வெள்ளி, 28 மே, 2021

வெள்ளி வீடியோ : தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் சொல்லித்தர வேணும் பாடங்களை

 அன்னக்கிளி வந்து வெற்றிபெற்ற சூட்டில் எடுக்கப்பட்ட படம் பொண்ணு ஊருக்கு புதுசு.  அன்னக்கிளிக்கு கதய்வ ஆசனம் எழுதிய ஆர் செல்வராஜ்தான் இந்தப் படத்தின் இயக்குனர்.  படம் 1979 ல் வெளிவந்தது.

சனி, 22 மே, 2021

காற்றில் வரும் ஜீவனே...

 புதுடில்லி: காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 100 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் மருத்துவமனைகளில் நிறுவத் துவங்கியுள்ளன.

வியாழன், 20 மே, 2021

திங்கள், 17 மே, 2021

'திங்க'க்கிழமை :  தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

  ஹாய்.. என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். நீண்ட நாட்(மாதங்)(வருடங்)களுக்கு மேலாக இந்த திங்களன்று பதிவில் வராமலிருந்த  நான் இன்று வந்திருக்கிறேன். இது அனேகமாக அனைவருமே அறிந்த உணவுதான். இருப்பினும்  எனக்கு தெரிந்த வகையில் சொல்லியுள்ளேன். ஏற்கனவே இதை செய்து,போர் அடிக்கும் வரை சுவைத்தவர்களுக்கும், இல்லை, இது புதிதாக சற்று மாறுபாடாக உள்ளது என்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

வெள்ளி, 14 மே, 2021

வெள்ளி வீடியோ : சிலைகூட நீ அழைத்தால் வாராதோ.. அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ

 ஒரு படத்துக்கு மூன்று அல்லது நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  படத்தில் சுமார் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.  அந்த அந்தப் பாடலை யார் யார் எழுதியது என்று எப்படி அறிந்துகொள்வது?  முன்னாலாவது பாட்டுப் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்தது.  அதில் விவரம் இருக்கும்.  அது சரியானதுதானா என்றும் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.

வியாழன், 13 மே, 2021

தண்டவாளத்துண்டு

 மதியம் சாப்பாட்டு நேரமாகட்டும், இல்லை மாலை வீடு செல்லும் நேரமாகட்டும்..   ஒரு மாதிரி களைத்துப்போன மன நிலையில் இருக்கும்போது மடித்துக் கட்டிய வேட்டி, மேல் பொத்தான் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் வெள்ளை சட்டையுடன் கன்னியப்பன் மெதுவாக நடந்து செல்லும்போது சட்டென மனதில் ஒரு உற்சாகமும் சுறுசுறுப்பும் வரும்.

சனி, 8 மே, 2021

அப்போது எனக்கு, 33 வயது....

 மத்திய பிரதேசத்தில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல, ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும், அதிக பணம் கேட்கப்படுவதால், ஏழை மக்களால், அதை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 7 மே, 2021

வெள்ளி வீடியோ : நல்ல இரவில்லையா... தென்றல் வரவில்லையா.. முழு நிலவில்லையா.. தனி இடமில்லையா

 1966 இல் மெட்றாஸ் டு பாண்டிச்சேரி என்று ஒரு படம் வந்தது.   ரவிசந்திரன்  ஹீரோவாக நடித்த இத் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதால் 1972 இல் ஹிந்தியில் பாம்பே டு கோவா என்று வந்தது.  ஹிந்தியில் அமிதாப் நடித்திருந்தார்.

செவ்வாய், 4 மே, 2021

சிறுகதை  : உயிரிலே கலந்தவள் - அபிநயா

 

அபியின் படைப்புகள்.  இது நான் அவ்வப்போது செல்லும் தளம்.  அபிநயா என்பவர் தான் படித்த புத்தகங்கள் பற்றி, தன் அனுபவங்கள் பற்றி எல்லாம் எழுதுவார்.  அவ்வப்போது சில கதைகளும் எழுதுவார்.  இந்தக் கதையும் அவர் தளத்தில் வெளியானதுதான்.  ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியான இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது.  அவர் அனுமதியுடன் அதை இங்கு பகிர்கிறேன்.