திங்கள், 30 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :     திருநெவேலி ஒக்கோரை      - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 எங்க வீடுகள்ல, தீபாவளிக்குத்தான் இந்த ஸ்வீட் செய்வார்கள். அப்புறம் வளர்ந்து வேலை பார்க்கச் சென்ற பிறகு, எங்க ஊர் ஒக்கோரையைச் சாப்பிடும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.  துபாய், பஹ்ரைன்ல, தீபாவளியின்போது இதெல்லாம் மெனெக்கெட்டுப் பண்ணுவதில்லை.

சனி, 28 ஆகஸ்ட், 2021

குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக தான் பெற்ற பதக்கத்தை ஏலம் விட்ட மரியா

 கொரோனா காரணமாக சம்பாதிக்கும் தலைமையை இழந்த குடும்பங்களை தாங்கிப் பிடிக்கும் புனிதப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது சாரதா அறக்கட்டளை.  

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

வெள்ளி வீடியோ : கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி.. மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி

 41 வயதாகும் கார்த்திக் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர்.  முறையாக இசை கற்றவர்.  அவர் நண்பரின் உறவினரான பாடகர் ஸ்ரீனிவாஸ் மூலம் தூண்டப்பட்டு மேலும் இசை கற்று ரஹ்மானிடம் அவராலேயே அறிமுகப் படுத்தப் பட்டார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

உடம்பில் குறையில்லே..  ஆனா உணவு செல்லல்லே..

 ஸ்ரீ..   நண்பரின் சார்பாக வந்து அறிமுகமானவர்.  எனக்கும் நண்பனானார்.    அவர் முழுப்பெயர் ஸ்ரீராஜா.  சுருக்கமாக ஸ்ரீ.   தேவையானபோது சொன்னால் காபிப்பொடி வாங்கி வந்துவிடுவார்.   அதுதான் போன வாரம் முழுக்க காபிக் கதை!

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :   கராச்சி அல்வா    - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 முன்பு என் அண்ணன் மும்பை ஹீராநந்தினில இருந்தபோது, அங்க இருந்த டி.மார்ட் சூப்பர்மார்க்கெட்டில், ஸ்வீட்ஸ் செக்‌ஷனில், மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் துண்டு துண்டாக அல்வா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜவ்வு மாதிரி கொஞ்சம் புளிப்பா இருக்கும்.  அதற்குப் பிறகு மும்பைக்குப் போகும் சந்தர்ப்பம் இல்லாததால்அந்த அல்வாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். 

சனி, 21 ஆகஸ்ட், 2021

இளம் எழுத்தாளர்களின் 'நம்பிக்கை'

 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின், மாணவர்களும், ஆசிரியர்களும் களத்தில் இறங்கி, பள்ளி வளாகத்தில், இயற்கை வகை கீரை, காய், கனிகள் தோட்டம், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டனர்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

காஃபி சாப்பிடுவோமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் மார்லின் மன்றோவும்

 நீங்கள் என்ன காபிப்பொடி உபயோகிக்கிறீர்களா?  காபியே சாப்பிடுவதில்லை என்று சொல்பவர்களை பசிக்காத புலி பயமுறுத்தட்டும்!!

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :  வாழைக்காய் பொடி   - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன். எனக்கு உணவுல, புதுசா ஒண்ணை ஏத்துக்கவே முடியாது. வேற வழியில்லாமல் சாப்பிட நேர்ந்தாலும் அதில் உள்ள குறைகளையே மனது அதிகமாக நினைக்கும்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?

 "கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?"  ஓட்டுநர் காதருகில் நான் சற்று சத்தமாகக் கேட்டபோது 'அவர்' பாதி திரும்பி என்னைப்  பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாரே தவிர பதில் சொல்லவில்லை! "எழுந்து நிற்கட்டுமா" என்று கேட்டிருக்கலாமோ!

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :  பருப்பு தேங்காய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இது என்னடா பருப்புத் தேங்காய் என்று குழம்பிவிடாதீர்கள்.  எதையேனும் வறுத்து, வெல்லப் பாகில் போட்டு கலந்து, அதனை கூம்பு மாதிரி உள்ள அச்சில் போட்டு, ஆறின பிறகு வெளியில் எடுத்தால் அதுதான் பருப்புத் தேங்காய்.   

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வெள்ளி வீடியோ : மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ

 ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி.  கலைஞானத்தின் கதை.  இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  படம் வெளியான ஆண்டு 1974.

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

என்னடா சொல்ல வர்றே...

 மூன்றுமுறை ஃபோன் வந்தும் எடுக்க முடியாத நிலைமை.  நான்காவது முறை நான் செய்தபோது எதிர்முனையில் எடுக்கப்படவில்லை.  பழிக்குப்பழியோ, என்னவோ!

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை - மனோகரம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 திருநெவேலிக்காரங்களுக்கு மிகவும் பரிச்சயமானது இந்த ஸ்வீட்.  சென்னையில் இருந்தபோது நான் ஆர்டர் செய்து கொரியரில் வரவழைத்துக்கொள்வேன். பெங்களூருக்கு வந்த பிறகு நானே பண்ண ஆரம்பித்துவிட்டேன்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

அல்லுப்புள்ளி கணக்கு

அலுவலகத்தில் ஏதாவது சில விஷயங்களுக்கு கணக்கு கேட்கும்போது, சரிவர எடுத்துக் கொடுக்க நேரமிருக்காது, அலலது கிடைக்காது.  அப்போது எதையாவது ஒரு கணக்கு கொடுத்து ஒப்பேற்றி விடுவோம்.  நிஜம் போலவே இருக்கும்.  அதற்கு அல்லுப்புள்ளி கணக்கு என்று சொல்வது வழக்கம்..  அதுபோல இன்று வரவேண்டிய படங்கள் வந்து சேராத காரணத்தால் என்னிடம் இருக்கும் சில அல்லுப்புள்ளி படங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து ஒப்பேற்றி இருக்கிறேன்!  நண்பர்கள் மன்னிக்க....!  எல்லாம் செல்லில் எடுத்த படங்களே...