளிப்படையா கேட்கலைனாலும் எங்களை வேடிக்கையா பார்த்தவங்களுக்கும் இப்போ பதில் சொல்லத் தோணுது. என் பிள்ளை யையும் மத்த பிள்ளைகள் மாதிரியே படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பிட்டேன். தன் சம்பளத்துல எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அழவெச்சுட்டான் என் பையன்'' என்றபோது, தன் அம்மாவை அன்புடன், நன்றியுடன் கட்டியணைத்து, அதுவரை பேசாத அத்தனை வார்த்தைகளையும் அந்த ஒரு நொடியில் புரியவைத்தார் பரத். சித்ரா சுப்பிரமணியம் 
 
 
 
இவரின் பாஸிட்டிவ் விடாமுயற்சி நமக்கு ஒரு பாடம்.
 
 
 
5) மானுட சேவையில் மாலதி ஹொல்லா 
 
 
 
6) சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கும் வேலு
 
 
 
7) இந்தச் செய்தியில் பாஸிட்டிவ் ராஜேந்திரனும் அவர் மனைவியும்தான்.
 
 
 
8) இறைவனுக்குச் செய்யும் தொண்டு. ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை குழுவினர்.
 
 
 
9) சோலார் பைக். மதுரை மாணவன் கார்த்திக் 
 
 

10) விடா முயற்சிக்கு கிடியோன் கார்த்திக்.
 
 
 
11) சோகமான பாஸிட்டிவ் செய்தி. ஆனாலும் இவர் தந்தையின் நம்பிக்கை பொய்க்காமல் கிரண்குமார் உயிருடன் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.
12) பினோ ஜெபின்