நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 30 நவம்பர், 2014
சனி, 29 நவம்பர், 2014
பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.
2) இந்த ஆரம்பம் இவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுபோகட்டும். 9ம் வகுப்பு மாணவன் எஸ். பிரணவ்கிருஷ்ணா.
3) சொந்தத்தில் திருமணம் வேண்டாமே என்பது செய்தி. அவர்களின் மன உறுதி பாஸிட்டிவ் செய்தி. கண்ணன் - ஜெயபாரதி தம்பதியர்.
4) சத்தமில்லாத சேவை செய்யும் பொன்னுத்தாய்.
5) அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்களின் சாதனை. பொட்டல்காட்டை மூலிகை வனமாக்கினார்கள்.
6) மாடுகளுக்கும் பயன். மனிதர்களுக்கும் பயன். மடிநோய்க்கு செலவில்லாத, எளிய மருந்து கண்டுபிடித்து, அதற்காக ஜனாதிபதி விருதும் பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்.
வெள்ளி, 28 நவம்பர், 2014
புதன், 26 நவம்பர், 2014
கனவில் வந்த காந்தி
கில்லர்ஜி
தொடங்கி வைத்த தொடர்பதிவு. முதல் சுற்றில் நான் மாட்டாவிட்டாலும்,
எப்படியும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் சுற்றில் மாட்டி விடுவேன் என்று
நினைத்தேன். திரு துளசிதரன் மாட்டி விட்டு விட்டார்!
1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
இந்தியாவில்தான்
2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?
இருக்கிறது
எங்கள் பரிக்ஷை முறையில் அது நேராது.
இருக்கிறது
3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?
வெளி நாடு வாழ் இந்தியரை 'இது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்று சொல்லுங்கள்' என்று கேட்பேன்.
வெளி நாடு வாழ் இந்தியரை 'இது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்று சொல்லுங்கள்' என்று கேட்பேன்.
4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
வைத்திருக்கிறோம்
வைத்திருக்கிறோம்
5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
இருக்கே!!
6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
எங்கள் பரிக்ஷை முறையில் அது நேராது.
7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏது ம் இருக்கின்றதா?
அதுவும் உண்டு.
அதுவும் உண்டு.
8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
செய்தால் பிழைப்பார்கள்.
செய்தால் பிழைப்பார்கள்.
9 மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
ஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.
ஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.
10. எல்லாமே
நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய
பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது
ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?
தேவனாகப் பிறந்து அவருக்கு உதவியாளனாகி விடுவேன்.
தேவனாகப் பிறந்து அவருக்கு உதவியாளனாகி விடுவேன்.
கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் 'தொடர்ந்து' விட்டார்கள். எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!
திங்கள், 24 நவம்பர், 2014
'திங்க'க்கிழமை : சித்துண்டை!
ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு சுவை.
பதினைந்து வயது இருக்கும்போது என்று நினைவு. வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்கள் எல்லாம் 'ஊர்க்காசு' என்று தந்து செல்வார்கள். அதில் அவரவர்கள் பங்கை அவரவர்கள் தனித்தனியே வைத்து செலவு செய்வோம். அம்மா வாங்கி ஆளுக்கொரு பர்ஸ் போட்டு உள்ளே வைத்திருப்பார்கள்.
பதினைந்து வயது இருக்கும்போது என்று நினைவு. வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்கள் எல்லாம் 'ஊர்க்காசு' என்று தந்து செல்வார்கள். அதில் அவரவர்கள் பங்கை அவரவர்கள் தனித்தனியே வைத்து செலவு செய்வோம். அம்மா வாங்கி ஆளுக்கொரு பர்ஸ் போட்டு உள்ளே வைத்திருப்பார்கள்.
பெரும்பாலான சமயங்களில்
இருபது தேதிக்குமேல் அப்பாவின் பற்றாக்குறை பட்ஜெட்டைச் சமாளிக்க அப்பா
ஒருநாள் அம்மாவையும் வைத்துக்கொண்டு எல்லார் பர்சையும் எடுத்துச் சோதித்து,
அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியது என்று குறிப்பிட்டு
தொகையைக் குறிப்பிட்டு அதன் உள்ளே சீட்டு வைத்துவிட்டு எடுத்துக் கொள்வார்.
நாங்களும் பெருமையாகவும், பெருந்தன்மையாகவும் ("வேற வழி? அப்பாவுக்கே நாங்க பணம்
தர்ரோம்ல...") அருகில் அமர்ந்து அப்பா சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள்லாம் அப்பவே அப்படி.... அப்படிக் குடும்பப் பொறுப்பைத் தோளில் தூக்கிச் சுமந்தவர்களாக்கும்!
அப்பா ரெகுலராக தினசரி செய்யும் செலவுகளை எழுதி
வைக்கும் வழக்கம் உடையவர். யோசித்து யோசித்து, எங்களையும் கேட்டுக்
கேட்டு காலைக் கடன்களில் ஒன்றாக எல்லா செலவுகளையும், இதற்கென
வைத்திருக்கும் நோட்டில் எழுதி விடுவார். அந்த நோட்டில் சில சமயங்களில்
க.தி.த என்று அவர் கணக்கில் எழுதி எங்கள் கடனைத் திருப்பித் தருவதும்
உண்டு.
("என்ன, சம்பந்தமில்லாமப் பேசிகிட்டு.... சித்துண்டையைப் பற்றிச் சொல்லேம்பா..." என்று குரல் வருவது கேட்கிறது. இதோ இந்த அரட்டையை முடித்து விட்டு கடைசியில் அதைச் சொல்கிறேன்)
எங்கே விட்டேன்.... ஆங்... க.தி த! எப்படியோ அப்படி இப்படி பாக்கி இருக்கும் பணத்தை சத்தமில்லாமல் எடுத்து செலவு செய்வேன். அதில் உள்ள சீட்டில் எழுதியும் விடுவேன்.
அப்படி ஒருமுறை கடைத்தெரு சென்றபோது எல்லோரும் சாப்பிட வாழைப்பழம் வாங்கி வந்தேன். வீடு வந்த உடனேயே ஒன்றைச் சாப்பிட்டேன்.
அன்று
ஏனோ அந்தப் பழத்தின் சுவை
மிகவும் கவர்ந்து விட்டது. இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என்று 12
வாழைப்பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன். மறுபடி கடைக்குச் சென்றேன்.
மறுபடி 12 பழங்கள். வீடு. 12 பழங்களையும் மறுபடி நானே... மறுபடி கடை.
மறுபடி
12 பழங்கள். இம்முறை 6 பழங்கள் மட்டும் சாப்பிட்டேன்! ( 'வயிறு என்ன
ஆச்சு? வயிறா இல்லை...?' என்று யாரும் கேட்க்கக் கூடாது! நடந்ததை அப்படியே
சொல்கிறேன். அவ்வளவுதான்!)
சமயங்களில் வாழைப்பழங்களைச் சிறு துண்டங்களாக்கி, ஒரு டபராவில் போட்டு கொஞ்சம் பால் சேர்த்து, சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்து இரண்டு பிஸ்கட்டுகளை அதில் பொடி செய்து தூவி, ஸ்பூனால் கலக்கி சாப்பிடும் பழக்கமும் உண்டு! அப்பா பால் பழம் மட்டும் அவ்வப்போது சாப்பிடுவார். நான் பிஸ்கட் போன்ற துணைப் பொருட்கள் அவ்வப்போது சேர்த்துக் கொள்வேன்!
இப்படியும் ஒருமுறை நடந்தது!!! இப்போ சித்துண்டை!
=======================================================
சித்துண்டை :
தேங்காய்த்
துருவல் ஒரு மூடி, ஒரு கரண்டி வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள், இவற்றை ஒரு
பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கிளறி, ஒரு
ஸ்பூன் அரிசி மாவு தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.
அரை
ஆழாக்கு மைதா மாவு, சிறிது அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி
இவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு போல நீர் விட்டுக் கரைத்து, பூரணத்தை
உருட்டி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்!
சித்துண்டை ரெடி!
==============================================================
குறிப்பு : 'சித்துண்டை' படங்கள் இணையத்தில் கிடைக்காததால், சுய்யன் படங்களை இணைத்திருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்!
==============================================================
குறிப்பு : 'சித்துண்டை' படங்கள் இணையத்தில் கிடைக்காததால், சுய்யன் படங்களை இணைத்திருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்!
படங்களுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
ஞாயிறு, 23 நவம்பர், 2014
சனி, 22 நவம்பர், 2014
பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
3) நடைபாதைக் குழந்தைகளின்மேல் அக்கறை எடுத்து அவர்களையும் சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் பாடுபடும் சுயம் அறக்கட்டளை.
4) தென்சென்னை புறநகரில் ஏரியில், குளம், கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின்
உடல்களை மீட்க காவல், தீயணைப்பு துறையினரே தவிக்கும் நிலையில், முற்றிலும்
பார்வையே இல்லாவிட்டாலும் சர்வசாதாரணமாக மூழ்கி சில நிமிடங்களில் உடலை
மீட்டு பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன்.
5) 50 ஆண்டுகளுக்குப் பிறகு உறவுகளைச் சேர்த்து வைத்த செய்தி. சிறு (நல்ல) செய்தியும் உறவு சேர உதவும்!
6) சுந்தரியின் போராட்டமும் வெற்றியும்.
7)
இன்றும் கல்வி கற்க எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது? தாங்களே
கட்டிக் கொண்ட பள்ளிக்கூடம் குறித்து கூறும், பொதுமக்கள் மீட்புக் கமிட்டி
தலைவர் ஆ.காமராஜ்.
8) இதுவும் கல்வி சம்பந்தப் பட்ட செய்தியே. அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
9) ஊரையே மரங்களால் - அதுவும் லாபம் தரும் புளிய மரங்களால் - நிறைத்த ஊராட்சித் தலைவர் ந. பாலசுப்ரமணியமன். இப்படி ஒருவர் எல்லா ஊராட்சிகளிலும் தேவை.
10)
ஒன்றும், இரண்டும் சிறிய எண்கள் - எண்ணிக்கையில்! ஆனால் அந்த ஒன்றும்
இரண்டும் கழிக்க வழியில்லாமல் பொது இடங்களில் இந்நாட்டில் செய்யப்படும்
அசுத்தங்கள்? இந்த 5 ஹீரோக்கள் பற்றிப் படியுங்களேன்.
11) "அதே பிரச்னை"க்கு இந்தப் பெண்கள் குழு கண்டு பிடித்திருக்கும் வித்தியாசமான ஐடியாவைப் பாருங்கள்!
12) ராஜஸ்தான் மாநில, உதய்பூர் அருகே உள்ள மனார் கிராம மக்களின் கருணை.
13) கணவனுக்கு வேலை போனால் என்ன? என் கை இருக்கிறது உதவவும், உழைக்கவும். பஞ்சர் கடை நடத்தி வரும் இரும்புப் பெண்மணி விஜயலட்சுமி.
14) ஒரு MBA படித்தவர் ஏழை விவசாயிகள் வாழ்வு முன்னேற என்ன செய்ய முடியும்? ப்ரையன் லீ.
15) பார்வை பாதிக்கப் பட்ட நிலையிலும் சஞ்சீவ் கோஹில் செய்யும் சேவை, நேற்று நல்ல பாம்புக் குட்டிகளை, அதன் மேல் பூச்சிக்கொல்லி மருந்தான 'ஹிட்' டை அடித்தபடியே ஓடிய என்னை வெட்கத்துக்குள்ளாக்குகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)