வியாழன், 30 நவம்பர், 2017

கடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....



      பகுத்தறிவுத் திருமணங்களில் தலைமை தாங்கும் அரசியல்வாதியின் பேச்சில் அரசியல் தூக்கலாகவும், வாழ்த்துரை கம்மியாகவும் இருக்கும்.   

புதன், 29 நவம்பர், 2017

புதன் கேள்வி 171129 வார வம்பு!


சென்ற வாரக் கேள்விக்கு பெரும் அளவில் பங்கேற்று, பல வித்தியாசமான சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த உங்கள் எல்லோருக்கும், எங்கள் நன்றி. 


எனக்கு விசித்திரமாக தோன்றுகின்ற ஒரு கருத்து,

'தமிழனை, தமிழன்தான் ஆளவேண்டும்' என்கிற கருத்து. 

அந்தக் கருத்தை முன் நிறுத்துவோருக்கு, பல காரணங்கள் இருக்கலாம். 

நான் கொஞ்சம் விசித்திரமாக யோசிப்பவன். 

அதனால, தமிழனை, தமிழன்தான் ....... கருத்தைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கின்றேன். யாரும் வேதனை கொள்ளாதீர்கள்! 


# தமிழகத்தில் தமிழனிடம் திருடுவோர் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். 

# தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே தொழில் செய்யலாம். 

# தமிழர்கள் பிற மாநில மக்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 

# தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட பிற மொழிப் பத்திரிக்கைகள், சினிமா ஆகியவை வரக்கூடாது.

# தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகைகள் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெளியிடப்படவேண்டும். 

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 

உங்கள் கருத்து என்ன? 

(கோபப்படாம கருத்து சொல்லுங்க!)  



புதன், 22 நவம்பர், 2017

புதன் கேள்வி 171122



சென்ற வாரம் போட்டது புதிர் அல்ல. சிறு குறிப்பு வரைதல் மட்டுமே!

பெரும்பான்மையான வாசகர்கள் பங்கேற்று, மிகச் சிறப்பான கருத்துகளைப் பதித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.

அந்தக் காலத்தில் சிவாஜியும் எம்ஜியாரும்தான் சினிமா , அரசியல் ரசிகர்களிடையே (!) மிகவும் பேசப்பட்டவர்கள்.

எங்கள் குடும்பத்தில் பெரும்பாலும் சகோதரர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள். ஆனால் எல்லா திருமதிகளும் எம்ஜியார் ரசிகைகள் !

அப்புறம் நாங்களும் அத்வைதிகள் ஆகிவிட்டோம்! 

இந்த வார புதன் கேள்வி : 

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ? ஏன்? 

உங்கள் கருத்துகளை யார் மனமும் புண்படாத வகையில் பதிவு செய்யுங்கள். 

என் கருத்து : 

மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை. 


வெள்ளி, 17 நவம்பர், 2017

புதன், 15 நவம்பர், 2017

புதன் தி ர் பு 171115


   
சென்ற வாரக் கேள்விகளுக்கு சிறப்பாக, சரியான பதில்கள் சொல்லிய பால கணேஷுக்கு வாழ்த்துகள் !





இந்த வாரம்: 

சிறு குறிப்பு வரைக! 


புதன், 8 நவம்பர், 2017

த பு ன் 171108


சென்ற வாரத்தில் சீரியசா ஒன்னும் கேட்கலை. 

சுவையான பதில்களைப் பதிந்த 


கில்லர்ஜி , மி கி மா , துளசிதரன், கீதா சாம்பசிவம் , பூவிழி , கோமதி அரசு, வாசுதேவன் திருமூர்த்தி ஆகியோருக்கு நன்றி!.


வெள்ளி, 3 நவம்பர், 2017

வெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய் ஹோய் ஹோய்




     எப்போப் பார்த்தாலும் இலக்கியமாகவே பாடல்களை ரசிக்க முடியுமா?  லுங்கியை மடிச்சு கட்டி, கொட்டும் மழையில் ஒரு கெட்ட ஆட்டம் போடவேண்டாம்?  

புதன், 1 நவம்பர், 2017

தன் புதி புர் 171101 செ வா எ பெ



சென்ற வாரம் எல்லோரும் ஃபெயில். 

கிளாஸ்ல எல்லோருமே பெஞ்சு மேல ஏறி நின்னா,  நான் யாருக்குப் புதிர் போடுவது?