வியாழன், 31 டிசம்பர், 2020

நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று...

 

நண்பர்களுக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ன்றிரவு 2021 மலர்கிறது.  என்னென்ன மர்மங்களை, துயரங்களை தனக்கான நேரத்தில் வைத்திருக்கிறதோ?  எல்லா வருடங்களும் போல எதிர்பார்க்கப்பட்ட 2020 இன்றுடன் முடிகிறது.   வரலாற்றில் மறக்க முடியாத வருடங்களில் ஒன்றாக 2020 ம் நினைவு கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.  நாளை பிறக்கும் புத்தாண்டில் 2021 சந்தோஷங்களை தராவிட்டாலும், துன்பங்கள், துயரங்கள் இல்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

==============================================================================================

 காமத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்?  காதலில் காமம் இருக்கும்.  காமத்தில் காதல் இருக்க வாய்ப்பில்லை.  வந்த வேகத்தில் மறையும் காமம்.  பிரிந்து நின்றாலும் மறையாது காதல்.  பலபேரிடம் வரும் காமம்.  ஒரே ஆளிடம் வரும் காதல்.  

வியாழன், 24 டிசம்பர், 2020

பெண்ணிடம் வம்பு செய்தால்...

 சமீபத்தில் தொலைக்காட்சியில் செய்திச்சேனலுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு சேனலில் மாதவன் நடித்த ரன் படக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  தனது தங்கையைக் காதலிக்கும் மாதவனைக் கண்டுபிடித்து விடும் அதுல் குல்கர்னி மாதவன் வீட்டுக்குள் நுழைந்து குடும்பத்தினரை மிரட்டுவார்.  மாதவனுக்கு ஃபோனைப் போட்டால் அவரிடமிருந்து கவுண்ட்டர் அட்டாக் வரும். "எனக்கு மட்டும்தான் குடும்பமா?  உனக்கு குடும்பம் கிடையாதா?  நான் உன் பொண்ணு பக்கத்துலதான் இருக்கேன்" என்று மிரட்டும் குரலில் பேசுவார்.  ஆனால் அந்தக் குழந்தையிடம் மென்மையாகத்தான் நடந்து கொள்வார்.  கதாநாயகனாச்சே...! 

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : புரியாத புதிர் - கீதா ரெங்கன் 

துரை அண்ணா எபி யில் கே வா போ கதைப் பகுதியில் எழுதியிருந்த அப்பனும் அம்மையும்  கதையை வாசித்ததும் பெண்ணின் கோணத்தில் மனதுள் எழுந்த கதை. துரை அண்ணாவின் அழகான கதை எனக்கு மற்றொரு கதை எழுதத் தூண்டியதற்கு அண்ணாவிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து ஊக்கப்படுத்தி படைப்புகளை வெளியிடுவதற்கு எபி ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆகவே

 கிராமங்கள் நகரங்கள் என்று பிரித்து உணரக்கூடிய காலம் இருந்தது.  இப்போதும் ஓரளவு இருக்கலாம்.  அன்றைய கிராமத்துக்கும் நகரத்துக்கும் இருந்த வேறுபாடு மிகப் பெரிது.  இன்று இணையம் எனும் விஞ்ஞான நுட்பம் கிராமம் நகரம் என்கிற வேறுபாட்டையே இல்லாமல் செய்து விட்டது.

வியாழன், 17 டிசம்பர், 2020

கைரேகை ஜோசியம் பார்க்கலியோ... ஜோசியம்...

 சின்ன வயசில் (!) கையைப் பார்த்தோ, ஜாதகம் பார்த்தோ சில ஆரூடங்கள் சொல்வார்கள்.  இந்த மாதிரி விஷயங்கள் எனக்குத் தெரியும் என்று வீட்டுக்கு வருபவர்கள் யாராவது சொல்லி விட்டால் போதும்...   உதாரணமாக கைரேகை..   

உடனே வீட்டில் உள்ளவர்கள் கைகள் யாவும் அவர் முன் நீளும்! 

வெள்ளி, 11 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்..

 எஸ்​ ஏ சந்திரசேகர் தயாரிப்பில் 1989 இல் வெளியான படம் ராஜநடை.  விஜயகாந்த், சீதா, கௌதமி, பேபி ஷாம்லி நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.​

திங்கள், 7 டிசம்பர், 2020

'திங்க'க்கிழமை : சப்பாத்தி (ஏடாகூடமாக ) Stuffed

 நீண்ட நாட்களாய் கிடப்பில் இருந்த திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினேன்!  வீட்டில் அண்ணனும் அவர் மகனும் வந்திருக்க அன்று இதைச்செய்ய முடிவெடுத்தேன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா

 இந்தப் பழி வாங்கும் கதை எல்லாம் இருக்கிறதல்லவா?  அது எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால் ராமாயணம், மகாபாரதம் போன்ற நம் புராணங்களிலும் இருந்திருக்கிறது.  ரோம, கிரேக்க புராணங்களிலும் இருந்திருக்கிறது.

வியாழன், 3 டிசம்பர், 2020

கரப்பான் பூச்சியின் கடைசி நாட்கள்

 புதிய வீட்டுக்கு வந்ததில் கரப்பன் பூச்சிகள் கண்ணில் படாதது  சந்தோஷமாக இருந்தது.  அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது!  ஓரிரு மாதங்களிலேயே ஒன்றிரண்டாக கண்ணில் பட ஆரம்பித்தது.  அதுவும் அங்கிருந்து (பிரிக்காமலேயே வைத்திருந்த) கொண்டு வந்த புததகப் பெட்டிகளை பிரித்ததும் அதிலிருந்து வெளிவந்து, அடிப்பதற்குள் (ஏஞ்சல் மன்னிப்பாராக) குடுகுடுவென்று ஓடி கிடைத்த இடுக்குகளில் மறைந்தன சில கரப்பான் பூச்சிகள்.