ஞாயிறு, 31 மே, 2015

ஞாயிறு 308 :: கோலக் கலை !


இது, பக்கத்திலே உள்ள பார்க் ஒன்றில், யாரோ வரைந்தது. ஒரு குச்சியால், மண்ணில் அழகாக கோடு இழுத்து வரையப்பட்ட கோலம்.. வரைந்த கலைஞர் யார் என்று தெரியவில்லை. 

ஆனால், ஆறடிக்கு  ஆறடி உள்ள மண் பரப்பில், நேத்தியாக இழுக்கப்பட்டுள்ள  வளைவுகள், எந்த இடத்திலும் கோணாமல், எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வரையப்பட்டுள்ளது. 

பத்து அல்லது பதினைந்து வயதுக்குள் இருக்கின்ற சிறுவர் சிறுமியர்களைதாம் இந்தப் பார்க்கில் நான் அடிக்கடி பார்ப்பேன். அவர்களில் யாரோ ஒருவர்தான் இதை வரைந்திருக்கக்கூடும். 

 அற்புதமான இந்தப் படைப்பாளியைப் பாராட்டுவோம்! 

                

சனி, 30 மே, 2015

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.1) கஷ்டம் எல்லாருக்கும் வரும். பயப்படக் கூடாது; அதிலிருந்து மீண்டு வர வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம். 

இங்கு இப்போது, 22 ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் உள்ளனர். முதியோர்களுக்கும் பேரன், பேத்திகளுடன் இருந்தாற் போலிருக்கும்.
 


என் மகனும் பெரிய அளவில் சப்போர்ட் எனக்கு. என் பெண் சரசா மிக உயர் பதவியில் இருந்தாள். அவளுக்கும் சர்வீஸ் மைண்ட் காரணமாக, அந்த வேலையை உதறி, என்னுடன் வந்து உதவி செய்கிறாள்.
எவ்வளவு பாஸிட்டிவ் விஷயங்கள்! விஸ்ராந்தி.
 
 
2) வாழப் போராடும் மகன்.
 

 
 
3) நல்ல செய்திதான்.  சுற்றுச் சூழல் மாசு இல்லாத ஆட்டோ.
 

 
 
4) டாக்டர் ஆனந்த் காமத்தின் சாதனை. கோவான் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.

 
 
5) ஏற்கெனவே இந்தப்  பகுதியில் இவரைக் குறிப்பிட்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறது.  வழக்கம் போல மறுபடி சொல்வதில் தவறில்லை எனும் கருத்தோடு, இந்தச் செய்தி, அவர் இன்னும் இதுபோன்ற சேவையைத் தொடர்வதைக் காட்டுகிறது என்பதும் சந்தோஷம்.  ஆசிரியர் கோமதி.
 

 
 
6) சேசு மேரியின் சாதனை மிக மிக பாராட்டுக்குரியது.
 

 
 
7) மதம் தாண்டிய மனிதம்.  ஹர்மன்சிங்.
 

 
 
8) டாக்டர் ஊர்வசி ஷானியும் பிரேர்னா ஸ்கூலும்!
 9) நம்பிக்'கை'யை இழக்கவில்லை.மோனிக்கா.

செவ்வாய், 26 மே, 2015

நியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்!செய்தித் தாளிலிருந்து பாஸிட்டிவ் செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.  அவற்றைத் தவிர சில செய்திகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.  இவை ஒரு செய்தி போல இல்லாமல், ஒரு துணுக்கு போல இடம் பெறுவதால், எத்தனை பேர்கள் இது போன்ற செய்திகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றும்.  எனவே அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று அவ்வப்போது இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.  'லிங்க்' ஆதாரத்துக்குத்தான்.  அங்கிருப்பதுதான் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.


1)  ரத்த சோகையைப் போக்க ஒரு புதிய வழி!

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ்.  6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது. 

கிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார். 


மக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
ரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள். 


கம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்றும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர். 2) என்றும் டால்ஃபின் எங்கள் நண்பன்!
பிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.


இப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன. 


200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன! டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்லை என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். 


அதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். 
3) ஒரு அரிய சம்பவம்.  
கொஞ்ச நாட்களுக்குமுன் கரையில் ஓய்வாகப் படுத்திருக்கும் முதலை ஒன்றை புலியோ, சிறுத்தையோ சத்தமில்லாமல் வந்து  ஓடும் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.


எருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் மானுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது. 


முதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின. 


மான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திங்கள், 25 மே, 2015

'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.


தேவையான பொருட்கள்:

     1. கருப்பு எள்ளு 100 கிராம்.
     2. தேங்காய் 1/2 மூடி
     3. பூண்டு 4 பற்கள்.
  1. காய்ந்த மிளகாய் 7
  2. புளி நெல்லிக்காய் அளவு.
  1. கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு.
  2. உப்பு : தேவையான அளவு.

ஒரு வாணலியில், எள்ளை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

நான்கு பற்கள் உரித்த பூண்டு, புளி, உப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல்  ஆகியவற்றை மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பிறகு இந்தக் கலவையில் வறுத்த எள்ளை சேர்த்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்


எள்ளுத் துவையல் தயார்.  
  
     

சனி, 23 மே, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.


1) மாதம், 1,000 ரூபாய் சம்பளம். அந்த பணத்தில் பலருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தேன்.


ஒரு மூதாட்டி எங்கிருந்தோ வந்து, நான் கொடுத்த உணவை அள்ளி அள்ளிச் சாப்பிட்டார். அப்போது அவரது கண்களில் தெரிந்த அளவில்லாத மகிழ்ச்சி, இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாதது.இதை என் அப்பாவிடம் சொன்னபோது, 'அடுத்த மாதத்தில் இருந்து முழு பணத்தையும், ஆதரவற்றவர்களுக்கே செலவழி' என்று சொல்லி விட்டார்.  மணிமாறன்.
 
 2) ராகேஷ் குமார் குப்தா, மற்றும் சஞ்சய் சக்ஸேனாவும் 20,000 ரூபாயும்.

 


3) ஒரு டன் புல் 55 ரூபாய்தானா?  15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்குமா?  தகவல் தவறா?  தெரியவில்லை. 


ஆனால் இரண்டு டன் புல்லில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பது நல்ல தகவல்.  சீமக் கருவேலம் மாதிரி பக்க விளைவுகள் அப்புறம் ஏதும் கண்டு பிடிக்க மாட்டார்களே? திண்டுக்கல் விவசாயி ராஜசேகரன்.
 
 


 
 
4) கோவிலுக்கு இந்துக்கள் நிலம் வழங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், முஸ்லிம்கள் தாங்களாகவே நிலங்களை வழங்க முன்வந்தனர். மேலும், சந்தை விலைக்கு இல்லாமல், அரசு விலைக்கு நிலங்களை வழங்கியது, அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. பீகாரில்.
 
 


 
 
5) ஐந்தாவது நாடாக...  
 
6) பெங்களுரு ஷாலினி, திருநெல்வேலி முத்துவேணி
இதுபோல இன்னும் பல்வறு கஷ்டங்களுக்கிடையேயும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் இளைய தலைமுறைக்குப் பாராட்டுகள்.
 
 
 

 
 
7) சங்கப்பா, இளம் விவசாய விஞ்ஞானி.
 
 

 
 
8) மீண்டும் மீண்டும் அராஜகம் செய்தால் குழந்தைகளால்தான்  என்ன செய்ய முடியும்?  ஆனாலும் அவர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
 
வெள்ளி, 22 மே, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்!

       

(இந்தக் காணொளியைக் காண்பவர்கள், உங்க பக்கத்தில், பின்னால், எல்லாம் சற்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்களுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம்! ) 
                   

புதன், 20 மே, 2015

ரேடியோவைக் கண்டு பிடித்தது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!
இந்தக் கேள்விக்கு நமக்கு (எனக்குத்) தெரிந்த பதில் மார்க்கோனி!

ஆனால் அதைக் கண்டு பிடித்தவர் நிகோலா டெஸ்லா!  

                              


1892 இல் தனது ஆராய்ச்சி முடிவுகளை பேடன்ட் வாங்கக் கொடுத்து,  பதிவு செய்திருக்கிறார்.  ஆனால் மார்க்கோனி அதை வைத்து 1895 இல்,  தான் கண்டுபிடித்ததாய்ச் சொல்லி, அதன் காரணமாக நோபல் பரிசும் பின்னர் பெற்றிருக்கிறார்.  மார்க்கோனி மேல் டெஸ்லா வழக்கு தொடர்ந்தும் பயனில்லை.  பணம் பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால், ஒரு வழியாய் 1943 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த உண்மையை ஒத்துக் கொண்டதைக் கூட அதிகம் மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்டனர் பணவான்கள்!

                                                   


பணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம்.  தாமஸ் ஆல்வா எடிசனும் சரி, ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌஸும் சரி, தங்கள் பண பலத்தால் இவர் புகழ் வெளிவராமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

                


எந்திரன் சிட்டி மாதிரி இவர் பார்க்கும், படிக்கும் புத்தகங்கள் இவர் மூளையில் போட்டோ பிடித்தது போலப் பதியுமாம்.  இவருக்குத் தோன்றும் புதிய ஐடியாக்கள் கூட ஒரு மூவி போல மூளையில் தோன்றுமாம்.


ரேடியோ என்பதைத் தலைப்புக்காக மட்டும் சொல்லி இருந்தாலும்,  அவரின் (பெயர் திருடப்பட்ட) கண்டுபிடிப்புகள் ஏராளம்.
டெஸ்லா 'கெட்டும் பட்டணம் சேர்' என்று தன்னுடைய இளவயதுக் காட்சிக் கனவான நயாகரா நீர்மின் திட்டத்தைச் செயல் படுத்த முதல்படியாக அமெரிக்கா வந்து தான் பெருமதிப்பு வைத்திருந்த எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார்.

நாளொரு கண்டுபிடிப்பாக வந்து நின்ற டெஸ்லாவின் அறிவு எடிசனை அச்சுறுத்தியதோடு எச்சரிக்கையாகவும் இருக்க வைத்துள்ளது.  டெஸ்லா கண்டுபிடிக்கும் ஒவ்வொன்றுக்கும் தனது (ஆய்வக) பெயரில் காப்புரிமை பெறவும் அவர் தயங்கவில்லை.

DC மோட்டார் விஷயத்தில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்திருக்கின்றனர்.  தனி ஆய்வகம் வைத்த டெஸ்லாவின் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளுக்கான குறிப்புகளுடன் ஒரு மர்மமான தீ விபத்தையும் சந்தித்தது.


DC மோட்டார், நயாகராவில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி, எக்ஸ்ரே ரேடார், நிலநடுக்கத்தை அளவிடும் கருவி உட்பட 1200 க்கும் மேற்பட்டவைகளைக் கண்டுபிடித்து, 700 க்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமையும் பெற்றிருக்கும் இவருக்குப் பணத்தின் மீது ஆசை இல்லை.  இவரது DC கரண்ட் முயற்சி வெற்றி பெறாமலிருக்க மிக மோசமான முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார் எடிசன்!

உலகத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்து விட்டார் டெஸ்லா, ஜே.பி மோர்கன் எனும் கோடீஸ்வரர்  உதவியுடன் நூறடி உயர கோபுரம் (டவர்) கட்டி வேலைகளைத் தொடங்கியும் விட்டார்.அதன்மேல் உலோகக் கோளம் ஒன்றும் பொருத்தப்பட்டது. 
ஏற்கெனவே டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை வைத்து கோடி கோடியாகப் பணம் பார்த்திருந்த எடிசன், வெஸ்டிங்ஹௌஸ் போன்றவர்களைப் போல தானும் பணம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த மோர்கன், எதற்கு இது என்று விசாரித்ததும் "உலகம் முழுவதும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்தான் இது"  என்று டெஸ்லா கூறியதும், உடனடியாக டெஸ்லாவுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார்.
                       JohnPierpontMorgan.png

அமெரிக்க அரசாங்கமும் போர்க்கால நடவடிக்கையாக அந்த கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது!  இதில்தான் அவர் மிகவும் நொந்து போனாராம்.  பின்னாட்களில் Charged Particle Particle Beam Weapon என்ற ஒன்றை அவர் தயாரிக்க நினைத்ததுதான் அவருக்கு எமனாய் முடிந்திருக்கிறது.

இவரது மிகப் பழைய மறைக்கப்பட்ட பேட்டி ஒன்று.

ஸ்மார்ட் ஃபோனுக்கான முயற்சியை 1901 லேயே செய்திருக்கிறார் டெஸ்லா.

திருமணமே செய்து கொள்ளாமல் 86 வயது வரை வாழ்ந்த இவர் பிறந்தது 1856, ஜூலை பத்தாம் தேதி!

திங்கள், 18 மே, 2015

'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் போடக் கற்றுத் தருகிறார் திருமதி ரேவதி.


   நன்றி : Revathi Narasimhan 
            
சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    

பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.  
           

கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்: 

*********************************************************************

கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
  

ஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.

இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது. 
   
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.

பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.

கத்திரிக்காய். அதுவும் இந்த  பச்சைக் கலரில் 


இருக்குமே அந்த கத்திரிக்காய்.  
   

தேவையான அளவுகள்

***************

1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.  


2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப், 

3. புளிக்கரைசல்.........அரைக் கப் (கெட்டியாக இருக்கணும். கப் இல்லைங்கோ - புளிக்கரைசல்!  )
4. மிளகாய்ப்பொடி......அரைக் கப்
5. மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
6. வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
7. நல்லெண்ணெய்..........400 கிராம்
8. கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
9. வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
10. வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
11. சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.

இப்ப செய்முறைக்குப் போகலாமா.  

கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.
smile emoticon
நல்ல சுத்தம் செய்த இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.

அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு, அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி எடுக்க வேண்டும்.  

இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு, இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும் (கடுகு அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)

கொதிக்க வைக்கணும்.  

இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும். கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.

முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும். 

அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.  

எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.  

ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.  

ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.

இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.
                      

ஞாயிறு, 17 மே, 2015

ஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்!


பெங்களூரு  இரயில்வே  பிளாட்ஃபாரத்தில், பகல்  நேரத் தூக்கம்! 
             
      
சென்ற ஞாயிறு பரிசுப் போட்டியில் பங்கேற்பதாகக் கூறி, பிறகு தூங்கிவிட்டவர்களுக்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! 

சென்ற வாரப் பரிசுப்போட்டியில் பரிசு பெறுபவர் : பெ சொ வி.  

அவருடைய முகவரியை, அவர், அந்தப் போட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும். 
             

சனி, 16 மே, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) ஆனந்தகுமார்.  யானைகளிடமிருந்து மனிதனையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் காக்க எளிய ஒரு வழி கண்டுபிடித்து விருது வாங்கியிருப்பவர்.
 

 
2)  இனியவன்.  உழைப்பின் பெருமை.  
 

 
3) மும்பைப் பெண்ணுக்கு வேதாரண்யத்தில் என்ன வேலை?  அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு? அழகான குடும்பத்தை விட்டு விட்டு?
 

 
4) லட்சியமும் விடாமுயற்சியும்.  சென்னை போரூரைச் சேர்ந்த நாககன்னி.
 


 
5) இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே!  விஜயன்-மோகனா தம்பதியர்.   "மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது,  இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது.   ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு!  இல்லையில்லை எங்களுக்கு" என்று மனைவியின் தோள் தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனா விஜயனின் முகத்தில் பொங்குகிறது.
 

6) நம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு தியாகராஜன்.


புதன், 13 மே, 2015

வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.
வினோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் - மரணமில்லா மர்மங்கள் - ஆச்சர்ய அமானுஷ்யங்கள் என்று அட்டையிலேயே அறிமுகம் அட்டகாசமாய்ச் சொல்கிறது.   Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images  Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images

பாலகணேஷ் முன்பு ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புத்தகத்தை வாங்க அதன் அட்டைப் படமே - அமைப்பே - கவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  எனக்கும் அது சரி என்றுதான் தோன்றியது.  இந்தப் புத்தகம் அட்டையைப் பார்க்கும்போதே அது உண்மைதான் என்று தோன்றியது.  வாங்கத் தூண்டுகிறது.


ஏமாற்றவில்லை.


35 மர்மங்களை அலசுகிறது புத்தகம். 


FBI பற்றிய பகிர்வை முன்பு பார்த்தோம்.  இதில் FBI கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய கூப்பர் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.


ஆனால் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள பல மர்மங்களுக்கு விடையே கிடையாது!

 
சமீபத்தில் கோவை ஆவி நடத்திய சிறுகதைப் போட்டியில் (வெள்ளைப் பேப்பர் டு வெள்ளித்திரை) நாய் ஒன்று தற்கொலை செய்து கொள்வது போல எழுதி இருந்தார் ஒரு போட்டியாளர்.  அது சாத்தியமில்லை, நாய்கள் அப்படிச் செய்யாது என்று நினைத்திருந்தேன்.  இந்தப் புத்தகத்தில் நாய்கள் செய்து கொள்ளும் தற்கொலை பற்றி ஒரு அத்யாயம்!

ஜோம்பிகள் பற்றி...

"எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படும்" -  ஆசிரியர் முகிலின் ஒரு வரி!

முகமூடி அணிந்த ஒரு குற்றவாளியை இளவயது முதல், அந்தக் குற்றவாளி சாகும் வரை மிக மிக ரகசியமாக சிறையில் வைத்திருந்திருக்கிறார்கள்.  யார் அவர்? அல்லது யார் அவள்? 
தெரிந்ததா?  ஏன் அவரை யாரென்று கூட அறிவிக்காமல் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருந்தார்கள்?


வருங்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி பெற்றிருந்த டோரத்தி பற்றி...

தவறாகத் தீர்ப்பளிக்கப் பட்டால் அந்த மனிதனைச் சாகடிக்க முடியாதா...  தற்செயலா அது?

பேய்கள் பற்றிய - சற்றே 'போரா'ன - ஒரு அத்யாயம்.

சிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி...

கோடிகோடியாக செல்வங்களை ஒளித்து வைத்து, அவர்களுக்கும் உதவாமல், பிறருக்கும் உதவாமல் இன்னும் எங்கோ இருக்கும் புதையல்கள் பற்றி..

டைடானிக்கைக் கவிழ்த்த மம்மி பற்றி..  


இந்த மம்மியைப் பற்றிப் பேசியவர்கள், பார்த்தவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு இருந்ததாக எழுதுகிறார் முகில்.  ஒருவேளை புத்தகத்தில் மம்மியைப் பார்த்த (படத்தை) பாதிப்பில்தான் நான் 'சில்லறை பொறுக்கி'னேனோ?!!   அட, அது மட்டுமில்லை!  இன்னொரு விஷயம்.  இதை அப்லோட் செய்யும்போது லிங்க் படுத்திய பாட்டைப் பார்த்தால் நிஜமோ இந்த வதந்தி என்று நானே நம்ப ஆரம்பித்து விடுவேனோ என்னவோ!


மிகப் பெரிய பாம்புகள் பற்றி, நாஸ்ட்ரடாமஸ் மற்றும் உள்ளுணர்வுகள் பற்றி..


முடிவு தெரியாத புதிர்கள், ஆதாரமில்லா நுணுக்கமான விவரங்களைப் படித்தால் சில சமயம் சலிப்பும், சிரிப்பும் கூட வருகிறது!

பாலைவனத்தில் (உயரத்திலிருந்து பார்த்தால் மட்டும் காணக் கிடைக்கும்) மைல் கணக்கில் நீளும் கோடுகள் பற்றி,  ஆளில்லா தீவில் இருக்கும் மனித உருவச் சிலைகள் பற்றி, மம்மிகள் பற்றி எல்லாம் முன்பே படித்திருக்கிறேன்.  (மயன் வரலாறு?)

எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாத புத்தகம்.
வெளிச்சத்தின் நிறம் கருப்பு
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முகில்
320 பக்கங்கள் - 200 ரூபாய்.